நகைச்சுவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நகைச்சுவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

காமராசரிடம் நிருபர் ஒருவர் "கள்ளுக்கடை திறக்கப்படுமா? என்றார்...

காமராசர் சற்றுக் கோபப்படக் கூடியவர் என்று நினைப்பவர் பலர். ஆனால் மிகுந்த நகைச்சுவை தன்மை கொண்டவராவார்.


 திருச்சியில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட காமராசரிடம் நிருபர் ஒருவர் "கள்ளுக்கடை திறக்கப்படுமா? என்றார்.
 ""அது ஏன் இப்போது?'' என்றார் காமராசர்.
 "" கள்ளுக் கடையைத் திறந்துவிட்டால் உணவுப் பற்றாக்குறை இருக்காது'' என்றார் நிருபர்.
 "" எப்படி?''
 ""சாப்பிட்டுவிட்டால் ஒன்றுமே தெரியாது. பசி இருக்காது'' என்றார் நிருபர்.
 ""உங்களுக்கு எப்படி இது தெரியும்?'' என்று காமராசர் கேட்க, நிருபர்கள் அனைவரும் சிரித்தனர். மாட்டிக் கொண்ட நிருபரின் முகத்தில் அசடு வழிந்தது. காமராசர் பேச்சில் இப்படி நகைச்சுவை மிளிர்வதும் உண்டு.

"+ கடி ஜோக்ஸ் +"



கோபால் : செய்யாத தப்புக்கு நீங்க தண்டனை தருவீங்களா சார்?
ஆசிரியர் : தரமாட்டேன். ஏன்?
கோபால் : நான் home work செய்யலை சார்
-------------------------------

நீதிபதி: பத்தாயிரம் ஒரு மாத ஜெயில் தண்டனை இதுல எது வேனும் உனக்கு.
குற்றவாளி: ஹி.ஹி...பத்தாயிரமே போதும் சாமி எப்டியாச்சும் பொட்டிக்கடை வச்சாச்சியும் பொழச்சிக்குவேன்.
-------------------------------
நீதிபதி: 'நகைகளை திருடியதாக உன் மீது தொட‌ரப்பட்ட வழக்கில் நீ குற்றவாளி இல்லைன்னு நிரூபணம் ஆயிடுச்சி. நீ போகலாம்'
குற்றவாளி: ' அப்படீன்னா திருடிய நகைகளை நானே வச்சுக்கட்டுமா சாமி?'
-------------------------------

"தலையிலேர்ந்து அடிக்கடி முடி கொட்டறதுக்கு முக்கிய காரணம் என்னன்னு தெரியுமா...?"
"தெரியலையே.... என்னது?
"தலையிலே முடி இருக்கிறது தான்...!"
-------------------------------


ஆசையே துன்பத்துக்குக் காரணம்னு இப்பதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன்!
எப்படி?
என் மனைவியை நான் ஆசைப்பட்டுத் தானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்
-------------------------------

SW இஞ்சினியர்கள் மேனஜரிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்


1. ராத்திரி 10 மணிக்கு கூட எங்களுக்கு பர்சனல் ஒர்க் வரக்கூடாதுனு எதிர்பார்க்கறீங்க ஆனா சாயந்திரம் 5 மணி ஆனவுடனே உங்களுக்கு மட்டும் எப்படி பர்சனல் ஒர்க் வந்துடுது?

2. அது எப்படி நாங்க சொல்லி உங்களுக்கு ஏதாவது புரியலைனா Dont make it too complicatedனு சொல்றீங்க. ஆனா நீங்க சொல்லி எங்களுக்கு புரியலைனா He is Dumbனு சொல்றீங்க?

3. அது எப்படி Week end எங்களுக்கு வேலை கொடுத்துட்டு வெள்ளிக்கிழமை நீங்க வீட்டுக்கு கிளம்பும் போது Happy Weekend னு கூச்சபடாம சொல்லிட்டு போக முடியுது?

4. அது எப்படி உங்களுக்கு ஒரு அப்ளிகஷேன் சரியா வேலை செய்யலைனா, அப்ளிகேஷன்ல பிரச்சனைனு சொல்றீங்க. அதே எங்களுக்கு வேலை செய்யலைனா, உனக்கு அப்ளிகேஷன் தெரியலைனு சொல்றீங்க?

5. ஏதாவது நல்ல நாள் வந்தா ஏதோ உங்க வீட்ல மட்டும் விசேஷம் மாதிரி எல்லா வேலையையும் எங்க தலைல கட்றீங்களே. ஏன் எங்க வீட்லயும் விசேஷம் இருக்கும்னு உங்களுக்கு தெரிய மாட்டீங்குது?

6. உங்களுக்கு ஊதிய உயர்வு வரலைனா மட்டும் கம்பெனி ரொம்ப மோசமாகுதுனு சொல்ற நீங்க, எங்களுக்காக மட்டும் பேச மாட்றீங்க?

7. ஏதாவது ஒரு முக்கியமான மெயில் அனுப்ப நீங்க மறந்தா மட்டும், I was very busy in some other issueனு சொல்றீங்க. அதே நாங்க மறந்தா, you should concentrate on workனு சொல்றீங்க?

8. ஆபிஸ் நேரத்துல நீங்க ஃபோன் பேசிட்டு இருந்தா மட்டும், அது ஏதோ தலை போற விஷயம் மாதிரி எடுத்துக்கறீங்க, அதே நாங்க பண்ணா வேலையை சரியா செய்ய மாட்றானு சொல்றீங்க?

9. சாயந்திரம் 5 மணிக்கு நீங்க வீட்டுக்கு போறது தப்பில்லை, ஆனா அப்ப நாங்க ஒரு டீ குடிச்சிட்டு வர போனா மட்டும் ஏதோ கொலை குத்தம் செய்யற மாதிரி பாக்கறீங்க?

10. காலைல வந்ததுல இருந்து ICICI Direct, Geogit, Sharekhanனு செக் பண்ணிட்டு இருக்கீங்க. அதே நாங்க மதியம் சாப்பிட்டு வந்து மெயில் செக் பண்ணா மட்டும் Don't use company resources for your personal workனு சொல்றீங்க?

Posted by வெட்டிப்பயல்

தொந்தியினால் ஏற்படும் பயன்கள்


தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:

1. கீழே குப்புற விழுந்தால் முகத்தில் அடிபட்டு மூக்கு உடையாமல் நம்மை காப்பாற்றுகிறது.

2. சமுதாயத்தில் ஒரு மரியாதையை ஏற்படுத்துகிறது. உதாரணமாக பெரிய பெரிய தொந்திகளை கொண்ட போலீசாரை கண்டால் நமக்கு மரியாதை கலந்த பயம் ஏற்படும்.

3. சிறந்த பொழுதுபோக்கு சாதனமாக பயன்படுகிறது. உதாரணமாக வேலையில்லாமல் சும்மா அமர்ந்திருக்கும் சமயத்தில் தொந்தியை மெதுவாக வருடிக்கொடுத்துக் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது.

4. மல்லாக்க படுத்து இருந்தால் குழந்தைகள் சறுக்கு விளையாட்டு விளையாட மிகவும் பயன்படும். மேலும் நமது செல்லப் பிராணிகளான பூனைகள் மற்றும் நாய்க்குட்டிகள் படுத்து உறங்குவதற்கு மிகவும் விரும்புவது குஷன் வசதி கொண்ட தொந்திகளையே.

பாடலாசிரியர் வைரமுத்து கூட,

நீ காற்று நான் மரம்
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்

என்று எழுதிய பாடலில் கீழ்க்கண்டவாறு சில வரிகளை சேர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

நீ பந்தி
நான் தொந்தி
என்ன போட்டாலும் உள்வாங்கிக்கொள்வேன்.

அரசியல்வாதிகளில் பலர் தொந்தியுடன் இருப்பதை நீங்கள் காணலாம். ஏனெனில் ஒருவரது தொந்தியின் அளவிற்கேற்ப அவரது புகழும் வளரும்.

தொந்தியார் குறைந்தால் தொண்டர் குறைவர்.
தொகுதி வளர்க்கும் உபாயம் அறிந்தே
தொந்தி வளர்த்தேன். தொகுதி வளர்த்தேனே.

என்பதே பல அரசியல்வாதிகளின் வேதவாக்கு.

தொந்தி ஏன் சதுரமாக அல்லது செவ்வகமாக இல்லாமல் உருண்டை வடிவத்தில் இருக்கிறது? என்ற வினா பலரது மனதில் எழும்.

தொந்தியானது தத்துவத்தின் சின்னமாகும்.

இந்த உலகமானது தொந்தியைப் போலவே உருண்டை வடிவமானது. இந்த வாழ்க்கையும் வட்ட வடிவமானது. இதை மனிதனுக்கு உணர்த்துவதற்காகவே இயற்கையானது மனிதனின் தொந்தியை உருண்டை வடிவத்தில் படைத்துள்ளது.

ஏழை ஒருநாள் பணக்காரன் ஆவான். பணக்காரன் ஒருநாள் ஏழை ஆவான். இதனை உணர்த்துவதற்காகவே தொந்தியானது அந்த நிலவைப் போல அடிக்கடி தேய்ந்து வளருகிறது.

இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த தொந்தியை நாம்,

போற்றி வளர்ப்போம்! கண்டதையும் போட்டு வளர்ப்போம்!!

ஜெய் தொந்தி!

நாகர்கோவில்காரங்க மக்கா பேச்சு


மக்கா.... சோமா இருக்குதியளா? பயக்க எல்லாம் சோமா இருக்கானுவளா? ஊரில வேற என்னடே விசேசம்? பேப்பர்லையும், டிவிலையும் பாத்துருப்ப, டெய்லி பண்ணி காச்சல்ல பத்து பேரு செத்து போரானுவளாம். சோக்கேடுனால செத்து போரவனுவள விட இவனுவ கிளப்புற பீதியில பேதி வந்து செத்துருவானுவ போல இருக்கு. இங்க எவன பாத்தாலும் மூக்குல கைய வச்சிக்கிட்டே நடக்கியானுவ. முந்தா நாள் வரைக்கும் மூக்குக்க கிட்ட வந்து துப்பி துப்பி பேசினவனுவ இப்ப கிட்டையே வரல.

"யான வந்தா ஆள கொல்லும், மைரையா பிடுங்கும்னு" இருந்த நமக்கே கொஞ்சம் பேடியாதான் இருக்கு.ஜலதோசத்துல எள்ளு போல மூக்கு ஒழுவுனா கூட பண்ணி காச்சல் வந்துட்டோன்னு பயர வேண்டியது இருக்கு.சரி மக்கா எனக்கு தெரிஞ்ச ரெண்டு, மூணு விசையத்த எழுதியன், நீயும் நம்ம பயலுவ கிட்ட சொல்லு... சரியா??

பண்ணி காச்சல் ஏதோ ஒரு வைரசுனால வருதாம். இந்த சோக்கேடு மொதல்ல பாரின்ல தான் வந்துது, பிறவு பாரின்ல இருந்து நம்ம நாட்டுக்கு வந்த பயலுவளால நம்ம எடத்துல பரவீட்டு இருக்கு. இது காத்துல தும்முனாலோ, துப்புனாலோ பறவுறனால தான் பெரிய மண்ட வேதன.

இங்கேரு... எவனுக்காவது காச்சலோ, பீச்சலோ, மூக்கு ஒளுக்கோ ரெண்டு நாளைக்க மேல இருந்தா ஆசுபத்திரிக்கு போவ சொல்லு. பீடிய குடிச்சிட்டு எங்கேயாவது முக்குல கமந்து கிடக்க போரானுவ. பிறவு ஒஸீல எவனாவது ஓல்ட் மங்க் தந்தான்னு குடிச்சிட்டு கிடக்காதிங்க, இந்த நேரத்துல நல்லதில்ல சொல்லிட்டேன்.

பின்ன ஆசுபத்திரியில பெரிசா கியூ நிக்குன்னு சொல்லியானுவ. இந்த கவன்மன்று காரனுவள நெனச்சா எரிச்சலா இருக்கு. இங்க மனுசன் பேடிச்சு பெய் கிடக்கான், இவனுவ என்னாண்ணா ரெத்தம் எடுக்கியது, டெஸ்ட் பண்ணியதுன்னு நேரத்த ஓட்டிட்டு , சோக்கேடு இருக்கானு நாலு நாளைக்கு சொல்ல மாட்டேங்கிறானுவளாம். என்ன மக்கா செய்யது சும்மாளா சொன்னானுவ "உயிர் பொழைக்கணுமுண்ணா ஒண்ணுக்கு அடிச்சு தான் ஆகணுமுன்னு".

மக்கா சுத்தமா இருந்தா இந்த சோக்கேடே கிட்ட வராதுன்னு சொன்னானுவ. குளத்துல வெள்ளம் கிடக்கனால டெய்லி மூணு நேரம் குளிங்க. பைனியோ, பப்பாளியோ கிடச்சா அடிச்சு சப்புங்க... நேத்து ரேடியோவுல சொன்னானுவ துளசி தின்னாலும் கொள்ளாமுண்ணு.

பிறவு வேற யாதாவது வெவரம் வேணுமுண்ணா கீழ உள்ள நம்பருக்கு போன போடுங்க.
044-24321569, 25305000, 25305723, 011-23061469, 1075 .

இப்படிக்கு
ஒங்க கூட்டுக்காரன்

முதலிரவு

முதலிரவுன்ன உடனே, எங்கயோ கற்பனை பண்ணிக்காதீங்க,

இது மேட்டரே வேற,

அதாவது,,,,,

எறும்புக்கும் கொசுவுக்கும் கல்யாணம் நடந்துச்சாம்,

முதலிரவப்ப,

கொசு, வெளில உக்காந்து வேடிக்கை பார்த்துச்சாம்

அப்ப, அங்க வந்த இன்னொரு கொசு கேட்டுச்சாம்,

என்னடா மாப்ள, முத ராத்திரி அதுவுமா, ரூமுக்கு வெளில என்னடா பன்னுரன்னு

அதுக்கு மாப்ள கொசு என்ன சொல்லுச்சி தெரியுமா?
சிரிக்கி மவ, ரூம் உள்ள குட் நைட் போட்டு தூங்கறாடா மச்சான் ,,,

வடிவேலு காமெடி 2

’அது போன மாசம். நான் சொல்றது இந்த மாசம்’

‘வேணாம்… வலிக்குது. அழுதுடுவேன்’

‘ஒரு க்ரூப்பாத்தான்யா அலயுறாங்க’

‘ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ?’

’இது வரைக்கும் நல்லாத்தானே போய்ட்டிருந்தது?’

‘கிளம்பீட்டாய்ங்கய்யா… கிளம்பீட்டாய்ங்க’

‘என்னை வெச்சு காமெடி, கீமெடி பண்ணலியே’

‘இதுதான் அழகுல மயங்கறதா?’

‘பில்டிங் ஸ்ட்ராங்கு.. பேஸ் மட்டம் வீக்’

‘என்னா வில்லத்தனம்?’

‘இப்பவே கண்ணைக் கட்டுதே..’

வருத்தப்படாத வாலிபர் சங்கம்

உங்க ஊர்லதான் அதுக்குபேரு காரு.... துபாய்ல அதுக்கு பேரு குப்பலாரி... இதுலலாம் எப்படித்தான் ஏறி போரங்கனே தெரில.........

சும்மா இருக்கறது எவ்வளவு கஷ்டம் னு தெரியுமா டா உனக்கு ....
முடிஞ்சா ஒரு மணி நேரம் சும்மா இருந்து பாரு
அப்ப தெரியும்



வேல இல்லன்னு சொல்றதுக்கு உனக்கு இவ்வளவு பந்தாவா?????? எடு செருப்ப ராஸ்கல்.... சின்னபுள்ள தனமவுல இருக்கு!!!!!!!!!

வாயில் செருப்ப கவ்வ கொடுத்து அடிச்சா கூட
கடைசி வரைக்கும் வேலை வெட்டிக்கு போகம
நாம வாழ்ந்து காட்டனும்...
அது தான் என்னோட லட்சியம்...

.......இந்த கருப்பு ஏரியாக்குள்ள செருப்பு காணமா.....
சங்கர் பாய்ஸ்......
இப்பவே இந்த ஏரியாக்குள்ள இருக்கற
பருப்பு வியாபாரி அத்தனை பேரையும் இந்த.....
கருப்பு முன்னாடி நிப்பாட்டுங்கடா ....

சீரியசா பேசிக்கிட்டு இருக்கேன் சிரிப்பு போலிசா

பூபதி: நான் கலெக்டர் ஆகுறேனோ இல்லையோ நீ உசுர விட்டுராதடா லூசு....

கட்டபொம்மன்: லூசா??? இவனுக்காக தானே பீல் பண்ணி அழுதுகிட்டு இருந்தேன்.


பல வருசமா பாலையன்கோட்டை ஜெயிலுல மைதானம்... அமைச்சு மல்யுத்தம் கட்டுன பரம்பரைடா........

குமரேசா..... எங்கே போற.... எங்கைய போற......... ஊருக்குள்ள பெரிய,. பெரிய,. ரௌடிகெல்லாம் இங்க இருக்கும் போது தனிய போய் அடிபட்டு சாகபோரிய...


வேனா எங்ககிட்ட வேனா........
அடிதடி அரசியல் எங்களுக்கும் தெரியும்.... ஆனா காட்ட மாட்டோம்.... காட்டவும் தெரியாது.....


இப்போ தான் தெரியுதா உனக்கு? ரொம்ப லேட் பிக் அப் டா...... என்னை அடிச்சி பெரிய பெரிய ரவுடி எல்லாம் கை கால் ஒடைஞ்சி கேடக்கைங்க.

அன்னிக்கே உன்ன கொன்றுபேன் ஏதோ லேசா பீதி வந்ததுனால பேசாம வந்துட்டேன்

தம்பி..... நாங்க ஏற்கனவே வேலூர் ஜெயில வெள்ளை அடிச்சு வாடகைக்கு விட்டிருக்கம்.......


நீ ஒரு வீரன அடிச்சிருந்தா நானே தலைமை தாங்கி உனக்கு இந்த பரிச வாங்கி கொடுத்திருப்பேன்......... ஆனா நீ அடிச்சது ஒரு பல்லு புடுங்கின பாம்ப..... போயா போ. போயி......... உன் வீரத்த காட்டில இருக்கிர சிங்கம் புலி சிறுத்தை க கிட்ட காட்டு.

அருவா கம்பெல்லாம் என்ன டச் பன்னி டச் பன்னி டையர்டு ஆயிடிச்சு.....

ஹலோ சினம் கொண்ட சிங்கத்த சிறையில அடைச்சா அது செல்லயே செதச்சிடும் பரவால்லயா?


கடுப்பேத்துறார் மை லார்ட்....

நாங்கெல்லாம் ஓடற ரயில ஒத்த கைல நிப்பற்றாவிங்க , அதுவும் left கைல .................................

யக்கோவ், இந்த வீட்ல நான் யாரு, யாரு, யாரு, யாரு, யாரு,

ஒரு பிச்சக்காரனுக்கு இருக்குர மரியாத கூட எனக்கு இந்த வீட்ல கிடையாது


மொத்தத்துல தீ பிழம்பு அக்னி கொழம்புடா
எங்க அதுலிருந்து ஒரு கரண்டி எடுத்து ஊத்து.

என்னாது எடுத்து ஊத்துரதா? இது சரிபட்டு வராது..
தீப்பொறி-ங்குரது ஒரு அடைமொழி, பஞ்சு அருனாச்சலம்-னு ஒருத்தர் இருக்காரு அவர் என்ன பஞ்சு முட்டாயா விக்கிராரு, படம் எடுத்துகிட்டு இருக்கார்டா, பறவை முனியம்மான்னு ஒரு கெழவி திரியிது அது என்ன என்ன பறந்துகிட்டா இருக்கு, படத்துல நடிச்சிகிட்டு இருக்குடா? நான் பாட்டுக்கு என் வழியில போய்ட்டு இருக்கேன் அப்பறம் பிரிச்சனையாயிடும்

யாருக்கு?

யாருக்கோ


ஊராடா இது? இவன் பொண்டாட்டிய அவன் வச்சிருக்கங்கிரான், அவன் பொண்டாட்டிய இவன் வச்சிருக்கங்கிரான், கருமம் கருமம்

செத்த நேரம் சும்மா இருய்யா நானே மனப்பாடம் பன்னி ஓட்டிகிட்டு இருக்கேன்

Kadi Jokes

பாமா : பல் ஆஸ்பத்திரிக்கு எப்படிப் போகணும்.
ராமு : சொத்தையோட போகணும்
--------------------------------------------------------------------------------
உமா : நான் புதுசா ஒரு பாட்டு எழுதினேன்
பாமா : எதை வைத்து?
உமா : பேனாவை வைத்து தான் எழுதினேன்!
--------------------------------------------------------------------------------

விஜய் : கொக்கு ஏன் ஒத்தக்கால்லே நிக்குது?
அஜய் : இன்னொரு காலைத் தூக்கினால் கீழே விழுந்துடுமே அதுதான்.
-------------------------------------------------------------------------------

ரேணு : அவங்க ரெண்டு பேருக்குள்ளே என்ன சண்டை.
பானு : அவங்களுக்குள்ளே ஆயிரம் இருக்கும்.
ரேணு : அப்ப ஆளுக்கு ஐநூறா பிரிச்சுக்க வேண்டியதுதானே!
--------------------------------------------------------------------------------

கரண் : கழுதைக்குப் பிடித்த ரொட்டி எது?
கிரண் : தெரியலியே?
கரண் : சுவரொட்டி - தான்.
கிரண் : ?????????

மகன்: அப்பா! --நகைச்சுவை

ரவி: நான் விமலாவுக்கு போன் பண்ணினப்ப அவங்க அம்மா எடுத்துட்டாங்க...
ராமு: அட, அப்புறம் என்ன ஆச்சு?
ரவி: ராங் மெம்பர்னு சொல்லி வெச்சுட்டேன்
*******************************************************************************************
மகன்: அப்பா! நான் B.A பண்ணவா? M.A பண்ணவா?

அப்பா: எதை வேணும்னாலும் பண்ணு என்னை தொந்தரவு பண்ணாதே...
*******************************************************************************************
டாக்டர்: ஹலோ! ரவி சவுக்கியமா இருக்கீங்களா?
ரவி: சவுக்கியமா இருந்தா ஏன் உங்களை பார்க்க வரேன்?
*******************************************************************************************
ரவி: படிப்பை முடிச்சிட்டீங்க மேல என்ன பண்ணப் போறீங்க?
ரகு: மேல ஒண்ணும் பண்ண முடியாது. பூமியிலேதான் எதாவது பண்ணனும்.
*******************************************************************************************

முட்டாள் ஜோக்ஸ்

ஒருவன்;" இந்த எறும்பு சாக்பீசை பார்த்தபிறகுதான் எனக்கு ஒரு விஷயம் புரியுது!"

இரண்டாமவன்:"என்ன புரிஞ்சிடுச்சு?"

முதலாமவன்:"எங்கயாவது ஆக்ஸிடெண்ட் நடந்தா போலீஸ் எதுக்கு சாக் மார்க் போடறாங்க?"

இரண்டாமவன்:"எதுக்கு?"

முதலாமவன்:"எறும்பு வராம இருக்கத்தான்.
--------------------------------------------------------------------------------------------------------------
புதிதாகக் கோடீசுவரரான ஒருவர் தம் பங்களாவில் மூன்று நீச்சல் குளங்கள் கட்டியிருந்தார்.

வந்த ஒருவர் "எதற்காக மூன்று?" என்று கேட்டார்?

"ஒன்று வெந்நீர் இன்னொன்று தண்ணீர், மூன்றாவது வெறுமையாக இருக்கும்" என்றார் கோடீசுவரர்.

"தண்ணீர் இல்லாமல் ஏன் வெறுமையாக நீச்சல் குளம் கட்டியிருக்கீங்க?" என்று கேட்டார் வந்தவர்.

"நீச்சல் தெரியாதவர்களுக்காக" என்று பதில் சொன்னார் அவர்.
--------------------------------------------------------------------------------------------------------------
முதலாளி: ஏண்டா! டின்ல எண்ணெய் குறையுது.

வேலைக்காரன்: டின் அடியில் சின்ன ஓட்டை இருந்திருக்கு. நான் கவனிக்கலே.

முதலாளி: டேய்! டின்ல மேலேதான் எண்ணெய் குறையுது. அடியில் ஓட்டை என்று கதை விட்டு என்னை ஏமாற்றவா நினைக்கிறாய்..

சர்தார்ஜி ஜோக்ஸ்

சர்தார்ஜி ஒருவர் இரயில் நிலைய அதிகாரி பதவிக்கான இண்டர்வியூவில் கலந்து கொண்டார். இரண்டு இரயில்கள் அதிவேகமாக எதிரெதிரே ஒரே பிளாட்பாரத்தில் வருவதை அறிந்தால் நீங்கள் முதலில் என்ன செய்வீர்கள் என்று அதிகாரி கேட்க, அதற்கு சர்தார்ஜி இவ்வாறு பதில் சொன்னாராம், “நான் முதலில் திரு. பாண்டா சிங் அவர்களுக்குத் தகவல் தெரிவிப்பேன்”.

யார் அந்த பாண்டா சிங் என்று அதிகாரி கேட்டார். சர்தார்ஜி சொன்னார், “பாண்டா சிங் என் தம்பி. அவன் இது வரை ஒரு இரயில் விபத்தைக் கூட நேரில் பார்த்ததேயில்லை.”
--------------------------------------------------------------------------------------------------------------
சர்தார்ஜியிடம் அவரது நண்பர்: என்ன இது? ஒரு காலில் பச்சைக் கலர் ஷாக்சும், மற்றொரு காலில் வெள்ளைக் கலர் ஷாக்சும் அணிந்திருக்கிறாய்.

சர்தார்ஜி: சொன்னால் ஆச்சரியப்படுவாய்! என் வீட்டில் இதுபோலவே இன்னொரு ஜோடியும் இருக்கிறது.
--------------------------------------------------------------------------------------------------------------
சர்தார்ஜி: ஒரு கண்ணாடி குடுங்க...

கடைக்காரர்: இந்த கண்ணாடியை வாங்குங்க சார். இதுல என்ன விசேஷம்னா, 100 அடி உயரத்தில இருந்து போட்டாலும், முதல் 99 அடி வரைக்கும் இந்த கண்ணாடி உடையவே உடையாது..

சர்தார்ஜி: சூப்பர். முதல்ல அதுக்கு பில் போடுங்க

கணவன்- மனைவி நகைச்சுவை

சார் என் மனைவியை இரண்டு நாளா காணோம்.
இரண்டு நாளா என்னய்ய பண்ணிணே? எங்க திரும்பி வந்துடுவாளோன்னு பயந்து கிட்டிருந்தேன் சார்.
********************************************************************

ஹோட்டலில் சாப்பிடுவதற்கும், வீட்டில் சாப்பிடுவதற்கும் என்ன வித்தியாசம்?
ஹோட்டலில் சாப்பிட்ட பின் மாவு ஆட்டுவோம். வீட்டில் மாவு ஆட்டியபின் சாப்பிடுவோம்.
********************************************************************

அவசரம் அவசரமாக மெடிக்கல் ஸ்டோருக்கு ஓடி வந்த ஒரு பெண் கடைக்காரரை பார்த்து ஆத்திரமும் அழுகையுமாக எனக்கு விஷபாட்டில் ஒன்று வேண்டும் சீக்கிரம் கொடுங்கள். என்றாள்.
கடைக்காரர் எதற்கு? என்றார்.

என் கணவனை கொல்வதற்குத் தான் என்றாள். அந்த பெண். உடேன கடைக்காரன் பதறி, ஐயோ டாக்டர் சீட்டு இல்லாமல் விஷம் தரமாட்டேன். உடேன அப்பெண் என் கணவன் மோசமானவன், நான் இருக்கும் போதே இன்னொரு பெண்ணுடன் உல்லாசமாக இருக்கிறான் இந்த போட்டோவை பாருங்கள் எனக்காட்டினாள். அதை பார்த்த கடைக்காரன் கடும் கோபமாகி இந்த அயோகியனை உடனே கொல்லுங்கள் என விஷபாட்டிலை எடுத்து கொடுத்தான். கடைக்காரன்.

மனம் மாறியது எப்படி?

ஏனென்றால் போட்டாவில் அந்த பெண்ணின் கணவனுடன் உல்லாசமாக இருந்தது போட்டோகாரருடைய மனைவி.
********************************************************************

அம்மா தாயீ, உபயோகமில்லாத பொருள் ஏதாவது இருந்தா கொடுங்க தாயீ
என் புருஷன்தாம்பா இருக்கார் பரவாயில்லையா?
********************************************************************

கணவன் - அம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம். பணம் அனுப்ப சொல்லி, லெட்டர் போட்டிருக்காங்க.
மனைவி - சுக்கு காய்ச்சி குடிக்கச் சொல்லுங்க எல்லாம் சரியாப் போய்டும்.

கணவன் - ஓகே அப்படியே உங்கம்மாவுக்கு எழுதிப் போட்டுகிறேன்

மருத்துவர் / மருத்துவமனை நகைச்சுவை

டாக்டர் 12 மணிக்கு நீங்க சாப்பிட சொன்ன மாத்திரையை 6 ம ணிக்கே சாப்பிட்டு விட்டேன்.
அப்புறம் என்னாச்சு?

கடிகாரத்தை 12 மணிக்கு திருப்பி வைச்சிட்டேன்.
********************************************************************

டாக்டர் நேத்து நீங்க கொடுத்த டியூப் மாத்திரை பெரிசா இருந்தது ஆனாலும் கஷ்ட்டப்பட்டு எப்படியோ முழுங்கிட்டேன்
அடப்பாவி டிகிரி பார்க்க வச்சிருந்த தர்மா மீட்டரை தூக்கிட்டு போய் முழுங்கிட்டயா?
********************************************************************

என்னது காய்ச்சலுக்குன்னு போன உனக்கு ஆப்ரேஷன் நடந்துச்சா, கொடுமையா இருக்கே?
அவங்க தர்மா மீட்டரை முழுங்கிட்டேன், அதான்.
********************************************************************

நோயாளி டாக்டர் என் காதுக்குள் பல்லி போயிருச்சி சார்?
டாக்டர் ஏம்பா காதுல பல்லி போகிற வரைக்கும் என்ன பண்ணிட்டிருந்தாய்?

நோயாளி எற்கனவே கரப்பான்பூச்சி காதுக்குள்ளே போயிடுச்சி அதை பிடிச்சிட்டு பல்லி வந்துடும்னு பார்த்தேன்.
********************************************************************

ஆப்ரேஷன் எப்ப டாக்டர்?
கனவுதானே வருது...! அதனாலேன்ன?

இல்லை டாக்டர் இடைஇடையே இந்த கனவை உங்களுக்கு வழங்குப வர்களுன்னு விளம்பரம்வேற வருதே.

மாமியார் - மருமகள் நகைச்சுவை

தினமும் சண்டை போடுற என் மனைவியையும் அம்மாவையும், ஒரு திருடன் தான் சேர்த்து வெச்சான்...!
எப்படி?

ரெண்டு பேரையும் ஒரேகயித்துல ஒண்ணா கட்டிப்போட்டு திருடிட்டுப் போனான்...!
=============================================================

உன் மாமியார் காணாம போனதுக்கு சந்தோஷப்படாம கண்டுபிடித்து கொடுப்போருக்கு ரூ. 1000 பரிசுன்னு அறிவிச்சுருக்கியே ஏன்?
என்கிட்ட இருந்து தப்பிச்சு போய் அவங்க சந்தோஷமா இருந்தா விட்டுடுவேனா!
=============================================================

என் மருமக நல்ல டைப்
உன்னோட சண்டை போடமாட்டாளே?

ஊஹும், சண்டை போடறப்ப எனக்கு அடிப்பட்டா உடனே டாக்ட ர்கிட்டே அழைச்சிட்டு போய் முதலுதவி செஞ்சுடுவா.
=============================================================

என் மருமகள் அக்கிரமம் தாங்க முடியலை
என்ன பண்றா?

என்னைப் பார் சிரின்னு வாசல் கதவுல எழுதி அதுக்கும் மேலே நான் சிரிக்கிற மாதிரி இருக்கிற போட்டோவை மாட்டி வச்சிருக்கா.
=============================================================

என் மாமியாரை நான் மதிப்பேத இல்லை? எப்படி?
அட நான் என் மாமியாரையே மதிப்பது இல்லை உன் மாமியாரையா மதிப்பேன்.
=============================================================

ஊர்ல இருந்து வந்த உன் மாமியார் ஏன் கோபமா இருக்காங்க?
திருஷ்டி படம் காணாம போயிருச்சுன்னு என் மாமியார் படத்தை மாட்டி வைச்சிருந்தேன்...!

காதலர்கள் நகைச்சுவை

உங்க இதயத்துல ஒரு உருவம் உக்கார்ந்திருக்கிர மாதிரி எக்ஸ்ரேல தெரியுது.
ஒரு பொண்ணு என் இதயத்துல இடம் பிடிச்சுட்டானு சொன்னேல, அவளா இருக்கும் டாக்டர்.
#######################################################

ஓடிப்போயிடலாமா டார்லிங்?
ஏன் இப்படி பயந்து சாகிறீங்க நடந்தே போகலாம்.
#######################################################

எத்தனை தடவை திரும்பி சொன்னாலும் ஏன் உனக்கு புரியவே மாட்டேங்கிறது?
திருப்பிச் சொன்னா எப்படி புரியும்? நேரா சொல்லுங்க.
#######################################################

அரசியல்வாதியின் மகளைக் காதலித்தது தப்பாப் போச்சு
ஏன்?

காதலை வாபஸ் வாங்கிக் கொள்வேன் என்று அடிக்கடி மிரட்டுகிற ரள்.
#######################################################

காதலியை பார்க்க போகும் போதெல்லாம் அவர் ஏன் கற்பூரம், வாழைப்பழம், தேங்காய் வாங்கிட்டு போகிறார்?
அது தெய்வீக காதலாம்.
#######################################################

எதுக்குடா கால்குலேட்டருடன் அந்த பொண்ணு பின்னாடி சுத்துறே?
கணக்கு பண்ணிட்டு இருக்கேன்.
#######################################################

என் காதலர் ரொம்ப சஞ்சத்தமா இருக்காரு
என்னாச்சு?

பீச்சுல பாதி சுண்டலை சாப்பிட்டு, மீதியை மணல்ல புதைச்சு வை நாளைக்கு எடுத்து சாப்பிடலாம்னு சொல்லாரு...!
#######################################################

என்ன தொடாம காதலிங்க சுரேஷ்
சரி கோவிச்சுக்காத, சுண்டல் வாங்கித் தர்றேன்.
#######################################################

முன்னெல்லாம் என் லவ்வர் பீச்சுக்கு கூட்டிட்டு போனா கடலை வாங்கித் தருவாரு. இப்ப ரொம்ப மாறிட்டாரு!
இப்படி எப்படி?

கடலை காண்பிக்கிறதோட சரி!
#######################################################

ஒவ்வொரு பண்டிகைக்கும் என் காதலிக்கு ஒரு சேலை வாங்கித் தருவேன்னு தெரியுமா?
நான் அவளுக்கு மேட்சா ஜாக்கெட் துணி வாங்கித் தருவேன்னு தெரியுமா?
#######################################################

டார்லிங் நம்ம கல்யாணம்?
சுண்டல்காரனுக்கு தரவேண்டிய பாக்கி கடன் தீர்ந்ததும்.

பஸ் நகைச்சுவை

பஸ் நகைச்சுவை


பஸ்ஸில் போகும் போது என் பையில் ஒருத்தன் பிளேடு போட்டுட்டான்.
அப்புறம் என்னாச்சி
பிளேடை தூக்கி வெளியில் போட்டு விட்டேன்.
.........................................................................................................................................
இப்ப புறப்புட்டு போன பஸ் எங்கையாவது போய் விபத்தாகிடும்னு சொல்றீங்கேள நீங்க என்ன ஜோசியரா?
இல்ல, இந்த பஸ் டிரைவர்.
.........................................................................................................................................
பஸ் கண்டக்டரை காதலிக்கிறது அப்பாவுக்கு தெரிந்து போச்சினியே, என்ன சொன்னார்?
ரைட் சொல்லிவிட்டார்.
.........................................................................................................................................
பஸ்ஸில் 2 பின் போகுது. ஒரு பின் சீட்டில் உட்கார்ந்து விடுகிறது. ஒ ரு பின் படிக்கட்டில் நின்று கொண்டு வருகிறது. எது முதலில் இறங்கும்.
நின்ற பின் தான் முதலில் இறங்கும் ஏன் என்றால் பஸ்ஸில் நின்ற பின் இறங்கவும் என போர்டு போட்டிருக்கே.
.........................................................................................................................................
பஸ் ஸ்டாண்டில் ஏன் பஸ் நிற்குது?
அதனால் உட்கார முடியாது.
.........................................................................................................................................
நேத்து பஸ்சுக்காக 3 மணி நேரம் காத்துக் கிட்டு நின்னேன்.
அப்புறம்....?
கால் வலிச்சதால உட்கார்ந்திட்டேன்.
.........................................................................................................................................
கண்டக்டரே, அடுத்த ஸ்டாப்பில் நான் இறங்கணும்.
அதை ஏன்யா எங்கிட்ட சொல்றே, அதோ ட்ரைவர் தூங்கிட்டிருக்கார், எழுப்பி அவர் கிட்டே சொல்லு.
................................................................................................................................
3 யானை பஸ் ஸாண்டிற்கு வந்தது. பஸ்ஸில் 2 யானை மட்டும் ஏறியது 1 யானை ஏறவில்லை ஏன்?
அது வழியனுப்ப வந்தது.
..............................................................................................

மன்னர்கள் நகைச்சுவை

1.மன்னா நம் நாட்டுக்குள் ஊடுருவியிருந்த ஒற்றன் நாட்டை விட்டு ஓடிவிட்டான்.
நல்ல செய்தி அதற்கு ஏன் பதறுகிறீர்கள் மந்திரியாரே?

நம் இளவரசியும் அவனுடன் ஓடிவிட்டார் மன்னா.


2. கும்பகர்ணனுக்கு பிடித்த மரம் எது?
தூங்கு மூஞ்சி மரம்.

3.மன்னா அண்டை நாட்டு மன்னன் காக்கா மூலம் தூது அனுப்பியதன் மூலம் ஒரு விஷயம் புரிகிறது.
என்ன?

இதற்கு முன் தூதுவாக வந்த புறாக்களை யெல்லாம் நீங்கள் ரோ ஸ்ட் செய்து சாப்பிட்டது அவனுக்குத் தெரிந்து விட்டது.

4. மன்னர் இரவு நேர நகர்வலத்தை பன்னிரண்டு மணியோடு முடித்துக் கொள்கிறாரே ஏன்?
மிட் நைட் மசாலா ரசிகராம் அதான்.

5. படையெடுத்து வந்த எதிரி மன்னனை நம் மன்னர் பக்குவமாக மடக்கிட்டார்...
எப்படி?

அந்தப்புரத்தை அப்படியே எழுதி வைச்சிடறதா சொல்லிட்டாரு!

6. அரிசந்திரனுக்கு பிடித்த பிஸ்கட் எது?
ட்ரூ பிஸ்கட்

7. மன்னர் ஏன் இப்பொழுதெல்லாம் நகர்வலம் போவதில்லை?
நாய்தொல்லை தாங்க முடியவில்லையாம்.

8. சிங்கத்தை அடக்கும் தைரியசாலிக்கு தன் மகளை மணம் செய்து வைப்பதென்று முடிவு செய்திருக்கிறேன் மந்திரியாரே!
இளவரசி அவ்வளவு பெரிய அடங்காபிடாரியா அரசே!

9. போர்கைதி தெரியும், அதென்ன பேர் கைதி.
அரசரை பேர் சொல்லி கூட்பிட்டானாம்.

10.ராணியின் நகைகளை மார்வாடி கடையில் அடகு வைக்கும் போது இவனை கையும் களவுமாக பிடித்து வந்திருக்கிறோம் மன்னா...!
அடப்பாவிங்களா கைச் செலவுக்கு காசில்லைன்னு நான் தான் யாருக்கும் தெரியாமல் அடகு வைக்கச் சொன்னேன்.

11. போருக்கு போகும் போது மன்னர் மண்வெட்டியுடன் போகிறா ரே ஏன்?
தோல்வி நிலை வந்தால் சுரங்க பாதை வெட்டி தப்பி செல்லத்த ரன்.

12. மன்னா ஏன் திடீரென்று ஓட்டப் பந்தய பயிற்சி பெறுகிறீர்கள்?
போரில் புறமுதுகிட்டு ஓட வசதியாக இருக்குமே அதுதான்

13. மொய் கவர்ல என்ன எழுதியிருக்கு?
சாப்பாடு பிரமாதம் என் கல்யாணத்துக்கு நீயும் எதுவும் செய்யவேண்டாம்மு எழுதியிருக்கு.

14. மன்னா எதிரிநாட்டு அரசர் பெரும்படையுடன் நம் நாட்டை தாக் க வந்து கொண்டிருக்கிறான்.
அப்படியா உடனே நம் மகாராணியாரை இந்நாட்டு மன்னர் ஆக் கிவிடுவோம்

KADI JOKES

'நான் என்ன சொன்னாலும், என் மருமகள் ’உங்க
வாய்க்கு சர்க்கரைதான் போடணும் அத்தை’னு சொல்றா !'

'இதிலே என்ன இருக்கு ?'

'எனக்கு சர்க்கரை வியாதி இருக்கு !'
-------------------------------------------------------------------------------
'எங்கம்மாவுக்கு மூச்சுவிட
ரொம்ப சிரமமா இருக்காம் கமலா !'

'அவ்வளவு சிரமப்பட்டு
எதுக்கு மூச்சு விடணும்னு கேக்கறேன் !'
-------------------------------------------------------------------------------
'நேத்து நீங்க ஏன் ஆபீசுக்கு லீவு போட்டீங்க ?'

'சொன்னா சிரிக்க கூடாது. எங்க பாட்டி செத்துப் போய்ட்டாங்க
நெஜம்மா...!'
---------------------------------------------------------------------------------
'டெலிவரி ஆயிடுச்சா ?'

'என்ன சார் நீங்க.. அதுக்கு இன்னும் மூணு மாசம் இருக்கே !'

'அட, நம்ம ஆபிஸ் சரக்குகளைப் பத்திக் கேட்டேம்மா !'
-------------------------------------------------------------------------------
'தானத்தில் பெரிய தானம் எதுடா ?'

'மைதானம் சார் !'
-------------------------------------------------------------------------------
'என் மாமியார் வாழைப் பழத் தோல் சறுக்கிக் கீழே விழுந்து காலை உடைச்சுக்கிட்டாங்க...!'

'அப்ப நீ என்ன பண்ணிட்டு இருந்தே ?'

'வாழைப் பழத்தைச் சாப்பிட்டுகிட்டு இருந்தேன்
------------------------------------------------------------------------

'ஏன் அந்த சாமியாரை வன விலங்கு பாதுகாப்புச் சட்டத்துல கைது பண்றாங்க?'

'ஒரு பக்தி ’மானை’ கொன்னுட்டாராம்!'
----------------------------------------------------------------------------------------------
'மதன்! நீ மட்டும் ஏன் 'ஹொம் ஒர்க்' பண்ணல?'

'நான் ஹாஸ்டல்ல தங்கி இருக்கேன் ஸார்!'
--------------------------------------------------------------------------------------------------
'நேத்து ஒரு ராங் கால் பண்ணிட்டேன்.... அது பலான
இடத்துக்கு போயிடுச்சு !'

'பலான இடம்னு எப்படிக் கண்டுபிடிச்சே ?'

'ரிக்கார்டிங் வாய்ஸ்ல ’அனைத்து அணைப்புகளூம்
உபயோகத்தில் உள்ளன’ன்னு வந்துச்சே !'
-------------------------------------------------------------------------------------------
'எங்க ஏரியாவுல தண்ணிப் பஞ்சம் அதிகம் !'

'அப்படியா ?'

'ஆமாம், ஒருநாள் விட்டு ஒருநாள்தான்