அறிமுகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அறிமுகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஐயா!... சகாயம் IAS.. அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.

21-நவ-201404:24:18 IST Report Abuse
vasan pon ஐயா,. சகாயம் ..அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். நாங்களோ அடிமை மக்கள். நாங்கள் அடுத்த முறையும் ஊழல் செய்யும் இந்த அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே ஒட்டு போடுவோம். ரோட்டில் பள்ளம் இருந்தால் அதை தாண்டி செல்வோம், சுற்றி செல்வோம், கொசு கடித்தால் கொசுவை வெறிகொண்டு அடிப்போம். ஆனால் இந்த நாற்றம் நிறைந்த தமிழகத்திற்கு காரணம் இதுவரை எங்களை ஆண்ட, நாங்க ஒட்டு போட்ட முதல்வர்கள்தான் என்பது எங்களுக்கு புரியவே புரியாது. எங்களில் பலர் சாமியாருக்கும், அவர்களை விட சல்லாப வாழ்க்கை வாழும் சினிமா நடிகர்களுக்கும், இவர்களுக்காகவே வேலைசெய்யும் அரசியல் வாதிகளுக்கும் அடிமைகளாக சிறு வயது முதலே மாறிவிட்டோம். அவர்களின் குறைகளை யாரேனும் சுட்டி காட்டினால் எதிர்போம், குறைகள் நிரூபிக்கப்பட்டால் அழுவோம், ஒரு காலமும் நாங்கள் அடிமைகள் என்பதை உணர்ந்து அதிலிருந்து வெளிவர மாட்டோம். எங்களை நம்பி அரசியலுக்கு வந்த எவ்வளவோ நல்லவர்களை நாங்கள் விரட்டியுள்ளோம். அண்மையில் அரவிந்த் கேஜ்ரிவால் மண்ணை கவ்வியதை நாங்கள் செய்து காண்பித்தோம். எனவே எங்களை நம்பி நீங்கள் எதிலும் இறங்கி மாட்டிக்க வேண்டாம். எங்களை போல நீங்களும் அடிமையாக மாறிவிட்டால் உங்களுக்கு கவர்னர் பதவி நிச்சயம் உண்டு. தமிழகத்தில் கனிம வளமே இல்லை என்று வழக்கை முடிக்கவும்.


இப்படிக்கு,..

 நாட்டிற்கு எது நல்லது என்று சிறிதும் சிந்திக்காமல், தன்னுடைய உணர்ச்சிக்கு அடிமைபட்டு ஒட்டு போடும் மாக்கள்.

குஜராத்தில் நரேந்திர மோடி அப்புடி என்ன செய்துட்டார்? ஒரு பார்வை

நரேந்திரமோடி ஹாட்ரிக் சாதனையாக 3-வது முறையாக குஜராத்தின் முதல்-மந்திரி ஆசனத்தில் அமரப் போகிறார். ந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களையும் விட குஜராத் மட்டும் தனியாக கவனிக் கப்படுகிறது. என்ன காரணம்ப மோடி என்ற ஒரே தலைவரை சுற்றி சுழலும் பல்வேறு யூகங்களும், ஆச்சர்யங்களும்தான்.
 
மத அடிப்படைவாதி... மத மோதல்களுக்கு காரணமானவர்... என்று இந்தியாவிலும், உலக நாடுகளிலும் பல்வேறு முத்திரைகள் குத்தப்பட்டாலும் குஜராத் மக்கள் தங்களின் மானசீக ஹீரோவாக மோடியை ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.
 
குஜராத்தின் நிரந்தர 'ஹீரோ' நரேந்திரமோடி: தமிழக தலைவர்கள், பிரமுகர்கள் கருத்து
 
போற்றுவார் போற்றட்டும், புழுதிவாரி தூற்றுவோர் தூற்றட்டும் நம் பணியை நாம் செய்வோம் என்ற லட்சிய தாகத்தோடு அவர் ஆற்றிவரும் சாதனைகள்தான் அவரை வெற்றி திருமகனாக வாகை சூட வைத்துள்ளது.
 
மோடி வெற்றியின் ரகசியம் என்ன? என்பது பற்றி குஜராத் தேர்தலில் பிரசாரம் செய்து திரும்பிய தமிழக பா.ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
 
நரேந்திர மோடி பற்றி தவறான தோற்றத்தை வெளியே சித்தரிக்கிறார்கள். ஆனால் அந்த மாநில மக்கள், அந்த மாநிலத்தை பார்த்தவர்கள், மோடியோடு பழகியவர்கள் இதை ஏற்கமாட்டார்கள். அவர் குஜராத் மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ளார். ஒரு காலத்தில் கலவர பூமியாக காட்சியளித்தது.
 
ஆனால் அவரது ஆட்சியில் கலவரங்கள் இல்லை. யாரும் பாதிக்கப்பட கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார். மதத்தின் அடிப்படையில் யாரையும் அவர் பிரித்து பார்ப்பதில்லை. எல்லோரும் வளர்ச்சி அடைந்தால்தான் மாநிலம் முன்னேறும் என்று அனைத்து தரப்பு மக்களின் முன்னேற்றத்துக்காக பாடுபடுகிறார்.
 
கேசுபாய் பட்டேலை பிரித்ததும் பட்டேல் சமூகத்தின் ஓட்டை பிரித்துவிடலாம் என்று எதிர்க்கட்சிகள் கனவு கண்டன. ஆனால் அந்த சமூக ஓட்டு சிதறவில்லை. சாதி, மத அடிப்படையில் அந்த மாநிலத்தில் யாருக்கும் சலுகை காட்டுவதில்லை. கடந்த முறை நான் பிரசாரத்துக்கு சென்றபோது இருந்த ஆதரவை விட இப்போது ஆதரவு பெருகி இருந்ததை என்னால் பார்க்க முடிந்தது. குஜராத்தின் வளர்ச்சி ஒட்டு மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
 
நர்மதை ஆற்று தண்ணீரை பல பகுதிகளுக்கு திருப்பி விட்டுள்ளனர். புதிய சாலைகள், ஆயிரக்கணக்கில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது. இதனால் விவசாயமும் செழிக்கிறது. நிலத்தடி நீரும் காக்கப்படுகிறது. 2001-க்கு முன்பு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு லாரிகளில் குடிநீர் சப்ளை செய்யப்பட்டது. இன்று அந்த நிலை இல்லை.
 
விவசாயத்துக்காக 15 லட்சம் பம்பு செட்டுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இலவசம் கிடையாது.
 
சூரியஒளி மின்உற்பத்தி, காற்றாலை மின்உற்பத்தி மூலம் தேவைக்கு அதிகமான மின்சாரம் உற்பத்தி வழங்கப்படுகிறது. தமிழகத்துக்கு 1000 மெகாவாட் மின்சாரம் வழங்க அந்த மாநிலம் தயாராக இருக்கிறது. பல்வேறு தொழிற்சாலைகள் பல பகுதிகளில் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் வேலைவாய்ப்பு பெருமளவில் பெருகி உள்ளது.
 
2001-க்கு முன்பு கல்வியை இடையில் நிறுத்தும் மாணவர்கள் 50 சதவீதத்துக்கு மேல் இருந்தனர். இப்போது கல்வி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அந்த நிலையை மாற்றி இருக்கிறார்கள். பெண் கல்விக்கு முக்கியத்துவம் வழங்கி வருகிறார்கள். ஒவ்வொரு விசயத்திலும் முதல்- மந்திரியாக இல்லாமல் மக்களில் ஒருவராக இருந்து அவரே நேரடியாக கவனம் செலுத்துகிறார். புதிய தொழில் நுட்பங்களை பழமை மாறாமல் புகுத்தி வருகிறார்.
 
அனைத்து கிராம பஞ்சாயத்துகளையும், கம்ப்யூட்டர் மூலம் இணைத்து உட்கார்ந்த இடத்தில் இருந்தே ஒவ்வொரு கிராமத்தையும் நேரடியாக கண்காணிக்கிறார்.
 
அர்ப்பணிப்புடன் கூடிய அவரது உழைப்பும், மாநிலத்தின் வளர்ச்சியும்தான் மக்களை ஈர்த்துள்ளது.
 
வெளியே என்னதான் முத்திரை குத்தப்பட்டாலும் குஜராத்தில் வாழும் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் அனைவரும் பாகுபாடு இல்லாமல் அவரை ஆதரிக்கிறார்கள். மற்ற கட்சிக்காரர்கள் கூட மோடி வெற்றி பெற்றால்தான் மாநிலம் வளரும் என்று கூறுகிறார்கள்.
 
எனவே அவரது வெற்றி எதிர்பார்த்ததுதான். எத்தனை அரசியல் புயல்கள் வீசினாலும் நரேந்திர மோடி என்ற இரும்பு மனிதரை வீழ்த்தி விட முடியாது.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி (பா.ம.க.) கூறியதாவது:-
 
நரேந்திர மோடியை பொறுத்தவரையில் மிகவும் எளிமையானவர். நான் மந்திரியாக இருந்தபோது 3 முறை அந்த மாநிலத்துக்கு சென்றுள்ளேன். அவரது உழைப்பு, சிந்தனை அனைத்தும் அந்த மாநிலத்தை சார்ந்தே இருக்கும். நேர்மையாக மக்களுக்காக உழைக்க கூடியவர்.
 
பூரண மதுவிலக்கை அமல்படுத்தி இளைஞர் சக்தியை மாநில வளர்ச்சிக்காக நல்ல முறையில் பயன்படுத்தி வருகிறார். எல்லா முதல்- மந்திரிகளுக்கும் அவர் எடுத்துக்காட்டாக திகழ்கிறார். மக்கள் நலனுக்காக பாடுபட்டால் மக்கள் மனதில் இருந்து அகற்ற முடியாது என்பதை நரேந்திர மோடியின் வெற்றி நிரூபித்து வருகிறது.
 
அசோக் பி.வியாஸ் (திருவல்லிக்கேணி):- எங்கள் பூர்வீகம் ஆமதாபாத். ஆனால் நான் பிறந்து வளர்ந்தது சென்னையில்தான். இப்போது உறவினர்களை பார்ப்பதற்காக அவ்வப்போது குஜராத் செல்வேன்.
ஒவ்வொரு முறை செல்லும்போதும் அங்கு பார்க்கும் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது.
 
எப்படியோ கிடந்த சாலைகள் இன்று எப்படியோ மாறி உள்ளன. அப்படிப்பட்ட தரமான சாலைகளை வேறு எங்கும் நான் பார்க்கவில்லை.
பஸ் போக்குவரத்து வித்தியாசமாக உள்ளது. ரோட்டின் நடுவில் பஸ்கள் செல்ல தனிவழி. போக்குவரத்து இடைஞ்சல் இல்லாமல் வாகனங்கள் செல்லமுடியும். பாலங்கள், மேம்பாலங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்பட பல வளர்ச்சியை நான் பார்த்து வருகிறேன்.
 
எங்கள் நகரத்துக்கு பக்கத்தில் ஆனந்த் என்ற சிறு கிராமம் உள்ளது. குடியிருக்கவே லாயக்கில்லாத அந்த கிராமத்தில் இப்போது செல்வம் கொழிக்கிறது. அங்கு வளர்க்கப்படும் பசுமாடுகள், பால்கறக்க நவீன எந்திரங்கள். அங்கு கிடைப்பதுபோல் தரமான பாலை எங்கும் வாங்க முடியாது. இப்படி ஒரு கிராமமே வளரும்போது ஒட்டுமொத்த மாநிலமும் வளர்ச்சி காணும். எனவேதான் மக்கள் மத்தியில் மோடி ஹீரோவாக காட்சியளிக்கிறார்.
 
பாயின்ட் மணி (தொழில் அதிபர்):- தொழில் ரீதியாக அடிக்கடி குஜராத் செல்கிறேன். அங்குள்ள நிர்வாக முறையே ஆச்சரியப்பட வைக்கிறது. எந்த தொழில் தொடங்க அந்த மாநிலத்துக்கு சென்றாலும் அரசே ஊக்கப்படுத்துகிறது. அந்த தொழிலால் ஏற்படும் பிரச்சினைகளுக்கும் அரசு தீர்வு காண்கிறது. உதாரணமாக திருப்பூர் பகுதியில் சாயப்பட்டறை பிரச்சினை எழுந்தபோது பலர் குஜராத் சென்று தொழிலை செய்தார்கள்.
 
அப்போது சாய கழிவுகளை சுத்திகரித்து கடலில் கலந்தார்கள். விவசாயத்தையும், தொழிலையும் ஒன்றுபோல் ஊக்கப்படுத்துகிறார்கள். எதுவுமே இலவசம் இல்லை. அரசு துறைகளில் அரசியல் குறுக்கீடு இல்லை. பூரண மதுவிலக்கு அமுலில் உள்ளது. எல்லோரும் உழைப்பை நம்பி வருகிறார்கள். தேர்தலில் கூட ஆடம்பரத்தை பார்க்க முடியவில்லை.
உழைக்க வேண்டும், முன்னேற வேண்டும் என்று ஒவ்வொருவரும் உழைக்கிறார்கள்.
 
அதற்கு அரசின் ஊக்கமும் கைகொடுப்பதால் மக்கள் எல்லோரும் சமமாக வாழ்கிறார்கள். இங்கெல்லாம் பணக்காரர்கள் பணக்காரர்களாகவும், பாமரர்கள் பாமரர்களாகவும் இருப்பதால் இடைவெளி உள்ளது. அந்த இடைவெளி குஜராத்தில் இல்லை. எனவே எல்லாதரப்பு மக்களும் மோடியை ஆதரிக்கிறார்கள்.
 
சென்னை மாநகராட்சியில் இருந்து கடந்த ஆட்சியின்போது பல்வேறு கட்சிகளை சேர்ந்த 15 கவுன்சிலர்கள் குஜராத் மாநிலத்தை பார்வையிட சென்றார்கள். மோடி மக்களால் ஈர்க்கப்படுவது பற்றி அவர்களிடம் கேட்டபோது பெயரை வெளியிட மறுத்து கூறியதாவது:-
 
பிளேக் நோய் பாதித்து சுகாதார சீர்கேட்டுக்கு பெயர் போன நகரம் சூரத். இப்போது அந்த நகரம் சுகாதாரத்துக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது. ஆமதாபாத் நகரில் எங்கும் போக்குவரத்து நெரிசலை பார்க்க முடியவில்லை. நகராட்சி சார்பிலேயே பிரமாண்டமான ஆஸ்பத்திரி, மருத்துவ கல்லூரி நடத்துகிறார்கள். அதில் அரசியல் தலையீடு இல்லாமல் தனி கமிட்டி அமைத்து நிர்வாகம் செய்கிறார்கள்.
 
சாக்கடை நீரை கூட விட்டு வைக்கவில்லை. சூரத்தில் சாக்கடை நீரில் இருந்து மின்சாரம் தயாரித்து குறிப்பிட்ட பகுதிக்கு விநியோகிக்கிறார்கள். எல்லாவற்றையும் முறையாக செய்வதால் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு மோடியை யாராலும் அசைக்க முடியாது என்பதை நாங்கள் நேரிலேயே பார்க்க முடிந்தது என்றனர்.

சென்னையில் டிராஃபிக் ராமசாமி தெரியுமா உங்களுக்கு ?...

டிராஃபிக் ராமசாமியைப் பற்றி விகடனில் வந்திருந்தது. அதை இங்கே மீள்பதிவு செய்திருக்கிறேன். நன்றி, விகடன்!

ஆள், அம்பு, சேனை தேவையே இல்லை. மனதில் தைரியம் இருந்தால் எவரையும் தனி ஆளாகவே எதிர்க்கலாம் என்கிற தனி மனித ராணுவம் டிராஃபிக் ராமசாமி. பொதுநல வழக்குகளால் பொதுமக்கள் நலன் காக்கும் நீதிமான்!
”ராஜாஜி அமைச்சரவையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரா இருந்த வெங்கடசாமி நாயுடுவின் தனிச் செயலாளரா இருந்தேன். ஒருநாள் என்னையும் எனது தம்பியையும் அழைத்து ஆசி வழங்கினார் ராஜாஜி. அவரது கையில் வைத்திருந்த ராமாயணத்தை என் தம்பியிடம் கொடுத்தார். மகாபாரதத்தை என்னிடம் கொடுத்தார். என் கண்ணைப் பார்த்தார். ‘உன்னைப் பார்த்தா பிற்காலத்துல போல்டா வருவேன்னு தெரியுது. உன் மனதில் எது சரின்னு படுதோ, அதைத் தைரியமாப் பண்ணு. மற்றவங்க என்ன சொல்வாங்கன்னு பயப்படாதே. உன் மனசாட்சிக்கு சரின்னுபட்டா, யாரையும் துணிச்சலா எதிர்த்துப் பேசு. இதுதான் என்னோட அறிவுரை!’ன்னார்.
சிறு வயதில் அப்படி ஒரு பெரியவர் சொன்னது என் மனசில் தங்கிருச்சு. அர்ஜுனனுக்கு கண்ணன் சொன்னதா பகவத் கீதையில் வரும், ‘எதிரிக்கு அஞ்சாது வீரத்தோடு பாய்ந்து தாக்க வல்லவனே சூரத்தன்மை உடைய வனாகிறான். அச்சத்தை அறியாத மனநிலை தேஜஸ் அல்லது துணிவெனப்படுகிறது. வீரத்துடன் எதிர்த்து நின்று அடி பட்டுச் சாவதே மேல்’னு வரும். இதுதான் 76 வயசிலேயும் என்னை எனர்ஜியோடு வெச்சிருக்கு.
சாதாரணமா ஆரம்பிச்ச கலாட்டா இவ்வளவு பெரிசாகும்னு நினைக்கலை. அப்போ எனக்கு 15 வயசு இருக்கும். 14 கிலோ அரிசி மூட்டையைத் தூக்கிக்கிட்டுப் போனேன். கோட்டா சிஸ்டம் இருந்த காலம் இது. ‘ஒரே நேரத்துல 14 கிலோ கொண்டுபோகக் கூடாது’ன்னு தாசில்தார் தடுத்தார். ‘அப்படியா, வெச்சுக்கோங்க. ஆனா, உங்களையே கொண்டு வந்து என் வீட்டுல கொடுக்க வெப்பேன்’னு சொன்னேன். புகார்களைத் தட்டினேன். ஒருநாள் காலையில் எங்க வீட்டைத் தேடி வந்து அவரே அரிசியைக் குடுத்துட்டுப் போனார்.

பச்சையப்பன் கல்லூரியில் படிச்சேன். பின்னி மில்லில் அலுவலக உதவியாளராச் சேர்ந்து உயர் அதிகாரி ஆனேன். மில் பிரச்னை வந்த பிறகு, ஊழியர்களுக்கு வேலை இல்லாமல் சம்பளம் குடுத்தாங்க. பிறகு அதையும் நிறுத்திட்டாங்க. அலுவலக வேலையில் இருந்த எனக்கு எந்தச் சிக்கலும் இல்லை. சம்பளம் வந்தது. ஆனா, தொழிலாளர்கள் நிலைமையைப் பார்த்து ‘இங்க வேலை பார்க்கணுமா’ன்னு கவலைப்பட்டு வெளியேறிட்டேன்.
ஊர்க் காவல் படையில் சேர்ந்தேன். அதுக்குத் தலைவரா இருந்தவர் பிரபல வக்கீல் கோவிந்த சாமிநாதன். ‘கௌரவம்’ படத்தில் சிவாஜிக்கு முடி வந்து விழுமே, அது இவரைப் பார்த்துவெச்சதுதான். அந்தக் காலத்தில் நாங்கதான் போலீஸ்காரங்க ஒழுங்கா வேலை பார்க்கிறாங்களான்னு கண்காணிப்போம். போலீஸ் பீட் புக்கைச் சரி பார்த்து கையெழுத்துப் போடுவோம். ரெண்டு ஸ்டார்கள் வாங்கி கூடுதல் சிறப்பு கமாண்டரா ஆனேன். வாகனங்கள் அதிகமாக ஆரம்பிச்ச காலம் அது. யாரெல்லாம் விதிமுறைகளை மீறுறாங்களோ, அவங்களைப் பற்றி புகார் சொல்வது, மேலிடத்துக்கு எழுதிப் போடுவது, தட்டிக் கேட்பதுன்னு கிளம்பினேன். பொய்ப் புகார் அடிப்படையில் கைது செய்து என்னை அடிச்சாங்க. இதை எல்லாம் எதிர்பார்த்துத்தானே இறங்கினேன்! போடப்பட்டது பொய் வழக்குன்னு நீதிமன்றத்தில் நிரூபிச்சு வெளியே வந்தேன். தவறுகளைத் தட்டிக் கேட்பவனுக்கு நீதிமன்றம் பக்கபலமா இருக்கும்னு தெரிஞ்சது.
நான் போட்ட வழக்குகள், தட்டிக்கேட்ட அநியாயங்கள், வாதாடிப் பெற்ற உரிமைகள்னு கணக்குப் பார்த்தா, எண்ண முடியாது. சென்னை உயர்நீதி மன்றத்தைச் சுற்றியுள்ள சாலையை ஒரு வழிப்பாதையா ஆக்கினாங்க. இதனால் குழப்பம்தான் வரும்னு கண்டிச்சேன். யாரும் கேட்கலை. எத்தனையோ பேர் விபத்தில் இறந்ததுதான் மிச்சம். இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்த போலீஸ் அதிகாரியின் உறவினரே பலியானார். இந்த வழக்குக்காக இரண்டு வருஷம் வாதாடினேன். அதே மாதிரி நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி மூணு மேம்பாலங்கள் கட்டத் திட்டமிட்டாங்க. அதையும் நிறுத்தினேன். ‘கொலை பண்ணிடுவோம்’னு மிரட்டினாங்க. சென்னையில் பல விபத்துகளுக்கு மீன்பாடி வண்டிகள்தான் காரணம். லைசென்ஸ் இல்லாத புல்லட் இன்ஜினைப் பொறுத்தி, கண்மண் தெரியாம ஓட்டியதால் எத்தனையோ உயிர்களை இழந்தோம். அதனால் பாதிக்கப்பட்ட ஒருவன் என்னைக் கத்தியால் குத்தினான். அப்போதான் நீதிமன்றம் என் உயிரைப் பாதுகாக்கும் பொறுப்பை எடுத்துக்கிட்டது. ஒரு ஹெட்கான்ஸ்டபிள், மூணு கான்ஸ்டபிள் பாதுகாப்பு என் வீட்டுக்கும் எனக்கு ரெண்டு கன்மேன் பாதுகாப்பும் கொடுத்தாங்க. காலப்போக்கில் வீட்டுக்குத் தரப்பட்ட பாதுகாப்பு வேண்டாம்னு நானே மறுத்துட்டேன்.
என் வீட்ல பயப்பட்டாங்க. ‘உங்களுக்கு எதுக்கு இந்த ஊர் வேலையெல்லாம்?’னு என் மனைவியும் மகளும் பயந்தாங்க. நான் எனக்குன்னு ஒரு ரூமை வாடகைக்குப் பிடிச்சு, தனியே வந்து ஆறு வருஷம் ஆச்சு.
கண்ணு முன்னால் நடக்கிற தப்பைப் பார்த்துட்டு, என்னால் கடந்து போக முடியாது. தப்புன்னு அதிகாலையில் நினைச்சா, மத்தியானத்துக்குள் எதிர்ப்பைக் காட்டியாகணும். பணத்துக்கு மயங்கியிருந்தா, கோடீஸ்வர ராமசாமியா உட்கார்ந்திருக்கலாம்.
தி.நகர்ல எந்த விதிமுறைகளையும் பின்பற்றாம எத்தனையோ மெகா மாளிகைகள் எழும்பி வருது. இதை முறைப்படுத்தணும்னு போராட ஆரம்பிச்சப்போ, என்னை விலை பேசினாங்க. முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் 10 லட்சம் ரூபா வரை தருவதா ஒரு வழக்கில் சொன்னாங்க. பணம், பதவிக்கு மயங்கி இருந்தா, இப்போ உங்கள் முன்னால் பேசியிருக்க முடியுமா?
காலையில் ரெண்டு இட்லி, மத்தியானமும் ராத்திரியும் மோர், பசிச்சா ரெண்டு பிஸ்கட் அல்லது வாழைப்பழம். இதுதான் 40 வருஷமா என் சாப்பாடு. இப்படிப்பட்டவனை யார் என்ன செய்துட முடியும்? தேவைகளைக் குறைச்சுக்கிட்டே போனா, பயமும் குறையும்.
ஏன் பயப்படணும்? தவறு செய்தவன் தைரியமா இருக்கான். கைதாகிப் போறப்போ, கையைக் காட்டி நிமிர்ந்து போறான். ஆனா, எந்தப் பாவமும் செய்யாத அப்பாவி மனுஷன் ஏன் பயந்து சாகணும்? கோழை செத்துச் செத்துப் பிழைப்பான். வீரனுக்குத்தான் மரணமே கிடையாது.
ஏப்ரல் ஒண்ணாம் தேதி பிறந்தேன். அது முட்டாள் தினம்னு எவன் சொன்னான்? என்னை ஒழிக்க நினைச்சவங்கதான் முட்டாள் ஆகியிருக்காங்க. என்னை அடிச்சிருக்கலாம், உதைச்சிருக்கலாம். ஆனா, இன்னும் நான் அப்படியேதான் இருக்கேன்.
தனி மனிதனா இந்தியாவில் இருந்து வெளியேறிய நேதாஜி, மிகப் பெரிய பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தைத் தனது படையால் சாய்க்க முடியும்னு நினைச்சதுக்குக் காரணம், அவரது படை பலமல்ல, மன பலம்.
என்னோடு வர உங்களில் எத்தனை பேர் தயார்?”

Nove 2011: இந்தியன் சிட்டிசன் ரைட்ஸ் பில் 2011 படி எந்த ஒரு அரசு சார்ந்த அதிகாரியோ, அல்லது அலுவுலக்மோ உங்களை இழுத்தடித்தால் நீங்கள் செய்ய வேண்டிய கம்ப்லெயின்ட் இங்கு தான். அவர்களுக்கு தண்டனை, இடை கால பணி நீக்கம், அல்ல்து டிஸ்மிஸ் நிச்சயம். இந்த சட்டம் இப்போழ்து மறு ஆய்வு செய்ய ப்டுகிறது. உங்கள் பின்னுட்டங்களை தெரிவிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி கீழே கொடுக்கபட்டுள்ள்து. இது கிராம பஞ்சாயத்து, மாவட்ட நிர்வாகம், மானில அரசு மற்றூம் மத்திய அர்சுக்கு செல்லும்.இது மிக சீரியஸ் ஆன விஷயம், இதன் மின்னஞ்சல் பிரதம அலுவுலகத்தின் நேரடி பார்வையில் உள்ளது, அதனால் கவனத்துடன் கையாளுங்கள். 23.11.2011 - LAST DATE.

SHARE AS MUCH AS POSSIBLE.

This is a comprehensive rights based bill for the citizens of the country, providing statutory backing for getting timely services and goods specified in citizens charters of public authorities from Gram Panchayat, Block, District, State up to Central Level. Any violation of the citizens charter will be dealt as a grievance and institutional mechanism has been provided for time-bound grievance redressal and malafide action on the part of responsible officers will lead to penalty / disciplinary action

This is now placed in the public domain for inviting comments and suggestions which can be forwarded at the following email address by 23.11.2011:
• pk.jha@nic.in
• satish@arpg.nic.in

http://darpg.gov.in/ darpgwebsite_cms/document/file/ Draft_Bill.pdf


    Posted,
கூட்டாஞ்சோறு

வலைச்சரத்தில் அறிமுகம் நன்றி TO.. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

நீங்க உண்மைலயே ரொம்ப நல்லவருங்க..வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கும்..மிக்க நன்றி.. ..



ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)


உங்களை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தி உள்ளேன். வருகை தரவும்...

http://blogintamil.blogspot.com/2010/12/wednesday.html


இந்த கமென்ட் வந்ததும் போய் படித்தால்...

ஒரு சந்தோசமும் ஒரு பயங்கரமும் நடந்தது... போனவுடன் அதீர்ச்சி. இதுவரைக்கும் நான் உண்டு என் பதிவு உண்டு நு இருந்த

என்னை பலர் பார்க்க
வாய்ப்பு.<சந்தோசம்>.

<பயங்கரம்> எது னா
நானும் பிரபல பதிவர் ஆனா உங்க பாடு ....?
அது தான்...