இஸ்லாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இஸ்லாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நாங்கள் இருப்பதோ இஸ்லாம் மதம்; ஆனால் எம்மதமும் எங்களுக்கு சம்மதமே'

இந்துக்களால் கடவுள் என கருதப்படும் கிருஷ்ணரது ஜெயந்தி தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. அதையொட்டி நடந்த நிகச்சிக்காக தனது பிள்ளையை கிருஷ்ணராக வேடமிட்டு, ஒரு முஸ்லிம் தாய் அழைத்து செல்வதை கீழே  உள்ள படத்தில் பார்க்கிறோம்.   


எம்மதமும் எங்களுக்கு  சம்மதமே....





பெருமானாரின்(ஸல்) பத்துக் கட்டளைகள்(அல்லாஹ்வின்)

1420 ஆண்டுகளுக்கு முன் …. ஹிஜ்ரி பத்தாம் ஆண்டு….
பெருமானார்(ஸல்) அவர்கள் அரபாத் பெருவெளியில் உரை நிகழ்த்தினார்கள்:-
அதில் பத்து விசயங்களை தமது அன்புக் கட்டளைகளாக உலகின் முன் வைத்தார்கள்..
1.( மக்களே! ) நன்றாகக் கவனத்துடன் கேட்டுக்கொள்ளுங்கள். ஏனெனில், அடுத்த வருடம் இதே நாளில் இதே இடத்தில் உங்கள் மத்தியில் நான் இருப்பேனாவென்பது எனக்குத் தெரியாது.இந்த நாளும், இந்த மாதமும், இந்த நகரமும் பரிசுத்தமானவை. அதுபோலவே உங்களது உயிரும், உடைமையும்,கண்ணியமும் பரிசுத்தமானவையாகும். (இறுதிநாள்வரை அவை பரிசுத்தமாக இருக்க வேண்டும். யாரும் அவற்றில் தலையிடவோ, அபகரிக்கவோ கூடாது.)இறைவனின் சமூகத்திலே இவற்றிற்கெல்லாம் நீங்கள் கணக்களிக்க வேண்டியதிருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
2.( மக்களே! ) ஒருவர் குற்றம் செய்தால் அக்குற்றத்தின் தண்டனை அவரது குடும்பமத்தினருக்கல்ல.,அவருக்கே வழங்கப்படும். தந்தை தன் பிள்ளைக்கோ,பிள்ளை தன் தந்தைக்கோ அநியாம் செய்யவேண்டாம். தந்தையின் குற்றத்திற்காக பிள்ளையையோ,பிள்ளையின் குற்றத்திற்காகத் தந்தையையோ தண்டிக்கப்படமாட்டாது.

3.( மக்களே! ) அஞ்ஞான காலத்தில் (இஸ்லாத்திற்கு முன்பு ஏற்பட்ட) கொலைகளுக்கும், கொடுஞ்செயல்களுக்கும், பழிவாங்கும் உரிமை இன்று முதல் ரத்து செய்யப்பட்டுவிட்டது. முதலாவது எனது குடும்பத்தைச்சார்ந்த ரபீஆ இப்னுல் ஹாரிதின் கொலைக்கு பழிவாங்குவதை நான் மனப்பூர்வமாக நிறுத்திவிட்டேன்.(அறியாமைக்காலத்தில் நிலவிய பழிக்குப்பழியும் உயிர்போக்கும் மடமையும் இனி கூடாது.)

4.( மக்களே! ) வட்டி வாங்குதல் இனி உங்களுக்குத் தடுக்கப்படுகிறது. அஞ்ஞான காலத்தில் ஏற்பட்ட வட்டித் தொகையனைத்தும் இன்று முதல் ரத்து செய்யப்படுகின்றன. (கடன்பட்டவர்கள் முதலை மட்டும் திருப்பிக் கொடுத்துவிட்டால் போதுமானது.)முதலாவது எனது பெரிய தந்தையார் அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப்அவர்களுக்கு வரவேண்டிய வட்டித் தொகையனைத்தும் தள்ளுபடி செய்துவிட்டேன்.

5.மக்களே! பெண்கள் குறித்து அல்லாஹ்வை அஞ்சிக் கொகொள்ளுங்கள். உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமை உள்;ளது போல், உங்கள் மீதும் உங்கள் மனைவியர் மீது உரிமையுண்டு). அவர்கள் உங்கள் கைகளிலே ஒப்படைக்கப்பட்ட (அமானிதம்) அடைக்கலப் பொருள்களாவர். அல்லாஹ்வின் பெயரால் அவர்களை உங்கள் மனைவியராகப் பொறுப்பேற்றிருக்கிறீர்கள். அவர்களின் கடமை, நீங்கள் விரும்பாதவர்களை உங்கள் இல்லத்திற்குள் அனுமதிக்கலாகாது. மீறினால் படுக்கையை விட்டு சிறிது காலம் விலக்கிவைக்கவோ,காயம் ஏற்படாதவாறு அடிக்கவோ செய்யுங்;கள். (அதுபோல) உங்களது கடமை நீங்கள் அவர்களுக்கு வேண்டிய உணவு,உடைகளை வழங்கி (அன்புடனும் கருணையுடனும் நடந்து கொள்ளுங்கள். இறைவனுக்குப் பயந்து அவர்களது) நன்மைகளைப் பேணி வாருங்கள்.

6.மக்களே! எனது வார்த்தைகளை கவனத்துடன் கேளுங்கள், கேட்டு நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். எல்லா முஸ்லிம்களும் ஒருவருக்கொருவர் சகோதரரே என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். ஒரே சகோதரத்துவத்தைச் சேர்ந்தவர்கள் நீங்கள! ஒருவருடைய பொருளை அவர் மனப்பூர்வமாகக் கொடுத்தாலன்றி, மற்றவர் எடுப்பது (ஹராம்) தடுக்கப்படுகிறது. அநியாயம் செய்வதிலிருந்து கவனத்துடன் விலகிக் கொள்ளுங்கள். உங்களிடம் இரு பெரும் பொக்கிஷங்களை வி;டுச்செல்கிறேன். அவைகளை பின்பற்றும் வரையில் வழி தவறமாட்டீர்கள். முதலாவது எனது திருவேதமான திருக்குர்ஆன!இரண்டாவது இறைவனது தூதரான எனது வாழ்கை நெறிகள் (ஸுன்னத்)!

7.மக்களே! எனக்குப்பிறகு எந்த ஒரு இறைதூதரும் (நபியும்) இல்லை. உங்களுக்குப்பின் எந்த ஒரு சமுதாயமும் வரப்போவதில்லை. தெரிந்து கொள்ளுங்கள்! உங்களைப்படைத்துக் காக்கும் உங்கள் இறைவனையே வணங்குங்கள். உங்களுக்குக் கடமையாக்கப்பட்ட ஐவேளைத் தொழுகைகளை சரிவர நிறைவேற்றி வாருங்கள். ரமளான் (என்னும் புனித) மாதத்தில் நோன்பு நோற்று வாருங்கள். உங்கள் செல்வத்துக்குரிய ஸகாத்தை (கணக்கிட்டு) உங்ளைப் பரிசுத்தப் படுத்துவதற்காக வழங்கி வாருங்கள். உங்கள் இறைவனின் இல்லத்திற்குச் சென்று ஹஜ்ஜுக் கடமையையை நிறைவேற்றி வாருங்கள். உங்களை ஆளும் தலைவர்களுக்குக் கட்டுப்படுங்கள். இவற்றால் நீங்கள் உங்களுக்காகச் சித்தப்படுத்தப்பட்டுள்ள சுவனத்திற:குச் செல்வீர்கள்.

8.மக்களே! உங்கள் இறைவனை மிக விரைவில் நீங்கள் சந்திப்பீர்கள். அவன் உங்கள் செயல்கள் அனைத்தையும் பற்றி விசாரணை செய்வான். எனக்குப்பிறகு நீங்கள் உங்ளுக்கிடையே கொலைக் குற்றம் புரிந்து வழிகேடர்களாக மாறிவிடவேண்டாம். அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக சைத்தான் உங்களின் இந்த பூமியில் அவனை வணங்குவதைக் குறித்து (ஏமாற்றமடைந்து) முற்றிலும் நிராசையடைந்து விட்டான். ஆயினும் நீங்கள் மிக இலேசாகக் கருதும் செயல்களில் அல்லாஹ்வுக்கு மாறு செய்யவைத்து சைத்தானுக்கு (உடன்பட்டு) தலைவணங்குவீர்கள். அதன் மூலம் அவன் மகிழ்சியடைவான். ( எந்தவகையிலும் சைத்தானியச் செயல்களுக்கு இசைந்துவிடாதீhகள்)

9.மக்களே! அறிந்து கொள்ளுங்கள!. உங்கள் இறைவன் ஒருவனே! உங்கள் தந்தையும் ஒருவரே!இறையச்சம் கொண்டோரைத்தவிர, 'அரபிகள் அஜமி (அரபியல்லாதார்)களை விட உயர்ந்தோருமல்ல. அதுபோல் அஜமிகள் அரபிகளைவிட உயர்ந்தோருமல்ல. வெள்ளை நிறத்தவர் கறுப்பு நிறத்தவரை விடவோ, கறுப்பு நிறத்தவர் வெள்ளை நிறத்தை விடவோ சிறந்தோருமல்ல. அனைவரும் ஆதமுடைய மக்களே! அந்த ஆதம் மண்ணால் படைக்கப்பட்டவரே... (ஜாதித்திமிர், நிறத்திமிர்,குலத்திமிர் அனைத்தையும் இதோ எனது காலின் போட்டு மிதிக்கிறேன்.) சொற்பொழிவை முடித்த வள்ளல் பெருமானார்(ஸல்) வெள்ளம்போல் திரண்டிருந்த கூட்டத்தினரை நோக்கிக் கேட்டனர்.

10.( மக்களே! ) இறைவனது கட்டளைகளை நான் உங்களுக்கு அறிவித்து விட்டேனா? இறைவன் எனக்களித்த தூதை நிறை வேற்றிவிட்டேனா? என என்னைப்பற்றி உங்களிடம் விசாரிக்கும் போது), இறுதித் தீர்ப்பு நாளில் என்ன பதில் கூறுவீர்கள்?'நிச்சயமாக (இறைவனது கட்டளைகளை) எங்களுக்கு) அறிவித்துவிட்டீர்கள்! இறைவன் தங்களுக்கு வழங்கிய தூதுவத்தை (நபித்துவத்தை) முழுமையாக நிறைவேற்றிவிட்டீர்கள்! எங்கள் வாழ்வுக்குத் தேவையான அனைத்து அறிவுரைகளையும் வழங்கிவிட்டீர்கள். என்றும் சாட்சியம் கூறுவோம்.!' அந்த மாபெரும் மனிதக்கடலிலிருந்து ஒருமுகமாக வான்முட்ட எழுந்தது இந்தப் பேரொலி.

இதைக்கேட்ட இறுதித்தூதர் (ஸல்) அவர்கள் வானத்தை நோக்கி தங்களது திருக்கரங்களை உயர்த்தி,' அல்லாஹும்மஷ்ஹது! அல்லாஹும்மஷ்ஹது!! அல்லாஹும்மஷ்ஹது!!! இறைவா!நீயேஇதற்கு சாட்சி! இறiவா!நீயே இதற்கு சாட்சி! இறைவா! நீயே இதற்கு சாட்சி! என்று மும்முறை முழங்கினார்கள்.
மேலும் இங்கு வந்திருப்பவர்கள், வராதவர்களுக்கும் என்னுடைய இந்தச் செய்திகளைத் தெரிவித்துவிடுங்கள். ஏனெனில் நேரில் கேட்போரைவிட கேள்விப்படுவோரில் சிலர் நன்கு விளக்கமுடையோராக இருப்பர். (ஆதார நூற்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூது, திர்மிதி,முஸ்னது அஹ்மது, இப்னு ஜரீர்,இப்னுஹிஷhம்,ரஹமத்துன் லில் ஆலமீன், முஹம்மது ரஸூலுல்லாஹ்

Posted by kottikidakuthu
Link Clicked :

ஆலயங்களில் - சிறு தெய்வத்தை கூறி "உயிர் கொலை" - சிந்தியுங்கள்!!

அன்பு உடையவர்களே ,
  • முஸ்லிம் சகோதர்கள் பள்ளிவாசலில் உயிர் இனங்களை பலி இடுவதில்லை .
  • கிறிஸ்துவ சகோதர்கள் சர்ச்சில் , உயிர்களை பலி இடுவதில்லை .
  • ஆனால் , சிறு தெய்வ வழிபாடு என்ற பெயரால் ஆடு , மாடு , கோழி முதலான உயிர் இனங்களை பலியிட்டு , கோயிலை கொலை களமாக்கும் கொடுமை இந்து மக்கள் பலரிடம் எப்படி புகுந்ததோ? ( கோயிலா !! கொலை களமா!!) சிந்தியுங்கள்!!
=========================================
(வள்ளலாரின் , பிள்ளைப் பெரு விண்ணப்பம் )
(3473).
துண்ணெனக் கொடியோர் பிறவுயிர் கொல்லத் தொடங்கிய போதெலாம் பயந்தேன்
கண்ணினால் ஐயோ பிற உயிர் பதைக்கக் கண்ட காலத்திலும் பதைத்தேன்
மண்ணினில் வலையும் தூண்டிலும் கண்ணி வகைகளும் கண்ட போதெல்லாம்
எண்ணி என் உள்ளம் நடுங்கிய நடுக்கம் எந்தை நின் திருவுளம் அறியும்"
===========================================
வள்ளலார், இறைவன் பெயரால், ஆலயங்களில் உயிர் பலி கூடாது என "எச்சரிக்கை" கொடுகின்றார்கள்.

Anbudan,
Vallalar Karthikeyan

ராணி எலிசபெத் பர்தா போட வேண்டும்-பிரிட்டன் முஸ்லீம் தலைவர்!

லண்டன்: பக்கிங்காம் அரண்மனையை மசூதியாக மாற்ற வேண்டும். ராணி எலிசபெத் இனிமேல் வெளியே போனால் பர்தா போட்டுக் கொண்டுதான் போட வேண்டும் என்று இங்கிலாந்தைச் சேர்ந்த முஸ்லீம் தலைவர் ஒருவர் கூறியுள்ளதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

ஷரியா ஆதரவு இஸ்லாம்4யுகே என்ற அமைப்பின் செய்தித் தொடர்பாளரான அஞ்சம் செளத்ரி என்பவர் இதுகுறித்துக் கூறுகையில், ராணி எலிசபெத் வெளியே போக விரும்பினால் அவர் பர்தா அணிந்து கொண்டுதான் போக வேண்டும்.

பக்கிங்காம் அரண்மனைக்கு அருகே உள்ள சாலையை மஸ்ஜித் சாலை என மாற்ற வேண்டும். பக்கிங்காம் அரண்மனையை மசூதியாக அறிவிக்க வேண்டும்.

இங்கிலாந்தில் ஷரியா சட்டத்தை அமல்படுத்த வேண்டும். பக்கிங்காம் அரண்மனையில் மசூதிகளில் உள்ளதைப் போன்ற டூம்கள் அமைக்க வேண்டும். ஷரியா சட்டம் வந்து விட்டால் இதெல்லாம் தானாகவே வந்து விடும்.

ஷரியா சட்டத்தை அமல்படுத்திய பின்னர் ராணியின் அனைத்து அதிகாரங்களையும் பறித்து விட வேண்டும். ஷரியா சட்டப்படி ராணிக்கு எந்த அதிகாரமும் இருக்காது.

இந்த ஆண்டுக்குள் ரோம் நகரத்திற்கும், வெள்ளை மாளிகைக்கும், பக்கிங்காம் அரண்மனைக்கும் பெரும் சரிவு ஏற்பட்டு அவை செல்வாக்கிழந்து போய் விடும் என்று கூறுகிறார் அஞ்சம்.

இறையடியார்களுக்கு பணம் ஒரு பொருட்டல்ல!-

பணத்தைத் துச்சமாக மதித்த ஞானி ஒருவர், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தார். அவரது பெயர் ஜூனைதுல் பக்தாதி (ரலி). இவரது சீடர் ஒருவர் ஞானிக்கு ஒருமுறை 500 பொற்காசுகளைக் காணிக்கையாக அளிக்க முன்வந்தார்.
ஞானி கேட்டார்.
"அன்புச்சீடரே! தங்களிடம் இவ்வளவு தான் இருக்கிறதா? இன்னும் இருக்கிறதா?" என்று.
"நிறைய இருக்கிறது, ஏன் கேட்கிறீர்கள்? ரலி அவர்களே!" என்ற சீடரிடம், "அதிருக்கட்டும். உங்களுக்கு அந்தச்செல்வம் போதுமா? இன்னும் தேவையிருக்கிறதா?" என்றார் ஞானி.
"ஆம், நான் இன்னும் பொருள் சேர்க்க ஆசைப்படுகிறேன்," என்றார் சீடர்.
"அப்படியானால், என்னை விட உங்களுக்கு பணத்தேவை அதிகமாக இருக்கிறது. இதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். என்னிடம் இப்போதும் பணமில்லை. இனி வேண்டும் என்ற எண்ணமுமில்லை," என்றார் ஞானி.


இறைத்தொண்டு செய்பவர்கள் தங்களை முழுமையாக இறைவனிடம் அர்ப்பணித்துக் கொள்கிறார்கள். அவர்களது தேவை மிகவும் குறைவாகவே இருக்கும்.

by Rupa

இஸ்லாம்->பாலாக இல்லாமல் நெய்யாக மாறுங்கள்


உழைப்புக்கு எப்போதுமே மதிப்பு அதிகம். அதனால் உழைக்க அஞ்சக்கூடாது என்று சூஃபி ஞானி அறிவுரை வழங்குவார்.

அவரது அறிவுரையைக் கேட்பவர்கள், அவரவர் மனப்பக்குவத்திற்கேற்றபடி அந்த அறிவுரையை எடுத்துக் கொண்டார்கள். ஆனால், பொதுவாகவே உழைப்பின் பரிமாணத்தையும், அதற்குக் கிடைக்கக் கூடிய பலன் மதிப்பையும் ஒப்பிட்டுப் பார்த்து, தம் உழைப்புக்கு சமமானதாக அந்தப் பலன் இல்லை என்று சொல்லி வருத்தப்பட்டுக் கொண்டார்கள்.

குறிப்பிட்ட சில இளைஞர்கள், எதற்காக உழைப்பானேன், பலனே இல்லை என்று வருந்துவானேன் என்று கூட சிந்திக்க ஆரம்பித்தார்கள்.

அதுபோன்ற எண்ணம் கொண்ட இளைஞர்களை அடையாளம் கண்டு கொண்ட சூஃபி ஞானி, அவர்களை கடைத்தெருவிற்கு அழைத்துச் சென்றார்.

அங்கே ஒரு கடையில் பால், வெண்ணெய், நெய் போன்ற பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தார்கள்.

அவர்களிடம், இந்த பால் எவ்வளவு நாள் கெடாமல் இருக்கும்? என்று ஞானி கேட்டார். அதற்கு, கடைக்காரர், எவ்வளவு நாளா காலையில் கறந்த பால் மதியத்துக்குள் பயன்படுத்தவில்லை என்றால் கெட்டுவிடும் என்றார்.

பக்கத்திலிருந்த நெய்யை காண்பித்து, இது எத்தனை நாள் கெடாதிருக்கும் என்று கேட்டார். சுமாராக ஒரு மாதம் வரை கெடாது என்றார் கடைக்கார்.

சரி நெய் எப்படி தயாரிக்கப்பட்டது என்று கேட்டார் ஞானி. பாலைக் காய்ச்சி, ஆற வைத்து, அதில் சிறிது மோர் சேர்த்து, தயிராக்கி, அந்தத் தயிரைக் கடைந்து, வெண்ணெய் எடுத்து, அந்த வெண்ணையைக் காய்ச்சி நெய் தயாரிக்கப்படுகிறது என்று விளக்கும் கிடைத்தது.

அப்படியா, சரி பால் என்ன விலை, நெய் என்ன விலை என்றார் சூஃபி ஞானி. பால் ஒரு லிட்டர் பத்து ரூபாய், நெய் ஒரு லிட்டர் நூற்றைம்பது ரூபாய் என்றார் கடைக்காரர்.

உடனே ஞானி தான் அழைத்து வந்திருந்த இளைஞர்களைப் பார்த்து, சும்மா உட்கார்ந்திருந்தால் இந்த பாலின் நிலையில்தான் இருப்பீர்கள். ஆனால் சிரமப்பட்டு கடினமாக உழைத்து முன்னேறினால் நெய்க்கு ஈடான மதிப்புக் கிட்டும் என்றார்.

இளைஞர்களும் தங்களது எண்ணங்களை மாற்றிக் கொண்டு நல்வழியில் சென்றனர்.

இஸ்லாம்->சாப்பிடும் முன் கவனிக்க வேண்டியவை


சாப்பிடுவது, தண்ணீர் குடிப்பது உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பாக, நபிகள் நாயகம் (ஸல்) கீழ்க்கண்ட விதிகளை கூறியுள்ளார்.

அதாவது, இரவில் பட்டினியாக இருக்காதீர்கள். பட்டினி கிடப்பதால் எளிதில் முதும¨ அடைந்துவிடுவீர்கள்.


மூச்சு விடாமல் தண்ணீர் குடிக்காதீர்கள். இரண்டு அல்லது மூன்று முறை மூச்சுவிட்டு குடிப்பதும், குடிக்கும்போது பிஸ்மில்லாஹ் (எல்லாம் இறைவனால் நடக்கிறது) என்று கூறி குடியுங்கள்.

குடித்த பிறகு அல்ஹம்துலில்லாஹ் (இறைவனுக்கு நன்றி) என்று கூறுங்கள்.

இடது கையால் உண்ணவோ நீர் அருந்தவோக் கூடாது. ஏன் என்றால், ஷைத்தான் அப்படித்தான் செய்யும்.

உணவில் வீண் செலவும் ஆடம்பரமும் வேண்டாம். முடிந்தவரை உணவை தர்மம் பண்ணுங்கள்.

வயிறு நிறைய சாப்பிட்டீர்களானால், இறுதிக் காலத்தில் சாப்பிட முடியாமல் கஷ்டப்படுவீர்கள்.

இறைச்சி சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளாதீர்கள். தினமும் இறைச்சியைத் திண்ணும் குடும்பத்தார் மீது இறைவன் கோபமடைகிறான்.