இந்து மத விளக்கங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்து மத விளக்கங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மகாபாரதம் உலகுக்கு எடுத்துக்காட்டும் ஓர் உண்மைத் தத்துவம்.....


'சத்தியம் மிக உயர்ந்த தருமம்', 'தருமம் வெற்றி பெறும்' என்ற ஓர் உண்மைத் தத்துவத்தை மகாபாரதம் உலகுக்கு எடுத்துக்காட்டுகின்றது. தருமம் இரண்டு மனித உருவம் தாங்கிச் செயற்பட்டதையும் மகாபாரதத்தில் காண்கின்றோம். ஒருவர் தருமர், மற்றவர் விதுரர். அறவுரை கூறி நின்றார் விதுரர். அதேநேரம் தருமர் அறத்தைப் பேணிக் காக்க ஆயுதத்தை நாடினார். அதில் இருவரும் வென்றனர்.     
பார்வதி, பரமசிவன், இந்திரன், வாயுபகவான், தருமதேவதை, முருகக் கடவுள், சூரியன், அசுவினித்தேவர்கள், சப்தரிஷிகள், முனிவர்கள், மகரிஷிகள், நாரதர், வியாசர், துர்வாச மகரிஷி, பராசர முனிவர், கண்ணன், பலராமர், அகஸ்தியர், சத்தியபாமா, அனுமன் ஆகிய மேலோர் அனைவரும் மகாபாரதம் முழுவதும் உலாவித் திரிந்து தத்தமது ஞானத் தத்துவங்களை வீசிச் சென்றமையால் மகாபாரதம் ஈடிணையற்ற இதிகாசமாக மக்கள் மத்தியில் நிலவுகின்றது.
மகாபாரதத்தில் நட்பு, ஞானம், சத்தியம், தவம், தானம், ஆசை, தியாகம், அறியாமை, விரோதம், சுவர்க்கம், நரகம், பிறப்பு, காதல், திருமணம்,  இறப்பு, போர், அழிவு, பணிவு, அறிவு, சுத்தம், தூய்மை, பரிசுத்தம், கல்வி, அறம், பொருள், இன்பம், முக்தி, காலத்தின் வலிமை, காலத்தின் நியதி, வினையின் பயன், பாவம், புண்ணியம்,  இன்சொல்லின் சிறப்பு, உபவாசத்தின் உயர்ச்சி, குதிரை யாகம், இராஜசூய யாகம்,  கர்மவினை, சாபம், துறவு வாழ்க்கை ஆகிய விடயங்கள் பரவலாகப் பேசப்பட்டு அவற்றிற்குரிய விடைகளும் காணப்பட்டுள்ளதையும் காண்கின்றோம்.
அறம், மறம் ஆகிய இரு நிலைகளில் நின்றவர்களையும் மகாபாரதம் பட்டியலிட்டுக் காட்டுகின்றது. அறநிலையில் சந்தனு, பீஷ்மர், விதுரர், பாண்டு, தருமர், பீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன், துரோணர், துருபதன், பலராமர், கிருஷ்ணன், கங்காதேவி, சத்தியவதி, குந்தி, மாத்ரி, திரௌபதி, சுபத்திரை, உத்தரை ஆகியோர் நின்று அறங்கூறிப் பேரும் புகழும் பெற்றனர். அதேநேரம் மறநிலையில் திருதராட்டிரன், காந்தாரி, துரியோதனன் ஆகிய தொண்ணூற்றி ஒன்பது சகோதரர்கள், சகுனி, அசுவத்தாமன், கர்ணன் ஆகியோர் மறங்காத்து மாண்டொழிந்தனர்.
குந்தியானவள் ஒரு முனிவரால் அருளிக் கொடுக்கப்பட்ட மந்திரத்தை உச்சரித்ததால் கர்ணன், தருமர், பீமன், அருச்சுனன் ஆகியோர் வந்துதித்தனர். அதன்பின் குந்தி, மாத்ரிக்கு அந்த மந்திரத்தை உபதேசித்தாள். மாத்ரி அந்த மந்திரத்தை இரட்டையர்களான அசுவினி தேவர்களை நினைந்து உச்சரிக்க  நகுலன், சகாதேவர் என்னும் இரட்டையர் பிறந்தனர். இன்னும் வியாசர் மூலமாக அம்பிகை, அம்பாலிகை, பணிப்பெண் ஆகிய மூவருக்கும் முறையே திருதராட்டிரன், பாண்டு, விதுரர் ஆகியோர் பிறந்தனர். அக்காலத்தில் அரச மகளிர் மந்திரம் உச்சரித்தும், முனிவர்கள் மூலமும் மகப்பேறு பெற்ற அதிசயச் செய்திகளையும் காண்கின்றோம்.
மன்னர் பலதார மணம் புரிவது ஒரு வழக்காக இருந்துள்ளதை மகாபாரதத்தில் காணக் கூடியதாக உள்ளது. சந்தனு மன்னன் கங்காதேவி, சத்தியவதி ஆகிய இருவரையும், விசித்திரவீரிய அரசன் அம்பிகை, அம்பாலிகை ஆகியோரையும், வியாச மகரிஷி அம்பிகை, அம்பாலிகை, பணிப்பெண் ஆகிய மூவரையும், திருதராட்டிர வேந்தன் காந்தாரி, காந்தாரியின் பத்துச் rNfhதரிகள் ஆகிய பதினொருவரையும், பாண்டு மன்னன் குந்தி, மாத்ரி ஆகிய இருவரையும், அருச்சுன அரசன் திரௌபதி, சுபத்திரை ஆகிய இருவரையும், பீமன் ஆன அரசன் திரௌபதி, இடும்பி ஆகிய இருவரையும் திருமணம் செய்து கொண்டனர். அக்கால மன்னர்கள் அதிகமாகப் போர் தொடுத்து மடிவதாலும், தத்தமது அரசுக்குப் பல வாரிசுகளை வைத்திருக்க வேண்டியதாலும், அவர்கள் பலதார மணம் புரிந்தனர் போலும்.
மேற்காட்டிய அரசியர்களான கங்காதேவி, சத்தியவதி, அம்பை, அம்பிகை, அம்பாலிகை, காந்தாரி, குந்தி, மாத்ரி, திரௌபதி, சுபத்திரை, உத்தரை ஆகியோர் தத்தமக்குரிய மன்னர்களுடன் இணைந்து வாழ்ந்து, அரசுப் பரம்பரையை நிலைநாட்ட உதவி நின்று, அரச வாரிசுகளைப் பெற்றுக் கொடுத்து, ஆட்சிப் பொறுப்பிலும் உதவி நின்று, தம் மன்னர்களை அறநெறிக்குட்படுத்தி ஆகிய பெரும் பொறுப்புகளில் ஈடுபட்டுள்ள அரசியர்கள் வாழ்த்திப் போற்றற்குரியோராவர்.

மகரிஷி மகேஷ்யோகி இந்திய சீனப்போரை நிறுத்திய யோகி.....‘இப்படியும் நடக்குமா?’ .

 

 

1962 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் போர் மூண்டது.சீனப்படையினர் இந்திய வீரர்களையும்,ஆயுதங்களையும் கைப்பற்றி முன்னேறிக்கொண்டிருந்தனர்.அப்பொழுது மகரிஷி மகேஷ் யோகி அவர்கள் இங்கிலாந்தில் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றி வந்தார்.அங்குள்ள மக்களிடம்,

“போரின் காரணமாக என் நாடு சண்டையில் ஈடுபட்டுள்ளது.உடனடியாக நான் இந்தியா போக வேண்டும்” என்று சொல்ல,அங்குள்ள மக்கள் மகரிஷியிடம்,


“உங்கள் ஞாபகார்த்தமாக ஏதாவது ஒன்றை விட்டுச் செல்ல வேண்டும்” என்று கேட்டனர்.உடனே அவர்களின் கோரிக்கையை ஏற்று ஒரு டேப் ரெக்கார்டரை எடுத்து வருமாறு பணித்தார்.


Science of being and art of Living என்ற தலைப்பின் கீழ் ஆன்மீக சொற்பொழிவாற்றி அவர்களுக்கு அளித்தார்.பின்னர் அச்சொற்பொழிவைப் புத்தக வடிவில் Penguin என்ற நிறுவனத்தினர் வெளியிட்டனர்.அது அவர்களுக்குக் கோடிக்கணக்கில் டாலர்களைச் சம்பாதித்துக் கொடுத்தது.




இந்தியா வந்த மகரிஷி மகேஷ்யோகி அவர்கள்,இந்திய ஜனாதிபதியைச் சந்தித்து,


“இப்போரை என்னால் தடுத்து நிறுத்த முடியும்.ஆனால்,நான் சொல்கிறபடி சில செயல்களை போர் நடக்கும் இடத்தில் செய்ய உங்களால் முடியுமா?” எனக் கேட்டார்.


அதற்கு இந்திய ஜனாதிபதி, “முடியாது.எங்கள் அரசு ஒரு சாமியார் பின்னால் போய்விட்டதாக மற்ற கட்சிகள் அவதூறு கூறுவார்கள்.ஆகவே,அரசு சம்பந்தப்படாமல் தாங்களே தனியாக எதுவும் செய்து போரைத் தடுத்து நிறுத்த முடியுமா என்று பாருங்கள்” என தனது இயலாமையை வெளியிட்டார்.




உடனே,மகரிஷி மகேஷ்யோகி அவர்கள்,தனது செயலாளர் தேவேந்திராவுடன் போர் நடக்கும் இடத்திற்கு அருகில் உள்ள மலைக்குகைக்குள் சென்றார்.சென்று,


“இந்தப் போர் நடப்பதற்கு சீனாவில் உள்ள ஒரு மனித மூளையே காரணம்.அவர் மனதை மாற்றிவிட்டால் போதும். அதை தியானம் செய்து மாற்றப் போகிறேன்.நான் வெளியில் வரும்வரை காவலாக இரு.யாரையும் உள்ளே விடாதே” என்று கூறி உள்ளே சென்றுவிட்டார்.




பின்,24 மணி நேரம் கழித்து வெளியே வந்த மகரிஷி மகேஷ்யோகி பக்கத்திருந்த ஊருக்குச் சென்று தினசரிப் பத்திரிகை வாங்கி வா என்று அனுப்பி வைத்தார்.பத்திரிகை வங்கிப்படித்த மகரிஷியின் செயலாளருக்கு ஆச்சரியமாக இருந்தது.ஆம்,சீனா சண்டையை நிறுத்தி விட்டது.தன் படைகளை இந்தியாவின் எல்லையிலிருந்து வாபஸ் பெற்றுக்கொண்டது.




இதைப் படித்ததும் அவரால் நம்ப முடியவில்லை; ‘இப்படியும் நடக்குமா?’ என்று ஆச்சரியத்தில் அதிர்ந்து போனார்.

நெஞ்சம் நெகிழ வைத்த ஒரு நிகழ்வு

ஜெர்மனியிலே பணிபுரியும்
நம் தமிழ்த் தம்பதிகளுக்கு
நெடுநாளாய் குழந்தை இல்லை.
கடைசியிலே அந்தப் பெண்ணுக்கு ஒரு
குழந்தையைச் சுமக்கும் பாக்கியம் கிடைத்தது.

ஆனால் பாருங்கள்,
குழந்தைக்குத் துடிப்பே இல்லை !

பயந்து போய் டாக்டர்களிடம் காட்டியும்
அசையாமல் ஜடமாக்க் கிடந்தது குழந்தை !
நொந்து நூலாகி நொடிந்து போன வேளையில்தான்
அந்த அதிசயம் நிகழ்ந்தது.
விடியற் காலை அந்த அம்மாவிற்கு
குழந்தை துடிப்பது போன்ற உணர்வு !
அப்போது வீட்டிலே
திருவாசகப் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.
சந்தேகப் பட்ட அந்த அம்மா திருவாசக இசையை நிறுத்தியதும்
குழந்தை துடிப்பது நின்றது.
பிளேயரை ஆன் செய்ததும் குழந்தை துடிக்க
அப் பெண் அடைந்த ஆனந்தம் ! அளவே இல்லை

அப்புறம் என்ன,

தினம் தினம் தேவார- திருவாசக இசை வெள்ளம்தான் வீடு முழுக்க . .!

குழந்தையை நல்ல படியாகப் பெற்ற அத் தம்பதிகள்
இதற்காகவே தமிழ் நாடு வந்து
திருவாசகத்திற்கு இசை அமைத்த
இசைஞானி இளையராசாவைச் சந்தித்து ஆசியும் பெற்றுத்
திரும்பினர் என்றால்
செய்தியா , சரித்திரம் அல்லவா இது ?



நாரத கானம் கேட்ட இராட்சசிக்குப் பிரகலாதன் பிறந்தான்.

நாக்கு முக்குக் கேட்டால் தேவதைக்குக் கூட இராட்சதன் பிறக்கலாம் !
வருங்காலம் உங்கள் கையில் . .!
இல்லை உங்கள் காதில் !


Source frm: SANMARGAM – An Art Of Immortality

அய்யா வைகுண்டர் வகுத்த 32 அறங்கள்..

அய்யா வைகுண்டர் வகுத்த 32 அறங்கள்

1.வழிபோக்கர்களுக்கு சத்திரங்கள் கட்டி வைப்பது.
2.கல்வி கற்கும் ஏழை பிள்ளைகளுக்கு உணவு வசதி அளிப்பது.
3.அறுவகை சமயத்தார்க்கும் உணவு கொடுப்பது.
4.பசுவுக்கு புல்லும்,வைக்கோலும் கொடுப்பது.
5.சிறைச்சாலையில் துன்புறுவோர்க்கு அன்னமிடுதல்.
6.வீடு தேடிவரும் ஏழைகளுக்கு பிச்சை இடுதல்.
7.திண்பண்டம் நல்கல்.
8.அறநெறி மேற்கொண்டு வாழும் துறவிகளுக்கு பசியமர்த்துவது.
9.அனாதை குழந்தைகளை எடுத்து வளர்ப்பது.
10.அனாதைப் பிணங்களை எடுத்து அடக்கம் பண்ணுவது.
11.தாய்மை பேறுபெற்ற பெண்களுக்கு உதவி செய்வது.
12.வாசனைப் பொருட்களை கொடுப்பது.
13.நோயாளிகளுக்கு மருந்துகள் கொடுத்து உதவுவது.
14.துணிவெளுக்கும் தொழிலாளர்களுக்கு உதவி செய்வது.
15.நாவிதர்களுக்கு உதவி செய்வது.
16.ஏழை பெண்களுக்கு பொன் தானம் செய்வது.
17.ஏழைகளின் கண் நோய்க்கு மருந்து கொடுத்து உதவுவது.
18.தலைக்கு எண்ணெய் கொடுப்பது.
19.திருமணம் ஆகாத ஏழைகளுக்கு திருமணம் செய்து வைப்பது.
20.பிறர் துன்பம் தீர்ப்பது.
21.தண்ணீர் பந்தல் வைத்து உதவுவது.
22.மடம் கட்டி சமய அறிவை வளர்ப்பது.
23.சாலைகள் அமைத்து கொடுப்பது.
24.சோலைகளை உண்டாக்கி வைப்பது.
25.பசுமாடுகள் உடம்பைத் தேய்த்துக்கொள்ள தூண்களை நிறுவுவது.
26.மிருகங்களுக்கு உணவளிப்பது.
27.சுமைதாங்கி நிறுவுதல்.
28.விலைகொடுத்து உயிரை காப்பாற்றுதல்.
29.கன்னிகாதானம் செய்து கொடுத்தல்.
30.குழந்தைகளுக்கு பால் வழங்குதல்.
31.பார்வையற்றோருக்கு வழிதுணை புரிதல்.
32.வஸ்த்திர தானம் செய்தல்.
இவைகளே அய்யாவைகுண்டர் வகுத்த 32 அறங்கள் ஆகும்.இவற்றை நம் அன்றாட வாழ்வில் கடைபிடித்து மகிழ்வோம்.
அய்யா உண்டு!

நான் யார்? - ரமண மகரிஷி

உண்மையில், 'நான் யார்?' என்னும் விசாரணையின் பொருள் 'அகந்தையாகிற நான் எனும் எண்ணத்தின் தோற்றுவாய் எது?' என்பதை அறிவதற்கான முயற்சியே ஆகும். 'நான் இந்த உடல் அல்ல' போன்ற பிற எண்ணங்களுக்கு மனத்தில் இடமளிக்கக் கூடாது. 'நான்' என்பதன் மூலத்தை நாடுவது, மற்ற எண்ணங்கள் யாவற்றையும் களைந்தெறிவதற்கான வழிமுறைக்கு சாதகமாக அமைகிறது. வேறெந்த எண்ணங்களுக்கும் நீங்கள் வாய்ப்பளிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

மாறாக, நான் எனும் எண்ணத்தின் பிறப்பிடத்தைக் கண்டுபிடிக்கும் ஒரே நோக்கத்தில் மனதைக் குவித்து நிலைநிறுத்த வேண்டும். எவ்வாறென்றால், வேறு எந்த எண்ணம் தலை தூக்கினாலும் 'அவ்வெண்ணம் யாருக்கு எழுகிறது?' என்று கேட்டுக்கொள்ள வேண்டும். 'வேறு யாருக்கு? எனக்கேதான்!' என்று அதற்கு விடை கிடைத்தால் நீங்கள் அடிப்படையான விசாரத்தைத் தொடர வேண்டும். அதாவது, "இந்த 'எனக்கு' எனும் 'நான்' யார்?, அதன் பிறப்பிடம் எது? என்ற விசாரத்தைத் விடாப்பிடியாய்ப் பற்ற வேண்டும்.

'நான்' யாரென்று எப்படித் தேடித் தெரிந்துகொள்வது?

ரமணர்: நம்மையே நாம் கேட்டுக்கொள்ள வேண்டும். முதன் முதலாக, இந்த உடலும் அதன் இயக்கங்களும் (அன்னமயகோசம்) நாமல்ல என்று அறிகிறோம். இன்னும் ஆழ்ந்து விசாரிக்கும் போது மனமும் அதன் விருத்தி பேதங்களும் (மனோமயகோசம்) நாமல்ல என்று உணர்கிறோம். அடுத்தபடி எண்ண விருத்திகள் எங்கிருந்து கிளம்புகின்றன என்று கவனிக்க வேண்டும். விருத்திகள் தாமாகவே கிளம்பிக் கொண்டிருக்கின்றன - ஒன்று, மேலோட்டமான சாதாரண நினைவுகளாகவே, அல்லது ஆலோசிப்பவைகளாகவே எழுகின்றன. அவை புத்தியிலேயே இயங்குகின்றன. அவற்றை புத்திப்பூர்வமாக உணர்வது யார்?

எண்ணங்களின் இருப்பும், அவற்றின் தெளிவான விவரங்களும் இயக்கமும், 'நான்' எனும் தனி ஜீவனுக்கே தெரிகின்றன. இவ்வாறு எண்ணங்களின் இருப்பையும் தொடர்பையும் உணர்வது எதுவோ அதுவே ஜீவவியக்தி அல்லது 'நான்' எனும் அகங்காரம் (அகந்தை), புத்தி (விஞ்ஞானமய கோசம்) என்பது அகந்தையின் உபாதியே (செருகுவதற்குரிய கவச உறை மட்டுமே) அன்றி அதுவே அகந்தை ஆகாது. இந்த அகந்தை, அதாவது 'நான்', என்பது என்ன? அது எங்கிருந்து கிளம்புகிறது? கனவிலும் நனவிலும் அதே 'நான்' உடன் தொடர்கிறது. கனவைப் பற்றி நனவில் இப்போது விசாரிக்க வேண்டியது ஒன்றும் இல்லை.

விழிப்பு நிலையில் இப்போதுள்ள 'நான்' யார்? 'நான்' தூக்கத்திலிருந்து வெளிப்பட்டவன் எனின், தூங்கும் போது அறியாமை இருளில் 'நான்' அழுந்திக் கிடந்தேன் என்று விழித்தபின் தெரிகிறது. வேத சாஸ்திரங்களும் ஞானியரும் ஐயமறக் கூறும் ஆன்ம சொரூபம் அந்த அழுந்திடக் கிடந்த அகந்தையாகிய 'நான்' ஆக இருக்க முடியாது. தூக்கத்தைக் கடந்து இருப்பதும், தூக்கத்தின்போது கனவிலும், பின்னர் நனவிலும் அந்த நிலைகளின் குணங்கள் அறவே இல்லாமல் இருந்து வருவது எதுவோ அதுவே யதார்த்தமான நான்.

அவஸ்தாதிரயத்தின் (துயில், கனவு, நனவு ஆகிய மூன்று நிலைகளின்) சாட்சியாய் (சான்றாய், நேர்காட்சியாளனாய்), அதிஷ்டானமாய் (உறைவிடமாய்), குணங்குறியற்று இருப்பது எதுவோ அதுவே 'நான்' எனும் ஆன்ம சொரூபம், என்று இவ்வாறு அகமுக விசாரணையால் அனுபவத்துத் தெரிந்துகொள்ள வேண்டும்.

பஞ்ச கோசங்களையும் கடந்து நிற்பது ஆத்ம சொரூபம். ஆநாத்ம (ஆன்மா இல்லாத) தத்துவங்களை 'நானல்ல, நானல்ல' என்று ஒதுக்கித் தள்ளிய பிறகு அங்கே விளங்குவது தய சத்-சித்-ஆனந்த சொரூபமாம் ஆத்மாவே.

பஞ்ச கோசங்களாவன: அன்னமயம் (உடல்), பிராணமயம் (ஐம்பொறிகளும் பிராணனும்), மனோமயம் (ஐம்புலன்களும் மனமும்), விஞ்ஞானமயம் (ஞானேந்திரியமும் புத்தியும்) மற்றும் ஆனந்தமயம் (மாண்டூக்ய உபநிஷத்தில் கூறப்படும் ஆழ்ந்த உறக்க நிலை).

சுவர்க்கம் - நரகம்

சுவர்க்கம் - நரகம் என்பது எதோ மேல் உலகில் உள்ளது போல எல்லா மதங்களிலும் கூறப் பட்டுள்ளன.
ஆனால் இன்பம் மற்றும் துன்பம் அனைத்தையும் அனுபவிப்பது நமது உடலுடன் சேர்ந்த ஆன்மாவே. இந்த உடலை விட்ட பின்னர் இந்த ஆன்மா எந்த இன்பத்தையோ அல்லது எந்த துன்பத்தையோ எதன் மூலம் அனுபவிக்கும். இந்த தூல உடலுக்கு மட்டுமே வலியும், சந்தோஷமும். தூலம் விட்ட பின்னர் எவ்வளவு உணவு வைத்தாலும்எப்படி சாப்பிட முடியும். எத்தனை அழகான பெண் இருந்தாலும் எப்படி ரசிக்க முடியும். நெருப்பிலே போட்டு எரித்தாலும் எப்படி நமக்கு வலிக்கும்.நமக்கு தேகம் என்று ஒன்று இருந்தால் மட்டுமே அது வேகும்.ஆன்மா எப்படி வேகும். ஆக சுவர்க்கம் மற்றும் நரகம் என்பதுநம் உடலை விட்ட பிறகு ஏற்படுவதல்ல. இந்த உடல் இருக்கும் போதே அதை அடைவதுதான்.
முதலில் நரகம் என்றால் என்ன ?நர + அகம் = நரகம் நரர்களாகிய மனிதர்கள் வாழ்கின்ற இந்த இடம் தான் நரகம். அதாவது நாம் நரன் என்னும் மனித தரத்துடன் வாழ்வது நரகம்.
நரன் நிலையை விட்டு இறை நிலையை அடைவதுதான் சொர்க்கம். அதாவது கடவுள் நிலை அறிந்து அம்மயமாதலே சுவர்க்கம் எனப்படும்.


அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு

36 குணங்களைக் கடை பிடிக்க வேண்டும்.அவை

 36 குணங்களைக் கடை பிடிக்க வேண்டும்.அவை



1) விருப்பு, வெறுப்பு இன்றித் தர்மங்களைச் செய்தல்

2) பரலோகத்தில் விருப்புடன் நட்புப் பாராட்டுதல்

3)அறவழியில் பொருளை ஈட்டுதல்

4)அறம் பொருள்கட்கு அழிவின்றி இன்பத்தைப் பெறுதல்

5)யாருடனும் அன்புடன் பேசுதல்

6)நல்லவர் அல்லாதார்க்குத் தராத கொடையாளியாக இருத்தல்

7)தற்புகழ்ச்சியின்றி இருத்தல்

8)கருணையுடன் இருத்தல்

9)கெட்டவர்களுடன் சேராது நல்லவர்களுடன் சேர்ந்திருத்தல்

10)பகைவன் எனத் தீர்மானித்துப் போரிடல்

11)நற்குணம் அற்றவரிடம் தூதர்களைச் சேராது இருத்தல்

12)பிறர்க்குத் துன்பம் தராது பணி புரிதல்

13)சான்றோரிடம் பயனை அறிவித்தல்

14)பிறரது குணங்களை மட்டுமே கூறுதல்

15)துறவியர் அல்லாதாரிடம் கப்பம் வாங்குதல்

16)தக்காரைச் சார்ந்திருத்தல்

17)நன்கு ஆராயாமல் தண்டனை தராதிருத்தல்

18)ரகசியத்தை வெளியிடாதிருத்தல்

19)உலோபிகள் அல்லாதார்க்குக் கொடுத்தல்

20)தீங்கு செய்பவரை நம்பாதிருத்தல்

21)அருவருப்படையாமல் மனைவியைக் காத்தல்

22)தூய்மையுடன் இருத்தல்

23)பல பெண்களுடன் சேராதிருத்தல்

24)நலம் பயக்கும் சுவைகளை உண்ணுதல்

25)வழிபடத் தக்கவர்களைக் கர்வம் இன்றி வழிபடல்

26)வஞ்சனையின்றிப் பெரியோர்க்குப் பணிவிடை செய்தல்

27)அடம்பரமின்றித் தெய்வ பூஜை செய்தல்

28)பழிக்கு இடமில்லாப் பொருளை விரும்புதல்

29)பணிவுடன் பணி புரிதல்

30)காலம் அறிந்து செயல் படுவதில் வல்லவனாய் இருத்தல்

31)பயனுள்ளவற்றையே பேசுதல்

32)தடை சொல்லாது உதவி புரிதல்

33)குற்றத்திற்கேற்பத் தண்டித்தல்

34)பகைவரைக் கொன்றபின் வருந்தாதிருத்தல்

35)காரணமின்றிச் சினம் கொள்ளாதிருத்தல்

36)தீங்கு செய்தவரிடம் மென்மையாக இராமை

ஆகியவையாகும்..

கீதையின் சாரம்

சுவாமி சிவானந்தரிடம் சிலர் சென்றார்கள்.
‘சுவாமி எங்களுக்கு வேதம், சாஸ்திரம்,
பகவத்கீதை, புராணம், எதையும் படிக்க
முடியவில்லை. மிகவும் சுலபமாக அத்தனை
விஷயங்கைளயும் தெரிந்து கொள்ள விரும்புகிறோம்
‘கீதையின் சாரம்’ என்ன என்று எங்களுக்குச்
சொல்லுங்கள் என்று கேட்டார்கள்.

கீதையின் சாரத்தைக் கூறுவது மிகவும் சுலபம்.
மூன்றே சொற்களில் கீதையை அடக்கி விடலாம்
என்றார் சிவானந்தர்.

LOVE, SERVE, GIVE – இதுதான் கீதையின் சாரம்.

‘அன்புசெய்
சேவை செய்
பிறருக்கு வழங்கு’-
இதுதான் கீதையின் சாரம் என்றார் சிவாமி
சிவானந்தர்.
--
>அமரர் கிரிதாரி பிரசாத்

பகவத் கீதை

பகவத் கீதை என்பது இந்து சமயத்தினரின் முக்கிய நூல்களுள் ஒன்றாகும். மகாபாரதத்தில் நடைபெறும் குருச்சேத்திரப் போர் தொடங்கும் முன் எதிரணியை ஒருமுறை பார்வையிட்ட அர்ஜூனன் அங்கே தன் உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் போன்றோர் இருப்பதால் போரிட மறுத்தான். இதைக் கண்ட அவன் தேரோட்டியான கிருஷ்ணர், தர்மத்திற்காக போரிடும் பொழுது உறவுமுறைகள் குறுக்கிடக்கூடாது என்றார். மேலும் அப்போது அவனுடன் தத்துவங்கள், யோகங்கள் போன்றவை பற்றியும் உரையாடினார். இந்த உரையாடலே பகவத் கீதை ஆனது.

அர்ச்சுனனின் மதிக்கலக்கம்

18 அட்சௌகிணி சேனைகளும் போருக்கு ஆயத்த நிலையில் நிற்கும்போது பேடிபோல் பின்வாங்குகிறான் அர்ச்சுனன். எந்தப் போருக்காக பல ஆண்டுகளாக வானுலகம் வரை சென்று ஆயத்தம் செய்திருந்தானோ, எந்தப் போரை எதிர்பார்த்து தன் கோபத்தையும் துக்கத்தையும் கட்டுப்படுத்தி வைத்திருந்தானோ, அந்தப் போர் இதோ சங்கு ஊதவேண்டிய தருவாயில் போர் தொடங்கும் நிலையில் இருந்தபோது, கடைசித் தருணத்தில் அம்பையும் வில்லையும் கீழே எறிந்துவிட்டு ‘இந்தப்போர் எனக்கு வேண்டாம், மலர்களால் அர்ச்சிக்க வேண்டிய என் குருமார்களையும், மூத்தோர்களையும் அம்புகளால் அடிக்க மாட்டேன்’ என்று வாதம் பேசுகிறான் அர்ச்சுனன். அவனுடன் நீண்ட நேரம் வேதாந்தம் பேசி, பக்தியின் நெளிவு சுளுவுகளை அலசி, சுயதருமம் என்ற கடமைக்குப் பொருள் கூறி, அவனுடைய அறியாமையைப் போக்குகிறார் கண்ணன். முடிவில், ‘கண்ணா, உன் சொற்படி செய்கிறேன்’ என்று அர்ச்சுனன் போருக்கு ஒப்புக்கொள்கிறான், என்பதுடன் 18வது அத்தியாயத்தில் கீதை முடிகின்றது.

[தொகு] கண்ணனின் ஐந்து வாதங்கள்

அப்படி கண்ணன் என்ன சொல்லி அவனுக்குப் புரிய வைத்தார் என்பதுதான் கீதை. அர்ச்சுனனின் ஐயமென்ற சிடுக்கை அவிழ்த்து விடுவதற்காக் கண்ணன் எடுத்தாளும் வாதங்கள் ஐந்து. ஒவ்வொரு வாதமும் ஒரு குறிப்பிட்ட கோணத்திலிருந்து பார்க்கும் பார்வையோ அல்லது ஒரு குறிப்பிட்ட மனப்போக்கினால் ஏற்றுக்கொள்ளும் போர்வையையோ அடித்தளமாகக் கொண்டது. அவ்வைந்தாவன:

* வேதாந்தப்பார்வை
* சுயதருமப் பார்வை
* கருமயோகப் பார்வை
* எல்லாம் அவன் செயல் என்ற பக்திப்போர்வை
* அவனும் செயலாளியல்ல, பிரகிருதி தான் செய்கிறது என்ற தத்துவப்போர்வை.

[தொகு] வேதாந்த வாதம்

“வருந்தப்பட வேண்டாததற்கு வருத்தப்படுவது அறிவாளிகளுடைய செயலல்ல. மூன்று காலத்திலும் எந்தப் பொருள் இல்லையோ அதற்கு ஒரு காலத்திலும் இருப்பு என்பதில்லை. இருப்பது போல் தோன்றினாலும் அது நிகழ்காலத் தோற்றம் மட்டும்தான். மூன்று காலத்திலும் எந்தப் பொருள் உள்ளதோ அதற்கு ஒரு காலத்திலும் இல்லாமை என்பதில்லை. புலன்களுக்கு அகப்படாததை இல்லை என்று சொல்லிவிட முடியாது. ஆன்மா என்ற ஒன்றுதான் அழியாத நிரந்தரமான உட்பொருள். அதை யாராலும் அழிக்க முடியாது. அழிவதாக நமக்கு தெரிவதெல்லாம் உடம்பு தான். அர்ச்சுனா, எதிரிகளின் மீதுள்ள பாசத்தை விட்டுப் போர் புரி. அவர்கள் உடம்பில் குடிகொண்டிருக்கும் ஆன்மா யாரையும் கொல்லாது, அதை யாராலும் கொல்லவும் முடியாது. அதனால் நீ யாருக்காகவும் வருத்தப்பட வேண்டம்” இந்த வாதத்தின் அடிப்படையில் தான் முழு கீதையும் செயல்படுகிறது.

[தொகு] சுயதரும வாதம்

“அர்ச்சுனா, உன்னுடய சுயதருமம் க்ஷத்திரியனுக்குகந்த தருமப்போர் தான். இப்போருக்காக நீ பல ஆண்டுகள் தவமிருந்திருக்கிறாய். போரிலிருந்து பின்வாங்குவது உனக்கு ஒவ்வாத ஒன்று.” ‘சுயதருமமும் உன் சுபாவமும் விதிக்கும் க்ஷ்த்திரிய தருமத்தில் குறை இருந்தாலும் அதைக் கைவிடாதே. எந்தச் செய்கையிலும் நெருப்புக்குப் புகைபோல் ஏதாவதொரு குறை இருக்கத்தான் செய்கிறது’.(18-48)

(அடைப்புகளிலுள்ள குறியெண்கள் கீதையில் அத்தியாய எண்ணையும் சுலோக எண்ணையும் குறிக்கின்றன).

‘பிறிதொருவனுடைய கடமையை ஏற்று அதை நன்றாகச் செய்தாலும் அதைவிடச் சிறந்தது தன்னுடைய கடமையில் ஈடுபட்டிருப்பதே. அது முறையாக ஆற்றப்படாவிடினும் அதுவே சிறந்தது’ (3-35). ‘சுபாவத்தினால் விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்வதில் பாவம் சம்பவிப்பதில்லை’ (18-47). இந்த சுயதருமப் பார்வை எப்படி மற்ற வாதங்களுடன் ஒழுங்காகவும் தர்க்க ரீதியாகவும் பிணைக்கப் படுகின்றது என்பது கீதையின் சிறந்த சாதனைகளில் ஒன்று.

[தொகு] கருமயோகப்பார்வை

இது கருமயோகம் என்று பெயர் கொண்ட புரட்சி மிகுந்த உபதேசம். எளிதில் தவறாகப் புரிந்துகொள்ளக் கூடியது. ‘ஒவ்வொரு மனிதனும் செய்யவேண்டிய கடமைகள் பல. அவைகளைச் செய்வதில் விருப்போ அல்லது வெறுப்போ ஒரு பிரச்சினை ஆகக்கூடாது. கடமையைக் கடமைக்காகவே செய்ய வேண்டும். கடமையைச் செய்வதற்குத் தான் உனக்கு அதிகாரம். அவை என்ன பயன் தருகிறதோ, தருமோ என்ற பிரச்சினை உன்னை எந்த விதத்திலும் பாதிக்கக்கூடாது. பயனுக்காகவோ அல்லது பயனை விரும்பியோ, வெறுத்தோ செயலில் ஈடுபடுவது உன்னை கட்டுப்படுத்தும். இந்தப்போர் உன்னுடைய கடமைகளில் ஒன்று. இதை ஆசையோ, நிராசையோ, கோபமோ தாபமோ இல்லாமல், ஆனால் அலட்சியமும் இல்லாமல், நன்றாகவே செய்யவேண்டும்’. ‘உனது செயல்களை யெல்லாம் எனக்கு அர்ப்பணித்து விட்டு என்னில் நிலைத்த மனதுடன், பயனில் பற்றற்று, அகங்காரத்தை விட்டு, மனக் கொதிப்பில்லாமல் போரிடு’ (3 – 30). கீதை 2வது அத்தியாயம் 39 வது சுலோகத்திலிருந்து 5வது அத்தியாயம் முடியும் வரை இதை கருமயோகம் என்ற ஒரு உயரிய யோக நூலாகவே விவரிக்கின்றான் கண்ணன்.

[தொகு] பக்தியோகம்

இதைப்பேசும்போது கண்ணன் தன்னை ஆண்டவனாகவே வைத்துப்பேசுகிறான். ‘எல்லாம் வல்ல இறைவன் நான். என்னை நம்பு. நீயாகச்செய்வது ஒன்றுமே இல்லை. என்னையன்றி ஓரணுவும் அசையாது.’ 11 வது அத்தியாயத்தில் தன் விசுவ ரூபத்தைக் காட்டிவிட்டு கண்ணன் சொல்கிறான்: ‘இவர்களெல்லாம் என்னால் ஏற்கனவே கொல்லப்பட்டவர்களே. நீ என் கருவி மட்டும் தான்.’ (11–33). ‘உன் செயல்களை யெல்லாம் எனக்காகச் செய். இவ்வுலகிலும் சரி, அவ்வுலகிலும் சரி. நான் உன்னுடன் இருப்பேன்.’. இப்படிப் போகிறது இந்த வாதம். இது எல்லாம் ஈசன் செயல் என்ற பக்திப் போர்வையை ஆதாரமாகக் கொண்டு எடுத்தாளப்பட்ட வாதம்.

[தொகு] பிரகிருதி தான் செய்கிறது

ஈசனும் செயலாளியல்ல. பிரகிருதி தான் செய்கிறது. ‘பிரகிருதி’ என்பது மனிதனின் கூடவே பிறந்த சுபாவம். ‘அகங்காரத்தினால் நீ செய்வதாக நினைத்துக்கொண்டு நான் சொல்வதைக் கேளாமல் செயற்படுவாயானால், அழிந்து போவாய்’ (18–58). ‘அகங்காரத்தின் மயக்கத்தினால் நீ போரிட மாட்டேன் என்று நினைப்பது வெற்றுத் தீர்மானம். அது நடக்காது. உன் பிரகிருதி உன்னை அப்படிச் செய்ய விடாது’ (18 – 59). ‘எந்தக் காரியத்தைச் செய்ய மாட்டேன் என்று நீ பின்வாங்குகிறயோ அதையே செய்யும்படி உன் பிரகிருதி (சுபாவம்) உன்னைக் கட்டாயப்படுத்தும்.’ (18-60). இதுதான் பிரகிருதியை ஆதாரமாகக்கொண்டு தத்துவ ரீதியில் எடுத்தாளப்பட்ட ஐந்தாவது வாதம்.

[தொகு] சரணாகதி என்ற முத்தாய்ப்பு

கண்ணன் கடைசியாக ‘உன் சுமையையெல்லாம் என்மேல் இறக்கி வை. தருமம், அதருமம் இரண்டுக்கும் பொறுப்பாளி நீயல்ல என்றறிந்து, என்னையே ஒரே புகலிடமாகக்கொண்டு, உன் கடமையைச்செய்.’ (18-66) என்று முத்தாய்ப்பு வைக்கிறார். இவ்வைந்து வாதங்களின் பலத்தால் தான் அர்ச்சுனன் போரிடத் தொடங்குகிறான்.

[தொகு] மானிட சமூகத்திற்கு கீதையின் படிப்பினை

போர் புரியமாட்டேன் என்ற அர்ச்சுனனை எப்படித் திருத்தினார் என்பதற்காக எடுத்தாளப்பட்ட ஐந்து வாதங்களைப் பிரித்துவிட்ட பின்பும் மானிடரனைவருக்கும் கண்ணனால் கூறப்பட்ட போதனைகளையும் ஐந்தாகச் சொல்லலாம். இவை ஆன்மிகத்தை நாடும் மக்களுக்கு வாழ்க்கைச் செயல் முறைகளாகவும் எக்காலத்திலும் நன்மை பயக்கும் வழிகாட்டிகளாகவும் கலங்கரை விளக்குகளாகவும் விளங்குகின்றன. இவ்வைந்தும் சேர்ந்து இந்து சமயத்தின் சாராம்சமாகவும் அமைகின்றன. அவையாவன:

* பற்றுகளை அறு. அதற்காக புலனடக்கம் என்ற யோகசாதனையைச் செய்துகொண்டே இரு.
* பலனில் பற்றற்று சுயதருமத்தை ஒழுகு.
* ஈசனை மறக்காதே. அந்த இரண்டற்ற பரம்பொருளிடம் சுயநலமற்ற பக்தியைச் செலுத்து.
* அம்மெய்ப் பொருளையே புகலிடமாகக் கொள்.
* யாரையும் எதையும் வெறுக்காமலிருக்கும் சமநோக்கு அல்லது பிரும்ம உணர்வு என்னும் முடிவை நோக்கிச் செல். இதுதான் வேதங்களும் உபநிடதங்களும் இதிகாச புராணங்களும் எண்ணற்ற பெரியோர்களும் மனிதனுக்குப் புகட்டும் முடிந்த முடிவான படிப்பினை.

[தொகு] கீதைக்கு உரைகள் பல

ஆதி சங்கரர், இராமானுஜர், மத்வர் ஆகிய மூன்று மதாச்சாரியர்களும், மற்றும் நிம்பர்க்கர், வல்லபர், ஞானேசுவரர் ஆகியவர்களும் எழுதிய பண்டைய உரைகளே மற்ற பல உரைகளுக்கு வழிகாட்டிகளாக அமைந்தன. இருபதாவது நூற்றாண்டில் சுவாமி சின்மயானந்தா, பக்திவேதாந்த ஸ்வாமி, எஸ். ராதாகிருஷ்ணன், சுவாமி சிவானந்தர், சுவாமி அரவிந்தர், மகாத்மா காந்தி, ஆச்சார்யா வினோபாவே, அன்னி பெசண்ட் அம்மையார், சுவாமி சித்பவானந்தர் யாவரும் இன்னும் பலரும் சிறந்த உரை இயற்றியிருக்கின்றனர். அநேகமாக உலகத்திலுள்ள எல்லா மொழிகளிலும் கீதை மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது.

[தொகு] இன்னும் மற்ற கீதைகள்

கீதை என்னும் சொல் பாடப்பட்டது அல்லது உபதேசிக்கப்பட்டது என்ற பொருள் கொண்டது. கண்ணன் அர்ஜுனனுக்கு போர்க்களத்தில் உபதேசித்த பகவத்கீதையைத் தவிர தத்துவத்தை எளிதில் எடுத்துக் கூறுகின்ற் இன்னும் பல கீதைகள் உள்ளன. அவையாவன:

* அவதூத கீதை
* உத்தர கீதை
* பிக்ஷு கீதை
* அஷ்டாவக்ர கீதை
* ராம கீதை
* சுருதி கீதை
* குரு கீதை

[தொகு] துணை நூல்கள்

* Swami Shivananda. Srimad Bhagavad Gita. 1967. Divine Life Society, Shivanandanagar, Aurobindo. Essays on the Gita. 1922. Aurobindo Ashram. Pondicherry.
* T. Subba Row. Notes on the Bhagavad Gita. 1978. Theosophical Society Press. Pasadena, California.
* பேராசிரியர் (பிலானி) கிருஷ்ணமூர்த்தி. கண்ணன் சொற்படி வாழ்வதெப்படி? 2001. அல்லயன்ஸ் கம்பெனி. சென்னை.

[தொகு] வெளி இணைப்புகள்

* பகவத் கீதை- பாரதியாரின் முன்னுரை
* தமிழில் பகவத்கீதை
* Gita Supersite

ஆலயங்களில் - சிறு தெய்வத்தை கூறி "உயிர் கொலை" - சிந்தியுங்கள்!!

அன்பு உடையவர்களே ,
  • முஸ்லிம் சகோதர்கள் பள்ளிவாசலில் உயிர் இனங்களை பலி இடுவதில்லை .
  • கிறிஸ்துவ சகோதர்கள் சர்ச்சில் , உயிர்களை பலி இடுவதில்லை .
  • ஆனால் , சிறு தெய்வ வழிபாடு என்ற பெயரால் ஆடு , மாடு , கோழி முதலான உயிர் இனங்களை பலியிட்டு , கோயிலை கொலை களமாக்கும் கொடுமை இந்து மக்கள் பலரிடம் எப்படி புகுந்ததோ? ( கோயிலா !! கொலை களமா!!) சிந்தியுங்கள்!!
=========================================
(வள்ளலாரின் , பிள்ளைப் பெரு விண்ணப்பம் )
(3473).
துண்ணெனக் கொடியோர் பிறவுயிர் கொல்லத் தொடங்கிய போதெலாம் பயந்தேன்
கண்ணினால் ஐயோ பிற உயிர் பதைக்கக் கண்ட காலத்திலும் பதைத்தேன்
மண்ணினில் வலையும் தூண்டிலும் கண்ணி வகைகளும் கண்ட போதெல்லாம்
எண்ணி என் உள்ளம் நடுங்கிய நடுக்கம் எந்தை நின் திருவுளம் அறியும்"
===========================================
வள்ளலார், இறைவன் பெயரால், ஆலயங்களில் உயிர் பலி கூடாது என "எச்சரிக்கை" கொடுகின்றார்கள்.

Anbudan,
Vallalar Karthikeyan

பகவத் கீதை - அத்தியாயம் 18

மோட்ச சன்யாஸ யோகம்

அர்ஜூனன் : கேசியை அழித்தவரே, தியாகத்தையும் துறவையும் பற்றி அறிய விரும்புகிறேன்.

பகவான் : பலனை விரும்பி செய்யும் செயல்களின் பலனை, தான் அனுபவிக்காமல் விட்டுக் கொடுப்பது தியாகம் என்றும், அச்செயல்களையே விட்டு விடுவது சன்யாசம் என்றும் பெரியோர்களால் அழைக்கப்படுகிறது.

எல்லாவிதமான பலன் தரும் செயல்களையும் துறக்குமாறு அறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால் யாகம், தானம், தவம் போன்ற தியாகச் செயல்கள் என்றுமே துறக்கப்படக்கூடாது என முனிவர்கள் கூறுகின்றனர்.

மஹாத்மாக்களைக் கூட தூய்மைப்படுத்துவதால் யாகம், தானம், தவம் போன்ற தியாகச் செயல்கள் என்றுமே துறக்கப்படக்கூடாது; பலன் பாராது ஒரு கடமையைப் போல இவை செய்யப்பட வேண்டும் என்பதே என் அபிப்ராயம்.

விதிக்கப்பட்ட கடமைகளை ஒருவன் துறக்கக்கூடாது; மோகத்தால் துறந்தால் அத்துறவு தமோ குணத்தாலானது.

கடமைகளை, உடல் வருத்தத்திற்குப் பயந்து துறந்தால், அது ரஜோ குணமாகும். இதற்கு துறவின் பலன் கிட்டாது.

செய்வதற்காக மட்டுமே, விதிக்கப்பட்ட கடமையைப் பலனில் பற்றின்றி செய்பவனது துறவு, சத்வ குணத்தாலானது.

சத்வ குணத்தவன், மங்கலச் செயல்களில் பற்று வைப்பதோ, அமங்கலச் செயல்களை வெறுப்பதோ இல்லை. செயல்பாடுகளிலும் அவனுக்கு சந்தேகம் வருவதில்லை.

உடலுடையவனுக்கு செயலைத் துறப்பது கடினம். எனவே செயலின் பலனைத் துறப்பவனே தியாகி எனப்படுவான்.

தியாகமற்றவனுக்கு இறப்பிற்குப் பின் சுவர்க்க, நரக அல்லது நடுநிலை எனும் மூவித கர்ம விளைவுகள் உண்டாகின்றன. சன்யாசிக்கு அவைகள் இல்லை.

பலவானே, செயலுக்கு முழுவடிவு தரும் ஐந்து காரணிகள் : இடம், இடமளிப்பவன், இந்திரியங்கள், இஷ்டம், இறுதியில் இறைவன் என ஸாங்க்ய தத்துவம் தெரிவிக்கிறது.

உட‌ல் ம‌ன‌ம் வாக்கினால் எதைச் செய்தாலும் அவை ச‌ரியான‌தோ அல்ல‌து த‌வ‌றான‌தோ இந்த‌ ஐந்து கார‌ணிக‌ளாலேயே உருவாகின்ற‌ன‌. இக்கார‌ணங்க‌ளைக் க‌ருதாது, த‌ன்னைக் கார‌ண‌மாக‌க் க‌ருதுப‌வ‌ன் அறிவாளி அல்ல‌; விஷ‌ய‌ங்க‌ளை உள்ள‌ப‌டி காண்ப‌வ‌னும‌ல்ல‌.

பொய் அக‌ங்கார‌மின்றி, ப‌ற்றின்றி இருப்ப‌வ‌ன் உல‌க‌த்தாரைக் கொன்றாலும் கொல்லாத‌வ‌னாவான். த‌ன் செய‌ல்க‌ளால் அவ‌ன் ப‌ந்தப்ப‌டுவ‌தில்லை.

அறிவு, அறிவின் இல‌க்கு, அறிப‌வ‌ன் இவையே செய‌லைத் தூண்டுப‌வை. க‌ருவி, க‌ர்ம‌ம், க‌ர்த்தா இவை செய‌லுக்கான‌ இருப்பிட‌ங்க‌ளாகும்.

முக்குண‌ங்க‌ளுக்கு ஏற்ப‌ அறிவு, செய‌ல் ம‌ற்றும் செய‌ல்ப‌டுவோர் இருக்கின்ற‌ன‌ர்.

வேறுப‌ட்ட‌ உயிரின‌ங்க‌ளில் வேற்றுமையின்றி ஒரே ஆன்மீக‌ இய‌ற்கை (ஆன்மா) இருப்ப‌தாய் காணும் அறிவு ச‌த்வ‌ குண‌த்திலான‌தாக‌க் க‌ருத‌ப்ப‌டுகிற‌து.

வெவ்வேறு உட‌ல்க‌ளில் வெவ்வேறான‌ உயிரின‌ங்க‌ள் இருப்ப‌தாக‌ அறியும் அறிவு ர‌ஜோ குண‌த்தினாலான‌தாக‌க் க‌ருத‌ப்ப‌டுகிற‌து.

உண்மையைப் ப‌ற்றிய‌ அறிவின்றி, ஒரு காரிய‌த்தையே பிடிவாத‌மாய் பிடித்துக் கொண்டு, அதையே எல்லாமாக‌ அறியும் அறிவு த‌மோ குண‌த்தாலான‌து.

பற்றின்றி, விருப்பு வெறுப்பின்றி, கடமையாகக் கருதி, பலன் விளைவுகளைத் துறந்து ஆற்றப்படும் செயல் சத்வ குணத்திலானதாகக் கருதப்படுகிறது.

பெரும் ஆசையுடனும், பெரும் முயற்சியுடன், பொய் அகங்காரத்துடன் ஆற்றப்படும் செயல்கள் ரஜோ குணத்திலானதாகக் கருதப்படுகிறது.

பின்விளைவயும், பந்தப்படுவதையும் பாராது அறியாமையுடனும், பிறருக்கு தீமை தரும்படியும் துவங்கப்பட்ட செயல்கள் தமோ குணத்திலானதாகக் கருதப்படுகிறது.

பற்று நீங்கியவனாய், பொய் அகங்காரமற்றவனாய், உற்சாகம் ஊக்கமுடையவனாய், வெற்றி தோல்விகளில் நடுநிலை கொண்டவனாய் செயல்படுபவன் சாத்வீகன் ஆவான்.

செயலின் பலனில் இச்சை கொண்டவனாய், அதனை அனுபவிக்க விரும்புகிறவனாய், பேராசை, பொறாமை கொண்டவனாய், தூய்மையற்றவனாய், மகிழ்வும் சோர்வும் கொள்பவனாய் செயல்படுபவன் ரஜோ குணத்தவன் ஆவான்.

சாஸ்திர விதிகளுக்கு எதிராய் நடப்பவனாய், அறிவற்றவனாய், முரடனாய், ஏமாற்றுபவனாய், புறங்கூறுபவனாய், சோம்பேறியாய், கடுகடுப்பு கொண்டவனாய், காலம் தாழ்த்துபவனாய் செயல்படுபவன் தமோ குணத்தவன் ஆவான்.

அர்ஜுனா, முக்குணங்களுக்கேற்ப செயலாற்றுபவனது விவேகமும், மன உறுதியும் மூவகைப்படும்.

செய்யத்தகுந்தது - தகாதவை எவை, பயம் கொள்ளத்தக்கது - தகாதது எவை, பந்தப்படுத்துவது - விடுபடுத்துவது எவை. இவைகளை முன்கூட்டியே அறியும் விவேகம் சத்வ குணத்திலானது. (நல்லது நல்லதாகவும், கெட்டது கெட்டதாகவும் தெரிகின்றது).

அங்கனம் பகுத்தறிய இயலாத, தர்ம அதர்மங்களின் போக்கினையறியாத ஒருவனின் விவேகம் ரஜோ குணத்திலானது. (நல்லது கெட்டது தெரியாது).

அதர்மத்தை தர்மமாகவும், தர்மத்தை அதர்மமாகவும் அறியும் விபரீத விவேகம் தமோ குணத்தாலானது. (நல்லதெல்லாம் கெட்டதாகவும், கெட்டதெல்லாம் நல்லதாகவும் தெரியும்).

மாறா உறுதியுடன், மனம், வாழ்வு, புலன் செயல்கள் இவற்றைக் கட்டுடன் வைத்திருப்பவனது உறுதி சத்வ குணத்திலானது.

அறம், பொருள், இன்பம் இவற்றின் பலன்களை பற்றுடன் விடாமல் வைத்திருப்பவனின் மன உறுதி ரஜோ குணத்திலானது.

அதிக உறக்கம், கனவு, அச்சம், கவலை, கடுப்பு, பிடிவாதம் கொண்டவனின் மனவுறுதி தமோ குணத்தாலானது.

கட்டுண்ட ஆன்மாக்களின் மூவித சுகங்களைப் பற்றி அறிவாயாக.

முதலில் விஷம் போன்றும், பிறகு அமிர்தம் போன்றும் அனுபவிக்கப்படும் சுகம் சத்வமானது.

விஷயத்தொடர்பில், முதலில் அமிர்தம் போன்றும், முடிவில் விஷம் போன்றும் அனுபவிக்கும் சுகம் ரஜோ குணத்திலானது.

தன்னுணர்வுக்குத் தடையாயும், துவக்க முதல் இறுதி வரை மயக்கத்துடனும், சோம்பலுடனும் அனுபவிக்கும் சுகம் தமோ குணத்திலானது.

தேவர் உலகிலும், இவ்வுலகிலும் ஜட இயற்கையின் முக்குணங்களிலிருந்து விடுபட்டவர் எவருமிலர்.

குணங்களுக்கும், அதன் தன்மைக்கேற்பவும் செயல்படுபவர்களாயும் (ஸ்வபாவம்) மக்கள் - அந்தணர், ஆள்வோர், வணிகர், உழைப்போர் என நால்விதமாக உள்ளனர்.

மன அடக்கம், புலனடக்கம், தவம், தூய்மை, பொறுமை, நேர்மை, விவேகம், இறைவன் இருப்பதை ஏற்று நடத்தல் - இவை அந்தணரின் இயல்பும் அதற்கேற்ற செயல்களுமாகும்.

தீரம், வீரம், உறுதி, வளமை, புறங்காட்டாமை, ஈகை, இறைமை ஆகியவை ஆள்வோருக்கான இயல்புகள்.

விவசாயம், பசுக்களைக் காத்தல், வளர்த்தல், வியாபாரம் இவை வணிகரின் இயல்புகள். இட்ட பணியைச் செய்தல் உழைப்போருக்கான இயல்புகள் ஆகும்.

அவரவர் தமது இயல்புக்கேற்ப செயல்படுவதால் மட்டுமே வாழ்வில் திருப்தியும், பக்குவமும் அடையலாம்.

எல்லா உயிர்களின் மூலமாயும், எங்கும் நிறைந்தும் இருப்பவருமான இறைவனை, தம் கடமைகளை சரிவர செய்தபடி வழிபடுவதால் ஒருவன் படிப்படியாக நல் நிலையை அடையலாம்.

நிறைவாய் ஆற்றப்படும் பிற தர்மத்தை விட - குறைவாய் ஆற்றப்பட்டாலும் சொந்த தர்மமே சிறந்தது. ஏனெனில் சொந்த தர்மத்தின் விளைவுகள் ஒருவனுக்கு பாவத்தைத் தருவதில்லை.

குற்றம் நிறைந்ததாயினும் தனது இயல்பான தர்மத்தை விட்டுவிடக் கூடாது. ஏனெனில் தீயைப் புகழ் சூழ்ந்திருப்பது போன்று எல்லா முயற்சிகளையும் குற்றம் சூழ்ந்துள்ளது.

விஷயங்களில் பற்றின்மையாலும், சுகங்களில் நாட்டமின்மையாலும் துறவின் அதே பக்குவத்தைப் பெறலாம்.

குந்தி மகனே, எப்படி செயல்பட்டால் பிரம்ம நிலையை அடையலாம் என்பதை சுருக்கமாகச் சொல்கிறேன்.

தூய அறிவுடன், உறுதியான மனதுடன், புலன் விஷயங்களைத் துறந்து, தனித்து வாழ்பவனும், சிறிதே உண்பவனும், உடலையும், நாவையும் அடக்கி தியானம், வைராக்கியத்துடன், கர்வம், வலிமை, பெருமை, காமம், கோபம், உடமையுணர்வு இல்லாதவனாயும் இருப்பவன் - நிச்சயமாக பிரம்மத்தளத்திற்கு உயர்த்தப்படுகிறான்.

அவன் உடனடியாக பரப்பிரம்மத்தை உணர்கிறான். அவன் இழப்பிற்காக வருந்துவதுமில்லை. எதையும் அடைவதற்காக ஏங்குவதுமில்லை. சம நோக்கு உடையவனாய் என்மீது தூய பக்தியைப் பெறுகிறான்.

பக்தித் தொண்டால் மட்டுமே என்னை உள்ளபடி ஆறிந்து எனது நாட்டிலுள் நுழைய முடியும்.

செயல்களில் ஈடுபட்டாலும் என் பக்தன் எனது கருணையால், எனது பாதுகாப்பில் அழிவற்ற பரமபதத்தை அடைகிறான்.

எனவே என்னையே சார்ந்து, எனது பாதுகாப்பில் செயல்படு. இதனால் என்னைப் பற்றிய முழு உணர்வுடையவனாய்.

எனது உணர்வினால் மட்டுமே எனது கருணையைப் பெற்று, எல்லா துன்பங்களையும் கடக்க முடியும். அகங்காரத்தால் இதை நீ ஏற்க மறுத்தால், உன்னை நீ இழப்பாய்.

என் பேச்சைக் கேளாமல், நீ போரிட மறுத்தால், உன் வீரம் வீணாகும். மேலும் நீ தவறாக வழி நடத்தப்பட்டு, உன் இயற்கையே உன்னைப் போரிட வைத்துவிடும். மயக்கத்தால் நீ செய்ய மறுப்பதை உன் ஸ்வபாவமே செய்ய வைத்துவிடும்.

அர்ஜூனா, முழுமுதற் கடவுள் ஒவ்வொருவரின் இதயத்திலும் இருந்தவாறு, இயந்திரம் போன்ற உயிரினங்களின் பயணத்தை வழி நடத்துகிறார். முழுவதும் அவரைச் சரணடை. அவரது கருணையால் தெய்வீக அமைதியையும் நித்திய தலத்தையும் அடைவாய்.

ஞானங்களிலெல்லாம் ரகசியமானதை உனக்குச் சொல்லி விட்டேன். இனி நீ ஆராய்ந்து உன் விருப்பப்படியே செய்.

என்னையே நினைத்து, என் பக்தனாயாவாக‌. என்னை வழிபட்டு உன் வணக்கங்களை எனக்கு சமர்ப்பிப்பாயாக. இவ்விதமாக நீ என்னிடம் தவறாது வந்து சேர்வாய். நீ எனக்கு நண்பன் என்பதால் இந்த வாக்குறுதியைத் தருகிறேன்.

எல்லா மதங்களையும், அவற்றின் மீதான உனது அபிமானங்களையும் விட்டு என்னைச் சரணடைந்தால், எல்லா பாப விளைவுகளிலிருந்தும் உன்னை நான் விடுவிக்கிறேன். நீ பயப்படத் தேவையில்லை.

தவமில்லாதவன், பக்தியற்றவன், எனக்குத் தொண்டாற்றுவதில் பொறாமையுள்ளவன் இவர்களுக்கு இந்த ரகசிய ஞானம் கூறப்படலாகாது.

பக்தர்களிடம் இந்த பரம ரகசியத்தை விளக்குகிறவனுக்கு, பக்தித் தொண்டு உறுதியாகிறது. அவன் முடிவில் என்னை அடைகிறான். அவனை விட எனக்கு விருப்பமான தொண்டன் உலகில் யாருமில்லை. எவரும் ஆகவும் முடியாது.

தர்மங்கள் நிறைந்த இவ்வுரையாடலைக் கற்பவன், அறிவால் என்னை வழிபடுகிறான் என நான் அறிவிக்கிறேன்.

பொறாமையின்றி, நம்பிக்கையுடன் இதைக் கேட்பவன், பாப விளைவுகளினின்றும் விடுபட்டு, நல்லோர் வாழும் உலகை அடைகிறான்.

தனஞ்சயா, கவனத்துடன் கேட்டாயா? உன் மயக்கம் நீங்கியதா?

அர்ஜூனன் : அச்யுதா, என் மயக்கம் தெளிந்தது; உமது கருணையால் எனது நினைவைப் பெற்றேன்; உறுதியானேன்; உமது சொற்படி நடக்கச் சித்தமாயிருக்கிறேன்.

சஞ்சயன் : இவ்வாறு மகாத்மாக்களான ஸ்ரீகிருஷ்ணரும், அர்ஜூனனும் உரையாடியதைக் கேட்டேன். அற்புதமான இவ்விஷயங்களைக் கேட்டதால் என் ரோமம் சிலிர்க்கின்றது. வியாஸ தேவரின் கருணையால் யோகிகளின் இறைவனான ஸ்ரீகிருஷ்ணர், அர்ஜூனனிடம் நேரடியாகக் கூறிய மிக ரகசியமான விஷயங்களை நான் மீண்டும் மீண்டும் எண்ணிப் பார்த்து கணம் தோறும் இன்பமடைகிறேன். மன்னா, பகவானின் அற்புத உருவை எண்ணி நான் வியப்புடன் மகிழ்கிறேன்.

யோகிகளுக்கெல்லாம் இறைவனான ஸ்ரீகிருஷ்ணரும், சிறந்த வில்வீரனான அர்ஜூனனும் இருக்குமிடத்தில், நிச்சயமாக செல்வமும், வெற்றியும், அசாதாரணமான திறனும், நீதியும் இருக்கும் என்பது எனது அபிப்ராயமாகும்.
====++++====

இந்து மத விளக்கங்கள் PART 2

01. பகவத் கீதையின் காலம் எது? மகாபாரதத்தின் காலம் எது? பகவத்கீதை மகாபாரதத்தில் ஒரு இடைச்செருகலாகச் சேர்க்கபப்ட்டது என்கிற பேச்சு நிலவுகிறதே உண்மைதானா? இதற்குச் சாத்தியம் உள்ளதா? மகாபாரதம் கி.பியில் தான் உருவாக்கப்பட்டது என்று சிலர் சொல்கிறார்களே, உண்மையா?

பதில் : பகவத் கீதையின் காலம் குறித்து பலவித கருத்துக்கள் நிலவுகின்றன. மகாபாரதத்தில் விவரிக்கப்படும் தொடர்ச்சியான நிகழ்வுகள், தத்துவங்களுடன் கீதையும் வருகிறது. இடைச்செருகல் என்றால் தனித்துத் தெரியும். எனவே அது இடைச்செருகல் இல்லை.

கி.பிக்கு எல்லாவற்றையும் தள்ள முற்படுவது, Creationism கொள்கையின் ஒரு பகுதி. இவர்களது நம்பிக்கையின்படி கடவுள் தூங்கி, விழித்து உலகை நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தான் படைத்தார். படைத்துவிட்டு பின்பு மீண்டும் ஓய்வெடுத்தார் என்பது. இவர்கள் உலக வரலாற்றை இந்த பைபிள் கதையுடன் தொடர்புபடுத்தி, அதிலிருந்து உலகத்தின் எல்லா நிகழ்வுகளையும் தீர்மானிக்க முற்படுகின்றனர். இதன் நீட்சியே இந்த கி.பி கட்டுக்கதைகள்.

“காலனிய இந்தியவியலாளர்கள் இந்து வேதங்களை புராணங்களை கால மதிப்பீடு
செய்யும் போது அவர்களது கலாச்சாரத்தில் நிலவி வந்த படைப்புவாதம்
(Creationism) என்கிற (இது இன்று அறிவியலால் பொய் என நிரூபிக்கப்பட்டு
விட்டது) கோட்பாட்டின் படி உலக வரலாற்றை எடை போட்டார்கள். வில்லியம்
ஜோன்ஸ், மாக்ஸ் முல்லர் போன்றவர்கள் வேதங்கள் நோவாவின் பிரளயத்துக்கு
பின்னரே எழுதப்பட்டிருக்க வேண்டுமென கருதினார்கள். எனவே கிமு 1200 இல்
வேதங்கள் எழுதப்பட்டதாக கருதினார்கள். இதன் கணக்கில் இதிகாசங்களின்
காலமும் பின்னால் தள்ளப்பட்டது. எனவே நாம் இவற்றை ஏற்க முடியாது.
வானவியல் தரவுகளின் அடிப்படையில் நர்ஹரியாச்சார் எனும் மெம்பிஸ்
பல்கலைக்கழக இயற்பியல் பேராசிரியர் கிமு 3000 இல் நிகழ்ந்த நிகழ்வுகளின்
அடிப்படையில் மகாபாரதம் எழுந்திருக்கலாம் என்கிறார். ஆனால் மகாபாரதம்
எழுதப்பட்ட காலகட்டம் மகாபாரத நிகழ்வுக்கு சில தலைமுறைகளுக்கு பிறகாக
இருக்கலாம் என்பதையும் நாம் கணக்கில் எடுக்க வேண்டும். ” [அரவிந்தன் நீலகண்டன்]

கி.முவிலான கிருஷ்ண வழிபாடு பற்றிய சான்றுகள் உலகின் பல பாகங்களின் கிடைக்கின்றன. இன்றைய ரஷ்யாவில் கண்டெடுக்கப்பட்டுள்ள விஷ்ணு சிலைகள், அர்மீனியாவில் இன்னமும் இருக்கும் பண்டைய இந்துக்கோவிலின் மீதமுள்ள பாகங்கள், இந்த தொன்மைக்கு சான்றாக நிற்கின்றன.

“கிருஷ்ணர் - அவர் ஒரு ஞானி என்பது உபநிடதக்காலத்திலேயே நிறுவப்பட்டுவிட்ட ஒன்று . (பௌத்தத்துக்கு முந்தையது என நிரூபிக்கப் பட்ட சாந்தோக்ய உபநிடதத்திலேயே
கிருஷ்ணன் என்கிற ஞானி பேசப்படுகிறார்.கிருஷ்ண வழிபாடு குறித்து கிமுவிலான கிரேக்க சான்றுகளே உண்டு: “This Garuda-column of Vasudeva (Visnu), the god of gods, was erected here
by Heliodorus, a worshipper of Visnu, the son of Dion, and an inhabitant of Taxila, who came as Greek ambassador from the Great King Antialkidas to King Kasiputra Bhagabhadra” விஷ்ணுவுக்காக ஒரு கிரேக்க தூதன் உருவாக்கிய கருட ஸ்தம்பத்திலிருந்துள்ள வரிகள் காலம் கிமு 113.” [அரவிந்தன் நீலகண்டன்]

02. ஸ்ருதி என்றால் என்ன? ஸ்மிருதி என்றால் என்ன? இதன் பிரிவுகள் என்ன?

பதில் : ஸ்ருதி - நிலையானது. ஸ்மிருதி - காலத்துக்கேற்ப மாறுவது. ஸ்ருதி - அடிப்படை ஆன்மீக தத்துவங்களையும், ஸ்மிருதி - அந்த தத்துவங்களையொட்டி காலத்துக்கேற்ப ஏற்படுத்தப்படும் விதிகளையும் விளக்குகிறது. இன்று இந்தக்காலத்துக்கான ஸ்மிருதி என்று எதுவும் இல்லை. ஸ்ருதியாக வேதங்கள், உபநிஷத்துகள் இருக்கின்றன.

03. கிருஷ்ண துவைபாயண வியாசன் என்பவர் யார்?

பதில் :
“கீதை மகாபாரதத்தின் ஒரு பகுதி என்ற முறையில் அது வியாசன் என்ற கிருஷ்ணன் துவைபாயனனால் இயற்றப்பட்டது என்று கொள்ளுவது அறிவுலக வழக்கம். கிருஷ்ண துவைபாயனன் மகாபாரதத்திலேயே ஒரு முக்கியமான கதாபாத்திரமாக வருகிறார். அவர் பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் பிதாமகன். கிருஷ்ணனுக்கு மிகவும் வயதில் மூத்தவர். அவர் பாரதபோர் முடிந்த பிறகு மகாபாரதத்தை எழுதினார் என்பது ஒரு காவிய உருவகம். ஆனால் மகாபாரதம் அதன்பிறகும் பல தலைமுறைக்காலம் நீண்டு ஜனமேஜயன் காலகட்டம் வரை வருகிறது. அப்படியானால் கிருஷ்ண துவைபாயன வியாசன் எத்தனைகாலம் வாழ்ந்தார் - நம் புராணமரபின்படி அவர் மரணமற்றவர் சிரஞ்சீவி. அதை அப்படியே ஏற்பது ஒரு வழி. தர்க்கபூர்வமாக பார்த்தால் வேறுசில ஊகங்களுக்கு வரமுடியும்.” [ஜெயமோகன்]

04. பதஞ்சலி யோகத்திற்கும் இந்து மதத்திற்கும் ஆன்மிகத்துக்கும் எந்தவிதத் தொடர்புமில்லை என்கிறார்களே. பதஞ்சலி யோகம் என்பதுதான் என்ன? உண்மையில் அதற்கும் இந்து மதத்திற்கும் தொடர்பில்லையா?

பதில் : இந்து மதத்தின் சுதந்திரத்தை புரிந்து கொள்ளாதவர்களின் கூற்று இது. பதஞ்சலி யோகம், இந்து மதம் அளிக்கும் ஆன்மீக சுதந்திரத்தின் விளைவாக உள்ளாழ்ந்து ஆன்மீக வழிமுறைகளை, பயிற்சிகளை கண்டு அதை தொடந்து வாழையடிவாழையாக மேம்படுத்திய ஒரு பாரம்பரியத்தின் உன்னத வெளிப்பாடு. பதஞ்சலியின் யோகமுறைகள், தந்திர சாஸ்திரம், அந்த யோக முறைகளின் அடிப்படையில் எழுந்த ஆலய வழிபாடு என்று ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்ட முறைகள் இந்து மதத்தின் பல்வேறு அங்கங்களாக இருக்கின்றன.

இவற்றிலிருந்து யோகத்தை மட்டும் பிரித்தெடுத்து அதற்கு தனியே வர்ணம் பூசி, அதற்கும் இந்து மதத்திற்கும் சம்பந்தமில்லை என்று நிரூபிக்க முற்படுவது அப்பட்டமான அபகரிப்பு. நமது மஞ்சளை, மூலிகைகளை, பல தலைமுறைகளாக பயிற்சி செய்து கண்டுபிடித்த வைத்திய முறைகளை பன்னாட்டு நிறுவனங்கள் அபகரித்து, மார்கடிங் செய்து லாபம் ஈட்டி அந்த பொருளாதார வலுவால் பூர்வகுடிகளை அழிப்பதுபோல, சில அந்நிய மதங்கள் உலகெங்கும் பூர்வகுடி மதங்களின் கடவுள்களை, வழிபாட்டு முறைகளை அபகரித்து அந்த அபகரித்த ஆன்மீக முறைகளை தமதாக்கி அவற்றின் மூலமே பூர்வகுடி வழிபாட்டு முறைகளையும் கலாச்சாரங்களையும் அழிக்கின்றன. இந்த அபகரிப்பு முறையின் ஒரு பகுதியே இந்து மதத்திலிருந்து யோகத்தை பிரிக்க முயலும் முயற்சிகள்.

05. திருவள்ளுவர் ஏன் சமணராக இருக்கமுடியாது?

பதில் : இது குறித்து திரு.ஜடாயு, விரிவான பதிலை*நீதி, தர்மம், திருவள்ளுவர்,
சமணம்* என்ற பதிவில் எழுதியுள்ளார். அதில், இது குறித்து ஜாவா குமார் எழுதி பிரசுரமாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ஆதாரபூர்வமான கட்டுரையும் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது.

06. ஹிந்துத்துவம் என்பது என்ன?

பதில் : “யாரும் ஊரே யாவரும் கேளிர்” என்பதே ஹிந்துத்துவம். “நீ வேறு, உன்னை அழிப்பதே எனது கடவுள் எனக்கு சொல்லிக் கொடுத்தது” என்று சொன்னால் அந்த கூட்டம் ஹிந்துத்துவத்திற்கு எதிரானது. மனிதநேயத்தின் இன்னொரு பெயர் ஹிந்துத்துவம்.

07. ஹிந்து மதம் எப்போது தோன்றியது?

பதில் : எப்போது மனிதன் சிந்திக்கத் துவங்கினானோ அப்போதே.

08. கடவுள் மேல் பற்றில்லாதவன் ஹிந்துவாக இருக்கமுடியாதா?

பதில் : இருக்கலாம். இந்து மதம் தரும் எல்லையில்லா சுதந்திரத்திற்கு இன்னுமொரு அடையாளம் இது. மற்ற மதங்களில் கடவுள் மற்றும் கடவுளின் தூதராக, மகனாக தங்களை சொல்லி மதத்தை உருவாக்கியவர்களை நம்பாதவர்கள், பற்றாதவர்கள் அந்த மதத்திலிருந்து உடனடியாக வெளியேறிவிடுகிறார்கள். ஆனால், இந்து மதத்தில் அப்படி எந்த தடையும் இல்லை. இயல்பாக இருக்கும் எவரும் இந்துவே.



09. ஹிந்து மதத்தில் ஏன் இத்தனை தெய்வங்கள் இருக்கின்றன? ஒரே தெய்வம் என்று ஏன் இருக்கவில்லை?

பதில் : ஒரே தெய்வம் என்று ஏன் இருக்கவேண்டும்? எல்லையில்லா இறையை நமது புரிதலுக்கேற்ப புரிந்து கொள்கிறோம். அந்த புரிதல் ஆளுக்காள் மாறுபடும் அல்லவா? எல்லா பாதைகளும் நம்மை இறைவனிடமே அழைத்துச் செல்கின்றன. எந்த தெய்வத்தை வணங்கினாலும் நாம் இறையையே வணங்குகிறோம் என்பதே நமது ஹிந்துநெறியின் அடிப்படைக் கொள்கை. இதுவே நம்மை மிகவும் சகிப்புத்தன்மையுள்ளவர்களாகவும், அமைதியையும், அன்பையையும் கொண்டிருக்கும் அற்புதமான சமுதாயமாகவும் வைத்திருக்கிறது. எப்போதெல்லாம் ஒரே கடவுள் என்ற கருத்து மக்களிடையே பரவுகிறதோ, உடனடியாக அந்த மக்கள் கூட்டம் அசுர சக்தியாக மாறி, மற்றவர்களை அழிக்க துவங்கிவிடுவதை நாம் சரித்திரத்தில் பார்க்க முடிகிறது.

10. சிறுதெய்வ வழிபாடு என்பதை ஹிந்து மதம் ஏற்றுக்கொள்கிறதா?

பதில் : ஆம். அதிலென்ன சந்தேகம். சிறு தெய்வ வழிபாடு நமது வழிபாட்டு முறையின் பிரிக்கவியலா அங்கம்.

11. பாரதி ஒரு இந்துத்துவ தீவிரவாதி என்று ஆகப்பெரிய எழுத்தாளர் ஒருவர் கூற, இன்னொரு எழுத்தாளர் ஆதரிக்கவும் செய்கிறாரே? பாரதி உண்மையில் ஒரு தீவிரவாதியா?

பதில் : இந்துத்துவம் பற்றி மேலே கொடுத்துள்ள விளக்கத்தை படித்தால் இந்த கேள்வியே எழாது. பாரதி தீவிரமானவர். பாரதி உறுதியாக தம்மை இந்துவாக அடையாளம் காட்டிக்கொண்டவர். தொடர்ந்து வரும் யோகிகளின் பரம்பரையில் வந்தவராக தம்மையும் அடையாளப்படுத்திக் கொண்டவர். இந்து சமூகத்தை சீர்படுத்த, மேம்படுத்த இடையறாது சிந்தித்து உழைத்தவர்.

12. இந்து மதத்தில் இருக்கும் அத்தனை நல்ல விஷயங்களையும் இடைச்செருகல்கள் என்கிறார்களே? (உ.ம்: திருக்குறள், கீதை, யோகம்) இதை ஒரு வளர்ந்து விட்ட எழுத்தாளர் திருவள்ளுவர் எழுதும்போது அருகிலிருந்து பார்த்தது போலவும், பெரிதும் மதிக்கப்படும் ஆழ்வார் ஒருவரைப் பைத்தியம் என்றும் எழுத,இன்னொரு எழுத்தாளர் ‘ஒரு எழுத்தாளருக்கு எதை வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் சொல்ல உரிமை இருக்கிறது’ என்றும் கூறுகிறார்களே? அப்படி அவர் எழுதுவதைப் படித்து உள்ளம் கொதித்துக் குமுறும் அன்பர்களின் கூக்குரல்,எழுத்தாளரின் புனைவை விட சகிக்க முடியாத ஒன்று என்றும் எழுத்தாள அன்பர்கள் மனம் நொந்து கொள்கிறார்களே?

பதில் : மேலே பதஞ்சலியோகம் பற்றிய கேள்விக்கான பதிலை பாருங்கள். அதிலேயே இதற்கான பதிலும் இருக்கின்றது.

13. கிருஷ்ணர் ஒரு யாதவ குல அரசன் என்றும், அதை வெளி உலகிற்குத் தெரியாமல் சிதைத்துப் பிற்காலத்தில் மகாபாரதம் என்ற ஒன்றை எழுதி அதில் அவரைக் கடவுளாக்கி விட்டார்களாமே?

பதில் : யாதவ குல அரசன் என்றுதானே மகாபாரதம் தெரிவிக்கிறது?

இது குறித்த கீழ்க்காணும் கட்டுரைகள் பல விஷயங்களை தெளிவுபடுத்தும்:

ஜடாயு - கிருஷ்ணர் கடவுளா, அரசரா?: விகடனில் ஹாய் மதன்
பாமரத்தனம்
அரவிந்தன் நீலகண்டன் - கண்ணன் எனும் தமிழர் கடவுளும் ஆனந்தவிகடனும்

14. புராணங்கள் உண்மையா பொய்யா?

பதில் : உண்மை. பல சமயங்களில் அவற்றில் உயர்வு நவிற்சியும், சில கதைகளும், கற்பனைகளும் கலந்திருக்க வாய்ப்புண்டு. புராணம் என்றாலே சரித்திரம் என்றுதான் அர்த்தம்.

15. சுவர்க்கம், நரகம் என்பது என்ன?

பதில் : நமது நல்லது கெட்டதற்கு தகுந்தாற்போல், நமது மனம் அனுபவிக்கும் உணர்வுகளே சுவர்க்கம், நரகமாக குறிப்பிடப்படுகின்றன. சஞ்சலப்பட்ட மனம் கனவு நிலையில் துக்கமான விஷயங்களை கண்டு விசனப்படுவது போல, நமது மனோநிலைக்கு தகுந்தவாறு நமது கர்மபலன்களை மனம் நுகர்ந்து மகிழவோ, வருந்தவோ செய்கிறது. இதுவே சுவர்க்கம், நரகம்.

ஆபிரகாமியத்துவத்தின் இந்த சுவர்க்கம் நரகம் திரிந்துபோய், அடியார்களை மிரட்டி தம்மிடமே வைத்துக்கொள்ளவும், எதிராளிகளை மிரட்டி தம் பக்கம் சேர்க்கவும் ஒரு மிரட்டல் ஆயுதமாக பயன்படுத்தப்படுகின்றது. இந்து மதத்தில் அப்படி கிடையாது. நல்லது செய்தால், மகிழ்சியை அனுபவிப்போம். கெட்டது செய்தால் துக்கத்தை அனுபவிப்போம். இதில் ஜாதி - மத பாகுபாடெல்லாம் கிடையாது.

மேலும் இந்து மதத்தில் நிரந்தர சொர்க்கம், நிரந்தர நரகம் கிடையாது. அந்த நிலைகள் Transit Lounges போன்றவையே. நிரந்தரமாக நல்லவர்களும் இல்லை, நிரந்தரமாக கெட்டவர்களும் இல்லை, எல்லா மனிதர்களுக்குள்ளும் இறைவன் இருக்கிறான் எனவே எப்போது வேண்டுமென்றாலும் ஒரு தீயமனிதன் திருந்தலாம் என்பதே இந்துமதம் சொல்வது.

எனவே, சொர்க்கம் அல்லது நரகத்தை நமது கர்மபலன்களுக்கேற்றவாறு நாம் அனுபவித்துவிட்டு மீண்டும் பூமியில் பிறப்போம். பூமி-சொர்க்கம் - நரகம் எல்லாவற்றிலுமிருந்து விடுபடுவதே முக்தி. இதுவே இலக்காக பெரும்பாலான இந்துத்துவ ஆசான்களால் சொல்லப்படுகிறது.

16. புண்ணியம் - பாவம் என்பது என்ன?

பதில் : நல்லது செய்தால் புண்ணியம். கெட்டது செய்தால் பாவம்.

மகாபாரதம் கூறுகிறது -

श्रूयतां धर्मसर्वस्वं श्रुत्वा चैव अवधार्यताम् ।
परोपकार: पुण्याय पापाय परपीडनम् ॥

ஸ்ரூயதாம் தர்ம ஸர்வஸ்வம், ஸ்ருத்வா சைவாவதார்யதாம் |

ப்ரோபகார: புண்யாய, பாபாய பரபீடனம் ||

“தர்மத்தின் சாரம் முழுவதையும் கூறுகிறேன், கேள், கேட்டு அதன்படி நட. பிறருக்கு நன்மை செய்தல் புண்ணியம். பிறருக்கு தீமை செய்தல் பாவம்”

17. தர்மம் என்பது எது?

பதில் : இயல்பாக இருப்பது தர்மம். இயல்பை மாற்றி ஆசையின், கோபத்தின், மனமாச்சர்யங்களின் உந்துதலால் செய்பவை எல்லாமே அதர்மமாகும்.

18. ஏன் நல்லவர்கள் கஷ்டப்படுகிறார்கள்? தீயவர்கள் மகிழ்ச்சியுடன் பல்லாண்டு வாழ்கிறார்கள்?

பதில் : நல்லது , கெட்டது குறித்த myopic பார்வையே இது குறித்த கேள்வியை எழுப்புகிறது. நாமெல்லாம் ஒரு பெரும் பிரபஞ்சத்தின் அங்கங்கள். இங்கே செய்யும் செயல்கள் பலன்களை தருவதற்கு காலம் பிடிக்கின்றன. இந்த சுழற்சியில் கெட்டது செய்துவிட்டு தப்புபவர்கள் நரக நிலையிலோ அல்லது அடுத்த பிறவியொலோ தமது தீய செயல்களுக்கான பலன்களை அனுபவிக்கின்றார்கள்.

19. நான் ஒரு முஸ்லீம்/கிறிஸ்தவன். என்னால் ஹிந்து மதத்துக்கு மாற முடியுமா?

பதில் : ஓ தாராளமாக. அப்படி மாறிய பல லட்சக்கணக்கானோர் இருக்கின்றனரே. சாகர்களிலிருந்து, ஹூனர்களிலிருந்து ,யவனர்களிலிருந்து, இன்று மதம் மாறும் இஸ்கான்(ISKCON) வெள்ளைக்காரர்கள் வரை எத்தனையோ கோடி நபர்கள் சரித்திரமெங்கும் இந்துக்களாக மாறி இருக்கின்றனர்.

20. சோதிடம் உண்மையா?

பதில் : உண்மைதான் என்று அனுபவப்பட்ட பலர் சொல்கிறார்கள். உண்மையில்லை என்றும் சிலர் சொல்கிறார்கள். இது அவரவர் அனுபவம் சார்ந்தது.

21. “சாமி” வந்து விட்டது என்று ஆவேசம் வந்து ஆடுபவர்களை நம்பலாமா?

பதில் : அது ஆவேசம் வந்து சாமி என்ன சொல்கிறது என்பதைப் பொறுத்து இருக்கிறது.

22. தீமிதித்தல், அலகு குத்தி காவடி எடுத்தல் போன்றவை தேவைதானா?

பதில் : மற்றவர்களை தீயில் தள்ளாதவரை, மற்றவர்களை குத்தாதவரை - நம்மை வருத்தி இறைவனை அடைய முயற்சிக்கும் முயற்சிகளில் என்ன தவறு இருக்கிறது?

23. ஹிந்து என்றால் உண்மையில் என்ன அர்த்தம்?

பதில் : இயல்பானவர்கள் என்றர்த்தம்.

24. ஜாதிகளைப் பற்றி வரலாறு உண்டா? உண்மையில் ஜாதிகள் எப்படி தோன்றின?

பதில் : இந்து மதத்தின் சகிப்புத்தன்மையின் அடையாளமே ஜாதிகள். பல குழுக்கள் தத்தமது கலாச்சாரங்களை பின்பற்ற முனைகிறபோது இந்து மதம் அந்தக்கலாச்சாரங்களை அழிக்க முயல்வதில்லை. அதனாலேயே ஜாதிகள் எழுந்தன. இன்றைய காலகட்டத்தில் ஜாதி என்பது தேவைதானா என்பது நம்மையே நாம் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி.

25. வர்ணாஸ்ரம தர்மம் என்பது என்ன?

பதில் : வர்ணம் வேறு, ஆசிரமம் வேறு. ஒருவரின் இயல்பு - தேர்வு - விருப்பத்திற்கேற்றவாறு செயல்புரிவது வர்ணம், ஆசிரமம்.

வேதகால சமூகத்தில் இந்த வித்தியாசங்கள் எல்லாம் வெறும் வித்தியாசமான பாதைகளாகவே இருந்தன. உயர்வு தாழ்வு இல்லை. ஒரே குடும்பத்திலிருந்து தமது விருப்பத்திற்கேற்றவாறு பல வர்ணங்களை சார்ந்திருந்தார்கள். ஆன்மீக நாட்டமுடையவன் அந்தணன் ஆனான் என்பதை வேதகாலத்திற்குப் பிறகும் காண்கிறோம். இன்றும் பழைய இந்துமதத்தைப் பின்பற்றும் பாலித்தீவு ஹிந்துக்களிடையே இப்படிப்பட்ட முறையே காணப்படுகிறது. அங்கே வர்ணங்கள் நான்கும் இருந்தாலும், உயர்வு தாழ்வு இல்லை, மணவுறவுக்கு இந்த வர்ணங்கள் தடையாயில்லை.

அதே போல,வாழ்க்கையின் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு ஆசிரமங்களை அன்று மனிதர் ஏற்றனர். படிக்கிற காலத்தில் மாணவனாகவும், மணம் புரிந்து பொருளீட்டிய காலத்தில் இல்லறமென்னும் ஆசிரமத்திலும், அதற்குப் பிறகு வனப்பிரஸ்தம் என்ற நாடோடி-சிந்தனையாளன் நிலையிலும், கடைசியாக அனைத்தின் மீதும் உள்ள பற்றைத் துறந்து, துறவறம் மேற்கொள்வன் அதற்குரிய ஆசிரமமான சந்நியாச ஆசிரமத்தை சார்ந்தவனாக காணப்படுகிறான்.

ஆனால், தோற்றங்கள் எப்படி இருந்தாலும் ஜாதிகளைப் போலவே இவையும்(வர்ணம்+ஆசிரமம்) இன்றைய காலகட்டத்தில் தேவையா என்பது நம்மையே நாம் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி.

25. ஏழைகள் பசியில் வாட, ஹிந்துக்கள் கோவிலில் மட்டும் நகையாகவும், பணமாகவும் குவிக்கலாமா? கோவில்களுக்கு ஏன் காணிக்கை செலுத்த வேண்டும்? அதனால் பயன் என்ன? அதற்கு பதிலாக கோவில் பணத்தை எல்லாம் எடுத்து ஏழைகளுக்கு உதவினால் என்ன?

பதில் : கோவில்களுக்கு கொடுப்பதைவிட ஏழைகளுக்கு கொடுப்பது சாலச்சிறந்தது. ஆனால், எவருக்குமே கொடுக்காமல் இருப்பதைவிட கோவில்களுக்கு கொடுப்பது மேல். குறைந்த பட்சம், ஒரு சக்தி மேலே இருக்கிறது என்பதையாவது இந்த சுயநலமிகள் ஏற்கின்றனர் இல்லையா.

இந்து மத விளக்கங்கள்

எம் தெய்வங்கள் - குலதெய்வம்
--------------------------------

காஞ்சிபுரம் . நா.மகேந்திரன்


சென்ற வாரம் எங்கள் குலதெய்வத்தை கும்பிட சென்றிருந்தோம். ஆறு தலைமுறைகளுக்கு முன்பு காஞ்சிபுரம் அருகே உள்ள சிறிய ஊரிலிருந்து எங்கள் முன்னோர்கள் சோழவந்தான் வழியாக புலம்பெயர்ந்து கடைசியில் தேவகோட்டைக்கு வந்து சேர்ந்தபோது தம்முடன் கொண்டுவந்த பிடி மண்ணை அங்கே வைத்து வழிபடத் துவங்கியதுடன் எங்களது குலதெய்வ வழிபாடு தேவகோட்டையில் நிலை பெற்றது.

சொந்தங்கள் பலர் வந்திருந்தனர். பொங்கலுக்கு அடுத்த நாளில் இரவில் படையல் நிகழ்த்தி, அங்கிருக்கும் வீரனார் சாமிக்கு சைவப் படையலும், வீட்டு தெய்வங்களுக்கு (மரணமடைந்த முன்னோர்கள்) அசைவப் படையலும் நிகழ்த்துவது எங்களது வழக்கம்.

காஞ்சிபுரம் சென்றிருந்தபோது அங்கே எங்கள் குலதெய்வத்திற்கு பலி கொடுக்கப்படுவதாக அறிந்தோம். வீரனாரின் துணை, பாப்பாத்தி என்ற தெய்வம் என்றும் அங்கே அறிந்தேன். ஆனால், எங்கள் குடும்பங்களில் வீரனாருக்கு சைவப்படையல் மட்டுமே, அசைவம் ஆகாது.

பல தலைமுறைகளுக்கு முன்பு பஞ்சத்தின் காரணமாகவோ அல்லது முஸ்லீம் படையெடுப்புகளின் காரணமாகவோ தொண்டைநாட்டிலிருந்து புலம்பெயர்ந்து வந்திருக்கின்றனர் எங்களது முன்னோர்கள். இந்த இரண்டு காரணங்களை ஏன் யூகிக்கிறேன் என்றால், இந்தியாவில் பெருமளவில் புலம்பெயர்தலை தூண்டியது முஸ்லீம் படையெடுப்புகள். அதற்கு அடுத்தபடியாக பஞ்சங்கள். படையெடுப்புகளும், அந்நிய ஆட்சிகளும் பஞ்சங்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவை.

எனது மகன் தற்போது சண்முகாவில் இரண்டாமாண்டு பொறியியல் படித்துவருகிறான். எனது வற்புறுத்தலின் பேரில் அவனும் வேண்டாவெறுப்பாக வந்து கலந்து கொண்டான். பின்பு அவனைப் போன்றே சில இளைஞர்கள், பெண்கள் இருப்பதை கவனித்து அவர்களை தனியே அழைத்து உரையாடலை துவங்கினேன்.

அவர்களில் சிலர் நாத்திகர்களாகவும், பலர் ஆபிரகாமிய கருத்தியல்களை நம்பி ஒரே கடவுள் மற்றும் நாகரிக வழிபாடு என்று அவர்கள் கருதும் வழிபாடுகள் மீது நம்பிக்கை மற்றும் மதிப்பு வைத்திருப்பவர்களாக இருப்பது எனக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியது. ‘நமது முன்னோர்கள் அனைவரும் முட்டாள்கள்’ , நாகரீகமில்லாமல் நாட்டார் தெய்வங்களை வழிபடுபவர்கள் என்ற போதனை அவர்களையும் அறியாமலேயே அவர்களுக்கு அந்நிய மதங்களான கிறிஸ்துவம் மற்றும் இஸ்லாம் மதங்களிலிருந்து மூளைச்சலவை மூலம் உள்ளிறங்கியிருந்தது.

நான் அவர்களுக்கு சொன்ன விஷயங்களில் சில:

ஒரே கடவுளா பல கடவுளா?

1. ஒரே கடவுள் அதைத் தவிர மற்றதெல்லாம் சாத்தான் என்பதுதான் மிகவும் மோசமான சிலை/உருவ வழிபாடு. ஏனெனில், ஒரே கடவுள் என்பது கடவுளை மனிதர்களைப் போன்றே கருதுவதன் மூலமாக ஏற்படுகிறது. இது சில மனிதர்களின் மனதில் எழுந்த விபரீத கற்பனை மயக்கமாகும்.

2. ஒரே இறை நிலை என்பது உண்மையே. ஆனால் அப்படி கடவுளை ஒரு உருவமற்ற, குணங்களுக்கு அப்பாற்பட்ட இறை நிலையாகக் கருதும்போது, அந்த நிலை பல உருவங்களாகவும், உருவமில்லாததாகவும், இவை இரண்டிற்கும் அப்பாற்பட்டவையாகவும் கருதமுடியும். அதைத்தான் நமது இந்து மதமும், இந்து ஞானமரபும் சொல்கிறது. ‘ஏகம் சத் விப்ர பஹூத வதந்தி’ என்று ரிக் வேதம் இதையே குறிப்பிடுகிறது. அதாவது ‘சத்தியம் ஒன்றே, சான்றோர்கள் அதை பலவிதமாக விவரிக்கின்றார்கள்’. இதுவே சத்தியமான வாக்கு, கடவுள் நிலையில் இருந்த பல்வேறு மகான்கள் இதை அனுபவ பூர்வமாக தமது வாழ்வில் உணர்ந்திருக்கின்றார்கள்.

3. சுவாமி விவேகானந்தர் இது போன்ற ‘பகுத்தறிவு-மூடத்தனத்தை’ கொண்டிருந்தபோது மகான் ராமகிருஷ்ண பரமஹம்சர் அவரிடம் ஒரு மூதாட்டியை அறிமுகப்படுத்தி வைத்தார். அந்த மூதாட்டி பரவசத்துடன் கண்ணன் தன்னிடம் சிறு குழந்தையாக வந்து விளையாடுவதை விவரித்தார். அதைக் கேட்டவுடன் விவேகாந்தருக்கு பேச நா எழவில்லை. ஏனெனில் அது சத்திய வாக்கு, அந்த மூதாட்டி நேரடியாக இறை அனுபவத்தை பெற்றவர் என்பதை அவர் உணர்ந்தார். பின்பு விவேகானந்தர் காளி தேவியையே நேரில் தரிசித்து தெளிவடைந்தது தனிக்கதை.

4. இப்படி தூய்மையான வாழ்வை வாழ்ந்து, ஆசாபாசங்களுக்கு அப்பாற்பட்டு மிக நேர்மையான வாழ்வை வாழ்ந்த ஞானிகள் தெளிவாக கடவுளை எந்த ரூபத்திலும் , எந்த வடிவிலும் நாம் தரிசிக்க முடியும், நாம் விரும்பும் வடிவில் கடவுள் தோன்றுவார், நமது மனத்தூய்மையும் கடவுளின் மீதான நாட்டமுமே முக்கியம் என்று தெள்ளத் தெளிவாக சொல்லிவிட்டு போயிருக்கும்போது, எங்கோ அரேபியாவில் அல்லது இஸ்ரேலில் ஆன்மீக அறிவே இல்லாத மாக்களிடையே தோன்றி ஆசாபாசங்களுடனும் அரக்க குணங்களுடனும் சந்தேகத்துக்கிடமான வாழ்க்கை வாழ்ந்து, இன்னது என்று புரியாத, தெளிவில்லாத வாழ்க்கையையும் உபதேசங்களையும் வழங்கிச் சென்ற நபர்கள் சொல்வதை வைத்து ஒரே கடவுள் தான் இருக்க முடியும், அந்த கடவுளும் பொறாமையும், ஆணவமும், அஹங்காரமும் கொண்டு மற்ற மதங்களை பின்பற்றுபவர்களின் மீது போர் புரியச் சொல்லி தூண்டும் கடவுள் என்று பைபிளின் பழைய ஏற்பாடும், குரானும் சொல்வதாக சொல்வது எத்தனை அபத்தம்?

5. நான் இப்படி கேட்டவுடன் அவர்கள் திக்கித்து போனார்கள். பலருக்கும் எதோ புரிந்தது போன்று இருந்தது.

6. இந்த புரிதலை அவர்களிடையே ஏற்படுத்தியவுடன் அடுத்ததாக குலதெய்வத்திற்கு வந்தேன்.

குலதெய்வ வழிபாடு ஏன்?

1. நமது குலதெய்வங்கள், அவர்களது குறிப்பிட்ட நல்ல செய்கைகளுக்காகவும், குணங்களுக்காகவும் வழிபடப்படுபவை. ஒவ்வொரு தெய்வத்திடமும் ஒவ்வொரு விசேஷம் இருப்பதை காணலாம்.

2.வீரனார் போன்ற தெய்வங்கள் போரில் உயிர்நீத்த தெய்வங்கள். தியாகம் புரிந்தவர்களின் தியாக குணத்தையே நாம் இது போன்ற வழிபாடுகளின் மூலம் வழிபட்டு அதே குணம் நம்மிடையே அதிகரித்து நாளடைவில் கடவுளிடம் மிகவும் நெருங்கிவிடுகிறோம்.

3. முனீஸ்வரன் போன்ற தெய்வங்கள், தெய்வ சம்பத்து உடைய பெரியோர்கள். அவர்கள் கடவுளை நோக்கி தவம் புரிந்தவர்கள், அந்த நிலையில் இறந்தவர்கள். இது போன்ற தெய்வங்களை வழிபடும்போது நம்மிடையேயும் கடவுளை அடைய விரும்பும் குணம் பலப்படுகிறது.

4. இதெல்லாம் புரியாமலே கூட நாம் வழிபடுவதுண்டு - வேலைக்காக, திருமணம் நடக்க, வழக்கு தீர - இப்படி பலப்பல சொந்த, குடும்ப நலன்களுக்காக நாம் குலதெய்வத்தை கும்பிட்டு வேண்டுகிறோம். ஆயினும் இப்படிப்பட்ட குலதெய்வ வழிபாடுகள் நம்மை கடவுளை நோக்கிய பாதையில் திருப்பும் மைல் கல்லாக இருக்கின்றன. இந்த வழிபாட்டிலிருந்து துவங்கி கொஞ்சம் கொஞ்சமாக நாம் எதிர்பார்ப்பில்லாத வகையில் கடவுளை வழிபடும் நிலையை அடைகிறோம்.

5. நன்கு ஆராய்ந்து பார்த்தால் இது போன்ற வழிபாடு இதை நிராகரிக்கும் ஆபிரகாமிய மதங்களிடையேயும் தோன்றிவிட்டதை கவனிக்கலாம். இதற்கு இறையியல் ரீதியாக எதாவது ஒரு சால்ஜாப்பு சொல்லப்படுவதையும் அல்லது இது அவர்களது மதத்திற்கு புறம்பானது என்று தெரிந்தாலும் சாதாரண ஜனங்கள் இந்த வழிபாடுகளை அங்கே செய்வதையும் கவனிக்கலாம். ஏனென்றால், இதுவே இயல்பான இறை பாதை. இஸ்லாம் மதத்தில் அவர்கள் போரில் இறந்தவர்களையும், நோயில் இறந்தவர்களையும், இறைவனை நோக்கி வழிபாடு செய்து இறந்தவர்களையும் கும்பிடுகிறார்கள். நாகூர் தர்கா, அஜ்மீர் தர்கா இன்னும் மூலைக்கு மூலை தர்காக்கள் இப்படியே ஏற்பட்டன. இது இந்தியாவில் மட்டும் இல்லை, மொரோக்கோ துவங்கி இந்தோனேசியா வரை இஸ்லாம் பரவியிருக்கும் எல்லா இடங்களிலும் இருக்கின்றது. கிறிஸ்துவ மதத்திலோ புனிதர்கள் என்ற பெயரில் பலரை வழிபடும் வழக்கம் இருக்கிறது. பைபிளில் ஆதாரமில்லாத போதும் ‘புனிதர்’ என்ற பெயரில் இயேசுவின் தாயாரை வழிபடுவது தொடர்கிறது. இதில் ஒவ்வொரு புனிதருக்கும் ஒவ்வொரு விசேஷ சக்தி இருக்கிறது என்ற கற்பனைவேறு. இதில் மிகவும் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் இந்த மதங்கள் எல்லாம் நமது புனிதமான இந்து மதத்தை ‘பல கடவுள்களை வணங்கும் மதம், சிலை வழிபாடு உள்ள மதம்’ என்று நிராகரிப்பதுதான். மூடர்கள்!

6. எனவே குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் புனிதமான ஒன்று, கடவுளை நம்பிக்கையோடு பிரார்த்திக்க ஏதுவாக மனதை ஒருமுகப்படுத்தி, செம்மையாக்குவது என்று அவர்களுக்கு புரியவைத்தேன்.

புரிந்ததோ இல்லையோ மறுநாள் பூஜைகளில் அனைவரும் ஆர்வமுடன் கலந்து கொண்டார்கள். சிந்திக்க சிந்திக்க அவர்களுக்கு இந்த உண்மை, நமது மதத்தின் பெருமை புரியும் என்று நினைக்கிறேன். உங்களுக்கு?…..

(தொடரும்)