குமாரசாமி காமராஜர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குமாரசாமி காமராஜர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

காமராஜர் ஏழையாகவே, எழைகளுக்காகவே இருந்தார்….

அப்போது காமராஜர் முதல்வர். பழைய சட்டமன்ற விடுதியில்மண்ணாங்கட்டி என்பவர் கீழ்மட்ட ஊழியராக இருந்தார். சட்டமன்ற ஊறப்பினர்கள் கேட்பதை வாங்கிவந்து தருவார். முதல் தளத்தில் முன்பாகவே இருக்கும் முக்கையா தேவர் அறையிலேயே இருப்பார். ஒருமுறை ஏம்பா மண்ணாங்கட்டி அவசரமாக வெளியில போறன்.குளிச்சு முடிச்சு ரெடியாகுறதுக்குள்ள இட்லிய வாங்கி வந்துடு’ என்று 100 -ருபாயை கொடுத்தார் முக்கையா தேவர். சொன்னபடியே அவர் ரெடியாகி காத்திருந்தார்.

ரொம்ப நேரம் ஓடியது. தலையில் சுமையுடன் தட்டுதடுமாறி வந்தார் மண்ணாங்கட்டி. பார்த்ததும் ஏன்யா. நான் அவசரமா வெளியில போகனும்னு காத்துகிட்டு இருக்கேன். இட்லி வாங்க இவ்வளவு நேரமா என்று எகிறினார் மாயாண்டி தேவர். மண்ணாங்கட்டிக்கு கோபம். என்னங்கய்யா நீங்க. இங்க ஆஸ்ட்ல அவ்வளவு இட்லி இல்லைன்னு சொல்லிட்டாங்க. மவுண்ட் ரோடெல்லாம் போய் அலைஞ்சு 100 ருபாக்கும் இட்லி வாங்குறது லேசுபட்ட காரியமாஎன்று பதிலுக்கு சத்தம் போட்டார். அதுதான் மண்ணாங்கட்டி என்ற வெகுளி. அப்பாவி. அவ்வளவு வெள்ளந்தி….
 
அப்படியான மண்ணாங்கட்டியின் தலையில் ஒருநாள் இடி விழுந்தது. அந்த உத்தரவை படித்துகாட்டச்சொல்லி வீட்டில் அழுது புரண்டு கதறினார். அரசாங்க உத்தியோகத்தில் எழதப்படிக்கத் தெரியாதவர்கள் எல்லாம் இனி வேலையில் இருக்க கூடாது.பணியில் இருந்து நீக்கப்படுகிறார்கள்’ என்று காமராஜர் போட்ட உத்தரவுதான் அந்த கடிதம். இரண்டு நாள் கழித்து பழைய சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு ஓடிவந்தார். முக்கையா தேவரிடம் தரையில் விழுந்து கதறி அழுகிறார்.
என்னவென்று கேட்கிறார். ’இப்படி ஒரு உத்தரவு வந்திருக்கிறதே. என் குடும்பம் எல்லாம் நடுத்தெருவுக்கு வந்துடுச்சே. எப்படியாவது காப்பாத்துங்க ஐயா’ என்று பித்துப் பிடித்தவராக அழுகிறார். ஏதாவது சமாதானம் சொல்லனுமே என்று முதல்வர் ஆபிசுக்கு போன் போடுடா. கேட்டுடலாம்’ என்றார். அப்போது எல்லாம் நேரடியாக தொலைபேசும் வசதி இல்லை. ஆப்ரேட்டரிடம் கூறிவிட்டு காத்திருக்க வேண்டும். முதுல்வர் அலுவலகத்தில் யாராவதுஉதவியளர் எடுப்பார்கள்.
 
மண்ணாங்கட்டி புக்செய்த நேரம் உடனே தொடர்பு கிடைத்தது. மறுமுனையில் முதல்வர் காமராஜ். யார் நீங்கள் உங்களுக்கு என்ன வேண்டும் என்கிறார். அய்யா நான்தான் அசம்பிளி ஆஸ்டல் பியூன் மண்ணாங்கட்டி பேசுறங்க ஐயா என்றபடியே அருகில் இருந்த முக்கையா தேவரை பார்க்கிறார். அவருக்கு முதர்வர்அலுவலகத்தில் இருந்து யாராவது உதவியாளர்கள்தான் டெலிபோனை எடுத்திருப்பார்கள் என்ற நினைப்பு. எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கறப்போ நான் பியூனா இருக்கக்கூடாதான்னு கேளுடா” என்கிறார்.
மறுமுனையில் இருந்த காமராஜரிடம் அதை அச்சுபிசகாமல் ஐயா,எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கிறப்போநான் பியூனா இருக்ககூடாதான்னு’ தேவர் ஐயா கேட்க சொல்றாருங்க என்கிறார் மண்ணாங்கட்டிபிறகு பேச்சில்லை….
 
அடுத்த 30 நிமிடத்தில் உயர் அதிகாரிகள் 3-பேர் அங்கே வந்துவிட்டார்கள். முதல்வருக்கு போன் செய்தது யார்என்றார்கள்.நான்தான் ஐயா என்று முன்னே வருகிறார் மண்ணாங்கட்டி. உங்களை கையோடு அழைத்துவரச் சொல்லியிருக்கிறார். உடனே புறப்படுங்கள் என்று நிற்கிறார்கள். அப்போதுதான் நாம்பேசியிருப்பது முதல்வரிடம் என புரிகிறது. முக்கையா தேவருக்கும் பதட்டம். மண்ணாங்கட்டி ஐயா நீங்களும் வாங்க’ என்று அழுகிறார். பின்னாடியே வருகிறேன். நீ போப்பா என்று அனுப்பி வைக்கிறார். கோட்டையில் உள்ள முதல்வர் காமராஜை நோக்கி வாகனம்பறக்கிறது.
 
முதர்வரின் அறையில் உள்ள ஷோபாவில்கண்ணத்தில் கைவைத்தபடி கவலைதோய்ந்த முகத்தோடு உட்கார்ந்திருக்கிறார் காமராஜர். கதவு திறக்கப்படுகிறது. மண்ணாங்கட்டி முதலில் நுழைய அதிகாரிகள் சற்று ஒதுங்கி கதவோரம் நின்று கொண்டார்கள்.நீங்கதான் மண்ணாங்கட்டியா…என்கிறார்​. ஆமாங்க ஐயா. நான்தெரியாம பேசிட்டேன். என்னை மன்னிச்சுடுங்க ஐயா என்றபடியே கீழே விழுந்தார். அந்த கலாச்சாரம் காமராஜருக்கு பிடிக்காது. அதிகாரிகளை பார்க்க உடனே எழுப்பி நிற்க வைக்கிறார்கள். அவரை வா…வாண்னேன். வந்து பக்கதில உட்காருங்கன்னேன் என்றழைக்கிறார். மண்ணாங்கட்டி தயங்கி நிற்கிறார். காமராஜர் முறைக்க தயங்கி தயங்கி பக்கத்தில் சென்று உட்காருகிறார்.
மண்ணாங்கட்டியை முதுகில் தட்டிக்கொடுத்து முகத்தையேஉற்றுப்பார்த்த முதல்வர் காமராஜ்பட்டென்று கையெடுத்து கும்பிட்டு நான் தப்புபன்னிட்டன். தெரியாம செய்திட்டன். மன்னிச்சுடு. அந்த தவறை நீதான் புரியவைச்சே…ரெண்டு நாளா உங்கவீட்ல சோறுதண்ணியில்லியாமே.
சமைக்கலயாமே….உங்களுக்கு ரெண்டு பொம்பளபுள்ளைங்க…எல்லாத்தையும் இப்பதான் தெரிஞ்சுகிட்டேன்..எவ்வளவு பெரிய தப்பு செய்திருக்கேன்.. நான் அப்படி ஒரு உத்தரவு போட்டிருக்ககூடாது. இனிமே புதிதாக வேலைக்கு வருபவர்களுக்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்னு போட்டிருக்க வேண்டும். நான் செய்தது தவறுதான் என்று தட்டிக்கொடுத்து ஆதறவு சொல்லமண்ணாங்கட்டி கதறி அழுகிறார். காமராஜருக்கும் பேச்சு இல்லை…
 
அடுத்து அங்கேயே ஒரு உத்தரவு தயாராகிறது. காமராஜர் கையொப்பமிடுகிறார். மண்ணாங்கட்டிக்கு மீண்டும் அரசு வேலை. அதிகாரிகளை பார்த்து இவரை அழைத்துக்கொண்டு போங்க. வேலை கொடுத்தாச்சு. இனி கவலைப்பாதீங்கன்னு அவரோட மனைவிகுழைந்தைங்ககிட்ட சொல்லுங்கன்னு அதிகார குரலில் உத்தரவிடுகிறார். பிறகென்ன நினைத்தாரோ சற்று தயங்கிபோகிறபோது வெறும் கையோட போகாதீங்க. ஓட்டல்ல எல்லாருக்கும் சாப்பாடு வாங்கிட்டு போய் கொடுங்க. ரெண்டு நாளா அவர்கள் சாப்பிட்டிருக்க மாட்டர்கள்’ என கண்டிப்போடு கூறுகிறார் அந்த அதிகாரிகளிடம்.
மண்ணாங்கட்டிக்கு பேச வார்த்தைகளின்றி கையெடுத்து கும்பிட்டபடியே வெளியேறமுதர்வர் காமராஜரும் எழுந்தது கையெழத்து கும்பிட்டபடியே அனுப்பிவைத்தார்.
 
ஒரு ஏழையின் கண்ணீர் வலி..இன்னொரு ஏழைக்குத்தான் தெரியும். ஆமாம் காமராஜர் ஏழையாகவேஎழைகளுக்காகவே இருந்தார்….

காமராசரிடம் நிருபர் ஒருவர் "கள்ளுக்கடை திறக்கப்படுமா? என்றார்...

காமராசர் சற்றுக் கோபப்படக் கூடியவர் என்று நினைப்பவர் பலர். ஆனால் மிகுந்த நகைச்சுவை தன்மை கொண்டவராவார்.


 திருச்சியில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட காமராசரிடம் நிருபர் ஒருவர் "கள்ளுக்கடை திறக்கப்படுமா? என்றார்.
 ""அது ஏன் இப்போது?'' என்றார் காமராசர்.
 "" கள்ளுக் கடையைத் திறந்துவிட்டால் உணவுப் பற்றாக்குறை இருக்காது'' என்றார் நிருபர்.
 "" எப்படி?''
 ""சாப்பிட்டுவிட்டால் ஒன்றுமே தெரியாது. பசி இருக்காது'' என்றார் நிருபர்.
 ""உங்களுக்கு எப்படி இது தெரியும்?'' என்று காமராசர் கேட்க, நிருபர்கள் அனைவரும் சிரித்தனர். மாட்டிக் கொண்ட நிருபரின் முகத்தில் அசடு வழிந்தது. காமராசர் பேச்சில் இப்படி நகைச்சுவை மிளிர்வதும் உண்டு.

காமராஜர் சொன்னது..."நான் தப்பு பண்ணிட்டேன். தெரியாம செய்திட்டேன். மன்னிச்சுடு!"...

இது கட்டுக் கதையல்ல. கண்ணீரால் நிறைந்த நிஜம். நேற்று திருச்சி வேலுசாமி அவர்கள் எழுதிவரும் ஒரு புதிய புத்தகத்தை தொகுக்கும் வேலையில் இருந்தேன். அந்த காலம் இப்படியும் இருந்தது என உறக்கமின் றி தவித்தேன்…
அப்போது காமராஜர் முதல்வர். பழை ய சட்டமன்ற விடுதியில் மண் ணாங் கட்டி என்பவர் கீழ்மட்ட ஊழிய ராக இருந்தார். சட்டமன்ற ஊறப்பினர் கள் கேட்பதை வாங்கிவந்து தருவார். முதல் தளத்தில் முன்பாகவே இருக்கும் முக்கையா தேவர் அறையிலேயே இருப்பார். ஒரு முறை ‘ஏம்பா மண்ணாங்கட்டி அவசரமாக வெளியில போறேன்.
குளிச்சு முடிச்சு ரெடியாகுறதுக்குள்ள இட்லிய வாங்கி வந்துடு’ என்று 100 -ருபாயை கொடுத்தார் முக்கையா தேவர். சொன்னபடியே அவர் ரெடியாகி காத்திருந் தார்.
ரொம்ப நேரம் ஓடியது. தலையில் சுமையுடன் தட்டு தடுமாறி வந்தார் மண்ணாங்கட்டி. பார்த்தது ம் ’ஏன்யா. நான் அவசரமா வெளியில போகனும் னு காத்துகிட்டு இருக்கேன். இட்லி வாங்க இவ் வளவு நேரமா என்று எகிறினார் மாயாண்டி தேவர். மண்ணாங்கட்டிக்கு கோபம். என்னங்கய்யா நீங்க. இங்க ஆஸ்ட்ல அவ்வளவு இட்லி இல்லைன்னு சொல்லிட்டாங்க. மவுண்ட் ரோடெல்லாம் போய் அலைஞ்சு 100 ருபாக்கும் இட்லி வாங்குறது லேசுபட்ட காரிய மா’என்று பதிலுக்கு சத்தம் போட்டார். அதுதான் மண்ணாங்கட்டி என்ற வெகுளி. அப்பாவி. அவ்வளவு வெள்ளந்தி….
அப்படியான மண்ணாங்கட்டியின் தலையில் ஒருநாள் இடி விழுந் தது. அந்த உத்தரவை படித்து காட் டச் சொல்லி வீட்டில் அழுது புரண் டு கதறினார். ’அரசாங்க உத்தியோ கத்தில் எழதப்படிக்கத் தெரியாத வர்கள் எல்லாம் இனி வேலையில் இருக்க கூடாது. பணியில் இருந்து நீக்கப்படுகிறார்கள்’ என்று காம ராஜர் போட்ட உத்தரவு தான் அந்த கடிதம். 2  நாள் கழித்து பழைய சட்ட மன்ற உறுப்பினர் விடுதிக்கு ஓடி வந்தார். முக்கையா தேவரிடம் தரையில் விழுந்து கதறி அழுகிறார்.
என்னவென்று கேட்கிறார். ’இப்படி ஒரு உத்தரவு வந்திருக்கிறதே. என் குடும்பம் எல்லாம் நடுத்தெருவுக்கு வந்துடுச்சே. எப்படியாவது காப்பாத்துங்க ஐயா’ என்று பித்து ப் பிடித்தவராக அழுகி றார். ஏதாவது சமாதானம் சொல்லனு மே என்று ’முதல்வர் ஆபிசுக்கு போன் போடுடா. கேட்டுடலாம்’ என்றார். அப்போது எல்லாம் நேரடியாக தொலைபேசும் வசதி இல்லை. ஆப்ரேட்டரிடம் கூறி விட்டு காத்திருக்க வேண்டும். முதுல்வர் அலுவலகத்தில் யாராவது உதவியளர் எடுப்பார்கள்.
மண்ணாங்கட்டி புக்செய்த நேரம் உடனே தொடர்பு கிடைத்தது. மறு முனையில் முதல்வர் காமராஜ். யார் நீங்கள் உங்களுக்கு என்ன வேண்டும் என்கிறார். அய்யா நான்தான் அசம்பிளி ஆஸ்டல் பியூன் மண்ணாங்கட்டி பேசுறங்க ஐயா என்றபடியே அருகில் இருந்த முக் கையா தேவரை பார்க்கிறார். அவருக்கு முதர்வர் அலுவலகத்தி ல் இருந்து
யாராவது உதவியாளர்கள்தான் டெலிபோனை எடுத்திருப்பார்கள் என்ற நினைப்பு. ‘எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல் வரா இருக்கறப்போ நான் பியூனா இருக்கக்கூடாதான்னு கேளுடா” என்கிறார்.
மறுமுனையில் இருந்த காமராஜரிடம் அதை அச்சுபிசகாமல் ‘ஐயா, எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கிறப்போ நான் பியூனா இருக்ககூடாதான்னு’ தேவர் ஐயா கேட்க சொல்றாரு ங்க என்கிறார் மண்ணாங்கட்டி. பிறகு பேச்சில் லை….
அடுத்த 30 நிமிடத்தில் உயர் அதிகாரிகள் 3-பேர் அங்கே வந்து விட் டார்கள். முதல்வருக்கு போன் செய்தது யார்? என்றார்கள். நான்தான் ஐயா என்று முன்னே வருகிறார் மண்ணாங் கட்டி. உங்களை கை யோடு அழைத்துவரச் சொல்லியிருக்கிறார். உடனே புறப்படுங்கள் என்று நிற்கிறார்கள். அப்போதுதான் நாம் பேசி யிருப்பது முதல்வரிடம்  என புரிகிறது. முக்கையா தேவருக்கும் பதட்டம். மண்ணாங் கட்டி ’ஐயா நீங்களும் வாங்க’ என்று அழுகிறார். பின்னாடியே வருகிறேன். நீ போப்பா என் று அனுப்பி வைக்கிறார். கோட்டையில் உள்ள முதல்வர் காமரா ஜை நோக்கி வாகனம் பறக்கிறது.
முதல்வரின் அறையில் உள்ள ஷோ பாவில், கண்ணத்தில் கைவைத் தபடி கவலைதோய்ந்த முகத்தோடு உட்கா ர்ந்திருக்கிறார் காமராஜர். கதவு திறக்கப்படுகிறது. மண்ணாங் கட்டி முதலில் நுழைய அதி காரிகள் சற்று ஒதுங்கி கதவோரம் நின்று கொண் டார்கள். நீங்க தான் மண்ணாங்கட்டி யா…என்கிறார். ஆமாங்க ஐயா. நான்
தெரியாம பேசிட்டேன். என்னை மன்னிச்சுடுங்க ஐயா என்றபடியே கீழே விழுந்தார். அந்த கலாச்சாரம் காமராஜருக்கு பிடிக்காது. அதி காரிகளை பார்க்க உடனே எழுப்பி நிற்க வைக்கிறார்கள். அவரை வா… வாண்னேன். வந்து பக்கதில உட்காருங்கன்னேன் என்றழைக்கிறார். மண்ணாங்கட்டி தயங்கி நிற்கிறார். காமராஜர் முறைக்க தயங்கி தயங்கி பக்கத்தில் சென்று உட்காருகிறார்.
மண்ணாங்கட்டியை முதுகில் தட்டிக்கொடுத்து முகத்தையே உற் றுப் பார்த்த முதல்வர் காமராஜ், பட்டென்று கையெடுத்துகும் பிட்டு நான் தப்பு பண்ணிட்டேன். தெரி யாம செய்திட்டேன். மன்னிச்சுடு. அந்த தவறை நீதான் புரியவைச் சே… ரெண்டு நாளா உங்க வீட்ல சோறு தண்ணியில்லி யாமே.
சமைக்கலயாமே…. உங்களுக்கு ரெண்டு பொம்பள புள்ளைங்க … எல்லாத்தையும் இப்பதான் தெரிஞ் சுகிட்டேன்..எவ்வளவு பெரிய தப்பு செய்திருக்கேன்.. நான் அப்படி ஒரு உத்தரவு போட்டிருக்க கூடாது. ‘இனிமே புதிதாக வேலைக்கு வருபவர்களுக்கு எழுத படிக்க தெரிந் திருக்க வேண்டும்’னு போட்டிருக்க வேண்டும். நான் செய்தது
தவறுதான் என்று தட்டிக்கொடுத்து ஆதறவுசொல்ல மண்ணாங் கட்டி கதறி அழுகிறார். காமராஜருக்கும் பேச்சு இல்லை…
அடுத்து அங்கேயே ஒரு உத்தரவு தயாராகிறது. காமராஜர் கையொப் பமிடுகிறார். மண்ணாங்கட்டிக்கு மீண்டும் அரசு வேலை. அதிகாரிக ளை பார்த்து ‘இவரை அழைத்துக்கொண்டு போங்க. வேலை கொடு த்தாச்சு. இனி கவலைப்படாதீங்கன்னு அவரோட மனைவி, குழந்தை ங்ககிட்ட சொல்லுங்க’ன்னு அதிகார குரலில் உத்தரவிடுகிறார். பிற கென்ன நினைத்தாரோ சற்று தயங்கி’போகிறபோது வெறு ம் கையோட போகாதீங்க. ஓட்டல்ல எல்லாருக்கும் சாப் பாடு வாங்கிட்டு போய் கொ டுங்க. ரெண்டு நாளா அவர்கள் சாப்பிட்டிருக்கமாட் டர்கள்’ என கண்டிப்போடு கூறுகிறார் அந்த அதிகாரிகளிடம்.
மண்ணாங்கட்டிக்கு பேச வார்த்தைகளின்றி கையெடுத்து கும்பிட்ட படியே வெளியேற, முதல்வர் காமராஜரும் எழுந்து கையெடுத்து கும்பிட்டபடியே அனுப்பிவைத்தார்.
ஒரு ஏழையின் கண்ணீர் வலி..இன்னொரு ஏழைக்குத்தான் தெரியு ம். ஆமாம் காமராஜர் ஏழையாகவே, எழைகளுக்காகவே இருந்தா ர்..
நன்றி – தமிழால் இணைவோம், முகநூல்

பெருந்தலைவர் காமராஜர் - 3

தமிழ்த்தாய் ஈன்ற தவமகன்!
-பழ கருப்பையா
நெடிய பெரிய உருவம்; தெற்கத்தித் தமிழனுக்கே உரிய நாவற்பழக் கருப்பு; படர்ந்த முகம்; பெரிய கண்கள்; அந்தக் கண்களை நேருக்கு நேர் பார்த்துப் பேசுவது சிலருக்கே இயலக்கூடியது.
எடுத்த எடுப்பிலேயே “சொல்லுன்னேன்’ என்று செய்திக்கு வந்துவிடுவார். கருத்தோடு பேசினால் கேட்பார்; இல்லையென்றால் கருத்திருமன் ஆனாலும் “சும்மா உளறாதேன்னேன்’ என்று வாயை அடைக்கச் செய்து விடுவார்!
தமிழ்நாட்டில் ஒவ்வொரு நகரம், கிராமம் என்று அவர் தெரிந்து வைத்திருந்ததுபோல், அங்கே கட்சிப் பொறுப்பில் இருக்கின்ற ஒவ்வொருவரையும் குலங்கோத்திரத்தோடு தெரிந்து வைத்திருப்பார். யாரைத் தேர்தலில் நிறுத்த வேண்டும் என்று அவர்களின் நாளாசரி நடவடிக்கைகளிலிருந்து ஐந்தாண்டுகளுக்கு முன்னரே முடிவு செய்து வைத்திருப்பார்.
தேர்தலில் நிற்கக் கட்சியில் பணம் கட்டி இடங்கேட்கும் அவலநிலை அவர் காலத்திலில்லை. கருணாநிதியிலிருந்து விஜயகாந்த் வரை தேர்தலில் போட்டியிட விரும்பும் தன் கட்சியினர் ஒவ்வொருவரிடமும் கேட்கின்ற முதற் கேள்வி, “நீ தேர்தலில் எவ்வளவு செலவழிக்க முடியும்?’
காமராஜ் இப்படி ஒரு அருவருக்கத்தக்க கேள்வியை யாரிடமும் கேட்டதில்லை. ஒருவன் தேர்தலில் ஐந்து கோடி செலவழிக்க முடியும் என்றால், தேர்தலில் வெற்றி பெற்று வந்தபின், அவன் அந்தப் பணத்தைப் போல் ஐம்பது மடங்கைத் தேடிக்கொள்ள நினைப்பதை எப்படித் தடுக்க முடியும்? ஒருவன் ஐந்து கோடி செலவழித்தா மக்கள் பணி ஆற்ற வருவான்?
எத்தகைய போக்குகளை அனுமதித்தால், எத்தகைய பின் விளைவுகள் ஏற்படும் என்று சிந்திக்கும் திறன் காமராஜ் போன்ற இயற்கை அறிவு ஜீவிகளுக்கு நிறையவே இருந்தது!
காமராஜுக்கு ஒரு தனிச்செயலர் இருந்தார். அவர் பெயர் வெங்கட்ராமையர். கதர் வேட்டி சட்டையைத் துவைத்துத்தான் போட்டுக் கொள்வார். சலவை செய்து போட்டுக் கொள்ளச் சம்பளம் இடம் கொடுக்காது என்பார்.
எத்தனை தொழிலதிபர்கள் இவர் வழியாகத் தொழில் உரிமம் பெற்று வளம் கொழித்திருப்பார்கள்! அவர்களைப் பயன்படுத்திக் கொள்ளும் சிறு சலனமாவது இந்த வசதிக் குறைவானவருக்கு ஏற்பட்டதுண்டா?
பத்தாண்டுகள் முதலமைச்சராக இருந்த ஒருவரின் தனிச் செயலர் சாகும்போது, எம்.ஜி.ஆர். அவருடைய நிலைமை தெரிந்து வழங்கிய லாயிட்ஸ் அரசுக் குடியிருப்பில் 250 ரூபாய் வாடகை வீட்டில் குடி இருந்துவிட்டு இறந்து போனார்!
உயிர் குடியிருக்க வந்த கூடே சொந்தமில்லாமல் வெந்து போகிறபோது, தான் குடியிருக்கச் சொந்தமாக ஒரு வீடில்லாதது அவருக்கு ஒரு குறையாகவே தெரியவில்லை!
“ஒரு பெண் தன் கற்பைக் காத்துக் கொள்வதில் விடாப்பிடியாக இருப்பது போல, பெருமையும் கருதிக் கருதிக் காத்துக் கொள்ளப்பட்டால் உண்டு; இல்லை என்றால் இல்லை”, என்பான் வான்புகழ் வள்ளுவன்.
ஒரு தனிச் செயலரின் பெருமையே இத்தகையது என்றால், அவனுடைய தலைவனின் பெருமை எத்தகையதாய் இருக்கும்!
இன்றைய அமைச்சர்களின் தனிச் செயலர்களின் பணத்தை எல்லாம் பறிமுதல் செய்தால், ஆறு மாதங்களுக்குத் தமிழ்நாட்டில் வரியே போடாமல் ஆட்சி நடத்தலாம்!
நம்முடைய அமைச்சர்களின் பணத்தை எல்லாம் பறிமுதல் செய்தால், ஆறு மாதங்களுக்கு இந்தியாவையே வரிப் போடாமல் ஆட்சி நடத்தலாம்!
காமராஜ் நாட்டின் விடுதலைக்காகப் பத்தாண்டுகள் சிறையில் தவமிருந்தவர். நாட்டின் மேன்மைக்காகப் பத்தாண்டுகள் கோட்டையில் கோலோச்சியவர்!
ராஜாஜி கல்விக் கொள்கையில் குளறுபடிகள் செய்ய நேரிட்டு விட்டபோது, அந்த முதலமைச்சர் நாற்காலியை இழுத்துப் போட்டு உட்காரவும் காமராஜுக்குத் தெரிந்திருந்தது.
பத்திருபது ஆண்டுகள் தொடர்ந்து பதவிக் கள்ளை உண்டு விட்டபடியால் போதை தலைக்கேறிய பல காங்கிரஸ் அமைச்சர்களைப் பதவியை விட்டு இறக்குவதற்கு, ‘கே’ பிளான் என்று ஒன்றை அறிவித்து, எந்த அவப்பெயரும் இல்லாத தான், ஆட்சி நாற்காலியை உதறிக்காட்டி, மற்றவர்களைப் பதவி விலகச் செய்து, நேருவின் ஆட்சி இயந்திரம் திறம்பட உருள வழி செய்யவும் அவருக்குத் தெரிந்திருந்தது!
சீதையின் கேள்வன் ராமனைப் போல், காமராஜுக்குப் பதவி ஒரு பேறும் இல்லை; பதவியின்மை ஓர் இழப்பும் இல்லை.
அதுவும் ராஜாஜிக்குப் பிறகு நாடாள்வது எளிதில்லை. பரிந்துரைகளுக்காகத் தலைமைச் செயலகத்துக்குப் படையெடுத்த சட்டமன்ற உறுப்பினர்களைப் பார்த்து, உங்களுக்கெல்லாம் தலைமைச் செயலகத்தின் தாழ்வாரங்களில் என்ன வேலை என்று கேட்டவர் ராஜாஜி. விற்பனை வரியைப் புகுத்தியவர்; இரண்டாயிரம் ஆண்டுத் தமிழ்நாட்டில் குடியை முதன் முதலாகக் குற்றமாக அறிவித்தவர்; ஈடு இணையற்ற படிப்பாளி; இவர் தேறாத நூலுமில்லை; தெளியாத பொருளுமில்லை; பெரிய இலக்கியவாதி; ராஜதந்திரி! மணியம்மையை மணந்து கொள்ளலாமா வேண்டாமா என்று பெரியார் பிறவிப் பகைவரான ராஜாஜியிடம் போய் யோசனை கேட்டாரென்றால், எவ்வளவு மனச் சமநிலை உடையவராக ராஜாஜியைப் பெரியார் கருதியிருக்க வேண்டும்!
அவ்வளவு பெரிய ராஜாஜியைக் கீழே இறக்கவும், அவருடைய நாற்காலியை இழுத்துப் போட்டு உட்கார்ந்துகொண்டு நாடாளவும் எவ்வளவு பெரிய மனத்திறன் வேண்டும்! காமராஜின் பத்தாண்டு கால ஆட்சி, ராஜாஜியை மறக்கடித்து விட்டது என்பதுதான் அவருடைய ஆட்சியின் மாபெரும் சிறப்பு!
தமிழ்நாட்டின் கல்வியைச் சுருக்கித் தன்னுடைய புகழை அந்த ஒன்றில் மட்டும் விதிவசமாகச் சுருக்கிக் கொண்டுவிட்டார் ராஜாஜி.
தமிழ் இளைஞர்கள் உலக அளவில் போட்டியிடக் கல்வியறிவு பெறுவது எல்லாவற்றினும் தலையாயது என்பதைத் தன்னுடைய இயற்கையறிவு கொண்டு உணர்ந்த காமராஜ் ஊர்தோறும் பள்ளிகளைக் கட்டினார். ஆடு மேய்க்கச் செல்லுகின்ற பிள்ளைகளைப் பள்ளிக்கிழுக்கப் பகலுணவு அளித்தார். எம்.ஜி.ஆர். பெரும்புகழ் பெறக் காரணமான சத்துணவுத் திட்டத்தின் முன்னோடி காமராஜ்தான்!
கையளவு நீர் மேட்டிலிருந்து பள்ளத்தில் பாய்ந்தாலும், அங்கே நீர்மின் நிலையம் தோன்றிவிடும் காமராஜ் காலத்தில்!
பின்னால் வந்த கருணாநிதி மின் உற்பத்தி செய்யாமல் கம்பி மட்டும் நீட்டுகிறார் என்பதைக் காமராஜ், “கம்பி நீட்டப் போகிறார் கருணாநிதி”, என்று நகையாடினார்!
முந்தைய ராஜாஜி ஆட்சியோடு ஒப்பிடப்பட்டுக் “கல்விக் கண் திறந்த காமராஜ்” என்று போற்றப்பட்டார்!
பிந்தைய கருணாநிதி ஆட்சியோடும் ஒப்பிடப்பட்டு, “படிக்கச் சொன்னார் காமராஜ்; குடிக்கச் சொன்னார் கருணாநிதி” என்னும் வழக்கு மக்களிடையே வழங்கி நிலைபெரும் அளவுக்குக் காலந்தோறும் காமராஜ் புகழ் பெருகியது!
நாட்டின் விடுதலைக்காகச் சிறையிலிருந்த காமராஜ், நாடே இந்திராவால் சிறைக் கூடமாகிவிட்டது கண்டு பதறிவிட்டார்! வெள்ளைக்காரனிடமிருந்து பெரும்பாடு பட்டு விடுதலை பெற்று, நம் கண் முன்னாலேயே சொந்த நாட்டுக்காரியிடம் அந்த விடுதலையைக் தோற்று விட்டோமே என்னும் கவலை அவரைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தின்னத் தொடங்கியது.
பேச்சுச் சுதந்திரமில்லை; எழுத்துச் சுதந்திரமில்லை; கூட்டம் கூடுகிற சுதந்திரமில்லை; தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளை வலியுறுத்திப் போராடச் சுதந்திரமில்லை; இம்மென்றால் சிறைவாசம்; ஏனென்றால் வனவாசம்!
இந்திராவின் தேர்தலைச் செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டதால், பிரதமர், தேர்தல் சட்டங்களுக்கு அப்பாற்பட்டவராகச் சட்டம் திருத்தப்பட்டது. நாடாளுமன்றத்தின் ஆயுள் நீட்டிக்கப்பட்டது.
ஜெயப்பிரகாஷ் நாராயண், மொரார்ஜி தேசாய் போன்ற தலைவர்கள், ஸ்டாலின் காலத்து ரஷ்யா போல, நள்ளிரவில் தாக்கப்பட்டுச் சிறை வைக்கப்பட்டனர். தனக்கேற்பட்ட நெருக்கடியை நாட்டுக்கேற்பட்ட நெருக்கடியாக்கி, எல்லாச் சுதந்திரங்களையும் பறித்து விட்டார் இந்திரா!
தான் வழி நடத்திய பழைய காங்கிரசைக் கருத்து வழிப்படுத்தி, அதனை இந்தச் சுதந்திரப் பறிப்புக்கு எதிராக அணி வகுக்கச் செய்து, ஒரு பெரும் போராட்டத்தை நடத்த எண்ணிய காலை, கிருபளானி போன்றவர்களின் அடுத்தடுத்த கைதுச் செய்திகள் காமராஜ் மனம் உடைந்து மரணமடையக் காரணமாயிற்று!
நாம் நாற்காலியில் ஏற்றி வைத்த ஒரு பெண், நாற்காலிதான் பெரிதென்று நாட்டை நாசமாக்கி விட்டாரே என்பதுதான் அவர் மன உடைவுக்குக் காரணம்!
அடிமை இந்தியாவில் பிறந்தார்;
சுதந்திர இந்தியாவில் கோலோச்சினார்;
மீண்டும் அடிமை இந்தியாவில் மறைந்தார்!
அன்னையின் விலங்கொடித்து அன்னியனை விரட்டினார்!
இன்னொரு அன்னையால் பாரத அன்னை விலங்கிடப்பட்ட காலை, மனம் உடைந்து மரணமடைந்தார்!
நாடு குறித்துத் தவிர அவருக்கென்ன தனிக் கவலை இருக்க முடியும்? அவர் உயிர்வாழ ஒரு நாள் முழுவதற்கும் தேவை ஆழாக்கு அரிசி; ஒரு நான்கு முழ வேஷ்டி; ஒரு தொளதொளத்த சட்டை; ஒரு மேல் துண்டு; படிப்பதற்கொரு கண்ணாடி; காலுக்கொரு செருப்பு!
ஒரே உறவினளுமான தாயும் இறந்து விட்டாள்! அவருக்கென்ன கவலை?
தலைமாட்டில் உட்கார்ந்து அழ மனையாளோ, கால்மாட்டில் உட்கார்ந்து அழ மக்களோ இல்லாதவர் அவர்!
அதனால் அவருடைய மரணத்தில் நாடே அழுதது; வானமும் அழுதது!
தாய் மகிழத் தான் மட்டும் வீறிட்டு அழுது கொண்டு பிறந்தவன், நாட்டை வீறிட்டழ வைத்து விட்டுத் தான் அமைதி கண்டு விட்டான்!
காமராஜால் பண்படுத்தப்பட்டு, வார்த்தெடுக்கப்பட்ட அன்றைய இளைஞர்கள், இந்தக் கட்டுரையாசிரியர் உள்பட, இன்று நடுவயதை அடைந்து புரப்பாரில்லாமல் நாசமாகிப் போனார்கள்!
ராஜாஜி, பெரியார், அண்ணா, காமராஜ் என்று ஒவ்வொருவராக அடுத்தடுத்துப் போய் விட்ட நிலையில், நாடு வெறுமை அடைந்து விட்டது!
கோல மயில்கள் குதித்தாடிய நாட்டில், வக்கரித்த வான்கோழிகள் கொக்கரிக்கின்றன! பண்பட்ட அரசியல் போய் பாழ்பட்ட அரசியல் வந்துவிட்டது!
காந்தி, காமராஜ் காலங்களில் அயோக்கியர்களாக இருந்தவர்கள் இருக்குமிடம் தெரியாமல் இருந்தார்கள்!
இன்று யோக்கியர்களாக உள்ளவர்கள் இருக்குமிடம் தெரியாமல் இருக்கிறார்கள்!
அறிவும், அடக்கமும், எளிமையும், நேர்மையும் குடிகொண்டிருந்த பொதுவாழ்வில், பதவிக்கும் பணத்துக்கும் பல்லிளிப்பதும், பகட்டும், வஞ்சமும், அடுத்துக் கெடுப்பதும் பெருகிவிட்ட பிறகு நாடு வேறு எப்படி இருக்க முடியும்?
இந்த லட்சணத்தில் அண்ணா அறிவாலயத்தை மேற்பார்வை முகவரியாக்கிக் கொண்டுள்ள நாலாந்தரக் காங்கிஸ்காரர்கள் கருணாநிதியை நடுநடுவே மிரட்டுவதற்காகக் “காமராஜர் ஆட்சியை அமைப்போம்’ என்று இடையிடையே மிரட்டுகிறார்கள்! கருணாநிதி பனங்காட்டு நரி!
கருணாநிதியின் கைப்பைக்குள் இருக்கிற பீட்டர் அல்போன்ஸும், பனை வாரியம்தான் விதி நமக்கு விட்ட வழி என்று அமைதி கொண்டு விட்ட குமரி அனந்தனும், வீரபாண்டியார் வெள்ளை வீசினால்தான் வெல்ல முடியும் என்னும் நிலையிலுள்ள தங்கபாலுவும், காமராஜ் உயிரோடிருந்த காலத்தில், “அவர் சோசலிசவாதியே அல்ல; பிற்போக்குவாதி என்றெல்லாம் காமராஜ் குறித்து இடக்காகப் பேசிவிட்டு, இன்று பன்னாட்டு முதலாளிகளின் பாதக்குறடுகளுக்கு மெருகெண்ணெய் பூசிவிடும் ப.சிதம்பரமும் எப்படிக் காமராஜ் ஆட்சியை அமைக்க முடியும்?
தனக்கு எந்த உடைமையுமில்லை; தனக்கு எந்த உறவுகளுமில்லை என்னும் நிலையிலேயே மக்களைச் சுற்றமாகச் சுற்றிக் கொள்ளும் தன்மை பிறக்கும்!
ஒரு காமராஜ் உருவாக இவ்வளவு பின்னணி வேண்டும்!
தமிழ்த்தாய் ஈன்ற தவமகன் அவன்!
நன்றி: தினமணி

பெருந்தலைவர் காமராஜர் - 2

சட்டமன்றத்தில் திமுக முதற்பெரும் எதிர்க்கட்சியாய் நுழைந்த நேரம்… நாவலர் நெடுஞ்செழியன்தான் எதிர்க் கட்சித் தலைவர். இரவு முழுவதும் பல்வேறு குறிப்புகளைத் தயார் செய்துகொண்டு சென்றிருந்தார். பொருளாதாரத்தில் ஆடம்ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை அனைத்து மேதைகளும் கூறிய பொன்மொழி களை அழகாக நாவலர் எடுத் துக் கூறிக்கொண்டிருந்தார்.
காமராஜர் அவரைப் பேசவே விடவில்லை. “அவர்கள் சொன்னது இருக்கட்டும்… நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டுக்கொண்டே இருந்தார்.
இரவு முழுவதும் தூங்காமல் இருந்ததாலும், காமராஜரின் இந்தத் ‘தொடர் தாக்குதலாலும்’ நாவலர் நெடுஞ்செழியன் திடீ ரென சட்டமன்றத்திலேயே மயக்கம் போட்டு விழுந்தார்.
அப்போது எங்களுக்கெல்லாம் கட்டுமீறிக் கண்சிவந்த கோபம். ஆனால், இப்போது நினைத்துப் பார்க்கிறபோது, காமராஜரின் அன்றைய கேள்விகளில் ‘நியாய ரேகை’ ஒளிவிடுகிறது.
அடுத்தது கலைஞர் பேச்சு!
அவரும் ‘இசைக்கருவிகள் முழங்கினால் நெற்பயிர் வளரும்’ என்பதற்கு அடுக்கடுக்கான காரணங்களை – ஆதாரங்களை எடுத்துக் கூறிக்கொண்டிருந் தார்.
காமராஜர் கேட்டார்… “சட்டசபையிலே இதை எல்லாமா பேசறது?”
“சட்டசபையில் என்ன பேசுவது என்று நீங்கள் எழுதிக்கொடுங்கள்… நாங்கள் பேசுகிறோம்!” என்று கூறிவிட்டுக் கலைஞர் அமர்ந்தார். திமுக- வின் சட்டமன்றப் பயிற்சிக்கு, காமராஜர் கைப்பிரம்பு தூக்கிய ஒரு ஆசிரியரே!
காமராஜர் பட்டப்படிப்பு படிக்காதவராக இருக்கலாம். ஆனால், அவரது பட்டறிவு, வாளின் கூர்மை போன்றது. அதனால்தான் அந்தப் படிக்காத மேதையைச் சுற்றி படித்த மேதைகளின் கூட்டம் மொய்த் துக் கிடந்தது.
பொதுக்கூட்டத்தில் அவருக்கு முன் பேசுபவர்கள் யாராவது வரம்பு மீறி எதிர்க் கட்சித் தலைவர்களைத் தாக் கினால், தடுத்து நிறுத்திவிடுவார். கவிஞர் கண்ணதாசனும் இந்தக் ‘கில்லட்டின் வாளில்’ பலமுறை மாட்டிக்கொள்வார். “அந்தக் கவிராயரை உட்காரச் சொல்லய்யா” என்று சத்தம் போட்டுச் சொல்வார் காமராஜர்.
அந்தக் காலத்தில் அவரைத் தாக்கி எதிர்க்கட்சிகள் பேசியது போல் வேறு எந்தக் காலத்தி லும் இல்லை எனலாம். ஆனால், “ஆளுங்கட்சிக்கு அரசாங்க வேலை! எதிர்க்கட்சிக்கு என்ன வேலை? நம்மைப் பத்திப் பேசற பிழைப்புதானே? அவன் பிழைப்பிலே ஏன் மண்ணைப் போடறே?” என்று வெளிப்படையாகவே கேட்பார்.
நையாண்டி படத்துக்காக (கார்ட்டூன்) கைது செய்கிற இந்தக் காலத்தையும் பார்க்கிறோம். அவரது காலத்தில் அவரைக் கன்னாபின்னா என்று நையாண்டி ஓவியம் வரைந்தபோது காமராஜர் கூறினார்… “பொம்மையைக் கண்டு ஏன் பயப்படறே? உண்மையைக் கண்டு பயப்படு! போ… போ..!”
‘ஹைதராபாத் வங்கியில் ஒன்றரைக் கோடி ரூபாய் போட்டிருக்கிறார் காமராஜர்’ என்ற வதந்தி பரவி – மேடைப் பேச்சாகி – அறைகூவல் வடிவில் வந்தது.
“எவனோ எதையோ சொல்றான்… விடு! எனக்கு யானைக்கால் வியாதின்னு யாராவது சொன்னா, ஒவ்வொருத்தர் கிட்டேயும் நான் போய் என் காலைக் காட்டிக்கிட்டா இருக்க முடியும்?” என்று கேட்டார் காமராஜர்.
அடேயப்பா! தன்னைப் பற்றியும் தனது நேர்மையைப் பற்றியும் எத்தனை அழுத்தமான நம்பிக்கை! அந்த நம்பிக்கை குறைகிற தலைவர்கள்தாம் தன்னைப் பற்றித் திறனாய்வு செய்கிறவர் தலையைத் திருகி சிதறு தேங்காய்போல வீசிட நினைக்கிறார்கள்.
-அடியார்
நன்றி: ஆனந்த விகடன்

பெருந்தலைவர் காமராஜர் - 1




சொத்து சுகம் நாடார்
சொந்தந்தனை நாடார்
பொன்னென்றும் நாடார்
பொருள் நாடார்
தான்பிறந்த அன்னையையும் நாடார்
ஆசைதனை நாடார்
நாடொன்றே நாடித் – தன்
நலமொன்றும் நாடாத
நாடாரை நாடென்றார்
-பெருந்தலைவர் காமராஜர் பற்றி கவியரசர் கண்ணதாசன் எழுதிய வரிகள் இவை. இந்த வரிகளுக்கு ஒரு விளக்கவுரை எழுதியதுபோல, விகடன் இந்த வாரம் பெருந்தலைவர் பற்றிய 25 குறிப்புகளைத் தந்துள்ளது. அந்தக் கட்டுரை…
இனம் காட்டும் நிறம். குணம் சொல்லும் உடை. தைரியம் அறிவிக்கும் உடல். வணங்கத் தோன்றும் முகம்… என நாலும் இணைந்த நல்லவர் காமராஜர்! 25 துளிகளுக்குள் அடக்கிவிட முடியாத மகா சமுத்திரமாக வாழ்ந்த கர்மவீரர்!
காமாட்சி என்பது பெற்றோர் வைத்த பெயர். ராஜா என்றே உறவினர்கள் அழைத்தார்கள். காமாட்சியும் ராஜாவும் காலப் போக்கில் இணைந்து காமராஜ் ஆனது. டெல்லிக்காரர்களுக்கு ‘காலா காந்தி’, பெரியாருக்கு ‘பச்சைத் தமிழர்’, காங்கிரஸ்காரர்களுக்கு ‘பெரியவர்’. இன்று வரை பெருந்தலைவர் என்றால் அவரே!
‘இதெல்லாம் என்ன பேச்சுன்னேன்’, ‘அப்படி ஏன் சொல்றேன்னேன்’, ‘ரொம்ப தப்புன்னேன்’, ‘அப்பிடித்தானேங்கிறேன்’, ‘அப்ப பாப்போம்’, ‘ஆகட்டும் பார்க்கலாம்’ போன்றவை அவர் அடிக்கடி பயன்படுத்தும் வாசகங்கள்!
நிறையப் பேரிடம் வரிசையாக ஆலோசனை கேட்கும் பிரதமர் நேரு, கடைசியில் காமராஜர் சொன்னதை அறிவித்து முடிப்பார். உயிரோ டு இருப்பவர்களுக்கு சிலை வைக்கக் கூடாது என்ற கொள்கை கொண்ட நேரு, அதை மீறித் திறந்த சிலை இவருடையதுதான்!
அரசியலில் அவருக்கு குரு தீரர் சத்திய மூர்த்தி. ஆனால், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக காமராஜ் இருக்க… செயலாளராகச் செயல்பட சத்தியமூர்த்தி மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டார்!
தன்னைப் பாராட்டி யாராவது அதிகம் பேசினால், ‘கொஞ்சம் நிறுத்துன்னேன்’ என்று சட்டையைப் பிடித்து இழுப்பார். அடுத்த கட்சியை மோசமாகப் பேசினால், ‘அதுக்கா இந்தக் கூட்டம்னேன்’ என்றும் தடுப்பார்!
மாதம் 30 நாளும் கத்திரிக்காய் சாம்பார் வைத்தாலும் மனம் கோணாமல் சாப்பிடுவார். என்றைக்காவது ஒரு முட்டை வைத்துச் சாப்பிட்டால் அது அவரைப் பொறுத்தவரை மாயா பஜார் விருந்து!
சினிமா அவருக்குப் பிடிக்காது. ‘ஒளவையார்’ விரும்பிப் பார்த்திருக்கிறார். ‘ராஜபார்ட் ரங்கதுரை’ படத்தைப் போட்டுக் காண்பித்திருக்கிறார்கள். அவர் கடைசியாகப் பார்த்த படம் ‘சினிமா பைத்தியம்’!
சுற்றுப் பயணத்தின்போது தொண்டர்கள் அன்பளிப்பு கொடுத்தால், ‘கஷ்டப்படுற தியாகிக்குக் கொடுங்க’ என்று வாங்க மறுப்பார்!
மகன் முதலமைச்சரானதும் அம்மா சிவகாமிக்கு அவருடன் தங்க ஆசை. ‘நீ இங்க வந்துட்டாஉன்னைப் பார்க்கச் சொந்தக்காரங்க வருவாங்க. அவங்களோட கெட்ட பேரும் சேர்ந்து வந்துடும். அதுனால விருது நகர்லயே இரு’ என்று சொல்லிவிட்டார். அந்த வீட்டையாவது பெரிதாக்கி கட்டித் தரக் கேட்டபோதும் மறுத்துவிட்டார்!
பந்தாக்களை வெறுத்தவர். முதல் தடவை சைரன் ஒலியுடன் அவருக்கான பாதுகாப்பு கார் புறப்பட்டபோது தடுத்தார். ‘நான் உயிரோடுதான இருக்கேன். அதுக்குள்ள ஏன் சங்கு ஊதுறீங்க?’ என்று கமென்ட் அடித்தார்!
இரண்டு முறை பிரதமர் ஆக வாய்ப்பு வந்தபோதும் அதை நிராகரித்து லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரை பிரதமர் ஆக்கினார். ‘கிங் மேக்கர்’ என்ற பட்டத்தை மட்டும் தக்க வைத்துக்கொண்டார்!
பத்திரிகையாளர்களுக்கு அவரது அறிவுரை… ‘ஒண்ணு, நீங்க பத்திரிகைக்காரனா இருங்க. அல்லது அரசியல்வாதியாவோ பிசினஸ்மேனாவோ இருங்க. மூணாகவும் இருக்க முயற்சி பண்ணாதீங்க!’
மூத்தவர்கள் அரசாங்கப் பதவிகளில் இருந்து விலகி, கட்சிப் பணியாற்ற வேண்டும் என்ற ‘கே.பிளான்’ போட்டுக் கொடுத்த இவரே முதல் ஆளாகப் பதவி விலகினார். ‘எனக்கு எந்தப் பற்றும் இல்லைன்னு காட்டினாதான் மத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ண முடியும்’ என்றார்!
ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் பேசுவார். பத்திரிகையாளர் சாவி ஒருமுறை சந்திக்கச் சென்றபோது ஜான் கன்டர் எழுதிய இன்சைட் ஆப்பிரிக்கா என்ற ஆங்கிலப் புத்தகத்தைப் படித்துக்கொண்டு இருந்தாராம்!
அவரளவுக்குச் சுருக்கமாக யாராலும் பேச முடியாது. உ.பி-யில் ஒரு பிரஸ்மீட். 50 கேள்விகளுக்கு ஏழு நிமிடத்தில் பதில் சொன்னாராம். இரண்டரை மணி நேரத்தில் எட்டு ஊர்களில் கூட்டம் பேசியிருக்கிறார். இசை விழாவைத் தொடக்கிவைக்க அழைத்தார்கள். ‘இசை விழாவைத் தொடக்கிவைப்பதில் பெருமைப்படுகிறேன்’ என்று மட்டுமேசொல்லி விட்டு இறங்கினார்!
நாற்காலியில் உட்காருவது அவருக்குப் பிடிக்காது. சோபாவில் இரண்டு பக்கமும் தனது நீளமான கைகளை விரித்தபடி உட்காரவே விரும்புவார். முதல்வராக இருந்தபோதும் தலைமைச் செயலகத்தில் பிரத்யேகமாக சோபா வைத்திருந்தார்!
கடிகாரம் கட்ட மாட்டார். சின்ன டைம்பீஸைத் தனது பையில் வைத்திருப்பார். தேவைப்படும்போது எடுத்துப் பார்த்துக்கொள்வார்!
‘ஆறாவது வரை படித்தவர்தானே! என்ற அலட்சியத்துடன் முதல்வர் காமராஜரின் அறைக்குள் அலட்சியமாக நுழைவார்கள் அதிகாரிகள். வெளியே வரும்போது அவர்களின் வால், கால்சட்டைக்குள் மடக்கிச் சொருகப்பட்டு இருந்தது!’ என்று அவரது அறிவாற்றலை மெச்சினார் ஆர்.வெங்கட்ராமன்!
தான் முதலமைச்சரானபோது தன்னை எதிர்த்து முதல்வர் வேட்பாளராக நின்ற சி.சுப்பிரமணியத்தையும் அவரது பெயரை முன் மொழிந்த பக்தவத்சலத்தையும் அமைச்சரவையில் இணைத்துக்கொண்டார்!
தனது வலதுகரமாக இருந்த ஜி.ராஜகோபாலன் இறந்தபோது மட்டும்தான் காமராஜரின் கண்கள் லேசாகக் கலங்கினவாம். தாய் சிவகாமி இறந்தபோதுகூட அழவில்லை அவர்!
‘தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளோடுஒட்டோ, உறவோ இல்லை. இந்தக் கட்சிகளோடு உறவு வைத் துள்ள கட்சிகளோடும் உறவு இல்லை’ – காமராஜர் கூட்டிய கடைசி நிர்வாகக் கமிட்டியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இது. இதை அவரது மரண சாசனம் என்பார்கள்!
விருதுநகர் தொகுதியில் அவர் தோற்றபோது கட்சிக்காரர்கள் அழுதார்கள். ‘இதுதான்யா ஜனநாயகம். ஜெயிச்சவனைக் குறை சொல்லாமல் தோத்துப் போனதைப் புரிஞ்சுக்கிட்டாதான் அடுத்த முறை ஜெயிக்க முடியும்!’ என்று அலட்டிக்கொள்ளாமல் சொன்னவர்.
கோடை காலத்தில் இரண்டே இரண்டு நாட்கள் குற்றாலத்தில் போய் தங்கிவிட்டு வருவார். அவரது அதிகபட்ச சந்தோஷமாக அதுதான் இருந்திருக்கிறது!
ஒன்பது ஆண்டுகள் முதல் அமைச்சர், பல ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த அவர், இறக்கும்போது மிச்சம் இருந்தது பத்து கதர் வேஷ்டிகள், சட்டைகள் மற்றும் நூறு ரூபாய்க்கும் குறைவான பணம்!
இன்ஃப்ளூயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்த காமராஜருக்கு 1975 அக்டோபர் 2-ம் தேதி அதிகமாக வியர்த்தது. டாக்டர் அண்ணாமலைக்கு அவரே போன் செய்துவிட்டு, ‘டாக்டர் வந்தா எழுப்பு… விளக்கை அணைச்சிட்டுப் போ’ என்றார். அதுவே அவர் கடைசியாகச் சொன்ன வார்த்தை. டாக்டர் வரும்போது காமராஜர் அணைந்துவிட்டார்!
-ஆனந்த விகடன்

குமாரசாமி காமராஜர்

பிறப்பு: ஜூலை - 15 - 1903

இறப்பு அக்டோபர் 2 1975

இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள விருதுப்பட்டி என்ற கிராமத்தில் 1903 - ம் ஆண்டு ஜூலை மாதம் 15 ம் தேதி காமராஜ் பிறந்தார். காமராஜரின் தந்தை குமாரசாமி நாடார். விருதுப்பட்டியில் ஒரு தேங்காய் வியாபாரியாக இருந்தார். காமராஜின் அன்னையார் பெயர் சிவகாமி. மிகவும் சிறிய வயதிலேயே தந்தையை இழக்கும் துர்பாக்கிய நிலை காமராஜருக்கு ஏற்பட்டது. அவருக்கு ஆறுவயதாக இருந்த போது தந்தை குமாரசாமி நாடார் மறைவெய்திவிட்டார்.

குமாரசாமி காமராஜ் பொதுவாக காமராஜர் தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களுள் ஒருவர் ஆவார். 1954 ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாணத்தின் முதலமைச்சர் ஆனார். இவர் 9 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்தார். தமிழகத்தின் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத திட்டத்தை அறிமுகப்படுத்தினார். காமராஜ் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவர் பெருந்தலைவர் என்றும் அறியப்படுகிறார்

வாழ்க்கை வரலாறு

பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் விருதுநகரிலே ஒரு வியாபாரக் குடும்பத்திலே பிறந்தவர் ஆவார். அந்தக் காலத்தில் அந்த ஊருக்குப் பெயர் விருதுப்பட்டி.

காமராஜர் தாயார் பெயர் சிவகாமி அம்மாள். தந்தையின் பெயர் குமாரசாமி நாடார். அவர் விருதுப்பட்டியிலே தேங்காய் மொத்த வியாபாரம் செய்து வந்தார். சிவகாமி அம்மாளுக்கு இரண்டு சகோதரர்கள். ஒருவர் கருப்பையா நாடார். - இவர் துணிக்கடை வைத்திருந்தார். மற்றொருவர் பெயர் காசிநாராயண நாடார். இவர் திருவனந்தபுரத்திலே மரக்கடை வைத்து நடத்தி வந்தார்.

1903- ஆம் வருடம், ஜுலை மாதம் 15-ஆம் தேதி, காமராஜர் பிறந்தார். அவருக்கு குல தெய்வமான காமாட்சியம்மாளின் பெயரையே முதலில் சூட்டினார்கள்.

கண்ணனைப் பாரதி ”கண்ணம்மா” ஆக்கி அழைத்துப் பாடிப் பரவசப்பட்டதுபோல் ஆணாகப் பிறந்த காமராஜரை ”காமாட்சி” ஆக்கி அனைவரும் அழைத்து மகிழ்ந்தார்கள்.

தாயார் சிவகாமி அம்மாள் மட்டும், தன் செல்லக் குழைந்தையை ”ராஜா” என்றே அழைத்து வந்தாள். நாளடைவில் காமாட்சி என்ற பெயர் மாறி, ‘காமராஜ்’ என்று ஆனது.

காமராஜருக்குப் பின்னர், சிவகாமி அம்மாள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.நாகம்மாள் என்று அந்தக்குழந்தைக்குப் பெயர் சூட்டினார்கள். காமராஜரும் தங்கையிடம், அன்பும் பாசமும் கொண்டிருந்தார்.

காமராஜர் தனது பள்ளிப் படிப்புக்காலங்களிலேயே, இளம் வயதிலேயே, விருதுப்பட்டியில் நடந்த பொதுக்கூட்டங்களுக்குப் போகலானார். ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்டு கொண்டிருந்த காலம் அது. காமராஜர் இளம் வயதில் கேட்ட பொதுக் கூட்டங்களே அவரைப் பிற்காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரராகக் மாற்றியது.

”தந்தையொடு கல்விபோம்” - என்பதற்கு ஒப்ப, காமராஜரின் தந்தை குமாரசாமி நாடாரின் மறைவிற்குப் பின் காமராஜரின் பள்ளிப்படிப்பு முற்றுப்பெற்றது. வியாபாரங்களில் ஈடுபட்டார். முதலில் துணிக்கடையிலும், பின்னர் திருவனந்தபுரத்தில் மரக்கடை வைத்து நடத்திய காசியாராயண நாடார் மரக்கடையிலும் சிறிது காலம் வியாபாரத்தில் ஈடுபட்டார். அவரது கவனமெல்லாம் தேச விடுதலையிலேயே இருந்தது. வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்டார். உப்புச் சத்தியாகிரகத்தில் பங்கு பெற்றார்.

காலப்போக்கில் காமராஜர், சத்தியமூர்த்தி தொண்டனாகி, காங்கிரஸ் பேரியக்க உறுப்பினராகி முழு நேரத் தேசப்பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். விடுதலைப் போரில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

கள்ளுக்கடை மறியல், அந்நியத் துணிகள் பகிஷ்காரம், கொடிப் போராட்டம், உப்பு சத்தியாக்கிரகம், சைமன் கமிஷன் எதிர்ப்பு ஆகியவற்றில் காமராஜர் பங்கேற்றுச் சிறை தண்டனை பெற்றார்.. அடுத்தடுத்துப் போராட்டங்கள் அனைத்திலும் ஈடுபட்டு பலமுறை சிறை தண்டனைகளை அனுபவித்தார் காமராஜர்..

தமிழ்நாடு காங்கிரஸில், ”காமராஜர் காங்கிரஸ்” என்ற நிலை உருவாகியது. காமராஜர் தனது தியாகத்தாலும், சலியாத உழைப்பாலும், தொண்டுகளினாலும் உயர்ந்த நிலையை அடைந்தார்.

1952-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காமராஜர் சாத்தூர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். சுமார் பன்னிரண்டு ஆண்டுகாலம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்து தமிழ்நாட்டிலே காங்கிரஸ் பேரியக்கத்திற்குப் பெரும் செல்வாக்கை ஏற்படுத்தித் தந்தார்.

1954- ஆம் ஆண்டு காமராஜர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ஆனார். தலைவர் பதவியைத் துறந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் துறந்தார். குடியாத்தம் தொகுதியில் சட்டசபைக்குத் தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். மேல்சபை உறுப்பினராகி அவர் முதல் அமைச்சர் பதவியை வகித்திருக்கலாம். குறுக்கு வழியில் உள்ளே புகுந்து கொள்ள என்றும் விரும்பாத பெருந்தலைவரே கு. காமராஜர்.

இங்கே நான் காமராஜர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராகிச் செய்த சாதனைகளையே பட்டியலிட்டு காட்ட முன் வந்திருக்கிறேன். அதிகம் படிக்காத பெருந்தலைவர் காமராஜர் கல்விக்குச் செய்த சாதனைகள் எண்ணிலடங்காதவைகளாகும். ஏழை, எளியவர், உயர்ந்தவர், தாழ்ந்தோர், ஆக எல்லோருக்கும் கல்வி-இலவசக் கல்வி - பட்டி, தொட்டிகளில் எல்லாம் பள்ளிக்கூடங்கள் - இலவச மதிய உணவுச் சீருடைகள், இப்படிப் பலதிட்டங்களைத் தீட்டி அமுல்படுத்தினார் காமராஜர். தமிழகத்தில் கல்விச் செல்வம் பெருகியது. கிராமங்கள் தோறும் ஓராசியர் பள்ளிகள் திறக்கப்பட்டன.

கல்விக் கேள்விகளில் மட்டும் சிறந்து விளங்கினால் போதுமா? நாட்டிலே பஞ்சம், பசி, வேலையில்லாத் திண்டாட்டங்கள் விலகி விடுமா? சிந்தித்தார் காமராஜர். திட்டங்கள் தீட்டினார். நாட்டிலே புதுப் புதுத் தொழிற்சாலைகளை நிறுவச்செய்தார். தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.

காமராஜரின் திட்டங்களால் தமிழ்நாடு முன்னணியில் நின்றது. காமராஜரின் கல்வித் திட்டங்கள் நிறைவேற உடனிருந்து பாடுபட்டவர் அந்நாள் பள்ளிக் கல்வி இயக்குனர் திரு.நெ.து. சுந்தரவடிவேலு ஆவார்.

அதேபோல், காமராஜரின் தொழிற்திட்டங்கள் நிறைவேறக் காரணகர்த்தாவாக இருந்தவர் அன்றைய தொழில் அமைச்சர் திரு. ஆர். வெங்கட்ராமன் ஆவார்.


1957 - ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் அமோக வெற்றிப்பெற்றது. பெருந்தலைவர் காமராஜரே மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சரானார்.

ஒன்பது ஆண்டுகாலம் தமழக முதலமைச்சராக இருந்த பெருந்தலைவர் காமராஜர், தான் கொண்டு வந்த கே. பிளான் மூலம் தானே முதலமைச்சர் பதவியைத் துறந்தார். அகில இந்திய காங்கிஸ் தலைவரானார்.

பெருந்தலைவர் காமராஜர் ஆண்ட காலத்தைத் தமிழ்நாட்டின் பொற்காலம் என்பார்கள். அந்தக் காலத்தை உங்கள் பார்வைக்கும், படிப்புக்கும் கொண்டு வருவதற்காகவே இந்நூல் வெளியிடப்படுகிறது.

”காமராஜரின் சாதனைகள்” என்னும் இந்த நூலினைக் காமராஜர் நூற்றாண்டு விழா, ஆண்டிலே வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கதும், பெருமைக்கு உரியதுமாகும்.

பெருந்தலைவர் காமராஜர் சாதனைகளைப் பிள்ளைகள் மட்டுமின்றிப் பெரியவர்களும் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய ஆசை.

முதலமைச்சராகக் காமராஜர் தமிழகத்தில் ஒன்பது ஆண்டுகாலம் நல்லாட்சி புரிந்தார். கல்விக்கும், தொழிலுக்கும்,காங்கிரஸ் கட்சிக்கும் அவர் செய்த சாதனைகள் கணக்கில் அடங்காதவைகளாகும்.

விருதுநகரிலே ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, போதிய கல்வி கற்கவும் வசதியற்ற சூழ்நிலையிலே வளர்ந்து, வாழ்ந்து, பின்னர் அரசியலிலே தொண்டராக ஒரு மாபெரும் கட்சியிலே இணைந்து, தனது உழைப்பால், தொண்டால் படிப்படியாக உயர்ந்தவர் தான் பெருந்தலைவர் காமராஜர். அவரது சாதனைகள் யாவுமே சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவைகள்.


கல்வி

பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பொழுது கல்வி நிலை எவ்வாறு இருந்தது என்பதைச் சற்று சிந்தித்துப் பார்க்கத்தான் வேண்டும்.

எங்கும் கல்விக் கூடங்கள். எல்லோர்க்கும் கல்வி. இலவசக் கல்வி. இலவச மதிய உணவு என்றெல்லாமா இருந்தன? இல்லவே இல்லை. வசதியுள்ளவர்களுக்கே கல்வி கற்கும் வாய்ப்புக்கள் இருந்தன. ஏழை, எளியவர்களுக்குக் கல்வி கற்பது என்பது எட்டாக் கனியாகவே இருந்தது.

தனியார் பள்ளிகளில் மட்டுமின்றி, அரசினர் பள்ளிகளும் அன்று கல்விகற்கக் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டன. ஐந்தாம் வகுப்புவரைதான் கட்டணம் இல்லை. ஆறாம் வகுப்பில் இருந்து எட்டாவது வகுப்புவரை படிக்கும் ஏழை மாணவர்கள், தாங்கள் ஏழைகள்தான் என்பதற்கான வருமான அத்தாட்சியைத் தாசில்தார்களிடமிருந்து வாங்கிக் கொடுக்கவேண்டும். அப்படிக் கொடுத்தால்தான் இலவசக்கல்வி- இல்லையேல் கட்டணம் கட்டவேண்டும்.

ஒன்பதாம் வகுப்பிலிருந்து எல்லா வகுப்புக்களுக்கும், எல்லோரும் கட்டாயமாகச் சம்பளம் கட்டியே தீரவேண்டும். பள்ளி இறுதிப் படிப்பாக இருந்தாலும் சரி, அல்லது பட்டப்படிப்பாக இருந்தாலும் சரி. எல்லாவற்றிற்கும் படிக்கப் பணம் கட்டவேண்டிய நிலைதான் தமிழ்நாட்டில் நீடித்து இருந்து வந்தது.

பள்ளிக்கூடங்களில் பற்றாக்குறை ஒரு புறம். ஒரு ஊரிலிருந்து மறுஊருக்குப் பாதயாத்திரையாகவோ, பஸ் அல்லது சைக்கிள்கள் மூலமாகவோ சென்றுதான் ஆறாம் வகுப்புக்குமேல் படிக்கவேண்டிய சூழ்நிலை இருந்தது. அங்கொன்றும், இங்கொன்றுமாக ஆரம்பப்பள்ளிகள் இருந்தன. அதுகூட இல்லாத கிராமங்களின் எண்ணிக்கைகளோ கணக்கிலடங்காதவைகளாகும்.

”ஏதோ… நாலு எழுத்து எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும் - கையெழுத்துப் போட பிள்ளைகள் கற்றுக்கொண்டால் போதும்” என்றே அந்தக் காலத்துப் பெற்றோர்கள் கருதினார்கள். பிள்ளைகள் தங்கள் தொழிலுக்குத் துணையாக இருந்து வேலைகள் செய்வதையே அவர்கள் விரும்பினார்கள்.

”ஏன் ஐந்தாம் வகுப்போடு பையன் படிப்பை நிறுத்திவிட்டீர்கள்?” என்று கேட்டால்.

”அதுபோதுங்க… அதுக்குமேலே படிச்சுப் பையன் என்ன கலெக்டர் ஆகப் போகிறானா? இல்லை தாசில்தார் ஆகப் போகிறானா?” என்று பதில் கூறுவார்கள். ஆண் பிள்ளைகளுக்கே கல்வி கற்பதில் இந்தப் பரிதாப நிலை.

தபால் போக்குவரத்துக்கள் கூடக் கிராமங்களுக்குச் சரிவர இல்லாத காலமாய் இருந்தது. ஏழெட்டுக் கிராமங்களுக்கு நடுவில் உள்ள ஒரு பேரூரிலே ஒரு தபால் ஆபீஸ் இருக்கும். மூன்று, நான்கு கிராமங்களுக்கு ஒரு தபால்காரர் என்று அவர்கள் சைக்கிள்களில்தான் சென்று, மணியார்டர், மற்றும் தபால்களைப் பட்டுவாடா செய்து வருவார்கள்.

ஒரு தபால்கார்ர ஒரு கிராமத்துக்குத் தபால் மற்றும் வந்த மணியார்டரை எடுத்துக் கொண்டு சென்றார். அது ஒரு குக்கிராமம். ஏறத்தாழ எல்லோரும் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள்தான் ஒன்றிரண்டு பிள்ளைகள் படித்தவர்களாக இருந்தாலும், தபால்காரர் செல்லும்போது அவர்கள் பள்ளிக்கூடம் சென்றிருப்பார்கள்.

மருதாயி என்ற பெண்ணுக்குப் பட்டாளத்தில் இருந்த அவளது கணவன் ஏழுமலை 500 ரூபாய் மணியார்டர் செய்து இருந்தார். ஒரு கடிதமும் போட்டிருந்தார்.
சைக்கிளில் அந்தக் கிராமத்துக்குச் சென்ற தபால்காரர் எப்படியோ வீட்டு விலாசத்தை விசாரித்துக்கொண்டு, மருதாயி வீட்டுக்குப் போனார். வீடு பூட்டிக் கிடந்தது. பக்கத்து வீடுகளில் விசாரித்தார். அந்தப் பெண் வயலில் கூலி வேலைக்குப் போயிருப்பதாகவும், சாயந்திரம் தான் வருவாள் என்றும் கூறினர். தபால்காரர் மணியார்டர் வந்திருக்கும் சமாச்சாரத்தைச் சொல்லி யாராவது சென்று அவளைக் கூட்டிக்கிட்டு வரச்சொன்னார்.

ஒரு பெண்மணி வயல் பக்கம் ஓடினாள். தபால்காரர் சைக்கிளை வைத்துக்கொண்டு அந்தக் குடிசை வீட்டுக்கருகே வேப்பமரத்தடியில் காத்துக் கிடந்தார்.

அவர் காத்து இருந்ததற்கும் ஒரு காரணம் இருந்தது. மணியார்டரைப் பட்டுவாடா செய்துவிட்டால், ஐந்தோ பத்தோ பணம் தருவார்கள். அவருக்கு இது நிகர வருமானம்தானே.

வயல் பக்கம் போன பெண் அந்த மருதாயியைக் கையோடு கூட்டிக் கொண்டுவந்தாள்.

”சாமி! கும்புடுறேனுங்க” - என்றாள் மருதாயி.
”ஆமா ! உன் பேருதானே மருதாயி. உனக்குப் பட்டாளத்திலே இருந்து பணம் வந்திருக்கு ” என்றார் தபால்காரர்.

”அப்படிங்களாசாமீ! எம்புட்டுப் பணம் அனுப்பியிருக்காக?” என்றாள்.

”ஐநூறு ரூபாய்” என்றார் தபால்காரர்.