மகாபாரதம் உலகுக்கு எடுத்துக்காட்டும் ஓர் உண்மைத் தத்துவம்.....
அப்துல் கலாம் பற்றி 50 தகவல்கள்
தலைவா, நாளைய தமிழகம் உன் கையில் தான் இருக்கு. அரசியலுக்கு வாங்க தலைவா'...
ஷாருக்கான், சல்மான்கான் மற்றும் ஆமிர்கான் போன்ற ஹிந்தி சூப்பர் ஸ்டார்களுக்கு எவ்வளவு மார்க்கெட் வேல்யூ இருக்கு தெரியுமா..? அவர்களுக்கு மஹாராஷ்டிரா மட்டும் இல்லாமல் இந்தியா முழுக்க எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் தெரியுமா...? ஆனா, அந்த ரசிகர்கள் அவர்களை பார்த்து 'அரசியலில் குதியுங்கள்...இந்தியாவை காப்பாற்றுங்கள்...நீங்கள் தான் எங்கள் 'ஷாருக்காந்தி' என அடைமொழி இட்டு சுவரொட்டிகள் ஒட்டி நீங்கள் பார்த்தது உண்டா...?
இல்லை, ஹிந்தி சினிமாக்காரனின் படம் வெளியே வராமல் எந்த ஹிந்தி ரசிகனாவது தூக்கு போட்டு தற்கொலை செய்திருக்கிறானா..?? எந்த ஹிந்தி ரசிகனாவது அவர்களின் நடிகர்களுக்கு கோயில் கட்டியிருக்கானா...? இப்படி எல்லா விஷயங்களையும் அவர்களோடு உங்களையும் எண்ணி பார்த்தால், நீங்கள்(தமிழக ரசிகர்கள்) எவ்வளவு மட்டமான நிலையில் (அல்லது அந்த நிலைக்கு ஆளாக்கப்பட்டு) இருக்கிறீர்கள் என்பது உங்களுக்கே புரியும்!!
ஏன், நம்ம பக்கத்து மாநிலத்து கேரளாவில் இங்க நடக்கிற ரசிகர்களின் மானங்கெட்ட புரட்சிகள் ஏதாவது தினம் தினம் நடந்துக்கிட்டு இருக்கா..? மோகன்லால், மம்முட்டி எல்லாம் ஏன் ஆடாம் அலம்பல் பண்ணாம இருக்காங்க...? ஏன்னா, அவங்களுக்கு பைத்தியக்காரத்தனமான ரசிகர்கள் கூட்டம் இல்ல. இங்கே சென்னைக்கு படிக்க வந்த, இல்ல, பூர்வீகமா இருக்கிற மலையாளிகள் கூட நடிகர்கள் மேல வெறித்தனமா இருக்க மாட்டாங்க. அதுக்கு என்ன காரணம்னு யோசிங்க!
அமிதாப், திலீப்குமார், மோகன்லால், மம்முட்டிக்கு இல்லாத நடிப்பு திறமையா உங்க மூத்த தளபதி, இளைய தளபதி, வளரும் தளபதிக்கெல்லாம் இருக்கு...? சிகரெட் மேல தூக்கிப்போட்டு துப்பாக்கியால் சுட்டு வாயில வெச்சி பிடிச்சா, அப்படியே கை தட்டல் பறக்கும்..சிகரெட்ட சட்டை காலரிலிருந்து வாயால் கடிச்சி இழுத்தா, அதுக்கு பேர் நடிப்பாம்...சிலை வைப்பாங்களாம்..பால் ஊத்துவாங்களாம்...அய்யோ அய்யோ!!
அவ்வளவு ஏன்...ஹாருக்கானுக்கு பட்டம் ஏதாவது இருக்கா...? அமிதாப் பச்சனுக்கு பட்டம் இருக்கா...? மோகன்லால் ?? மம்முட்டி ??? ஒருத்தருக்கும் இல்ல. ஆனா, இங்க ஒரு பட்டத்துக்கு புது அரசியல்வாதி, புரட்சி அரசியல்வாதியான ஒரு நடிகர் படும் பாடு இருக்கே...அப்பப்பாஆஆ!!!
இதுக்கெல்லாம் யாரு காரணம்...? இந்த மானங்கெட்ட ரசிகர்கள் தான். கொஞ்சம் வெளியே வந்து இந்த பரந்த சினிமா உலகத்தை பார்த்து சிந்திக்க ஆரம்பிச்சா போதும்...அவங்க எவ்வளவு பெரிய தவறு, சமுதாய சீர்கேட்டை செஞ்சிக்கிட்டு இருக்காங்கன்னு தெளிவா புரியும்.
இவ்வளவு விளங்கும்படி விலாவரியா பதிவு போட்டாலும் கொஞ்சம் கூட உறைக்காம சில மர மண்டைகள் வந்து இங்க வியாக்கியானம் பேசுவாங்க...திருந்துங்கப்ப்பாஆஆ...புன்னியமா போகும்!
- பிரகாசம் பழனி
ஐயா!... சகாயம் IAS.. அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.
இப்படிக்கு,..
நாட்டிற்கு எது நல்லது என்று சிறிதும் சிந்திக்காமல், தன்னுடைய உணர்ச்சிக்கு அடிமைபட்டு ஒட்டு போடும் மாக்கள்.
காமராஜர் ஏழையாகவே, எழைகளுக்காகவே இருந்தார்….
ரொம்ப நேரம் ஓடியது. தலையில் சுமையுடன் தட்டுதடுமாறி வந்தார் மண்ணாங்கட்டி. பார்த்ததும் ’ஏன்யா. நான் அவசரமா வெளியில போகனும்னு காத்துகிட்டு இருக்கேன். இட்லி வாங்க இவ்வளவு நேரமா என்று எகிறினார் மாயாண்டி தேவர். மண்ணாங்கட்டிக்கு கோபம். என்னங்கய்யா நீங்க. இங்க ஆஸ்ட்ல அவ்வளவு இட்லி இல்லைன்னு சொல்லிட்டாங்க. மவுண்ட் ரோடெல்லாம் போய் அலைஞ்சு 100 ருபாக்கும் இட்லி வாங்குறது லேசுபட்ட காரியமா’என்று பதிலுக்கு சத்தம் போட்டார். அதுதான் மண்ணாங்கட்டி என்ற வெகுளி. அப்பாவி. அவ்வளவு வெள்ளந்தி….
அப்படியான மண்ணாங்கட்டியின் தலையில் ஒருநாள் இடி விழுந்தது. அந்த உத்தரவை படித்துகாட்டச்சொல்லி வீட்டில் அழுது புரண்டு கதறினார். ’அரசாங்க உத்தியோகத்தில் எழதப்படிக்கத் தெரியாதவர்கள் எல்லாம் இனி வேலையில் இருக்க கூடாது.பணியில் இருந்து நீக்கப்படுகிறார்கள்’ என்று காமராஜர் போட்ட உத்தரவுதான் அந்த கடிதம். இரண்டு நாள் கழித்து பழைய சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு ஓடிவந்தார். முக்கையா தேவரிடம் தரையில் விழுந்து கதறி அழுகிறார்.
மண்ணாங்கட்டி புக்செய்த நேரம் உடனே தொடர்பு கிடைத்தது. மறுமுனையில் முதல்வர் காமராஜ். யார் நீங்கள் உங்களுக்கு என்ன வேண்டும் என்கிறார். அய்யா நான்தான் அசம்பிளி ஆஸ்டல் பியூன் மண்ணாங்கட்டி பேசுறங்க ஐயா என்றபடியே அருகில் இருந்த முக்கையா தேவரை பார்க்கிறார். அவருக்கு முதர்வர்அலுவலகத்தில் இருந்து யாராவது உதவியாளர்கள்தான் டெலிபோனை எடுத்திருப்பார்கள் என்ற நினைப்பு. ‘எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கறப்போ நான் பியூனா இருக்கக்கூடாதான்னு கேளுடா” என்கிறார்.
மறுமுனையில் இருந்த காமராஜரிடம் அதை அச்சுபிசகாமல் ‘ஐயா,எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கிறப்போநான் பியூனா இருக்ககூடாதான்னு’ தேவர் ஐயா கேட்க சொல்றாருங்க என்கிறார் மண்ணாங்கட்டி. பிறகு பேச்சில்லை….
அடுத்த 30 நிமிடத்தில் உயர் அதிகாரிகள் 3-பேர் அங்கே வந்துவிட்டார்கள். முதல்வருக்கு போன் செய்தது யார்? என்றார்கள்.நான்தான் ஐயா என்று முன்னே வருகிறார் மண்ணாங்கட்டி. உங்களை கையோடு அழைத்துவரச் சொல்லியிருக்கிறார். உடனே புறப்படுங்கள் என்று நிற்கிறார்கள். அப்போதுதான் நாம்பேசியிருப்பது முதல்வரிடம் என புரிகிறது. முக்கையா தேவருக்கும் பதட்டம். மண்ணாங்கட்டி ’ஐயா நீங்களும் வாங்க’ என்று அழுகிறார். பின்னாடியே வருகிறேன். நீ போப்பா என்று அனுப்பி வைக்கிறார். கோட்டையில் உள்ள முதல்வர் காமராஜை நோக்கி வாகனம்பறக்கிறது.
முதர்வரின் அறையில் உள்ள ஷோபாவில், கண்ணத்தில் கைவைத்தபடி கவலைதோய்ந்த முகத்தோடு உட்கார்ந்திருக்கிறார் காமராஜர். கதவு திறக்கப்படுகிறது. மண்ணாங்கட்டி முதலில் நுழைய அதிகாரிகள் சற்று ஒதுங்கி கதவோரம் நின்று கொண்டார்கள்.நீங்கதான் மண்ணாங்கட்டியா…என்கிறார். ஆமாங்க ஐயா. நான்தெரியாம பேசிட்டேன். என்னை மன்னிச்சுடுங்க ஐயா என்றபடியே கீழே விழுந்தார். அந்த கலாச்சாரம் காமராஜருக்கு பிடிக்காது. அதிகாரிகளை பார்க்க உடனே எழுப்பி நிற்க வைக்கிறார்கள். அவரை வா…வாண்னேன். வந்து பக்கதில உட்காருங்கன்னேன் என்றழைக்கிறார். மண்ணாங்கட்டி தயங்கி நிற்கிறார். காமராஜர் முறைக்க தயங்கி தயங்கி பக்கத்தில் சென்று உட்காருகிறார்.
மண்ணாங்கட்டியை முதுகில் தட்டிக்கொடுத்து முகத்தையேஉற்றுப்பார்த்த முதல்வர் காமராஜ், பட்டென்று கையெடுத்து கும்பிட்டு ‘நான் தப்புபன்னிட்டன். தெரியாம செய்திட்டன். மன்னிச்சுடு. அந்த தவறை நீதான் புரியவைச்சே…ரெண்டு நாளா உங்கவீட்ல சோறுதண்ணியில்லியாமே.
சமைக்கலயாமே….உங்களுக்கு ரெண்டு பொம்பளபுள்ளைங்க…எல்லாத்தையும் இப்பதான் தெரிஞ்சுகிட்டேன்..எவ்வளவு பெரிய தப்பு செய்திருக்கேன்.. நான் அப்படி ஒரு உத்தரவு போட்டிருக்ககூடாது. ‘இனிமே புதிதாக வேலைக்கு வருபவர்களுக்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்’னு போட்டிருக்க வேண்டும். நான் செய்தது தவறுதான் என்று தட்டிக்கொடுத்து ஆதறவு சொல்லமண்ணாங்கட்டி கதறி அழுகிறார். காமராஜருக்கும் பேச்சு இல்லை…
அடுத்து அங்கேயே ஒரு உத்தரவு தயாராகிறது. காமராஜர் கையொப்பமிடுகிறார். மண்ணாங்கட்டிக்கு மீண்டும் அரசு வேலை. அதிகாரிகளை பார்த்து ‘இவரை அழைத்துக்கொண்டு போங்க. வேலை கொடுத்தாச்சு. இனி கவலைப்பாதீங்கன்னு அவரோட மனைவி, குழைந்தைங்ககிட்ட சொல்லுங்க’ன்னு அதிகார குரலில் உத்தரவிடுகிறார். பிறகென்ன நினைத்தாரோ சற்று தயங்கி’போகிறபோது வெறும் கையோட போகாதீங்க. ஓட்டல்ல எல்லாருக்கும் சாப்பாடு வாங்கிட்டு போய் கொடுங்க. ரெண்டு நாளா அவர்கள் சாப்பிட்டிருக்க மாட்டர்கள்’ என கண்டிப்போடு கூறுகிறார் அந்த அதிகாரிகளிடம்.
மண்ணாங்கட்டிக்கு பேச வார்த்தைகளின்றி கையெடுத்து கும்பிட்டபடியே வெளியேற, முதர்வர் காமராஜரும் எழுந்தது கையெழத்து கும்பிட்டபடியே அனுப்பிவைத்தார்.
ஒரு ஏழையின் கண்ணீர் வலி..இன்னொரு ஏழைக்குத்தான் தெரியும். ஆமாம் காமராஜர் ஏழையாகவே, எழைகளுக்காகவே இருந்தார்….
குற்றால அருவியின் தற்போதைய நிலை- ஆய்வு
மெயின் அருவி அருகே கழிவுநீர் ஆற்றில் கலக்கிறது. அதிக வாகனங்கள் வருவதால் முறையான போக்குவரத்து பராமரிக்கப்படவில்லை. குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களால், பொதுமக்களுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படுகிறது. டாஸ்மாக் கடைகளில் பார் வசதிகள் இல்லை என்பதால், பொதுஇடங்களில் மக்கள் மது அருந்துகின்றனர்.
இவைகள் உட்பட பல குறைகளை அறிக்கையில் சுட்டிக்காட்டி இருந்தனர்.
இவற்றையெல்லாம் பரிசீலித்த நீதிபதிகள், கிருபாகரன், வைத்தியநாதன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் நேற்று பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவில் கூறியிருப்பதாவது:-
சிவபெருமானுக்கும், பார்வதிக்கும் இமயமலையில் திருமணம் நடந்தபோது, பூமியில் உள்ள அனைவரும் திருமணத்தை பார்க்க அங்கு சென்றதால், வடபகுதி கீழே தாழ்ந்தும், தென்பகுதி மேலே உயர்ந்தும் காணப்பட்டது. இதனால், அதை சரிசெய்ய அகத்திய முனிவரை தென்பகுதிக்கு சிவபெருமான் அனுப்பியதாகவும், அகத்தியர் முனிவர் வந்து அமர்ந்த இடம் குற்றாலம் என்றும், அவர் இங்கு வந்து அமர்ந்ததால், பூமி சமநிலைக்கு வந்தது என்றும் புராணக்கதைகள் கூறுகிறது.
பரிதாபத்துக்குரியது
கங்கைக்கு நிகரான புனித நீர் குற்றால அருவியில் விழுகிறது என்று திருகூடராசப்ப கவிராயர் தன்னுடைய குற்றால குறவஞ்சியில் குறிப்பிட்டுள்ளார். இப்படி வரலாற்று சிறப்புமிக்க, புனித நீர்வீழ்ச்சியான குற்றாலத்தின் தற்போதைய நிலை பரிதாபத்துக்குரியதாக உள்ளது.
குற்றாலத்தில் ஐந்தருவி உள்ளது. இந்த அருவியில் விழும் தண்ணீர் மருத்துவ குணங்கள் கொண்டது. இந்த அருவியில் குளிப்பதால் உடலுக்கு மட்டுமல்ல, மனதுக்கும் புத்துணர்ச்சியை அளிக்கிறது. இதனால், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், இந்த அருவிகளில் குளித்தால், குணமடைந்து விடுவதாகவும் நம்பப்படுகிறது.
விழித்தெழும் நேரம்
ஆனால், இந்த புனித நீர் ஓடும் ஆற்றில் கழிவுநீர் கலக்கச் செய்வது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மேலும், அருவி நீர் மாசு அடைந்து விடக்கூடாது என்பதற்காக இந்த அருவியில் குளிப்பவர்கள் எண்ணெய், குளியல் சோப்பு, சீயக்காய் ஆகியவை பயன்படுத்த அரசு தடை விதித்து இருந்தும், இந்த பொருட்கள் எல்லாம் அருவிக்கு அருகே தாராளமாக கிடைக்கிறது. இவற்றினால், இந்த புனித நீர் மாசு அடைக்கிறது. நீர் இல்லாமல், மனிதர்கள், விலங்குகள், பறவைகள் என்று எந்த உயிரினங்களும் வாழ முடியாது.
இதைத்தான் ‘நீர் இன்றி அமையாது உலகு’ என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். ஆனால், வக்கீல்கள் தாக்கல் செய்துள்ள அறிக்கைகளை பார்க்கும்போது, குற்றாலம் மாசு அடைந்து, சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரியவருகிறது. எனவே, நாம் விழித்தெழ வேண்டிய நேரம் வந்துவிட்டது.
ஷாம்பு, சோப்புகளுக்கு தடை
எனவே கீழ்க்கண்ட உத்தரவுகளை அரசு அதிகாரிகள் தீவிரமாக அமல்படுத்த வேண்டும்.
குற்றாலத்தில், எண்ணெய், ஷாம்பு, குளியல் சோப், துணி துவைக்கும் சோப்பு, சீயக்காய், பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்கள் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்கிறோம்.
ஷாம்பு, சோப்புகள் உள்ளூர்வாசிகளை தவிர சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்ய தடை விதிக்கப்படுகிறது.
தடை செய்யப்பட்ட இந்த பொருள்கள் அருவிக்கு அருகே பயன்படுத்துபவர்கள் மீது அபராதம் விதித்து, அந்த பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்யவேண்டும்.
அருவிகளில் குளிக்கும் இடத்தில் கழன்று கிடக்கும் இரும்பு கைப்பிடிகள் அனைத்தையும் சரிசெய்யவேண்டும். இவற்றை அதிகாரிகள் முறையாக பராமரிக்க வேண்டும்.
அருவிகள் முன்பு ராட்சத மின்சார விளக்கு பொருத்தி, இரவு நேரங்களிலும் வெளிச்சத்தை ஏற்படுத்த வேண்டும்.
சுங்கசாவடியில் இருந்து பழைய குற்றாலம் வரை மின் விளக்குகள் இல்லை. எனவே, இங்கு உடனடியாக மின்விளக்குகளை அதிகாரிகள் அமைக்க வேண்டும்.
கழிவுநீர் கலப்பதை தடுக்கவேண்டும்
பராமரிக்கப்படாமல் உள்ள கழிவறைகளை உடனடியாக சரிசெய்யவேண்டும். பெண்கள் ஆடை மாற்றும் அறைகளையும், புதிய கழிவறைகளை கழிவுநீர் தொட்டியுடன் கட்டவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
உத்தரபிரதேசத்தில் திறந்தவெளி கழிவறைக்கு சென்ற சகோதரிகள் கற்பழிக்கப்பட்ட சம்பவம்போல் குற்றங்கள் எதுவும் நடந்திடாமல் தடுப்பதற்காக, முறையான பாதுகாப்பான கழிவறைகள் உடனடியாக கட்ட வேண்டும்.
நீர் வீழ்ச்சியில் இருந்து ஆறாக செல்லும் நீரில், கழிவறையில் இருந்து வெளியேறும் கழிவுநீரை கலக்கச் செய்வதை உடனடியாக அதிகாரிகள் நிறுத்தவேண்டும். அந்த ஆற்றுப்பகுதியில் உள்ள கழிவறையை அங்கிருந்து அகற்றிட வேண்டும்.
மதுக்கடையில் பார் வசதி
சுற்றுலா பயணிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்கவேண்டும். குற்றாலத்தில் தேங்கும் குப்பைகளை அகற்ற பாதிய துப்புரவு தொழிலாளர்களை குற்றால டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் நியமிக்க வேண்டும்.
டாஸ்மாக் கடைகளில், உடனடியாக பார் வசதிகளை அதிகாரிகள் செய்துகொடுக்க வேண்டும்.
மேலும் குற்றாலத்தில் பொது சாலைகள், பொது இடங்கள் மற்றும் காருக்குள் மது அருந்துவது தடை விதிக்கப்படுகிறது.
மீறி செயல்களில் ஈடுபடுபவர்கள், மீது நடவடிக்கை எடுத்து அபராதத்தை போலீஸ் அதிகாரிகள் விதிக்க வேண்டும். யாராவது மது அருந்தினால் அந்த காட்சியை வீடியோவில் படம் பிடிக்க வேண்டும்.
குடித்துவிட்டு குளிக்க தடை
அருவிக்கு அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை 48 மணி நேரத்துக்குள் அகற்ற வேண்டும். குடிபோதையில் அருவிகளில் குளிப்பதால் நிலை தடுமாறி பலர் கீழே விழுந்து இறக்கின்றனர். எனவே, குடிபோதையில் அருவிகளில் குளிக்க தடை விதிக்கிறோம்.
குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை மருத்துவ சோதனையில் ஈடுபடுத்த, நடமாடும் மருத்துவ சோதனை மையத்தை திருநெல்வேலி சுகாதாரத்துறை இணை இயக்குனர் குற்றாலத்தில் உருவாக்க வேண்டும். அதேபோல, குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு உடனடியாக அபராதம் விதிக்க, நடமாடும் நீதிமன்றத்தையும் அங்கு அமைக்க வேண்டும். குற்றாலத்தில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய மருத்துவ மையங்கள் உருவாக்க வேண்டும்.
பொதுமக்களின் கடமை
குற்றாலம் போலீஸ் நிலையத்தில் போலீசாரின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவதால், பாதுகாப்புக்காக அருவிகள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சி.சி.டி.வி. கேமராக்களை போலீசார் பொருத்தவேண்டும்.
இந்த உத்தரவுகளை தீவிரமாக அதிகாரிகள் அமல்படுத்துகின்றனரா? என்பதை உறுதி செய்ய திருநெல்வேலி மாவட்ட கலெக்டர், சூப்பிரண்டுகள் திடீர் ஆய்வுகளை குற்றாலத்தில் மேற்கொள்ள வேண்டும்.
அதேநேரம், குற்றாலம் என்ற புனித, சுற்றுலா தலத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது ஒவ்வொரு குடிமக்களின் கடமையாகும். உணவு பண்டங்களை கண்ட இடங்களில் வீசி அசுத்தம் செய்யாமல் பொதுமக்கள் பொறுப்புடன் செயல் படவேண்டும்.
இயற்கை பரிசு
இயற்கை கொடுத்துள்ள இந்த அரிய பரிசை (குற்றாலத்தை) பேணி பாதுகாப்பது பொதுமக்களாகி நம்முடைய கடமையாகும். இந்த வழக்கினை முடித்து வைக்காமல், எதிர்காலத்தில் பிற உத்தரவுகளை பிறப்பிக்கும் விதமாக நிலுவையில் வைக்கின்றோம். ஐகோர்ட்டின் இந்த உத்தரவுகள் அனைத்தையும் தீவிரமாக அமல்படுத்தி, அதுதொடர்பான அறிக்கையை அதிகாரிகள் இந்த கோர்ட்டில் தாக்கல் செய்யவேண்டும்.
இன்னொரு முறை என் மதத்தைப் பற்றி நீங்கள் தவறாகப் பேசினால்,............................
உண்மையைத் தேடி
இவையெல்லாமே கழகங்களின் சாதனைகள் தான்...
கரும வீரர் காமராசர் அய்யா சும்மாவா சொன்னார்... கழகங்கள் இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று.... காமராசரை தமிழக மக்கள் 1967 இல் தோற்கடித்த போது, தோற்றது காமராசர் அல்ல.. தமிழக மக்கள் தான்......
டீ கடை நடத்திய மோடி.
மோடியின் அயராத உழை ப்பினால் கடந்த, 1998ல் குஜராத் இமாச்சலபிரதேச தேர்தல்பொறுப்பாளராக, அத்வானியால் நியமிக்கப்பட்டார். குஜராத்தில் பா.ஜ.க ஆட்சியை கைப்பற்றி அம்மாநிலத்தின் முதல்வராக கேசுபாய்படேல் பதவியேற்றார். இதனைத்தொடர்ந்து 2001 அக்., 6ம் தேதி தனது முதல்வர்பதவியை ராஜினாமா செய்தார் கேசுபாய்படேல். அந்தநேரத்தில் எம்எல்ஏ., வாக கூட இல்லாத மோடி, அக்., 7ம் தேதி முதல்வராக பதவியேற்றார். பிறகு , இடைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 2002 பிப்., 27ல், "கோத்ரா ரயில் எரிப்பு' சம்பவத்தை_தொடர்ந்து, குஜராத்தில் கலவரம் ஏற்பட்டது. இதையடுத்து மோடி, ராஜினாமாசெய்தார். அதே ஆண்டு நடந்த சட்ட சபை தேர்தலில், வெற்றிபெற்று மீண்டும் முதல்வரானார்.
மோடி மதவாதி எனவும் கலவரத்துக்கு காரணமானவர் என்றும் பல குற்றச் சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டன. ஆனால் அதைஎல்லாம் மனதில்கொள்ளாமல், மாநிலத்தின் வளர்ச்சியை மட்டும கருத்தில்கொண்டு செயல்பட்டார். குஜராத்தை பலதுறைகளிலும், முன் மாதிரி மாநிலமாக மாற்றிக்காட்டினார். இதுவே அவரது அடுத்தடுத்த வெற்றிக்கு வித்திட்டது. இவரது சாதனையை பாராட்டி இந்தியாடுடே நாளிதழ், "இந்தியாவின் சிறந்த முதல்வர்' என விருதை, 2006ல் வழங்கி கவுரவித்தது
2007ல் நடந்த சட்ட சபை தேர்தலின்போது, "மரண வியாபாரி' என்று காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியால் , விமர்சிக்கப்பட்டவர் மோடி. ஆனால் அந்தவிமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும்வகையில் வெற்றிபெற்று மூன்றாம் முறையாக முதல்வரானார் மோடி.
குஜராத்தில், நீண்ட காலம் முதல்வராக இருந்தவர் என சாதனை யையும் படைத்தார். குஜராத்தில், கணினி துறையில், இவர் உருவாக்கிய வளர்ச்சியின்_காரணமாக, கம்ப்யூட்டர் சொசைட்டி ஆப் இந்தியா அமைப்பு, "இரத்னா' விருதை வழங்கியது. 2009ம் ஆண்டுக்கான, "ஆசியாவின் சிறந்த எப்டிஐ., பெர்சனாலிட்டி' விருதுக்கு தேர்வுசெய்யப்பட்டார்.
குஜராத் மின்மிகை மாநிலமாக உள்ளது. சோலார் மின்உற்பத்தியில், (2,000 மெகாவாட்) நாட்டிலேயே முன்னணியில் இருக்கிறது . இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாவதை தடுக்கும்வகையில், "குட்கா'வுக்கு தடைவிதித்துள்ளார். மாநிலம் முழுவதும் பூரண மது விலக்கை அமல்படுத்தியுள்ளார். மும்பை தாக்குதலுக்குப் பிறகு , குஜராத் கடலோர பாதுகாப்பை பன் மடங்கு பலப் படுத்தியுள்ளார்.
சமூக வலை தளமான, "டுவிட்டரில்' இவரை, 11 லட்சம்பேர் பின்தொடர்கின்றனர். சமீபத்தில், ஆன்லைனில் இளைஞர்களுடன், மோடி நேரடியாக கலந்துரை யாடினார். அரசியல்வாதி ஒருவர், இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் பங்குகொள்வது இதுவே முதல் முறை.
தற்போது தன்தலைமையில், மூன்றாம் முறையாக, சட்ட சபை தேர்தலை எதிர் கொண்டு, "ஹாட்ரிக்' வெற்றி பெற்றுள்ளதோடு, நான்காம் முறையாக, முதல்வராக பதவியேற்க இருக்கிறார் . கடந்த, 22 ஆண்டு காலமாக, குஜராத்தில், ஆட்சி, அதிகாரத்தை பிடிக்கமுடியாமல் தவிக்கும், காங்கிரசை மீண்டும் மண்ணை கவ்வச்செய்துள்ளார்.
காமராஜர் சொன்னது..."நான் தப்பு பண்ணிட்டேன். தெரியாம செய்திட்டேன். மன்னிச்சுடு!"...
நன்றி – தமிழால் இணைவோம், முகநூல்
சிறுவயதிலேயே ஆன்மிக விஷயங்களைத் தெரிந்து கொண்டால் அது முதுமை வரை ...
*
மனிதனின் மனம் கடுகுப்பொட்டலம் போன்றது. அந்தப் பொட்டலம் கிழிந்து கடுகு
நாலாபுறங்களிலும் ஓடிவிட்டால் அதை ஒன்றுசேர்ப்பது சிரமம். அதுபோல, மனம்
உலகவிஷயங்களில் சிதறத் தொடங்கினால் அதைக் குவித்து ஒருமுகப்படுத்துவது
சுலபமானதல்ல.
*சூரிய உதயத்திற்கு முன்னரே பணிகளைத் தொடங்கினால், அன்றைய பணிகள் யாவும்
நன்றாக நடைபெறும். அதுபோல, சிறுவயதிலேயே ஆன்மிக விஷயங்களைத் தெரிந்து
கொண்டால் அது முதுமை வரை துணைநிற்கும்.
* கடவுளைத் தேடுபவன் கடவுளை அடைகிறான். செல்வத்தையும், செல்வந்தர்களையும்
நாடுபவன் அவற்றையே அடைகிறான். வாழ்வில் எதை விரும்பி நாடுகிறார்களோ அதையே
அடைவார்கள்.
* ஒளியை உணர்பவன் இருளையும் உணர்கிறான். பாவத்தைப் பற்றித்
தெரிந்தவனுக்குப் புண்ணியமும் இன்னதென்று தெரிந்திருக்கும். குணத்தைப்
பற்றி அறிந்தவன், குற்றத்தைப் பற்றியும் அறிந்திருப்பான்.
* பழங்கள் நிறைந்த மரம் எப்போதும் கனத்தினால் தாழ்ந்து வளையும். அதுபோல
நீங்கள் பெருமை மிக்கவராக வாழவேண்டுமானால் அடக்கமும் பொறுமையும் தேவை.
-ராமகிருஷ்ணர்
குழந்தைகளின் அறிவை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்களை எளிதாக பார்க்க...
புத்தகத்தை கொடுத்து படி என்றால் குழந்தைகளுக்கு சற்றே முகம் சுழிக்கும், எப்படி படிக்க வேண்டும் என்பதை நாம் சொல்லி கொடுப்பதை விட வீடியோ மூலம் சிறு குழந்தைகள் எப்படி எல்லாம் படிக்கின்றனர் என்பதை காட்டினால் போதும் அவர்களின் அறிவு மேலும் வளரும் அரிய பல நுனுக்கங்களையும் எளிதாக கற்றுக்கொள்ள ஒரு தளம் உள்ளது.+
இணையதள முகவரி : http://www.neok12.com
இத்தளத்திற்கு சென்று குழந்தைகளின் அறிவை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்களை எளிதாக பார்க்கலாம். Physical videos, Life Sciences , Human body , Earth & Space , Geography , Social Studies , English , Math , History , Games , Activities போன்ற பல்வேறு துறைகளில் எந்தத்துறை சார்ந்த வீடியோக்கள் பார்க்க வேண்டுமோ அதை சொடுக்கி அதிகப்படியான் வீடியோக்களை பார்க்கலாம்.ஓவ்வொரு வீடியோவும் குழந்தைகளுக்கு பயனுள்ள வீடியோவாகவே இருக்கிறது.ஓயாமல் படி படி என்று சொல்வதை விட இது போல் குழந்தைகளுக்கு வீடியோ மூலம் அறிவை புகட்டும் தளங்களை தெரியப்படுத்தினால் அவர்களின் அறிவு மேலும் பெருகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
தகுதியான நபருக்குச் சரியான நேரத்தில் செய்வது தான் சேவை - சிந்தனைகள்
*கோபத்தாலோ, பொறாமையாலோ, ஏக்கத்தாலோ மனம் பதட்டப்படும்போது குளிர்ந்த நீரைக்குடியுங்கள். அமைதியாக ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். முடிந் தால் பஜனைப் பாடல்கள் பாடுங்கள். நீண்ட தூரம் நடைபோட்டு வாருங்கள். மனதை அரிக்கும் சிந்தனைகள் வெளியேறி தூய்மையாக்கப் பட்டுவிடும்.
* மனதிற்கு மகிழ்ச்சி தரும் செயலைச் செய்வது எளியதாகும். ஆனால், நன்மை தரக்கூடியவற்றைச் செய்வது கடினம். மகிழ்ச்சி தருபவை எல்லாம் லாபகரமானது அல்ல.
* வாழ்க்கை ஒரு போர்க்களம். தர்மபூமி. அங்கு கடமைகளும், ஆசைகளும் எப்போதும் போராடுகின்றன. மனதில் எழுகின்ற ஆசை என்னும் பயங்கர தீ, பொறாமை என்னும் விரோதி ஆகியவற்றுக்கு பணிந்து செல்வது கோழைத்தனமாகும்.
* எளியவர்களுக்காக செய்யும் தொண்டு கடவுளுக்குச் செய்யும் தொண்டை விட மேலானதாகும். கடவுள் நம்மிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் எளியவர்களுக்குச் சேவை செய்வதைக் கண்டு கடவுள் மகிழ்ச்சி கொள்கிறார்.
* தகுதியான நபருக்குச் சரியான நேரத்தில் செய்வது தான் சேவை. சமூகப்பணி என்பது வெறும் விளம்பரப்பணியாக அமைந்து விடக்கூடாது. நம்மால் முடிந்த நல்ல செயலை பிறருக்குச் செய்ய வேண்டியது கடமையாகும்.
-----சத்யசாய்.....
இளநரையா? கவலையை விடுங்க: தீர்வு இதோ!
பகுதி : 1
“போனல் என்ன மயி..(Sensor).. தானே என்று விட்ட காலம் எல்லாம் மலையேறி விட்டது. அழகுக்கு கருகரு முடி தான் பிரதானம். (ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி)
இளநரை என்பது பித்தம் சம்பந்தப்பட்ட விஷயம். பித்தப் பிரகிருதிகளுக்கு இளம் வயதிலேயே தலை நரைத்துவிடும்.
ஆனால் அதற்கு நல்ல மருந்துகள் இருக்கின்றன. உணவில் கறிவேப்பிலையை நிறைய சேர்க்க வேண்டும். பசுவெண்ணெய்க்கு இளநரையை மாற்றும் தன்மை இருக்கின்றது. தினமும் பசு வெண்ணையைச் சிறிது சாப்பிட்டு வரவேண்டும். வெண்ணெயுடன் கறிவேப்பிலைப் பொடியையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.இதே வெண்ணையைத் தலை, கால்களில் அழுத்தித் தேய்க்க வேண்டும்.
தலைமுடியின் வளர்ச்சிக்கும் கருமைக்கும் நெல்லிக்காய் நல்ல மருந்து. நெல்லிக்காயை வெட்டி கொட்டை நீக்கி நிழலில் காயவைக்கவும். உலர்ந்த பிறகு தேங்காய் எண்ணெயில் வறுக்க வேண்டும். காய் நன்றாக கருகும்வரை வறுத்தால், எண்ணெய் நன்றாக கருநிறமாகிவிடும்.
இந்த எண்ணெய் தலைக்கு நல்லது. இளநரையைத் தடுக்கும். பித்தம் சமனமாகும். உலர்ந்த நெல்லிக்காயைத் தண்ணீரில் ஓரிரவு ஊறப்போட்டு அந்தத் தண்ணீரைத் தலையில் தேய்க்கலாம். இளநரைக்கு நல்லது.
இது எல்லாம் செய்ய பஞ்சியா?? கவலைய விடுங்கள்: இயற்கை முறையில் சாயம் பூசலாம்…
தலைக்குச் சாயம் (Hair Dye)
சுத்தமான தேங்காய் எண்ணெயில் உலர்ந்த நெல்லிக்காய்த் துண்டுகள், நசுக்கிய கடுக்காய் விதைகள், செம்பருத்திப் பூக்கள், கரிசலாங்கண்ணி, நீலிஅவரை, பிச்சி இலை, தான்றிக் காய், லோகபஸ்மம் (ஆயுர்வேத கடைகளில் கிடைக்கும்) இவற்றைக் காய்ச்சி அந்த எண்ணெயை வடிகட்டித் தலைக்குப் பயன்படுத்தலாம்.
கடுக்காய் விதையை நசுக்கி தேங்காய் எண்ணெயில் கலந்து அதன் சத்து முழுவதும் எண்ணெயில் இறங்கும்வரை காய்ச்சி இந்த எண்ணெய்யை தினசரி உபயோகிக்கலாம். இது பீஹ்மீ போலப் பயன்படும். கடுக்காய் காய்ச்சிய நீரை தலை கழுவ பயன்படுத்தலாம்.
மருதாணி இலையை நன்கு அரைத்து அதைத் தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி அந்த எண்ணெயையும் பயன்படுத்தலாம். இது நரைமுடிக்கான சாயம்போல் பயன்படும். சிலமணி நேரம் கழித்துக் கழுவினால் முடி கருமையாகக் காட்சியளிக்கும். செம்பருத்திப் பூக்களை நிழலிலும் வெயிலிலுமாகக் காயவைத்து தேங்காய் எண்ணெயிலிட்டுக் காய்ச்சினால் சிவப்பு நிற எண்ணெய் கிடைக்கும். இதனை நரையை மறைக்கும் சாயமாகத் தடவிக்கொள்ளலாம்.
மிகவும் எளிமையான ஒரு வழி அதிக கட்டியான தேயிலை நீரினால் தலையைக் கழுவுவதுதான். வாரத்தில் இரண்டுமுறை இவ்வாறு செய்தால் முடி கருஞ்சிவப்பாக மாறிவிடும்.
Thanks.
Tamilcloud
பகுதி : 2
இள நரையைப் போக்க வேண்டுமா....?
இன்றைய காலத்தில் சுத்தமான நீர் இல்லாததாலும், இயற்கை முறையில் தலைக்குக் குளிக்காமல், இரசாயனக் கலப்பு நிறைந்த ஷாம்பு, சோப்பு போன்றவற்றால் குளிப்பதாலும் இளம் வயதிலேயே தலை முடி கொட்டி விடுகிறது. முடி என்னமோ எளிதாகக் கொட்டிவிடுகிறது. ஆனால், அதனை மீண்டும் முளைக்க வைக்கவோ, மேலும் முடி கொட்டாமல் காப்பாற்றுவதோ இன்றைய மருத்துவத்தில் பெரும் சவாலாக உள்ளது. இந்நிலையில், முடி உதிர்வதைத் தடுக்கவும், இள நரையைத் தவிர்ப்பதும் எப்படி என்பது குறித்து இயற்கை மருத்துவம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.
வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்ணீர் போட்டு கொதிக்க வைத்துவிட்டு மறுநாள் அந்தச் சாறு எடுத்து தலையைக் கழுவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.
வெந்தயம், குன்றிமணியை பொடி செய்து, அதனை தேங்காய் எண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தினமும் அதனை காலையில் தலையில் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.
சிலருக்கு சிறு வயதிலேயே இளநரை தோன்றும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் நெல்லிக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே போதும் இளநரை மாயமாகிவிடும்.
சிலருக்கு முழுவதும் நரையாகிவிடும். இவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், தாமரைப் பூ கஷாயம் வைத்து தொடர்ந்து காலை, மாலை என குடித்து வரவேண்டும். முளைக்கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நரை படிப்படியாகக் குறையும்.
சரி, முடி உதிர்வதைப் பார்த்தோம், நரை போக்க வழி பார்த்தோம். முடி வளர வழி இருக்கிறதா? ஆம் அதுவும் இருக்கிறது நம் இயற்கை மருத்துவத்தில்.
கறிவேப்பிலையை நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி வளரும்.
இல்லையென்றால், காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தாலும் முடி வளரும்.
இவையனைத்திற்கும் மேலாக, சுத்தமாக முடி இல்லாமல் வழுக்கையாக இருப்பவர்களுக்கு ஒரு குறிப்பு.
கீழாநெல்லி வேரை எடுத்து சுத்தம் செய்து அதனைத் துண்டுகளாக்கி தேங்காய் எண்ணெயில் போட்டுக் காய்ச்சி அதனைத் தொடர்ந்து தலையில் தடவி வந்தால் வழுக்கை மறையும்.
தேங்க்ஸ், koodal
அய்யா வைகுண்டர் வகுத்த 32 அறங்கள்..
1.வழிபோக்கர்களுக்கு சத்திரங்கள் கட்டி வைப்பது.
2.கல்வி கற்கும் ஏழை பிள்ளைகளுக்கு உணவு வசதி அளிப்பது.
3.அறுவகை சமயத்தார்க்கும் உணவு கொடுப்பது.
4.பசுவுக்கு புல்லும்,வைக்கோலும் கொடுப்பது.
5.சிறைச்சாலையில் துன்புறுவோர்க்கு அன்னமிடுதல்.
6.வீடு தேடிவரும் ஏழைகளுக்கு பிச்சை இடுதல்.
7.திண்பண்டம் நல்கல்.
8.அறநெறி மேற்கொண்டு வாழும் துறவிகளுக்கு பசியமர்த்துவது.
9.அனாதை குழந்தைகளை எடுத்து வளர்ப்பது.
10.அனாதைப் பிணங்களை எடுத்து அடக்கம் பண்ணுவது.
11.தாய்மை பேறுபெற்ற பெண்களுக்கு உதவி செய்வது.
12.வாசனைப் பொருட்களை கொடுப்பது.
13.நோயாளிகளுக்கு மருந்துகள் கொடுத்து உதவுவது.
14.துணிவெளுக்கும் தொழிலாளர்களுக்கு உதவி செய்வது.
15.நாவிதர்களுக்கு உதவி செய்வது.
16.ஏழை பெண்களுக்கு பொன் தானம் செய்வது.
17.ஏழைகளின் கண் நோய்க்கு மருந்து கொடுத்து உதவுவது.
18.தலைக்கு எண்ணெய் கொடுப்பது.
19.திருமணம் ஆகாத ஏழைகளுக்கு திருமணம் செய்து வைப்பது.
20.பிறர் துன்பம் தீர்ப்பது.
21.தண்ணீர் பந்தல் வைத்து உதவுவது.
22.மடம் கட்டி சமய அறிவை வளர்ப்பது.
23.சாலைகள் அமைத்து கொடுப்பது.
24.சோலைகளை உண்டாக்கி வைப்பது.
25.பசுமாடுகள் உடம்பைத் தேய்த்துக்கொள்ள தூண்களை நிறுவுவது.
26.மிருகங்களுக்கு உணவளிப்பது.
27.சுமைதாங்கி நிறுவுதல்.
28.விலைகொடுத்து உயிரை காப்பாற்றுதல்.
29.கன்னிகாதானம் செய்து கொடுத்தல்.
30.குழந்தைகளுக்கு பால் வழங்குதல்.
31.பார்வையற்றோருக்கு வழிதுணை புரிதல்.
32.வஸ்த்திர தானம் செய்தல்.
இவைகளே அய்யாவைகுண்டர் வகுத்த 32 அறங்கள் ஆகும்.இவற்றை நம் அன்றாட வாழ்வில் கடைபிடித்து மகிழ்வோம்.
அய்யா உண்டு!
அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவதால்...
1. காலையில் எழுந்ததும் பல் துலக்கும் முன்பே 4 x 160ml டம்ளர் தண்ணீர் அருந்துங்கள்.
2. பல் துலக்கி வாய் அலம்பிய பின் 45 நிமிடங்களுக்கு உணவோ, நீராகாரம் எதுவாயினும் உட்கொள்ளக் கூடாது.
3. 45 நிமிடங்களுக்குப் பின் வழமையான உங்கள் உணவை உட்கொள்ளலாம்.
4. காலை உணவின் பின் 15 நிமிடங்களுக்கும், மதிய மற்றும் இரவு உணவின் போது 2 மணி நேரங்களுக்கும் எதுவும் உட்கொள்ள வேண்டாம்.
5. முதியோர், நோயாளிகள் மற்றும் 4 டம்ளர் நீரை எடுத்த எடுப்பிலேயே அருந்த முடியாதவர்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நீர் உட்கொண்டு நாளடைவில் 4 டம்ளர் அளவு நீர் அருந்த பழகலாம்.
மேற்குறிப்பிட்ட முறையை பின்பற்றும் நோயாளிகள் தமது நோய் நீங்கி சுகமடையலாம். மற்றவர்கள் ஆரோக்கியமான வாழ்கையை சந்தோஷிக்கலாம். எந்த நோய்க்கு எத்தனை நாட்கள் இந்த முறையை பின்பற்ற வேண்டும் என்ற விபரங்கள் பின்வருமாறு:
உயர் இரத்த அழுத்தம் - 30 நாட்கள்.
வாய்வுக் கோளாறுகள் - 10 நாட்கள்.
சர்க்கரை வியாதி - 30 நாட்கள்.
புற்றுநோய் - 180 நாட்கள்.
காசநோய் - 90 நாட்கள்.
சிந்தனை துளிகள்.
மற்றவர்கள் துன்பத்தை அறிந்து கொள்.உன் துன்பம் அர்த்தமற்றதாகி விடும்.
பெருந்தலைவர் காமராஜர் - 1
சொத்து சுகம் நாடார்
சொந்தந்தனை நாடார்
பொன்னென்றும் நாடார்
பொருள் நாடார்
தான்பிறந்த அன்னையையும் நாடார்
ஆசைதனை நாடார்
நாடொன்றே நாடித் – தன்
நலமொன்றும் நாடாத
நாடாரை நாடென்றார்
-பெருந்தலைவர் காமராஜர் பற்றி கவியரசர் கண்ணதாசன் எழுதிய வரிகள் இவை. இந்த வரிகளுக்கு ஒரு விளக்கவுரை எழுதியதுபோல, விகடன் இந்த வாரம் பெருந்தலைவர் பற்றிய 25 குறிப்புகளைத் தந்துள்ளது. அந்தக் கட்டுரை…
இனம் காட்டும் நிறம். குணம் சொல்லும் உடை. தைரியம் அறிவிக்கும் உடல். வணங்கத் தோன்றும் முகம்… என நாலும் இணைந்த நல்லவர் காமராஜர்! 25 துளிகளுக்குள் அடக்கிவிட முடியாத மகா சமுத்திரமாக வாழ்ந்த கர்மவீரர்!
காமாட்சி என்பது பெற்றோர் வைத்த பெயர். ராஜா என்றே உறவினர்கள் அழைத்தார்கள். காமாட்சியும் ராஜாவும் காலப் போக்கில் இணைந்து காமராஜ் ஆனது. டெல்லிக்காரர்களுக்கு ‘காலா காந்தி’, பெரியாருக்கு ‘பச்சைத் தமிழர்’, காங்கிரஸ்காரர்களுக்கு ‘பெரியவர்’. இன்று வரை பெருந்தலைவர் என்றால் அவரே!
‘இதெல்லாம் என்ன பேச்சுன்னேன்’, ‘அப்படி ஏன் சொல்றேன்னேன்’, ‘ரொம்ப தப்புன்னேன்’, ‘அப்பிடித்தானேங்கிறேன்’, ‘அப்ப பாப்போம்’, ‘ஆகட்டும் பார்க்கலாம்’ போன்றவை அவர் அடிக்கடி பயன்படுத்தும் வாசகங்கள்!
நிறையப் பேரிடம் வரிசையாக ஆலோசனை கேட்கும் பிரதமர் நேரு, கடைசியில் காமராஜர் சொன்னதை அறிவித்து முடிப்பார். உயிரோ டு இருப்பவர்களுக்கு சிலை வைக்கக் கூடாது என்ற கொள்கை கொண்ட நேரு, அதை மீறித் திறந்த சிலை இவருடையதுதான்!
அரசியலில் அவருக்கு குரு தீரர் சத்திய மூர்த்தி. ஆனால், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக காமராஜ் இருக்க… செயலாளராகச் செயல்பட சத்தியமூர்த்தி மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டார்!
தன்னைப் பாராட்டி யாராவது அதிகம் பேசினால், ‘கொஞ்சம் நிறுத்துன்னேன்’ என்று சட்டையைப் பிடித்து இழுப்பார். அடுத்த கட்சியை மோசமாகப் பேசினால், ‘அதுக்கா இந்தக் கூட்டம்னேன்’ என்றும் தடுப்பார்!
மாதம் 30 நாளும் கத்திரிக்காய் சாம்பார் வைத்தாலும் மனம் கோணாமல் சாப்பிடுவார். என்றைக்காவது ஒரு முட்டை வைத்துச் சாப்பிட்டால் அது அவரைப் பொறுத்தவரை மாயா பஜார் விருந்து!
சினிமா அவருக்குப் பிடிக்காது. ‘ஒளவையார்’ விரும்பிப் பார்த்திருக்கிறார். ‘ராஜபார்ட் ரங்கதுரை’ படத்தைப் போட்டுக் காண்பித்திருக்கிறார்கள். அவர் கடைசியாகப் பார்த்த படம் ‘சினிமா பைத்தியம்’!
சுற்றுப் பயணத்தின்போது தொண்டர்கள் அன்பளிப்பு கொடுத்தால், ‘கஷ்டப்படுற தியாகிக்குக் கொடுங்க’ என்று வாங்க மறுப்பார்!
மகன் முதலமைச்சரானதும் அம்மா சிவகாமிக்கு அவருடன் தங்க ஆசை. ‘நீ இங்க வந்துட்டாஉன்னைப் பார்க்கச் சொந்தக்காரங்க வருவாங்க. அவங்களோட கெட்ட பேரும் சேர்ந்து வந்துடும். அதுனால விருது நகர்லயே இரு’ என்று சொல்லிவிட்டார். அந்த வீட்டையாவது பெரிதாக்கி கட்டித் தரக் கேட்டபோதும் மறுத்துவிட்டார்!
பந்தாக்களை வெறுத்தவர். முதல் தடவை சைரன் ஒலியுடன் அவருக்கான பாதுகாப்பு கார் புறப்பட்டபோது தடுத்தார். ‘நான் உயிரோடுதான இருக்கேன். அதுக்குள்ள ஏன் சங்கு ஊதுறீங்க?’ என்று கமென்ட் அடித்தார்!
இரண்டு முறை பிரதமர் ஆக வாய்ப்பு வந்தபோதும் அதை நிராகரித்து லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரை பிரதமர் ஆக்கினார். ‘கிங் மேக்கர்’ என்ற பட்டத்தை மட்டும் தக்க வைத்துக்கொண்டார்!
பத்திரிகையாளர்களுக்கு அவரது அறிவுரை… ‘ஒண்ணு, நீங்க பத்திரிகைக்காரனா இருங்க. அல்லது அரசியல்வாதியாவோ பிசினஸ்மேனாவோ இருங்க. மூணாகவும் இருக்க முயற்சி பண்ணாதீங்க!’
மூத்தவர்கள் அரசாங்கப் பதவிகளில் இருந்து விலகி, கட்சிப் பணியாற்ற வேண்டும் என்ற ‘கே.பிளான்’ போட்டுக் கொடுத்த இவரே முதல் ஆளாகப் பதவி விலகினார். ‘எனக்கு எந்தப் பற்றும் இல்லைன்னு காட்டினாதான் மத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ண முடியும்’ என்றார்!
ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் பேசுவார். பத்திரிகையாளர் சாவி ஒருமுறை சந்திக்கச் சென்றபோது ஜான் கன்டர் எழுதிய இன்சைட் ஆப்பிரிக்கா என்ற ஆங்கிலப் புத்தகத்தைப் படித்துக்கொண்டு இருந்தாராம்!
அவரளவுக்குச் சுருக்கமாக யாராலும் பேச முடியாது. உ.பி-யில் ஒரு பிரஸ்மீட். 50 கேள்விகளுக்கு ஏழு நிமிடத்தில் பதில் சொன்னாராம். இரண்டரை மணி நேரத்தில் எட்டு ஊர்களில் கூட்டம் பேசியிருக்கிறார். இசை விழாவைத் தொடக்கிவைக்க அழைத்தார்கள். ‘இசை விழாவைத் தொடக்கிவைப்பதில் பெருமைப்படுகிறேன்’ என்று மட்டுமேசொல்லி விட்டு இறங்கினார்!
நாற்காலியில் உட்காருவது அவருக்குப் பிடிக்காது. சோபாவில் இரண்டு பக்கமும் தனது நீளமான கைகளை விரித்தபடி உட்காரவே விரும்புவார். முதல்வராக இருந்தபோதும் தலைமைச் செயலகத்தில் பிரத்யேகமாக சோபா வைத்திருந்தார்!
கடிகாரம் கட்ட மாட்டார். சின்ன டைம்பீஸைத் தனது பையில் வைத்திருப்பார். தேவைப்படும்போது எடுத்துப் பார்த்துக்கொள்வார்!
‘ஆறாவது வரை படித்தவர்தானே! என்ற அலட்சியத்துடன் முதல்வர் காமராஜரின் அறைக்குள் அலட்சியமாக நுழைவார்கள் அதிகாரிகள். வெளியே வரும்போது அவர்களின் வால், கால்சட்டைக்குள் மடக்கிச் சொருகப்பட்டு இருந்தது!’ என்று அவரது அறிவாற்றலை மெச்சினார் ஆர்.வெங்கட்ராமன்!
தான் முதலமைச்சரானபோது தன்னை எதிர்த்து முதல்வர் வேட்பாளராக நின்ற சி.சுப்பிரமணியத்தையும் அவரது பெயரை முன் மொழிந்த பக்தவத்சலத்தையும் அமைச்சரவையில் இணைத்துக்கொண்டார்!
தனது வலதுகரமாக இருந்த ஜி.ராஜகோபாலன் இறந்தபோது மட்டும்தான் காமராஜரின் கண்கள் லேசாகக் கலங்கினவாம். தாய் சிவகாமி இறந்தபோதுகூட அழவில்லை அவர்!
‘தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளோடுஒட்டோ, உறவோ இல்லை. இந்தக் கட்சிகளோடு உறவு வைத் துள்ள கட்சிகளோடும் உறவு இல்லை’ – காமராஜர் கூட்டிய கடைசி நிர்வாகக் கமிட்டியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இது. இதை அவரது மரண சாசனம் என்பார்கள்!
விருதுநகர் தொகுதியில் அவர் தோற்றபோது கட்சிக்காரர்கள் அழுதார்கள். ‘இதுதான்யா ஜனநாயகம். ஜெயிச்சவனைக் குறை சொல்லாமல் தோத்துப் போனதைப் புரிஞ்சுக்கிட்டாதான் அடுத்த முறை ஜெயிக்க முடியும்!’ என்று அலட்டிக்கொள்ளாமல் சொன்னவர்.
கோடை காலத்தில் இரண்டே இரண்டு நாட்கள் குற்றாலத்தில் போய் தங்கிவிட்டு வருவார். அவரது அதிகபட்ச சந்தோஷமாக அதுதான் இருந்திருக்கிறது!
ஒன்பது ஆண்டுகள் முதல் அமைச்சர், பல ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த அவர், இறக்கும்போது மிச்சம் இருந்தது பத்து கதர் வேஷ்டிகள், சட்டைகள் மற்றும் நூறு ரூபாய்க்கும் குறைவான பணம்!
இன்ஃப்ளூயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்த காமராஜருக்கு 1975 அக்டோபர் 2-ம் தேதி அதிகமாக வியர்த்தது. டாக்டர் அண்ணாமலைக்கு அவரே போன் செய்துவிட்டு, ‘டாக்டர் வந்தா எழுப்பு… விளக்கை அணைச்சிட்டுப் போ’ என்றார். அதுவே அவர் கடைசியாகச் சொன்ன வார்த்தை. டாக்டர் வரும்போது காமராஜர் அணைந்துவிட்டார்!
-ஆனந்த விகடன்



