தூக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தூக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இதையெல்லாம் நீங்கள் செய்தால் உங்கள் வெற்றி உறுதி...



வெற்றி பெற வேண்டும் என்று லட்சியம் கொண்ட பலரும் தனக்கு வழிகாட்ட யாரும் இல்ல¨ என்று வேதனைப் படுவார்கள்.

அப்படி தனக்கு வழிகாட்ட யாரும் இல்லை என்று அவர்கள் நினைப்பதுதான் முதல் தவறு. காந்தியடிகளும், திருவள்ளுவரும், விவேகானந்தரும், புத்தரும் என பலரும் தங்களது ஆலோசனைகளை நமக்கு அள்ளித் தந்துள்ளனர்.

அவரவர்க்கு ஏற்ற வழிகளையும், தலைவர்களையும் நாம்தான் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.




வெற்றி வேண்டுமா உங்களுக்கு? அப்படியானால் இப்படி செய்யுங்கள் என்று விவேகானந்தர் இங்கு நமக்கு கூறியுள்ள ஆலோசனைகளைப் பார்ப்போமா...

அளவுக்கு அதிகமாக உண்ணாதீர்கள். அதற்காக பட்டினியும் கிடக்க வேண்டாம்.

அதிக நேரம் தூங்காதீர்கள். அதற்காக மிகக் குறைவாகவும் தூங்க வேண்டாம்.

பொறாமை குணம் இருந்தால் விரட்டி விடுங்கள்.

சந்தேகமும், சஞ்சலபமும்தான் உங்கள் முதல் எதிரிகள். அவற்றை துரத்தியடியுங்கள்.

சோம்பல் உங்களிடம் இருந்தால் முதலில் அதை ஒழித்துக் கட்டுங்கள்.

எந்த சூழ்நிலையிலும் பேராசை கொள்ளாதீர்கள்.

உடல் தூய்மை முக்கியமானது. அதனால் தினமும் குளியுங்கள்.

எப்போதும் நல்லதை மட்டுமே மனதால் நினையுங்கள். அப்போது நல்லவை மாத்திரமே நடக்கும். நினைக்கும் பொருளாகவே ஆகும் தன்மை நம்மிடமே இருக்கிறது.

எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள். தைரியமாகவும் இருக்க பழகிடுங்கள்.

பொறுமையும், விடா முயற்சியும் நமது நல்ல நண்பர்கள். எப்போதும் இவற்றுடனேயே இணைந்திருக்கப் பழகுங்கள்.

இதையெல்லாம் நீங்கள் செய்தால் உங்கள் வெற்றி உறுதி என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

தூங்குவது எப்படி?

ஒரு நாள் இரவு சரியாகத் தூங்கவில்லையென்றாலே மறுநாள் முழுவதும் உடல் அசதி நம்மை எந்த ஒரு பணியையும் நன்றாகச் செய்ய அனுமதிக்காது. ஆனால் தொடர்ந்து பல இரவுகள் அல்லது விட்டுவிட்டு இரவுத் தூக்கத்தை, பணி நிமித்தம் காரணமாகவோ அல்லது பிரச்சனை காரணமாகவோ, தவிர்ப்பவர்களுக்கு பல உடல் சிக்கல்கள் ஏற்படும் என்று மருத்துவம் எச்சரிக்கை செய்கிறது.

இரவில் குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் வரை ஆழ்ந்து தூங்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். தடையற்ற, ஆழ்ந்த உறக்கமே நல்ல உடல் நிலையை உறுதி செய்யக் கூடியது என்று கூறும் அவர்கள், தூக்கமின்மையால் ஏற்படும் கோளாறுகளையும் பட்டியலிடுகின்றனர்.

இரவு சாப்பிட்ட உணவுச் செரியாமை, குறட்டை விடும் நிலை உருவாதல், கால்களுக்கு ஓய்வின்மையால் மறுநாள் நிலவும் உடல் அசதி, பகல் நேரத்தில் உறக்கம் தோய்ந்த முகம், கோவப்படுதல், நினைவு சக்தி குறைதல் ஆகியன மட்டுமின்றி, மன நலத்தையும் பாதிக்கக்கூடியது என்கின்றனர் மருத்துவர்கள்.

அதுவும் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதயக் கோளாறு ஆகிய நோய்வாய்ப்பட்டவர்களுக்கு தூக்கமின்மை பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

8 மணி நேர ஆழந்த உறக்கம் வெற்றிக்கான முக்கியத் தேவை, ஏனெனில் அதுவே நமது உடல், மனத் திறமைகளை அதிகரிக்கிறது என்று கூறும் மருத்துவர்கள், தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம் என்று கூறுகின்றனர்.

தூங்குவது எப்படி?

இரவில் நல்ல தூக்கம் அவசியம் என்பதை மருத்துவம் மட்டுமல்ல, ஆன்மீகமும் வலியுறுத்துகிறது. இரவு உணவுப் பிறகு உடனடியாக படுக்கைக்குச் செல்லாமல், வீட்டின் முற்றத்திலோ அல்லது (ஆபத்தற்ற) தெருவிலோ சிறிது நேரம் உலவி விட்டு பிறகு வந்து படுத்துறங்க வேண்டும் என்று ஆன்மீக வழிகாட்டிகள் கூறுகின்றனர்.

தூங்குவதற்கு முன் நம் மனதில் தோன்றும் சிந்தனைகளுக்கு இடம் அளிக்காமல், ‘இதற்கு மேல் என் உடலின் ஓய்விற்கான நேரம் இத’ என்று கூறிவிட்டு, மனதை அமைதிப்படுத்திவிட்டு படுக்கையில் சாய வேண்டும் என்கிறார் அன்னை. ஸ்ரீ அரவிந்தரோடு ஆன்மீக முயற்சி மேற்கொண்ட அன்னை, இரண்டு கால்களையும் நன்கு நீட்டிக்கொண்டு, மல்லாந்து படுத்து, சிறிது நேரம் மனதை ஒருநிலைப்படுத்தியப் பிறகு கண்ணயர வேண்டும் என்றும், இதனை பழக்கப்படுத்தினால் அதுவே நல்லுறக்கத்தை தருமென்றும் கூறுகிறார்.

சித்த வைத்திய நிபுணர்கள், இரவு உணவிற்குப் பிறகு குறைந்து இரண்டு மைல் தூரமாவது நடந்துவிட்டு வந்து படுத்தால் உடல் நலம் கூடும் என்று கூறுகின்றனர். மதிய நேரத்தில் 15 முதல் 30 நிமிடம் வரை தூங்குவதை நல்லது என்று கூறும் சித்த வைத்தியர்கள், ஒரு நாள் இரவு முழுமையாக கண் விழித்தாலோ அல்லது பணியில் ஈடுபட்டாலோ அதனால் உடலில் ஏற்படும் பாதிப்பு சரியாவதற்கு 6 மாதங்கள் ஆகும் என்று கூறுகின்றனர். எனவே இரவு தூக்கத்தை தவிர்ப்பது உடல் நலத்தின் மீது நாம் காட்டும் அக்கறையாகும்.

குறிப்பாக வீட்டில் இருக்கும்போது இரவு நேரத்தில் கணினிப் பணிகளை செய்வதோ அல்லது தொலைக்காட்சி பார்ப்பதோ உடலிற்கும் மனதிற்கும் பெரும் தீங்கிழைக்கக் கூடியது என்கின்றனர்.

தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே, அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே... போன்ற இனிமையான பாடல்களைக் கேட்டுக் கொண்டே தூங்கிவிடுவதும் நன்றே

தூக்கம் நன்றாக வருவதற்கு

தூக்கம் நன்றாக வருவதற்கு 

 
இரவில் தூங்கும் முன்பு பாலில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடித்தால் தூக்கம் நன்கு வருவதுடன் காலையில் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்