வள்ளலார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வள்ளலார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வள்ளலார் புரிந்த அற்புதங்கள்!


கனவில் சென்று கட்டளையிட்ட பெருமான்!

ஒரு சமயம் தருமச்சாலையில், மறுநாள் அன்னதானத் துக்குத் தேவையான அரிசி இல்லை என்ற நிலை.



செய்தியைப் பணியாளர்கள், வள்ளலாரிடம் தயக்கத்துடன் கூறினர்.

வள்ளலார் தனியாக ஓரிடத்தில் அமர்ந்து சற்று நேரம் தியானம் செய்தார்.

தியானம் முடிந்தபின், ரிசி யும் மற்றவையும் நாளைக்கு வரும் என்று கூறினார்.


. மறுநாள் பொழுது புலர்ந்து கொண்டிருக்கும்போதே திருத்துறையூரில் இருந்து மூன்று வண்டிகளில்

அரிசியும் பிற உணவுப் பொருட்களும் தருமச்சாலைக்கு வந்து சேர்ந்தன.

அவற்றைக் கொண்டு வந்தவர் வள்ளலாரிடம் அன்பு பூண்ட அன்பர் ஒருவர்.

முதல் நாளிரவு கனவில், வள்ளலார் வந்து அரிசியையும் மற்றவற்றையும் கொண்டு வந்து தருமாறு கூறியதாகவும்,

அதை உத்தரவாக எண்ணி உடனே வண்டி கட்டிக்கொண்டு கிளம்பி வந்ததாகவும் அந்த அன்பர் தெரிவித்தார்.


ஆதலால் பசி பிணி நீக்க அனைவரும் முயற்சி செய்யுங்கள்..


வள்ளலாருடன் 60 வினாடி பேட்டி

- சந்தானம் சுவாமிநாதன்



(கேள்விகள் கற்பனை, பதில்கள் திருவருட்பா நூலிலிருந்த)
நீங்கள் இறைவனிடம் வேண்டுவது என்ன?

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்


வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று நீங்கள் கூறிய
மனிதாபிமான வாசகத்தை இன்று உலகமே பாராட்டுகிறதே!

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்
வாடினேன், பசியினால் இளைத்தே
வீடுதோறும் இரந்தும் பசி அறாது அயர்ந்த
வெற்றரைக் கண்டு உளம் பதைத்தேன்
நீடிய பிணியால் வருந்துகின்றோர் என்
நேர் உறக் கண்டு உளம் துடித்தேன்
ஈடு இன் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சு
இளைத்தவர் தமைக் கண்டே இளைத்தேன்

நீங்கள் கூறிய எல்லாவற்றையும் மக்கள் ஏற்றார்களா?

"கடை விரித்தோம் கொள்வார் இல்லை, கட்டிவிட்டோம்"

நீங்கள் ஏதோ ஒரு புது 'ஸ்வீட்' வைத்திருக்கிறீர்களாமே?

தனித் தனி முக்கனி பிழிந்து வடித்து ஒன்றாகக் கூட்டிச்
சர்க்கரையும் கற்கண்டின் பொடியும் மிகக் கலந்தே
தனித்த நறுந்தேன் பெய்து பசும் பாலும் தெங்கின்
தனிப் பாலும் சேர்த்து ஒரு தீம் பருப்பிடியும் விரவி
இனித்த நறு நெய் அளைந்தே இளம் சூட்டில் இறக்கி
எடுத்த சுவைக் கட்டியினும் இனித்திடும் தெள்ளமுதே
அனித்த மறத் திருப் பொதுவில் விளங்கு நடத்தரசே
அடிமலர்க்கென் சொல்லணியாம் அலங்கல் அணிந்தருளே

நீவீர் யாரை மறக்க மாட்டீர்?

பெற்ற தாய் தனை மகன் மறந்தாலும்
பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
கண்கள் இமைப்பது மறந்தாலும்
நற்றவத் தவர் உள்ளிருந்து ஓங்கும்
நமசிவாயத்தை நான் மறவேனே

(அடடா, என்ன அற்புதமான வரிகள்!!)
 
சென்னையைச் சுற்றி ஏராளமான பாடல் பெற்ற தலங்களும் ஐம்பதுக்கும் மேலான சித்தர்களின் ஜீவ சமாதிகளும் இருப்பதாகப் படித்தேன். அது உண்மைதானா?

தருமமிகு சென்னையில் கந்தகோட்டதுள் வளர் தலமோங்கு கந்தவேளே
தண்முகத் துய்ய மணி உன்முகச் சைவ மணி சண்முகத் தெய்வ மணியே!


கருணை உள்ளம் படைத்த வள்ளலே? யார் எதைக் கேட்டாலும் உம்மால் கொடுக்க முடியுமா?

ஈயென்று நான் ஒருவரிடம் நின்று கேளாத
இயல்பும் என்னிடம் ஒருவர் ஈது
இடு என்ற போதவர்க்கு இலை என்று சொல்லாமல்
இடுகின்ற திறமும் இறையாம்
நீ என்றும் எனை விடா நெறியும்...........

புரிகிறது, புரிகிறது உங்கள் கொள்கை. ஆமாம் தந்தை தாயிடம் அடி வாங்கி இருக்கிறீர்களா?

தடித்த ஓர் மகனைத் தந்தை ஈண்டடித்தால் தாயுடன் அணைப்பள் தாய்
அடித்தால் பிடித்தொரு தந்தை அணைப்பன் இங்கு எனக்குப் பேசிய தந்தையும் தாயும் பொடித் திருமேனி அம்பலத்தாடும் புனித நீ ஆதலால் என்னை
அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும் அம்மை அப்பா இனி ஆற்றேன்.


இறைவனிடம் நாங்கள் என்ன கேட்க வேண்டும்?

அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும்
ஆருயிர்களுக்கு எலாம் நான் அன்பு செயல் வேண்டும்
எப்பாரும் எப்பதமும் எங்கனும் நான் சென்றே
எந்தை நினது அருள் புகழை இயம்பியிடல் வேண்டும்
செப்பாத மேனிலை மேல் சுத்த சிவ மார்கம்
திகழ்ந்து ஓங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும்
தப்பேது நான் செயினும் நீ பொறுத்தல் வேண்டும்
தலைவ, நினை பிரியாத நிலைமையும் வேண்டுவனே

அஹம் பிரம்மாஸ்மி என்ற அத்வைத தத்துவத்தை அறிவீரோ?

நாம் பிரமம் நமையன்றி ஆம்பிரமம் வேறில்லை
நன்மை தீமைகளும் இல்லை.






வடலூரில் தைப்பூச சோதி கண்டேன் என்ற பாடல் கேட்கிறதே. சோதி வழிபாட்டில் உங்களுக்கு ஈடுபாடு அதிகமோ?

அருட் சோதி தெய்வம் எனை ஆண்டுகொண்ட தெய்வம்
அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்த தெய்வம்
பொருட் சாரும் மறைகள் எலாம் போற்றுகின்ற தெய்வம்
போதாந்த தெய்வம் உயர் நாதாந்த தெய்வம்
இருட் பாடு நீக்கி ஒளி ஈந்தருளும் தெய்வம்
எண்ணிய நான் எண்ணியவாறு எனக்கருளும் தெய்வம்
தெருட் பாடல் உவந்து எனையும் சிவம் ஆக்கும் தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்

அற்புதமான தெய்வீக பாடல்களை ஈந்த வள்ளலே, நன்றி!

தோபா சுவாமிகள் சரிதம்



திருச்சிராப்பள்ளியில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் சிவகுரு நாதப்பிள்ளை சிவகாமி அம்மையாரும் கருத்தொருமித்த தம்பதிகளாக வாழ்ந்து வந்தனர், சிவகுருநாதப் பிள்ளை இல்லறத்தை நல்லறமாகச் செய்தார். இவ்வாறு வாழ்ந்து வரும் நாளில் இரண்டு ஆண் மக்களையும், பெண் மகவு ஒன்றையும் பெற்றனர்.

தோபாசுவாமிகளின் தோற்றம்:


அதன் பின்னர் சில நாட்களுக்குப் பிறகு இவர் தன் மனைவியாருடன் மூர்த்தி தல தீர்த்தங்களை முறையாகச் செய்து கொண்டு முடிவில் இராமேஸ்வரம் சென்று அங்கு இராமபிரான் பூசித்த இராமலிங்கப் பெருமானை வணங்கிப் போற்றி தம்மிடஞ் சேர்ந்து இருந்தனர்.
இவர்கள் இராமேஸ்வம் சென்று வந்த பிறகு முற்பிறவி தவப்பயனாலும் இராமலிங்கப் பெருமானின் திருவருளாலும் சிவகாமி அம்மையார் கர்ப்பம் தரித்து உரிய காலத்தில் ஒர் ஆண் மகனை பெற்றார். இராம நாத சுவாமியின் திருவருளால் பிறந்த நம் சுவாமிகளுக்கு இராமலிங்கம் எனத் திருநாமமிட்டனர்.

தோபா சுவாமிகளின் இளமைப் பருவம்:

பாலப் பருவம் நீங்கி குமாரப் பருவம் எய்திய இராமலிங்கத்தை முறைப்படி கல்வி கற்க பள்ளியில் சேர்த்தனர். முற்பிறப்புக்களிலேயே அனைத்துங் கற்ற இவர் வருத்தமின்றி பழைய பாடங்களைத் திருப்புவதைப் போல ஆசிரியர்களும், மாணாக்கர்களும் வியக்கும் வண்ணம் கற்றுத் தேர்ந்தார்.\
இந்த இராமலிங்கச் சிறுவரின் நிலையைக்கண்ட ஆங்கில அரசு தம் காலாட் படையில் சேர்த்து கொண்டது. இவர் பணியாற்றிய படைப்பிரிவு சென்னையை அடுத்துள்ள ஆவடியில் இருந்தது. ஆங்கிலேயர் படைப்பயிற்சியில் தினமும் காலை 6.00 மணி முதல் ஒரு மணிநேரம் வரை படைப்பயிற்சி நடைபெறும். அதன் பிறகு தேனீர், வகுப்புகள், சிற்றுண்டி என்று பல பிரிவுகள் முறைப்படி தொடர்ந்து நடைபெறும். எல்லாப் பணிகளையும் இவர் திருப்திகரமாகவே செய்து வந்தார்.
பணி நேரம் தவிர மற்ற நேரங்களில் படைவீர்ர்கள் வெளியில் சென்று வருவார்கள் ஆனால் தோபா சாமியோ சுறுசுறுப்பான இளைஞனாக இருந்தபோதும் அவர் வெளியில் செல்வதே இல்லை பணிமுடிந்தவுடன் படைவீரர்கள் தங்கும் இடத்திலேயே இறை சிந்தையோடு நிஷ்டையில் ஆழ்ந்து விடுவார். காலம் செல்லச் செல்ல அவருடைய தவக்காலமும் அதிகரித்தது.
படைவீர்ர்கள் தங்கும் இடத்தை மேற்பார்வையிட தினமும் இரவு வேளைகளில் கண்காணிப்புக் காவலர்கள் சோதனைக்கு வந்து செல்வார்கள் சிறிது நாட்களுக்கு பிறகு சாமி இரவு வேளைகளில் தியானம் செய்தபடி இருப்பதையும் காலை 6.00 மணிக்கெல்லாம் படைப்பயிற்சித் திடலுக்கு முறைப்படி வந்து விடுவதால் அவர் இரவு தியானம் செய்வதை ஒரு குறையாகவே எடுத்துகொள்ளவில்லை. அதுபற்றி காவலர்கள் தன்னுடைய உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கவும் இல்லை.
இப்படியிருக்கும் பொழுது ஒரு நாள் படைப்பிரிவின் மேலதிகாரி படைவீரர்கள் தங்கியிருந்த கூடாரத்தினுள் நுழைந்தார், எல்லோரும் பயிற்சித் திடலுக்கு சென்றிருந்த போது சாமி மட்டும் அவர் தம் இருப்பிடத்திலே அமர்ந்து ஆழ்ந்த தியானத்தில் இருந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார் இருப்பினும் அவர் சுவாமியின் தவத்தைக் கலைக்காமல் படைப்பயிற்சித் திடலுக்கு வந்தார் அங்கு வந்த மேலதிகாரி அதிசயத்தக்க வகையில் சாமி அவர்கள் முறையான சீருடையுடன் படைப்பயிற்சி பெறத் தயராக அவருக்கு உரிய வரிசையில் நின்று கொண்டிருந்ததையும் கண்டார்.
உடனே மேலதிகாரி இந்தப் படைவீரர் ஒரு மகா சித்தர் என்று தன் மனதுக்குள் சொல்லிக்கொண்டு சென்று விட்டார். இதன் பின்னர் சுவாமி அவர்கள் தன் படைவீரர் பணியை விட்டு விலகி சுதந்திர துறவியாக (ஆடை இல்லாமல்) வெளியில் வந்து, சென்னையிலும், சென்னையச் சுற்றியிள்ள பகுதிகளிலும் தம் சித்தாடல்களைச் செய்துகொண்டிருந்தார்.

தோபா சித்தர் பெயர்காரணம்:

நம்முடை தோபாசித்தர் அவர்கள் திருஞானசம்பந்தப் பெருமானை மானசீக குருவாக கொண்டவர். அவர்தம் முதல் பதிகமான தோடுடைய செவியன் பதிகம் மீது மிகவும் காதல் கொண்டவர் இந்த பாடலை அவர் கேட்டவுடன் தன் நிலை மறந்து வீற்றிருப்பார்.
சென்னையில் அவர் தங்கியிருந்த பகுதியில் வாழும் சிறுவர்கள், சுவாமி அவர்களை சுற்றி சுற்றி வருவார்கள். அச் சிறுவர்களை சுவாமி அவர்கள் தோடுடைய செவியன் என்ற பாடலை பாடுங்கள் என்று கேட்பார் உடணே பாடுவார்கள்.
இவ்வாறு பல நாள் தொடர்ந்து நடந்தது கொஞ்ச நாட்களுக்கு பிறகு அச் சிறுவர்களை பார்த்து தோ பா என்றார் ‘தோ’ என்பது தோடுடைய செவியன் என்ற பாடலையும் ‘பா’ என்ற எழுத்து பாடுங்கள் என்பதையும் குறிக்கும். தோ பா என்ற உடனேயே சிறுவர்கள் பாடத் தொடங்கி விடுவார்கள், இதனால் சிறுவர்கள் இவரை அன்புடன் ‘தோபாசாமி’ என்று அழைத்தனர்.

 

தோடு உடைய செவியன், விடை ஏறி, ஓர் தூ வெண்மதி சூடி,
காடு உடைய சுடலைப் பொடி பூசி, என் உள்ளம் கவர் கள்வன் 
ஏடு உடைய மலரான் முனைநாள் பணிந்து ஏத்த, அருள்செய்த,
பீடு உடைய பிரமாபுரம் மேவிய, பெம்மான் இவன் அன்றே!

 

தோபாசுவாமிகளும் வடலூர் வள்ளல் பெருமானும்:

சென்னையில் பல சித்துகள் புரிந்த சுவாமி அவர்கள் சென்னையில் உள்ள திருவொற்றியூரில், நம் தோபா சுவாமிகள் ஒரு நாள் தெருவோரம் அமர்ந்து இருந்தார். அந்த தெருவில் போவோர் வருவோரைப்பார்த்து அவரவர் குணங்களுக்கேற்ப நாய் போகிறது, நரி போகிறது, கழுதை போகிறது, பேய் திரிகிறது எனப் பகர்ந்தவண்னமிருந்தார்.
அந்நேரத்தில் வடலூர் வள்ளல் அவர்கள் அத்தெருவழியாக வரவே; மனிதர் வருகிறார் என்றார். இதனைக் கேட்டு அருகில் நின்றுகொண்டிருந்த சிலர் இவர் ஒரு பைத்தியம் எனக் கூறினார். ஆனால் வள்ளல் பெருமான் இவரின் நிலை உணர்ந்தார் இவரும் யாமும் ஒத்த நிலையுடையோம் இவர் திக்கு ஆடையினார்; யாம் வெண்ணிற ஆடையினோம், இதுவே வேறுபாடு எனக்கூறி நமது தோபா சாமிகளிடம் சிறிது நேரம் பேசிவிட்டு பிரிவாற்றாது நீங்கிப் போனார்.

தோபாசுவாமிகள் வேலூர் வருகை:

சென்னையில் இருந்த சுவாமி அவர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சென்னையை விட்டு வெளியேற முற்பட்டார் அப்போது அவருடைய முக்கிய சீடர்கள் சிலர் அவரை ஒரு குதிரை வண்டியில் ஏற்றி அழைத்துச் சென்றனர், குதிரைவண்டி வேலூர் சென்றதும் அங்கே சாமி இறங்கிவிட்டார் அதன் பிறகு சாமி வேறு எங்கும் செல்லவில்லை வேலூரிலேயே சுமார் 12 ஆண்டுகள் சித்தாடல்கள் பல புரிந்துகொண்டு வந்தார்.

சுவாமிகளின் ஒடுக்க நிலை:

இவ்வாறாக நமது தோபா சுவாமிகள் தன்னுடைய குருநாதரான திருஞானசம்பந்த பெருமான் அருளால் அநேக திருவிளையாடல்களைப் புரிந்தும். தம்மைச் சரணடைந்த சீடர்களுக்கு ஞானம் வழங்கும் ஒர் அற்புத துறவுச் சக்கரவர்த்தியாய் விளங்கினார்.
அருட்தந்தையாக வாழ்ந்த நமது தோபா சுவாமி அவர்கள் கி.பி.1850 ஆம் ஆண்டு சாதாரண வருடம் பங்குனி திங்கள் இருபத்தி ஏழாம் நாள் புதன்கிழமை பூர்பவட்சம் பிரதமை திதி இரேவதி நட்சத்திரம் கூடிய நன்னாளில் ஒடுக்க நிலை நின்றார்.
வேலூர் மக்கள் இன்றும் அவரைத் தெய்வமாகக் கருதி அவர் சமாதியில் வழிபாடு செய்து வருகின்றனர். ஆண்டுதோறும் அவர் சமாதி அடைந்த நாளில் குரு பூஜை வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது சமீபத்தில் இந்த மடாலயத்தில் கும்பாபிஷேகம் இனிதே நடந்தேறியது.


தோபாசாமி மடலாயம் இருக்கும் இடம் வேலூர் சைதாப்பேட்டை

கருத்துரை

இராமலிங்க அடிகளார் - வள்ளலார்


இராமலிங்க அடிகள் துறவியைப் போல வாழ்ந்தாலும், தன் மீது அன்பு கொண்ட அன்பர்களுக்காகவும், அடியார்களுக்காகவும் மிகவும் மனம் இரங்குவார். அவர்களுக்கு ஏற்படும் துன்பங்கள் கண்டு மனம் வருந்துவார்.


ஒரு முறை பெரும் பணக்காரரான அன்பர் ஒருவர் தனது இல்லத் திருமணத்திற்கு அடிகளாரை அழைத்திருந்தார். அன்பரின் மனம் கோணக் கூடாது என்பதற்காக வள்ளலாரும் திருமணத்திற்கு வர இசைந்தார்.

குறிப்பிட்ட நாளில் அந்த அன்பரின் இல்லம் நோக்கிச் சென்றார். ஆனால் அங்கு அவர் கண்ட காட்சி அவரது உள்ளத்தை தைத்தது. இல்ல வாயிலில் நின்று கொண்டிருந்த உறவினர்களில் சிலர், செல்வந்தர்களையும், ஆடம்பர உடையணிந்தவர்களையும் மட்டுமே உள்ளே அனுப்பினர். மற்றவர்களை அனுமதிக்காமல் இருந்தனர். எனவே மிகவும் எளிமையான தம்மையும் உள்ளே அனுமதிக்கமாட்டார்கள் என நினைத்த வள்ளலார், எதிரே உள்ள வீட்டுத் திண்ணையில் போய் உட்கார்ந்து விட்டார். பின் கீழ்கண்டவாறு ஒரு குறிப்பையும் எழுதி, அதை அந்தச் செல்வந்தரிடம் சேர்ப்பிக்குமாறு ஒரு சிறுவனிடம் கூறி உள்ளே செல்லாமல் வெளியிலேயே இருந்து விட்டார்.

” சோடில்லை மேல் வெள்ளைச் சொக்காய் இல்லை

நல்ல சோமன் இல்லை

பாடில்லை; கையிற் பணமில்லை

தேகப் பருமன் இல்லை

வீடில்லை. யாதொரு வீறாப்பும் இல்லை.

விவாகமது நாடில்லை நீ

நெஞ்சமே! எந்த ஆற்றினில் நண்ணினையே!”

அடிகளாரின் இந்தப் பாடலைப் படித்தார் அந்தச் செல்வந்தர். உள்ளம் பதைத்தார். வெளியே ஓடோடிச் சென்று அடிகளாரின் கால்களில் வீழ்ந்தார். தம்மை மன்னிக்குமாறு வேண்டினார். அவரை உள்ளே அழைத்துச் சென்றதுடன், அன்று முதல் ஏழை, பணக்காரன் வேறுபாடின்றி அனைவருடனும் சமமாகப் பழகலானார்.

இவ்வாறு தனது நடத்தையின் மூலமும், சிறு பாடல்களின் மூலமும் எத்தனையோ அன்பர்களை நல்வழிப்படுத்தி இருக்கிறார் இராமலிங்க அடிகளார்.

எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்

தம்உயிர்போல் எண்ணி உள்ளே

ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்

யாவர்அவர் உளந்தான் சுத்த

சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்

இடம்எனநான் தெரிந்தேன் அந்த

வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்

சிந்தைமிக விழைந்தேன்

என்கிறார் ஞான சத்குரு வள்ளலார். எல்லாவுயிரையும் தம் உயிராய் எண்ணி வாழ்ந்த மகான் திருவடி போற்றுவோம்.


தே. பாலமுருகன்
காஞ்சிபுரம்

சுவர்க்கம் - நரகம்

சுவர்க்கம் - நரகம் என்பது எதோ மேல் உலகில் உள்ளது போல எல்லா மதங்களிலும் கூறப் பட்டுள்ளன.
ஆனால் இன்பம் மற்றும் துன்பம் அனைத்தையும் அனுபவிப்பது நமது உடலுடன் சேர்ந்த ஆன்மாவே. இந்த உடலை விட்ட பின்னர் இந்த ஆன்மா எந்த இன்பத்தையோ அல்லது எந்த துன்பத்தையோ எதன் மூலம் அனுபவிக்கும். இந்த தூல உடலுக்கு மட்டுமே வலியும், சந்தோஷமும். தூலம் விட்ட பின்னர் எவ்வளவு உணவு வைத்தாலும்எப்படி சாப்பிட முடியும். எத்தனை அழகான பெண் இருந்தாலும் எப்படி ரசிக்க முடியும். நெருப்பிலே போட்டு எரித்தாலும் எப்படி நமக்கு வலிக்கும்.நமக்கு தேகம் என்று ஒன்று இருந்தால் மட்டுமே அது வேகும்.ஆன்மா எப்படி வேகும். ஆக சுவர்க்கம் மற்றும் நரகம் என்பதுநம் உடலை விட்ட பிறகு ஏற்படுவதல்ல. இந்த உடல் இருக்கும் போதே அதை அடைவதுதான்.
முதலில் நரகம் என்றால் என்ன ?நர + அகம் = நரகம் நரர்களாகிய மனிதர்கள் வாழ்கின்ற இந்த இடம் தான் நரகம். அதாவது நாம் நரன் என்னும் மனித தரத்துடன் வாழ்வது நரகம்.
நரன் நிலையை விட்டு இறை நிலையை அடைவதுதான் சொர்க்கம். அதாவது கடவுள் நிலை அறிந்து அம்மயமாதலே சுவர்க்கம் எனப்படும்.


அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு

எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும் மெய் அளிக்க வேண்டும் என்றேன் விரைந்தளித்தான் எனக்கே

 வள்ளல்
பெருமானார்  இவ்வாறு பாடுகிறார்:

''காற்றாலே புவியாலே சுகனமத னாலே
கனலாலே புனலாலே கதிராதி யாலே
கூற்றாலே பிணியாலே கொலைக்கருவி யாலே
கோளாலே பிற இயற்றும் கொடுஞ் செயல்க னாலே
வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்
மெய் அளிக்க வேண்டும் என்றேன்
விரைந்தளித்தான் எனக்கே''- என்கிறார்


ஆடாதீர் சற்றும் அசையாதீர் வேறொன்றை
நாடாதீர் பொய்யுலகை நம்பாதீர்-வாடாதீர்
சன்மார்க்க சங்கத்தைச் சார்வீர் விரைந்தினி இங்கு
என் மார்க்கமும் ஒன்றாமே.                -திருவருட்பா

 புனித தீர்த்தத்தில் நீராடினாலும் துன்பங்கள் தீராது என்பதை
வலியுறுத்தவே வள்ளுவர் “ புறந்தூய்மை நீரால் அமையும், அகந்தூய்மை
வாய்மையால் காணப்படும்” என்கிறார். எனவே மனிதன் தன்னுடைய எண்ணத்தை
மாசுபடாமல் பாதுகாக்க வேண்டும். எண்ணம் தூய்மை அடைந்து பிற உயிர்களில்
மேல் அன்பு-கருணை- தயவு  ஏற்பட்டால் மனிதனிடம் உள்ள அனைத்து சக்கரங்களும்
தானே இயங்கும். ஸ்தூல தேகம் சுத்த தேகமாக மாறும்.

'சாதிமத வேறுபாடுகளைக் கண்டித்த மாபெரும் மனிதாபிமானி வள்ளலார்.

ருட்பெருஞ் ஜோதி தனிப்பெரும் கருணை...' என்று கருணைக் கடலாக அறியப்பட்டவர் வடலூர் ராமலிங்க வள்ளலார். 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்று சொன்ன வள்ளலாரை எதிர்த்து, கிட்டத்தட்ட 150 ஆண்டுகள் கழித்து, சென்னை நீதிமன்றத்தில் ஒரு வழக்கு!
150 ஆண்டுகளுக்கு முன்பும் வள்ளலாருக்கு எதிராக பிரிட்டிஷ் காலத்திலேயே பிரபலமான ஒரு வழக்கு வாதாடப்பட்டது. அந்த ஃபிளாஷ்பேக் முதலில்...
ஜீவகாருண்யம், பசியாற்றுவித்தல், சாதிமத வேறு பாடின்மை, ஆன்மநேய ஒருமைப்பாடு ஆகிய நான்கையும் வலியுறுத்திய வள்ள லார், சன்மார்க்க சங்கத்தை உருவாக்கி சத்திய தரும சாலை, சத்திய ஞான சபை, சித்தி வளாகம் ஆகியவற்றை வடலூரில் நிறுவினார். 'கடவுளை உண்மையான அன்புடன் ஒளி வடிவில் வழிபட வேண்டும்' என்பது வள்ளலாரின் எண்ணம். அப்படி அவர் உருவ வழிபாட்டை மறுத்ததால், வள்ளலார் வாழ்ந்த காலத்திலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியது.
''அவர் எழுதியதை அருட்பாவாக ஏற்க முடியாது. தேவாரம், திருவாசகம்தான் அருட்பாக்கள். இவை வெறும் மருட் பாக்கள்!'' என்று யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் தலைமையிலான தீவிர சைவர்கள் கடுமையாக எதிர்த் தார்கள். ''தன்னை உணர்ந்தோர் பாட்டெல்லாம் அருட்பா. மற்றதெல்லாம் மருட்பா!'' என்று இதற்கு வள்ளலார் விளக்கம் அளித்தார். 'ஆறுமுக நாவலரின் பெயரைச் சொல்லி ஒரு
கூட்டத்தில் வள்ளலார் கிண்ட லடித்ததாக' கடலூர் மஞ்சக்குப்பம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கலானது. அன்றைய தினம் வள்ளலாரே நீதிமன்றத்துக்கு நேரில் வர... அப்போது வழக்குப் போட்ட ஆறுமுக நாவலரே, வள்ளலாரை எழுந்து நின்று வணங்கினார். இதைப் பார்த்த நீதிபதி, ''எதிரிகளாலும் வணங்கத்தக்க வள்ளலார் தவறாகப் பேசியிருக்க மாட்டார்!'' என்று ஆங்கிலேய ஆட்சியிலேயே வழக்கைத் தள்ளுபடி செய்தார்.
இந்நிலையில்தான், தற்போது சபானந்த ஒளி சிவாச் சாரியார் என்பவர் வடலூர் கருவறையில் லிங்க உருவத்தைப் பிரதிஷ்டை செய்தார். இதை இந்து சமய அறநிலையத் துறை ஏற்கவில்லை. 'வள்ளலார் உருவ வழிபாட்டை ஏற்காமல்... ஜோதி வழிபாட்டையே ஏற்றார்!' என்பதைச் சொல்லி, 'உருவம் எதையும் வைக்கக் கூடாது' என்றது. இந்த உத்தரவுகளுக்குத் தடை விதிக்கக் கேட்டுதான் சிவாச்சாரியார் சென்னை உயர் நீதிமன் றத்தை அணுகினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதியரசர் சந்துரு ஒரு மகத்தான தீர்ப்பை அளித்திருக் கிறார்.
''சாதிமத வேறுபாடுகளைக் கண்டித்த மாபெரும் மனிதாபிமானி வள்ளலார். 'சாதியும் மதமும் பொய் என ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்சோதி' என்று அவர் பாடியதுதான் 1872-ம் ஆண்டும் பிரிட்டிஷ் அரசு, சாதிக்கு எதிரான சட்டம் கொண்டுவரத் தூண்டுகோலாக அமைந்தது. அப்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பஞ்சம் தலைவிரித்தாடியபோது, கடலூருக்கு அருகில் அணையாத அடுப்புகளை உருவாக்கி அன்னசாலை அமைத்தார். அன்று இருந்த அந்நிய ஆட்சியை எதிர்த்து, 'கருணை இலா ஆட்சி கடுகி ஒழிக... அருள் நியந்த நன்மார்க்கர் ஆள்க' என்று பயமில்லாமல் பாடிய வள்ளலார், சிறந்த மனிதாபிமானியாகவும் சாதி மதத்துக்கு எதிரானவராகவும் இருந்தார்.
அவரது ஆன்மிக எண்ணங்கள் ஜோதியை அடிப்படையாகக்கொண்டே இருக்கின்றன. 'ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி என் உளத்தே' என்று பாடி இருக்கிறார். 'சமயம் குலம் முதல் சால்பு எலாம் விடுத்த அமயம் தோன்றிய அருட்பெருஞ்சோதி' என்கிறார். இந்த ஜோதி வழிபாட்டை முன்னெடுக்கும் நோக்கத்துடன்தான், சத்திய ஞான சபை தொடங்கப்பட்டது. அதில் எப்படிப்பட்ட வழிபாட்டு முறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்று 18.7.1872-ம் நாள் நெறிமுறைகள் வகுக்கப்பட்டன. ஜோதி வழிபாட்டைத் தவிர, வேறு எதற்கும் வழி கிடையாது என்று அதில் திட்ட வட்டமாகக் கூறப்பட்டுள்ளது. 'தகரப் பெட்டியில் வைத்து ஜோதியைஏற்ற வேண்டும். அது கண்ணாடியில் பிரதிபலிக்க வேண்டும். எண்ணெய் பயன்படுத்தி ஜோதியை ஏற்ற வேண்டும். ஜோதி காட்டப்படும்போது அனைவரும் மௌனமாக இருக்க வேண்டும். 'அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி' என்ற மந்திரத்தை மட்டுமே உச்சரிக்க வேண்டும். இதில் பங்கேற்பவர்களுக்கு, வேதங்களிலோ, ஆகமங்களிலோ, புராணங்களிலோ, இதிகாசங்களிலோ, நம்பிக்கை இருக்கக் கூடாது. இதில் பங்கேற்பவர்களுக்கு, சைவம், வைணவம், வேதாந்தம், சித்தாந்தம் ஆகிய பிற மதங்களின் மீது நம்பிக்கை இருக்கக் கூடாது' என்று வள்ளலார் தனது நெறிமுறைகளைத் தெளிவாகக் கூறியுள்ளார். எனவே, லிங்கப் பிரதிஷ்டை செய்வது வள்ளலாருக்கு எதிரானதாகும்!'' என பல்வேறு ஆதாரங்களை தனது தீர்ப்பில் நீதியரசர் சந்துரு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ''வள்ளலார் மார்க்கம் விஞ்ஞான அடிப் படையில் ஆனது. புத்தருக்குப் பிறகு புதிய நன்மார்க்கத்தை அவர் உருவாக்கியவர். வள்ளலார் ஆறு திருமுறைகளை எழுதியிருக்கிறார். முதல் ஐந்து திருமுறைகளில் உருவ வழிபாட்டை ஏற்றுக்கொண்டாலும்... கடைசியாக ஆறாம் திருமுறையில், ஜோதி வழிபாட்டை மட்டுமே வலியுறுத்தி இருக்கிறார். இறுதிக் காலத்தில் சொன்னதையே அவரது உறுதியான வாக்காக எடுத்துக்கொள்ள வேண்டும்!'' என்று சொன்ன நீதிபதி சந்துரு, ''சைவத்தின் மீது அளப்பரிய ஈடுபாடுகொண்டு இருந்தேன். ஆனால், முழு உண்மை என்ன என்பதை உணர்ந்த பிறகு அதை விட்டுவிட்டேன். நீங்களும் அதை விட்டுவிடுங்கள். அப்போதுதான் நீங்கள் ஆன்மிகரீதியாக முன்னேறலாம். வெற்று வார்த்தைகளாலும் சடங்குகளாலும் பயன் இல்லை. அன்பு, உண்மை, கருணை ஆகியவற்றால் மட்டுமே உயர்வை அடைய முடியும்!'' என்று வள்ளலார் சுட்டிக்காட்டியதையும் குறிப்பிட்டார்.
மேலும் அவர், ''சத்திய ஞான சபையில் உருவ வழிபாட்டை நடத்துவது வள்ளலாரை அவமதிப்பதாகும். வள்ளலாரை அவரது எதிரிகள் எதற்காக எதிர்த்தார்களோ, அந்தக் காரணத்தின் மூலமாகத்தான் அவரை முழுமையாக உணர முடியும். உருவ வழிபாட்டை எதிர்ப்பதையும், சாதி மத வேற்றுமைகளை நிராகரிப்பதையும் பார்த்துத்தான் வள்ளலாருக்கு எதிர்ப்பு கிளம்பியது. எனவே, உருவங்களை வடலூரில் வைத்து வழிபடக் கூடாது!'' என்று தீர்ப்பு அளித்துள்ளார்.
வள்ளலாரின் சமாதியில் மீண்டும் ஒரு வெற்றி மாலை!
- ப.திருமாவேலன்


ஜூனியர் விகடனிலிருந்து

"பசி என்பது என்ன? உயிர்களுக்குப் பசி என்னும் ஒன்று எதனால் இருக்கிறது?

"பசி என்பது என்ன? உயிர்களுக்குப் பசி என்னும் ஒன்று எதனால் இருக்கிறது? பசியின் காரணமாக, மனிதர்கள் என்னென்ன கொடுமைகளைச் செய்யத் துணிவார்கள்? பசியினால் ஓர் உயிருக்கு உண்டாகும் வேதனைகள் என்னென்ன?" என்று வள்ளலார் ஜீவகாருண்ய ஒழுக்கத்தை வலியுறுத்த, பசியைப் பற்றி அணுஅணுவாக அலசி ஆராய்ந்திருக்கிறார். பசியைப் பற்றிய அவரது கருத்துகள் இங்கே:

பசி என்ற ஒன்று இருப்பதேன்?

பசியில்லாவிட்டால் உணவுக்காக மக்கள் ஒருவரை ஒருவர் எதிர்பார்க்க மாட்டார்கள். அப்படியில்லாதபோது, ஒருவருக்கொருவர் உதவமாட்டார்கள். அப்படி உதவவில்லை என்றால், மனிதநேயம் இல்லாமல் போய்விடும்.

மனிதநேயம் இல்லாவிட்டால், கடவுள் அருள் கிட்டாது. எனவே, கடவுளை அறிய, கடவுளால் நமக்குக் கொடுக்கப்பட்ட ஓர் உதவிக் கருவிதான் பசி! பசி என்பது என்ன?

பசி என்பது, ஏழைகளின் உடலில் பற்றி எரியும் நெருப்பு.

பசி என்பது, ஏழைகளின் அறிவாகிய விளக்கை அணைக்க முயலும் விஷக்காற்று.

பசி என்பது, ஏழைகளின்மேல் பாய்ந்து கொல்லப் பார்க்கும் புலி.

பசி என்பது, உச்சி முதல் பாதம் வரை பாய்ந்து பரவும் விஷம்.

பசி நோயினால் ஏற்படும் கொடுமைகள்!

பசி நோய் என்பது மிகவும் பயங்கரமானது. அந்நோயைத் தீர்த்துக்கொள்ள, மக்கள் எத்தகைய பாவத்தையும் செய்ய அஞ்சமாட்டார்கள்.

பெற்றவர்கள், பிள்ளைகளை விற்பார்கள்.

இதன் விளைவாகப் பிள்ளைகள் அநாதைகளாகத் திரிவார்கள். பிச்சை எடுப்பார்கள். கடின வேலைகளில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

பிள்ளைகள், பெற்றவர்களை விற்பார்கள்.

இதன் விளைவாக, வயதானவர்கள் பரதேசங்களில், பரவீடுகளில் கடின உழைப்பில் ஈடுபட வேண்டியிருக்கும். பிச்சை எடுக்க நேரிடும். முதியோர் இல்லங்களில் தஞ்சம் புகுந்து, கூனிக் குறுக நேரிடும்.

வீடு, மாடு, நிலம், மற்ற உடைமைகள் அனைத்தையும் விற்று, மக்கள் பசிப்பிணியை அகற்றப் பார்ப்பார்கள்.

முனிவர்களையும் யோகிகளையும் சித்தர்களையும்கூடப் பசி தாக்கும். அச்சமயங்களில் அவர்கள் பிச்சை கேட்டு ஊருக்குள் நுழைவார்கள். பிச்சை கிடைக்காவிடில் சித்தம் கலங்குவார்கள்.

எந்நேரமும் காமத்தை விரும்பும் காமுகர்கள்கூடப் பசிப்பிணி தாக்கும்போது, காமம் மறந்து கலங்கு வார்கள்.

பசிப்பிணி தாக்கினால் என்னாகும்?

அறிவு மயங்கும்.

கடவுளைப் பற்றிய நினைப்பு அடியோடு ஒழிந்து போகும்.

சித்தம் கலங்கும்.


நம்பிக்கை குலையும்.

கண் பஞ்சடைந்து குழிந்துபோகும்.

காதில் இரைச்சல் ஏற்படும்.

நாக்கு உலர்ந்துபோகும்.

கை, கால் சோர்ந்து துவளும்.

வார்த்தை குழறும்.

வயிறு திகுதிகுவென எரியும்.

தாபமும் கோபமும் பெருகும்.

உயிர் விலகுவதற்கான அத்தனை அறிகுறிகளும் மேலும் மேலும் தோன்றும்.

நரக வேதனை, ஜனன வேதனை, மரண வேதனை ஆகிய வேதனைகளும் ஒன்றுதிரண்டால் என்ன வேதனை உண்டாகுமோ, அதுவே பசி வேதனை.

பசி அகன்றால் அடையும் ஆனந்தங்கள்!

உணவு கிடைத்து, உண்டு பசியாறியவுடன், பசியால் நேர்ந்த அத்தனை துன்பங்களும் அகலும்.

தத்துவங்கள் மறுபடி தழைக்கும்.

உள்ளம் குளிரும்.

சித்தம் தெளியும். உள்ளேயும் வெளியேயும் உயிர்க்களை உண்டாகும்.

கடவுள் நம்பிக்கை துளிர்க்கும்.

தாய், தந்தை, மனைவி, குழந்தைகள், நிலம், பொன், மணி ஆகியவற்றைக் காணும்போது கொள்ளும் மகிழ்ச்சியைவிட, பசியால் வேதனைப்படுபவர்கள் உணவைக் காணும்போது அதிக மகிழ்ச்சி அடைவார்கள். உணவைக் கண்டவுடனேயே அவ்வளவு மகிழ்ச்சி ஏற்படும் என்றால், அதை உட்கொண்டபின் அடையும் ஆனந்தம் எப்படிப்பட்டதாக இருக்கும்? ஆதலால், உணவைக் கடவுளுக்குச் சமமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.


பிற உயிர்களின் பசியாற்றி, ஒப்பில்லா திருப்தி இன்பத்தை அளிப்பவர்கள் புண்ணியர்கள். இந்தப் புண்ணியத்துக்கு எந்தப் புண்ணியத்தை இணையென்று சொல்ல முடியும்?

இந்தப் புண்ணியத்தைச் செய்கிற புண்ணியர்களை, எந்தத் தெய்வத்துக்கு ஈடாகச் சொல்வது?

இவர்களை, எல்லாத் தெய்வங்களுக்கும் மேலாகிய கடவுளின் அம்சமென்றே சத்தியமாக அறியவேண்டும்.

ஜீவகாருண்யம் கடைப்பிடிப்பதால் வரும் நன்மை!

சூலைநோய், குஷ்டநோய் போன்ற தீராத வியாதிகளால் அவதிப்படும் இல்லறவாசிகள், அந்நோய்களிலிருந்து விடுபடுவார்கள் என்பது சத்தியம்.

பல நாட்கள் குழந்தை பாக்கியம் இல்லாமல் மனவருத்தம் கொண்டவர் களுக்கு, குழந்தை பாக்கியம் உண்டாகும்.

தனக்கு அற்ப ஆயுள் என்றுஜோதிடம் மூலமாகவோ, மருத்துவம் மூலமாகவோ அறிந்து, மரணத்துக்குப் பயந்து கலங்கு கிறவர்களுக்கு ஜீவகாருண்ய ஒழுக்கம் நீண்ட ஆயுளைக் கொடுக்கும்.

கல்வி, அறிவு, செல்வம், போகம் ஆகியவற்றில் குறை உள்ளவர்கள், பசித்த ஏழைகளின் பசியாற்றினால் கல்வி, அறிவு, செல்வம் மற்றும் மகிழ்ச்சியை அளிக்கவல்ல போகங்கள் அனைத்தும் கிட்டும்.

பசித்தவர்களுக்குப் பசியாற்றுவதை விரதமாகக் கொண்ட மக்களுக்குக் கோடையில் வெயில் வருத்தாது. மண்ணும் சூடு செய்யாது. பெருமழை, பெருநெருப்பு, பெருங்காற்று ஆகியவற்றால் துன்பம் உண்டாகாது.

கள்வர்களாலும் விரோதிகளாலும் துன்புறுத்தப்பட மாட்டார்கள்.

அரசாங்கத்தால் அவமதிக்கப்பட மாட்டார்கள். சிறைவாசம் போன்ற கொடுமைகள் நேரிடாது.

வயல்களில் முயற்சி இன்றியே விளைச்சல் பெருகும்.

வியாபாரத்தில் தடையின்றி லாபம் கிடைக்கும்.

வள்ளலார்:: மனு முறைகண்ட வாசகம்:

நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ!
வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ!
தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ!
கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேனோ!
மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ!
குடிவரி யுயர்த்திக் கொள்ளை கொண்டேனோ!
ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ!
தருமம் பாராது தண்டஞ் செய்தேனோ!
மண்ணோரம் பேசி வாழ்வழித்தேனோ!
உயிர்க்கொலை செய்வோர்க்க உபகாரஞ் செய்தேனோ!
களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ!
பொருளை இச்சித்துப் பொய் சொன்னேனோ!
ஆசைகாட்டி மோசஞ் செய்தேனோ!
வரவுபோக் கொழிய வழியடைத்தேனோ!
வேலையிட்டுக் கூலி குறைத்தேனோ!
பசித்தோர் முகத்தைப் பாராதிருந்தேனோ!
இரப்போர்க்குப் பிச்சை இல்லையென்றேனோ!
கோள் சொல்லிக் குடும்பங் குலைத்தேனோ!
நட்டாற்றிற் கையை நழுவவிட்டேனோ!
கலங்கி யொளித்தோரைக் காட்டிக்கொடுத்தேனோ!
கற்பழிந்தவளைக் கலந்திருந்தேனோ!
காவல் கொண்டிருந்த கன்னியை அழித்தேனோ!
கணவன்வழி நிற்போரைக் கற்பழித்தேனோ!
கருப்பமழித்துக் களித்திருந்தேனோ!
குருவை வணங்கக் கூசிநின்றேனோ!
குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ!
கற்றவர் தம்மைக் கடுகடுத்தேனோ!
பெரியோர் பாட்டிற் பிழைசொன்னேனோ!
பக்ஷியைக் கூண்டில் பதைக்க அடைத்தேனோ!
கன்றுக்குப் பாலு‘ட்டாது கட்டிவைத்தேனோ!
ஊன்சுவை யுண்டு உடல் வளர்த்தேனோ!
கல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ!
அன்புடையவர்க்குத் துன்பஞ் செய்தேனோ!
குடிக்கின்ற நீருள்ள குளந் து‘ர்த்தேனோ!
வெய்யிலுக் கொதுங்கும் விருக்ஷ மழித்தேனோ!
பகைகொண்டு அயலோர் பயிரழித்தேனோ!
பொதுமண்டபத்தைப் போயிடித்தேனோ!
ஆலயக் கதவை அடைத்து வைத்தேனோ!
சிவனடியாரைச் சீறி வைதேனோ!
தவஞ் செய்வோரைத் தாழ்வு சொன்னேனோ!
சுத்த ஞானிகளைத் து‘ஷணஞ் செய்தேனோ!
தந்தைதாய் மொழியைத் தள்ளி நடந்தேனோ!
தெய்வ மிகழ்ந்து செருக்கடைந்தேனோ!

என்ன பாவம் செய்தேனோ! இன்னதென்றறியேனே!

பிராணிகள் பேசுகின்றன - "மீன்" ஆகிய நான் சொல்வதையும் கேளுங்கள்


"மீன்" ஆகிய நான் சொல்வதையும் கேளுங்கள் .
கடல் பெரிய அளவாக உள்ளதால் பெரும் பாலும் நாங்கள் வாழும் இடமே அது தான். உலகில் மக்களால் வெளியிடும் அசுத்தங்கள் எல்லாம் கலக்கும் இடமே கடல்தான்.
ஆகவே , எங்கள் உடல் தோற்றமே கழிவு பொருள்கள் தான் . எங்கள் உணவே நோயாளிகள் கழிந்த மலமும் , பல வித விஷ பூச்சிகளும் தான் . சிலர் உடல் முழுவதும் குளத்தில் குளிக்க வருவார்கள் . அவர்களின், உடல்களில் உள்ள பக்குகளை அப்படியே பிடுங்கி தின்போம். இது எங்களுக்கு மிக பெரிய விருந்து . இப்படி நீரில் உள்ள அழுக்குகளை நாங்கள் உண்டு , உங்கள் குடிநீரை சுத்த படுத்துகிறோம் .அதனால் , நீங்கள் நோய் இல்லாமல் வாழ வழி செய்கிறோம். நீங்களோ துண்டீளும் , வளையும் போட்டு எங்களை கூட்டம் , கூட்டமாக பிடித்து உன்கிண்றீர்கள் .
பலவகை அழுக்குகளினால் எங்கள் உடல் உருவாவதால் , எங்களை சாப்பிடும் உங்களுக்கு சரும நோய், காலரா , வயிற்று போக்கு , சில தொத்து நோய்கள் வருகின்றன . ஆகையால் நாங்கள் கூறியதை சிந்தித்து இனி மேலாவது மீன்களாகிய எங்களை கொன்று தின்பதை நிறுத்தி முயற்சி செய்யுங்கள் , ஆறறிவு படைத்த மனித ஜீவர்களே !

Anbudan,
Karthikeyan.J

அருட்பெருஞ்சோதி மகாமந்திரத்தின் சிறப்பு:

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

அருட்பெருஞ்சோதி மகாமந்திரத்தின் சிறப்பு:
  1. உலகில் உள்ள அனைத்து வஸ்துக்களும் "அ" என்ற அட்சரத்தை கொண்டு தான் தொடங்குகின்றன.அந்த "அ" என்ற அட்சரத்தை கொண்டு தொடங்கும் ஒரே மந்திரம் "அருட்பெருஞ்சோதி மகாமந்திரம்".
  2. உயிர் எழுத்துக்கள் "அனைத்தும்" நிரம்பிய ஒரே மந்திரம் "அருட்பெருஞ்சோதி மகாமந்திரம்". அனைத்து மந்திரங்களும் இந்த உயிர் எழுத்தை கொண்டு இயக்கியும், இயங்கியும் கொண்டு இருக்கின்றன.
  3. இது எப்படி :
    தமிழில் உயிர் எழுத்து : ,ஆ, , ,, , , , , , ,ஒள
    ஆனால் மூலம்:, இ ,உ, எ, ஒ
    இந்த ஐந்து எழுத்துக்களை தழுவி மற்ற எழுத்துக்கள் தோன்றுகின்றன.
    இந்த ஐந்து எழுத்தக்களும் நிரம்பிய ஒரே மந்திரம்
    "அருட்பெருஞ்சோதி மகாமந்திரம்".
  4. அருட்பெருஞ்சோதி:
    =
    ரு = ர் +
    ட் = ட் +
    பெ = ப் +
    ட் = ட் +
    ஜோ = ஜ் +
    தி = த் +
    அனைத்து உயிர் எழுத்து (, இ ,உ, எ, ஒ)
  5. அருட்பெருஜோதி மகா மந்திரத்தை எப்படி ஓத வேண்டும் ?
    வள்ளலார் கூறுகிறார் :
    "ஊன் படிக்கும் .உளம் படிக்கும்.
    உயிர் படிக்கும். உயிர்க்கு உயிர் தான் படிக்கும் "
    நாம் "மகாமந்திரத்தை" :
    ஊன் ஓத வேண்டும் . (இந்திரிய ஒழுக்கம்)
    உளம் ஓத வேண்டும் . (கரண ஒழுக்கம் )
    உயிர் ஓத வேண்டும். ( ஜீவ ஒழுக்கம் )
    உயிர்க்கு உயிர் தான் ஓத வேண்டும். (ஆன்ம ஒழுக்கம் )
  6. ஏன் இந்த மந்திரத்திற்கு "மகா மந்திரம்" என்று பெயர் ?
    ஏனெனில் , இந்த "அருட்பெருஞ்சோதி மகாமந்திரம்" -திற்குள் னைத்து மந்திரங்களும் அடங்கி உள்ளன.
,
Vallalar Groups

பிராணிகள் பேசுகின்றன - "ஆடு" ஆகிய எங்கள் அவல நிலையை பாருங்கள்


உங்கள் இல்லங்களில் எங்களை வளர்ப்பது கசாப்பு கடைகாரனுக்கு விற்று பொருள் சம்பாதிக்கவே வளர்கின்றீர்கள். பொருள் பேராசையால் , வள்ளலார் கூறும் "உண்மை அன்பு" இல்லாமல், நெஞ்சில் வஞ்சம் வைத்து பரிவு காட்டுவது போல் டிகின்றீர்கள்.
"வஞ்ச மனத்தில் வசியாத பாதம்" என வடலூர் இராமலிங்க சுவாமிகள் தனது பாடலில் கூறி உள்ளதை , இங்கு சிந்த்தனை செய்யுங்கள்.
எங்களுக்கு நீங்கள் போதுமான உணவு கொடுக்காததால், நாங்கள் வீடு, வீடாக சென்று அங்குள்ள கொடிகளை உண்டு உடல் வளர்க்க போகும் போது அங்குள்ளவர்கள் தடியாலும் கற்களாலும் அடிக்கும் அடிகளை தாங்கி கொள்கிறோம்? ஏன்? எங்கள் குழந்தைகளை காப்பாற்ற வேண்டி வாழ நினைகின்றோம். இப்படி எல்லாம் பாடு பட்டு உடம்பை வளர்த்தால் நீங்கள் இறைச்சி கடைகாரனுக்கு விற்று பொருள் ஈட்டுகின்றீர்கள். இந்த பணத்தினால் உங்களுக்கும் , உங்கள் குடும்பங்களுக்கும் மற்றும் உங்களை சார்ந்தவர்களுக்கும் ீமை பயக்குமே தவிர நன்மை ஏற்படாது.

ஐந்தறிவு உடைய நாங்கள் , சைவ உணவு சாப்பிட்டே உடம்பை வளர்த்து "சாத்வீக" தன்மையுடன் வாழ்கின்றோம். ஆறறிவு படைத்த நீங்கள், ஏன் "எங்களை கொன்று தின்று கடவுளின் இயற்கை விளக்கத்தை நீங்களே மறைத்து கொள்கின்றீர்கள்?" மனித தேகம் பெற்றவர்களால் தான் கடவுளின் "இயற்கை விளக்கத்தை" பெற முடியும்.வடலூர் இராமலிங்க சுவாமிகள் , பிற உயிர்களை கொன்று தின்பவர்களுக்கு "கடவுளின் இயற்கை விளக்கம்" அகத்திலும் , புறத்திலும் வெளிப்படவே மாட்டது என்று கூறுகிறார்கள்.
"தீவினையின்றி ஈட்டல் பொருள் " என்றனர் சான்றோர். இதனை எல்லாம் சிந்தனை செய்வீர்களாக ...


Anbudan,
Karthikeyan.J

பிராணிகள் ஆகிய எங்களின் ஒட்டு மொத்த முறையீடு - "இரக்கம் காட்டுங்கள்"


வாயிலாத ஜீவர்களாகிய நாங்கள் எந்த குற்றமும் செய்யவில்லை.
நாங்களும் உங்களை போன்ற "ஆன்மாக்கள்" தான். ஆனால் , எங்கள் வினைக்கு ஏற்ப நாயாகவும் , ஆடாகவும் , பன்றியாகவும் , கோழியாகவும் , பூனையாகவும் , நண்டாகவும்,மீனாகவும் , வாத்தாகவும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

நாங்கள் முற்-பிறவியில் , ஜீவகாருண்யத்தை கடைபிடிக்காததால் , துஷ்ட்ட மிருகங்களாக பிறந்து உள்ளோம்.

நீங்களும் , ஜீவகாருண்யத்தை கடைபிடிக்க வில்லை என்றால் , எங்களை போன்ற தேகங்களை எடுக்க நேரிடும். இதனை , வடலூர் இராமலிங்க சுவாமிகள் தெளிவாக தாம் இயற்றிய "ஜீவகருன்ய ஒழுக்கத்தில்" எச்சரிக்கை கொடுத்துள்ளார் .

இந்த மனித தேகத்தை வைத்து புண்ணியத்தை சேர்த்து கொள்ளுங்கள். நீங்களாவது கொடூரமான மனிதர்களிடம் இருந்து தப்பித்து விடலாம்.

வள்ளலார் , "காலம் உள்ள போதே பெற்று கொள்ளுங்கள்" என கூறுவதை ஆழ்ந்து சிந்தனை செய்யுங்கள்.

ஆலயங்களில் - சிறு தெய்வத்தை கூறி "உயிர் கொலை" - சிந்தியுங்கள்!!

அன்பு உடையவர்களே ,
  • முஸ்லிம் சகோதர்கள் பள்ளிவாசலில் உயிர் இனங்களை பலி இடுவதில்லை .
  • கிறிஸ்துவ சகோதர்கள் சர்ச்சில் , உயிர்களை பலி இடுவதில்லை .
  • ஆனால் , சிறு தெய்வ வழிபாடு என்ற பெயரால் ஆடு , மாடு , கோழி முதலான உயிர் இனங்களை பலியிட்டு , கோயிலை கொலை களமாக்கும் கொடுமை இந்து மக்கள் பலரிடம் எப்படி புகுந்ததோ? ( கோயிலா !! கொலை களமா!!) சிந்தியுங்கள்!!
=========================================
(வள்ளலாரின் , பிள்ளைப் பெரு விண்ணப்பம் )
(3473).
துண்ணெனக் கொடியோர் பிறவுயிர் கொல்லத் தொடங்கிய போதெலாம் பயந்தேன்
கண்ணினால் ஐயோ பிற உயிர் பதைக்கக் கண்ட காலத்திலும் பதைத்தேன்
மண்ணினில் வலையும் தூண்டிலும் கண்ணி வகைகளும் கண்ட போதெல்லாம்
எண்ணி என் உள்ளம் நடுங்கிய நடுக்கம் எந்தை நின் திருவுளம் அறியும்"
===========================================
வள்ளலார், இறைவன் பெயரால், ஆலயங்களில் உயிர் பலி கூடாது என "எச்சரிக்கை" கொடுகின்றார்கள்.

Anbudan,
Vallalar Karthikeyan

தை பூசம் விளக்கம்

வள்ளல் பெருமான் தை பூச நாளை
ஞானத்தின் வெளிப்புற நாளாக காட்டினார்கள்..
காரணம்
தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் வருகின்ற தினம் மிகவும்
ஒரு சிறப்பு வாய்ந்த தினமாகும்.
தை மாதத்தை மகர மாதம் என்று அழைப்பார்கள்.
மகரம் என்பது முடிந்த நிலையினை குறிப்பது.
அகரம் + உகரம் + மகரம் = ஓம்
தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் வருகின்ற நாள்
சூரியன் உதிக்கின்ற நேரத்தில் சந்திரனும் வானத்தில்
இருக்கும். அப்போது ஞான சபையில் இருந்து
அக்னியான ஜோதி காண்பிக்கப் படும்.
அதாவது சூரிய சந்திர ஜோதியுள் ஜோதி
சந்திரன் என்பது மன அறிவு,
சூரியன் என்பது ஜீவ அறிவு
அக்னி என்பது ஆன்மா அறிவு.
சந்திரன் சூரியனில் அடங்கி
சூரியன் அக்னியில் அடங்கி
அக்னி ஆகாயத்தில் அடங்கும் என்பதே
தை பூசம்.
மனம் ஜீவனில் அடங்கி
ஜீவன் ஆன்மாவில் அடங்கி
ஆன்மா சிவத்துடன் கலந்து விடும்
என்பதை காட்டவே தை பூசம்
நமது வள்ளல் பெருமானால்
அளிக்கப்பட்டது.
மேலும்
தை பூசத்தில் அதி காலை ஜோதி தரிசனம்
மட்டுமே உண்மை தத்துவமாக
வள்ளல் பெருமானால் விளக்கப்பட்டது.
மற்ற மாத பூசங்கள் எல்லாம் பிற்காலத்தில்
ஏற்படுத்தப் பட்டன.

அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு

என்னை சிந்திக்க வைத்த வள்ளலார் பாடல் ...

வாடியபயிரைக் கண்டபோதெல்லாம்


வாடினேன் பசியினால் இளைத்தே


வீடூதோ றிரந்தும் பசியறா தயர்ந்த


வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்


நீடிய பிணியால் வருந்துகின்றோர் என்


நேர் உறக் கண்டுளந் துடித்தேன்


ஈடின்மா னிகளாய் ஏழைக ளாய்நெஞ்


சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்

ஞான கருத்துக்களை சிந்தித்து தெளிதல்

ஒருமுறை கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது.
அதில் வசித்த தவளை ஒன்று தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு
ஒரு கிணற்றில் விழுந்தது. அந்த கிணற்றிலே வசித்து வந்த தவளை ஒன்று
அந்த தவளையை பார்த்து நீ எங்கிருந்து வருகிறாய் என்று கேட்டது.
அதற்க்கு கடல் தவளை நான் கடலில் இருந்து வருகிறேன் என்று
பதில் கூறியது.


அதற்க்கு கிணற்று தவளை உன்னுடைய கடல் இவ்வளவு தூரம் இருக்குமா
என்று கூறி கொண்டு ஒரு முறை எம்பி குதித்து தாண்டியது.
அதற்கு கடல் தவளை இல்லை இதை விட பெரியது என்று பதில் கூறியது.
அடுத்ததாக கிணற்று தவளை இரண்டு முறை எம்பி தாண்டி குதித்து
இவ்வளவு தூரம் இருக்குமா என்று கேட்டது.
அதற்கும் கடல் தவளை இதைவிட பெரியது என்று பதில் கூறியது.
சரி இந்த கிணற்றில் பாதி தூரம் இருக்குமா உனது கடல் என்று
கிணற்று தவளை கூறியது.
அதற்கு கடல் தவளை இந்த முழு கிணற்றை விட பல மடங்கு பெரியது கடல்
என்று பதில் கூறியது.
உடனே கிணற்று தவளைக்கு மிகுந்த கோபம் உண்டாகியது
கடல் தவளையை பார்த்து மூடனே இந்த கிணற்றை விட
பெரிய இடம் இந்த உலகத்திலேயே கிடையாது.
நீ மிக பெரிய பொய்யன் உடனடியாக இந்த இடத்தை விட்டு ஓடிப் போ
என்று கடல் தவளையை விரட்டி விட்டது.


அது போல்தான் ஞான மார்க்கத்தில்
சிறிது கற்ற உடன் நமக்கு எல்லாம் தெரிந்து விட்டது என்று
அந்த கிணற்று தவளையை போல் நமக்கு ஆணவம் வந்து விடுகிறது.
ஆனால் கடல் போல் ஞானத்தை தெரிந்து கொள்ள பல விஷயங்கள்
உள்ளன என்றும் கற்க வேண்டிய ஞானம் மிக அதிகம் நாம் கற்றவை
மிகவும் குறைவு என்பதும் நாம் உணர வேண்டும்.


ஆகவே நாம் ஒன்றை மட்டும் தெரிந்து கொண்டு அதையே பிடித்து கொண்டு
அதுதான் ஞானம் என்று அதற்குள்ளேயே உழன்று கொண்டிருந்தால்
ஞானத்தை முழுமையாக அடைய முடியாது.


நாம் அனைவரும் திறந்த புத்தகமாக இருக்க வேண்டும்.
நல்ல கருத்துக்களை விருப்பு வெறுப்பின்றி அறிவின் துணை கொண்டு
ஆராய்ந்து கற்க வேண்டும்.


நல்ல ஞான கருத்துக்களை சிந்தித்து தெளிந்தால்
நாம் தூய்மை அடைவதில் எந்த தடையும் இருக்காது.
இறை அருள் நம்மை வந்து அடையும்.

அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு.

எண்ணங்களை கடவுளிடம் சொல்லுங்க!

ஆன்மிக சிந்தனைகள் » வள்ளலார்


சிலருக்கு தூங்குவதில் சுகம். உணவை ருசித்து உண்டு மகிழ்வது சிலருக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. இன்னும் சிலர் பொழுதை விளையாடிக் கழிக்கிறார்கள். நாடகம், கூத்து இவற்றில் இன்பம் காண்பவர்களும் உண்டு. ஆனால், என்றும் அழியாத இன்பம் ஆண்டவனே என்பதை மக்கள் உணர மறுக்கிறார்கள். அழுத பிள்ளைக்கு பால் கிடைக்கும். எதையும் வெளிப்படுத்தாமல் அமைதியாக இருந்தால் அதற்கு பசிக்கிறது என்பதை தாய் அறியமாட்டாள். அதனால் உங்கள் எண்ணங்களை இறைவனிடம் சொல்லுங்கள். அவன் பரிசீலனை செய்து விரைவில் பலன் கொடுப்பான்.
புலால் உண்பவன் வயிற்றில் இறந்து போன உயிர்களின் உடல்கள் புதைக்கப்படுகின்றன. அசைவ உணவு உண்பவன் வாழ்வில் ஆன்மிக வளர்ச்சி துளியளவும் ஏற்படாது. பசியுடன் இருக்கும் ஜீவனுக்கு ஆன்மிகம் புரியாது. அந்த மனிதனுக்கு உணவு அளித்து பசித்தீயை போக்குங்கள். அந்த ஜீவகாருண்ய உணர்வே மிக உயர்வானது.
தன்னுயிர் போல மன்னுயிரை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். அவ்வுயிர்களுக்கு துன்பம் இழைக்காதீர்கள். பிறருக்கு உண்டாகும் ஆபத்துக்களை அகற்றி, அச்சம் போக்க வேண்டியது அருள்வாழ்வின் அடிப்படை..

படிகளைக்கண்டு மலைக்காதீர்கள்


கருணை நிறைந்தவராய் இருங்கள். உங்கள்மனதில் இரக்கம் ஊற்றுப் போல பொங்கி வழியட்டும். அடுத்தவர் துன்பங்களைப் போக்க உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள்.
வயிற்றுப் பசிக்காக மற்ற உயிர்களைக் கொன்று உண்பது கூடாது. உயிர்க்கொலை புரிவோர் எமக்கு எந்நாளும் உறவாக மாட்டார்கள். இறைவன் உங்கள் கண்ணுக்கு எட்டுவதில்லை. ஆனால், கருத்துக்கு எட்டுவான். அன்போடு அவனை பற்றிப் பிடியுங்கள். நம்மை விட்டு விலகவே மாட்டான். அன்பு எங்கிருக்கிறதோ அங்கே இறைவன் இருக்கிறான். பலகாலம் இறைவனை வழிபாடு செய்வதால் உண்டாகும் நன்மைகளை எல்லாம் தர்மம் செய்து ஒரேநாளில் பெற முடியும். தர்மத்தின் பயனை உணர்ந்து கொண்டவர்கள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தர்மம் செய்வார்கள். எத்தனை படிகள் என்று மலைத்து நிற்காதீர்கள். எல்லாப் படிகளையும் படிப்படியாக கடந்து விடலாம். உச்சிக் கமலத்தில் ஊற்றெடுக்கும் அமுதத்தைப் போல ஆண்டவன் இருக்கிறான். மனந்தளராமல் கடவுளைக் காணும் முயற்சியை மேற்கொள்ளுங்கள். புலால் உண்ணும் மனிதர்களைக் கண்டால் என் மனம் நடுங்குகிறது. அருட்பெருஞ்சோதியை உள்ளும் புறமும் காண்பவர்கள் மன்னுயிரைத் தன் உயிர்போல் மதித்து நடப்பார்கள்.

எத்தனை படிகள் இருந்தாலென்ன?

ஆன்மிக சிந்தனைகள் » வள்ளலார்



இறைவன் உங்கள் கண்ணுக்கு எட்டுவதில்லை. கருத்துக்கு எட்டுவான். உங்கள் கைக்கு எட்டுவதில்லை. வாய்க்கு எட்டுவான். அவனை அன்போடு பற்றுங்கள். விலகமாட்டான். எங்கே அன்பிருக்கிறதோ அங்கே இறைவன் இருக்கிறான். பலகாலம் ஆண்டவனை வணங்கிப் பெறும் புண்ணிய பலன்களை எல்லாம் ஒரே நாளில் பெற முடியும். எப்படி என்றால் பசியால் வாடும் அன்பர் முகம் மலர உணவினைத் தருமம் செய்யுங்கள். நிச்சயம் புண்ணியம் கிடைக்கும். எத்தனை படிகள் என்று மலைத்து நிற்காதீர்கள். எல்லாப் படிகளும் கடந்து விடலாம். உச்சிக் கமலத்தில் ஊற்றெடுக்கும் அமுதத்தை உண்டு களிக்கலாம். மனதில் இறைவனை அடைய வேண்டும் என்ற வைராக்கியத்தை மட்டும் பற்றிக் கொள்ளுங்கள். கதிரவன் ஓடிக்கொண்டே இருக்கிறான். அவன் பின்னால் காலம் ஓடிக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொருநாளாய் இரவும்பகலும் கழிகிறது. காலத்தை விரயம் செய்யாமல் நிலையான தருமங்களைச் செய்யுங்கள்.மறப்பது மனிதர் இயல்பு. பெற்ற தாயை மகன் மறக்கலாம். பிள்ளையைத் தாய் மறக்கலாம். உடலை உயிர் மறக்கலாம். உயிரை உடல் மறக்கலாம். நெஞ்சம் தான் கற்ற கல்வியை மறக்கலாம். ஆனால், தவத்தில் சிறந்தவர்களின் மனத்தில் உறையும் இறைவனை மறக்கக் கூடாது.