என் சொந்த கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
என் சொந்த கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

என் தாயின் தாயன்பை உணர்ந்த மற்றொரு தருணமது ....



அன்றொரு  நாளில்
எனக்கு காயம் ஏற்பட
யாரோ ஒருவர்
உனக்கு சொல்ல
மனம் கலங்கி
கண்ணீர் விட்டு அழுதாயே ....

சில நாட்கள் வரை
மனம் வெதும்பி
உணர்வற்றவளாக,
சாப்பிடாமலும் தூங்காமலும்
இருந்த அந்த
தருணங்களை
நினைக்கில்  
எனக்கு வலித்த வலியை விட
நீ அழுத போதும்,
உன் முகம் கண்ட துக்கத்தை நினைக்கில்
அம்மா என் கண்கள் கலங்கி  குளமாகி
கண்ணீரும் வருகிறது..

என் தாயின்
தாயன்பை உணர்ந்த
மற்றொரு  தருணமது ....




என் தாய் தெய்வமென்று..............................



தாய் தந்த சுகம்
தனக்கு யாரும் தருவதற்கில்லை ..

எந்த வகை அன்பும்
இதற்கு நிகரில்லை ..

முன்னம் நாளில் தந்திட்டாய்
இனி பெறுவதற்கில்லை ..

எத்தனை கோடி உறவும்
இந்த உறவிற்கு இணையில்லை ...


என்று அடைவோம்
இந்த இன்பத்தை..
தன்னிகரில்லா தாயன்பை........

அம்மா ....நீ
மட்டும் போதும் அம்மா.....


நீ கற்று கொடுத்த
வார்த்தைகளும்
அன்பும்
குணமும்
தான் ...நீ என்று உணர்கிறேன் ...

உன் அன்பை 
வெளிபடுத்த வார்த்தைகளில்
முடியாவிட்டாலும் ......




என் இதயத்தின் ஏக்கம்
உன்னை உணர்கிறது...
................
...............


என் தாய்
தெய்வமென்று.....












வேலு . மகேஷ்




பிள்ளைகளே எங்களை கைவிட்ட துக்கத்தில்....




நாங்கள் தாழ்ந்து நிற்பதால்
உங்களிடம் தாழ்ந்தே கேட்கிறோம்
எங்களுக்கு உணவிடுங்கள் என்று..

உங்களால் முடியுமானால்
உதவிடுங்கள்.......
இல்லை என்றால்
எங்களை இழிவுபடுத்தாதிர்கள்...

நாங்கள் உறவுகளை
இழந்த ரணத்தில்

பிள்ளைகளே
எங்களை கைவிட்ட
துக்கத்தில்

மனதில் அழுது
நடை பிணமாய்
கையில் பாத்திரம் ஏந்தி
நாங்கள் எதற்காய் வாழ்கிறோம் என்ற
கேள்விகுறி எங்கள் உடம்பிலும் தாங்கி
உங்கள் முன்னால் நிற்கிறோம்...

கண்ணுமக்கா...

நீங்கள் எங்கள போல்
அல்லாது
குடும்பமாய் வாழ
அந்த கடவுளிடம்
வேண்டுகிறேன்..


படிக்க வந்த நண்பர்களெல்லாம் ஒட்டு போட்டுட்டு போங்களே!!

என்னை பற்றி என் நண்பன் எழுதியது ....


என்னல, என்னமோ ஆன்மீகத்துல நான் பெரிய புடிங்கி, .......... கரச்சி குடிசிடேனு சொன்ன. இது தான் நீ ....... புரிஞ்சி கிட்ட விதமா? தனி ஒரு மனுசன தாக்கி பேச உனக்கு என்ன உரிமை இருக்கு? அந்த மெயில் அனுபுரதுனால உனக்கு என்ன கிடைசிட போகுது? உன்ன மாதிரி விஜய் பிடிக்காதவன் நல்லா இருக்குடா னு சொல்லுவான். எல்லாரும் உன்ன மாதிரி தான் யோசிப்பங்கனு நீ எப்படி நினைக்குற? உனக்கு பிடிக்காத ஒன்னு அடுத்தவங்களுக்கும் பிடிக்க கூடாதுன்னு நீ எப்படி நினைக்கலாம்? அப்படி நினைக்க உனக்கு என்ன உரிமை இருக்கு?
நீ இன்னும் பதின்ம வயசு பசங்க மாதிரி தான் இருக்கனு நான் சொன்னா நீ ஏத்துக்குவியா? இந்த விசியத்துல சின்ன பசங்களுக்கும் உனக்கும் எந்த வித்தியாசமும் இல்லன்னு தான் நான் உன்ன புரிஞ்சிடுருகேன்.
யாரையும் விமர்சனம் பண்ண உரிமை இருக்கலாம்.. ஆனா அதிலயும் ஒரு தர்மம் இருக்கு.
ஒரு எடுத்துகாட்டுக்கு சொல்லுறேன். கருணாநிதி ஜெயலலிதா வின் அந்தரங்க விசியம் பற்றியோ அல்லது ஜெயலலிதா கருணாநிதியோட அந்தரங்கம் பற்றியோ பேசினதா நீ கேள்வி பட்டதுண்டா? அப்படி பேசினா அது அரசியல் தர்மம் இல்லை. அதனால அப்படி பேச மாட்டாங்க.
அதே மாதிரி உனக்கு விஜய் நடிப்பு பிடிகலான நீ அவன் நடிப்பு பற்றி விமர்சனம் பண்ணு. நானும் உன்கூட சேந்து ரசிக்குறேன். அவனோட அரசியல் பிரவேசம் பிடிகலான அத பற்றி விமர்சனம் பண்ணு. குறைந்த பட்சம் உனக்கு எது பிடிக்கலியோ அத பற்றி மட்டும் விமர்சனம் பண்ணு. அத விட்டுட்டு........ இதெல்லாம் படிச்சவன் பண்ண மாட்டான். இன்னொரு விசியம். விஜய் பிடிகலான கண்டிப்பா உனக்கு அஜித் பிடிச்சிருக்கனும். சாதாரண பிடித்தம் இல்லை. உயிர் கொடுக்குற அளவுக்கு நீ அவன நேசிக்கணும். அதனால தான் நீ விஜய் பற்றி இப்படி கடுப்பாகுற. (2 நிமிடம் யோசித்து பார்த்தால் உனக்கும் புரியும்)
இப்போ கூட நான் யோசிக்குறேன். நான் ஏன் உனக்கு இதெல்லாம் சொல்லணும்? எனக்கு என்ன உரிமை இருக்குனு... இது உன்கிட்ட எனக்கு பிடிக்காத விசியம். அதான் உன்ன இப்படி விமர்சனம் பண்ணிட்டேன். தவறுக்கு மன்னிக்கவும்.

அன்புடன்
ஜெ

கார்த்திகை தீப திருநாள்




இந்த கார்த்திகை தீப திருநாள் தான்!
அன்றும் இன்றும் என்றும்
நான் அடைய வேண்டிய இலட்சியத்தையும்
செய்ய வேண்டிய செயல்களையும்
ஞாபக படுத்தும்.


ஜோதி சுடர் இருளை நீக்கும்
சோம்பல் ஒழியட்டும்.
புன்னகை தவளட்டும்


மனம் ஒளி போல் பிரதிபலிக்க வேண்டும்
இன்று மகிழ்ச்சி கரமான நாள் தான்..
எல்லாருக்கும் பொதுவான இறைவன் அருளட்டும்..

சிரித்து கொண்டே மிதிவண்டியில்

.
.

காலையிலே ஒரு பெரியவர்
மிதிவண்டியில் ஏறி கொண்டார்.


என்னிடம் சொன்னார்.

"இந்த உலகத்துலே
மனிதர்க்கு [மனுஷாளுக்கு]
கொடுக்குறது தான்
உயர்ந்தது.
அதை விட உயர்ந்தது
இந்த உலகத்தில்
ஒண்ணுமில்ல.."

சிரித்து கொண்டே,
மிதிவண்டியில் பயணத்தை
தொடர்ந்தேன்.
.
.
.

இது மழைக்கு மட்டும் அல்ல..


-
சென்னை தாம்பரம்
ரயில் நிலைய பக்கத்திலும்
ஹிந்து மிஷன் மருத்துவமனை
எதிரிலும் காண்கிறேன்

இருக்க நல்ல ஒரு வீடும்
உடுக்க நல்ல உடைகளும்
இல்லாமல்
இவர்கள் மழைக்கு ஒதுங்கி
இதோ இந்த தாம்பரம் பாலம் கீழ்
மழையிலும்
சின்னஞ்சிறு குழந்தைகளும்
முதியவர்களும்
தனது வீடு இழந்து
இங்கே சமைத்து சாப்பிடுகின்றார்

மனநலம் குன்றியோரும்
பத்திற்கும் மேற்பட்டோர்
அங்கே திரிகின்றார்..

இன்னும் ஓன்று ..

வருவது என்னில்
கண்ணீர் மட்டும் அன்று..

அதோ பிள்ளைகளால் கைவிடப்பட்ட
மூதாட்டிகள் சிலபேர்

அவர்கள் கையில்
உணவை கொடுக்கும் போது
நான் கண்ட
"கடவுள் நீதான்பா !" என்பார்கள்

இவர்கள்
தெருவிலும்
மழையிலும்
பிச்சை எடுத்தும்
கைவிடபட்டும்
அலைகின்றனர்.........


ஆனால்
கல் மனதும்
கரைய மறுக்குது..

நனைந்த உடம்பு குளிர்கிறது
ஆனால் எங்கள் உள்ளம் குளிரவில்லை ...


மழையே
உனக்கு
நாங்கள் விலை கொடுப்பதில்லை

சில வேளை
எங்களையும்
எங்கள் மனதும்
மழையில்
குளிர்விக்கிறாய்

இது மழைக்கு மட்டும் அல்ல..


சில பேர் மனதில்
ஈரம் கொஞ்சம் இருந்தால்
இவர்கள் இங்கு இருக்க மாட்டார்..



எத்தனை நாள் தான் ஆகுமோ?
இந்த மழை தீரவென்று
அவர்கள்
ஏங்குகின்றார்

நான் ஏங்குகிரேன்
எப்போது மனிதர்கள்
நாங்கள் அனைவர்களும்
ஏசுவும், வள்ளலாரும் சொன்ன
அன்பு இதயம் பெறுவோம் என்று...

அன்று
முதியோர்
கைவிட படமாட்டார்
ஆதரவற்றோர்
இருக்க மாட்டார்
ஏழைகள்
இருக்கமாட்டார்
சமத்துவமும்,
அன்பும்
தான் அங்கு இருக்கும்....

எங்கள் குழந்தை தான்..


............................................

முதியோர்களும்
மனநிலை பாதிக்க பட்டவர்களும்
எளியோர்களும்
உணவுக்காய்
பரிதவிக்கும் போது
காணாமல் போவது
என் இயல்பு இல்லையே..


சேவை செய்ய
அனுமதி கொடு இறைவா..

அவர்கள் அழும்போது
நானும் அழுகிறேன் இறைவா?


இறைவா,
"அவனும் நானும் ஓன்று "
என்ற உணர்வை கொடு..

நாங்கள் எல்லோரும்
இந்த உணர்வை பெறணும் இறைவா !..

கைவிடபட்டவர்களும்
எங்கள் குழந்தை தான்..
நாங்கள்
கரம் பிடித்து
வழி நடத்தி செல்ல
கருணை வேண்டும் இறைவா!..