பழமொழிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பழமொழிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பொன் மொழிகள்- பழமொழிகள்- ஆன்மீக மொழிகள் -2

வாழ்வது
சிலகாலம்
உள்ளம் அழுதிடினும்
உதடு சிரிக்கட்டுமே!

”நாம் இந்தியாவுக்கு மிகவும் கடன் பட்டுள்ளோம். எண்களைக் கொண்டு எண்ணச் சொல்லிக்
கொடுத்தவர்கள் அவர்கள்தாம். அது இன்றி நாம் மிகப்பெரிய அறிவியல்
கண்டுபிடிப்புகளையெல்லாம் கண்டுபிடித்திருக்க இயலாது”
-ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை.
முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.

வாழ்க்கை!!
ஓராயிரம் கற்பனைகளும்
ஒன்று இரண்டு நிஜங்களும்

என்றும் நினைவில் கொள்.
மனிதனாகப் பிறந்தவன் பயனின்றி அழியக்கூடாது
-கார்ல் மார்க்ஸ்

தோழர்களே!
பயணம் போவோம்!
நாட்களை நம்பியல்ல,
நம்மிரு தோள்களை நம்பி!

சிறு பாறைகளை
அகற்றிவிட்டால்
சிற்றோடைக்கு
சலசலக்கும்
இன்னோசை உண்டோ?

காண்பது அனைத்தையும்
சந்தேகம் கொண்டு பார்
-லெனின்

செய்ய முடிந்தவன் சாதிக்கிறான்,
செய்ய முடியாதவன் போதிக்கிறான்.
-பெர்னாட்ஷா

வெற்றியை நோக்கிப் பற!
பறக்க முடியாவிட்டால் ஓடு!
ஓட முடியாவிட்டால் நட!
நடக்கவும் முடியாவிட்டால் ஊர்ந்து செல்.
ஆனால், எப்படியாவது நகர்ந்துகொண்டே இரு.

நான் சாக்கடையில்
விழுந்து கிடக்கிறேன்.
என் கண்கள்
நட்சத்திரங்களில்.

ஒரு மனிதனின் வாழ்க்கையில்
நன்மை செய்தலே
உண்மையான இன்பம் அளிக்கும் செயல்.
- சர் பிலிப்சிட்னி

"ஒரு நல்ல நூல்
ஒரு நல்ல மனிதனுக்கு நல்ல சொத்தாகும்.
- வில்லியம் ஹாஸ்விட்

"மிக அற்பமான விஷயங்களைப் பற்றி
அதிகமாக அறிந்து கொள்கிறவனே நிபுணன் ஆகிறான்.
- சாமுவேல் பட்லர்.

"மகிழ்ச்சி என்பது நல்ல ஆரோக்கியமும்
குறைந்த ஞாபக சக்தியையும்விட வேறொன்றுமில்லை."
-ஆல்பர்ட் ஸ்வேசர்

எண்ணத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் எண்ணங்கள்தான் சொற்களாகின்றன.
சொல்லில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் சொற்கள்தான் செயல்களாகின்றன.
செயலில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் செயல்கள்தான் பழக்கங்களாகின்றன.
பழக்கத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் பழக்கங்கள்தான் ஒழுக்கங்களாகின்றன.
ஒழுக்கத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் ஒழுக்கம்தான் உங்கள் வாழ்வை வடிவமைக்கின்றது!”
-அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

கடுமையான கஞ்சத்தனம்
தகுதியற்ற தற்பெருமை
எல்லையற்ற பேராசை
இந்தமூன்றும் மனிதனை நாசமாக்கிவிடும்
-முகமதுநபி

வாழ்க்கையில் வெற்றி பெற மூன்று வழிகள் உள்ளன.
பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.
பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்
பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.
-வில்லியம் ஷேக்ஸ்பியர்

வீட்டுக்குள் இருக்கும் போது
ஹிந்து, முஸ்லீம், கிறிஸ்டியனாக இரு
வெளியில் வரும் போது மனிதனாக இரு.

தங்கள் கால்களால் பறவை சிக்கிக் கொள்ளும்;
தன் நாவினால் மனிதன் சிக்கிக் கொள்வான்
-தாமஸ் புல்லர்

எல்லோரையும் நம்புவது அபாயகரமானது.
ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது
- ஆப்ரகாம் லிங்கன்

பேசும்முன் கேளுங்கள்,
எழுதுமுன் யோசியுங்கள்,
செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்

உதவும் கரங்கள்
ஜெபிக்கும் உதடுகளைவிடச் சிறந்தது.
- அன்னை தெரஸா.

என்னால் முடியும் என்பது தன்னம்பிக்கை.
என்னால் மட்டுமே முடியும் என்பது அகம்பாவம்.

கற்றுக்கொள்ள வேண்டுமா? முதலில் அறிந்ததை சொல்லிக்கொடு!! கற்றுக்கொள்வாய்!!!
பெற்றுக்கொள்ள வேண்டுமா? முதலில் முடிந்ததை அள்ளிக்கொடு!! பெற்றுக்கொள்வாய்!!!

முயலும் வெல்லும்!
ஆமையும் வெல்லும்!!
முயலாமை வெல்லாது!!!

சுவர்க்கத்தில் என்னைச்
சிறை வைத்தாலும்,
நான் அதன் பளிங்குச் சுவர்களைத்
தாண்டி வெளியேறவே
விரும்புவேன். எனக்குச் சுதந்திரமே, தேவை - டிரைடன்

ஞானமே முக்கியம்,
ஞானத்தைச் சம்பாதி;
என்னத்தைச் சம்பாதித்தாலும்
புத்தியைச் சம்பாதித்துக்கொள்.
-பைபிள்

மனிதனின் மனசாட்சி
தெய்வத்தின் குரல்
-பைரன்

ஒரே சமயத்தில் இரண்டு வேலை செய்ய நம்மில் பலருக்குத் தெரியும்.
ஒரு சமயத்தில் ஒரே ஒரு வேலை செய்வதுதான் கடினமானது.
- மெக்லாலின்.

நட்பு என்பதும் நம்பிக்கை
கற்பு என்பதும் நம்பிக்கை
முயற்சி என்பதும் நம்பிக்கை
நாம் மூச்சு விடுவதும் நம்பிக்கை
-கவிஞர் வைரமுத்து

எவரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்;
எதிர்பார்த்தால் இறுதிவரை
எதையும் சாதிக்காமலே போய் விடுவீர்கள்!
-எட்மண்ட் பர்சி

மரியாதைக்கு விலை கிடையாது.
ஆனால் அது அநேகரை விலைக்கு வாங்கும்
-மாண்டேகு

ந‌ல்ல‌வ‌னுக்கு நலம் ந‌ட‌க்கும்
என மட்டும் ந‌ம்பாது
வ‌ல்ல‌வனாயும் வாழ்ந்துவிடு பாப்பா
-பாரதியார்

“ஊக்குவிக்க ஆளிருந்தால்
ஊக்கு விற்கும் ஆள் கூடத்
தேக்கு விற்பான்!”
-கவிஞர் வாலி

ஓடத் தொடங்குமுன்
நடக்க பழகிக்கொள்வோம்.

ஒரு விளக்கு இன்னொரு விளக்கை
ஏற்றுவதால் அதற்கு இழப்பு ஒன்றும் இல்லை.

ஒருவன் கற்பிக்கும் போது
இருவர் கற்றுக்கொள்கின்றனர்.
-ராபர்ட் ஹாஃப்

புற்கள் தாக்குபிடிக்கும்
புயலில் புன்னைமரங்கள் வீழ்ந்துவிடுகின்றன.

வெண்ணெயை உருக்கும்
அதே கதிரவன் தான்
களிமண்ணை இறுக்கவும் செய்கின்றது.

அன்பாயிருங்க,
அதுக்குனு அடிமையாயிடாதீங்க
இரக்கம் காட்டுங்க,
பாத்து ஏமாந்திடாதீங்க.

நீ திருந்து..
நாடே திருந்தும்…

தெய்வம் காட்டுமே தவிர
ஊட்டாது.

God helps those who help themselves

அதிக உயரங்களை எட்டுவதற்கு உதவும் நண்பரைப் பெற்றிருப்பது சிறந்தது.
ஆனால், அதிக உயரங்களிலிருந்து விழும்போது
தாங்கிப் பிடிக்கும் நண்பரைப் பெற்றிருப்பது,
கடவுளின் பரிசு.

நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது, நீ யாரை விரும்புகிறாயோ
அவரை நினைத்துக்கொள்வாய்!
நீ துயரத்தில் இருக்கும்போது,உன்னை யார் விரும்புகிறாரோ
அவரை நினைத்துக்கொள்வாய்!

வியர்வைத் துளிகளும் கண்ணீர்த் துளிகளும் உப்பாக இருக்கலாம்.
ஆனால், அவை தான் வாழ்வை இனிமையாக மாற்றும்.

"நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்…"
"நீ எதை அகத்தால் பார்க்கிறாயோ.. அதுவே புறமாக பரிணமிக்கிறது……."
"உன் மனத்தின் உயரமே… உன் வாழ்க்கையின் உயரம்…"

நீ மற்றவருக்கு வழிகாட்டி ஆவதற்காகப்
பிறந்திருக்கிறாய்.
ஏன் மற்றவர்களிடம் உன் வழிகாட்டியைத்
தேடிக் கொண்டிருக்கிறாய்?
இந்த உலகம்
உன் வெற்றிக் கதையைப் படிக்கக்
காத்துக்கொண்டிருக்கிறது.

வெற்றி என்பது என்ன?
உங்கள் கையொப்பம், ஆட்டோ கிராப் ஆனால் அதுவே வெற்றி.

வெற்றிக்குப் பிறகு
தொடர்ந்து உழைப்பதை நிறுத்த வேண்டாம்;
தோல்விக்குப் பிறகு
தொடர்ந்து முயல்வதை நிறுத்த வேண்டாம்!

நண்பனை காணாவிடத்திலும்,
ஆசானை எவிடத்திலும்,
மனையாளை பஞ்சணையிலும்,
வேலையாளை வேலை முடிவிலும் போற்றுக.

ஒன்றுக்குச் சான்றுகள் இல்லாமை என்பது
அது இல்லாமைக்குச் சான்றில்லை

"வலுவான விதியே!
ஒரே ஒரு கோடைகாலம் எனக்கு அளி!
மெலிதான கானங்கள் நிறைந்த ஒரே ஒரு
வசந்தம் எனக்குக் கொடு
அந்த கானங்களை நிரப்பிக் கொண்டபின்
விருப்பத்தோடு என் இதயம்
இறக்கத் தயார்”
-ஃப்ரெட்ரிக் ஹோல்டர்வன்

இன்பத்தில் சிரிப்பவன் ஏமாளி
கண்பார்த்து சிரிப்பவன் காரியவாதி
கோபத்தில் சிரிப்பவன் சிந்தனையாளன்
கொடுக்கும்போது சிரிப்பவன் சூழ்ச்சிக்காரன்

முதியோர் சொல்லும்
முதுநெல்லியும்
ஒரே மாதிரி.
முன்பு கசக்கும், பின்பு இனிக்கும்.

மனிதன்
உணவின்றி 40 நாட்களும்
நீரின்றி 3 நாட்களும்
காற்றின்றி 3 நிமிடமும் உயிர் வாழலாம்.
ஆனால் நம்பிக்கையின்றி 3 நொடிகூட வாழ இயலாது.

குழந்தையின் மழலை,
பைத்தியக்காரனின் பிதற்றல்,
மகானின் பொன்மொழி
இவற்றுக்கெல்லாம் பொதுவான ஒரு தன்மை உண்டு.இலேசில் புரியாது.

சிக்கல்கள் என்பவை, ஓடும் ரெயிலிலிருந்து பார்க்கும் மரங்களைப் போன்றவை.
அருகில் போனால் அவை பெரிதாகத் தெரியும்.
அவற்றைக் கடந்து சென்றால்
அவை சிறிதாகிவிடும்.
இதுதான் வாழ்க்கை!

நீங்கள் ஒரு வாய்ப்பைத் தவறவிட்டால்
உங்கள் விழிகளைக் கண்ணீரால் நிரப்பாதீர்கள்!
உங்கள் கண்ணீர்,
உங்கள் முன் உள்ள இன்னொரு வாய்ப்பை மறைத்துவிடும்!
அழகிய புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள்!

இளைஞனே!
ஓடுகின்ற கால்கள்
ஓய்வெடுக்கும் போது
நீ எடுத்துக்கொண்ட பயணம்
முடிந்திருக்க வேண்டும்!
வாழ்ந்த நாட்களை
திரும்பிப் பார்க்கும் போது
உன் பெயரை சிலர்
உச்சரிக்க வேண்டும்!
கோபுரங்களின் அழகை
அஸ்திவாரங்கள் தாங்குவது போல்
நீ பிறந்ததின் பயனை
ஊரறியச் செய்
- யாரோ

ஏதாவது ஒரு தரப்பில் சேருங்கள்.
நடுநிலைமை வகிப்பது அக்கிரமக்காரனுக்குத்தான் உதவியாக இருக்கும்.
அக்கிரமத்துக்கு உள்ளாகிறவனுக்கு உதவாது.
மௌனம் சாதிப்பது கொடியவனுக்கே ஊக்கம் அளிக்கும்.
கொடுமைக்கு உள்ளாகிறவனுக்கு ஊக்கமளிக்காது

- 1986-ல் சமாதான நோபல் பரிசு பெற்ற ஏலிவீசெல்

மனிதனுக்கு சரியான பொது அறிவு இல்லாமல் போகுமானால் எந்த அளவுக்கு விஞ்ஞானம் முன்னேறுகிறதோ அந்த அளவுக்கு அவன் துயரத்தையும் அனுபவிப்பான்.
- ஹோம்ஸ்.

தொலைதூர பார்வைகள் பார்க்கிறேன்.
சிலசமயம் சுவர்களையும் ஊடுருவி காண்கிறேன்.
என் கையின் ரேகைகள் மட்டும் புரியவில்லை இன்னும்.
-வாஜ்பாய்

மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள்

* மிகவும் மதிக்கப்பட வேண்டியவர்கள் - தாய்,தந்தை
* மிக மிக நல்ல நாள் - இன்று
* மிகப் பெரிய வெகுமதி - மன்னிப்பு
* மிகவும் வேண்டியது - பணிவு
* மிகவும் வேண்டாதது - வெறுப்பு
* மிகப் பெரிய தேவை - நம்பிக்கை
* மிகக் கொடிய நோய் - பேராசை
* மிகவும் சுலபமானது - குற்றம் காணல்
* கீழ்த்தரமான விடயம் - பொறாமை
* நம்பக் கூடாதது - வதந்தி
* ஆபத்தை விளைவிப்பது - அதிக பேச்சு
* செய்யக் கூடாதது - நம்பிக்கைத் துரோகம்
* செய்யக் கூடியது - உதவி
* விலக்க வேண்டியது - சோம்பேறித்தனம்
* உயர்வுக்கு வழி - உழைப்பு
* நழுவ விடக் கூடாதது - வாய்ப்பு
* பிரியக் கூடாதது - நட்பு
* மறக்கக் கூடாதது - நன்றி

இவைகளை மனிதர்கள் பின்பற்றினால் இருப்பதை விட சிறப்பாக வாழலாம்

பெண்களை ஆண்கள் காவல் புரிவதால்
பெண்மை தாழ்ந்ததன்று.
வன்மை இரும்புப்பெட்டி மென்மை தங்கத்தை காப்பாற்றுகிறது.
தங்கம் தாழ்ந்ததென உலகம் கருதுகிறதா?
- வாரியார்

உரோமானியப் பழமொழிகள்

பகிர்ந்து கொள்ளும்போது மகிழ்ச்சி இருமடங்காகிறது.
Happiness doubles up when you share it with others.
நமது முன்னோர்களிடமிருந்து நமக்குப் பெயர்கள்
கிடைக்கின்றன. நாம் செய்யும் நல்ல காரியங்களிலிருந்து நமக்குப் பெருமை கிடைக்கிறது. We inherit our names from forbears. We gain pride and fame from our own good deeds.
3. உங்கள் சினத்தை ஒரு மணித்துளி கட்டுப்படுத்தி நூறு
நாட்களின் வேதனையைத் தவிர்த்திடுங்கள். Contain your wrath for a minute and obviate pain for hundred days.
4.மனச்சான்றைத் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள். பிறகு நீங்கள் ஒருபோதும் அச்சப்படத் தேவையில்லை. Keep your conscience pure; fear does not bother you ever.
5.நீ மிகவும் நற்பேறு இடையவன் என்றால் உனக்கே உன்னைத் தெரியாது. நீ மிகவும் வாய்ப்பற்றவன் என்றால் உன்னை மறவர்களுக்குத் தெரியாது. If you are a lucky person you do not know yourself. If you are unlucky you are not known by others.
6. பாலங்களுக்கு மாற்றாகச் சுவர்களைக் கட்டுவதால் தான் மனிதர்கள் தனிமையில் தவிக்கிறார்கள். People suffer in solitarily when they build walls instead of bridges.
7. நீ நடாத இடத்திலிருந்து ஒருபோதும் பறிக்காதே. What you have not sown you have no right to reap.
8.அமைதியான மனங்கள், தலை அணிகளைவிட மேலானவை. A mind in peace is precious than a crown on head.
9.செய்யப்போகிற பெரிய காரியங்களைவிட செய்துகொண்டிருக்கும்
சிறிய காரியங்கள் சிறப்பானவை. Small things that you are doing sincerely are meritorious that big things you plan to do.
10.சிலர் சாவிற்கு மிகையாக அஞ்சுவதால் தான் இன்னும் வாழத் தொடங்காமலே இருக்கிறார்கள்.
We are afraid of starting life, as we fear death too much.

இரசியப் பழமொழிகள்

1, குழந்தைகளின் மனது ஈரமான சிமிட்டி போல. அதில் வீழ்கின்ற எதுவும் அடையாளத்தை ஏற்படுத்துகிறது. Mind of a child is like raw cement; what falls on it makes a mark.

2 எல்லோரும் ஒவ்வொரு நூலிழை கொடுத்தால் போதும். அவையெல்லாம் சேர்ந்து ஏழைக்கு ஒரு ஆடையாகும். Each one contributes a threat of yarn; together they make clothing for the poor.
3 மற்றவர்களை விட்த் தாந்தான் திறமைசாலி என்று சிந்திப்பது எமாற்றப்பட சுழுவான வழி. The quick way to get cheated is to deem that we are smarter than others.
4. உணவுக் கட்டுப்பாடே சிறந்த மருத்துவம். Judicious management of food is the best medication for body and mind.
5. முட்டாள் தன்னை அறிவாளி எனக் கருதுகிறான். அறிவாளி தன்னை ஒரு முட்டாள் என அறிந்துள்ளான். A fool assumes he is wise. A wise person knows his follies.
6. உங்களால் முடியாது எனப் பிறர் சொல்லும் நல்ல செயல்களைச் செய்வதில் தான் மிகுந்த மகிழ்ச்சி. The greatest in happiness is to perform good things others say are beyond your prowess.
7. கொடியவர்களின் அன்பு அவர்களின் வெறுப்பைவிடப் பேரிடர் விளைவிக்கும்.
Friendship of the wicked is more dangerous than their aversion.
8. மிச்சம்உள்ள வாழ்நாட்களில் முதல்நாள் இன்றுஎன அறிக. Know now today is the first day of the remnant part of our life time.
9. பணம் பேசும்போது உண்மை ஊமையாகிறது. Truth is benumbed when money speaks falsehood
10. சோம்பேரிகளின் நாக்கு ஒருபோதும் சும்மா இருப்பதிலை.
A tongue of laziness never keeps quiet

சப்பானியப் பழமொழிகள்

குறைக்கிற நாயால் வேட்டையாட முடியாது.
A barking dog can never succeed in hunting.
நல்ல குதிரைக்கு சாட்டையின் நிழல் போதும்.
A smart horse senses the shade of a whip and acts.
உண்மையான சொல் அழகாக இருக்காது. அழகான சொல் உண்மையாகவும் இருக்காது.
A word of truth may not be relished. A word of beauty may not be true.
மீனை மூடி வைப்பதுதான் பூனையை விரட்டுவதை விட நல்லது.
Instead of chasing away a cat it is wise to keep a fish protected.
பெரிய மரங்கள் காற்றின் பெருமைக்குச் சவால் விடுகின்றன.
A tree big and strong is a challenge to force of wind.
பழங்களைப் பார்த்த பிறகே மரத்தை மதிப்பிடுங்கள்.
See the fruits and then determine the worth of a tree.
இரத்தத்தை இரத்தத்தால் கழுவ முடியாது.
A stain of blood cannot be cleansed by blood.
தவறான செயல்கள் வாசனைப் பொருட்களைப் போன்றவை. ஒருபோதும் மறைத்து வைக்க முடியாது,
Deeds done wrong cannot be concealed as they smell like cents.
ஒரு எறும்பின் வழிபாடு கூட சுவர்கத்தை அடைகிறது.
True devotion of even an ant can reach heaven.
அழுக்கில் வேலை செய்தாலும் தூய வாழ்க்கை வாழமுடியும்.
Even one handling dirt can lead a clean life.

இத்தாலியப் பழமொழிகள்

கையுறை அணிந்த பூனை எலியைப் பிடிக்காது.
A cat that has glows on its feet does not catch a mouse.
எதிர்காலம் ஆபத்திற்குள்ளாகும்போது மட்டும்தான், ஒருவன் தன் கடந்த காலத்தைப் பற்றி வேதனைப் படுகிறான். A future apparent in gloom and danger, makes us realize and remorse of the past.
3.முட்டாள்கள் கூட்ட்த்தில் அறிவாளி கேலிக்குரியவன்.
A person of wisdom may become a laughing stock among fools lot.
4.உலகத்திலுள்ள இருட்டு முழுவதும் நினைத்தாலும் ஒரு சிறிய மெழுகுவத்தியின் ஒளியை அணைக்க முடியாது.
All darkness apparent in the universe cannot extinguish the light of a candle.
5.ஓவ்வொரு துயரத்திற்கும் இருபது நிழல்கள் இருக்கின்றன. அவற்றின் பெரும்பகுதிகளை நீங்களே தோற்றுவிக்கிறீர்கள்.
Each event of sorrow has 20 more shadows. Most of them originate from us.
6.தொலைவில் கரையைக் கண்டுவிட்ட ஒரு பூனையோ, நாயோ கூட ஒருபோதும் மூழ்கிச் செத்த்தில்லை.
Even a cat or a dog that sights a shore ahead does not take death by drowning.
7.ஒருமுறை துண்டிப்பதற்கு முன்பு மூன்றுமுறை அளந்து பார்த்து
விடுங்கள்.
Measure thrice before cutting a piece, once cut cannot be restored.
8.எந்த மனிதனும் அறிவாளியாகவே பிறப்பதில்லை.
No one is born a genius.
9.வாங்குபவர்களுக்கு நூறு கண்கள் வேண்டும். விற்பவர்களுக்கு ஒன்றும் வேண்டாம். The buyer needs thousand eyes; the seller none.
10.ஆசிரியர் என்பவர் தான் ஒளிபட எரிவதால் மற்றவர்களுக்கு வெளிச்சம் கொடுக்கும் மெழுகுவத்தியைப் போன்றவர்கள்.
A teacher is like a candle that enlightens others by burning itself.

ஆத்திரேலியப் பழமொழிகள்:

பசிக்கும் வயிற்றுடன் யாராலும் அறிவாளியாக முடியாது.
A stomach in fire allows no mind to gain wisdom.
நம் நண்பர்கள் இல்லாமல் நம்மால் வாழமுடியாது.
Life is a desert for survival when we are aloof from friends.
நீ தலையாட்டும்போது தலையாட்டுகிற நண்பன் உனக்கு வேண்டாம். We need none as friend who nods his head in unison with us.

எல்லாவற்றிற்கும் அவற்றிகென்றே தனி அழகு இருக்கிறது.
ஆனால் யாரும் அதனைப் பார்ப்பதில்லை.
Each object has its exclusive characteristic beauty; many fail to notice.
நாம் விரும்புவது நம்மிடம் இல்லையென்றாலும்
நம்மிடம் இருப்பதை நாம் விரும்பவேண்டும்.
When we do not have what we want, learn to love what we have.
மெதுவாக வாக்குறுதி கொடுங்கள். ஆனால் அதை
விரைவாக நிறைவேற்றுங்கள். Be cautious and slow in extending a promise; but be fast in fulfilling.
கடன் கொடுத்தவனுக்கு வாங்கியவனைவிட
நினைவாற்றல் மிகையாக உண்டு.
The one who lends has a stronger memory than who receives.
உன்னால் உன்னைக் கட்டுப்படுத்த முடிந்தால்
இன்த உலகத்தையே உன்னால் கட்டுப்படுத்த முடியும்.
Self control is powerful enough to grain control of the world.
ஒரு நல்ல சிரிப்பு ஒரு வீட்டின் சூரிய ஒளியாகும்.
A hearty laugh heralds sun light to the house.
இருப்பது எல்லாவற்றையும் செலவழித்து விடாதீர்கள்.
கேட்கும் அனைத்தையும் நம்பிவிடாதீர்கள். தெரிந்த
எல்லாவற்றையும் சொல்லி விடாதீர்கள். Spend not in whole,
what you have; believe not all you hear; Reveal not all that you know of.

அமெரிக்கப் பழமொழிகள்

எளிது என்று புரிந்துகொள்ளும் வரை
எல்லா வேலைகளும் கடினமானவைதான்.
Every task appears difficult until we learn the easy way to do it.
பரபரப்பான மனிதனுக்குக் கண்ணீர் சிந்த நேரம் இருக்காது.
The one actively absorbed in life has no time to shed tears
3. ஒரு முடி இழைக்குக் கூட அதனுடையதே
ஆன நிழல் உண்டு.
Every strand of hair has its own shadow
4. நீரும் நெருப்பும் நல்ல வேலைக்காரர்கள் தான்;
ஆனால் மோசமான மேலாளர்கள்.
Water and Fire are good servants; but poor managers.
5. பணத்தால் எதையும் வாங்கிவிடலாம் என்று
நினைப்பவர்கள், அதற்காக எதையும் செய்வர்.
Who think that money can buy everything do not hesitate
to do anything to acquire it.
6. ஒருமுறை ஏமாற்றியவன் எக்காலத்தும்
ஐயத்துடன் நோக்கப் படுகிறான்.
Once a cheat, is always looked upon as a suspect.
7. அமைதியான மனது இடி ஒலியிலும் உறங்காது.
A mind in peace is not disturbed even by thunder.
8. ஆட்டுக்குட்டியின் மரணம் ஓநாயின் வாழ்க்கை.
The carcase of a goat is the livelihood of a wolf
வலிதாக மீட்டுவது இனிமையான இசைய உருவாக்காது.
A string struck hard does not give a note of charm in music
சுன்னம் (0) எல்லாவற்றின் தொடக்கமும் முடிவுமாம்.
The sign ‘zero’ is the be all and end all of Space.

ஆப்பிரிக்கப் பழமொழிகள்

1. ஒரு நல்ல கூடு பறவைக்கு உணவு தருவதில்லை.
A fine cage or nest does not ensure food for birds.
2. ஒரு முட்டாளின் நாக்கு அவன் கழுத்தை அறுக்கும்
அளவிற்கு நிளமாக இருக்கும்.
A fool’s tongue is long enough to cut his throat.
3. பசித்த கரடி நடனமாடாது. A hungry bear does not dance in glee.

4. உறங்குகிற நரி கனவில் கோழிகளை எண்ணிக் கொண்டிருக்கிறது.
A fox asleep counts the hens to catch in its dreams.
5. அறிவுடையவனுக்கு ஒருபோதும் ஆயுதங்கள் வேண்டாம்.
A wise person does not need armour of weapons.
6. கோபம் கொண்டவன் வாயைத் திறக்கிறான். கண்களை மூடிக்கொள்கிறான்.
An angry one opens his mouth, but shuts his eyes.
7. வெளிப்படையான எதிரி ஏமாற்றும் நண்பனைவிட நல்லவன்.
An opponent in front is better than a deceitful friend behind.
8. ஒரு மரத்தில் உள்ள ஆப்பிள்களை நீங்கள் எண்ணிவிடலாம்;
ஆனால் ஒரு ஆப்பிளுக்குள் உள்ள மரங்களை எண்ணமுடியாது.
You can count the apples on a tree by not the trees within an apple.
9. ஒரு சிங்கமாக இறப்பது தான் கழுதையாக வாழ்வதைவிட நல்லது.
Better to die like a Lion than live like an Ass.
10. உழைக்க ஆயத்தமாக இல்லாதவன், வாய்ப்பின்மையைக்
குறித்துக் குறைபட்டுக் கொள்ளக்கூடாது.
Those unwilling to toil should not complain on lack of opportunities.

சீனத்துப் பழமொழிகள்

சீனத்துப் பழமொழிகள்: CHINEESE PROVERBS
1. திறமைசாலி பெரிய துன்பங்களைச் சிறிதாக்குகிறான்;
சிறய துன்பங்களை இல்லாமல் செய்கிறான்.
A clever one turns great troubles into tiny ones; and the tiny ones into none.
2. உதிர்கின்ற இலையைப் பார்த்து மரத்தில் உள்ள இலை சிறிக்கிறது;
தான் என்று உதிர்வோம் என்று அந்தப் பரிதாப இலைக்குத் தெரியாது.
A leaf on tree laughs at the one falling down,
but it does not know when it will be blown off.
3. ஒருகட்டுப் புத்தகம் ஒரு நல்லாசிரியருக்கு இணையாகாது.
A bundle of books can never match a good teacher.
4. புன்னகைக்கின்ற முகமற்ற ஒருவன் கடை திறக்கக் கூடாது.
One who lacks a smiling face should not open a vendors shop.
5. காதில் கிசுகிசுக்கின்ற ஒரு சொல் ஆயிரம் கல்களுக்கு அப்பாலும் கேட்கின்றது. A word whispered in the ears may resound beyond thousand miles
6. ஒரு சிரிய பரிசு பெரிய வாக்குறுதிகளை விட உயர்ந்தது.
A small gift is greater than a big promise.
7. எல்லாக் கயிற்றிற்கும் இரு முனைகள் உள்ளன.
Every rope has two ends.
8. திறமையான மனிதனுக்குப் பின்னால் எப்போதும் திறமையான
மற்ற மனிதர்கள் இருக்கிறார்கள்.
Behind an able one stand others able to perform.
9. தாகம் ஏற்படுவதற்கு முன்பே கிணறு தோண்டிவிட வேண்டும்.
Dig a well before you feel thirsty.
10. மற்றவர்களுக்காக வலை விரிப்பவன் தானே அதில் விழுகிறான்.
One who lays a net for others will fall in it unawares

அரேபியப் பழமொழிகள்:

அரேபியப் பழமொழிகள்: ARABIAN PROVERBS

1. உங்கள் நண்பர்களைக் கமுக்கமாகக் கண்டியுங்கள்.
வெளிப்படையாகப் பாராட்டுங்கள்.
Admonish your friends in privacy; praise them in public.
எப்போதும் உண்மையே பேசினால் உங்கள் நினைவாற்றலைப்
பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை.
Always speak the truth; you will never be concerned with your memory.
3. ஒவ்வொரு மாந்தரின் வாழ்க்கையும் இறைவனால்
எழுதப்பட்ட தேவதைக் கதைகள்தான்.
Every ones life is a fairy-tale written by the Almighty
4. பகிர்ந்து கொள்ளாத வரை மகிழ்ச்சி முழுமை யடைவதில்லை.
Happiness does not fulfil until it is shared with others.
5. உடல் மன நலம் உள்ளவர்களுக்கு நம்பிக்கை உண்டு;
நம்பிக்கை உள்ளவர்களுக்கு எல்லாமே உண்டு.
One who enjoys health gains hope; who possesses hope has everything.
6. பசி கற்சுவர்களை உடைக்கிறது.
Hunger breaks thro’ all stone walls.
7. தமக்குத்தான் மேலாளனாக இருப்பவர்
மற்றவர்களுக்கும் மேலாளர் ஆவார்.
One who is master of self gains mastery over others.
8. நீங்கள் நெடுங்காலம் வாழ வேண்டுமென்றால்
குறைவாகச் சாப்பிடுங்கள்.
To lengthen your life, lessen your meals.
9. மகிழ்ச்சிக்கான வழி மற்றவரை மகிழ்விப்பதுதான்.
The way to be happy is to make others happy.
10. இரகசியங்கள் ஒருபோதும் நெடுங்காலம் நிலைப்பதில்லை.
Secrets never gain a longer life-hold.

பன்னாட்டுப் பழமொழிகள்

பன்னாட்டுப் பழமொழிகள்: PROVERBS FROM ABROAD

1. பாபிலேனியப் பழமொழிகள்: BABILONIAN PROVERBS
அறிவாளி தன்னைத்தானே கோள்வி கோட்டுக்கொள்கிறான்.
முட்டாள் மற்றவர்களைக் கேள்வி கேட்கிறான்.
The wise direct their questions inwards; fools question others.
2. அழகற்ற முகம், மாசுபடிந்த மனத்தைவிட நல்லாது.
A face not so beautiful is better than a stained mind.
தன் வீட்டில் நிம்மதியாக இருப்பவன் அரசனாக இருத்தாலும்
வேளாளராக இருந்தாலும் மகிழ்ச்சி நிறம்பியவனாக இருப்பான்.
Be a king or a peasant, who are peaceful in their home are blissful in their life
4. அறிவாளிக்கு வயதாகாது.
A seer of wisdom does not feel aged.
5. ஒருமுறை பேசுவதற்குமுன் இருமுறை செவிமடுத்துக் கேளுங்கள்.
Listen well with your two ears before you utter a word from your mouth.
6. பாடக் கற்றுக்கொள்வதற்கு முன் நன்றாகப் பேசக் கற்றுக்கொள்ளுங்கள்.
Ere you try to tune a song, learn to speak well the worthy.
7. அன்பு உழைப்பை எளிதாக்குகிறது. துயரத்தை இனிமையாக்குகிறது.
Kindness of love renders toil easy and turns sorrows into sweetness.
8. எந்த நல்ல மனிதனும் திடீரென்று பணக்காரன் ஆகிவிட முடியாது.
One of decent manners cannot become suddenly rich.
9. நீர்த்துளி பாறையைத் துழைப்பது தன் வலிமையால் அன்று;
தொடர்ச்சியாகப் பாறைமீது விழுவதால்தான்.
It is not the strength of water drops, but their sustained fall that wears out rocks.
10. பொறாமை வாயில் வழியே உள்ளே வரும்போது
அறிவு சாளரம் வழியே வெளியேறுகின்றது.
As envy enters the front door, wisdom vanishes thro’ the window.

(நன்றி: தினமணி – சிறுவர் மணிக்கு)

விஞ்ஞானி ஆல்பிரட் ஐன்ஸ்டீன் கூறிய பொன்மொழிகள்.


01. யுத்தத்திற்கு எந்நாளுமே தேவையில்லை ! யுத்தமே அநாவசியமானது. நல்லவர் பலரது உயிரைக்காவு கொள்ளும் யுத்தம் அநாகரிகத்தின் அதிசய உருவமாகும்.
02. நல்லியல்புகள் பல கொண்ட மனிதத்தன்மைக்கு மாறானது யுத்தம். மனிதனை மனிதனாக வாழ விடாமல் மிருக இயல்புகளுக்கு ஆளாக்கும் யுத்தம் இன்றி வாழ்வதே அறிவுடைய செயலாகும்.
03. மனிதன் தான் விரும்பாத ஒன்றில் பற்றில்லாமல் வாழ அவனுக்கு உரிமையுண்டு.
04. உரிமைகள் அற்ற மனிதன் பொம்மையே. உரிமைகளுடன் வாழ்வதே எல்லையில்லாத இன்பத்தை தருவதாக அமையும்.
05. ஒருவன் எவ்வளவுதான் கல்வி மேம்பாடு உடையவனாக இருப்பினும், பிறருடைய உரிமைகளை மதிக்கத் தெரியாதவனாக இருப்பின் அவன் பயின்ற கல்வியால் ஆன பயன் எதுவும் இல்லை.
06. மாணவர்களிடம் மறைந்திருக்கும் உண்மையான திறமையை வெளிப்படுத்துவதே கல்வியின் நோக்கமாகும். மாறாக மாணவர் மண்டையில் எதையாவது திணிக்க முயல்வதல்ல கல்வி.
07. இராணுவ சர்வாதிகார ஆட்சி நடக்கும் நாட்டில் ஒரு போதும் குடியுரிமை பெறக்கூடாது. அந்த நாட்டில் குடியுரிமை இருந்தால் அதைத்தூக்கி வீசிவிட வேண்டும்.
08. இராணுவ சர்வாதிகார ஆட்சிக்கு எது அடையாளம் என்பதற்கு ஐன்ஸ்டைன் கூறிய உதாரணம். ஓர் இடத்தில் ஐஸ்பழம் விற்கும் கடை ஒன்றில் நல்ல வியாபாரம் நடக்கிறது. அதைப் பார்த்ததும் இராணுவ சர்வாதிகாரிகள் அதன் அருகில் தாமும் ஒரு கடையைப் போடுவார்கள். பின் தமது கடையில்தான் கண்டிப்பாக ஐஸ்பழழ் வேண்ட வேணும் என்பார்கள். அடுத்து மற்றக்கடையில் ஐஸ்பழம் வாங்கக் கூடாது என்று தடைவிதிப்பார்கள். பொது மக்கள் எப்போதுமே அப்பாவிகள் அவர்கள் உத்தரவுக்கு அடி பணிவார்கள். இராணுவ சர்வாதிகாரம் எல்லாவற்றையும் சுரண்டி தனது வாயில் போடும்.
09. ஆசிரியரைப் பொறுத்தவரை நான் ஒரு முட்டாள், உங்களைப் பொறுத்தவரை நான் ஓர் அறிவாளி என்னைப் பொறுத்தவரை நான் யாரென்று தேடிக் கொண்டிருக்கிறேன் சரியாகப் புரியவில்லை.
10. எப்படிப்பட்ட கொடிய தண்டனைகள் கிடைத்தாலும் உண்மையை மட்டுமே உரைக்கிற அற்புதமான பழக்கம் வரவேண்டும், அதுவே வாழ்க்கைக்கு அழகு.
11. குழந்தைகளின் மனவியல் தெரியாது கற்பிக்கும் ஆசிரியர்கள் ஏறத்தாழ அவர்களுடைய மனவியல்பை கொல்லும் கொலைகாரரே.
12. இந்த இராணுவ அணிவகுப்புக்கள் எதற்காக ? எங்கோ யாரையோ கொல்வதற்காகத்தானே.. இவைகள் இல்லாமல் வாழ முடியாதா?
13. கத்தோலிக்கர் என்ற சொல்லின் பொருள் பரந்த மனப்பான்மை உடையவர் என்பதுதான். ஆனாஸ் இரண்டாம் உலக யுத்த காலத்தில் ஜெர்மனியில் இருந்த கத்தோலிக்க பாதிரிமார் மதவெறி மிக்க கல்வியை கற்பித்த காரணத்தாலேயே நாஜிசம் தோன்றி உலகை அழித்தது. சர்வாதிகாரி ஹிட்லர் தோன்ற அக்கால கத்தோலிக்க ஆசிரியரே காரணம் என்பதால் ஜெர்மன் குடியுரிமையை தூக்கி வீசினார் ஐன்ஸ்டைன்.
14. கடவுள் இந்தப் பிரபஞ்சத்தை படைத்தது எப்படியென்ற இரகசியத்தை அறியவே வாழ்வு முழுவதும் போராடுவேன்.
15. ஜேர்மனியில் உள்ள பாடசாலைகளில் நிலவும் கண்டிப்பும், தண்டனையும் எனக்கு கல்வியை தரவில்லை மாறாக தலைவலியைத்தான் தந்தது.


நன்றி,
அலைகள்

பழமொழிகள்

திருப்தியுள்ள மனமே தீராத விருந்து.

பிறருக்கு நீ கொடுக்கும் பிச்சை, நீ பெருவது பேரின்பம்.

ஒரு நிமிடக் கோபம் ஓராயிரம் வருடப் புகழையும் அழித்துவிடும்.

உன் எதிரியின் புன் சிரிப்பை நம்பாதே!

உன் உள்ளம் எப்படியோ அப்படியே உலகம்.

தூய அன்பு அமைதிக்கு இருப்பிடம்.

ஒருவனால் செய்ய முடிந்ததை எல்லோராலூம் செய்ய முடியும்.

அதிகாரத்தினால் சாதிக்க முடியாததை அன்பினால் சாதிக்கலாம்.

கொடுக்காத கடன்கள் வாங்கிய பவங்கள்.

தாழ்விலே பெருமையும் வாழ்விலே தாழ்மையும் வேண்டும்.

வாழ்க்கையின் துன்பங்களுக்கு புகழ் ஓர் எளிமையான பிரதிபலன்.

வருமைல் நிறவு காண்பவனே மிகப்பெரிய பணக்காரன்.

பிள்ளை அருமை பெற்றவளுக்குத்தான் தெரியும்.

நாளைய வாழ்க்கை தாமதமானது, இன்றே வாழவும்.

நடத்தையே மனிதனை உருவாக்குகிறது.


செயலே புகழ் பேசும்.


அனுபவம் அறிவின் முகம் பார்க்கும் கண்ணாடி.

கேட்பதால் ஒருவர் கற்கிறார்.

உண்மையைவிட நம்பத் தகுந்த பொய்கள் உண்டு.

அறிவு தலைக்குக் கிரீடம், அடக்கம் காலுக்குக் செருப்பு!

தன்னை வெல்ல முடிந்தவனே மிகப்பெரிய வீரன்.

வீரன் வீழலாம், ஆனால் பணியமாட்டான்.

இனிய முகம் உறவை வளர்க்கும்.

செய்வதை திருந்தச் செய்.

இப்படியும் சில பழமொழிகள்

* எடிசன் வீட்டு ஏணிபடியும் ஷாக் அடிக்கும்

* ஊர் செல்லுக்கு குறுந்தகவல் அனுப்பினால் தன் செல்லுக்கு தானே வரும்

* ஒரு பொய்க்கு ஒரு மூட்டை பொய் பாலம்

* ஓடும் குதிரை ஓட்டத்தில் தெரியும்

* கார் ஓட டயரும் தேயும்

* சிகரெட் விரலளவு சீக்கு உடலளவு

* சைக்களுக்குத் தெரியுமா பெட்ரோல் வாசனை

* தான் ஓடாவிட்டாலும் தம் கடிகாரம் ஓடும்

* தீக்குச்சி தன் தலைக்கனத்தால் கெடும்

* துப்பாக்கி முனையைவிட பிரிண்டர் முனை பொரியது

* பந்தை காத்து கோல்கீப்பரிடம் கொடுத்தாற்போல

* மிதிக்க மிதிக்க சைக்களும் நகரும்

* முடியுள்ள போதே சீவிக்கொள்

* பழகின செறுப்பு காலை கடிக்காது

* மாத நாட்காட்டிக்கு ஒருமுறை கிழி தினநாட்காட்டிக்கு தினம்தினம் கிழி

* ஹெல்மெட் இல்லாதவன் பின்னே எமன் வருவான் முன்னே

பழமொழிகள் - ஆராய்ந்த பிறகு அனுபவிங்க

அர்த்தம் தெரியாமலே பழமொழிகளைப் பேசி வருகிறோம்.யாராவது கேட்டால் பழமொழி சொன்னா அனுபவிக்கனும், அதை விட்டுப் போட்டு ஆராயக் கூடாது என்று கமல் பாணியில் அடித்து விடுகிறோம்.சில பழமொழிகளும்,கூடவே வரும் ஆராய்ச்சியும்.

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளைத் தானே வளரும்.

இதை கேட்டவுடன் எல்லோரும் ஊர்ல இருகிற பிள்ளைகளுக்கு எல்லாம் சாப்பாடு போட்டால் உங்க பையன் வளர்ந்தப் பிறகு எங்க அப்பன் ஒரு ஏமாளி என்று முத்திரை குத்தி விடுவான். ஊரான் பிள்ளை என்றால் வேறு வீட்டில் இருந்து உங்கள் வீட்டிற்கு வந்த மனைவி.கர்ப்பமாக இருக்கும் போது நிறைய சாப்பிட கொடுத்தால் வயிற்றில் இருக்கும் குழந்தை தானே வளரும்.

புண்பட்ட நெஞ்சை புக விட்டு ஆற்று.

வருத்தமாக இருந்தால் புத்தகம்(புக) படித்து மனதை ஒரு நிலைக்கு கொண்டு வருவது.அதை இந்த காதலில் தோல்வி அடைந்த கைப்பிள்ளைகள் புண்பட்ட நெஞ்சைப் புகை விட்டு ஆற்று என்று மாற்றி விட்டார்கள்.நிறைய எழுதி முடிந்தால் நீங்கள் எழுதியதையே படித்து நன்றாக புக விட்டு ஆற்றுங்கள்.

ஆறிலும் சாவு,நூறிலும் சாவு.

எதற்கு எடுத்தாலும் இதை மேற்கோள் காட்டி பெரிய வீரனாக காட்டி கொள்வது.இதற்கு உண்மையான அர்த்தம் குந்தி கண்ணனிடம் பாண்டவர்களைப் போல கர்ணனையும் காப்பாற்ற வேண்டுகிறாள்.கண்ணனோ அவன் எந்த பக்கத்தில் இருந்து சண்டை இட்டாலும் அவன் மரிப்பான் என்று சொல்கிறார்.ஆறாக பாண்டவர்களிடம் இருந்தாலும் சாவுதான்.நூறாக கௌரவர்களிடம் இருந்தாலும் சாவுதான்.

தடுக்கி விழுந்து செத்தவனும் இருக்கிறான்,மலையில் இருந்து விழுந்து பிழைத்தவனும் இருக்கிறான்.

கால் தடுக்கி விழுந்தவன் அருவாமனையில் விழுந்து செத்துப் போகிறான்.மலையில் இருந்து விழுந்தவன் கீழே இருந்த தண்ணீரில் விழுந்து பிழைத்துக் கொள்கிறான்.

ஏழையாகப் பிறந்தாலும் பிறக்கலாம்,ஆனால் இளையவனாகப் பிறக்கக் கூடாது.

இதை எழுதியது மட்டும் நானில்லை(முன்னெச்சரிகை தான்).இது முந்தையப் பதிவான இதற்கு பதில்.

ராமன் மற்றும் லஷ்மணன் கடவுள் ஆனார்கள்.விபீஷணன் துரோகி ஆனான்.பரதன் தியாகி ஆனான். சத்ருகன் என்ன ஆனான். துரியோதனன்,துச்சாதனன் இவர்களைத் தவிர மிச்சம் இருக்கும் கௌரவ சகோதர்களில் பத்து பேரை சொல்ல முடியுமா.என் அப்பா கூட இளவல் தான்.அவர் இல்லாத போதுதான் பங்குப் பிரித்தார்கள்.இளையவனாக இருந்தால் பேர் கூட வெளியே தெரியாது.

பங்குசந்தையின் மன்னன் வாரன் பஃபெட்டின் புகழ் பெற்ற பழமொழி

குளத்துல தண்ணி வத்துனா தான் தெரியும்.யாரெல்லாம் கோமணம் கட்டி இருக்காங்கன்னு.கட்டாம இருக்காங்கன்னு

டிஸ்கி :

ஒரே அர்த்தம் தரும் மூன்று பழமொழிகள்.

அற்பனுக்கு வாழ்வு வந்தா அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்.

சிட்டுக்குருவி முட்டை போட்டுச்சாம்.அது *ண்டியப் பார்த்துப் பார்த்து மெச்சிகிச்சாம்.

அறியாதவன் அறிஞ்சிகிட்டானாம்.ஆம்பிளப்புள்ள பெத்துகிட்டானாம்.தொப்புள் கொடியை நறுக்கிறதுக்குப் பதிலா வேற எதையோ நறுக்கிட்டானாம்.

நான் பின்னூட்டம் போடுவதை தடை செய்து விட்டார்கள்.மேலே இருக்கும் மூன்றும் எனக்கு பொருந்தும்.(ஓவரா ஆட்டம் போட்டால்.....).

http://irumbuthirai.blogspot.com/2009/09/blog-post_02.html