மூலிகைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மூலிகைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தகவ‌ல்க‌ள்



பகுதி ௧:
துர்நாற்றத்தை

துர்நாற்றத்தை முறியடிக்க கைத்தறி பருத்தி மற்றும் கதர் ஆடைகள் உடுத்தவும். இவ்வுடைகளில் காற்று எளிதாக ஊடுருவும். இவை வியர்வை ஏற்படுவதைத் தடுக்கும். ஸின்தெடிக் உடைகளை வெப்பத்தில் அணிவதை தவிர்க்கவும்.


வியர்வை உண்டாக்கும் சுரப்பிகள் முடிகளுக்கு கீழே அ‌திகமாக‌ககாணப்படுகின்றன. முடிகளும் வியர்வையை தக்கவைத்து, பாக்டீரியா கிருமியின் வளர்ச்சிக்கு உதவுகிறது. வெ‌யி‌ல் கால‌த்‌தி‌லதலைமுடியை அடிக்கடி ஷாம்ப்பு அல்லது சீயக்காய் போட்டு கழுவவும்.

துர்நாற்றத்தை முறியடிக்க கை இடுக்குகளில் உள்ள முடிகளை அகற்றிவிடுவது சிறந்தது. கு‌ளி‌த்த ‌பி‌னஅ‌க்கு‌ளபகு‌திக‌ளி‌லபவுட‌ரபோடலா‌ம்.

உடற்பயிற்சி செய்த பிறகும், வெய்யிலில் அதிக நேரம் சுற்றி திரும்பிய பிறகும், ஆன்டிஸெப்டிக் சோப்பு உபயோகித்து குளிப்பது நல்லது. இது பாக்டீரியவை ஒழித்து துர்நாற்றத்தை விரட்டும்.

அ‌திகமாக ‌விய‌ர்‌த்தஉட‌லி‌லது‌ர்நா‌ற்ற‌மவருவதை ‌நீ‌ங்க‌ளஉண‌ர்‌ந்தா‌லவாசனை ‌திர‌வி‌ய‌ங்களையேஅ‌ல்லதடியோ‌ட்‌ர‌ன்‌டபோ‌ன்றவ‌ற்றையோ‌பபய‌ன்படு‌த்தலா‌ம்.
பகுதி .
விய‌ர்வ
உ‌ங்க‌ள் ‌விய‌ர்வம‌ட்டும‌ல்லாம‌ல் ‌நீ‌ங்க‌ளஅ‌ணியு‌ம் ‌சிபொரு‌ட்களாஷு, சாக்ஸ் போன்றவையும் ‌உ‌ங்க‌ள் ‌மீததுர்நாற்றம் ஏற்பட முக்கிய காரணமாக அமையலாம்.

பருத்தியா‌லசெ‌ய்ய‌ப்ப‌ட்சாக்ஸ் அணிவது நல்லது. வெய்யில் காலங்களில் ஷு அணிவதை தவிர்க்கலாம். அ‌வ்வாறஅ‌ணிவே‌ண்டிக‌ட்டாய‌மஏ‌ற்ப‌ட்டா‌ல் ‌தினமு‌மசா‌க்ஸதுவை‌த்து‌பபய‌ன்படு‌த்வே‌ண்டு‌ம்.

அது முடியவில்லை என்றால் சாக்ஸ் அணியும் முன் காலில் பவுடரை தடவவும். இது வியர்வையை தடுத்து காலை காய்ந்த நிலையில் வைக்க உதவும்.

மேலு‌ம், ‌சிசெரு‌ப்புக‌ள் ‌நீ‌ரி‌லப‌ட்டது‌ம், ‌நீரஉ‌ள்‌ளிழு‌த்து‌ககொ‌‌ள்ளு‌மத‌ன்மஇரு‌க்கு‌ம். அ‌ந்த ‌நீ‌ரி‌லசெரு‌ப்பஊ‌றி அதனா‌லது‌ர்நா‌ற்ற‌மஏ‌ற்படு‌ம். அ‌ப்படி‌ப்ப‌ட்செரு‌ப்புகளை ‌நீ‌ரப‌ட்டது‌மஉடனடியாவெ‌யி‌லி‌லகாவை‌க்கவு‌ம்.

நீ‌ங்க‌ளம‌ட்டு‌மதூ‌ய்மையாஇரு‌ந்தா‌லபோதாது, ‌நீ‌ங்க‌ளபய‌ன்படு‌த்து‌மை, ூ, செரு‌ப்பு, கைகு‌ட்டை, ப‌ர்‌‌ஸபோ‌ன்றவ‌ற்றையு‌மதூ‌ய்மையாவை‌த்‌திரு‌ங்க‌ள.
பகுதி
பேன் மாறும்: .............

தேங்காய் எண்ணெயில் சிறிது கற்பூரத்தைச் சேர்த்துத் தடவினால் பேன் அகலும். வெந்தயத்தை அரைத்து தேய்த்துக் குளித்தாலும் கற்பூரம் கலந்த நீரில் குளித்தாலும் பேன் மாறும்.

கேரளாவில் சில இடங்களில் மூக்குப் பொடியைத் தலையில் தேய்த்து விடுவார்கள். இரண்டு மணி நேரம் சென்ற பின் தலைக்குச் சீயக்காய் தேய்த்துக் குளித்து விடுவார்கள். பேன் அகன்றுவிடும்.

வெங்காயத்தை அரைத்து எலுமிச்சம் பழச்சாறு கலந்து மயிர்க்கால்களில் அழுத்தித் தடவி ஒரு மணிநேரம் கழிந்தபிறகு குளிப்பாட்டினால் பேன் இருந்த இடம் தெரியாமலே ஓடிவிடும்.

எந்தத் தீவிரமான மணமும் பூச்சிகளை விரட்டிவிடும். அதனால்தானோ என்னமோ பெண்கள் தலைக்குப் பூக்கள் சூடிக்கொள்கிறார்கள். இந்தப் பூக்கள் தலையில் இருக்கும்போது பேன் தொந்தரவு வருவதில்லை.

சீதாப்பழ விதைகளை நசுக்கித் தலையில் தேய்த்துக்கொண்டால் பேன் வராது. சீதாப்பழ கஷாயம், ஊமத்தைஇலை கஷாயம் பயன்படுத்தலாம். கடலைமாவும் சேர்த்துக் குளிக்கலாம்.


பகுதி ௪.

பொடுகா? கவலையை விடுங்க!

இன்று இளைஞர்களை எரிச்சல்படுத்தும் பிரச்சினைகளில் பொடுகு முக்கியமானது. தலையின் பொலிவை குறைத்து எண்ணெய் வழிந்தால் போல் அசிங்கம் ஆகிவிடும். ஒரு நாள் தலைக்கு குளிக்காவிடினும் துர்நாற்றம் வீசத்தொடங்கிவிடும்.

இதற்கு எளிய தீர்வு உள்ளது… பொடுகை துரத்திவிடலாம்.

இரண்டு தேக்கரண்டி வெந்தயத்தை இரவு தண்ணீரில் ஊறப் போடவும். காலையில் அந்த வெந்தயத்தை அரைத்துத் தலையில் தேய்த்து அரைமணிநேரம் வைக்கவும்.

பின் சீயக்காய்த் தேய்த்துக் கழுவிவிடவும். கடைசியாகத் தண்ணீர்விட்டுக் கழுவும்போது எலுமிச்சம்பழச் சாற்றைச் சேர்க்கவும். வாரத்திற்கு இரண்டு முறைப் பச்சைப்பயிற்று மாவைத் தயிரில் கலந்து தலைக்குக் குளித்துவிடவும்.பொடுகு மறைந்துவிடும்.






முடி உதிர்வதைத் தடுக்க வேண்டுமா?

இன்றைய காலத்தில் சுத்தமான நீர் இல்லாததாலும், இயற்கை முறையில் தலைக்குக் குளிக்காமல், இரசாயனக் கலப்பு நிறைந்த ஷாம்பு, சோப்பு போன்றவற்றால் குளிப்பதாலு‌ம் இளம் வயதிலேயே தலை முடி கொட்டி விடுகிறது.

முடி என்னமோ எளிதாகக் கொட்டிவிடுகிறது. ஆனால், அதனை மீண்டும் முளைக்க வைக்கவோ, மேலும் முடி கொட்டாமல் காப்பாற்றுவதோ இன்றைய மருத்துவத்தில் பெரும் சவாலாக உள்ளது.

இ‌ந்‌நிலை‌யி‌ல், முடி உதிர்வதைத் தடுக்கவும், இள நரையை தவிர்ப்பதும் எப்படி என்பது குறித்து இயற்கை மருத்துவம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்ணீர் போட்டு கொதிக்க வைத்துவிட்டு மறுநாள் அந்தச் சாறு எடுத்து தலையைக் கழுவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

வெந்தயம், குன்றிமணியை பொடி செய்து, அதனை தேங்காய் எண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தினமும் அதனை காலையில் தலையில் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

சிலருக்கு சிறு வயதிலேயே இளநரை தோன்றும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே போதும் இளநரை மாயமாகிவிடும்.

சிலருக்கு முழுவதும் நரையாகிவிடும். இவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், தாமரைப் பூ கஷாயம் வைத்து தொடர்ந்து காலை, மாலை என குடித்து வரவேண்டும். முளைக்கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நரை படிப்படியாகக் குறையும்.

சரி, முடி உதிர்வதைப் பார்த்தோம், நரை போக்க வழி பார்த்தோம். முடி வளர வழி இருக்கிறதா? ஆம் அதுவும் இருக்கிறது நம் இயற்கை மருத்துவத்தில்.

கறிவேப்பிலையை நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி வளரும்.

இல்லையென்றால், காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தாலும் முடி வளரும்.

இவையனைத்திற்கும் மேலாக, சுத்தமாக முடி இல்லாமல் வழுக்கையாக இருப்பவர்களுக்கு ஒரு குறிப்பு.

கீழாநெல்லி வேரை எடுத்து சுத்தம் செய்து அதனை துண்டுகளாக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி அதனை தலையில் தொடர்ந்து தலையில் தடவி வந்தால் வழுக்கை மறையும்

தீரா நோய் தீர்க்கும் மூலிகைகள்

மூலிகைகள் இயற்கை நமக்கு அளித்துள்ள வரப்பிரசாதமாகும்.

சாதாரண நோய்கள் முதல் கொடிய நோய்கள் வரை மூலிகைகளால் எளிய முறையில் குணப்படுத்தி விடலாம். இதற்காக ஒவ்வொரு நோய்க்கும் ஒரு சில மூலிகைகள் மிக சிறந்த பலனைத்தருகின்றன. இவை மனிதனுக்கு வரும் நோய்களுக்கு மட்டுமின்றி விலங்கினங் களுக்கு வரும் நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டவை. இவற்றை உணவில் ஒருவகை எனக்கருதி வாழ்நாள் முழுவதும் உட்கொள்ளலாம். தவறில்லை. இதனால் பின்விளைவுகள், பக்க விளைவுகள் ஏதுமில்லை. இம்மூலிகைகள் நோய்களை குணப்படுத்துவதற்கு மட்டுமின்றி, வராமல் தடுக்கும் ஆற்லும் பெற்றன என்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.

இனி என்ன மூலிகைகள் எந்த நோய்களுக்குப் பயன்படுகின்றன என்பது பற்றியும் அவற்றை எவ்வாறு உண்பது என்பது பற்றியும் பார்ப்போமா?


ஆஸ்துமா:


இது ஒரு பரம்பரை நோயாகவும் வரலாம் அல்லது நோய் எதிர்ப்புச்சக்தி இல்லாத காரணத்தினாலும் வரலாம். இந்நோய்க்கும் காச நோய்க்கும் அதிக வேறுபாடுகள் உண்டு. ஒவ்வாமை காரண மாகவே இந்நோய் ஏற்படுகிறது. ஆஸ்துமா ஏற்படுவதற்கான குறிப்பிட்ட காரணங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

அறிகுறிகள்:


மேல் மூச்சு வாங்குதல், தொடர் சளி, இருமல் ஆகியவை அறிகுறிகள் ஆகும்.

காரணங்கள்:


தூசி, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் வேதி- கழிவுப் பொருட்கள் சூழ்ந்துள்ள இடங்களில் வசிப்பது, பூச்சிக்கொல்லி மருந்துகள், வாகனப் புகை, சில மாத்திரைகள் ஆகியவை மூலம் ஒவ்வாமை ஏற்பட்டு ஆஸ்துமா வரலாம்.

மூலிகைகள்:


சக்திக்குரிய வேப்பிலை, சிவனுக்குரிய வில்வம், திருமாலுக்குரிய துளசி, பிரம்மாவுக்குரிய அத்தி மற்றும் தும்பையிலை, ஆடுதொடா, தூதுவெளை, முருங்கையிலை ஆகியவை ஆகும்.

இவை அனைத்தையும் பறித்துவந்து வெயிலில் உலர்த்தி பொடி செய்து சமஅளவு ஒன்றாகக் கலந்து பின் காற்றுப்புகாத பாட்டிலில் நிரப்பி வைத்துக்கொள்ள வேண்டும்.

பின் இவற்றில் இருந்து ஒரு ஸ்பூன் தூள் எடுத்து ஒரு தம்ளர் தண்ணீரில் கலந்து உணவுக்கு ஒரு மணி நேரம் முன்பாக தினமும் காலை, பகல், இரவு ஆகிய மூன்று வேளைகளும் உட்கொள்ள வேண்டும். இதனை சுமார் நான்கு முதல் ஆறு மாதங்கள் வரை உட் கொண்டால் பூரணகுணம் பெறலாம். முதல் மாதத்திலேயே ஓரளவு குணம் தெரிய ஆரம்பிக்கும்.

______காசநோய்:

இது தொற்று நோய். மைக்கோ பாக்டீரியம் டூபர் குளோசிஸ் என்ற பாக்டீரியா கிருமி காரணமாகப் பரவுகிறது. காசநோய்க்கிருமி முதலில் நுரையீரலில் நுழைந்து பின்னர் ரத்தத்தில் கலக்கிறது. நோய்க் கிருமி உடலில் நுழைந்து உடலில் பலவீனமடையும்போது தாக்குவதற்கு சுமார் மூன்று மாதங்கள் ஆகும்.

தலை முதல் கால் வரை அனைத்து உறுப்புகளையும் இக்கிருமி தாக்கும். மூளைக் காய்ச்சல் மூளைக் கட்டி, கைகால் மூட்டு இணைப்புகளில் கட்டி, கண்பார்வை பாதிப்பு, தோலில் ஆறாமல் தொடர்ந்து இருக்கும் புண்கள், சிறுநீரகத்தில் கட்டி போன்ற இடங்களில் காசநோய் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

அறிகுறிகள்:

மூன்று வாரங்களுக்குத் தொடர்ந்து இருமல், மாலையில் லேசான காய்ச்சல், எடை குறைவு, பசியின்மை, உடல்சோர்வு ஆகியவை காசநோயின் அறிகுறிகளாகும்.

எப்போதாவது இருமும்போது ரத்தம் வெளியேறும் வாய்ப்பும் உண்டு. காச நோய்க் கிருமி தாக்கும். உடல் உறுப்பைப் பொறுத்து அறிகுறிகளும் மாறுபடும். இது பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தை
களையும் தாக்குகிறது.

தேவையான மூலிகைகள்:

வேப்பிலை, கண்டங்கத்திரி, வில்வம், அத்தி, அருகம்புல், துளசி, தும்பை, குப்பை மேனி, கீழாநெல்லி, தூதுவளை, நெல்லி ஆகிய மூலிகைகள் அனைத்தையும் எடுத்துவந்து வெயிலில் உலர்த்தி பொடி செய்து பின் சமஅளவு ஒன்றாகக் கலந்து காற்று புகாத பாட்டிலில் நிரப்பி வைத்துக் கொள்ள வேண்டும். பின் இதிலிருந்து ஒன்னரை டீஸ்பூன் தூள் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகக் காலை பகல் இரவு ஆகிய மூன்று வேளைகளும் உட்கொள்ளவும். இதை சுமார் ஆறு மாதங்கள் வரை உட்கொள்ள வேண்டும். சுமார் ஒரு மாதத்திலேயே இந்நோயின் தன்மைகள் படிப்படியாகக் குறைய ஆரம்பிக்கும்.

__காய்ச்சல்:

காய்ச்சலில் பல வகைகள் உள்ளன. சாதாரண காய்ச்சல், தொடர்காய்ச்சல், விட்டுவிட்டு வரும் காய்ச்சல், காய்ச்சல் அதிகமாகி குறைதல் ஆகியவை காய்ச்சலின் வகைகளுள் சிலவாகும்.

காற்று மூலம் பரவக்கூடிய சாதாரண காய்ச்சலுக்கு இன்புளூயென்சா என்று பெயர். பாக்டீரியா தொற்றின் காரணமாக மார்பு சளி, உடலில் சீழுடன் கட்டி ஆகியவை காரணமாக தொடர் காய்ச்சல் ஏற்படலாம். கொசு காரணமாக மலேரியா, டெங்கு, மூளைக்காய்ச்சல், யானைக்கால் நோயின் அறிகுறியான கால்வீக்கத்துடன் கூடிய காய்ச்சல் ஆகியவை கொசுக்களில் பரவுகின்றன.

நோய்க்கிருமி உடலில் நுழைந்து பெருகி ரத்தத்தில் கலக்கும்போதுதான் வெளிப்பொருள் உடலில் இருப்பதற்கான அறிகுறியாக காய்ச்சல் ஏற்படுகிறது.

இன்புளூயன்சா:

இது சாதாரண காய்ச்சல், காய்ச்சல் உள்ள ஒருவர் தும்மும்போது அவருக்கு அருகில் ஆரோக்கியமாக உள்ளவருக்கு காற்றுமூலம் இக்காய்ச்சலுக்கான கிருமி உட்சென்று பரவுகிறது.

இக்காய்ச்சல் வரும்போது மூக்கிலும், கண்ணிலும் நீர் வடியும். உடல் வெப்பம் 104 டிகிரி வரை செல்லும். நோயாளியால் நோயின்போது இயல்பாக இருக்க முடியாது.

மலேரியா காய்ச்சல்:

சுத்தமற்ற தண்ணீரினால்தான் மலேரியாவைப் பரப்பும் கொசுக்கள் உற்பத்தி ஆகின்றன. கிராமப் புறங்களில் வயல் வெளிகளில் தேங்கும் தண்ணீரில் உற்பத்தியாகி மலேரியாவைப் பரப்புகின்றன. நகர்ப்புறங்களில் நீர்த்தொட்டிகளில் உள்ள தண்ணீரில் நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி மலேரியாவைப் பரப்புகின்றன.

அறிகுறி:

மலேரியா காய்ச்சல் மூன்று கட்டங்களாகக் கடுமையாகும். சில மணிநேரம் இடைவெளிக்குள் இந்த மூன்று கட்டங்களும் உடலில் வெளிப்படும். முதல் கட்டத்தில் லேசான குளிர்மட்டும் இருக்கும். காய்ச்சல் இருக்காது. இரண்டாவது கட்டத்தில் சட்டையை கழற்றி எறியும் அளவிற்குக் காய்ச்சல் இருக்கும். உடனடியாகக் காய்ச்சல் சிறிது இறங்கி வியர்வை வரும். மூன்றாவது கட்டத்தில் உடலில் நடுக்கம் ஏற்படும்.

போர்வையை உடல் முழுவதும் போர்த்திக் கொள் ளும் அளவுக்கு உடல் நடுக்கம் ஏற்படும். அத்துடன் விட்டு விட்டுக் காய்ச்சல், தலை வலி, குமட்டல், உடல்வலி, பசியின்மை ஆகியவை இருக்கும்.

டைபாய்டு:


இது ஒரு பாக்டீரியா காய்ச்சல். சுத்தமற்ற உணவை சாப்பிடுவதால் வரு கிறது. இந்நோய்க்கிருமி குடலில் தங்கி பல்கிப்பெருகி நச்சுத் தன்மை மிக்க திரவம் உற்பத்தியாகிறது. இத்திரவம் ரத்த்தில் கலப்பதால்தான் பாதிக்கப்பட்டவருக்கு டைபாய்டு காய்ச்சல் ஏற்படுகிறது. இதனால் காய்ச்சல் தொடர்ந்து இருக்கும். மூச்சுக்காற்று சூடாக இருக்கும். சில சமயம் காய்ச்சலுடன் வயிற்றுப்போக்கும் இருக்கும். சாப்பிடுவதற்கு முன்பும், கழிப்பறைக்குச் சென்றுவந்தவுடன் சோப்பு போட்டு கைகழுவ வேண்டும்.

தேவையான மூலிகைகள்:

வேப்பிலை, கண்டங்கத்திரி, கீழாநெல்லி, வில்வம் ஆகியவற்றை பொடி செய்து பின் சமஅளவு ஒன்றாக கலந்து ஒரு பாட்டிலில் வைத்துக் கொள்ளவும். பின் இதிலிருந்து ஒன்றரை ஸ்பூன் எடுத்து காலை, பகல், மாலை, இரவு ஆகிய நான்கு வேளைகளும் சாதாரண நீரில் கலந்து உணவுக்கு ஒரு மணிநேரம் முன்பாக சுமார் பதினைந்து நாட்கள் முதல் ஒரு மாதம்வரை தொடர்ந்து உண்ண வேண்டும். சுமார் மூன்று நாட்கள் முதல் ஒரு வாரத்திற்குள் அனைத்து விதமான காய்ச்சலும் கட்டுப்பாட்டிற்குள் வந்து விடும். தீராத பட்சத்தில் மூலிகை மருத்துவரின் ஆலோசனையை நாடவும்.