கருத்துக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கருத்துக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

விஸ்வரூபம் மட்டும் ரீலிஸ் ஆகல்லன்னா.....?


விஸ்வரூபம் மட்டும் வெளியில் வரலன்னா.....?




உலக நாயகன் கண்டிப்பாக மீண்டு வருவார்.. மீண்டும் வரணும்......

முடியாது என்று இல்லை.தோல்வியே வெற்றியின் படிக்கட்டுகள்




ஸ்காட்லாந்து மன்னர் புரூஸ் தனது அரண்மனையில் உட்கார்ந்திருந்தார். நாட்டை இழந்தசோகம் அவர் முகத்தில் வலை பின்னியிருந்தது. ஏன்…? தோல்வி… தோல்வி… எல்லாப் போரிலும் அவருக்குத் தோல்விக்கு மேல் தோல்வி? மேலும் மேலும் முயன்று தோல்வி என்பதால் போர் முயற்சியைக் கைவிடலாமா என்று கவலையுடன் யோசித்தார். கன்னத்தில் கை வைத்த படியே மோட்டு வளையைப் பார்த்துக் கொண்டிருந்த மன்னருக்கு அங்கே ஒரு ஆச்சரியமான காட்சி காத்திருந்தது.
வீட்டு மேல் கூரையில் ஒரு சிலந்தி தனது எச்சிலை நூலாக்கி வலை பின்னிக் கொண்டிருந்தது. மிகமிக மெல்லிய நூல் இழை. அதில் தொங்கிக் கொண்டே தன் கால்களை அப்படியும் இப்படியும் அசைத்து அசைத்துத் தனது குடியிருப்பை… வலைப்பின்னலை உருவாக்கிக் கொண்டிருந்தது. சிலந்தி வலை அறுந்து அறுந்து போனாலும் கொஞ்சம் கூடக் கவலைப்படாமல், ஓய்ந்து விடாமல் பாய்ந்து பாய்ந்து வலை பின்னியது சிலந்தி. தோல்வி அந்தச் சிலந்தியைப் பாதிக்கவே இல்லை.


மன்னருக்குப் பொறி தட்டியது. இத்தனை தோல்விக்குப் பிறகும் தளராமல் சிலந்தி செயல்படும் போது, காரிய சாதனை செய்யும் போது நாம் இப்படித் தளர்ந்து போகலாமா என்று தன் உணர்வு பெற்றார். சிலந்தியின் முயற்சி அவரைச் சிந்திக்க வைத்தது! நாட்டை மீட்டு மீண்டும் அரியணை நாற்காலியில் ஏற வைத்தது! முடியாது என்று சிலந்தி கூட ஒதுங்குவது இல்லை. முதுகெலும்புடைய மனிதன் நாம் ஒதுங்கலாமா? நம்மால் முடியும்? முதலில் தோல்விகளையே சந்திக்க கூடும். பிறகு சிலந்தியை போல நாமும் நம் வாழ்வில் வெற்றி பெற முடியும்.   


Posted dan

கன்னியாகுமரி பற்றி அண்ணல் காந்தி அடிகள் எழுதியது......



பசியுள்ள மனிதன் நல்ல உணவை மனதார ருசிப்பதுபோல, பசியுள்ள
ஆன்மா மனமார்ந்த பிரார்த்தனையை ருசித்து அனுபவிக்கும்.


பிரார்த்தனையின் மந்திர சக்தியை அனுபவித்தவன்
சேர்ந்தாற்போல் நாட்கணக்கில் உணவின்றி வாழமுடியும். ஆனால்,
பிரார்த்தனையின்றி ஒரு விநாடி கூட வாழமுடியாது. ஏனெனில்
பிரார்த்தனையின்றேல், உள்ளத்தில் அமைதி இருக்க முடியாது.
எனது அனுபவத்தையும், எனது சகாக்களின் அனுபவத்தையுமே
இப்போது நான் கூறியுள்ளேன்.

உடுமலை நாராயண கவி.................பாடல் வரிகள்

பாடல் வரிகள் உங்களுக்காக  ...



கா கா கா கா கா கா
ஆகாரம் உண்ண எல்லோரும் ஒன்றாக
அன்போடு ஓடிவாங்க என்ற
அனுபவப் பொருள் விளங்க – அந்த
அனுபவப் பொருள் விளங்க – காக்கை
அண்ணாவே நீங்க அழகான வாயால்
பண்ணாகப் பாடுறீங்க
அண்ணாவே நீங்க அழகான வாயால்
பண்ணாகப் பாடுறீங்க – காக்காவென
ஒண்ணாகக் கூடுறீங்க – வாங்க
கா கா கா



சாப்பாடில்லாமே தவிக்குதுங்க ஜனங்
கூப்பாடு போட்டு மனம் குமுறுதுங்க
சாப்பாடில்லாமே தவிக்குதுங்க ஜனங்
கூப்பாடு போட்டு மனம் குமுறுதுங்க – உயிர்
காப்பாத்தக் கஞ்சித் தண்ணி ஊத்துங்க என்றால்
தாப்பாளப் போடுறாங்க பாருங்க – உயிர்
காப்பாத்தக் கஞ்சித் தண்ணி ஊத்துங்க என்றால்
தாப்பாளப் போடுறாங்க பாருங்க அந்த
சண்டாளர் ஏங்கவே தன்னலமும் நீங்கவே
தாரணி மீதிலே பாடுங்க – பாடும்
கா கா கா



எச்சிலை தனிலே எரியும் சோத்துக்கு
பிச்சைக்காரர் சண்டை ரோட்டிலே
பிச்சைக்காரர் சண்டை ரோட்டிலே ..ஏ
எச்சிலை தனிலே எரியும் சோத்துக்கு
பிச்சைக்காரர் சண்டை ரோட்டிலே
இளைத்தவன் வலுத்தவன் இனச்சண்டை பணச்சண்டை
இளைத்தவன் வலுத்தவன் இனச்சண்டை பணச்சண்டை
எத்தனனையோ இந்த நாட்டிலே எத்தனையோ இந்த நாட்டிலே
பட்சி ஜாதி நீங்க எங்க பகுத்தறிவாளரப் பாக்காதீங்க
பட்சி ஜாதி நீங்க எங்க பகுத்தறிவாளரப் பாக்காதீங்க
பட்சமா இருங்க பகுந்துண்டு வாழுங்க
பழக்கத்த மாத்தாதீங்க – எங்கே பாடுங்க




பாடல்: கா கா கா கா கா கா
வரிகள்: உடுமலை நாராயண கவி
படம்: பராசக்தி
பாடியவர்: சி.எஸ்.ஜெயராமன்
இசை: ஆர்.சுதர்சனம்
ஆண்டு: 1952 
Original source:   தமிழ்மணி



உடுமலை நாராயண கவி பற்றி..................

                        புகழ் உச்சியில் இருந்தபோதும் மிக எளிய வாழ்க்கை வாழ்ந்த உடுமலை நாராயணகவியார், தம் 82ஆம் அகவையில் - தி.பி. 2012 (23.05.1981)ல் உயிர்துறந்தார். அவர்தம் இறப்பிற்கு முன்பு எழுதி வைத்த இறுதி ஆவணத்தில், தாம் இறந்தபிறகு என்ன செய்யவேண்டுமென்பதைக் குறித்துள்ளார். அந்த ஆவணத்தில், ‘செத்த பிணத்தை வைத்துக் கொண்டு, இனிமேல் சாகும் பிணங்கள் கூத்தடித்துக் கொண்டிருப்பது அறியாமை; இந்த அறியாமையானது பணத்தின் அளவிலே விரிவடைகிறது, குறைகிறது. என்னைப் பொறுத்தமட்டில் இந்த அறியாமை வேண்டாம். உடலைவிட்டு உயிர் பிரியுமானால் அப்போதே காலத்தை வீணாக்காமல் குழியைத் தோண்டிப் புதைப்பதோ அல்லது எரிப்பதோ இந்த இரண்டில் ஒன்றைச் செய்திடுங்கள்! வேறு எந்தவகையான சடங்குகளும் தேவையில்லை. மீறிச் செய்வது அறியாமை. உங்களை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். எனக்காக ஒன்று செய்யவேண்டுமானால் அதை மட்டும் செய்யுங்கள்! உணவிலே எளிமை, உடையிலே எளிமை, கல்வியிலே மேன்மை இது போதுமானது. இதுதவிர வேறு எதையும் செய்யாதீர்கள். இந்த வீண்பெருமைகளை (டாம்பீகங்களை) எல்லாம் செய்து சீரழிந்து, மனத்துன்பங்களுக்கு ஆளாகி, என் பின்னோர்க்கு (வாரிசுகளுக்கு) இதைப் பழக்கி, அவர்களின் அறிவைக் கெடுத்துத் துன்பங்கட்கு ஆளாக்கி விட்டேன். இப்போது உணர்கிறேன். காலங்கடந்துவிட்டது. இனி ஒரு பயனும் இல்லை. கடைசியாக ஏதோ வைத்திருக்கிறேன். அதைக்கொண்டு உங்கள் மதிப்பைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்! இத்தனையும் கல்விக்குள்ளாக அடங்கியுள்ளது. ஆதலால் காலத்தை வீணாக்காமல் கவனத்தைக் கல்வியிலே செலுத்துங்கள்; இதுதான் என் கடைசி ஆசை!’ என்று எழுதிவைத்துள்ளார். காலத்தை வென்ற - வரலாற்றுப் புகழ்மிக்க எண்ணற்ற பாடல்களை எழுதி, தமிழ்க்குமுகத்திற்கு விழிப்புணர்வை ஊட்டிய உடுமலை நாராயணகவியாரின் மறைவு நமக்கெல்லாம் மிகப்பெரிய இழப்பாகும்.







அடிக்கும் பெண்கள்... அலறும் ஆண்கள்! இடிக்(தாய்)குலங்கள்!

பெண்களை ஆண்கள் அடிக்கும் வீட்டு வன்முறைக்கு எதிராக குரல் கொடுத்தது போக, தற்போது பின்னியெடுக்கும் பெண்களிடமிருந்து ஆண்களை காப்பாற்ற குரல்கள் எழ ஆரம்பித்துள்ளன.

மற்ற நாடுகள் எப்படியோ...? ஆனால் இந்தியா ஆணாதிக்க சமூகத்தைக் கொண்ட தேசம் என்றே பெண்ணுரிமைவாதிகளாலும், முற்போக்குவாதிகளாலும் வர்ணிக்கப்படுவதுண்டு!

ஆனால் அத்தகைய தேசத்திலும் சமீபகாலமாகவே பொய் புகார் கொடுத்து, கணவனை வரதட்சணை வழக்கில் உள்ளே தள்ளும் போக்கு ஒருபுறம் அதிகரித்துக்கொண்டிருக்க, மறுபுறம் பெண்களை பாதுகாக்க நிறைவேற்றப்பட்ட வீட்டு வன்முறைக்கு எதிரான சட்டத்திலும், ஏராளமான அப்பாவி ஆண்கள் கம்பி எண்ண வைக்கப்படுவதும் ஆங்காங்கே நடந்தேறிக்கொண்டிருக்கின்றன.

இதுபோக வழக்கு, வக்கீல் என்று இழுத்துவிடாமல், ' நானே டீல் பண்ணிக்கிறேன்' பேர் வழி என்று ஆண்களை பெண்கள் அடித்து துவைக்கும் சம்பவங்களும் ஆங்காங்கே அரங்கேறிக்கொண்டுள்ளன.

இந்நிலையில்தான் "பொறுத்தது போதும்; பொங்கி எழு தோழா!" என்ற ரீதீயில் ஆண்களின் உரிமைகளை பாதுகாக்கவும், ஆண்களை நியாயம் இல்லாமல் தண்டிக்கும், பெண்களிடம் இருந்து பாதுகாக்கவும் "ஆண்கள் உரிமை பாதுகாப்பு சங்கம்" என்ற புதிய சங்கம் சென்னையில் சமீபத்தில் துவக்கப்பட்டது.

இந்த சங்கம் துவக்கப்பட்டது தான் தாமதமாம். நான் முந்தி, நீ முந்தி என்று அடித்துபிடித்து ஆங்காங்கே ஆண்கள் ஆர்வத்துடன் இச்சங்கத்தில் தங்களை சேர்த்து கொண்டு வருகிறார்களாம்.

இதுபோக உலகம் முழுவதும் அடிவாங்கிக்கொண்டிருக்கும் (பெண்களிடம்தான்!) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆண்களையும், உறுப்பினர்களாக சேர்ப்பதற்கான முயற்சி வேறு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அக்கம்பக்கம் பார்த்தபடியே ( அவ்வளவு பயம்... வீட்டம்மா மீது!) கிசுகிசுப்பாக கூறுகிறார் மேற்படி சங்கத்தை சேர்ந்த நிர்வாகி ஒருவர்!

சரி இந்த கூத்து தமிழகத்தில் மட்டும்தானா என்றால். அதுதான் இல்லை. டெல்லி, நாக்பூர் போன்ற நகரங்களிலெல்லாம் கூட ஆர்ப்பாட்டம், பேரணி போன்றவற்றை நடத்தி ஆண்கள் தங்களது உள்ளக்குமுறல்களை கொட்டியிருந்தனர்.

பெண்களுக்கு அதிகாரம் கொடுத்து ஆண்களை அதிகாரமற்றவர்களாக மாற்றி விட்டனர்; "ஆண்கள் என்ன ஏ.டி.எம்., மிஷின்களா?" என்றெல்லாம் கூட ஆவேச முழக்கங்கள் வெளிப்பட்டன.

“கணவர் மீது பெண்கள் புகார் கொடுத்தால் 498 ஏ பிரிவின் கீழ் ஆண்கள் தண்டிக்கப்படுகின்றனர். எந்த விசாரணையும் ஆண்களிடம் நடத்தப்படுவதில்லை. இந்த சட்டம் பெண்களுக்கு ஆதரவானது என்பதை விட மனைவிகளுக்கான சட்டம் என்று தான் சொல்ல வேண்டும்" என்றெல்லாம் வேறு புலம்பல்கள் கிளம்பின.

பாவம்! அவங்களும் எவ்வளவு காலத்திற்குத்தான் வலிக்காத மாதிரியே நடிப்பாங்க...?! அதான் கிளம்பிட்டாங்க சங்கமும், கொடியுமாக...!

சரி இங்கத்தான் இப்படி புலம்பிக்கிட்டு இருக்காங்க என்று நினைத்தால், தற்போது ஆண்களின்
அலறல் சத்தம் வருவது இங்கிலாந்திலிருந்து...!

பி.எச்.டி வாங்கும் அளவுக்கு அப்படி ஒரு நுணக்கமாம் அந்த ஊர் பெண்கள் அடிக்கும் அடியில்!

நம்ம ஊரை மாதிரியே பொறுத்து பொறுத்து பார்த்து, கடைசியில் வெட்கத்தை விட்டு யாரோ ஒருவர், நண்பரிடம் இது குறித்து புலம்ப, அதைக்கேட்ட அந்த நண்பர், " உன் வீட்டிலுமா?" என கேட்க, "என்னது உன் வீட்டிலேயுமாவா... அப்ப நீயும் நம்ம கேஸ்தானா?" என வடிவேல் ரேஞ்சுக்கு கேட்க, இப்படியான குமுறல்கள் புகார்களாக உருவெடுத்து காவல்நிலையங்களை தட்டும் போக்கு சமீபகாலமாக அதிகரித்து வருகிறதாம்!

இங்கிலாந்து முழுவதுமே பரவலாக இவ்வாறு வீட்டு வன்முறை தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில், பாதிக்கப்பட்டவர்களில் 10 பேரில் 4 பேர் ஆண்களாக இருப்பது சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பொதுவாகவே வீட்டு வன்முறையால் உண்மையில் பாதிக்கப்படுவது பெண்கள்தான் என்ற அழுத்தமான நம்பிக்கை காவல்துறையினரிடம் உள்ளதாகவும், இதன் காரணமாகவே வீட்டு வன்முறையால் - அதாவது தனது மனைவி அடிப்பதை - பாதிக்கப்படுவது குறித்து ஆண்கள் புகார் தெரிவித்தால் அவர்களுக்கு நீதித்துறையிலும், காவல் துறையிலும் உரிய நியாயமோ, நீதியோ கிடைப்பதில்லை என்று கூறுகிறது அந்த ஆய்வறிக்கை!

கடந்த 2008 - 09 ஆம் ஆண்டுகளில் மட்டும் வீட்டு வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுமார் 41,000 ஆண்கள் வழக்கு தொடர்ந்துள்ளனராம்.அதே சமயம் பெண்கள் தொடர்ந்த வழக்குகளின் எண்ணிக்கை 2,700 தானாம்.

இதன் மூலம் இங்கிலாந்தில் வீட்டு வன்முறைக்கு பாதிக்கப்படுபவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஆண்களே என்பது அம்பலமாகியுள்ளது.

மேலும் குடும்ப வன்முறை தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகளிடத்தில், குடும்ப வன்முறையால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான் என்ற எண்ணம் ஆழமாக வேரூன்றி இருப்பதால், ஆண்களை அடித்து துன்புறுத்தும் மனைவிகள், அவர்களுக்கு எதிரான வழக்குகளிலிருந்து எளிதில் தப்பித்துவிடுகிறார்கள்.

இதனால் நீதிபதிகளிடம் காணப்படும் இந்த எண்ணத்தை அவர்களது பயிற்சி காலத்தின்போதே அகற்றும் வகையில் பயிற்சி அளிக்க வேண்டும் என்றும், இழைக்கப்படுகிற குற்றத்தை பாலினத்தை அடிப்படையாகக் கொண்டு அளவிடுவதை மாற்றி, சமமாக கருதும் வகையில் நீதிபதிகள் மற்றும் நீதிமன்றங்களுக்கான நெறிமுறைகள் மற்றும் சட்டவிதிகளில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்றும் வலியுறுத்துகிறது இங்கிலாந்தில் தோன்றியுள்ள குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் ஆண்களுக்கு ஆதரவான சங்கத்தை சேர்ந்த மார்க் புரூக்ஸ் என்பவர்!

மார்க் புரூக்ஸ் சார்ந்துள்ள சங்கத்தைப்போன்றே மேலும் பல சங்கத்தைச் சேர்ந்தவர்களும் இதே ரீதியில் குரல் எழுப்பத் தொடங்கியிருப்பதால், இடிந்துபோய் இருக்கிறார்களாம் இங்கிலாந்தின் இடிக்(தாய்)குலங்கள்!

பிடித்த பாடல் வரிகள்..உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால்

பிடித்த பாடல் வரிகள்
-------------------------------------

உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால்


உலகத்தில் போராடலாம்

உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்

தலை வணங்காமல் நீ வாழலாம்



(உன்னை)

மானம் பெரியது என்று வாழும் மனிதர்களை

மான் என்று சொல்வதில்லையா

தன்னை தானும் அறிந்து கொன்டு ஊருக்கும் சொல்பவர்கள்

தலைவர்கள் ஆவதில்லையா



(உன்னை)

பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும்

சாமிக்கு நிகர் இல்லையா

பிறர் தேவை அறிந்து கொண்டு

வாரிக்கொடுப்பவர்கள் தெய்வத்தின் பிள்ளை இல்லையா



(உன்னை)

மாபெரும் சபையினில் நீ நடந்தால் - உனக்கு

மாலைகள் விழவேண்டும் - ஒரு

மாசு குறையாத மன்னவன் இவனென்று

போற்றிப் புகழ வேண்டும்



உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால்

உலகத்தில் போராடலாம்

உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்

தலை வணங்காமல் நீ வாழலாம்

''காமராஜர் யாரு தெரியுமா..?'' ''விஜய் தெரியுமா..?''






ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் இந்தியாவிலேயே முதன் முதலில் தனது சொத்துக்கணக்கை பகிரங்கமாக வெளியிட்டவர், நாமக்கல் மாவட்ட கலெக்டரான சகாயம்தான்! 'எளிமையானவர், மக்கள் எளிதில் சந்திக்கக் கூடியவர்' என்று சொல்லப்படும் சகாயத்தை சந்திக்க நாமக்கல் சென்றிருந்தோம்.

''அதிகாரிங்க யாருக்கும் தகவல் சொல்லாம சர்ப்ரைஸா சில இடங்களுக்கு நீங்க விசிட் போனா நல்லா இருக்குமே சார்...'' என்று நாம் சொல்ல... சற்றே யோசித்தவர்... ''அவ்வப்போது செய்வதுதான். வாங்களேன், இப்பவும் போய்ப் பார்க்கலாம்!'' என்று தயாரானார். அடுத்த சில நிமிடங்களில் கலெக்டர் சகாயம், அவரது உதவியாளர் மாதேஸ்வரனுடன் கார் கிளம்பியது. நாமும்தான் இலவச இணைப்பாக! ''எங்கே முதல்ல போகலாம்..? நீங்களே சொல்லுங்க...'' என்று கலெக்டர் கேட்டதும், நமக்கிருந்த சில தகவல் அடிப்படையில் ராசிபுரம் செல்லும் ரூட்டில் போகச் சொன்னோம்.

வழியில் 85.குமாரபாளையம் என்ற ஒரு குக்கிராமத்தில் வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வேலை நடந்து கொண்டிருந்தது. அங்கு காரை நிறுத்தச் சொல்லி இறங்கிய கலெக்டர், வேலை செய்தவர்களிடம், ''நான்தான் உங்க மாவட்டத்தோட கலெக்டர் சகாயம். உங்களுக்கு இங்க கூலியெல்லாம் சரியா கொடுக்குறாங்களா..?'' என்று விசாரித்தார். ''அதெல்லாம் சரியா கொடுத்துடுறாங்க சாமி... ரேஷன் கடையில அரிசி, பருப்புதான் சரியா கிடைக்கலை!'' என்று வயதான பாட்டி ஒருவர் சொல்ல... அவரிடம், ''ஏம்மா... இந்த வயசுல நீ எதுக்கு வேலைக்கு வர்ற..? உன் பசங்க எல்லாம் என்ன பண்றாங்க..?'' என்று பரிவோடு விசாரித்தார்.

''மூணு பசங்க சாமி... வயசான காலத்துல யாரும் கண்டுக்க மாட்டேங்குறாங்க. இப்படி ஏதாவது வேலைக்கு வந்து நாலு காசு சம்பாதிச்சாதான் கஞ்சி குடிக்க முடியும்!'' என்று பாட்டி புலம்ப... ''பெத்தவங்களைக் கண்டுக்காமத் தவிக்கவிடுற பசங்களை ஜெயில்ல போடுறதுக்குக்கூட இப்போ சட்டம் இருக்கு. உன் பசங்களை ஜெயிலுக்கு அனுப்பிட லாமா, சொல்லுங்க...'' என்றார். பதறிப்போன பாட்டி, ''வேணாம் சாமி... அவனுங்க நல்லபடியா பொழைக்கட்டும். இருக்குற வரைக்கும் ஏதோ உழைச்சு, கஞ்சியோ கூழோ குடிச்சுக்கிறேன்! ரேஷன் கடையில அரிசி, பருப்பு மட்டும் போடச் சொல்லுங்க, போதும்!'' என்று கேட்டுக் கொண்டார்.





செல்போனை எடுத்த சகாயம், மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரிக்கு போனை போட்டார். ''ராசிபுரம் பக்கத்துல 85.குமாரபாளையம்ங்குற கிராமத்துல ரேஷன் பொருள் எதுவும் சரியா கிடைக்கிறதில்லையாமே! நீங்க உடனே அந்தக் கிராமத்துக்குப் போய் அங்கே என்ன நடக்குதுன்னு வாட்ச் பண்ணி சாயந்திரத்துக்குள் ரிப்போர்ட் கொடுங்க!'' என்று உத்தரவிட்டவர், அங்கிருந்த பதிவேட்டை சரிபார்த்துவிட்டுக் கிளம்பினார்.

வழியில் ஒரு பிரிவு ரோடு வர, அந்த வழியில் காரை விடச் சொன்னார் கலெக்டர். 'ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பொ.கல்பாளையம்' என ஒரு போர்டு தெரிய, அந்த ஸ்கூலுக்கு போனார். கலெக்டரின் காரைப் பார்த்ததும் பள்ளியின் தலைமையாசிரியர் மிரண்டு விட்டார்!


''எல்லோரும் போய் அவங்கவங்க வேலையைப் பாருங்க...'' என்று சொல்லிவிட்டு, 6-ம் வகுப்புக்குள் நுழைந்தார் சகாயம். ஒரு மாணவனை எழுப்பி ஆங்கிலப் புத்தகத்தில் ஒரு பத்தியை வாசிக்கச் சொன்னார். அந்த மாணவன் தடுமாற... அடுத்த மாணவனை படிக்கச் சொன்னார். அவனும் தடுமாறினான். ''இந்த வகுப்புக்கு இங்கிலீஷ் எடுக்குற டீச்சரை வரச் சொல்லுங்க!'' என்று சொல்லியனுப்ப... ஆங்கில ஆசிரியர் பயந்தபடியே வந்து நின்றார். ''உங்களுக்குக் கல்யாணம் ஆகிடுச்சா சார்..? எத்தனை குழந்தைங்க..?'' என்று கலெக்டர் கேட்க, ''ஆகிடுச்சு சார்... ரெண்டு குழந்தைங்க..'' என்று சொன்னார். ''எங்க படிக்கிறாங்க..?'' என்று கலெக்டர் கேட்க, ஒரு தனியார் பள்ளியின் பெயரைச்சொன்னார்.

''நீங்க இப்படி பாடம் சொல்லிக் கொடுத்தா... நாளைக்கு இந்தக் குழந்தைங்க படிச்சுட்டு வரும்போது, டவுன்ல படிச்சு வர்ற உங்க குழந்தைங் களோட எப்படி போட்டி போட முடியும், சொல்லுங்க..? கொஞ்சமாவது அக்கறையோட சொல்லிக் கொடுங்க சார். மறுபடியும் எப்ப வேணும்னாலும் ஸ்கூலுக்கு வருவேன். அப்போ இவங்க ஆங்கி லத்தை தெளிவா படிக்கணும். இல்லைன்னா, உங்க மேல நடவடிக்கை எடுக்கவேண்டியிருக்கும்!'' என எச்சரித் தார்.
அடுத்து மூன்றாம் வகுப்புக்குள் நுழைந்தவர், அங்கிருந்த குழந்தைகளைப் பார்த்து, ''சுபாஷ் சந்திரபோஸ் யாருன்னு சொல்லுங்க பார்க்கலாம்...'' என்று கேட்க... யாருக்குமே தெரியவில்லை. ''காமராஜர் யாரு தெரியுமா..?'' என்று அடுத்த கேள்வியை வீச... அதற்கும் ம்ஹ¨ம்! ''விஜய் தெரியுமா..?'' என்று கேட்டதுதான் தாமதம்... ஒரு பையன் எழுந்து, ''சார், விஜய் சினிமாவுல நடிக்கிறாரு. இப்போ 'வேட்டைக்காரன்'ல நடிச்சிருக்காரு!'' என்று சொல்லவும், கலெக்டர் சிரித்து விட்டார். அந்த வகுப்பு ஆசிரியரைக் கூப்பிட்டு, ''கிளாஸ் ரூம்ல தலைவர்களோட படங்களை மாட்டி வையுங்க. 'அவங்க யாரு..? என்னவெல்லாம் செஞ்சாங்க'ன்னு சொல்லிக் கொடுங்க. அவங்கதானே நம்ம நாட்டின் நிஜமான ஹீரோக்கள்!'' என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

அடுத்து, ராசிபுரம் நோக்கி கார் பறந்தது. புது பஸ் ஸ்டாண்டுக்கு அருகில் ஒன்வேயில் கார் போகும்போது, எதிரில் தனியார் பேருந்து ஒன்று அதிவேகத்தில் வந்தது. காரை நிறுத்தச் சொல்லி அந்த பேருந்தை வழிமறித்தார் கலெக்டர். பஸ்ஸுக்குள் ஏறிய கலெக்டர், ''நோ என்ட்ரியில எதுக்கு தம்பி இவ்வளவு வேகமா ஓட்டிக்கிட்டு வர்ற..? எதிர்ல வர்றவங்க கதி என்னாகுறது? உன் டிரைவிங் லைசென்ஸை எடு..?'' என்று கலெக்டர் கேட்கவும், ஆடிப்போனார் பஸ் டிரைவர்.
''சார் லேட்டாயிடுச்சு. அதான் வந்துட்டேன். மன்னிச் சிடுங்க சார்... டிரைவிங் லைசென்ஸ் வீட்டுல இருக்கு...'' என்று மென்று முழுங்கினார். போனை எடுத்த கலெக்டர், வட்டார போக்குவரத்து அலுவலரை கூப்பிட்டார். அடுத்த பத்து நிமிடத்தில் அவர் வந்து சேர, ''இந்த பஸ் ஓவர் ஸ்பீடு. நோ என்ட்ரியில வந்திருக்கு. இவருகிட்ட லைசென்ஸ் இல்ல. உடனே ஃபைன் போடுங்க...'' என்று உத்தரவு போட்டார்.
ரவுண்ட்-அப்பை முடித்துக்கொண்டு கிளம்பும்போது கலெக்டர் நம்மிடம், ''பொது மக்களோட குறைகளை தீர்த்துவைக்கத்தான் நான் இங்கே இருக்கேன். என்னை எந்த நேரத்திலும் மக்கள் சந்திக்கலாம். நேர்ல வரணுங்குற அவசியம்கூட இல்ல. என் னோட செல் நம்பருக்கு (9444163000) ஒரு போனோ மெஸேஜோ போதும். கண்டிப்பா நடவடிக்கை எடுப்பேன்!'' என்று சொல்லி நமக்கு விடை கொடுத்தார்.
அயராமல் உழைத்துக்கொண்டே இருக்கும் முதல்வருக்கு ஈடுகொடுக்க, இப்படி அயராமல் ஓடி நேரில் மக்களைச் சந்திக்க இன்னும் நிறைய அதிகாரிகள் முன்வர வேண்டும்.
- கே.ராஜாதிருவேங்கடம்
படங்கள்: எம்.விஜயகுமார்

________________________
நன்றி ஜூனியர் விகடன்

சாப்டுவேர் என்ஜினியர்களும் சமூக சீரழிவும்

இப்பொழுது தலை தூக்கி வரும் பிரச்சனைகளில் மிக முக்கியமானது சாப்டுவேர் கம்பெனியில் வேலை செய்பவர்களால் உண்டாகும் செயற்கை விலை உயர்வு. இதை பத்தி கொஞ்சம் பார்ப்போம்

1. தி.நகரில் ஒரு சாப்பாடு(Meals) 30+ ரூபாய், அதுவே OMR சாலையில் ஏதாவது ஒரு சாப்டுவேர் கம்பெனிக்கு அருகில் இருக்கும் ஓட்டலில் சாப்பாடு குறைந்த பட்சம் 60. என்னுடைய அலுவலகத்திற்கு பக்கத்தில் உள்ள ஆந்திர உணவகத்தில் அது 99 + VAT (ஏறக்குறைய 120 ரூபாய் வரும் டிப்ஸை சேர்த்தால். 10 ரூபாக்கு குறைந்து டிப்ஸ் இருந்தால் அடுத்த தடவை நீங்க போகும் பொழுது விக்கி செத்தாலும் தண்ணி கிடைக்காது.)

2. அடையாரில் உள்ள ஒரு Forex நிறுவனத்தில், சாப்டுவேர் இன்ஜினியர் அதுவும் குறிப்பாக விப்ரோ, டிசிஎஸ், இன்பொசிஸ் கம்பெனிகளில் இருந்து சென்றால் மற்றவர்களுக்கு கொடுக்கப்படும் எக்ஸ்சேஞ் ரேட்டை விட ஒரு ரூபாய் குறைவு. கேட்டால் அது அப்படி தான் சார் வேண்டுமானல் குடுங்கள் இல்லாவிட்டால் போங்க.

3. வேளச்சேரியில் 800-1000 சதுர அடி வீட்டின் வாடகை 6000+ அதே, கோடம்பாக்கம், வடபழனி போன்ற இடங்களில் அதிகபட்சம் 4000.

4. 1200 சதுர அடி வீட்டின் விலை வேளச்சேரியில் சுமார் 50 – 60 லட்சம் வரை.

5. Ascendasஇல் (இது Tidel Parkஜ போன்றது) ஒரு Milk Shakeஇன் விலை 170.

6. ஒரு சாப்டுவேர் கம்பெனிக்கு பக்கத்தில் இருக்கும் ஆட்டோ ஸ்டாண்டில் குறைந்த பட்சம் 20 – 30 ரூபாயாவது அதிகமாக இருக்கும்.

7. இரண்டு வருடத்துக்கு முன்னர் 50ரூபாயாக இருந்த சினிமா டிக்கெட் இன்று குறைந்த பட்சம் 120, 10 ரூபாயாக இருந்த பாப்கான் இன்று 50.

8. தீபாவளிக்கு முதல் நாள் சென்னையில் இருந்து சேலத்துக்கு செல்ல தனியார் பேருந்துகளில் ஒரு டிக்கெட்டின் விலை ரூபாய் 1100. சாதாரணமாக அது ரூபாய் 300.

இது போல் சொல்லிக்கொண்டே போகலாம். இதில் எல்லாரும் சொல்லும் பொதுவான விஷயம் சாப்டுவேர் கம்பெனியில் இருக்குறவன் எவன் சார் விலையை கேக்குறான் இல்ல சாப்டுவேர் கம்பெனிகளில் இருக்குறவனுக்கு என்ன சார், ஆயிர ஆயிரமா சம்பாதிக்கிறான் குடுத்துட்டு போறான். நம்மைப்போன்றவர்களுக்கு பணம் ஒரு பிரச்சனையே இல்லை ஆனா யோசித்து பாருங்க, இப்படி துவங்கும் விலை உயர்வு, படிப்படியாக அப்படியே கொஞ்ச நாள் கழித்து சாதாரண பொது மக்களை போயி அடையும். அவங்க என்ன செய்வாங்க யோசிங்க?

யோசித்து பாருங்க. என்னிக்காவது ஒரு நாள் நாம கேட்டு இருக்கோமா? ஏன் அதிக விலை என்று? இல்ல அவன் இவ்வுளவு விலை விற்கிறானே அவனிடம் வாங்க வேண்டாம் என்று யோசித்து இருக்கோமா? அப்ப என்ன அர்த்தம் காசு கொழுப்பு தானே? வாங்குறவன் இருக்குற வரையில் விற்பவன் விற்கத்தானே செய்வான்? இதற்கு சிறந்த உதாரணம் கடந்த சில மாதங்களாக சென்னை, பெங்களூரில் கட்டிடங்களின் விலையில் 10 – 20% குறைந்துள்ளதே? என்ன காரணம் நகரங்கள் வளர்ந்து விட்டனவா? இல்லையே வாங்க ஆள் இல்லை அதனால் தான் இந்த விலை குறைப்பு.

ரூபாயின் மதிப்பு ஏறுமுகமாக இருக்கும் இந்த காலத்தில், நம்முடைய சம்பளங்களும் வருங்காலங்களில் இது போன்று இருக்கும் என்று சொல்ல முடியாது. முன்று வருடத்துக்கு முன்னர் இருந்த விலையை வைத்து பார்க்கும் பொழ்து இந்த விலை எல்லாம் இரண்டு அல்லது முன்று மடங்கு உயர்ந்து உள்ளது ஆனால் நம்முடைய சம்பள உயர்வு அவ்வுளவு இருக்கிறதா என்ன? பொருட்களை வாங்குங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை ஆனால் அதற்கு உண்டான சரியான விலையை குடுத்து வாங்குங்கள்.

சமீபகாலமாக வெயிட் காலர் குற்றங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து உள்ளது. கைதாகும் பெரும்பாலோனோர் சொல்லும் காரணம், கடன் அட்டைகள், கடன் வாங்கி ஆடம்பரமாக செலவு செய்துவிட்டேன், இப்பொழுது கடன்காரர்கள் தொல்லையில் இருந்து தப்பிக்க இது போன்று செய்தேன் என்று.நமக்கும் இது போன்ற நிலை வர வேண்டுமா? இது எல்லாம் மாற நாம பெருசா ஒண்ணுமே பண்ண வேண்டியது இல்ல, இது மாதிரி ஏமாத்துறவங்களை புறக்கணிச்சாலே போதும், தன்னால அவங்க மாறுவாங்க.
.
Posted By,
santhose

நீயெல்லாம் ஒரு நல்ல நண்பனா? -Are u a good Friend?

உங்கள் நண்பருக்கு..நீங்கள் நல்ல நண்பரா?!

உங்கள் நட்பை பலமாக்க சில டிப்ஸ் இதோ..




1.உங்கள் நண்பருக்கு என்ன கொடுக்க முடியும் என்று பாருங்கள், என்ன பெறலாம் என்பதை விடுங்கள்.
“உங்கள் சுயமகிழ்ச்சிக்காக நண்பர்களை தேடுகிறீர்கள்
என்றால் நிச்சயம் நீங்கள் நல்ல நண்பராக இருக்க
முடியாது. அது முழு சுயநலமே தவிர வேறில்லை.
கொடுத்து பழகுங்கள்.பெறுவதற்கான தகுதி
கொடுக்கும் போதுதான் வருகிறது”

2. ஊக்கப்படுத்துங்கள் உங்கள் நண்பரை..!!

“நீங்கள் நிஜ நண்பராய் இருக்க வேண்டுமானால் எப்போதும்
உங்கள் நண்பர் உங்களிடம் இருந்து பாஸிட்டிவ் எண்ணங்களையே
பெற வேண்டும்.எப்போதும் உற்சாகமாக, துடிப்புடன் நல்லமுறையில்
அவர்களை கையாளுங்கள்.அவர்களின் லட்சியங்களை நோக்கி
அவர்களை தூண்டுவதே நட்பின் உண்மையான அழகு”.

3.மன்னிக்க பழகுங்கள்..!!

”சின்ன வார்த்தைதான்..அது பல அர்த்தம் கற்பிக்கப்பட்டது.
இன்று அவரும் நானும் எங்கோ பிரிந்துவிட்டோம்..இந்த
பிரிவுக்கு காரணம் என்ன? மன்னிக்காத குணம் தான்.
எனக்கு ஒரு பழக்கம் உண்டு. என்னை புண்படுத்தும்படி பேசியபோதும்
நண்பரை குஷிப்படுத்தும்படி எதாவது பேசிவிடுவேன்.
அவரும் சிரித்தபடி மன்னிப்பை கேட்டுவிட்டு மீண்டும் சகஜமாகி
விடுவார். இதை பின்பற்றுவது உங்கள் விருப்பம்.”
ஆனால் முக்கியமான விஷயம்:
மன்னிக்கும் குணம். அது மனதிற்கு நல்லது.
அது உங்கள் நண்பருக்கும் நல்லது, உங்களுக்கும் நல்லது.

4. தவறுகளை குத்திகாட்டாதீர்கள்,சுட்டிகாட்டுங்கள்..!!

”சிலர் இருக்கிறார்கள், இவன் நம் நண்பர்தானே என்ன சொல்லிவிட போகிறார்
என்று நம்மை பலவகையில் மன்னிப்பதுபோல் மன்னித்துவிட்டு,குத்திகாட்டுவார்கள்.
அந்த வலி என்னவென்று நமக்கே தெரியும். ஆதிக்க மனப்பான்மையின்
வெளிப்பாடு குத்திகாட்டுதல். ஒரு குருவை போல நீ இந்த இடத்தில், இந்த வகையில்
சரியாக இல்லை. இது உன்னை பாதிக்க கூடும் என்று அன்பாய் எடுத்து சொன்னால்..
ஆஹா..அதுதான் உங்கள் நட்பை மிகவும் உயர்த்தும்.”

5.சொன்னதை செய்யுங்கள்..!!

“நீங்கள் அவரை சந்திப்பதாக சொன்னால் சரியான நேரத்தில் சென்றுவிடுங்கள்.
காதலுக்கு வேண்டுமானால் காத்திருப்பு அழகானதாய் இருக்கும். ஆனால்
நட்புக்கு ”டைமிங் முக்கியம் அமைச்சரே..!!”.
எனவே நண்பர்களை காக்க வைக்க வேண்டாம்.”

6. நட்புக்கேது கட்டுபாடு..!!

”உண்மையான நண்பர்களாய் நீங்கள் இருக்க விரும்பினால் ஒரு
விஷயத்தை மனதில் வைத்துகொள்ளுங்கள். அது நீங்கள் அவருக்கு
நண்பரே தவிர முதலாளி அல்ல. அவரை கட்டுபாட்டுக்குள் வைக்க
முயற்சிக்கும் போது நட்பு அடிப்பட்டு விடுகிறது. எனவே அவரை அவராய்
இருக்கவிட்டு ரசிப்பதே அழகு.”

7. நல்லதுக்கும், கெட்டதுக்கும் உடனிருப்பதே நட்பு..!!

“நல்ல விஷயத்திற்கு போறமோ இல்லையோ..கெட்டதுக்கு போய்டணும், என்கிற பழமொழி
இங்கே செல்லாது. அவர்களின் மகிழ்ச்சியில் பங்கெடுக்கும்போதுதான் நட்பிற்கான மரியாதை
அதிகரிக்கிறது.அதே போல் கெட்டது நடந்தால் முதலில் நீங்கள் தான் போய் நிற்கவேண்டும்.
இது கட்டாயம் அல்ல...கடமையும் அல்ல..அதுதான் அன்பு. அதுதான் நட்பின் கற்பு.

8. அவர் அவராகவே இருக்கட்டும்..!!

“நீங்கள் யார் அவரை மாற்ற..?? அவரை முன்னேற்ற வேண்டுமானால் நீங்கள் ஆனதை
செய்யலாம். ஆனால் அவரின் தனித்துவத்தில் நீங்கள் குறிக்கிடுவது அனுமதிக்க முடியாதது.
அதாவது அவர் பர்மிஷனோட கதவை தட்டிட்டு தான் அவர் அறைக்கு போகனும்..அது டீஸன்ஸி.
என் நண்பர்தானே என்ன சொல்ல போறார்னு நீங்க பாட்டுக்கு போன..நட்பின் இலக்கணம் கெட்டுவிடும்..

9. ஓட்டவாயா இருக்காதீங்கப்பு..!!

“நெருங்கிய நண்பர்களின் ரகசியங்கள் உங்களுக்கு தெரிந்திருக்கிறதா? முடிந்தால் அதை ஒரு பேப்பரில் எழுது
பசிபிக் கடலின் ஆழத்தில் போட்டுவிடுங்கள். அல்லது மனதிலேயே புதைத்துவிடுங்கள். தங்கள் நண்பரின் முழு
நம்பிக்கையை பெற்றதால்தான் அவர் உங்களிடம் சொல்கிறார். அதை வெளியே சொல்வது மட்டுமில்லை..அதை அவரிடம்
மீண்டும் அவர் விருப்பமில்லாமல் விவாதிப்பது கூட நட்புக்கு ஏற்படுத்தும் களங்கம் தான். அது ஒரு மனிதத் தன்மையற்ற செயலும்கூட.

10. பேச்சு பேச்சாதான் இருக்கணும்..!!

எப்போது விவாதம் என்று வந்துவிட்டதோ அப்போதுதான் நட்புக்கு சோதனை வருகிறது. யார் புத்திசாலி
என்பதை காட்ட விவாதம் செய்தால்..நட்பு முறிய அதிக வாய்ப்புள்ளது. அதுவே இருவரும் ஒருவரை ஒருவர்
சிந்திக்க தூண்டுவதற்கான அன்பான விவாதமாய் இருந்தால் அதுபோல சிறந்த பொழுது வேறில்லை.
எனவே எப்போதும் ஈகோ அரக்கன் உங்கள் மனதை ஆக்கிரமிக்காமல் பார்த்துகொள்ளுங்கள்..முக்கியமாக விவாதங்களில்போது..!

என்ன நண்பர்களே.. படிச்சாச்சா? இனிமேலாவது பாத்து பக்குவமா நடந்துக்கோங்க..!!

விழும் அடியிலிருந்து கொஞ்சமாச்சும் தப்பிக்கலாம்..!!

By, http://ungalranga.blogspot.com/2009/11/are-u-good-friend.html
.

கட்டுரை ஒன்றில் வயதானவரகளுக்கு சில அறிவுரைகள்

ஜோனாதன் ஸ்விப்ட் என்பவர் 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரபலமான ஆங்கில எழுத்தாளர்.

கட்டுரை ஒன்றில் அவர் வயதானவரகளுக்கு சில அறிவுரைகள் கூறியிருக்கிறார்.

1. கடுகடுப்பாகவோ, வருத்தம் உள்ளவர்களாகவோ, சந்தேகப்படுகிறவர்களாகவோ இருக்க வேண்டாம்.

2. சிறுவர்கள் விரும்பினால் ஒழிய அவர்களுடைய கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம்.

3. அப்போதைக்கப்போது ஜனங்களிடம் தோன்றும்
நவீன முறைகளையும், நடத்தைகளையும் பற்றி ஏளனம் செய்ய வேண்டாம்.

4. ஒரே நிகழ்ச்சியை அதே நபர்களிடத்தில் அடிக்கடி சொல்ல வேண்டாம்

5. பிறர் பொருளை விரும்ப வேண்டாம்

6. உடம்பையும், உடைமையையும் சுத்தமாக வைத்துக் கொள்ள மறக்க
வேண்டாம். அவை சுத்தமாக இல்லாவிட்டால் பிறருக்கு உங்கள் மீது வெறுப்பும் அலட்சியமும் ஏற்படும்

7. இளைஞர்களின் நடத்தைகளை அதிகமாகக் கண்டிக்க வேண்டாம்.
அவர்களால் அந்த வயசில் பிழைகள் செய்யாமல் இருக்க முடியாது.

8. பிறருடைய சமாச்சாரங்களை அவர்களுடைய வேலைக்காரர்கள் மூலம் கேட்டுத் தப்பான
அபிப்பிராயம் கொள்ள வேண்டாம்.

9. பிறர் கேட்டால் ஒழிய அவர்களுக்குப் புத்திமதிகள் சொல்ல வேண்டாம்.

கீழே உள்ள இரண்டும் அடியவன் மனதில் தோன்றி நானாகச் சேர்த்துக் கொண்டது.

10. எங்க காலத்தில் அப்படி இருந்தது என்று வேண்டாத பழங்கதைகள் கூற வேண்டாம்.

11. அரசனாக இருந்தால் கண்ணை மூடிக்க் கொள்ள வேண்டும், வேலைக்காரனாக இருந்தால்
காதை மூடிக்கொள்ள வேண்டும். வயதானால் இரண்டையும் மூடிக்கொள்ள வேண்டும்

வயதானவர்கள் முடிந்தவரை இந்த அறிவுரைகளைக்
கடைப்பிடித்தால்,முதுமை என்பது சுகமே !
----------------------------------------------------------------------------------------------------------------------
அன்புடன்
அ.இராமநாதன்

விவேகானந்தரின் பொன்மொழிகள்!

"நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!"

"உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!"

"நான் எதையும் சாதிக்க வல்லவன்" என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றது ஆகிவிடும்."

"பலமே வாழ்வு; பலவீனமே மரணம்!"

"கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்."

"உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி."

"அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு."

"மிருக பலத்தால் அல்லாமல் ஆன்மிக பலத்தால் மட்டுமே எழுச்சி பெறமுடியும்."

"சுயநலமின்மை, சுயநலம் என்பவற்றைத் தவிர, கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை."

"நீ செய்த தவறுகளை வாழ்த்து. அவைகள், நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருந்திருக்கின்றன."

"அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்."

"உங்களால் யாருக்கும் உதவி செய்ய முடியாது. மாறாகச் சேவைதான் செய்ய முடியும்."

"உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன."

--- விவேகானந்தரின் பொன்மொழிகள் - ந. லோகநாதன், logudotcom ,

கண்ணுக்கு மை தீட்டி, உதட்டுக்கு சாயம் போட்டு,

கண்ணுக்கு மை தீட்டி, உதட்டுக்கு சாயம் போட்டு, காதுகளுக்கு தோடுகள் மாட்டுவது அழகான செயலே, ஆனால் சாயம் தீட்டிய உதடுகள் உள்ள வாயால் நல்லதைப் பேசி, மைதீட்டிய கண்களால் நல்லதைப் பார்த்து, தோடுகள் போட்ட காதுகளால் நல்லதைக் கேட்டால் சாயங்களையும், நகைகளையும் போடுவதை விட அதிக பெருமையை அந்த உறுப்புக்களுக்கு கொடுக்கலாம்.

பிராணிகள் பேசுகின்றன - "ஆடு" ஆகிய எங்கள் அவல நிலையை பாருங்கள்


உங்கள் இல்லங்களில் எங்களை வளர்ப்பது கசாப்பு கடைகாரனுக்கு விற்று பொருள் சம்பாதிக்கவே வளர்கின்றீர்கள். பொருள் பேராசையால் , வள்ளலார் கூறும் "உண்மை அன்பு" இல்லாமல், நெஞ்சில் வஞ்சம் வைத்து பரிவு காட்டுவது போல் டிகின்றீர்கள்.
"வஞ்ச மனத்தில் வசியாத பாதம்" என வடலூர் இராமலிங்க சுவாமிகள் தனது பாடலில் கூறி உள்ளதை , இங்கு சிந்த்தனை செய்யுங்கள்.
எங்களுக்கு நீங்கள் போதுமான உணவு கொடுக்காததால், நாங்கள் வீடு, வீடாக சென்று அங்குள்ள கொடிகளை உண்டு உடல் வளர்க்க போகும் போது அங்குள்ளவர்கள் தடியாலும் கற்களாலும் அடிக்கும் அடிகளை தாங்கி கொள்கிறோம்? ஏன்? எங்கள் குழந்தைகளை காப்பாற்ற வேண்டி வாழ நினைகின்றோம். இப்படி எல்லாம் பாடு பட்டு உடம்பை வளர்த்தால் நீங்கள் இறைச்சி கடைகாரனுக்கு விற்று பொருள் ஈட்டுகின்றீர்கள். இந்த பணத்தினால் உங்களுக்கும் , உங்கள் குடும்பங்களுக்கும் மற்றும் உங்களை சார்ந்தவர்களுக்கும் ீமை பயக்குமே தவிர நன்மை ஏற்படாது.

ஐந்தறிவு உடைய நாங்கள் , சைவ உணவு சாப்பிட்டே உடம்பை வளர்த்து "சாத்வீக" தன்மையுடன் வாழ்கின்றோம். ஆறறிவு படைத்த நீங்கள், ஏன் "எங்களை கொன்று தின்று கடவுளின் இயற்கை விளக்கத்தை நீங்களே மறைத்து கொள்கின்றீர்கள்?" மனித தேகம் பெற்றவர்களால் தான் கடவுளின் "இயற்கை விளக்கத்தை" பெற முடியும்.வடலூர் இராமலிங்க சுவாமிகள் , பிற உயிர்களை கொன்று தின்பவர்களுக்கு "கடவுளின் இயற்கை விளக்கம்" அகத்திலும் , புறத்திலும் வெளிப்படவே மாட்டது என்று கூறுகிறார்கள்.
"தீவினையின்றி ஈட்டல் பொருள் " என்றனர் சான்றோர். இதனை எல்லாம் சிந்தனை செய்வீர்களாக ...


Anbudan,
Karthikeyan.J

பிராணிகள் பேசுகின்றன - கேளுங்கள்

நற்குணம் கொண்ட நல்லோர்களே ! தாய் மார்களே ! சகோதர்களே ! .. உங்கள் பாதங்களை தொட்டு கோடிமுறை கும்பிடுகின்றோம். நாங்கள் முறைஇடுவதை சற்று செவிமடுத்து , கேட்டு சிறிதாவது சிந்த்திப்பீர்களாக...,

இரக்கம் கொண்ட இதயம் உடையவர்களே ! இந்த உலகில் வாழ பிறந்த உங்களுக்கு மனம் மகிழ பண்டிகைகள் வருகின்றன . அந்த நாட்களில் நீங்கள் குடும்பத்துடனும் , குழந்தைகளோடும் கூடி மகிழ்ச்சியுடன் இருக்க விரும்பி , உங்கள் உணவுக்காக எங்களை கொன்று, எங்கள் உடலை சிதைத்து அதை புசித்து மகிழ்கின்றீர்கள்.

அந்த சமயங்களில் , எங்கள் குழந்தைகள் ஆதரவு இல்லாத அநாதை பிள்ளைகளாகி விடுகின்றனர்.நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருப்பது போல,நாங்களும் எங்கள் குழந்தைகளுடன்
மகிழ்ச்சியாக இருக்க வேண்டாமா? உங்களுடைய அற்ப சந்தோசத்திற்காக அப்பாவியாகிய நாங்கள் தான் பலியாக வேண்டுமா ? இதை தயவு செய்து சிந்திக்க வேண்டும் . இனி வருகின்ற பண்டிகை நாட்களிலும் , மற்ற காலங்களிலும் எங்களை கொள்ளும் எண்ணத்தை விட்டு விட வேண்டும்.
எங்கள் குழந்தைகளுடன் நாங்களும் இருக்க எங்களை வாழ வைக்க தயவு செய்யுங்கள் . எங்களுடைய அவல நிலையை சொல்கிறோம். சற்று கேட்டு சிந்தியுங்கள் ...

========================================="உயிர் கொலையும் , புலை பொசிப்பும் உடையவர்கள் உறவினத்தார் அல்லர் !! அவர்கள் புற இனத்தார் " - வள்ளலார்

"உயிரெலாம் ஒரு நீ திருநடம் புரியும் ஒருதிரு பொதுவென அறிந்தேன் " - வள்ளலார் (அகவல்)

"எவ்வுயிரும் பொதுஎனக் கண்டிரங்கி உபகரிக்கின்றார் யாவர் அந்தச் செவ்வியர்தம் செயல்அனைத்தும் திருவருளின் செயல் எனவே தெரிந்தேன்" - வள்ளலார் (தனித் திருஅலங்கல்)
==========================================

அனுப்பியவர்,
Karthikeyan

இயேசு வர தாமதம்- யூத மதகுருமார்கள்

ஜெருசலேம்: இஸ்ரேலில் கருத்தடை ஆபரேஷன்கள் அதிகரித்து விட்டன. சட்டவிரோதமாக பெருமளவில் இவை நடந்து வருகின்றன. இப்படிப்பட்ட செயல்களால்தான் இயேசு கிறிஸ்து மீண்டும் உயிர்த்தெழுந்து வர தாமதமாகிறது என்று இரண்டு யூத மதகுருமார்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து யூத மதகுருமார்களான யோனா மெட்ஜெர், ஷ்லோமோ அமர் ஆகியோர் கூறுகையில், குழந்தைப் பிறப்பைத் தடுப்பது இஸ்ரேலில் அதிகரித்து வருகிறது. இதுவே நமது மீட்பரின் மறு வருகை தாமதமாக முக்கியக் காரணம்.

இப்பபடிப்பட்ட செயலால் ஆண்டுதோறும் ஆயிரக்ணக்கான, லட்சக்கணக்கான யூதர்கள் மறைமுகமாக பூமிக்கு வராமல் தடுக்கப்படுகிறார்கள்.

இஸ்ரேலில் ஆண்டுதோறும் 50,000க்கும் மேற்பட்ட கருத்தடை அறுவைச் சிகிச்சைகள் நடைபெறுகின்றன. இவற்றில் கிட்டத்தட்ட 20 அறுவைச் சிகிச்சைகள் சட்டவிரோதமாக நடைபெறுகின்றன.

இதுபோன்ற செயல்களால்தான் இயேசு நாதர் மீண்டும் பூமிக்கு வருவதில் தாமதம் ஏற்படுகிறது என்று கூறியுள்ளார்.

அழகுக்கு அடி‌ப்படை ஆரோ‌க்‌கிய‌ம்தா‌ன்

ஒருவர் அழகாக இருக்கிறார் என்றால் அது அவர் செய்யும் அலங்காரத்தைப் பொருத்ததா? அல்லது அவரது உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்ததா?இப்படி கேட்டால் பெரும்பாலானவர்கள் கூறுவது ஆரோக்கியமாகத்தான் இருக்கும்.
சரி,..
நமது அழகுக் கலை நிபுணர் மஞ்சு மாதா என்ன சொல்கிறார் என்று கேட்போம்.

நிச்சயமாக உடல் ஆரோக்கியம் அவசியம். நாம் என்னதான் அழகாக்கிக் கொண்டாலும், நமது உடல் சோர்வாகவோ, நோய் வாய்ப்பட்டு இருந்தால் நம்மால் எப்படி அழகாகத் தோன்ற முடியும்.
முதலில் நாம் போடும் மேக்கப்பை ஏற்றுக் கொள்ள நமது சருமம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். சருமம் ஆரோக்கியமாக இருந்தால்தான் நாம் போடும் மேக்கப் சரியாக இருக்கும்.வீட்டிலிருக்கும் போது சருமத்தைக் காக்க மாஸ்சுரைஸிங் க்ரீம்கள் போட வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். நிறைய தண்ணீர் குடித்தாலே பருக்கள் வராது. எவ்வளவுக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நமது சருமம் பொலிவாக இருக்கும்.பழங்கள் அதிகமாக சாப்பிடலாம். பழங்களை சாப்பிட்டுவிட்டு தோலை தூக்கி எறியாமல் அதன் தோலை மசித்து முகத்திற்கு போட்டால் அதுவும் ஒரு நல்ல பலனைத் தரும். இதற்கு 10 நிமிடம் போதும். வீட்டிலிருக்கும் போது பச்சரிசி மாவு, கோதுமை மாவு, மைதா மாவு போன்று எதையாவது ஒரு பத்து நிமிடம் போட்டால் போதும், நமது சருமத்திற்கு நல்ல பொலிவு கிடைக்கும்.இதனை ஒரு நாள் போட்டுவிட்டால் போதாது, தொடர்ந்து போட வேண்டியது தான் மிகவும் முக்கியம்

ஹிரோஷிமாவில் குண்டுபோட்ட விமானி தற்கொலை

ஹிரோஷிமாவில் போடப்பட்ட அணுகுண்டை தயாரித்த விஞ்ஞானி:ராபர்ட் ஓபன் ஹீமர்

போடப்பட்ட இடமும் தேதியும்: 1945 ஆகஸ்ட் 6 ம் தேதி ஹிரோஷிமாவிலும், 1945 ஆகஸ்ட் 9 ம் தேதி நாகசாகியிலும் போட்டனர்.

குண்டின் எடை :4080 கிலோ

குண்டு போட விமானத்தில் எடுத்துச்சென்ற விமானி புத்தி பேதலித்து கிறுக்கனானான்.மற்றொருவன் தற்கொலை செய்துகொண்டான்.

அப்போது அமெரிக்க ஜனாதிபதி ஹாரி ட்ரூமன்
.

என்னை பற்றி என் நண்பன் எழுதியது ....


என்னல, என்னமோ ஆன்மீகத்துல நான் பெரிய புடிங்கி, .......... கரச்சி குடிசிடேனு சொன்ன. இது தான் நீ ....... புரிஞ்சி கிட்ட விதமா? தனி ஒரு மனுசன தாக்கி பேச உனக்கு என்ன உரிமை இருக்கு? அந்த மெயில் அனுபுரதுனால உனக்கு என்ன கிடைசிட போகுது? உன்ன மாதிரி விஜய் பிடிக்காதவன் நல்லா இருக்குடா னு சொல்லுவான். எல்லாரும் உன்ன மாதிரி தான் யோசிப்பங்கனு நீ எப்படி நினைக்குற? உனக்கு பிடிக்காத ஒன்னு அடுத்தவங்களுக்கும் பிடிக்க கூடாதுன்னு நீ எப்படி நினைக்கலாம்? அப்படி நினைக்க உனக்கு என்ன உரிமை இருக்கு?
நீ இன்னும் பதின்ம வயசு பசங்க மாதிரி தான் இருக்கனு நான் சொன்னா நீ ஏத்துக்குவியா? இந்த விசியத்துல சின்ன பசங்களுக்கும் உனக்கும் எந்த வித்தியாசமும் இல்லன்னு தான் நான் உன்ன புரிஞ்சிடுருகேன்.
யாரையும் விமர்சனம் பண்ண உரிமை இருக்கலாம்.. ஆனா அதிலயும் ஒரு தர்மம் இருக்கு.
ஒரு எடுத்துகாட்டுக்கு சொல்லுறேன். கருணாநிதி ஜெயலலிதா வின் அந்தரங்க விசியம் பற்றியோ அல்லது ஜெயலலிதா கருணாநிதியோட அந்தரங்கம் பற்றியோ பேசினதா நீ கேள்வி பட்டதுண்டா? அப்படி பேசினா அது அரசியல் தர்மம் இல்லை. அதனால அப்படி பேச மாட்டாங்க.
அதே மாதிரி உனக்கு விஜய் நடிப்பு பிடிகலான நீ அவன் நடிப்பு பற்றி விமர்சனம் பண்ணு. நானும் உன்கூட சேந்து ரசிக்குறேன். அவனோட அரசியல் பிரவேசம் பிடிகலான அத பற்றி விமர்சனம் பண்ணு. குறைந்த பட்சம் உனக்கு எது பிடிக்கலியோ அத பற்றி மட்டும் விமர்சனம் பண்ணு. அத விட்டுட்டு........ இதெல்லாம் படிச்சவன் பண்ண மாட்டான். இன்னொரு விசியம். விஜய் பிடிகலான கண்டிப்பா உனக்கு அஜித் பிடிச்சிருக்கனும். சாதாரண பிடித்தம் இல்லை. உயிர் கொடுக்குற அளவுக்கு நீ அவன நேசிக்கணும். அதனால தான் நீ விஜய் பற்றி இப்படி கடுப்பாகுற. (2 நிமிடம் யோசித்து பார்த்தால் உனக்கும் புரியும்)
இப்போ கூட நான் யோசிக்குறேன். நான் ஏன் உனக்கு இதெல்லாம் சொல்லணும்? எனக்கு என்ன உரிமை இருக்குனு... இது உன்கிட்ட எனக்கு பிடிக்காத விசியம். அதான் உன்ன இப்படி விமர்சனம் பண்ணிட்டேன். தவறுக்கு மன்னிக்கவும்.

அன்புடன்
ஜெ

பாரதியாரின் இந்தக் கருத்து

தேடிச்சோறும் நிதம்தின்று - பல

சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம்

வாடித்துன்பம் மிகவுழன்று - பிறர்

வாடப்பல செயல்கள் செய்து - நரை

கூடிக் கிழப்பருவம் எய்திக்கொடுங்

கூற்றுக்கு இரையெனப் பின்மாயும் -பல

வேடிக்கை மனிதரைப் போலே -நான்

வீழ்வேனென்று நினைத்தாயோ



-பாரதி

ஞான கருத்துக்களை சிந்தித்து தெளிதல்

ஒருமுறை கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது.
அதில் வசித்த தவளை ஒன்று தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு
ஒரு கிணற்றில் விழுந்தது. அந்த கிணற்றிலே வசித்து வந்த தவளை ஒன்று
அந்த தவளையை பார்த்து நீ எங்கிருந்து வருகிறாய் என்று கேட்டது.
அதற்க்கு கடல் தவளை நான் கடலில் இருந்து வருகிறேன் என்று
பதில் கூறியது.


அதற்க்கு கிணற்று தவளை உன்னுடைய கடல் இவ்வளவு தூரம் இருக்குமா
என்று கூறி கொண்டு ஒரு முறை எம்பி குதித்து தாண்டியது.
அதற்கு கடல் தவளை இல்லை இதை விட பெரியது என்று பதில் கூறியது.
அடுத்ததாக கிணற்று தவளை இரண்டு முறை எம்பி தாண்டி குதித்து
இவ்வளவு தூரம் இருக்குமா என்று கேட்டது.
அதற்கும் கடல் தவளை இதைவிட பெரியது என்று பதில் கூறியது.
சரி இந்த கிணற்றில் பாதி தூரம் இருக்குமா உனது கடல் என்று
கிணற்று தவளை கூறியது.
அதற்கு கடல் தவளை இந்த முழு கிணற்றை விட பல மடங்கு பெரியது கடல்
என்று பதில் கூறியது.
உடனே கிணற்று தவளைக்கு மிகுந்த கோபம் உண்டாகியது
கடல் தவளையை பார்த்து மூடனே இந்த கிணற்றை விட
பெரிய இடம் இந்த உலகத்திலேயே கிடையாது.
நீ மிக பெரிய பொய்யன் உடனடியாக இந்த இடத்தை விட்டு ஓடிப் போ
என்று கடல் தவளையை விரட்டி விட்டது.


அது போல்தான் ஞான மார்க்கத்தில்
சிறிது கற்ற உடன் நமக்கு எல்லாம் தெரிந்து விட்டது என்று
அந்த கிணற்று தவளையை போல் நமக்கு ஆணவம் வந்து விடுகிறது.
ஆனால் கடல் போல் ஞானத்தை தெரிந்து கொள்ள பல விஷயங்கள்
உள்ளன என்றும் கற்க வேண்டிய ஞானம் மிக அதிகம் நாம் கற்றவை
மிகவும் குறைவு என்பதும் நாம் உணர வேண்டும்.


ஆகவே நாம் ஒன்றை மட்டும் தெரிந்து கொண்டு அதையே பிடித்து கொண்டு
அதுதான் ஞானம் என்று அதற்குள்ளேயே உழன்று கொண்டிருந்தால்
ஞானத்தை முழுமையாக அடைய முடியாது.


நாம் அனைவரும் திறந்த புத்தகமாக இருக்க வேண்டும்.
நல்ல கருத்துக்களை விருப்பு வெறுப்பின்றி அறிவின் துணை கொண்டு
ஆராய்ந்து கற்க வேண்டும்.


நல்ல ஞான கருத்துக்களை சிந்தித்து தெளிந்தால்
நாம் தூய்மை அடைவதில் எந்த தடையும் இருக்காது.
இறை அருள் நம்மை வந்து அடையும்.

அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு.