ஆய்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆய்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

`எம்டன்' ஜெய்ஹிந்த் செண்பகராமன் பிள்ளை

நாஞ்சில் நாட்டு வீரன் `எம்டன்' ஜெய்ஹிந்த் செண்பகராமன் பிள்ளை

நம் இனத்திலிருந்து  உலகம் போற்றிய உன்னத மகவு ஒன்றை தமிழகம் ஈன்றெடுத்தது. சின்னச்சாமி - நாகம்மாள் என்ற சாதாரண ஏழைத்தாய்- தந்தையருக்குப் பிறந்த அம் மாவீரன், பின்னாளில் ஜெர்மனியின் சர்வாதிகாரி, உலக நாடுகளையெல்லாம் குலைநடுங்க வைத்த ஹிட்லரையே தலைவணங்க வைத்தான் என்ற வரலாறு எத்தனை பேருக்குத் தெரியும்?

"ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, அடிமைப்பட்ட மக்கள் உலகின் எந்தக் கோடியில் இருந்தாலும் அங்கே சென்று, அவர்களின் அடிமைத் தளைகளைத் தகர்த்தெறிவேன்" எனச் சூளுரைத்த அந்த நாஞ்சில் நாட்டு வீரன்தான் `எம்டன்' ஜெய்ஹிந்த் செண்பகராமன்.

1914 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 22 ஆம் நாள் எம்டன் என்ற நீர்மூழ்கிக் கப்பலில் பயணித்து, சென்னையிலுள்ள செயின்ட் ஜோர்ஜ் கோட்டையைத் தகர்க்க வெடிகுண்டு வீசிய பெருவீரன்தான் செண்பகராமன் .

இந்த அளவில் மட்டும்தான் செண்பகராமன் குறித்த வரலாறு நமக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அதற்கும் மேலாக இந்திய நாட்டின் விடுதலைக்காக வெளிநாடுகளில் அவன் மேற்கொண்ட முயற்சிகளும், அதனால், அவன் பட்ட வேதனைகளும் மறைக்கப்பட்டுவிட்டன அல்லது மறக்கப்பட்டுவிட்டன.

தென்னாபிரிக்காவில் கறுப்பின மக்களுக்காகக் காந்தியடிகள் நடத்திய போராட்டத்திற்குச் சற்றும் குறையாமல், அமெரிக்கப் பேரரசின் இனவெறியில் சிக்கி நாள்தோறும் செத்துப் பிழைத்த நீக்ரோ மக்களுக்காகக் குரல் கொடுத்தார், அருந்தமிழ்ப் புதல்வன் செண்பகராமன்.

அப்போதைய அமெரிக்க குடியரசுத் தலைவர் உட்ரோ வில்சனைச் சந்தித்து, கறுப்பின மக்களின் துயரங்களை எடுத்துரைத்தார். "பெரும்பான்மை மக்களின் கருத்திற்கு மாறாக தாம் நடந்து கொள்ள இயலாது" என்று உட்ரோ வில்சன் மறுத்துரைத்துவிட்டார். இருந்தும் சோர்வுபடாமல், தன்னைக் கொலை செய்யக் காத்திருக்கும் இனவெறியர்களின் மிரட்டலை மீறி, செண்பகராமன் ஊர் ஊராகச் சென்று நீக்ரோ மக்களைச் சந்தித்துத் தனது வலிமையான கருத்துப் பிரசாரத்தை நடத்தினார்.

முதலாம் உலகப்போர் தொடங்கிய 1914 ஆம் ஆண்டு, இந்தியாவிற்கு வெளியே, ஜெர்மன் மன்னர் கெய்சரின் ஆதரவோடு முதன் முதலாக `இந்திய தேசியத் தொண்டர் படை' என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். செண்பகராமன் வழி நடத்திய ஐ.என்.வி. என்ற இந்திய தேசியத் தொண்டர் படையின் பேராற்றலைக் கண்டு பிரிட்டிஷ் அரசு கலக்கம் அடைந்தது. வங்கச் சிங்கம் சுபாஷ் சந்திரபோஷின் ஐ.என்.ஏ. இதற்கு செண்பகராமன் அமைத்திருந்த ஐ.என்.வி.யே முன்னோடியாக அமைந்திருக்கிறது.

1933 ஆம் ஆண்டு வியன்னாவில் நடைபெற்ற மாநாட்டில் சுபாஷும் செண்பகராமனும் நாட்டு விடுதலை குறித்து ஆராய்ந்த போது, செண்பகராமன் வகுத்துத் தந்த திட்டம் சுபாஷ் சந்திரபோஸைக் கவர்ந்தது ஒன்றே இதற்குச் சான்று.

இந்திய நாட்டின் விடுதலையைத் தனது உயிர் மூச்சாய்க் கொண்ட இம்மாவீரன், தென்னாபிரிக்காவிற்கும் பயணம் மேற்கொண்டு அங்குள்ள கறுப்பின மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்தார். கென்யாவில் டாக்டர் செண்பகராமன் நிகழ்த்திய வரலாற்றுச் சிறப்புமிக்க பேருரையைப் பற்றிக் கேள்விப்பட்ட காந்தியடிகள், அவரைப் பெருமையோடு பாராட்டியிருக்கிறார்.

ஜவஹர்லால் நேரு தனது சுயசரிதையில், "நாஜிகளுடன் கலந்து, சற்றும் பயமின்றிப் பணிபுரிந்த சொற்ப இந்தியர்களில் செண்பகராமன் முதன்மையானவர்" என்று புகழ்ந்து எழுதியிருக்கிறார்.

"விடுதலை பெறக்கூடிய தகுதி இந்தியர்களுக்குக் கிடையாது" என்று சொன்னதற்காக ஹிட்லரிடம், இந்தியா பற்றியும் அதன் தலைவர்கள் குறித்தும் ஆணித்தரமான தகவல்களைக் கூறி செண்பகராமன் வாதம் புரிந்தார். அவரின் கூர்மையான வாதத்திறமைக்கு முன்னர் ஹிட்லரின் பேச்சு எடுபடாத காரணத்தால், எழுத்து மூலமாக செண்பகராமனிடம் மன்னிப்புக் கோரினார் ஹிட்லர். ஜெர்மன் நாஜிகளுக்கு இந்தச் சம்பவம் எரிச்சலூட்டிய காரணத்தால், செண்பகராமனைக் கொலை செய்யத் திட்டம் தீட்டி உணவில் விஷம் வைத்துக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்றனர். 1934 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் நாள் அவரது அன்பு மனைவி இலட்சுமி பாயின் மடியில் உயிர் துறந்தார்.

  தன் இறுதி லட்சியத்தை மனைவியிடம் கூறுகிறார் செண்பகராமன்.
இந்திய சுதந்திரத்தை கண்ணால் காணாமல் என் உயிர் பிரியத்தான் போகிறது. எனினும் நான் இறந்த பின், எனது அஸ்தியை பத்திரமாக எடுத்துச் சென்று, நான்பிறந்த தமிழ் நாட்டில், என் அன்னையின் அஸ்தி சங்கமமான கரமனை ஆற்றில்கரைத்துவிடு, மறுபகுதியை நாஞ்சில் நாட்டடின் வளமிக்க வயல்களில் தூவிவிடு.அதோடு என் உயிர் பிரிந்தபின்னும், என் போராட்டத்தை தொடர்ந்து நீ, நடத்தவேண்டும். நெஞ்சை உருக்கும் வண்ணம் மேற் கண்ட வேண்டுகோளை விடுத்தசெண்பகராமனின் உயிர் 1934 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி இவ்வுலகத்தைவிட்டு நீங்கி அமரத்துவம் அடைந்தது

"சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக வீரன் செண்பகராமன் நியமிக்கப்பட வேண்டும்" என்ற ஜெர்மன் மன்னர் கெய்சரின் விருப்பம் நிறைவேறாமற் போனாலும், "சுதந்திர இந்தியாவில், நாஞ்சில் தமிழகத்து வயல்களிலும், கரமனை ஆற்றிலும் எனது சாம்பலைத் தூவ வேண்டும்" என்ற செண்பகராமனின் விருப்பம் மட்டும் 1966 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 19 ஆம் நாள் இந்திய அரசின் உதவியோடு நிறைவேறியது.

உலக நாடுகளுக்கெல்லாம் பயணம் செய்து, உலகத் தலைவர்களைச் சந்தித்து இந்தியாவின் விடுதலைக்காக ஆதரவு திரட்டிய செண்பகராமன் என்ற பெருமகனின் வரலாறு, மிக விரிவான அளவில் ஆராயப்பட்டு பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் என அனைத்து நிலையிலும் உள்ள பாடத்திட்டங்களில் சேர்க்கப்பட வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள் செண்பகராமனின் தியாகத்திற்கும் அவர் தம் குடும்பத்தாருக்கும் உரிய மரியாதை அளிக்க வேண்டும்

குற்றால அருவியின் தற்போதைய நிலை- ஆய்வு


பழைய குற்றாலத்தில் நீர்வீழ்ச்சி பகுதியில், கைப்பிடி இரும்பு கம்பிகள் எல்லாம் கழன்று கிடக்கிறது. அங்குள்ள கழிவறைகள் பராமரிக்கப்படாமல் மோசமான நிலையில் உள்ளன. மின்விளக்குகள் எரியவில்லை. அதிக ஒளியை தரக்கூடிய ராட்சத விளக்குகள் பழுதடைந்து கிடக்கின்றன. பெண்கள் ஆடை மாற்ற அறை வசதிகள் இல்லை.

மெயின் அருவி அருகே கழிவுநீர் ஆற்றில் கலக்கிறது. அதிக வாகனங்கள் வருவதால் முறையான போக்குவரத்து பராமரிக்கப்படவில்லை. குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களால், பொதுமக்களுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படுகிறது. டாஸ்மாக் கடைகளில் பார் வசதிகள் இல்லை என்பதால், பொதுஇடங்களில் மக்கள் மது அருந்துகின்றனர்.

இவைகள் உட்பட பல குறைகளை அறிக்கையில் சுட்டிக்காட்டி இருந்தனர்.
இவற்றையெல்லாம் பரிசீலித்த நீதிபதிகள், கிருபாகரன், வைத்தியநாதன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் நேற்று பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவில் கூறியிருப்பதாவது:-

சிவபெருமானுக்கும், பார்வதிக்கும் இமயமலையில் திருமணம் நடந்தபோது, பூமியில் உள்ள அனைவரும் திருமணத்தை பார்க்க அங்கு சென்றதால், வடபகுதி கீழே தாழ்ந்தும், தென்பகுதி மேலே உயர்ந்தும் காணப்பட்டது. இதனால், அதை சரிசெய்ய அகத்திய முனிவரை தென்பகுதிக்கு சிவபெருமான் அனுப்பியதாகவும், அகத்தியர் முனிவர் வந்து அமர்ந்த இடம் குற்றாலம் என்றும், அவர் இங்கு வந்து அமர்ந்ததால், பூமி சமநிலைக்கு வந்தது என்றும் புராணக்கதைகள் கூறுகிறது.

பரிதாபத்துக்குரியது
கங்கைக்கு நிகரான புனித நீர் குற்றால அருவியில் விழுகிறது என்று திருகூடராசப்ப கவிராயர் தன்னுடைய குற்றால குறவஞ்சியில் குறிப்பிட்டுள்ளார். இப்படி வரலாற்று சிறப்புமிக்க, புனித நீர்வீழ்ச்சியான குற்றாலத்தின் தற்போதைய நிலை பரிதாபத்துக்குரியதாக உள்ளது.

குற்றாலத்தில் ஐந்தருவி உள்ளது. இந்த அருவியில் விழும் தண்ணீர் மருத்துவ குணங்கள் கொண்டது. இந்த அருவியில் குளிப்பதால் உடலுக்கு மட்டுமல்ல, மனதுக்கும் புத்துணர்ச்சியை அளிக்கிறது. இதனால், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், இந்த அருவிகளில் குளித்தால், குணமடைந்து விடுவதாகவும் நம்பப்படுகிறது.

விழித்தெழும் நேரம்

ஆனால், இந்த புனித நீர் ஓடும் ஆற்றில் கழிவுநீர் கலக்கச் செய்வது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மேலும், அருவி நீர் மாசு அடைந்து விடக்கூடாது என்பதற்காக இந்த அருவியில் குளிப்பவர்கள் எண்ணெய், குளியல் சோப்பு, சீயக்காய் ஆகியவை பயன்படுத்த அரசு தடை விதித்து இருந்தும், இந்த பொருட்கள் எல்லாம் அருவிக்கு அருகே தாராளமாக கிடைக்கிறது. இவற்றினால், இந்த புனித நீர் மாசு அடைக்கிறது. நீர் இல்லாமல், மனிதர்கள், விலங்குகள், பறவைகள் என்று எந்த உயிரினங்களும் வாழ முடியாது.

இதைத்தான் ‘நீர் இன்றி அமையாது உலகு’ என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். ஆனால், வக்கீல்கள் தாக்கல் செய்துள்ள அறிக்கைகளை பார்க்கும்போது, குற்றாலம் மாசு அடைந்து, சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரியவருகிறது. எனவே, நாம் விழித்தெழ வேண்டிய நேரம் வந்துவிட்டது.

ஷாம்பு, சோப்புகளுக்கு தடை
எனவே கீழ்க்கண்ட உத்தரவுகளை அரசு அதிகாரிகள் தீவிரமாக அமல்படுத்த வேண்டும்.

குற்றாலத்தில், எண்ணெய், ஷாம்பு, குளியல் சோப், துணி துவைக்கும் சோப்பு, சீயக்காய், பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்கள் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்கிறோம்.

ஷாம்பு, சோப்புகள் உள்ளூர்வாசிகளை தவிர சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்ய தடை விதிக்கப்படுகிறது.

தடை செய்யப்பட்ட இந்த பொருள்கள் அருவிக்கு அருகே பயன்படுத்துபவர்கள் மீது அபராதம் விதித்து, அந்த பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்யவேண்டும்.

அருவிகளில் குளிக்கும் இடத்தில் கழன்று கிடக்கும் இரும்பு கைப்பிடிகள் அனைத்தையும் சரிசெய்யவேண்டும். இவற்றை அதிகாரிகள் முறையாக பராமரிக்க வேண்டும்.

அருவிகள் முன்பு ராட்சத மின்சார விளக்கு பொருத்தி, இரவு நேரங்களிலும் வெளிச்சத்தை ஏற்படுத்த வேண்டும்.

சுங்கசாவடியில் இருந்து பழைய குற்றாலம் வரை மின் விளக்குகள் இல்லை. எனவே, இங்கு உடனடியாக மின்விளக்குகளை அதிகாரிகள் அமைக்க வேண்டும்.

கழிவுநீர் கலப்பதை தடுக்கவேண்டும்
பராமரிக்கப்படாமல் உள்ள கழிவறைகளை உடனடியாக சரிசெய்யவேண்டும். பெண்கள் ஆடை மாற்றும் அறைகளையும், புதிய கழிவறைகளை கழிவுநீர் தொட்டியுடன் கட்டவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

உத்தரபிரதேசத்தில் திறந்தவெளி கழிவறைக்கு சென்ற சகோதரிகள் கற்பழிக்கப்பட்ட சம்பவம்போல் குற்றங்கள் எதுவும் நடந்திடாமல் தடுப்பதற்காக, முறையான பாதுகாப்பான கழிவறைகள் உடனடியாக கட்ட வேண்டும்.

நீர் வீழ்ச்சியில் இருந்து ஆறாக செல்லும் நீரில், கழிவறையில் இருந்து வெளியேறும் கழிவுநீரை கலக்கச் செய்வதை உடனடியாக அதிகாரிகள் நிறுத்தவேண்டும். அந்த ஆற்றுப்பகுதியில் உள்ள கழிவறையை அங்கிருந்து அகற்றிட வேண்டும்.

மதுக்கடையில் பார் வசதி
சுற்றுலா பயணிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்கவேண்டும். குற்றாலத்தில் தேங்கும் குப்பைகளை அகற்ற பாதிய துப்புரவு தொழிலாளர்களை குற்றால டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் நியமிக்க வேண்டும்.

டாஸ்மாக் கடைகளில், உடனடியாக பார் வசதிகளை அதிகாரிகள் செய்துகொடுக்க வேண்டும்.

மேலும் குற்றாலத்தில் பொது சாலைகள், பொது இடங்கள் மற்றும் காருக்குள் மது அருந்துவது தடை விதிக்கப்படுகிறது.

மீறி செயல்களில் ஈடுபடுபவர்கள், மீது நடவடிக்கை எடுத்து அபராதத்தை போலீஸ் அதிகாரிகள் விதிக்க வேண்டும். யாராவது மது அருந்தினால் அந்த காட்சியை வீடியோவில் படம் பிடிக்க வேண்டும்.

குடித்துவிட்டு குளிக்க தடை
அருவிக்கு அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை 48 மணி நேரத்துக்குள் அகற்ற வேண்டும். குடிபோதையில் அருவிகளில் குளிப்பதால் நிலை தடுமாறி பலர் கீழே விழுந்து இறக்கின்றனர். எனவே, குடிபோதையில் அருவிகளில் குளிக்க தடை விதிக்கிறோம்.

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை மருத்துவ சோதனையில் ஈடுபடுத்த, நடமாடும் மருத்துவ சோதனை மையத்தை திருநெல்வேலி சுகாதாரத்துறை இணை இயக்குனர் குற்றாலத்தில் உருவாக்க வேண்டும். அதேபோல, குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு உடனடியாக அபராதம் விதிக்க, நடமாடும் நீதிமன்றத்தையும் அங்கு அமைக்க வேண்டும். குற்றாலத்தில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய மருத்துவ மையங்கள் உருவாக்க வேண்டும்.

பொதுமக்களின் கடமை
குற்றாலம் போலீஸ் நிலையத்தில் போலீசாரின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவதால், பாதுகாப்புக்காக அருவிகள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சி.சி.டி.வி. கேமராக்களை போலீசார் பொருத்தவேண்டும்.

இந்த உத்தரவுகளை தீவிரமாக அதிகாரிகள் அமல்படுத்துகின்றனரா? என்பதை உறுதி செய்ய திருநெல்வேலி மாவட்ட கலெக்டர், சூப்பிரண்டுகள் திடீர் ஆய்வுகளை குற்றாலத்தில் மேற்கொள்ள வேண்டும்.

அதேநேரம், குற்றாலம் என்ற புனித, சுற்றுலா தலத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது ஒவ்வொரு குடிமக்களின் கடமையாகும். உணவு பண்டங்களை கண்ட இடங்களில் வீசி அசுத்தம் செய்யாமல் பொதுமக்கள் பொறுப்புடன் செயல் படவேண்டும்.

இயற்கை பரிசு
இயற்கை கொடுத்துள்ள இந்த அரிய பரிசை (குற்றாலத்தை) பேணி பாதுகாப்பது பொதுமக்களாகி நம்முடைய கடமையாகும். இந்த வழக்கினை முடித்து வைக்காமல், எதிர்காலத்தில் பிற உத்தரவுகளை பிறப்பிக்கும் விதமாக நிலுவையில் வைக்கின்றோம். ஐகோர்ட்டின் இந்த உத்தரவுகள் அனைத்தையும் தீவிரமாக அமல்படுத்தி, அதுதொடர்பான அறிக்கையை அதிகாரிகள் இந்த கோர்ட்டில் தாக்கல் செய்யவேண்டும்.

மலேஷியாவில் விஸ்வரூபம் படம் பார்த்தவர்களின் விமர்சனம் இதோ.............

 
Vijohn - Kuala lumpur,மலேஷியா

Vijohn கோலாலும்பூரில் உள்ள Berjaya Time Square இல் இபொழுதுதான் நான் படம் பார்த்து வெளியே வந்தேன். இந்த படம் எப்படி இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்று படம் பார்காமலேயே எப்படி கருதுகிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. சொல்லப்போனால் தீவிரவாதத்தால் இஸ்லாமியர்கள் படும் அவஸ்தையை தான் காண்பிக்கிறார். கருத்து தெரிவிப்பவர்கள் படம் பார்த்த பிறகு தெரிவிப்பதே நன்று....I appreciate him...


Indsing Guy - Singapore,சிங்கப்பூர்
Indsing Guy நான் நேற்று இரவு மலேசியா சென்று இந்த படத்தை பார்த்து விட்டேன். ரொம்ப நல்லா இருக்கு. இதுல யாரையும் புன்படுத்த இல்லையே, அப்புறம் எதுக்கு இந்த கோமாளிகளுக்காக அரசு தடை செய்து இருக்கிறது. முஸ்லிம் நாடான மலேசியாவில் கூட தடை இல்லை. ஆனால் இந்தியாவில்? இந்தியாவில் உண்மையான மக்கள் ஆட்சி நடக்கவில்லை என்று பலமுறை தினமலரில் நான் கருத்து எழுதி இருக்கிறேன். அதற்கு இந்த சம்பவமும் ஒரு சான்று. இங்கு சில சுயநலம் கொண்ட கும்பல்கள்தான் ஆட்சி மற்றும் அதிகாரம் செலுத்துகின்றன. மக்கள் கருத்துக்கும் மதிப்பு கிடையாது. மக்களுக்கும் மரியாதை கிடையாது. ஒரு சாதாரண சினிமா வை பிரச்சினை ஆக்கியது இந்த சினிமா அல்ல. சுயநலம் கொண்ட கும்பல் தான் காரணம். இந்த சினிமா பத்தி யாரும் கண்டுகொள்ளவே இல்லை நேற்று வரைக்கும். எந்த பிரச்சினையும் இல்லை நேற்று வரைக்கும். ஆனால் இன்று? காரணம் யார்? இந்த சினிமா வா அல்லது இந்த இந்த சுயநல கும்பலா? இதிலிருந்தே தெரிகிறது பிரச்சினையை தூண்டி விடுவது இந்த சுயநல கும்பல் என்று. ஏராளமான சினமாக்களில் திருநெல்வேலிகாரன் ரொம்ப மோசமானவங்கடா என்று வசனம் இருக்கிறது. அதற்காக திருநெல்வேலி மக்களுக்கு இந்த திரைபடத்தை காண்பித்துவிட்டுத்தான் வெளியிடவேண்டும் என்று சொல்வது முட்டாள்தனம் இல்லையா? ஒரு ஜாதியினரை பல திரைப்படங்களில் நாட்டாமையாக காண்பித்து இருக்கிறார்கள். அதற்காக மற்ற ஜாதியினர் அனைவரும் என் ஜாதியினை எப்படி நீ இரண்டாம்பட்சமாக படம் எடுக்கிறாய் என்று புகார் செய்து வெளியிட முடியாமல் செய்தால் முட்டாள்தனம் இல்லையா? பல திரைப்படங்கள் மற்றும் தொலைகாட்சி தொடர்களிலும் அண்ணாச்சியை வில்லனாக காண்பிக்கிறார்கள். அன்னாசிமார்களுக்கு திரையிட்டு விட்டு ஓசியில் படம் பார்த்துவிட்டு மற்றவர்களுக்கு இந்த படம் வெளியிட கூடாது என்று சொல்வது முட்டாள்தனம் இல்லையா? சின்ன கவுண்டர் என்று எப்படி நீ தலைப்பு வைக்கலாம் என்று கவுண்டர் ஜாதியினர் அனைவருக்கும் ஓசியில் படத்தை பார்த்துவிட்டு வெளியிட கூடாது என்று சொன்னால் முட்டாள்தான் இல்லையா? இது திரைப்பட துறையினருக்கு ஒரு வெட்ககேடு. சும்மா சும்மா போராடும் இந்த திரைப்பட மகா நடிகர்கள் ஒரு உண்மையான கலைஞனுக்காக மட்டுமின்றி சினிமாவின் மைய வேருக்கு வந்த பிரச்சினை என்று என் போராட வில்லை? இந்த சிறுமான்மை கும்பல் என்றாவது தங்கள் மத மக்களின் ஜீவாராதன பிரச்சினைகளுக்காக போராடி இருக்கிறார்களா? தங்கள் மத வழிபாட்டுக்கு அருகில் இருக்கும் சாராய கடையை மூட கூட துப்பு இல்லை உங்களுக்கு. அவர்களுக்கு தேவையான கல்வியை குடுக்க உங்களுக்கு துப்பு இல்லை. உங்களை நம்ப கூட உங்கள் மத மக்கள் தயாராக இல்லை. ஏனென்றால் நீங்கள் ஒரு சுயநலவாதிகள்.

vinu - frankfurt,ஜெர்மனி

vinu படம் நன்றாக இருக்கிறதாம். மலேசியாவில் இருந்து நண்பன் தொலை பேசியில் தெரிவித்தான். முஸ்லிம் நாடான மலைய்சிவில் இந்த படம் பார்க்க கட்டுகடங்காத கூட்டமாம். படத்தில் முஸ்லிம் கல் பற்றி மோசமான கருத்துகள் இல்லியாம். பிறகு என்ன இந்த தமிழ் நாடு ஆட்றேச்ஸ் இல்ல கட்சிகளுக்கு.

பெப்சி கம்பெனியை சீல் வைத்த வரலாறு தெரியுமா உங்களுக்கு ?...



ஒரு பெரியவர் தான் வாங்கிய பெப்சியில் அழுக்குப் படலம் இருந்ததாகப் புகார் கொடுத்தார். சாம்பிளை லேப் டெஸ்ட்டுக்கு அனுப்பினதுல, 'மனிதர்கள் குடிக்க ஏற்ற பானமில்லை'ன்னு ரிப்போர்ட் வந்தது. சட்டப்படி அந்த நிறுவனம் மேல என்ன நடவடிக்கை எடுக்கணும்னு ஒரு அறிக்கை தயாரிச்சேன். ரொம்ப யோசனைக்குப் பிறகு தாசில்தார்கிட்ட எட்டு பூட்டு மட்டும் வாங்கிட்டு வரச் சொன்னேன். எதுக்குன்னு புரியாம வாங்கிட்டு வந்தவரைக் கூட்டிக்கிட்டு மதுராந்தகத்துல இருக்குற பெப்சி கம்பெனிக்குப் போனேன்.

நான்(சகாயம்) தயாரித்த அறிக்கையின் ஒரு நகலை கம்பெனி மேனேஜர்கிட்ட கொடுத்துட்டு, 'கம்பெனியைப் பூட்டி சீல்வைக்கப் போறோம். எல்லாரையும் வெளியே வரச் சொல்லுங்க'ன்னு சொன்னோம். அந்த மேனேஜரைவிட என்கூட வந்த தாசில்தார் ஆடிப் போயிட்டாரு. 'சார்... பெரிய பிரச்னை ஆயிடும். எதுக்கும் கலெக்டரை ஒரு வார்த்தை கேட்டுக்கலாம்'னு பதறுனாரு. 'கலெக்டரைக் கேட்டா சீல்வைக்க விட மாட்டாரு. சட்டப்படி இந்தக் கம்பெனியை மூட நமக்கே அதிகாரம் இருக்கு. நீங்க தைரியமா உங்க கடமையைச் செய்யுங்க'ன்னு அவரை உள்ளே அனுப்பினேன். ஒரு மணி நேரம் கழிச்சு இன்னும் பதற்றத்தோடு வெளியே வந்தவரு, 'சார்... அவங்க அமெரிக்கா வரைக்கும் பேசுறாங்க சார். சி.எம்-கிட்ட பேசுறதாச் சொல்றாங்க சார். என்ன பண்ணலாம்?'னு கேட்டாரு. 'உள்ளே இருக்கிறவங்களை அரெஸ்ட் பண்ணிட்டு சீல்வைக்க வேண்டியதுதான்'னு நான் சொல்லவும்தான் எல்லாரும் பயந்து வெளியே வந்தாங்க. கம்பெனியை இழுத்து மூடி, எட்டு பூட்டுகளையும் போட்டு சீல்வெச்சுட்டோம்.


நான்(சகாயம்) உடனே அலுவலகத்துக்குப் போகாம ஒரு குக்கிராமத்துக்குப் போயி ரேஷன் கடை, பள்ளிக்கூடத்தை எல்லாம் ஆய்வு பண்ணி முடிச்சுட்டு, ராத்திரி எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்தேன். என் மனைவி வாசல்லயே காத்துட்டு இருந்தாங்க. கலெக்டர், சீஃப் செக்ரெட்டரி, உள்துறைச் செயலாளர்னு பலரும் என்னைக் கேட்டு வீட்டுக்கு போன் பண்ணிஇருக்காங்க. நான் திரும்ப எல்லோருக்கும் போன் பண்ணா, 'யாரைக் கேட்டு சீல்வெச்சீங்க? என்ன காரியம் பண்ணியிருக்கீங்க தெரியுமா?'ன்னு எல்லாரும் கேள்வி கேட்டாங்க. 'நான் என் கடமை யைத் தான் சார் செஞ்சேன். மக்களுக்கு நல்லது செஞ்சதுக்காக சஸ்பெண்ட் பண்ணா, தாராளமாப் பண்ணிக்கோங்க'ன்னு சொல்லிட்டேன். மறு நாள் எந்தப் பத்திரிகைலயும் பெட்டிச் செய்தியாக்கூட பெப்சிக்கு சீல்வெச்ச சம்பவம் ரிப்போர்ட் செய்யப்படவே இல்லை.
ரெண்டு நாள் கழிச்சு ஜூனியர் விகடன்ல மட்டும் அந்தச் செய்தி விரிவா வந்திருந்தது. அதுக்குப் பிறகுதான் பெப்சிக்கு நான் சீல்வெச்ச விஷயமே வெளி உலகத்துக்குத் தெரிஞ்சது. 

டீ கடை நடத்திய மோடி.

அரசியலுக்கு வருவதற்கு முன்னர் தன்னுடைய இளம்வயதில் சகோதரருடன் இணைந்து, டீ கடை நடத்தி வந்துள்ளார் மோடி. பா.ஜ.க, வில் சேர்ந்த உடன் அவருக்கு படிப் படியாக ஏறு முகம்தான். திருமணம்கூட செய்து கொள்ளாமல் கட்சியின் வளர்ச் சிக்காக அயராது உழைத்தார்.
மோடியின் அயராத உழை ப்பினால் கடந்த, 1998ல் குஜராத் இமாச்சலபிரதேச தேர்தல்பொறுப்பாளராக, அத்வானியால் நியமிக்கப்பட்டார். குஜராத்தில் பா.ஜ.க ஆட்சியை கைப்பற்றி அம்மாநிலத்தின் முதல்வராக கேசுபாய்படேல் பதவியேற்றார். இதனைத்தொடர்ந்து 2001 அக்., 6ம் தேதி தனது முதல்வர்பதவியை ராஜினாமா செய்தார் கேசுபாய்படேல். அந்தநேரத்தில் எம்எல்ஏ., வாக கூட இல்லாத மோடி, அக்., 7ம் தேதி முதல்வராக பதவியேற்றார். பிறகு , இடைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 2002 பிப்., 27ல், "கோத்ரா ரயில் எரிப்பு' சம்பவத்தை_தொடர்ந்து, குஜராத்தில் கலவரம் ஏற்பட்டது. இதையடுத்து மோடி, ராஜினாமாசெய்தார். அதே ஆண்டு நடந்த சட்ட சபை தேர்தலில், வெற்றிபெற்று மீண்டும் முதல்வரானார்.

மோடி மதவாதி எனவும் கலவரத்துக்கு காரணமானவர் என்றும் பல குற்றச் சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டன. ஆனால் அதைஎல்லாம் மனதில்கொள்ளாமல், மாநிலத்தின் வளர்ச்சியை மட்டும கருத்தில்கொண்டு செயல்பட்டார். குஜராத்தை பலதுறைகளிலும், முன் மாதிரி மாநிலமாக மாற்றிக்காட்டினார். இதுவே அவரது அடுத்தடுத்த வெற்றிக்கு வித்திட்டது. இவரது சாதனையை பாராட்டி இந்தியாடுடே நாளிதழ், "இந்தியாவின் சிறந்த முதல்வர்' என விருதை, 2006ல் வழங்கி கவுரவித்தது

2007ல் நடந்த சட்ட சபை தேர்தலின்போது, "மரண வியாபாரி' என்று காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியால் , விமர்சிக்கப்பட்டவர் மோடி. ஆனால் அந்தவிமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும்வகையில் வெற்றிபெற்று மூன்றாம் முறையாக முதல்வரானார் மோடி.

குஜராத்தில், நீண்ட காலம் முதல்வராக இருந்தவர் என சாதனை யையும் படைத்தார். குஜராத்தில், கணினி துறையில், இவர் உருவாக்கிய வளர்ச்சியின்_காரணமாக, கம்ப்யூட்டர் சொசைட்டி ஆப் இந்தியா அமைப்பு, "இரத்னா' விருதை வழங்கியது. 2009ம் ஆண்டுக்கான, "ஆசியாவின் சிறந்த எப்டிஐ., பெர்சனாலிட்டி' விருதுக்கு தேர்வுசெய்யப்பட்டார்.

குஜராத் மின்மிகை மாநிலமாக உள்ளது. சோலார் மின்உற்பத்தியில், (2,000 மெகாவாட்) நாட்டிலேயே முன்னணியில் இருக்கிறது . இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாவதை தடுக்கும்வகையில், "குட்கா'வுக்கு தடைவிதித்துள்ளார். மாநிலம் முழுவதும் பூரண மது விலக்கை அமல்படுத்தியுள்ளார். மும்பை தாக்குதலுக்குப் பிறகு , குஜராத் கடலோர பாதுகாப்பை பன் மடங்கு பலப் படுத்தியுள்ளார்.

சமூக வலை தளமான, "டுவிட்டரில்' இவரை, 11 லட்சம்பேர் பின்தொடர்கின்றனர். சமீபத்தில், ஆன்லைனில் இளைஞர்களுடன், மோடி நேரடியாக கலந்துரை யாடினார். அரசியல்வாதி ஒருவர், இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் பங்குகொள்வது இதுவே முதல் முறை.
தற்போது தன்தலைமையில், மூன்றாம் முறையாக, சட்ட சபை தேர்தலை எதிர் கொண்டு, "ஹாட்ரிக்' வெற்றி பெற்றுள்ளதோடு, நான்காம் முறையாக, முதல்வராக பதவியேற்க இருக்கிறார் . கடந்த, 22 ஆண்டு காலமாக, குஜராத்தில், ஆட்சி, அதிகாரத்தை பிடிக்கமுடியாமல் தவிக்கும், காங்கிரசை மீண்டும் மண்ணை கவ்வச்செய்துள்ளார்.

Posted; oneindiya

உண்ணாநோன்பு, உபவாசம்,நோன்பு,விரதம் இருக்க முடியாதவர்கள் தெரிந்து கொள்ள.. வழிகள்



உபவாசம், விரதம், நோன்பு (அதாவது உணவு எடுத்துக் கொள்ளாமல் பட்டினி கிடப்பது) என்ற வார்த்தைகளை கேட்டவுடன் இது ஏதோ ஆன்மீகம் தொடர்பானது என்றே முதலில் எண்ணத் தோன்றும். மதங்களில் சொல்லி வைக்கப்பட்ட விடயங்கள் பலவும் அறிவியலோடு தொடர்புடையது என்பது பல இடங்களில் நிரூபிக்கப்பட்டு வருகிறது. உபவாசம் என்ற விரதத்தின் பலன்களை ஆழமாக புரிந்து கொண்ட பிறகு தான் அதன் அத்தியாவசியத்தை ஏகாதசி விரதம், வெள்ளிக்கிழமை விரதம் என்று பல பெயர்களில் அனுசரிக்க கூறியுள்ளார்கள் முன்னோர்கள்.


யோகாசனம், பிராணயாமம் போன்ற பயிற்சிகளை மேற்கொள்பவர்கள் மிக முக்கியமாக செய்ய வேண்டிய ஒன்று உபவாசம். அதாவது உண்ணநோன்பு. எடுத்துக் கொள்ளும் உணவால் உடலில் சேரும் கழிவுகளை உடலை விட்டு முழுவதுமாக நீக்க ஒரு மிகச்சிறந்த உத்தி உண்ணாநோன்பு. அது பற்றி இங்கு பார்க்கலாம்.


உலகில் ஏராளமான மதங்கள் இருக்கின்றன. இந்த மதங்களில் எல்லாம் காணப்படும் ஒரே விடயம் உபவாசம். இது மதம், இனம் இவற்றையெல்லாம் கடந்த ஒரு உன்னத செயல் என்பது இதன் மூலம் புலப்படுகிறது.

நல்ல பலன்

மனிதனாக பிறவி எடுத்தவர்கள் விஞ்ஞானத்தின் அடிப்படையில் வாழ்ந்தாலும் மெய்ஞானத்தை அடைய வேண்டுமென்றால் சில உடல், மனக் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து ஆக வேண்டும். அதன் ஒரு பகுதி தான் உபவாசம். இருந்தாலும், உபவாசம் என்பது சாதாரண நிலையில் இருப்பவர்களுக்கு கூட நல்ல பல பலன்களை அளிக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.எந்த ஒரு பொருளும் ஓய்வின்றி உழைத்தால் பழுதடைவது இயல்பு. உடலுக்கும், உள்ளத்திற்கும் அவ்வப்போது பூரண ஓய்வு என்பது அவசியம். உண்ட உணவை செரிக்க நேரிடும் சீரண வேலைக்கு, உயிராற்றலின் பெரும் பகுதியை செலவழிக்க நேரிட வேண்டியுள்ளது. தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே இருக்கும் போது உடலின் உயிராற்றலும் ஓயாது இயங்குகிறது. இதற்கு ஓய்வு கொடுப்பது மிகவும் முக்கியம். பெரும்பாலோருக்கு காலை, மதியம், மாலை, இரவு என்று நான்கு நேரங்களிலும் சாப்பிடாமல் இருக்கவே முடியாது. இந்த வேளைகளை தவிர இடைப்பட்ட நேரங்களில் நொறுக்கு தீனிகளை வேறு உண்பதையும் வழக்கமாக கொண்டிருப்பார்கள். இவர்களின் உடலும் பழுதடையும். கூடவே உள்ளமும் சிக்கலான எண்ணங்களால் குழப்பமடையும் என்கிறார்கள் மெய்ஞானிகள்.

நலிவடையும் உடல்

உடல் நலிவடைய, நோய்வப்பட திருவள்ளுவர் கூறும் ஒரு குறளை பார்க்கலாம்.

"இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேரிரை யான்கண் நோய்"

அதாவது, இழிவறிந்து உண்ணல் என்ற சொற்களின் மூலம் வள்ளுவர் உடலை விட்டு வெளியேறாமல் ஏற்கனவே உள்ளிருப்பாகத் தங்கி விஷமாகிக் கொண்டிருக்கிற கழிவாகிய இழிபொருளை குறிப்பிடுகிறார். பூரணமாக வெளியேற்றும் வாய்ப்பை கொடுக்கும் வண்ணம் உடலின் உள்ளுறுப்புகளுக்கு ஓய்வளிக்கும் போது உயிராற்றல் சீரண வேலையில் இருந்து விடுபடுவதால் உடலில் தேங்கியிருக்கும் கழிவுகள் முழுமையாக வெளியேறும் வாய்ப்பு உருவாகிறது. இவ்வாறு ஓய்வு கொடுக்காமல் மேலும், மேலும் உடலுக்கும் உணவை திணிப்பதால் அந்த உணவு உடலுக்கு ஊட்டம் கொடுப்பதற்கு பதிலாக உள்ளிருக்கும் கழிவுடன் மேலும் கழிவு£கி விஷமாக மாறி பின்னர் உடலை பெருநோய்க்கு தள்ளிவிடும் என்பதே இதன் பொருள்.

உடலிற்குள் கழிவுப் பொருளின் அளவு அதிகரித்து வருகிறது என்பதை எப்படி தெரிந்து கொள்ள சில அடையாளக் குறிகள் உண்டு. பசியின்மை, அன்றாடம் உண்ணும் உணவில் சுவையின்மை போன்றவை தொடக்க அறிகுறிகள். அதாவது உண்ட உணவு சீரணிக்கப்படாமல் வயிற்றில் புளிக்க தொடங்கிவிட்டால் நாக்கில் சுவை மழுங்கிவிடும். வயிற்றில் புளிக்க தொடங்கும் உணவால் விஷத்தன்மையுள்ள வாயு கிளம்பி மேல் நோக்கி வரும். அப்படி வரும் வாயுவின் அளவு அதிகரிக்கும் போது அழுத்தம் அதிகமாகி நெஞ்சு கரிப்பது போன்ற உணர்வு தோன்றும். சிலருக்கு குமட்டல், மயக்கம், உடல் முழுவதும் வலி, தலைவலி, சுறுசுறுப்பின்மை, அபான வாயு மிகுந்த துர்நாற்றத்துடன் இருப்பது, தூக்கமின்மை போன்ற அறிகுறிகள் தோன்றும். இத்தனைக்கும் மூலகாரணம், வெளியேற்றப்படாமல் உள்ளே தங்கியிருக்கும் கழிவுப் பொருள்கள் தான்.
பசி எங்கிருந்து வருகிறது?

சிலர் எப்போதும் சரியான நேரத்திற்கு உணவு உட்கொள்ள வேண்டும் என்பார்கள். பசிக்கிறதோ, இல்லையோ நேரம் வந்துவிட்டால் வயிற்றுக்குள் எதையாவது கொட்டி விடுவது சரியானது ஆகுமா? நிச்சயமாக இல்லை. பசி என்றால் நினைவுக்கு வருவது வயிறு. சிலருக்கு பசி என்பது மயக்கமாக தோன்றலாம். சிலருக்கு எரிச்சலாகவும் தோன்றும். இவை எல்லாம் பசியின் சின்னங்கள் என்று நினைத்து விடுபவர்கள் ஏராளம். இந்த அடையாளக்குறிகளை பசி என்று நினைத்து உணவுகளை நிரப்பிக் கொண்டிருந்தால் தற்காலிகமாக அந்த உணர்வுகளிலிருந்து விடுதலை அடைந்தது போல் தோன்றும். ஆனால் உண்மை என்னவென்றால், இவையாவும் நோயின் விதைகள் உடலில் உருவாகிக் கொண்டிருக்கின்றன என்பதன் அடையாளமே.

மனித உடலின் ரத்தம் 75 சதவீதம் காரத்தன்மையும், 25 சதவீதம் அமிலத்தன்மையும் வாய்ந்தது. இந்த நிலை சீராக இருந்தால் உடலில் உபாதைகள் எதுவும் தோன்றாது. அமிலத்தின் தன்மை அதிகமாகும் போது தான் உடலில் நோய்கள் உருவாகின்றன. பசி என்ற உணர்வு உடல் முழுவதும் உணவின் தேவையை உணர்த்தும் ஒரு சூக்குமமான உணர்வாகும். அதாவது உயிராற்றல் ஏற்கனவே உட்கொள்ளப்பட்ட உணவை சீரணித்து முடித்து கழிவுப் பொருட்களை முற்றிலும் வெளியேற்றிய நிலையில் மறுபடி உணவு தேவை என்பதை அறிவுறுத்தும் நிலை. ஆனால் எத்தனை பேருக்கு இப்படி உண்மையான பசி தோன்றுகிறது?

உபவாசத்தை தொடங்குவது எப்படி?

ஒரு முறை உண்ட உணவு முழுவதும் சீரணமடைந்து மறுபடி பசி தோன்றுகின்ற நிலையில் உணவு உண்ணாது தவிர்க்கும் நிலை தான் உபவாசம் என்கிற உண்ணாநோன்பு. அவ்வாறு தோன்றும் பசியை நீர் மட்டும் குடித்து மனக்கட்டுப்பாட்டுடன் ஒரு நாள் கழித்து விட்டால் அதன் பின்னர் பசி என்பது தோன்றாது. அதாவது உண்ணாநோன்பை மேற்கொள்ள தொடங்கி உடலின் கழிவுகள் முழுவதையும் அகற்றிவிடலாம். உடலில் இருக்கும் நோய்களின் அடையாளக்குறிகள் நீங்கும் வரையில் உண்ணாநோன்பை மேற்கொள்ளலாம் என்கிறார்கள் உபவாசத்தில் அனுபவம் உள்ளவர்கள். எவ்வளவு நாட்கள் உண்ணாநோன்பு மேற்கொள்ளலாம் என்பது அவரவர் உடல் நிலையை பொறுத்தது. குறைந்தது 3 நாட்கள் முதல் 10 நாட்கள் வரை உபவாசத்தை நீடிக்கலாம்.

"நோயிலே படுப்பதென்ன கண்ணபெருமானே-நீ
நோன்பிலே உயிர்ப்பதென்ன கண்ணபெருமானே" என்று பாடுகிறான் பாரதி.

அதாவது நோய் வந்த போது நீ சோர்ந்து படுத்துக் கொள்கிறாய். ஆனால் நோன்பிருக்கும் போது உண்ணாதிருந்தும் மிகத்தெம்புடன் உற்சாகமாய் காணப்படுவதன் காரணம் என்ன என்று வியக்கிறான் பாரதி. உண்மையில் உண்ணா நோன்பு இருக்கும் போது உயிராற்றல் உடலில் உள்ள கழிவுப் பொருள்களை எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு வெளியேற்றி விடுகிறது. இதனால் உடலின் உறுப்புகள் தூய்மையடைகின்றன. அதே நேரத்தில் உடலின் எடையும் குறைகிறது. உண்ணாநோன்பு இருக்கும் போது தொடக்க காலத்தில் உடலின் எடை குறைவது சற்று அதிகமாக இருக்கும். அவ்வாறு குறையும் உடலின் எடை எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது. காரணம், அவையெல்லாம் உடலில் வெளியேற்றப்படாமல் தங்கிவிட்ட கழிவுப் பொருட்கள் தான். உண்ணா நோன்பு இருக்கும் நிலையில் உயிராற்றலானது, சீரண வேலையில் இருந்து ஓய்வு பெற்றுக் கொள்வதால் உடலின் உள்ளுறுப்புகளில் உள்ள கழிவுப் பொருள்களை எல்லாம் வெளியேற்றும் பணியை செய்கின்றது. அப்படி சுத்திகரிக்கும் வேலையில் இருக்கும்போது நாம் பூரண ஓய்வு நிலையில் இருப்பது அவசியம். அப்போது உடலில் இருக்கும் நோய்க்கான காரணிகள் அனைத்தும் மறையத் தொடங்கும்.
உண்ணாநோன்பின் போது வயிற்றுப் போக்கு, சளிபிடித்தல், இடுப்பு வலி, முதுகுவலி, மயக்கம், சோர்வு, வாந்தி போன்ற அறிகுறிகள் தோன்றும். ஆனால் இவையெல்லாம் உடலில் ஏற்கனவே வெளியேற்றாமல் தேங்கிவிட்ட கழிவுப் பொருள்களை சுத்திகரிப்பதற்காக உயிராற்றல் மேற்கொள்கின்ற பணிகள் தான். எனவே இவற்றை கண்டு பயம் கொள்ள தேவையில்லை. இந்த நிலையில், எல்லா சீரண உறுப்புகளும் கழிவு உறுப்புகளாக பணி செய்து உணவின் மூலம் ஏற்கனவே உட்கொண்ட மருந்துகள் எல்லாம் வெளியேற்றப்பட்டு விடும். உடல் பூரணமாக சுத்தமடைந்து ஒரு புத்துணர்வு பெறும்.

உபவாசத்தை முடிக்கும் நிலை

உண்ணா நோன்பு இருக்கும் நிலையில் உடலில் சேமித்து சேமித்து வைக்கப்பட்டிருந்த குளுக்கோஸ் போன்ற சர்க்கரைப் பொருட்களை உடல் பயன்படுத்திக் கொள்ளும். இவ்வாறு சேமித்து வைக்கப்பட்டிருந்த பொருட்கள் அனைத்தும் தீர்ந்த பின்னரே பசி என்ற உண்மை நிலை தோன்றும். இந்த நிலையில் உடலில் இருந்து வெளியேறும் சுவாசம் மிகவும் இனிமையாக இருக்கும். கண்கள் பிரகாசமாக இருக்கும். நாக்கு வழவழப்பும், துல்லியமாக சுவையறியும் நிலையில் காணப்படும். நாக்கின் வெண்மைப் படிவம் நீக்கப்பட்டு சிவந்த நிறத்துடனும் இருக்கும். வாயில் உமிழ்நீர் சுரந்து உடல் காற்றில் பறப்பது போன்று இலகுவாக தோன்றும். இந்த நிலையே உபவாசத்தை முடிக்கும் நிலை. 'லங்கணம் பரம அவுசதம்' என்பார்கள். அதாவது, உபவாசம் என்பது உடலுக்கு மிகச்சிறந்த மருந்து என்பதே இதன் பொருள். உண்ணாநோன்பு இருப்பது உடல் நல உயர்வுக்கான உன்னதமான வழி.

முழுமையாக உணவுகளை மறுத்து நீர் மட்டும் அருந்தி உண்ணாநோன்பு இருக்க முடியாதவர்கள் கீழ்க்கண்ட நீராகரங்களுடன் உண்ணாநோன்பை மேற்கொள்ளலாம்.

1. இளநீர், அருகம்புல் சாறு கலந்தோ கலக்காமலோ நாள் ஒன்றுக்கு மூன்று டம்ளர் வீதம் அருந்தி வரலாம்.
2. பழரசச் சாறு புளிப்பு சுவையில்லாமல் இனிப்பாக இருக்கும் பழங்களின் சாறு மூன்று டம்ளர்கள் மட்டும் அருந்தி நோன்பு இருக்கலாம்.
3. நீர் மோர் உப்பு சேர்க்காமல் மூன்று அல்லது நான்கு டம்ளர்கள் ஒரு நாளைக்கு அருந்தி வரலாம்.
4. வாட்டர் மெலன் எனப்படும் தண்ணீர் பழம் மட்டும் அருந்தி நோன்பு இருக்கலாம்.
இப்படி வெறும் நீராகரங்கள் மட்டும் எடுத்துக் கொண்டு 48 நாட்கள் வரை நீர் நோன்பாக எடுக்கலாம். இப்படி செய்வதால் உடலின் நோய்கள் பலவும் இருந்த இடம் தெரியாமல் போகும்.

உண்ணா நோன்பினை யார் வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம். ஆனால் முடிக்கும் போது மிகக்கவனமாக முடிக்க வேண்டும். சிறுகச்சிறுக பழங்களில் தொடங்கி பின்னர் கீரை அதற்கடுத்து பச்சை காய்கறிகள் பச்சடி என படிப்படியாக திரவத்தில் தொடங்கி திட வடிவிலான உணவுகளை கையாண்டு பின்னர் வழக்கமான உணவு பழக்கத்திற்கு வர வேண்டும்.

இதை தான் ' ஒரு வேளை உண்பான் யோகி, இரு வேளை உண்பான் போகி, முவ்வேளை உண்பான் துரோகி, மேலும் உண்பான் ரோகி'
என்றார்கள். எனவே, உணவை குறைத்து உடலை காக்க தொடங்குவோம் வாருங்கள்!

By...ஆனந்த மயன்

நிலவில் ஹீலியம் கண்டுபிடிப்பு

நிலவை ஆராய அனுப்பப்பட்ட சந்திரயான் விண்கலம் செய்த ஆய்வில் அங்கு அபாயமற்ற மின் சக்தியை தரக்கூடிய ஹீலியம் 3 அணுப்பொருள் உள்ளதென்பது உறுதியாகியுள்ளதென்றும், நிலவில் உள்ள ஹீலியத்தைக் கொண்டு உலகின் எரிசக்தி தேவையை முழுமையாக தீர்த்துவிடலாம் என்று இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தின் முன்னாள் தலைவர் மாதவன் நாயர் கூறியுள்ளார்.

பெங்களூருவில் நடைபெற்றுவரும் 3 நாள் உலக வானியல் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மாதவன் நாயர், “நிலவில் உள்ள ஹீலியத்தை வெட்டி பூமிக்கு கொண்டு வருவோமானால் அது உலகிற்கு நமது நாடு அளிக்கும் மிகப் பெரிய பங்கீடாக இருக்கும். நிலவில் மேற்பரப்பில் இருந்து அதனை வெட்டிக் கொண்டு வரக்கூடிய தானியங்கி மனித இயந்திரத்தை அடுத்த 10-15 ஆண்டுகளில் இந்தியா உருவாக்கிவிடும்” என்றும் கூறியுள்ளார்.

சந்திராயன் அனுப்பப்பட்டதன் நோக்கம் ஹீலியம் கண்டுபிடிப்பு அல்ல என்றாலும், அது அதன் துணைக் கண்டுபிடிப்பாகும் என்று கூறிய மாதவன் நாயர், ஹீலியம் மிக இலகுவான, கதிர்வீச்சற்ற, இரண்டு புரோட்டான்களையும், ஒரு நியூட்ரானையும் கொண்ட அணுப்பொருளாகும் என்றார்.

“நிலவின் மேல்பரப்பிலுள்ள டைட்டானியம் எனும் கனிமமே ஹீலியத்தை தன்னுள் ஏற்று, தக்கவைத்துள்ளது. அதனை பல ஆய்வுகளின் மூலம் உறுதிப்படுத்திவிட்டோம். டைட்டானியத்தின் தன்மை மிக நன்றாக உறுதியாகியுள்ளது. அது நிலவு முழுவதும் பரவிக்கிடக்கிறது. இதிலிருந்து நமக்குத் தேவையான அளவிற்கு ஹீலியம் 3 நிலவில் உள்ளதெனபதே” என்று கூறியுள்ள மாதவன் நாயர், சந்திரயானில் பொருத்தி அனுப்பி வைக்கப்பட்ட கனிம வளமறியும் உருவகப் பதிவுக் கருவி (Mineral and hyper spectral imager)ஹீலியம் இருப்பை உறுதி செய்தது என்றார்.

சூரியனில் இருந்து வெளியாகும் வெப்பப் புயலில் கலந்துவரும் ஹீலியம் நிலவின் பரப்பைத் தாக்கும்போது, அதன் மேற்பரப்பிலுள்ள மண்ணில் ஒன்றுகலந்து புதைந்துவிடுகிறது என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

பூமியில் மனித இனத்துக்கு ஆபத்து? அறிவியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங்

லண்டன்: அடுத்த சில நூற்றாண்டுகளில் வேற்று கிரகங்களில் மனிதனை குடியமர்த்த வேண்டியது மிகவும் அவசியம். பூமியில் மட்டுமே இருந்தால், மனித இனமே கூண்டோடு அழிந்து விட வாய்ப்பு உள்ளது என விஞ்ஞானி ஒருவர் எச்சரித்துள்ளார். இதுகுறித்து புகழ்பெற்ற அறிவியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங் கூறியதாவது:

நல்லதே நடக்கும் என்ற எண்ணம் எனக்கும் உண்டு. எனினும், மனித இனம் பூமியில் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு வாழ முடியும் என்பது குறித்து நீண்ட விவாதம் நடத்த வேண்டிய அவசியம் இப்போது ஏற்பட்டுள்ளது. ஏனெனில், அடுத்த சில நூற்றாண்டுகளில் பூமியில் மிகப்பெரிய அழிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

கடந்த காலங்களில் சில சமயங்களில் மனித இனம் இனியும் தப்புமா? என்ற கேள்வி எழுந்ததும், அதிலிருந்து நூலிழையில் தப்பியதையும் அறிவோம். 1963ல் ஏற்பட்ட கியூபா ஏவுகணை நெருக்கடியை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இதுதவிர, 1945ம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானின் ஹிரோஷிமா நாகசாகி மீது அமெரி க்கா அணுகுண்டு விசியதால் லட்சக் கணக்கானோர் உயிரிழந்ததுடன் பலர் கொடிய நோயால் பாதிக்கப்பட்டனர். மேலும் சூறாவளி, பூகம்பம், சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களின் அச்சுறுத்தலும் தொடர்கதையாக உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் இனி வரும் காலங்களிலும் அடிக்கடி நிகழ வாய்ப்பு உள்ளது. இவ ற்றை எல்லாம் எதிர்கொள்வதற்கு நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

முக்கியமாக அணு ஆயுதங்களை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். அடுத்ததாக, பூமி வெப்பமாதல், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பது உட்பட சுற்றுச்சூழலை பாதிக்கும் பல்வேறு விஷயங்களை தடுக்க வேண்டும். இவையெல்லாம் அவ்வளவு எளிதில் நடக்கும் விஷயம் அல்ல. இதிலிருந்து தவறினால் மனித இனமே கூண்டோடு அழியலாம்.

எனவே, ஆயிரமாயிரம் ஆண்டுகளையும் கடந்து மனித இனம் வாழ வேண்டுமானால், வேற்று கிரகங்களில் குடியேற்றுவது அவசியமாகிறது. அதற்கான ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டும்.

பங்குச்சந்தை

டிரேடிங் (Trading) என்றால் என்ன ?

டிரேடிங் என்றால் பங்குகளை வாங்குவது – விற்பது அல்லது விற்பது – வாங்குவது. இதை சரியான நேரத்தில், சரியான முறையில் செய்தால் பங்குச்சந்தையில் லாபம் பெறலாம்.

பங்குகளை வர்த்தகம் செய்வது எங்கே ? (Where should I trade stocks?)

பங்குகளை பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்யலாம். உதாரணமாக இந்தியாவில் புகழ் பெற்ற பங்குச்சந்தைகள் மும்பை பங்குச்சந்தை (BSE – Bombay Stock Exchange) மற்றும் தேசிய பங்குச்சந்தை (NSE – National Stock Exchange) ஆகும். உலகளவில் (Wordwide) நியூயார்க் பங்குச்சந்தை (Newyork Stock Exchange), லண்டன் பங்குச்சந்தை (London Stock Exchange), நாஸ்டாக் (NASDAQ) மற்றும் ஹாங்காங் பங்குச்சந்தைகள் (Hongkong Stock Exchange) புகழ் பெற்றவைகள்.

பங்குவர்த்தகம் செய்ய பங்குச்சந்தைக்கு நேரடியாக செல்ல வேண்டுமா ?

இல்லை. பங்குவர்த்தகம் செய்ய பங்குச்சந்தைக்கு நேராக செல்ல வேண்டியதில்லை. இவ்வர்த்தகம் செய்வதற்க்கென்றே பங்குச்சந்தையால் உரிமம் வழங்கப்பெற்ற பங்குத்தரகர்கள் (Stock Brokers) மூலமாக டிரேடிங் (Trading) செய்யலாம். இதனால் பங்குகளை வாங்க நினைக்கும் ஒருவர் பங்குதரகரை அனுக வேண்டும். இதற்காக முதலீட்டாளர் (Investor) பங்குதரகரிடம் ஒரு கணக்கை (Account) தொடங்க வேண்டும்.

ஆன்லைன் வர்த்தகம் என்றால் என்ன ? (What is meant by Online Trading?)

ஆன்லைன் வர்த்தகம், சமீபகாலத்தில் புகழ்ப்பெற்ற வர்தக முறை ஆகும். இம்முறையால் வர்த்தகம் செய்வதற்க்கு, நீங்கள் பங்குச்சந்தைக்கு நேரடியாக செல்ல வேண்டியதில்லை. இதனால் பங்குத்தரகரை அனுகாமல், நாம் இணையதளத்தின் (Internet) மூலமாக பங்குகளை வாங்கவோ, விற்க்கவோ முடியும்.

நாம் இணையதளத்தில் வர்த்தகம் செய்யும்பொழுது, ஆன்லைன் பங்குத்தர்கரை (Online Stock Broker) தொடர்பு கொள்வோம். ஆன்லைன் பங்குத்தரகர் நம் சார்பாக பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்வார். இதனால் நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு ஆன்லைன் வர்த்தகதிற்க்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டணமாக (Brokerage fees) செலுத்த வேண்டும்.

ஆன்லைன் வர்த்தகத்தின் பயன்கள் என்ன ? (Advantages of Online Trading)

உதாரணத்திற்கு, நீங்கள் ஐ.சி.ஐ.சி.ஐ (ICICI) வங்கியில் சேமிப்பு கணக்கு (Savings Account) வைத்துள்ளீர்கள் என்றும் எடுத்துக்கொள்வோம். அதே வங்கியில் ஆன்லைன் வர்த்தகம் செய்வதற்கு டிமேட் கணக்கு (Demat Account) ஒன்று தொடங்கியுள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இப்பொழுது, நீங்கள் வர்த்தகம் செய்வதற்கு தேவையான பணத்தை சேமிப்பு கணக்கிலிருந்து பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் ஆன்லைன் வர்த்தகத்தின் முலம் பெறப்படும் தொகையை சேமிப்பு கணக்கிற்கும் மாற்றிக்கொள்ளலாம்.

டிமேட் கணக்கு (Demat Account) என்றால் என்ன ?

வங்கிகளில் கணக்கு வைத்துக்கொள்வது போல (As like savings account), இதற்கு என்றே இருக்கும் சில நிறுவனங்களிடம் நாம் கணக்கை தொடங்க வேண்டும். அவர்கள் நமக்கு, வங்கி கணக்கெண் போல புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை (Identity card with photograph) எண் கொடுத்துவிடுவார்கள்.

டிமேட் கணக்கின் பயன்பாடுகள் ? (Use of Demat account)

மேலே கூறப்பட்ட டிரேடிங் (Trading) செய்ய விரும்பும்போது டிமேட் கணக்கு எண்னை பங்குத்தரகரிடம் (Stock Broker) கொடுத்தால் நாம் சுலபமாக பங்குகளை, வாங்கவோ விற்கவோ முடியும். இக்கணக்கால்,

விண்ணப்பங்களை பூர்த்தி செய்யவதை தவிர்க்கலாம். இதனால் நேரமும் மிச்சமாகும். (Need not fill any application form)
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்றடைவதற்க்கு தாமதமானால் ஏற்படும் இழப்புகளான டிவிடண்ட் (Dividend) மற்றும் போனஸ் (Bonus) போன்றவற்றை தவிர்க்கலாம்.
விண்ணப்பங்களை பதிவுவஞ்சலில் அனுப்ப வேண்டியதில்லை. (No need to mail any application form)


சரி, டிமேட் கணக்கு தொடங்குவதற்கு என்னென்ன தேவைப்படும் ? (What you need to open demat account)

ஏதேனுமொரு அடையாள அட்டை (Identity card). உதாரணத்திற்கு வாக்காளர் அடையாள (Voters ID-card) அட்டை, ஓட்டுனர் உரிமம் (Driver License) போன்றவற்றை பயன்படுத்தலாம்.
இருப்பிட சாண்றிதழ் (Address proof). உதாரணத்திற்கு குடும்ப அட்டையை பயன்படுத்தலாம் (Ration card).
பாண் அட்டை. (PAN Card)

பங்குச்சந்தை

Fundamental Analysis

அனாலிசசு என்றால் அலசுவது அதாவது ஒரு நிறுவனத்தின் செயல்பாடுகளை அலசுவது. ஒரு நிறுவனத்தின் நம்பத்தகுந்த செய்திகளை கொண்டு கணக்கிடபடும் பலவிதமான குறியீடுகள் தான் பண்டமன்டல் அனாலிசசு எனப்படும். ஒரு நிறுவனத்தின் திறன், செயல்பாடுகள் ஆகியவற்றை கணிக்க இந்த பண்டமன்டல் அனாலிசசு உதவும். இந்த Fundamental Analysis மூலம் கிடைக்கும் செய்திகளை கொண்டு பங்குகளை வாங்குவதன் மூலம் லாபம் பெறலாம் அல்லது நட்டத்திலிருந்து தப்பிக்கலாம். இந்த பண்டமன்டல் அனாலிசசு எவ்வாறு கணக்கிடப் படுகிறது என்று பார்ப்போம் வாருங்கள்…

EPS என்றால் என்ன ? (Earning per share)

ஒரு பங்கு ஈட்டும் லாபமே EPS என்று சொல்லப்பதுகிறது.

உதாரணமாக:

HPCL நிறுவனத்தின் ஓரு பங்கினை ரூ.150 கொடுத்து வாங்கியுள்ளார் என வைத்துக்கொள்வோம்.தற்போது அப்பங்கின் விலை ரூ.200 என்றால் அதன் EPS 50 ஆகும். இந்த EPS முறையை Fundamental Analysis-க்குப் பயன்படுத்துவார்கள்.

PE Ratio என்றால் என்ன?

ஓரு பங்கின் தற்போதைய விலையை அதன் EPS ஆல் வகுத்தால் கிடைக்கும் ஈவுத்தொகையே PE Ratio எனப்படும். உதாரணமாக, ZeeTel நிறுவனத்தின் ஒரு பங்கின் தற்போதைய விலை ரூ.200 அதன் EPS ரூ.25 என்று வைத்துக்கொண்டால்

PE Ratio = 200/25 = ரூ.8 ஆகும்.

பொதுவாக ஓரு பங்கின் PE Ratio குறைவாக இருந்தால் அப்பங்கு நல்லப் பங்கு, மேலும் அதை நம்பி வாங்கலாம். நன்றாக லாபம் ஈட்டும் பங்குகளை கண்டறிய Fundamental Analysis-ல் இதுவும் ஒரு முறையே. இதை மட்டுமே வைத்துக்கொண்டு ஓரு பங்கு சிறந்த பங்கு என்று கூற முடியாது.

Book Value என்றால் என்ன?

ஒரு நிறுவனத்தின் மொத்தப் பங்குகள், மற்றும் அந்நிறுவனதின் மொத்த சொத்துக்கள் இவற்றின் மொத்த மதிப்பே Book Value எனப்படும்.

பேலன்சு சீட் (Balance Sheet)

ஓரு நிறுவனத்தின் தற்போதைய நிலவரப்படி அதன் மொத்த பங்குகளின் மதிப்பு (Equity Shares) மற்றும் அந்நிறுவனத்தின் மொத்த சொத்துகளின் (Liability) மதிப்பு இவற்றை தெளிவாக விளக்கும் அறிக்கையே பேலன்சு சீட் எனப்படும். இது அந்நிறுவனத்தின் தற்போதைய செயல்பாட்டை தெளிவாக விளக்கும்.

நெட் வொர்த் (Net Worth)

ஓரு குறிப்பிட்ட தேதியில், ஒரு நிறுவனத்தின் மொத்த செலவுகள்,கடன்கள் ஆகியவகைகள் போக வருமானதில் எவ்வளவு மீதம் இருக்கிறதோ அதுதான் அந்நிறுவனத்தின் நெட் வொர்த் எனப்படும். இந்த நெட் வொர்த் எப்போதும் நிறை மதிப்பாக இருக்க வேண்டும்.

SWOT அனாலிசசு

ஒரு நிறுவனத்தின் Strength, Weakness ,Opportunities ,Threats போன்றவற்றை கணக்கிடடும் முறையே SWOT அனாலிசசு. இது நிறுவனத்தின் தற்போதைய நிலவரம், மற்றும் எதிர் காலத்தில் அது எவ்வாறு இருக்கும் என்று கணக்கிட உதவுகிறது.

டிவிடன்ட் ஈல்ட் (Dividend Yield)

இதை உங்களுக்கு வார்தைகளால் விளக்காமல், ஒரு சிறிய கணக்கின் மூலம் விளக்கினால் உங்களுக்கு எளிதாக புரியும். Wipro என்ற நிறுவனம் 500% டிவிடன்ட் கொடுத்துள்ளது என்றால்

பேஸ் வேல்யு (Face Value) = 1000

டிவிடன்ட் வேல்யு (Dividend Value) = 5000

ஒரு பங்கின் பிரீமியம் வேல்யு (Premium Value) = 2000

2000 க்கு லாபம் = 5000

1000 க்கு லாபம் = 2500

Projected Earning Growth (PEG)

பங்குச்சந்தையில் கடந்த காலத்தை அலசுவதைவிட, எதிர் காலத்தில் ஒரு நிறுவனம் மற்றும் அதன் பங்குகள் எவ்வாறு இருக்கும் என்பதை கணிப்பதன் மூலம் நிறைய லாபம் ஈட்டலாம் அல்லது நட்டத்தை தவிர்க்கலாம். இது போன்ற பல வழிகளில் ஒன்றுதான் PEG

TCS-ன் PEG அடுத்த வருடம் 15% சதவீதம் என்றால். PEG ?

PE Ratio = 30 என்றால்

PEG = 30 / 15

மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன?

மியூசுவல் ஃபண்ட்ஸ் (Mutual Funds)

மியூச்சுவல் ஃபண்ட் என்பது தமிழில் பரஸ்பர நிதிகள் என்று அழைக்கப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்டும் பங்குச்சந்தையை (Share market) போன்றதுதான். ஆனால், இதில் ஈடுபடுவதற்கு பங்குச்சந்தையைப் பற்றி அதிகம் தெரிந்திருக்க வேண்டியதில்லை. ஏன் ? எப்படி என்கிறீர்களா?…. நமக்குதானே தெரியாது, ஆனால் அதைப் பற்றி தெரிந்தவர்களிடம் கொடுத்து பங்குச்சந்தையில் முதலீடு செய்ய சொன்னால், நன்றாகத்தானே இருக்கும்!. அப்படிச் செய்தால், அதுதான் மியூச்சுவல் ஃபண்ட்.

இன்னும் சற்று விளக்கமாக சொல்லப்போனால், மியூச்சுவல் ஃபண்டை ஒரு நிறுவனமாக எடுத்துக் கொள்வோம். இதில் நம்மை போல பல முதலீட்டாளர்களை ஒன்று சேர்த்து, அதன் மூலம் திரட்டப்பட்ட தொகையை பங்குச்சந்தையில் முதலீடு செய்வார்கள். இதனால் ஒவ்வொரு முதலீட்டாளருக்கும், அவரவர் கொடுத்த தொகைக் ஏற்ப யூனிட்டுகள் (Units) எனப்படும் அலகுகளை கொடுத்து விடுவார்கள். யூனிட் என்றால் என்ன என்பதை பார்ப்பதற்கு முன், நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சில விசயங்கள்.

மியூட்சுவல் ஃபண்ட் ஆஃபர் டாக்குமண்ட் என்றால் என்ன ? (Mutual Funds Offer Document)

மியூட்சுவல் பஃண்ட் நிறுவனங்கள், தாங்கள் திரட்டிய நிதியை (Funds) பங்குச்சந்தையில் எந்தெந்த துறைகளில் (Sectors) முதலீடு செய்வார்கள் என்பதை பற்றியும், அவ்வாறு முதலீடு செய்யும்பொழுது எவ்வளவு வட்டி (Interest) கிடைக்கும் என்பதையும் பற்றியும், முதலீட்டை சார்ந்த விதிமுறைகளை (Terms & Conditions) பற்றியும் விளக்கும் தொகுப்பே “மியூட்சுவல் ஃபண்ட் ஆஃபர் டாக்குமண்ட்” ஆகும். எந்த ஒரு மியூட்சுவல் ஃபண்ட்-யில் முதலீடு செய்வதற்கு முன், அதனுடைய ஆஃபர் டாக்குமண்டை படித்து புரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

மியூட்சுவல் ஃபண்ட் எதில் முதலீடு செய்யப்படுகிறது ? (Where do mutual funds invest?)

மியூச்சுவல் ஃபண்ட் எந்த துறையில் முதலீடு செய்வார்கள் என்பதை தெரிந்து கொள்ள, அப்ஃபண்டின் ஆஃபர் டாக்குமண்டில் தெளிவாக விளக்கப்பட்டிருக்கும்.

மியூட்சுவல் ஃபண்ட் யூனிட் (அலகு) என்றால் என்ன ? (What is meant by mutual fund units?)

யூனிட் என்பது தமிழில் அலகு எனப்படும். யூனிட்கள் என்பது பங்குகளைப் (shares) போலதான்.

சரி ! யூனிட்களை எப்பொழுது வாங்கலாம் ?. (When to purchase units)

யூனிட்களை நாம் எப்போது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம், மியூச்சுவல் பஃண்ட் நிறுவனங்கள் அதை முதன் முதலாக வெளியிடும் பொழுதோ அல்லது அதற்கு பிறகு கூடவோ வாங்கிக் கொள்ளலாம். யூனிட்கள் (units) முதன் முதலாக வெளியிடும் பொழுது முகப்பு விலைக்கு (Face value) கிடைக்கும். அந்த நிதியினைக் (funds) கொண்டு வாங்கிய பங்குகளின் விலை ஏற்ற இறங்கங்களை பொறுத்து யூனிட்களின் விலை மாறுபடும்.

அடிக்கும் பெண்கள்... அலறும் ஆண்கள்! இடிக்(தாய்)குலங்கள்!

பெண்களை ஆண்கள் அடிக்கும் வீட்டு வன்முறைக்கு எதிராக குரல் கொடுத்தது போக, தற்போது பின்னியெடுக்கும் பெண்களிடமிருந்து ஆண்களை காப்பாற்ற குரல்கள் எழ ஆரம்பித்துள்ளன.

மற்ற நாடுகள் எப்படியோ...? ஆனால் இந்தியா ஆணாதிக்க சமூகத்தைக் கொண்ட தேசம் என்றே பெண்ணுரிமைவாதிகளாலும், முற்போக்குவாதிகளாலும் வர்ணிக்கப்படுவதுண்டு!

ஆனால் அத்தகைய தேசத்திலும் சமீபகாலமாகவே பொய் புகார் கொடுத்து, கணவனை வரதட்சணை வழக்கில் உள்ளே தள்ளும் போக்கு ஒருபுறம் அதிகரித்துக்கொண்டிருக்க, மறுபுறம் பெண்களை பாதுகாக்க நிறைவேற்றப்பட்ட வீட்டு வன்முறைக்கு எதிரான சட்டத்திலும், ஏராளமான அப்பாவி ஆண்கள் கம்பி எண்ண வைக்கப்படுவதும் ஆங்காங்கே நடந்தேறிக்கொண்டிருக்கின்றன.

இதுபோக வழக்கு, வக்கீல் என்று இழுத்துவிடாமல், ' நானே டீல் பண்ணிக்கிறேன்' பேர் வழி என்று ஆண்களை பெண்கள் அடித்து துவைக்கும் சம்பவங்களும் ஆங்காங்கே அரங்கேறிக்கொண்டுள்ளன.

இந்நிலையில்தான் "பொறுத்தது போதும்; பொங்கி எழு தோழா!" என்ற ரீதீயில் ஆண்களின் உரிமைகளை பாதுகாக்கவும், ஆண்களை நியாயம் இல்லாமல் தண்டிக்கும், பெண்களிடம் இருந்து பாதுகாக்கவும் "ஆண்கள் உரிமை பாதுகாப்பு சங்கம்" என்ற புதிய சங்கம் சென்னையில் சமீபத்தில் துவக்கப்பட்டது.

இந்த சங்கம் துவக்கப்பட்டது தான் தாமதமாம். நான் முந்தி, நீ முந்தி என்று அடித்துபிடித்து ஆங்காங்கே ஆண்கள் ஆர்வத்துடன் இச்சங்கத்தில் தங்களை சேர்த்து கொண்டு வருகிறார்களாம்.

இதுபோக உலகம் முழுவதும் அடிவாங்கிக்கொண்டிருக்கும் (பெண்களிடம்தான்!) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆண்களையும், உறுப்பினர்களாக சேர்ப்பதற்கான முயற்சி வேறு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அக்கம்பக்கம் பார்த்தபடியே ( அவ்வளவு பயம்... வீட்டம்மா மீது!) கிசுகிசுப்பாக கூறுகிறார் மேற்படி சங்கத்தை சேர்ந்த நிர்வாகி ஒருவர்!

சரி இந்த கூத்து தமிழகத்தில் மட்டும்தானா என்றால். அதுதான் இல்லை. டெல்லி, நாக்பூர் போன்ற நகரங்களிலெல்லாம் கூட ஆர்ப்பாட்டம், பேரணி போன்றவற்றை நடத்தி ஆண்கள் தங்களது உள்ளக்குமுறல்களை கொட்டியிருந்தனர்.

பெண்களுக்கு அதிகாரம் கொடுத்து ஆண்களை அதிகாரமற்றவர்களாக மாற்றி விட்டனர்; "ஆண்கள் என்ன ஏ.டி.எம்., மிஷின்களா?" என்றெல்லாம் கூட ஆவேச முழக்கங்கள் வெளிப்பட்டன.

“கணவர் மீது பெண்கள் புகார் கொடுத்தால் 498 ஏ பிரிவின் கீழ் ஆண்கள் தண்டிக்கப்படுகின்றனர். எந்த விசாரணையும் ஆண்களிடம் நடத்தப்படுவதில்லை. இந்த சட்டம் பெண்களுக்கு ஆதரவானது என்பதை விட மனைவிகளுக்கான சட்டம் என்று தான் சொல்ல வேண்டும்" என்றெல்லாம் வேறு புலம்பல்கள் கிளம்பின.

பாவம்! அவங்களும் எவ்வளவு காலத்திற்குத்தான் வலிக்காத மாதிரியே நடிப்பாங்க...?! அதான் கிளம்பிட்டாங்க சங்கமும், கொடியுமாக...!

சரி இங்கத்தான் இப்படி புலம்பிக்கிட்டு இருக்காங்க என்று நினைத்தால், தற்போது ஆண்களின்
அலறல் சத்தம் வருவது இங்கிலாந்திலிருந்து...!

பி.எச்.டி வாங்கும் அளவுக்கு அப்படி ஒரு நுணக்கமாம் அந்த ஊர் பெண்கள் அடிக்கும் அடியில்!

நம்ம ஊரை மாதிரியே பொறுத்து பொறுத்து பார்த்து, கடைசியில் வெட்கத்தை விட்டு யாரோ ஒருவர், நண்பரிடம் இது குறித்து புலம்ப, அதைக்கேட்ட அந்த நண்பர், " உன் வீட்டிலுமா?" என கேட்க, "என்னது உன் வீட்டிலேயுமாவா... அப்ப நீயும் நம்ம கேஸ்தானா?" என வடிவேல் ரேஞ்சுக்கு கேட்க, இப்படியான குமுறல்கள் புகார்களாக உருவெடுத்து காவல்நிலையங்களை தட்டும் போக்கு சமீபகாலமாக அதிகரித்து வருகிறதாம்!

இங்கிலாந்து முழுவதுமே பரவலாக இவ்வாறு வீட்டு வன்முறை தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில், பாதிக்கப்பட்டவர்களில் 10 பேரில் 4 பேர் ஆண்களாக இருப்பது சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பொதுவாகவே வீட்டு வன்முறையால் உண்மையில் பாதிக்கப்படுவது பெண்கள்தான் என்ற அழுத்தமான நம்பிக்கை காவல்துறையினரிடம் உள்ளதாகவும், இதன் காரணமாகவே வீட்டு வன்முறையால் - அதாவது தனது மனைவி அடிப்பதை - பாதிக்கப்படுவது குறித்து ஆண்கள் புகார் தெரிவித்தால் அவர்களுக்கு நீதித்துறையிலும், காவல் துறையிலும் உரிய நியாயமோ, நீதியோ கிடைப்பதில்லை என்று கூறுகிறது அந்த ஆய்வறிக்கை!

கடந்த 2008 - 09 ஆம் ஆண்டுகளில் மட்டும் வீட்டு வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுமார் 41,000 ஆண்கள் வழக்கு தொடர்ந்துள்ளனராம்.அதே சமயம் பெண்கள் தொடர்ந்த வழக்குகளின் எண்ணிக்கை 2,700 தானாம்.

இதன் மூலம் இங்கிலாந்தில் வீட்டு வன்முறைக்கு பாதிக்கப்படுபவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஆண்களே என்பது அம்பலமாகியுள்ளது.

மேலும் குடும்ப வன்முறை தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகளிடத்தில், குடும்ப வன்முறையால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான் என்ற எண்ணம் ஆழமாக வேரூன்றி இருப்பதால், ஆண்களை அடித்து துன்புறுத்தும் மனைவிகள், அவர்களுக்கு எதிரான வழக்குகளிலிருந்து எளிதில் தப்பித்துவிடுகிறார்கள்.

இதனால் நீதிபதிகளிடம் காணப்படும் இந்த எண்ணத்தை அவர்களது பயிற்சி காலத்தின்போதே அகற்றும் வகையில் பயிற்சி அளிக்க வேண்டும் என்றும், இழைக்கப்படுகிற குற்றத்தை பாலினத்தை அடிப்படையாகக் கொண்டு அளவிடுவதை மாற்றி, சமமாக கருதும் வகையில் நீதிபதிகள் மற்றும் நீதிமன்றங்களுக்கான நெறிமுறைகள் மற்றும் சட்டவிதிகளில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்றும் வலியுறுத்துகிறது இங்கிலாந்தில் தோன்றியுள்ள குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் ஆண்களுக்கு ஆதரவான சங்கத்தை சேர்ந்த மார்க் புரூக்ஸ் என்பவர்!

மார்க் புரூக்ஸ் சார்ந்துள்ள சங்கத்தைப்போன்றே மேலும் பல சங்கத்தைச் சேர்ந்தவர்களும் இதே ரீதியில் குரல் எழுப்பத் தொடங்கியிருப்பதால், இடிந்துபோய் இருக்கிறார்களாம் இங்கிலாந்தின் இடிக்(தாய்)குலங்கள்!

நோ‌ய்களை‌ப் பர‌ப்புவ‌தி‌ல் கொசு‌வி‌ற்கு இர‌ண்டா‌ம் இட‌ம்

நோ‌ய்க‌ள் ப‌ல்வேறு ‌வித‌ங்க‌ளி‌ல் ம‌னித‌ர்களை‌த் தா‌க்கு‌கிறது. த‌ண்‌ணீ‌ர், கா‌ற்று, உணவு, பழ‌க்க வழ‌க்க‌ங்க‌ள் என பல வகைக‌ளி‌ல் நோ‌ய்களை நா‌ம் உடலு‌க்கு‌ள் செ‌ல்ல அனும‌தி‌க்‌கிறோ‌ம்.

பொதுவாக நோ‌ய்களை பர‌ப்புவ‌தி‌ல் த‌ண்‌ணீ‌ர்தா‌ன் முத‌லிட‌ம் ‌பிடி‌க்‌கிறது. இர‌ண்டாவது இட‌த்தை கொசு ‌பிடி‌த்து‌ள்ளது.

டெ‌ங்கு கா‌ய்‌ச்ச‌ல், ம‌ஞ்ச‌ள் காமாலை போ‌ன்ற பய‌ங்கர ‌வியா‌திகளை கொசு‌க்க‌ள் பர‌ப்பு‌கி‌ன்றன. இது ம‌ட்டும‌ல்லாம‌ல் ப‌ல்வேறு ‌விதமான வைர‌ஸ்களை பர‌ப்புவத‌ன் மூல‌ம் வேறு ‌சில ‌வியா‌திக‌ள் தொ‌ற்றவு‌ம் கொசு‌க்களே‌க் காரணமாகவு‌ம் உ‌ள்ளன.

கொசு‌க்களா‌‌ல் ம‌‌னித இன‌ம் ப‌ல்வேறு இ‌ன்ன‌ல்களை அனுப‌வி‌த்து வரு‌கிறது. உல‌கி‌ல் 40 ‌விழு‌க்கா‌ட்டு ம‌க்களு‌க்கு டெ‌ங்கு கா‌ய்‌ச்ச‌ல் கொசு‌க்க‌ள் மூலமாக‌ப் பரவு‌கிறது.

இதுபோ‌ன்ற அ‌தி பய‌ங்கரமான உ‌யி‌ரின‌மான கொசுவை ஒ‌ழி‌ப்பத‌ற்கான ப‌ல்வேறு ஆ‌ய்வுக‌ள் தொட‌ர்‌ந்து நட‌ந்து வரு‌கிறது எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

தாய் பால் கொடுப்பது மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது

தாய் பால் கொடுப்பது மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது

இந்த நாட்டில் பிறந்த குழந்தைகளுக்கு, 6 மாத காலம்வரை தாய்ப்பால் கொடுக்கத்தவறின, 60 % பெண்களுக்கு இதோ ஒரு விழிப்பணர்ச்சி. ஒரு வருடம் வரை தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தாங்களாகவே, தங்களுக்கு ஏற்படும் மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் – க்கான ஆபத்தினை குறைக்கின்றனர்.
தாய்பால் கொடுப்பது, குழந்தை மற்றும் தாய் இருவருக்கும் பயனலிக்கிறது என உதாரணங்கள் கருத்துரைக்கிறது, தாய்பால் கொடுக்காத பெண்களைவிட, தங்கள் குழந்தைகளுக்கு ஒரு வருடத்திற்குமேல் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களில், இதய நோய் ஏற்படும் சாத்தியம் 10 % குறைவு என ஆராய்சியாளார்கள் கண்டறிந்துள்ளனர். மேலும், தாய்பால் கொடுப்பது, உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் ஆபத்தினை 12 % - உம் மற்றும், சர்க்கரை நோய் மற்றும் உயர் கொலஸ்டிரால் ஏற்படுவதை சுமார் 20 % -உம் குறைக்கிறது எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
இக்கண்டுபிடிப்புகள் அப்ஸ்டிட்ரிக்ஸ் மற்றும் கைணகாலேஜ் எனப்படும் மாத இதழில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் குழந்தை பெற்றெடுக்கும் 26 மில்லியன் பெண்களில், 20 மில்லியன் பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு, கொடுக்கப்படவேண்டிய அளவு தாய்பால் நடைமுறையை, 6 மாத கால அளவிலும் கொடுப்பதில்லை. சுமார் 24 % பெண்கள் மாத்திரம் பரிந்துரைக்கப்பட்டுள்ளபடி, தங்கள் குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திலிருந்து, தாய்ப்பால் கொடுக்கத்தொடங்குகின்றனர்.
90 % பெண்கள் அப்படி செய்தால், ஒவ்வொரு வருடமும், 2.5 இலட்சம் குழந்தைகள் இறப்பதிலிரிந்து பாதுகாக்கபடுவர், என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். மறுபக்கத்தில், 6 மாதங்கள் வரை பிறந்த குழந்தைகளுக்கு தாய்பால் மாத்திரம் கொடுக்கப்படவேண்டும் என பறிந்துரைக்கப்பட்டு இருப்பினும், நான்கில் ஒரு பங்கு பெண்கள் மாத்திரமே அப்படிச்செய்கின்றனர்.
இந்த ஆய்வுப்படிப்பு, தாய்பால் கொடுப்பது தாய் மற்றும் குழந்தை இருவரையும் உடல் நலமிக்கவராக ஆக்குகிறது என்று, இந்திய தாய்பால் மேம்பாடு பின்னல் வலை, தேசிய ஒருங்கிணைப்பாளர் டாக்டர். அருண் குப்தா கூறுகிறார்,.
அவர் மேலும் கூறுகையில், இந்தியப்பெண்கள் தாய்பால் கொடுப்பதை இப்பொழுதுள்ள 25 % - த்திலிருந்து 100 % -த்திற்க்கு உயர்த்தினால், பெண்களில் இதயஇரத்தநாள நோய்கள் ஏற்படுவதை குறைக்கலாம்.. துரதுஷ்டவசமாக இந்தியாவில் 1992 – லிருந்தே தாய்பால் கொடுக்கும் நிலை உயரவில்லை.
பிட்ஸ்பர்க் பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் 1994 –லில், 1,39,681 மாதவிடாய் நின்ற பெண்களிடம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் பெண்கள் நீண்ட நாட்கள் தாய்பால் கொடுத்ததால், அவர்களுக்கு மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் மற்றும் இதய இரத்தநாள நோய்கள் ஏற்படும் ஆபத்து குறைகிறது என்று கூறுகின்றனர்.
இதய நோயால் பெண்கள் இறப்பது, ஒரு முக்கிய காரணமாகும், எனவே நம்மை நாமே பாதுகாத்துக்கொள்வது, மிக முக்கியமான ஒன்றாகும். தாய்பால் கொடுப்பது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு மிக அவசியம் என்பதை பல வருடங்களாக நாம் அறிந்திருக்கிறோம். அப்படி தாய்பால் கொடுப்பது தாயின் உடல் நலத்திற்கும் நல்லது என்று இப்போது நாம் அறிகிறோம் என பிட்ஸ்பர்க் பல்கலைகழக மருத்துவம், எபிடிமியாலாஜீ மற்றும் அப்ஸ்டெட்ரிக்ஸ் துறையில் துணை பேராசிரியராக உள்ள எலியாநோர் பிம்லா ஷ்வார்ஸ் என்பவர் கூறுகிறார்.
தாய்பால் கொடுப்பதின் பயன் நீண்ட நாட்களுக்கு வரும் மற்றும் ஒரு பெண் தான் கடைசி தாய்பால் கொடுத்ததிலிருந்து சுமார் 35 ஆண்டுகள் நலமுடன் கடந்து சென்றுள்ளார் என டாக்டர். ஷ்வார்ஸ் மற்றும் அவருடன் பணிபுரியும் குழுவினர் கண்டறிந்துள்ளனர்.
தாய்பால் கொடுப்பது, உடலில் சேரும் கொழுப்பை குறைப்பதின் மூலம், இதய நோய் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது என்று ஆய்வுகள் கருத்துரைக்கின்றன. மேலும், தாய்பால் கொடுக்கும் போது தூண்டப்பட்டு வெளிப்படும் ஹார்மோன்களும் முக்கிய பங்கு வகிக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
இதற்கு முந்தைய ஆய்வில், பிறந்தவுடன் தாய்பால் உட்கொள்ளும் குழந்தைகள், தாய்பால் உட்கொள்ளாத குழந்தைகளைவிட சுறுசுறுப்பானவர்களாக இருப்பார்கள், என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
6.5 வயதுக்கு உட்பட்ட, 17,046 குழந்தைகளில், பாலூட்டுதல் ஏற்படும் அறிவுக்கூர்மை மேல் மேற்கொண்ட உலகின் மிகப்பெரிய ஆய்வில், பிறந்தது, முதல் ஒரு வருட காலம் வரை தாய்பால் மாத்திரம் கொடுக்கப்பட்ட பிள்ளைகள் அதிகளவு நுண் அறிவு ஈவு (ஐ க்யூ) கொண்டவர்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட காக்னிடிவ் (யோசித்தல், கற்றல் மற்றும் ஞாபக சக்தி) வளர்ச்சி உள்ளது என்பதை கண்டறிந்துள்ளனர்.

திருமண நட்சத்திர பொருத்தம் - பெண்களுக்கு

திருமண நட்சத்திர பொருத்தம் - பெண்களுக்கு
வ.எண்
பெண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்
1.
அஸ்வனி பரணி, திருவாதிரை, பூசம், பூராடம், திருவோணம், சதயம்
2.
பரணி புனர்பூசம், உத்திராடம், ரேவதி, அஸ்வனி
3.
கார்த்திகை 1 ம் பாதம் சதயம்
4.
கார்த்திகை 2, 3, 4 ம் பாதங்கள் சதயம்
5.
ரோகிணி மிருகசீரிஷம் 1, 2, புனர்பூசம் 4, உத்திரம் 1, பூரட்டாதி, பரணி
6.
மிருகசீரிஷம் 1, 2 ம் பாதங்கள் உத்திரம் 1, உத்திராடம் 2, 3, 4, திருவோணம், சதயம், அஸ்வனி, ரோகிணி
7.
மிருகசீரிஷம் 3, 4 ம் பாதங்கள் திருவாதிரை, உத்திரம், அஸ்தம், மூலம், உத்திராடம் 2, 3, 4, சதயம், பரணி
8.
திருவாதிரை பூரம், பூராடம், பரணி, மிருகசீரிஷம் 3, 4
9.
புனர்பூசம் 1, 2, 3 ம் பாதங்கள் அவிட்டம் 3, 4, உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4
10.
புனர்பூசம் 4 ம் பாதம் பூசம், சுவாதி, அவிட்டம் 1, 2, உத்திரட்டாதி, மிருகசீரிஷம்
11.
பூசம் ஆயில்யம், அஸ்தம், சுவாதி, விசாகம் 1-2-3, பூரட்டாதி 4, ரேவதி, திருவாதிரை, புனர்பூசம்
12.
ஆயில்யம் சித்திரை, அவிட்டம் 1, 2
13.
மகம் சதயம்
14.
பூரம் உத்திரம் 1, பூரட்டாதி 1, 2, 3, அஸ்வனி
15.
உத்திரம் 1 ம் பாதம் சுவாதி, அனுஷம், பரணி, ரோகிணி, பூசம், பூரம்
16.
உத்திரம் 2, 3, 4 ம் பாதங்கள் அனுஷம், பூராடம், ரோகிணி, பூசம், பூரம்
17.
அஸ்தம் பூராடம், உத்திராடம் 1, ரேவதி, மிருகசீரிஷம், பூரம், ஆயில்யம், கார்த்திகை 2, 3, 4
18.
சித்திரை 1, 2 ம் பாதங்கள் கார்த்திகை 2, 3, 4, மகம்
19.
சித்திரை 3, 4 ம் பாதங்கள் கார்த்திகை 1, மகம்
20.
சுவாதி பூராடம், அவிட்டம் 1, 2, பரணி, மிருகசீரிஷம் 3, 4, பூரம், புனர்பூசம்
21.
விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள் அவிட்டம் 1, 2, சித்திரை 3, 4
22.
விசாகம் 4 ம் பாதம் அவிட்டம், சதயம், சித்திரை
23.
அனுஷம் கேட்டை, சதயம், பூரட்டாதி 1, 2, 3, ரோகிணி, புனர்பூசம், ஆயில்யம், அஸ்தம், சுவாதி
24.
கேட்டை கார்த்திகை 2, 3, 4
25.
மூலம் உத்திரட்டாதி, பூரம், சுவாதி, பூராடம்
26.
பூராடம் பூரட்டாதி, புனர்பூசம் 1, 2, 3, உத்திரம், ரேவதி
27.
உத்திராடம் 1 ம் பாதம் உத்திரட்டாதி, திருவாதிரை, பூரம், பூராடம், அஸ்தம், சுவாதி
28.
உத்திராடம் 2, 3, 4 ம் பாதங்கள் உத்திரட்டாதி, பரணி, பூசம், அஸ்தம், அனுஷம், பூராடம்
29.
திருவோணம் அவிட்டம் 1, 2, பூரட்டாதி 4, பரணி, புனர்பூசம் 4, உத்திரம் 2, 3, 4, சித்திரை, கேட்டை, பூராடம்
30.
அவிட்டம் 1, 2 ம் பாதங்கள் கார்த்திகை 1, மூலம்
31.
அவிட்டம் 3, 4 ம் பாதங்கள் கார்த்திகை, சதயம், மகம், மூலம்
32.
சதயம் சித்திரை 3, 4, விசாகம், அவிட்டம் 3, 4
33.
பூரட்டாதி 1, 2, 3 ம் பாதங்கள் மிருகசீரிஷம் 1, 2, சுவாதி, அனுஷம்
34.
பூரட்டாதி 4 ம் பாதம் உத்திரட்டாதி, மிருகசீரிஷம், அனுஷம்
35.
உத்திரட்டாதி ரேவதி, திருவாதிரை, ரோகிணி, புனர்பூசம் 1, 2, 3, அஸ்தம், திருவோணம், பூரட்டாதி
36.
ரேவதி மிருகசீரிஷம், புனர்பூசம் 1, 2, 3, உத்திரம் 2, 3, 4, அனுஷம், உத்திரட்டாதி

திருமண நட்சத்திர பொருத்தம் - ஆண்களுக்கு

திருமண நட்சத்திர பொருத்தம் - ஆண்களுக்கு
வ.எண்
ஆண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்
1.
அஸ்வனி பரணி, மிருகசீரிஷம், புனர்பூசம், பூரம்
2.
பரணி ரோகிணி, சுவாதி, உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அஸ்வனி
3.
கார்த்திகை 1 ம் பாதம் சித்திரை 3, 4, அவிட்டம் 1, 2
4.
கார்த்திகை 2, 3, 4 ம் பாதங்கள் அஸ்தம், சித்திரை 1, 2, கேட்டை, அவிட்டம் 3, 4
5.
ரோகிணி மிருகசீரிஷம் 1, 2, உத்திரம், அனுஷம், உத்திரட்டாதி
6.
மிருகசீரிஷம் 1, 2 ம் பாதங்கள் புனர்பூசம் 4, அஸ்தம், பூரட்டாதி, ரேவதி, ரோகிணி
7.
மிருகசீரிஷம் 3, 4 ம் பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம், அஸ்தம், சுவாதி, பூரட்டாதி 4, ரேவதி
8.
திருவாதிரை பூசம், உத்திராடம் 1, உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4
9.
புனர்பூசம் 1, 2, 3 ம் பாதங்கள் பூசம், சுவாதி, பூராடம், உத்திரட்டாதி, ரேவதி
10.
புனர்பூசம் 4 ம் பாதம் பூசம், அனுஷம், பரணி, ரோகிணி
11.
பூசம் உத்திரம், அஸ்வனி, புனர்பூசம் 4
12.
ஆயில்யம் அஸ்தம், அனுஷம், பூசம்
13.
மகம் சித்திரை, அவிட்டம் 3, 4
14.
பூரம் உத்திரம், அஸ்தம், சுவாதி, உத்திராடம் 1, திருவோணம்
15.
உத்திரம் 1 ம் பாதம் பூராடம், ரோகிணி, மிருகசீரிஷம், பூரம்
16.
உத்திரம் 2, 3, 4 ம் பாதங்கள் பூராடம், திருவோணம், ரேவதி
17.
அஸ்தம் உத்திராடம், உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4
18.
சித்திரை 1, 2 ம் பாதங்கள் விசாகம் 4, திருவோணம், ஆயில்யம்
19.
சித்திரை 3, 4 ம் பாதங்கள் விசாகம், திருவோணம், சதயம், ஆயில்யம்
20.
சுவாதி அனுஷம், பூரட்டாதி 1, 2, 3, புனர்பூசம் 4, பூசம்
21.
விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள் சதயம், ஆயில்யம்
22.
விசாகம் 4 ம் பாதம் சதயம்
23.
அனுஷம் உத்திராடம் 2, 3, 4, பூரட்டாதி, ரேவதி, உத்திரம்
24.
கேட்டை திருவோணம், அனுஷம்
25.
மூலம் அவிட்டம், கார்த்திகை 1, மிருகசீரிஷம் 3, 4
26.
பூராடம் உத்திராடம், திருவோணம், அஸ்வனி, திருவாதிரை, சுவாதி, உத்திரம் 2-3-4, அஸ்தம்
27.
உத்திராடம் 1 ம் பாதம் பரணி, மிருகசீரிஷம் 3, 4, அஸ்தம், பூராடம்
28.
உத்திராடம் 2, 3, 4 ம் பாதங்கள் பரணி, மிருகசீரிஷம் 1, 2
29.
திருவோணம் உத்திரட்டாதி, அஸ்வனி, மிருகசீரிஷம் 1, 2, அனுஷம்
30.
அவிட்டம் 1, 2 ம் பாதங்கள் புனர்பூசம் 4, ஆயில்யம், சுவாதி, விசாகம், திருவோணம்
31.
அவிட்டம் 3, 4 ம் பாதங்கள் சதயம், புனர்பூசம் 1, 2, 3, விசாகம் 4
32.
சதயம் கார்த்திகை, மிருகசீரிஷம், மகம், விசாகம் 4, அனுஷம், அவிட்டம் 3, 4
33.
பூரட்டாதி 1, 2, 3 ம் பாதங்கள் உத்திரட்டாதி, ரோகிணி, பூரம், அனுஷம், பூராடம்
34.
பூரட்டாதி 4 ம் பாதம் உத்திரட்டாதி, பூராடம், திருவோணம், ரோகிணி, பூசம்
35.
உத்திரட்டாதி ரேவதி, புனர்பூசம், உத்திரம் 2, 3, 4, உத்திராடம், பூரட்டாதி 4
36.
ரேவதி பரணி, பூசம், அஸ்தம், பூராடம், உத்திரட்டாதி

திருமண நட்சத்திர பொருத்தம்....1

குறிப்பிட்ட நாள்மீன் கூட்டம், அல்லது நட்சத்திரம் என்பது, இராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். ஒவ்வொரு இராசி வீட்டையும் தமிழில் ஓரை என்பர். ஓர் நட்சத்திரம் என்பது பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பாக வரும் போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் நிற்கும் நாள்மீன்கூட்டப் பிரிவை (நட்சத்திரப் பிரிவை) இப் பெயர் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் இராசிச் சக்கரத்தில் ரேவதி நட்சத்திரப் பிரிவில் இருந்தால் அந்த நேரத்துக்குரிய நட்சத்திரம் ரேவதி ஆகும். எனவே வானில் திங்கள் நிற்கும் நாள்மீன் கூட்டம், அப்பொழுதுக்கான நட்சத்திரம் என்பர்.
முழு இராசிச் சக்கரம் (360 பாகைகள்) 27 நட்சத்திரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளதால் ஒரு நட்சத்திரப்பிரிவு 13.33 பாகை அளவுள்ளது.13.33 பாகை என்பது 13o, 20 பாகைத்துளி (நிமிடவளைவுகள்). (1 பாகை = 60 பாகைத்துளி (நிமிடவளைவுகள்)).
ஒவ்வொரு நட்சத்திரமும் 4 பாதங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை குறிப்பிட்ட நட்சத்திரத்தின் முதலாம் பாதம், இரண்டாம் பாதம், மூன்றாம் பாதம், நான்காம் பாதம் எனக் குறிப்பிடப் படுகின்றன.ஒவ்வொரு பாதமும் 3 பாகை, 20 பாகைத்துளிகள் (நிமிடவளைவுகள்). இதன் மூலம் இராசிச் சக்கரம் (ஓரை வட்டம்) 27 X 4 = 108 பாதங்களாக வகுக்கப்படுகின்றன. இதிலிருந்து இராசிச் சக்கரத்திலுள்ள 12 இராசிகள் (ஓரைகள்) ஒவ்வொன்றும் 9 பாதங்களை அல்லது 2-1/4 நட்சத்திரங்களைக்கொண்ட 30 பாகைகளை அடக்கியுள்ளது.
கீழேயுள்ள அட்டவணை நட்சத்திரங்களையும், பாதங்களையும், அவற்றோடொத்த இராசிகளையும் காட்டுகின்றது.


நட்சத்திரம் பாதம் இராசி
1. அச்சுவினி முதலாம் பாதம் மேடம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
2. பரணி முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
3. கார்த்திகை முதலாம் பாதம்
இரண்டாம் பாதம் இடபம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
4. ரோகிணி முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
5. மிருகசீரிடம் முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம் மிதுனம்
நான்காம் பாதம்
6. திருவாதிரை முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
7. புனர்பூசம் முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம் கர்க்கடகம்
8. பூசம் முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
9. ஆயிலியம் முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
10. மகம் முதலாம் பாதம் சிங்கம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
11. பூரம் முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
12. உத்தரம் முதலாம் பாதம்
இரண்டாம் பாதம் கன்னி
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
13. அத்தம் முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
14. சித்திரை முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம் துலாம்
நான்காம் பாதம்
15. சுவாதி முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
16. விசாகம் முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம் விருச்சிகம்
17. அனுஷம் முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
18. கேட்டை முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
19. மூலம் முதலாம் பாதம் தனு
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
20. பூராடம் முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
21. உத்திராடம் முதலாம் பாதம்
இரண்டாம் பாதம் மகரம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
22. திருவோணம் முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
23. அவிட்டம் முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம் கும்பம்
நான்காம் பாதம்
24. சதயம் முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
25. பூரட்டாதி முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம் மீனம்
26. உத்திரட்டாதி முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
27. ரேவதி முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்

''காமராஜர் யாரு தெரியுமா..?'' ''விஜய் தெரியுமா..?''






ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் இந்தியாவிலேயே முதன் முதலில் தனது சொத்துக்கணக்கை பகிரங்கமாக வெளியிட்டவர், நாமக்கல் மாவட்ட கலெக்டரான சகாயம்தான்! 'எளிமையானவர், மக்கள் எளிதில் சந்திக்கக் கூடியவர்' என்று சொல்லப்படும் சகாயத்தை சந்திக்க நாமக்கல் சென்றிருந்தோம்.

''அதிகாரிங்க யாருக்கும் தகவல் சொல்லாம சர்ப்ரைஸா சில இடங்களுக்கு நீங்க விசிட் போனா நல்லா இருக்குமே சார்...'' என்று நாம் சொல்ல... சற்றே யோசித்தவர்... ''அவ்வப்போது செய்வதுதான். வாங்களேன், இப்பவும் போய்ப் பார்க்கலாம்!'' என்று தயாரானார். அடுத்த சில நிமிடங்களில் கலெக்டர் சகாயம், அவரது உதவியாளர் மாதேஸ்வரனுடன் கார் கிளம்பியது. நாமும்தான் இலவச இணைப்பாக! ''எங்கே முதல்ல போகலாம்..? நீங்களே சொல்லுங்க...'' என்று கலெக்டர் கேட்டதும், நமக்கிருந்த சில தகவல் அடிப்படையில் ராசிபுரம் செல்லும் ரூட்டில் போகச் சொன்னோம்.

வழியில் 85.குமாரபாளையம் என்ற ஒரு குக்கிராமத்தில் வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வேலை நடந்து கொண்டிருந்தது. அங்கு காரை நிறுத்தச் சொல்லி இறங்கிய கலெக்டர், வேலை செய்தவர்களிடம், ''நான்தான் உங்க மாவட்டத்தோட கலெக்டர் சகாயம். உங்களுக்கு இங்க கூலியெல்லாம் சரியா கொடுக்குறாங்களா..?'' என்று விசாரித்தார். ''அதெல்லாம் சரியா கொடுத்துடுறாங்க சாமி... ரேஷன் கடையில அரிசி, பருப்புதான் சரியா கிடைக்கலை!'' என்று வயதான பாட்டி ஒருவர் சொல்ல... அவரிடம், ''ஏம்மா... இந்த வயசுல நீ எதுக்கு வேலைக்கு வர்ற..? உன் பசங்க எல்லாம் என்ன பண்றாங்க..?'' என்று பரிவோடு விசாரித்தார்.

''மூணு பசங்க சாமி... வயசான காலத்துல யாரும் கண்டுக்க மாட்டேங்குறாங்க. இப்படி ஏதாவது வேலைக்கு வந்து நாலு காசு சம்பாதிச்சாதான் கஞ்சி குடிக்க முடியும்!'' என்று பாட்டி புலம்ப... ''பெத்தவங்களைக் கண்டுக்காமத் தவிக்கவிடுற பசங்களை ஜெயில்ல போடுறதுக்குக்கூட இப்போ சட்டம் இருக்கு. உன் பசங்களை ஜெயிலுக்கு அனுப்பிட லாமா, சொல்லுங்க...'' என்றார். பதறிப்போன பாட்டி, ''வேணாம் சாமி... அவனுங்க நல்லபடியா பொழைக்கட்டும். இருக்குற வரைக்கும் ஏதோ உழைச்சு, கஞ்சியோ கூழோ குடிச்சுக்கிறேன்! ரேஷன் கடையில அரிசி, பருப்பு மட்டும் போடச் சொல்லுங்க, போதும்!'' என்று கேட்டுக் கொண்டார்.





செல்போனை எடுத்த சகாயம், மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரிக்கு போனை போட்டார். ''ராசிபுரம் பக்கத்துல 85.குமாரபாளையம்ங்குற கிராமத்துல ரேஷன் பொருள் எதுவும் சரியா கிடைக்கிறதில்லையாமே! நீங்க உடனே அந்தக் கிராமத்துக்குப் போய் அங்கே என்ன நடக்குதுன்னு வாட்ச் பண்ணி சாயந்திரத்துக்குள் ரிப்போர்ட் கொடுங்க!'' என்று உத்தரவிட்டவர், அங்கிருந்த பதிவேட்டை சரிபார்த்துவிட்டுக் கிளம்பினார்.

வழியில் ஒரு பிரிவு ரோடு வர, அந்த வழியில் காரை விடச் சொன்னார் கலெக்டர். 'ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பொ.கல்பாளையம்' என ஒரு போர்டு தெரிய, அந்த ஸ்கூலுக்கு போனார். கலெக்டரின் காரைப் பார்த்ததும் பள்ளியின் தலைமையாசிரியர் மிரண்டு விட்டார்!


''எல்லோரும் போய் அவங்கவங்க வேலையைப் பாருங்க...'' என்று சொல்லிவிட்டு, 6-ம் வகுப்புக்குள் நுழைந்தார் சகாயம். ஒரு மாணவனை எழுப்பி ஆங்கிலப் புத்தகத்தில் ஒரு பத்தியை வாசிக்கச் சொன்னார். அந்த மாணவன் தடுமாற... அடுத்த மாணவனை படிக்கச் சொன்னார். அவனும் தடுமாறினான். ''இந்த வகுப்புக்கு இங்கிலீஷ் எடுக்குற டீச்சரை வரச் சொல்லுங்க!'' என்று சொல்லியனுப்ப... ஆங்கில ஆசிரியர் பயந்தபடியே வந்து நின்றார். ''உங்களுக்குக் கல்யாணம் ஆகிடுச்சா சார்..? எத்தனை குழந்தைங்க..?'' என்று கலெக்டர் கேட்க, ''ஆகிடுச்சு சார்... ரெண்டு குழந்தைங்க..'' என்று சொன்னார். ''எங்க படிக்கிறாங்க..?'' என்று கலெக்டர் கேட்க, ஒரு தனியார் பள்ளியின் பெயரைச்சொன்னார்.

''நீங்க இப்படி பாடம் சொல்லிக் கொடுத்தா... நாளைக்கு இந்தக் குழந்தைங்க படிச்சுட்டு வரும்போது, டவுன்ல படிச்சு வர்ற உங்க குழந்தைங் களோட எப்படி போட்டி போட முடியும், சொல்லுங்க..? கொஞ்சமாவது அக்கறையோட சொல்லிக் கொடுங்க சார். மறுபடியும் எப்ப வேணும்னாலும் ஸ்கூலுக்கு வருவேன். அப்போ இவங்க ஆங்கி லத்தை தெளிவா படிக்கணும். இல்லைன்னா, உங்க மேல நடவடிக்கை எடுக்கவேண்டியிருக்கும்!'' என எச்சரித் தார்.
அடுத்து மூன்றாம் வகுப்புக்குள் நுழைந்தவர், அங்கிருந்த குழந்தைகளைப் பார்த்து, ''சுபாஷ் சந்திரபோஸ் யாருன்னு சொல்லுங்க பார்க்கலாம்...'' என்று கேட்க... யாருக்குமே தெரியவில்லை. ''காமராஜர் யாரு தெரியுமா..?'' என்று அடுத்த கேள்வியை வீச... அதற்கும் ம்ஹ¨ம்! ''விஜய் தெரியுமா..?'' என்று கேட்டதுதான் தாமதம்... ஒரு பையன் எழுந்து, ''சார், விஜய் சினிமாவுல நடிக்கிறாரு. இப்போ 'வேட்டைக்காரன்'ல நடிச்சிருக்காரு!'' என்று சொல்லவும், கலெக்டர் சிரித்து விட்டார். அந்த வகுப்பு ஆசிரியரைக் கூப்பிட்டு, ''கிளாஸ் ரூம்ல தலைவர்களோட படங்களை மாட்டி வையுங்க. 'அவங்க யாரு..? என்னவெல்லாம் செஞ்சாங்க'ன்னு சொல்லிக் கொடுங்க. அவங்கதானே நம்ம நாட்டின் நிஜமான ஹீரோக்கள்!'' என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

அடுத்து, ராசிபுரம் நோக்கி கார் பறந்தது. புது பஸ் ஸ்டாண்டுக்கு அருகில் ஒன்வேயில் கார் போகும்போது, எதிரில் தனியார் பேருந்து ஒன்று அதிவேகத்தில் வந்தது. காரை நிறுத்தச் சொல்லி அந்த பேருந்தை வழிமறித்தார் கலெக்டர். பஸ்ஸுக்குள் ஏறிய கலெக்டர், ''நோ என்ட்ரியில எதுக்கு தம்பி இவ்வளவு வேகமா ஓட்டிக்கிட்டு வர்ற..? எதிர்ல வர்றவங்க கதி என்னாகுறது? உன் டிரைவிங் லைசென்ஸை எடு..?'' என்று கலெக்டர் கேட்கவும், ஆடிப்போனார் பஸ் டிரைவர்.
''சார் லேட்டாயிடுச்சு. அதான் வந்துட்டேன். மன்னிச் சிடுங்க சார்... டிரைவிங் லைசென்ஸ் வீட்டுல இருக்கு...'' என்று மென்று முழுங்கினார். போனை எடுத்த கலெக்டர், வட்டார போக்குவரத்து அலுவலரை கூப்பிட்டார். அடுத்த பத்து நிமிடத்தில் அவர் வந்து சேர, ''இந்த பஸ் ஓவர் ஸ்பீடு. நோ என்ட்ரியில வந்திருக்கு. இவருகிட்ட லைசென்ஸ் இல்ல. உடனே ஃபைன் போடுங்க...'' என்று உத்தரவு போட்டார்.
ரவுண்ட்-அப்பை முடித்துக்கொண்டு கிளம்பும்போது கலெக்டர் நம்மிடம், ''பொது மக்களோட குறைகளை தீர்த்துவைக்கத்தான் நான் இங்கே இருக்கேன். என்னை எந்த நேரத்திலும் மக்கள் சந்திக்கலாம். நேர்ல வரணுங்குற அவசியம்கூட இல்ல. என் னோட செல் நம்பருக்கு (9444163000) ஒரு போனோ மெஸேஜோ போதும். கண்டிப்பா நடவடிக்கை எடுப்பேன்!'' என்று சொல்லி நமக்கு விடை கொடுத்தார்.
அயராமல் உழைத்துக்கொண்டே இருக்கும் முதல்வருக்கு ஈடுகொடுக்க, இப்படி அயராமல் ஓடி நேரில் மக்களைச் சந்திக்க இன்னும் நிறைய அதிகாரிகள் முன்வர வேண்டும்.
- கே.ராஜாதிருவேங்கடம்
படங்கள்: எம்.விஜயகுமார்

________________________
நன்றி ஜூனியர் விகடன்