வெப்சைட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெப்சைட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

விஸ்வரூபம் மட்டும் ரீலிஸ் ஆகல்லன்னா.....?


விஸ்வரூபம் மட்டும் வெளியில் வரலன்னா.....?




உலக நாயகன் கண்டிப்பாக மீண்டு வருவார்.. மீண்டும் வரணும்......

குழந்தைகளை மகிழ்விக்க வீடியோ கேம்ஸ், விளையாட்டுக்கள், பொம்மைகள் என ......

barbi

 http://www.barbie.com/ 

குழந்தைகள் இருந்தாலே வீட்டில் நேரம் போவது தெரியாது… அவர்கள் செய்யும் சேட்டைகள் நம்மை சிரிக்க வைப்பதுடன் நில்லாமல், அவர்களின் புத்திசாலித்தனம் நம்மை வியக்க வைக்கும்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மகிழ்விக்க வீடியோ கேம்ஸ், விளையாட்டுக்கள், பொம்மைகள் என எவ்வளவோ வசதிகளை செய்து கொடுத்தாலும் குழந்தைகளுக்கு புதுவிதமான விளையாட்டு பொருட்கள் தேவைப்படுகின்றன.
அந்த கவலையை போக்க இதோ ஒரு அருமையான இணையதளம். இந்த இணையதளத்தில் பெற்றோர்களும் உறுப்பினர்களாக சேர்ந்து தங்கள் குழந்தைகளை வழி நடத்தலாம்..
இவ்விணையத்தில் குழந்தைகள் தங்களுக்கு பிடித்தமான பொம்மைகளை தேர்ந்தெடுத்து அதனை தனக்கு பிடித்தமான அமைப்பில் வடிவமைத்து கொள்வதுடன் நில்லாமல், அதனை பிரிண்ட் செய்து வைத்துகொள்ளலாம்.. அவர்களின் பொழுதை போக்கும் விதமான வீடியோக்கள், விளையாட்டுக்கள் இப்படி நிறைய உள்ளன.

http://www.barbie.com/  என்ற இணையதளத்தில் நீங்கள் உங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்லலாம்
 
Posted By,
RightNews Network

மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்

இன்னைக்கு எத்தனை விதமான பாடல்களை வேண்டுமானாலும் நான் கேட்கலாம்.. ரசிக்கலாம்.


எனக்கு பிடித்த பாடல்:

 

Song: malargalai poal - பாடல்: மலர்களைப் போல் தங்கை
Movie: paasa malar- திரைப்படம்: பாசமலர்
Singers: T.M. Soundararajan
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
Lyrics: Poet Kannadasan - இயற்றியவர்: க்விஞர் கண்ணதாசன்
Music: K.V. Mahadevan - இசை: கே.வி. மஹாதேவன்
Year: - ஆண்டு: 1961 

 

மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்
மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள் - அண்ணன்
வாழ வைப்பான் என்று அமைதி கொண்டாள்
மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள் - அண்ணன்
வாழ வைப்பான் என்று அமைதி கொண்டாள்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் - அண்ணன்
கற்பனைத் தேரினில் பறந்து சென்றான்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் - அண்ணன்
கற்பனைத் தேரினில் பறந்து சென்றான்


மாமணி மாளிகை மாதர்கள் புன்னகை
மங்கல மேடையின் பொன் வண்ணம் கண்டான்
மாமணி மாளிகை மாதர்கள் புன்னகை
மங்கல மேடையின் பொன் வண்ணம் கண்டான்
மாவிலை தோரணம் ஆடிடக் கண்டான்
மாவிலை தோரணம் ஆடிடக் கண்டான்
மணமகன் வந்து நின்று மாலை சூடக்கண்டான்


கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் - அண்ணன்
கற்பனைத் தேரினில் பறந்து சென்றான்


ஆசையின் பாதையில் ஓடிய பெண்மயில்
அன்புடன் கால்களில் பணிந்திடக் கண்டான்
வாழிய கண்மணி வாழிய என்றான்
வான்மழை போல் கண்கள் நீரில் ஆடக்கண்டான்


கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் - அண்ணன்
கற்பனைத் தேரினில் பறந்து சென்றான்


பூமணம் கொண்டவள் பால்மணம் கண்டாள்
பொங்கிடும் தாய்மையில் சேயுடன் நின்றாள்
பூமணம் கொண்டவள் பால்மணம் கண்டாள்
பொங்கிடும் தாய்மையில் சேயுடன் நின்றாள்
மாமனைப் பாரடி கண்மணி என்றாள்
மருமகள் கண்கள் தன்னில் மாமன் தெய்வம் கண்டாள்

மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள் - அண்ணன்
வாழ வைப்பான் என்று அமைதி கொண்டாள்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் - அண்ணன்
கற்பனைத் தேரினில் பறந்து சென்றான்

 

 

மார்க்ஸிய நூல்கள்



மார்க்ஸிய நூல்கள்


http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6883&Itemid=119




மார்க்ஸ் மூலதனத்தின் பிறப்பு

லெனின் கீழ்த்திசை மக்களது கம்யூனிஸ்டு நிறுவனங்களின் இரண்டாம் அகில ருஷ்ய காங்கிரசில் ஆற்றிய உரை 1919 நவம்பர் 22

லெனின் அக்டோபர் புரட்சியின் ஆண்டுவிழாக்களை ஒட்டி

தொழிலாளி வர்க்கம் - கட்சி- இயல்பு பற்றி ஸ்டாலின் சென்யுன்


லெனின் சந்தர்ப்பவாதமும் இரண்டாவது அகிலத்தின் வீழ்ச்சியும்

மார்க்ஸ் கூலியுழைப்பும் மூலதனமும்

ஸ்தாபனத்தைப் பற்றி
ஸ்டாலின் டிமிட்ரொவ் காகனோவிச் மா சே.துங்

மா சே துங் சீனப் புரட்சியும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும்

மாசேதுங் நடைமுறை பற்றி

சோசலிஸப் புரட்சியும் சுயநிர்ணய உரிமையும் வி.இ.லெனின்

மார்க்ஸ் ஏங்கெல்ஸ் கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை

கூட்டு அரசாங்கம் பற்றி மாசேதுங்

மா சே துங் ஹனான் விவசாயிகள் இயக்கம் பற்றிய ஒர் ஆய்வு அறிக்கை
மார்ச் 1927

தாய்

மாபெரும் விவாதம்

கம்யூனிசத்தின் கோட்பாடுகள் (எங்கல்ஸ்)

சோவியத் ஆட்சியும் சமுதாயத்தில் பெண்களின் நிலையும் (லெனின்)

கூலியுழைப்பும் மூலதனமும் (மார்க்ஸ்)

இந்தியப் புரட்சியின் அரசியல் பாதையும் இராணுவப் பாதையும் (இந்தியபொதுவுடமைக் கடசி மா-லெ)

மார்க்சியத்தின் அடிப்படைப் பிரச்சனைகள் (பிளெஹானவ்)

இயங்கியல் பிரச்சனை பற்றி (லெனின்)

நூல்திரட்டு 01 (லெனின்)

நூல்திரட்டு 02 (லெனின்)

நூல்திரட்டு 03 (லெனின்)

நூல்திரட்டு 04 (லெனின்)

நவ சீனப் புரட்சியின் வரலாறு (ஹொகன் சி)

ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் (எட்ஹார் ஸ்னோ)

ரசியப் பொருளாதாரம் பற்றிய ஒரு விமர்சனம் (மாசேதுங்)

மார்க்சியமும் திருத்தல்வாதமும் (லெனின்)

புரடசித் தலைவன் மா சே துங் நடந்த புரட்சிப் பாதை (இந்திய வெளியீடுகள்)

என்ன செய்ய வேண்டும்? (லெனின்)

குடும்பம், தனிச்சொத்து, அரச அகியவற்றின் தோற்றம்

புரட்சிகரமான வாய்ச்சொல் (லெனின்)

மார்க்சியமும் புரட்சி எழுச்சியும் (லெனின்)

பொதுக் கல்வி (லெனின்)

தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை (லெனின்)

தேசியப் பொருளாதாரத்தில் சோஷலிஸ்டு நிர்மானத்தைப் பற்றிய பிரச்சனைகள் (லெனின்)

மார்க்சியமும் புரடசி எழுச்சியும் (லெனின்)

சோஷலிஸ்ட் புரட்சி (மார்க்ஸ் எங்கெல்ஸ்)

இயங்கியல் பொருள்முதல்வாதம் (மார்க்ஸ் எங்கெல்ஸ் லெனின்)

தேசிய இனப்பிரச்சனைகளும் பாட்டாளி வர்க்க சர்வதேசிய வாதமும் (லெனின்)

புரட்சியில் இளைஞர்கள் (ஸ்ராலின்)

தூக்குமேடைக் குறிப்பு

தேர்ந்தெடுக்கப்பட்ட ராணுவப்படைப்புகள் (மாவோ)

தேசிய இனப்பிரச்சனை பற்றிய விமர்சனக் குறிப்புகள் (லெனின்)

லெனினும் ஆசியாவும்

மக்கள் தொகை தத்துவத்தின் அடிப்படைகள்

இந்தியாவின் சமுதாயப் பொருளாதாரப் படிவம்

பாட்டாளி வர்க்க இயக்கத்தின் போர்த்தந்திரம் செயல் தந்திரம் பற்றி (லெனின் ஸ்ராலின் மாவோ)

மூலதனம் முதல் பாகம் புத்தகம் இரண்டு

மூலதனம் இரண்டாம் பாகம்

மூலதனம் மூனறாம் பாகம் புத்தகம் இரண்டு

மார்க்ஸ் முதல் மாசேதுங் வரை

மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள 01

மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 02

மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 04

மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 05

மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 06

மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 07

மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 09

மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 10

மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 11

மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12

மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 11

உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்

நாட்டுப்புற ஏழை மக்களுக்கு (லெனின்)

கம்யூனிஸ்ட் சமூகம் (மார்க்ஸ் எங்கெல்ஸ் லெனின்)

சர்வாதிகாரப் பிரச்சனையின் வரலாற்றைப் பற்றி (லெனின்)

போர்த்தந்திரம் பற்றிய கடிதங்கள் (லெனின்)

வெகுஜனங்களிடையே கட்சியின் பணி (லெனின்)

மார்க்சியமும் திருத்தல் வாதமும் (லெனின்)

சந்தர்ப்பவாதமும் இரண்டாம் அகிலத்தின் வீழ்ச்சியும் (லெனின்)

மார்க்சியத்தின் வரலாற்று வளர்ச்சியின் சில சிறப்பியல்புகள் (லெனின்)

மகளீர் விடுதலை இயக்கங்கள் (மூன்று கட்டுரைகள்)

சிலந்தியும் ஈயும்

கம்யூனிசம் தோற்றதாம் முதலாளித்துவம் வென்றதாம்

கொள்கை அறிக்கை அமைப்பு விதிகள் (புரட்சிகர மாணவர் இழைஞர் முன்னணி தமிழ்நாடு)

பெரியார் களஞ்சியம் 01

மூலதனம் முதல் பாகம் புத்தகம் ஒன்று

டாக்டர் அம்பேத்கார் தோகுதி 02

டாக்டர் அம்பேத்கார் தோகுதி 03

டாக்டர் அம்பேத்கார் தோகுதி 04

டாக்டர் அம்பேத்கார் தொகுதி 05

டாக்டர் அம்பேத்கார் தொகுதி 06

டாக்டர் அம்பேத்கார் தொகுதி 09

டாக்டர் அம்பேத்கார் தொகுதி 11

டாக்டர் அம்பேத்கார் தொகுதி 17

அதிகாரத்துக்கு எதிராகப் போராடுவோம்

ஜனநாயகத்துக்கு அப்பால்

இன ஒடுக்கலும் விடுதலைப் போராட்டமும்

திரிபுவாதத்திற்கு எதிராக

பிச்சைக்காரருக்கு ஓட்டு




நாராயண நட் என்ற பிச்சைக்காரர் உ.பி. மாநில கிராமம் ஒன்றில் பஞ்சாயத்து தலைவராக ஆக்கப்பட்டிருப்பதை பற்றிய உங்கள் கருத்தென்ன?

விடுதலைப் பெற்ற பிறகு பலதலைவர்களை பதவியில் அமர்த்தி நாட்டு மக்கள் ஏறக்குறைய பிச்சைக்காரர்களாக ஆகிவிட்டார்கள் அவனவன் திருவோடு எடுத்துக் கொண்டு தெருவில் சுற்ற வேண்டியது ஒன்றுதான் பாக்கி !

மேலும் பிச்சைக்காரரும் இந்தியக் குடிமகன் தானே ஒரே ஒரு படத்தில் நடித்து விட்டாலே கோட்டையில் கொடியேற்ற கனவு காணும் நடிகர்களை விட


பதவி சுகத்திற்காக கொள்கைகளை பறக்க விட்டு விட்ட தலைவர்களை விட பிச்சைக்காரர் ஒன்றும் குறைந்தவர் அல்ல!

பிச்சைக்காரருக்கு ஓட்டுப் போட்டால் ஒரு சௌகர்யம் இருக்கிறது அவர் வெற்றிப் பெற்றப்பிறகு கண்காணாமல் எங்கும் ஓடிப்போக மாட்டார் தெருவில் தான் சுத்திக் கொண்டிருப்பார்



இன்னும் ஒரு விஷயமும் இருக்கிறது தான் பதவியை பயன் படுத்தி சொத்துக்கள் சேர்த்தால் படத்துக்கு கதையெழுதி கோடி கோடியாய் ஏற்கனவே சம்பாதித்தேன் என்று புருடாக்களை அவிழ்த்து விட முடியாது

இருந்தாலும் கிராம மக்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டும் இவருக்கும் நிறைய பிள்ளைகளும் பேரன் பேத்திகளும் இருக்கிறார்கள்



Posted by,
யோகி ஸ்ரீஇராமானந்த குரு

விஜய் ஒரே குஷ்டமப்பா.. ச்சீ... கஷ்டமப்பா..

ஆம் ............




கவுண்டமணியும் வில்லு பட விஜயும்


கவுண்டமணி: ச்சே.. போன எடுத்தா நச்சு நச்சுன்னுராங்கப்பா.. ஏதோ வில்லுன்னு விஜய் படமாம்.. அத விஜய் ரசிகங்களாலேயே பார்க்க முடியலையாம்.. என்ன பாக்க சொல்றாங்க.. அட இது பரவா இல்ல.. சோசியல் மேட்டர்
, பண்ணிக்கலாம்.. ஆனா விஜய் பாட்டுக்கெல்லாம் என்ன ஆட சொல்றாங்கப்பா.. நான் என்ன விஜய் மாதிரி ஆடுகாலியா இல்ல பரதேசியா? ஒரே குஷ்டமப்பா.. ச்சீ... கஷ்டமப்பா..

விஜய்: ங்கண்ணா.. போன் வயரு பிஞ்சு ஒரு வாரம் ஆகுதுங்கன்னா..
கவுண்டமணி: ஹே ஹே.. ஹெய்ஹெய்.. டே டப்சா தலையா.. இது செல்போன்டா.. உன்னயல்லாம் ஹீரோவா போட்டு படம் எடுக்குறான் பாரு அவன சொல்லணும்..

விஜய்: போங்கண்ணா.. உங்களுக்கு ஒரே குறும்பு.. கம்பெனி சீக்ரட் எல்லாம் வெளியில சொல்லிக்கிட்டு.. சரி சரி.. இப்போ நம்ம பாட்ட கேளுங்க..
"ஹே ராமா ராமா ராமன்கிட்ட வில்ல கேட்டேன்
பீமா பீமா பீமன்கிட்ட கதைய கேட்டேன்
முருகு முருகு முருகன்கிட்ட மயில கேட்டேன்..
ஈசன் ஈசன் ஈசன் கிட்ட மலைய கேட்டேன்"


கவுண்டமணி:நிறுத்துடா ஆப்பிரிக்கா வாயா.. இவ்வளவு கேட்டியே.. பிரபுதேவாகிட்ட கதை என்னன்னு கேட்டியா?

விஜய்:??!!!

பரோட்டா கேட்ச் பிடுகுறார்..அட அட அந்த அழக பாருங்களேன்..வீடியோ கிளிப்பிங்க்ஸ்.

இங்க பாருங்க..நீங்க பந்து கேட்ச் பிடிசிருபீங்க... இங்க ஒருத்தர் பரோட்டா கேட்ச் பிடுகுறார்..அட அட அந்த அழக பாருங்களேன்..







இங்க பாருங்க..நீங்க பந்து கேட்ச் பிடிசிருபீங்க... இங்க ஒருத்தர் பரோட்டா கேட்ச் பிடுகுறார்..அட அட அந்த அழக பாருங்களேன்..
.
.

காதலில் விழுந்தவர்களுக்கு & விழப்போகிறவர்களுக்கு # கண்டதும்

ஆண்கள் என்ன செய்தாலும் பெண்களிடம் நல்ல பெயர் வாங்க முடிவதில்லை. எப்போது பார்த்தாலும் சண்டைகள் மட்டுமே. (குறிப்பாக காதலர்களுக்கிடையில்) இந்தப் பிரச்சினை தீர சில ஐடியாக்கள இங்கே உங்களுக்கு....




1.காலையில் எழுந்தவுடன் ஹாய்.. குட் மோர்னிங்'ன்னு ஒரு சின்ன SMS அனுப்பணும். உன் குரலை கேட்டாத்தான் இன்னைக்கு பொழுதே நல்லபடியா விடியுதுன்னு ஒரு அப்பட்டமான பொய்யை அவிழ்த்து விடணும் (ஒரு ரூபா செலவுதான். என்னங்க பண்றது? பண்ணித்தான் ஆகணும்.) இதே விடயத்தை ராத்திரி தூங்குறதுக்கு முன்னாடியும் நீங்க செஞ்சாகணும்..




2. அவங்களைப் பார்க்க போறதுக்கு முன்னாடி உங்க செல் ஃபோனோட ஸ்கிரீன் சேவர்'ல அவங்களோட புகைப்படத்தை கண்டிப்பா வைச்சுக்கணும். (எப்பவும் உன் முகத்தையே பார்த்துகிட்டே இருக்கணும்'ன்னுதான் இந்த மாதிரி வெச்சிருக்கேன்னு சொல்லுங்க. இதுலையே அவங்க க்ளீன் போல்ட்)





3. அவங்க பெயரோட முதல் எழுத்தை பைக் கீ-செயின்'ல தொங்க விட்டுக்குங்க. எப்பவும் நீ என் கூடவே இருக்கணும்'ன்னுதான் இந்த மாதிரி செய்யுறேன்னு ஒரு பிட்டை விடுங்க. அப்புறம் பாருங்க...

76186014, Adam Burn /fStop


4. சினிமாவுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா, படத்தை பார்க்கறீங்களோ இல்லையோ கண்டிப்பா ஐந்து நிமிடத்துக்கு ஒரு தடவை அவங்களை திரும்பி திரும்பி பார்க்கணும். எதுக்கு என்னையே பார்க்குறீங்கன்னு கேட்பாங்க. உன்னைப் பார்க்கும் போது இருக்கிற சுவாரஸ்யம் படம் பார்க்கும் போது இல்லைன்னு நீங்க சொல்லணும். (வேற வழி இல்லைங்க. இந்த மாதிரி எல்லாம் நாம டயலொக் விடணும்'ன்னு அவங்க எதிர்பார்ப்பாங்க)






5. அவங்க பெயர்ல நிச்சயம் ஏதாவது தமிழ் பாட்டு வந்திருக்கும். அந்த பாட்டை எப்படியாவது தேடி கண்டுபிடிச்சு ரிங்டோனா வைச்சுக்குங்க. அவங்க உங்ககிட்ட சண்டை போடும்போது, உங்க ஃபிரண்டைவிட்டு உங்க நம்பருக்கு கோல் பண்ண சொல்லுங்க. அந்தப் பாட்டு வந்த உடனே அவங்களை பாருங்க. சண்டை எல்லாம் எங்கே போகுதுன்னே தெரியாது.





6. கவிதைங்கிற பெயர்ல எதையாவது நீங்க கிரீட்டிங் கார்ட்ல கிறுக்கிக் கொடுத்தே ஆகணும். அந்த கவிதைகள்'ல வானம், கடல், குயில், தேவதை, மயில், போன்ற வார்த்தைகள் கண்டிப்பா இருந்தே ஆகணும்.

7. "நீ ரொம்ப அழகா இருக்கே"ங்கிற அகில உலக பொய்யை ஒரு நாளைக்கு ஐந்து வாட்டியாவது நீங்க சொல்லியே ஆகணும். (இதுக்கு நீங்க கடவுள்கிட்ட தனியா மன்னிப்பு கேட்டுக்குங்க)

stk310233rkn, Stockbyte /Stockbyte


8. ஹோட்டலுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா ஃபர்ஸ்ட் நீங்க ஓடர் பண்ணக்கூடாது. மெனு கார்டை அவங்க கையில கொடுத்து, அவங்களைத்தான் ஓடர் பண்ண சொல்லணும். புரியுதா? (பெண்களோட உணர்வுகளுக்கு நீங்க மதிப்பு கொடுக்குறவர்'ன்னு அவங்களுக்கு தெரியணும் இல்லை. அதுக்குத்தான்)

9. அவங்க எப்படித்தான் ட்ரஸ் பண்ணாலும், "இந்த ட்ரஸ்'ல நீ தேவதை மாதிரி இருக்கேன்னு மனசாட்சியை கழட்டி வைச்சிட்டு பொய் சொல்லணும்". (ராத்திரியில நீங்க தூங்கும் போது தேவதைங்க உங்க கண்ணை குத்தும். சமாளியுங்க)

10. ரொம்ப ரொம்ப முக்கியமான விடயம். அவங்க தோழிங்ககிட்ட பேசும்போது ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். அவங்க தோழிங்களை நீங்க கண்டுக்காத மாதிரியே இருக்கணும். ஏன்னா பல பிரச்சினைகளோட தொடக்கம் இங்கே இருந்துதான் ஆரம்பிக்குது.

இந்த விடயங்களை எல்லாம் கடைபிடிச்சு பாருங்க. உங்க காதலி உங்களை தலையில தூக்கி வைச்சு கொண்டாடுவாங்க.

http://www.blogcatalog.com/blog/httpkt-saranganblogspotcom/e7204b607ccb27c83f838115828b7660 - இங்கிருந்து எடுத்து இடப்பட்டது

கட்டுரை ஒன்றில் வயதானவரகளுக்கு சில அறிவுரைகள்

ஜோனாதன் ஸ்விப்ட் என்பவர் 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரபலமான ஆங்கில எழுத்தாளர்.

கட்டுரை ஒன்றில் அவர் வயதானவரகளுக்கு சில அறிவுரைகள் கூறியிருக்கிறார்.

1. கடுகடுப்பாகவோ, வருத்தம் உள்ளவர்களாகவோ, சந்தேகப்படுகிறவர்களாகவோ இருக்க வேண்டாம்.

2. சிறுவர்கள் விரும்பினால் ஒழிய அவர்களுடைய கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம்.

3. அப்போதைக்கப்போது ஜனங்களிடம் தோன்றும்
நவீன முறைகளையும், நடத்தைகளையும் பற்றி ஏளனம் செய்ய வேண்டாம்.

4. ஒரே நிகழ்ச்சியை அதே நபர்களிடத்தில் அடிக்கடி சொல்ல வேண்டாம்

5. பிறர் பொருளை விரும்ப வேண்டாம்

6. உடம்பையும், உடைமையையும் சுத்தமாக வைத்துக் கொள்ள மறக்க
வேண்டாம். அவை சுத்தமாக இல்லாவிட்டால் பிறருக்கு உங்கள் மீது வெறுப்பும் அலட்சியமும் ஏற்படும்

7. இளைஞர்களின் நடத்தைகளை அதிகமாகக் கண்டிக்க வேண்டாம்.
அவர்களால் அந்த வயசில் பிழைகள் செய்யாமல் இருக்க முடியாது.

8. பிறருடைய சமாச்சாரங்களை அவர்களுடைய வேலைக்காரர்கள் மூலம் கேட்டுத் தப்பான
அபிப்பிராயம் கொள்ள வேண்டாம்.

9. பிறர் கேட்டால் ஒழிய அவர்களுக்குப் புத்திமதிகள் சொல்ல வேண்டாம்.

கீழே உள்ள இரண்டும் அடியவன் மனதில் தோன்றி நானாகச் சேர்த்துக் கொண்டது.

10. எங்க காலத்தில் அப்படி இருந்தது என்று வேண்டாத பழங்கதைகள் கூற வேண்டாம்.

11. அரசனாக இருந்தால் கண்ணை மூடிக்க் கொள்ள வேண்டும், வேலைக்காரனாக இருந்தால்
காதை மூடிக்கொள்ள வேண்டும். வயதானால் இரண்டையும் மூடிக்கொள்ள வேண்டும்

வயதானவர்கள் முடிந்தவரை இந்த அறிவுரைகளைக்
கடைப்பிடித்தால்,முதுமை என்பது சுகமே !
----------------------------------------------------------------------------------------------------------------------
அன்புடன்
அ.இராமநாதன்

வேட்டைக்காரன்: ஒரு டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம்




தசாவதாரம் படத்தில் பல்ராம் நாயுடுவின் 'மொழித் திறமை' குறித்து அவரது அசிஸ்டென்ட் வெள்ளைக்கார அதிகாரிகளிடம் கூறுகையில், சார், 'நான்கு மொழிகளில் தெலுங்கு' பேசுவார் என்று பிரமாதப்படுத்திக் கூறுவார். அந்தக் கணக்காக ஆகியுள்ளது வேட்டைக்காரன் பட விளம்பரங்கள்.வேட்டைக்காரன் படம் வெளியாகி 30 நாட்களையே எட்டியுள்ள நிலையில் 40 நாட்கள் என்று கூறி போஸ்டர் அடித்துக் கலக்கியுள்ளனர் சென்னையில்.டிசம்பர் 18ம் தேதி வேட்டைக்காரன் ரிலீஸானது. நேற்றுடன் அப்படம் 30 நாட்களைத் தொட்டுள்ளது. ஆனால் அதற்குள் 40 நாட்கள் போஸ்டரை ஒட்டி விட்டனர் சென்னையில். இதைப் பார்த்து விஜய் ரசிகர்களுக்கே கொஞ்சம் போல குழப்பம் ஏற்பட்டுள்ளது.இது மட்டுமா... வேட்டைக்காரன் படத்துக்கு ஒரு டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம் என்று ஆடித் தள்ளுபடி ரேஞ்சுக்கும் போஸ்டர்களை ஒட்டி அசத்தி வருகின்றனர் விஜய் ரசிகர் மன்றத்தினர். மேலும், குறைந்த கட்டணத்தில் என்ற புது பிட்டையும் வேட்டைக்காரன் பட போஸ்டர்கள் மீது ஒட்டி வருகின்றனராம் தியேட்டர்காரர்கள்.ஏன் இந்தக் குழப்பம், குளறுபடி என்று தெரியவில்லை.

தொந்தியினால் ஏற்படும் பயன்கள்


தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:

1. கீழே குப்புற விழுந்தால் முகத்தில் அடிபட்டு மூக்கு உடையாமல் நம்மை காப்பாற்றுகிறது.

2. சமுதாயத்தில் ஒரு மரியாதையை ஏற்படுத்துகிறது. உதாரணமாக பெரிய பெரிய தொந்திகளை கொண்ட போலீசாரை கண்டால் நமக்கு மரியாதை கலந்த பயம் ஏற்படும்.

3. சிறந்த பொழுதுபோக்கு சாதனமாக பயன்படுகிறது. உதாரணமாக வேலையில்லாமல் சும்மா அமர்ந்திருக்கும் சமயத்தில் தொந்தியை மெதுவாக வருடிக்கொடுத்துக் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது.

4. மல்லாக்க படுத்து இருந்தால் குழந்தைகள் சறுக்கு விளையாட்டு விளையாட மிகவும் பயன்படும். மேலும் நமது செல்லப் பிராணிகளான பூனைகள் மற்றும் நாய்க்குட்டிகள் படுத்து உறங்குவதற்கு மிகவும் விரும்புவது குஷன் வசதி கொண்ட தொந்திகளையே.

பாடலாசிரியர் வைரமுத்து கூட,

நீ காற்று நான் மரம்
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்

என்று எழுதிய பாடலில் கீழ்க்கண்டவாறு சில வரிகளை சேர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

நீ பந்தி
நான் தொந்தி
என்ன போட்டாலும் உள்வாங்கிக்கொள்வேன்.

அரசியல்வாதிகளில் பலர் தொந்தியுடன் இருப்பதை நீங்கள் காணலாம். ஏனெனில் ஒருவரது தொந்தியின் அளவிற்கேற்ப அவரது புகழும் வளரும்.

தொந்தியார் குறைந்தால் தொண்டர் குறைவர்.
தொகுதி வளர்க்கும் உபாயம் அறிந்தே
தொந்தி வளர்த்தேன். தொகுதி வளர்த்தேனே.

என்பதே பல அரசியல்வாதிகளின் வேதவாக்கு.

தொந்தி ஏன் சதுரமாக அல்லது செவ்வகமாக இல்லாமல் உருண்டை வடிவத்தில் இருக்கிறது? என்ற வினா பலரது மனதில் எழும்.

தொந்தியானது தத்துவத்தின் சின்னமாகும்.

இந்த உலகமானது தொந்தியைப் போலவே உருண்டை வடிவமானது. இந்த வாழ்க்கையும் வட்ட வடிவமானது. இதை மனிதனுக்கு உணர்த்துவதற்காகவே இயற்கையானது மனிதனின் தொந்தியை உருண்டை வடிவத்தில் படைத்துள்ளது.

ஏழை ஒருநாள் பணக்காரன் ஆவான். பணக்காரன் ஒருநாள் ஏழை ஆவான். இதனை உணர்த்துவதற்காகவே தொந்தியானது அந்த நிலவைப் போல அடிக்கடி தேய்ந்து வளருகிறது.

இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த தொந்தியை நாம்,

போற்றி வளர்ப்போம்! கண்டதையும் போட்டு வளர்ப்போம்!!

ஜெய் தொந்தி!

பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்

பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் விண்டோசை ஜன்னல் என்றுஅழைத்திருப்பார்கள். அதன் மெனு அட்டவணை இவ்வாறாக அமைந்திருக்கும்.

சவுதி – அல்கோபரிலிருந்து நண்பர் முஜிபுதீன் அனுப்பிய கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க..

Save = வெச்சிக்கோ

Save as = அய்ய! அப்டியெ வெச்சிக்கோ

Save All = அல்லாத்தியும் வச்சிக்கோ

Help = ஒதவு

Find = பாரு

Find Again = இன்னொரு தபா பாரு

Move = அப்பால போ

Mail = போஸ்ட்டு

Mailer = போஸ்ட்டு மேன்

Zoom = பெருசா காட்டு

Zoom Out = வெளில வந்து பெருசா காட்டு

Open = தெற நயினா

Close = பொத்திக்கோ

New = புச்சு

Old = பழ்சு

Replace = இத்த தூக்கி அத்ல போடு அத்த தூக்கி இத்ல போடு
Run = ஓடு நய்னா
Execute = கொல்லு
Print = போஸ்டர் போடு
Print Preview = பாத்து போஸ்டர் போடு
Cut = வெட்டு - குத்து
Copy = ஈயடிச்சான் காப்பி
Paste = ஒட்டு
Paste Special = நல்லா எச்ச தொட்டு ஒட்டு
Delete = கீச்சிடு
anti virus = மாமியா கொடுமை
View = லுக்கு உடு
Tools = ஸ்பானரு
Toolbar = ஸ்பானரு செட்டு
Spreadsheet = பெரிசிட்டு
Database = டப்பா
Exit = ஓடுறா டேய்
Compress = அமுக்கி போடு
Mouse = எலி
Click = போட்டு சாத்து
Double click = ரெண்டு தபா போட்டு சாத்து
Scrollbar = இங்க அங்க அலத்தடி
Pay Per View = துட்டுக்கு பயாஸ்கோப்பு
Next = அப்பால
Previous = முன்னாங்கட்டி
Trash bin = கூவம் ஆறு
Solitaire = மங்காத்தா
Drag & hold = நல்லா இஸ்து புடி
Do you want to delete selected item? = மேய்யாலுமே தூக்கிறவா?
Do you want to move selected item? = மெய்யாலுமே கடாசிடவா?
Do you want to save selected item? = மெய்யாலுமே வெச்சிக்கவா?
Abort, Retry, Ignore = இஸ்டம் இல்லாட்டி உட்டுடு
Yes, No, Cancel = இப்போ இன்னா சொல்லுற நீ?
General protection fault = காலி
Access denied = கை வச்ச... கீச்சுடுவேன்!
Unrecoverable error = படா பேஜார்பா
Operation illegal = பேமானி சாவு கராக்கி கஸ்மாலம்
Windows 98 = இதாமெ ஜன்னல் தொன்னித்திஎட்டு .

நாகர்கோவில் நண்பர்கள் - 2






கன்னியாகுமரி மாவட்டத்துக்காரர்கள் வாங்கும்/கொடுக்கும் வரதட்சிணை கேட்டால் நமக்கு மயக்கம் வரும் அல்லது வயிறெரியும். பின்னே கொஞ்ச நஞ்சமா கொடுக்கிறார்கள். லட்ச,லட்சமா அதுவும் பத்தின் மடங்கில்தான். இது குறித்து என் அறை நண்பனிடம் பேசிக்கொண்டிருந்தேன்.

அவனிடம் "அப்புறம் நீதான் நல்லா செட்டில் ஆயாச்சே! பொண்ணு பார்க்கச் சொல்ல வேண்டியதுதான?"ன்னேன்.
"நான் எதுக்கு தேடிப் போகணும். எல்லாம் தானா வரும். இப்போதைக்கு என்னோட மதிப்பு எழுபது லட்ச ரூபாய்."ன்னு சிரிச்சான்.
"என்னது எழுபது லட்சம்?"
"எனக்குக் கிடைக்கும் வரதட்சணை"
"டேய்ய்ய்ய்ய்ய்ய்... அம்புட்டாடா குடுப்பாங்க" நம்பமுடியாமல் கேட்டேன்.
"ஆமா சும்மாவா மாசம் அம்பதாயிரம் சம்பாதிக்கிறோம்ல"
"அதுக்காக எழுபது லட்சம் எவண்டா குடுப்பான். சும்மா கதை விடாதே"
"அடப்போடா.. நான் எதுவுமே கேடக வேண்டியதில்லை. எல்லாம் தானா வரும். முப்பது லட்சம் ரொக்கம். ஒரு நாப்பது லட்சத்துக்கு சொத்து. ஒரு கார். ஒன்றரை கிலோ நகை"

நான் மயங்கிவிட்டேன். இன்னொரு நண்பன் தொடர்ந்தான்.

"என் அக்காவுக்கு நாங்கள் பார்த்தது துபாய் மாப்பிள்ளை. நகை இரண்டு கிலோ. எங்க வாழைத்தோப்பிலும், இரப்பர் தோப்பிலும் ஒரு பகுதி. அதோட மதிப்பு ஐம்பது லட்சம். முப்பது லட்சம் ரொக்கம். இவ்வளவும் கொடுத்தோம்". சோடா குடுத்தால் கூட தெளியாத மயக்கம் வந்துவிட்டது.

தமிழ்நாட்டிலேயே அதிக எழுத்தறிவு பெற்ற மாவட்டம் என்று சொல்கிறார்கள். படிப்பறிவு அதிகம் இருந்தால் இதெல்லாம் குறையத்தான் வேண்டும். ஆனால் இங்கு நிலைமை தலைகீழாக உள்ளது.

அடுத்து நான் என் நண்பனிடம் ஒரு பிட்டைப் போட்டேன். "நான் உங்க ஊரில் கல்யாணம் செய்துக்கிட்டா என்னடா குடுப்பாங்க?". "உனக்கெல்லாம் எவன் பொண்ணு குடுப்பான் எங்க ஊருல இருந்து? எங்க பார்த்தாலும் ஏரி,குளம்னு எங்க ஊரு. கண்மாய்க்குள்ளயே ஊத்துத் தோண்டித் தண்ணியைப் பாக்குறவுங்க நீங்க. சான்ஸே இல்லை. அதே மாதிரி, பொண்ணு அல்லது மாப்பிள்ளை பார்த்தால் அது எங்கள் மாவட்டத்துக்குள்ளேயே பார்ப்பார்கள். அதிகபட்சம் பாளையங்கோட்டை வரைதான் எங்க லிமிட்"ன்னு கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டான்.

"அதே போல மாப்பிள்ளைகளையெல்லாம் தலையில் தூக்கி வைத்து மரியாதை கொடுப்பார்கள் உங்க ஊரில். இங்கெல்லாம் அப்படியில்லை. அவரும் வீட்டில் ஒரு உறுப்பினர் அவ்வளவுதான். உங்க ஊரில் மாப்பிள்ளை வந்தால் மாமியார் சமையல்கட்டை விட்டு வெளியே வரமாட்டார். இங்கு மாமியார் மாப்பிள்ளையின் முன்னால் கால் மேல் கால் போட்டு பரீட்சைப் பேப்பர் திருத்திக் கொண்டிருப்பார். இதெல்லாம் எங்களுக்கு சாதாரணம். ஆனால் நீங்கள் அப்படி எடுத்துக் கொள்ள மாட்டீர்கள். இன்னொன்னு சொல்றேன். இரண்டு பசங்க ஒரு வீட்டில் இருந்தால், அதுவும் படித்திருந்தால் அந்தக் குடும்பம் பிற்காலத்தில் கோடீஸ்வரக் குடும்பம்.வரதட்சணை அவ்வளவு வரும்." என்றான் நண்பன்.

அதே போல உறவுமுறைக்குள் திருமணம் என்றால் முகம் சுளிக்கிறார்கள். மாமா மகள், அத்தை(மாமி-ன்னு சொல்லுவார்கள் பேச்சு வழக்கில்) மகனையெல்லாம் திருமணம் செய்யும் வழக்கம் இல்லை. மாமா மகள், அத்தை மகன்களுடன் சகோதர உண்ர்வுடன்தான் பழகுகிறார்கள். அடுத்து இவர்கள் கேரளத்தில் பெண் கொடுப்பதோ, எடுப்பதோ அரிதாம். கேட்டால் அவர்கள் மதிக்கமாட்டார்கள் என்கிறார்கள்.

இவர்கள் இப்படி வரதட்சணை வாங்குவதைப் பார்த்து எரிச்சலாக இருந்தது. அந்த எரிச்சல் இப்படிப் பகல் கொள்ளை அடிக்கிறார்களே என்பதால் வந்ததா அல்லது எனக்கு இப்படியெல்லாம் கிடைக்காதே என்ற பொறாமையால் வந்த வயிற்றெரிச்சாலா என்பது தெரியவில்லை. ;) . சும்மா தமாசுக்கு. வரதட்சணை வாங்குவது கேவலம் என்பதே என் எண்ணம்.

எங்க ஊர் நிலைமையை நினைத்துப் பார்த்தேன். அதிகபடசம் ஒரு லட்சம் குடுப்பார்கள். அதுவும் வம்படியாகக் கேட்டால் தான். ஒரு நடுத்தரக் குடும்பம் என்றால் நாற்பது பவுன் நகை போடுவார்கள். ரொம்பப் பெரிய பணக்காரக் குடும்பம் என்றால் கார் கொடுப்பார்கள். அவ்வளவுதான்.

சரி போதும் வரதட்சணை புராணம்.

என்பீல்ட், புல்லட் போன்ற வண்டிகள் தான் இவர்களின் முதல் காதலிகள். கல்லூரியில் படிக்கும் பெரும்பாலான இந்த ஊர்ப்பசங்களின் கனவு அவைகளாகத் தான் இருக்கின்றன. என்னதான் மலையாளப் படம் பார்த்தாலும், மலையாளம் பேசினாலும் தமிழன் என்ற உணர்வு மேலோங்கியே இருக்கிறது. சந்தேகம் இருந்தால் சென்ற இடுகையின் பின்னூட்டங்களைப் பார்க்கவும். அடுத்த விசயம் இவர்கள் மற்ற மாவட்டத் தமிழர்களை (குறிப்பாக மதுரை) "ஏய் பாண்டிக்காரா" என்று நக்கலுக்குக் கூப்பிடுவார்கள். என்ன தான் மலையாளம் பேசினாலும் இவர்கள் கேரளாவுக்குப் போனால் இவர்களும் 'பாண்டி' தான் மலையாளிகளுக்கு. பாண்டியின் அர்த்தம் என்னன்னு தெரியவில்லை. யாராவது சொல்லுங்கள்.

இந்த மாவட்டத்தில் இருக்கும் சில ஊர்களின் பெயர்கள் வித்தியாசமானவை.
'தொளையாவட்டை (எழுதியிருப்பது சரியா?)
களியக்காவிளை
தக்கலை'
முதலிரண்டும் தான் வாய்க்குள் நுழையாமல் பேஜார் செய்தவை. அடுத்துப் பழக்கமாகிவிட்டது. வேறு ஏதாவது ஊர் பெயர் இப்படியிருந்தால் சொல்லுங்கள்.

இங்கு ஊர் சுற்றிப் பார்க்க ஏகப்பட்ட இடங்கள் உள்ளனவாம். எல்லோருக்கும் தெரிந்த திற்பரப்பு அருவி, பத்மநாபபுரம் அரண்மனை, விவேகானந்தர் மண்டபம் தவிர நிறைய இடங்கள் உள்ளனவாம். கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் ஏரிகளும், குளங்களும் நிறையவே காணப்படுமாம். நான் நேரில் பார்த்ததில்லை. நண்பர்கள் அழைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். போவதற்குத்தான் நேரமில்லை. போய்ட்டு வந்து அதைப் பற்றியும் எழுதுகிறேன்.












நண்பர் ஜோ அவரது பதிவில் கன்னியாகுமரி மாவட்டத்தின் எழில் கொஞ்சும் அழகான புகைப்படங்களைப் போட்டிருக்கிறார். இங்கேயும் போய்ப் பாருங்கள்.



by யோகேஸ்