விஞ்ஞானிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விஞ்ஞானிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

எவன் செத்தா எனக்கென்னா ..எனக்கு தேவை கரண்ட் தான் என்று நினைப்பவராக நீங்கள் இருந்தால் .. ..பகுதி 4

இப்படி ஒரு சம்பவம் கூடங்குளத்திலும் நடந்துவிடக்கூடாது ..
 ..







என்பதுதான் அந்த மக்களின் எதிர்ப்புக்கு காரணம்.. ஏனென்றால் போபால் சம்பவத்திற்கு இன்னும் இழப்பீடு வழங்கப்படவில்லை.. குற்றவாளிகள் தண்டிக்கப்படவுமில்லை என்பதுதான் நடைமுறை உண்மை.. இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் ,




எவன் செத்தா எனக்கென்னா ..எனக்கு தேவை கரண்ட் தான் என்று நினைப்பவராக நீங்கள் இருந்தால் ..
||
||
படிக்க................. படிக்க
||


போபால் விஷவாயு கசிவின் விசாரணைக் குழுவினர் கூறியுள்ளதாவது:

1984-ம் ஆண்டு மத்திய பிரதேச மாநில மாநிலத் தலைநகர் போபாலில் உலகின் மிக மோசமான விஷவாயு கசிவு ஏற்பட்டதில் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். தொடர்ச்சியாக விஷவாயுக் கசிவின் தாக்கத்தால் ஏற்பட்ட நோயால் சுமார் 8 ஆயிரம் பேர் உயிரிழந்திருக்கின்றனர். 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த விஷவாயுக் கசிவின் முக்கிய குற்றவாளியாஅன் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த வாரன் ஆண்டர்சனுக்கு அப்போது 2 நோட்டீசுகள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த இரண்டும் அமெரிக்கா மற்றும் கிரீன்விச் ஆகிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால் குறிப்பிட்ட முகவரியில் அப்படி ஒரு நபர் இல்லை என்று அந்த நோட்டீசு மீண்டும் இந்தியாவுக்கே திரும்பி வந்துவிட்டன. இதனால் மீண்டும் சரியான முகவரிக்கு நோட்டீசை அனுப்பி வைக்க இருக்கிறோம் என்றனர் அவர்கள்.



இப்படி ஒரு சம்பவம் கூடங்குளத்திலும் நடந்துவிடக்கூடாது ..


எவன் செத்தா எனக்கென்னா ..எனக்கு தேவை கரண்ட் தான் என்று நினைப்பவராக நீங்கள் இருந்தால் ..பகுதி 3

By,
Balamurugesan Sivaperumal - London,யுனைடெட் கிங்டம்

(௧) அணுமின் நிலையம் மற்றவை போல மும்மடங்கு நேரமும் மும்மடங்கு செலவும் ஆகும்.



(௨) முப்பது வருடம் கழித்து அதை கண்டிப்பாக மூட வேண்டும். அப்போது மறுபடி இதே அளவு செலவாகும்.


(௩) பாதுகாப்பான அணு உலை என்று ஒன்று கிடையாது என்பதால்தான் ஜெர்மனி, ஜப்பான், பிரான்ஸ் நாடுகள் இனி அணு நிலையங்களை ஆரம்பிப்பது இல்லை என்றும் இருப்பவற்றை இன்னும் பத்து வருடங்களில் மூடுவது எனவும் முடிவு செய்துள்ளன.

(௪) அந்த நாடுகளுக்கு கிடைக்காத எந்த தொழில் நுட்பம் நமக்கு இருக்கிறது?

(௬) அணு உலையில் எதாவது ஆபத்து என்றால் அனைத்து மக்களையும் முப்பது கிலோமீட்டர் அப்புறப்படுத்த வேண்டும். நமது அரசு இருபது லட்சம் பேரை முப்பது கிலோமீட்டர் தள்ளி கொண்டு சென்று உணவு, உடை, உறைவிடம், மருத்துவம், தர கையாலாகுமா? 

(௭) கூடங்குளத்தில் ஐநூறு மெகாவாட் உற்பத்தியானாலே அதிசயம். அதில் தமிழகத்துக்கு பாதிதான் கிடைக்கும். அந்த மின்சாரம் ஒரு வீட்டில் ஒரு விளக்கு எரிக்கவே போதாது. இத்தனை லட்சம் மக்களை ஆபத்துக்கு உள்ளாக்கி இந்த மின்சாரத்தை பெற வேண்டுமா?

(௮) வெறுமே குண்டு பல்புகளுக்கு பதில் சி.எப்.எல்.பல்புகலை உபயோகித்தாலே இதை சேமிக்க முடியுமே. மொத்தத்தில் எந்த காரணம் கொண்டும் இந்த உலையை இயங்க விட கூடாது. இதன் மூலம் சிங்களனுக்கு மட்டுமே பலன் இருக்கும்.

எவன் செத்தா எனக்கென்னா ..எனக்கு தேவை கரண்ட் தான் என்று நினைப்பவராக நீங்கள் இருந்தால் ..பகுதி 2

    Thangaraj - mumbai,  இந்தியா 
 
அணுஉலை கழிவு ஒரு பெரிய பிரச்சனை.

கூடங்குளம் அணுமின் நிலைய கழிவு ரசியாவுக்கு எடுத்துச் செல்லப்படும் என்றுதான் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

பின்னர் அது இந்தியாவிலேயே மறு சுழற்சி செய்யப்படும் என்றும், கூடங்குளத்திலேயே அதற்கான உலை நிறுவப்படலாம் எனவும் தெரிவித்தனர்.

கூடங்குளம் அணு உலைகள் ஆண்டுக்கு சுமார் 30 டன் யுரேனியத்தை பயன்படுத்தும். ஏறத்தாழ 30 ஆண்டுகள் இயங்கும் போது 900 டன் கழிவு வெளியாகும்.

பயங்கரமான கதிர்வீச்சை வெளியிடும் இந்த கொடிய நச்சை 24,000 ஆண்டுகள் நாம், நமது குழந்தைகள், நமது பேரக்குழந்தைகள் அவரது வழித் தோன்றல்கள் போற்றிப் பாதுகாக்க வேண்டும்.

அபாயகரமான இந்தக் கழிவுகளை தேக்கி வைத்திருப்பதாலும், மறு சுழற்சி செய்வதாலும் நிலத்தடி நீரும், காற்றும் பாதிக்கப்படும். நமது விளை நிலங்களும், பயிர்களும், கால்நடைகளும் பாதிக்கப்படும். அவற்றில் இருந்து பெறப்படுகின்ற பால், காய்கறிகள், பழங்கள் நச்சு உணவுகளாக மாறும்.

அணு உலைகளை குளிர்விக்கும் கதிர்வீச்சு கலந்த நீர் கடலுக்குள் விடப்படுவதால் கடல் நீரின் வெப்ப நிலை அதிகரித்து கதிர்வீச்சால் நச்சாக்கப்பட்டு மீன் வளம் பாதிக்கப்படும். மீனவ மக்கள் ஏழ்மைக்குள்ளும், வறுமைக்குள்ளும் தள்ளப்படுவார்கள். மீனவ மக்களின் மற்றும் உள்ளூர் மக்களின் கடல் உணவு நச்சாகும் போது நமது உணவு பாதுகாப்பு அழிக்கப்படும்.

அணு உலையின் புகை போக்கிகளில் இருந்து வருகின்ற நீராவி, புகை மூலமும், கடல் தண்ணீர் மூலமும் அயோடின் 131, 132, 133, சீசியம் 134, 136, 137 அய்சோடோப்புகள், ஸட்ராண்டியம், டீரிசியம், டெலூரியம், போன்ற கதிர்வீச்சு பொருட்கள் நமது உணவில், குடிதண்ணீரில், சுவாசத்தில், வியர்வையில் கலந்து அணு அணுவாக வதைப்படுவோம்.


நமது குழந்தைகள், பேரக்குழந்தைகள் இந்த நச்சை கொஞ்சம், கொஞ்சமாக நீண்ட நாட்கள் உட்கொண்டு புற்றுநோய், தைராய்டு நோய் போன்ற கொடிய நோய்களுக்கு ஆளாகி உடல் ஊனமுற்ற, மன வளர்ச்சியற்ற குழந்தைகளைப் பெற்று பரிதவிப்பார்கள். 

எவன் செத்தா எனக்கென்னா ..எனக்கு தேவை கரண்ட் தான் என்று நினைப்பவராக நீங்கள் இருந்தால் .. ..பகுதி 1

By,
Thangaraj - mumbai,இந்தியா


யூனியன் கார்பைட் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிப்பு நிறுவனம்..


அந்த கம்பெனி வர்றதுக்கு போபாலில் உள்ள ஒட்டு மொத்த மக்களும் எதிர்த்தார்கள்..ஆனால் அதிகாரிகள் தரப்பிலும்..அரசு தரப்பிலும்..( நாராயணசாமி அல்ல )விஞ்ஞானிகள் தரப்பிலும் அது மிகவும் பாதுகாப்பனதுன்னு சர்டிபிகேட் கொடுக்கப்பட்டு . தொடங்கப்பட்டது..


1984 வருடம் அந்த கம்பெனி வியாபாரம் ..டல்லடிக்க ஆரம்பிச்சதும்..தயாரிப்புகள் நிறுத்தப்பட்டது...60 டன் மீத்தைல் ஐசோ சயனைடு என்கிற வேதிப்பொருள் உற்பத்தி நிறுத்தப்பட்டதால் ஸ்டாக் செய்யப்பட்டது..பத்து டன் அளவுக்கு வைக்கப்பட வேண்டிய ஒரு தொட்டியில் மட்டும் 40 டன் அளவுக்கு நிரப்பி வைக்கப்பட்டது..அந்த தொட்டியின் வெப்பநிலை 11 டிகிரிக்கு கீழாக பராமரிக்கப் படவேண்டும்..ஆனால் பராமரிக்கப்பட்ட வெப்பநிலையோ..20 டிகிரி..

1984 டிசம்பர் 2 தியதி ..அந்த தொழிற்ச்சாலையில் ஹவுஸ் கீப்பிங் பணியின் போது..தவறுதலாக தண்ணீர் அந்த தொட்டிக்குள் பாய்ந்துவிட்டது.. அதனால் வேதி மாற்றத்திற்கு உட்பட்ட மீத்தைல் ஐசோ சயனைடு விஷ வாயுவாக மாறி காற்றில் பரவ ஆரம்பித்தது..அன்றைக்கென்று வேகமாக வீசிய காற்றால் நகர் முழுவதும் பரவ ஆரம்பித்துவிட்டது....


 இந்த வாயுவிற்கு மணமோ..நிறமோ கிடையாது என்பதால் என்னவென்று உணர்வதற்குள்ளாகவே சுவாசித்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுருண்டு விழுந்து செத்தார்கள்..சம்பவம் என்னவென்று அறிவதற்குள்ளாகவே 8000 பேர் மடிந்து போனார்கள்..ஆகா மொத்தத்தில் ஒரு அரசின் கவன குறைவால்..ஒரு நிர்வாகத்தின் கவன குறைவால் ..சில தொழிலாளர்களின் கவனகுறைவால் மொத்தம் இறந்தவர்களின் எண்ணிக்கை 20000 மேல்...பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஐந்து லட்சத்துக்கும் மேல்..


இந்த சம்பவத்திற்குப்பிறகு அங்கு 

------90 சதவிகிதம் பெண்கள் கருப்பை புற்றுநோயாலும்..
------80 சதவிகித பெண்கள் இடுப்பெலும்பு வீக்கத்தாலும்..
------75 சதவிகித பெண்கள் கழுத்தெலும்பு நோயாலும்..
------60 சதவிகித பெண்கள் மற்ற நோயாலும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்..

இப்படி ஒரு சம்பவம் கூடங்குளத்திலும் நடந்துவிடக்கூடாது ..

என்பதுதான் அந்த மக்களின் எதிர்ப்புக்கு காரணம்.. ஏனென்றால் போபால் சம்பவத்திற்கு இன்னும் இழப்பீடு வழங்கப்படவில்லை.. குற்றவாளிகள் தண்டிக்கப்படவுமில்லை என்பதுதான் நடைமுறை உண்மை.. இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் ,

எவன் செத்தா எனக்கென்னா ..எனக்கு தேவை கரண்ட் தான் என்று நினைப்பவராக நீங்கள் இருந்தால் ..