ஆறறிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆறறிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சென்னை குரோம்பேட்டையில்.. ஒரு நா(தா)யின் கண்ணீர்....



மத்திய தர வகுப்பினர் அதிகம் வசிக்கும் சென்னை குரோம்பேட்டை, பாரதிதாசன் சாலையின், ஒரு முட்டுச் சந்தில் உள்ள குப்பைத்தொட்டி அருகே பெண் நாய் ஒன்று எப்போதும் ஒண்டிக் கிடக்கும்.
அநாயவசியமாக குலைப்பது, தெருவில் போவோரை மிரட்டுவது, சைக்கிளில் வருவோரை விரட்டுவது, புதிதாக வருபவர்களை பயமுறுத்துவது என்று தெரு நாய்களுக்கு உரிய எந்த குணமும் இல்லாமல் சாதுவாக முடங்கிக்கிடக்கும்.
தெருவில் உள்ளோர் குப்பைத் தொட்டியில் வீசியெறியும் குப்பைகளில் தனக்கான உணவு இருந்தால் எடுத்துவந்து சாப்பிட்டுவிட்டு சாதுவாக படுத்துக்கொண்டு இருக்கும்.
இந்த நாய் கடந்த சில நாட்களுக்கு முன் இரண்டு குட்டிகளை போட்டது.
இரண்டு குட்டிகளுமே ஆண் குட்டிகள், தெரு நாய்க்குட்டிகள் என்றே சொல்ல முடியாதபடி அடர்த்தியான ரோமங்களுடன் படு சுறு, சுறுப்பாக காணப்பட்டன, அந்த குட்டிகளோடு தாய் நாய் பாசத்தோடு விளையாடுவதை பார்த்து, மனம் பறிகொடுத்து எதிர்வீட்டு மாணவி அஸ்வினி என்பவர் தனது அண்ணன் சுரேஷ் மூலமாக, குட்டி நாய்களுக்கு பால், மற்றும் ரொட்டி போன்ற உணவுகளை கொடுத்துவிட்டார்.
தங்கைக்காக உணவு கொண்டு போன அண்ணன் சுரேஷ் தாயும், சேயும் விளையாடும் அழகையும், அதன் பாசத்தையும் பார்த்துவிட்டு தனது வீட்டில் இருந்த குடையை கொண்டுவந்து நாய்குட்டிகள் மீது வெயில் படாதவாறு பாதுகாப்பாக நிறுத்திவைத்தார். போதும் போதாதற்கு வீட்டில் இருந்த சாக்குகளை கொண்டு போய் விரிப்பாகவும் விரித்துவைத்தார்.
கீழே விரிப்பு, மேலே குடை, சாப்பிட பால், ரொட்டி என்று படு குஷியான குட்டிகள் அதிக சந்தோஷத்துடன் விளையாடின.

அவைகளின் சந்தோஷம் அதிக நாள் நீடிக்கவில்லை,
ஒரு நாள் காலை தனது குட்டிகளுக்கு உணவு தேடி நீண்ட தொலைவு ஒடிப்போய், எதையோ கவ்விக் கொண்டு திரும்பிய தாய் நாய்க்கு அதிர்ச்சி. காரணம் குட்டிகள் இரண்டையும் காணவில்லை.
கொண்டுவந்த சாப்பாடை கீழே போட்டுவிட்டு, யாராவது குட்டிகளை கொன்று புதைத்து விட்டதாக எண்ணி, அப்படி ஒரு ஆக்ரோஷத்துடன் மண்ணைத் தோண்டி, தோண்டி தேடிப் பார்த்தது. பிறகு குப்பைத்தொட்டி, அதன் இண்டு இடுக்குவிடாமல் குட்டிகளை தேடி, தேடி ஒடியது, ண்ணீர்விட்டு அழுதது.
இத்தனை நாளும் சங்கீதமாக இருந்த நாய்குட்டிகளின் சத்தத்திற்கு பதிலாக ஒருவித ஈனஸ்வர ஒலம் வரவும், சுரேஷ் என்னவென்று எட்டிப்பார்த்தார், கொஞ்ச நேரத்தில் நாய் குட்டிகள் மீது ஆசைப்பட்ட ஒருவரோ அல்லது இருவரோ, தாய் நாய் இல்லாத சமயமாக பார்த்து தூக்கிக் கொண்டு (திருடிக் கொண்டு) போய் இருக்கவேண்டும் என்பதை புரிந்துகொண்டார்.
சுரேஷ்க்கு இரண்டு நாளில் திருமணம், தலைக்கு மேல் ஏகப்பட்ட வேலைகள் காத்துகிடந்தன, ஆனாலும் தாய் நாயின் வேதனை எந்த வேலையையும் செய்யவிடாமல் மனதை போட்டு பிசைந்தது.
சரியா, தவறா, நடக்குமா, நடக்காதா, என்பதை பற்றியெல்லாம் யோசிக்காமல், ஒரு "சார்ட்' வாங்கி வந்து, நாயை எடுத்தவர்கள் தயவு செய்து திரும்ப கொண்டுவந்து ஒப்படைக்கவும் என்று, தாய் நாயே எழுதியது போல எழுதி நாய் திருடுபோன இடத்தில் ஒட்டிவிட்டார்.
தாய் நாய்க்கு என்ன நடந்தது, என்ன நடந்து கொண்டு இருக்கிறது எனத்தெரியாது, ஆனால் ஏதோ நடக்கப் போகிறது என்பது மட்டும் புரிந்தது, எழுதப்பட்ட சார்ட் முன் சாப்பிடாமல் கண்ணீர் விட்டபடியே பகல், இரவு, குளிர், வெயில் பாராது நின்று கொண்டு இருந்தது.

-----என்ன ஒரு ஆச்சர்யம்----

இருள் விலகாத ஒரு அதிகாலை வேளையில் நாயை எடுத்தவர், போஸ்டர் வாசகத்தால் மனம் மாறி, யாருமறியாமல் கொண்டுவந்து விட்டுவிட்டு போய்விட்டார், தாயை பார்த்து சந்தோஷத்தில் குட்டிக்கு ஏக சந்தோஷம், குட்டியைப்பார்த்த சந்தோஷத்தில் தாய் நாய்க்கு அதைவிட அதிக சந்தோஷம், தங்களது சந்தோஷத்தை சத்தமாக குரைத்து பகிர்ந்து கொள்ள, மீண்டும் இந்த சங்கீத குரைப்பு சத்தம் கேட்டு மனம் துள்ளிக்குதித்தபடி வந்த சுரேஷ்க்கு மனம் முழுவதும் மகிழ்ச்சி வெள்ளம்.
இரண்டு குட்டிகளில் ஒன்றாவது கிடைத்ததே என்ற சந்தோஷம் தாய் நாயின் கண்களில் அப்பட்டமாக தெரிந்தது, நீண்ட நாள் பிரிந்து பின் கூடிய சந்தோஷத்தை உருண்டுபுரண்டு விளையாடி இரண்டும் வெளிப்படுத்தியது.
பாசம் காட்டுவதில் மனிதர்களை மிஞ்சிய இந்த தாய் நாயைப்பார்த்து இப்போது சுரேஷின் கண்களில் கண்ணீர் ஆனால் இது ஆனந்த கண்ணீர்.
                                             
Posted By...- எல்.முருகராஜ்

மலேஷியாவில் விஸ்வரூபம் படம் பார்த்தவர்களின் விமர்சனம் இதோ.............

 
Vijohn - Kuala lumpur,மலேஷியா

Vijohn கோலாலும்பூரில் உள்ள Berjaya Time Square இல் இபொழுதுதான் நான் படம் பார்த்து வெளியே வந்தேன். இந்த படம் எப்படி இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்று படம் பார்காமலேயே எப்படி கருதுகிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. சொல்லப்போனால் தீவிரவாதத்தால் இஸ்லாமியர்கள் படும் அவஸ்தையை தான் காண்பிக்கிறார். கருத்து தெரிவிப்பவர்கள் படம் பார்த்த பிறகு தெரிவிப்பதே நன்று....I appreciate him...


Indsing Guy - Singapore,சிங்கப்பூர்
Indsing Guy நான் நேற்று இரவு மலேசியா சென்று இந்த படத்தை பார்த்து விட்டேன். ரொம்ப நல்லா இருக்கு. இதுல யாரையும் புன்படுத்த இல்லையே, அப்புறம் எதுக்கு இந்த கோமாளிகளுக்காக அரசு தடை செய்து இருக்கிறது. முஸ்லிம் நாடான மலேசியாவில் கூட தடை இல்லை. ஆனால் இந்தியாவில்? இந்தியாவில் உண்மையான மக்கள் ஆட்சி நடக்கவில்லை என்று பலமுறை தினமலரில் நான் கருத்து எழுதி இருக்கிறேன். அதற்கு இந்த சம்பவமும் ஒரு சான்று. இங்கு சில சுயநலம் கொண்ட கும்பல்கள்தான் ஆட்சி மற்றும் அதிகாரம் செலுத்துகின்றன. மக்கள் கருத்துக்கும் மதிப்பு கிடையாது. மக்களுக்கும் மரியாதை கிடையாது. ஒரு சாதாரண சினிமா வை பிரச்சினை ஆக்கியது இந்த சினிமா அல்ல. சுயநலம் கொண்ட கும்பல் தான் காரணம். இந்த சினிமா பத்தி யாரும் கண்டுகொள்ளவே இல்லை நேற்று வரைக்கும். எந்த பிரச்சினையும் இல்லை நேற்று வரைக்கும். ஆனால் இன்று? காரணம் யார்? இந்த சினிமா வா அல்லது இந்த இந்த சுயநல கும்பலா? இதிலிருந்தே தெரிகிறது பிரச்சினையை தூண்டி விடுவது இந்த சுயநல கும்பல் என்று. ஏராளமான சினமாக்களில் திருநெல்வேலிகாரன் ரொம்ப மோசமானவங்கடா என்று வசனம் இருக்கிறது. அதற்காக திருநெல்வேலி மக்களுக்கு இந்த திரைபடத்தை காண்பித்துவிட்டுத்தான் வெளியிடவேண்டும் என்று சொல்வது முட்டாள்தனம் இல்லையா? ஒரு ஜாதியினரை பல திரைப்படங்களில் நாட்டாமையாக காண்பித்து இருக்கிறார்கள். அதற்காக மற்ற ஜாதியினர் அனைவரும் என் ஜாதியினை எப்படி நீ இரண்டாம்பட்சமாக படம் எடுக்கிறாய் என்று புகார் செய்து வெளியிட முடியாமல் செய்தால் முட்டாள்தனம் இல்லையா? பல திரைப்படங்கள் மற்றும் தொலைகாட்சி தொடர்களிலும் அண்ணாச்சியை வில்லனாக காண்பிக்கிறார்கள். அன்னாசிமார்களுக்கு திரையிட்டு விட்டு ஓசியில் படம் பார்த்துவிட்டு மற்றவர்களுக்கு இந்த படம் வெளியிட கூடாது என்று சொல்வது முட்டாள்தனம் இல்லையா? சின்ன கவுண்டர் என்று எப்படி நீ தலைப்பு வைக்கலாம் என்று கவுண்டர் ஜாதியினர் அனைவருக்கும் ஓசியில் படத்தை பார்த்துவிட்டு வெளியிட கூடாது என்று சொன்னால் முட்டாள்தான் இல்லையா? இது திரைப்பட துறையினருக்கு ஒரு வெட்ககேடு. சும்மா சும்மா போராடும் இந்த திரைப்பட மகா நடிகர்கள் ஒரு உண்மையான கலைஞனுக்காக மட்டுமின்றி சினிமாவின் மைய வேருக்கு வந்த பிரச்சினை என்று என் போராட வில்லை? இந்த சிறுமான்மை கும்பல் என்றாவது தங்கள் மத மக்களின் ஜீவாராதன பிரச்சினைகளுக்காக போராடி இருக்கிறார்களா? தங்கள் மத வழிபாட்டுக்கு அருகில் இருக்கும் சாராய கடையை மூட கூட துப்பு இல்லை உங்களுக்கு. அவர்களுக்கு தேவையான கல்வியை குடுக்க உங்களுக்கு துப்பு இல்லை. உங்களை நம்ப கூட உங்கள் மத மக்கள் தயாராக இல்லை. ஏனென்றால் நீங்கள் ஒரு சுயநலவாதிகள்.

vinu - frankfurt,ஜெர்மனி

vinu படம் நன்றாக இருக்கிறதாம். மலேசியாவில் இருந்து நண்பன் தொலை பேசியில் தெரிவித்தான். முஸ்லிம் நாடான மலைய்சிவில் இந்த படம் பார்க்க கட்டுகடங்காத கூட்டமாம். படத்தில் முஸ்லிம் கல் பற்றி மோசமான கருத்துகள் இல்லியாம். பிறகு என்ன இந்த தமிழ் நாடு ஆட்றேச்ஸ் இல்ல கட்சிகளுக்கு.

அப்துல் கலாம் கற்றுக் கொடுத்த விவசாய தொழில்நுட்பங்களால், கார்களுடன் விவசாயிகள் வசதியான வாழ்க்கை












முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கற்றுக் கொடுத்த விவசாய தொழில்நுட்பங்க ளால் 3 மடங்கு அறுவடை செய்து வசதியாக வாழ்கிறோம் என பீகார் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். பீகார் தலைநகர் பாட்னா அருகேயுள்ள பாலிகன்ச் பகுதியில் பி.பி.கே.எஸ் என்ற விவசாய சங்கம் உள்ளது. இதில் பாலிகன்சை சுற்றியுள்ள 55 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.


இந்த பகுதிக்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கடந்த 2003ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டுவரை நான்கு முறை சென்று அங்குள்ள விவசாயிகளை சந்தித்தார். அவர்களுக்கு அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ‘டிபாக்‘ அமைப்பு திட்டத்தின் மூலம் விவசாய தொழில்நுட்பங்களை அவர் கற்றுக் கொடுத்தார். தரமான விதைகளை பயிரிடுவது, பயிர் களை பாதுகாப்பது, மண்ணின் வளத்தை பாதுகாப்பது, ராபி, காரிப் பருவங்களுக்கு இடையே மூலிகை செடிகளை பயிரிடுவது போன்ற பல தொழில்நுட்பங்கள் குறித்து அங்குள்ள விவசாயிகளுக்கு கலாம் பாடம் எடுத்தார்.

ராஷ்டிரபதி பவனில் கலாம் இருந்த போதும், அவரை நான்கு முறை சந்தித்துள்ளனர். டிபாக் அமைப்பு விஞ்ஞானிகளின் ஆலோசனை களை பாலிகன்ச் விவசாயிகள் தொடர்ந்து பின்பற்றி னர்.  இதன் விளைவாக கடந்த 10 ஆண்டுகளில் பாலிகன்ச் பகுதியில் அறுவடை 3 மடங்காக அதிகரித்துள்ளது.







இது குறித்து கோபால் சிங் யாதவ் என்ற விவசாயி கூறுகையில், ‘‘ஒரு ஏக்கரில் 9 குவிண்டால் நெல் அறுவடை செய்த நாங்கள், கலாம் ஆலோசனையால் தற்போது 27 குவிண்டால் அறுவடை செய்கிறோம். ஒரு ஏக்கரில் 5 குவிண்டால் கோதுமை அறுவடை செய்தவர்கள், தற்போது 12 குவிண்டால் அறுவடை செய்கின்றனர்’’ என்றார்.  அறுவடை 3 மடங்கு அதிகரித்ததால் இங்குள்ள விசாயிகள் கார்களுடன் வசதியான வாழ்க்கை வாழ்கின்றனர்.

குழந்தைகளின் அறிவை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்களை எளிதாக பார்க்க...


புத்தகத்தை கொடுத்து படி என்றால் குழந்தைகளுக்கு சற்றே முகம் சுழிக்கும், எப்படி படிக்க வேண்டும் என்பதை நாம் சொல்லி கொடுப்பதை விட வீடியோ மூலம் சிறு குழந்தைகள் எப்படி எல்லாம் படிக்கின்றனர் என்பதை காட்டினால் போதும் அவர்களின் அறிவு மேலும் வளரும் அரிய பல நுனுக்கங்களையும் எளிதாக கற்றுக்கொள்ள ஒரு தளம் உள்ளது.+


இணையதள முகவரி : http://www.neok12.com



 இத்தளத்திற்கு சென்று குழந்தைகளின் அறிவை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்களை எளிதாக பார்க்கலாம். Physical videos, Life Sciences , Human body , Earth & Space , Geography , Social Studies , English , Math ,  History , Games , Activities போன்ற பல்வேறு துறைகளில் எந்தத்துறை சார்ந்த வீடியோக்கள் பார்க்க வேண்டுமோ அதை சொடுக்கி அதிகப்படியான் வீடியோக்களை பார்க்கலாம்.ஓவ்வொரு வீடியோவும் குழந்தைகளுக்கு பயனுள்ள வீடியோவாகவே இருக்கிறது.ஓயாமல் படி படி என்று சொல்வதை விட இது போல் குழந்தைகளுக்கு வீடியோ மூலம் அறிவை புகட்டும் தளங்களை தெரியப்படுத்தினால் அவர்களின் அறிவு மேலும் பெருகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

சிந்திக்க வைத்தது - நியூட்டன்

ஒரு முறை நியூட்டன் அவருக்கு 17
வயதில்
வகுப்பறையில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பாம்பு அவருடைய கால்
விரலில் கடித்துவிட்டது. அப்போதும் அவர் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து
படித்துக் கொண்டிருக்கிறார். ஆசிரியர் இது பற்றி கேட்கும்போது,
" பாம்பு
என் காலில்தான் கடித்தது,
என்னுடைய
Mind
'ல்
அல்ல" என்கிறார்.

இது எப்பூடி இருக்குது ?..


|


நம்மைப் பற்றிக் கேவலமாகப் பேசுபவர்களுக்கும் எழுதுபவர்களுக்கும்
சரியான பதில் என்ன தெரியுமா? மௌனம் .


|

சுவர்க்கம் - நரகம்

சுவர்க்கம் - நரகம் என்பது எதோ மேல் உலகில் உள்ளது போல எல்லா மதங்களிலும் கூறப் பட்டுள்ளன.
ஆனால் இன்பம் மற்றும் துன்பம் அனைத்தையும் அனுபவிப்பது நமது உடலுடன் சேர்ந்த ஆன்மாவே. இந்த உடலை விட்ட பின்னர் இந்த ஆன்மா எந்த இன்பத்தையோ அல்லது எந்த துன்பத்தையோ எதன் மூலம் அனுபவிக்கும். இந்த தூல உடலுக்கு மட்டுமே வலியும், சந்தோஷமும். தூலம் விட்ட பின்னர் எவ்வளவு உணவு வைத்தாலும்எப்படி சாப்பிட முடியும். எத்தனை அழகான பெண் இருந்தாலும் எப்படி ரசிக்க முடியும். நெருப்பிலே போட்டு எரித்தாலும் எப்படி நமக்கு வலிக்கும்.நமக்கு தேகம் என்று ஒன்று இருந்தால் மட்டுமே அது வேகும்.ஆன்மா எப்படி வேகும். ஆக சுவர்க்கம் மற்றும் நரகம் என்பதுநம் உடலை விட்ட பிறகு ஏற்படுவதல்ல. இந்த உடல் இருக்கும் போதே அதை அடைவதுதான்.
முதலில் நரகம் என்றால் என்ன ?நர + அகம் = நரகம் நரர்களாகிய மனிதர்கள் வாழ்கின்ற இந்த இடம் தான் நரகம். அதாவது நாம் நரன் என்னும் மனித தரத்துடன் வாழ்வது நரகம்.
நரன் நிலையை விட்டு இறை நிலையை அடைவதுதான் சொர்க்கம். அதாவது கடவுள் நிலை அறிந்து அம்மயமாதலே சுவர்க்கம் எனப்படும்.


அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு

தமிழ் நாட்டை சொர்க்க பூமியாக்க சில யோசனைகள்...

பதிவர் : ஜெகதீஸ்வரன்

அறிவு மிக்க தமிழர்களை (நாம் மட்டும் தான் சொல்கிறோம்) அதிகம் கொண்ட நாடு தமிழ்நாடு. ஊற்றி வைத்த பாத்திரத்தின் உருவத்திறகு தக்கவாறு மாறிடும் நீர் போல (நன்றாக கவணியுங்கள் பச்சோந்தி என சொல்லவில்லை) உலகமுழுதும் தன்னை நிலைபடுத்தி கொண்டிருக்கும் தமிழனை ஈன்றெடுத்த தாய் நாடு. தமிழ் படங்களைப் பார்த்தும் தமிழ் தாகம் அடங்காமல் வேறு மொழி படங்களையும் தமிழில் பார்க்க துடிக்கும் தாய்மொழி நேசர்களின் நாடு. இப்படி எத்தனையோ சிறப்புகள் இருந்தும் தமிழ்நாடு சொர்க்க பூமியாக மாறவில்லை.
அரசாங்கமும் தமிழச்சியின் தாலிகயிற்றை (இப்ப நிறைய பேர் தாலியே வேணாங்கராங்களாம், விஜய் தொலைக்காட்சியில் பார்த்தேன்) அடகுகடையில் வைத்து டாஸ்மார்க் நடத்திவருகிறது. (அடகுகடையில் வைத்த தாலியை சில பெண்கள் மீட்டு வந்தாலும் தாலியை அணிவதில்லை. ஏன் தெரியுமா. அதற்குள் கணவன்மார்களெல்லாம் பரலோகம் போய்விடுகின்றார்கள்). பாரத பிரதமரே காலில் விழுந்து வணங்கிய சின்னபிள்ளை அவர்கள் ஐந்தாம் முறை தமிழக முதல்வராக சேவை செய்துகொண்டிருக்கும் கலைஞர் கருணாநிதியை நேரில் பார்த்து மதுவை ஒழிக்க நடவெடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டாராம். அதற்கு கருணாநிதி அதிக வருமானம் வருகின்ற துறை அதில் கைவைக்க முடியாது என மறுத்துவிட்டாராம். மிகவும் வருத்தப்பட்டு மகளிர் மாத இதழ் ஒன்றில் கூறியிருக்கிறார் அவர்.
தீப ஒளி திருநாளுக்காக 200 கோடி விற்பனை என இலக்கு நிர்ணயம் செய்து, 240 கோடி விற்பனை ஒரே நாளில் ஈட்டிக் கொடுத்த துறையை பற்றி தெரியாமல் புகார் செய்துவிட்டார்.
பாஸ்மார்க் எடுக்கவில்லையென
கவலை கொள்பவர்களுக்கெல்லாம் இருக்கிறது
டாஸ்மார்க்
இப்படி டாஸ்மார்க் ஹைக்கூ எழுதி உங்களை வேதனைப்படுத்த விரும்பவில்லை. அதற்கு பதிலாக தமிழ் நாட்டை சொர்க்க பூமியாக்க சில யோசனைகளை சொல்லப் போகின்றேன். யாராவது அரசுக்கு சொந்தக்கார்கள் இருந்தால் சொல்லவும்.
முதல் யோசனை
கணவன் குடித்துவிட்டு இறந்து போக பெண்களெல்லாம் இங்கே கைம்பெண்களாக இருக்கின்றனர். அவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கவும் அதன் காரணமாய் பணம் சம்பாதிக்கவும் அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தலாம். புரோக்கர் தொழிலில் மிக அதிக லாபம் கிடைப்பதாக தின நாளிதளில்களில் புரோக்கர்கள் பேட்டி கொடுத்திருக்கிறார்கள். எனவே அந்த துறையையும் அரசே ஏற்கலாம்.
இரண்டாவது யோசனை
இப்போது தமிழகத்தில் குழந்தைகளை கற்பழித்து கொலை செய்வது பெருகி இருக்கின்றது. அதை உடனடியாக கவணத்தில் கொண்டு வேறு மாநிலத்திலிருந்து குழந்தைகளை இறக்குமதி செய்யலாம். அந்த குழந்தைகளுக்கு விலை நிர்ணயம் செய்து ரேசன் கடைகள் மூலமாக விற்கலாம்.
மூன்றாவது யோசனை
கள்ளுக்கடை மறியல் நடத்திய புண்ணியவான் பெரியாரின் வாரிசு என்பதால் கள்ளை மட்டும் விட்டுவிட்டு அபின், ஹெராயின் போன்ற பொருட்களையும் பாக்கெட் போட்டு டாஸ்மார்கில் விற்கலாம்.
நான்காவது யோசனை
இளைஞர்களுக்கு தொழில் கல்விதான் மிகவும் முக்கியம். தகவல் தொழிநுட்பம் சற்று சரிந்து போய் உள்ளதால்
உங்களுக்கும் ஏதாவது யோசனை தோன்றினால் கண்டிப்பாக குறிப்பிடவும். ஏனென்றால் தமிழகத்தை சொர்க்கமாக மாற்றுவது நம் கடமை. அட என்னடா இப்படி கேடு கெட்ட யோசனையெல்லாம் சொல்லிவிட்டு சொர்கமுன்னு சொல்லரான்னு நினைக்காதீங்க, எல்லோரும் செத்து போய் நரகத்துக்கு போயிட்டா தமிழ்நாடு சொர்கமாக தானே இருக்கும். அததான் சொன்னேன். எப்பூடி….
மிகவும் வேதனையான விசயத்தை கையாண்டு இருக்கின்றேன் என தெரியும். இதை படிப்பவர்கள் மனமும் வேதனை அடைந்தால் அது தான் உண்மையான மனம். அந்த மனதிற்கு நான் தலை வணங்குகிறேன்.

நமது உடலின் உறுப்புக்களிலேயே மிகவும் சிறந்த உறுப்பு எது?

சுந்தரமடம் என்பது சுவாமி சிரானந்தரின் மடம். அந்த மடத்தில் ஏராளமான சீடர்கள் இருந்தனர். குருநாதர் மிகவும் நல்லவர். சீடர்களுக்கு நல்லறிவையும், ஞானத்தையும் போதிப்பவர். ஒரு முறை கூட அவர்கள் தவ வலிமையிலிருந்து தவறி விடக் கூடாது என்பதில் மிகுந்த கவனமுடன் இருந்தார் குருநாதர்.


ஒரு முறை அவர் தனது சீடர்களை அழைத்தார். ஒரு பெரிய மரத்தடியில் அவர்களுடன் அமர்ந்தார். ""சீடர்களே! நான் இப்போது ஒரு கேள்வி கேட்பேன். அந்தக் கேள்விக்கு சரியான பதிலைக் கூறுகிறவனே இந்த மடத்தில் தலைமை சீடனாக பணி செய்ய தகுதி உடையவன். அதோடு என் ஆயுளுக்குப் பின்பு இந்த மடத்தின் தலைமை குரு பதவியும் அந்தச் சீடனுக்கே கிடைக்கும்,'' என்றார். பல புத்தியுள்ள சீடர்கள் அப்போதே தலைமை சீடர் பதவியும், பிற்காலத்தில் குருநாதர் பதவியும் தங்களுக்குத்தான் என்று முடிவு செய்து விட்டனர். மற்ற எல்லா மாணவர்களும் போட்டியில் வெல்லும் ஆவலுடன் காத்திருந்தனர்.


குருநாதர் தன் சீடர்களைப் பார்த்து, ""நமது உடலின் உறுப்புக்களிலேயே மிகவும் சிறந்த உறுப்பு எது? மிகவும் மோசமான உறுப்பு எது?'' என்று கேட்டார். உடனே சீடர்கள் மிகவும் மகிழ்ந்தனர். "இது என்ன? இந்த பதில் கூடவா தெரியாமல் இருப்போம். இத்தனை சாதாரணமான கேள்வியை குரு கேட்டு நம் அறிவைத் தாழ்வாக எடைப் போட்டு விட்டாரே' என்று சலித்துக் கொண்டனர். சீடர்கள் ஒவ்வொருவராக எழுந்தனர். சிலர், ""நமது உறுப்புக்களிலேயே மிகவும் சிறந்த உறுப்பு கைகள்தான். அவைதான் நமக்காக அதிகம் உழைக்கின்றன. எனவே, அவை தான் சிறந்த உறுப்பு என்றும், அசுத்தங்களை வெளியேற்றும் உறுப்பே மோசமான உறுப்பு என்றனர்.


எல்லாரும் அசுத்தங்களை வெளியேற்றும் உறுப்புகளையே மோசமான உறுப்புகள் என்றனர். மற்றபடி உயர்ந்த உறுப்புகள் என்பதற்கு கண்கள் பார்க்க உதவுவதாகவும், கால்கள் போக்குவரத்துக்கு உதவுவதாகவும் இப்படி காது, வயிறு, பல், நாக்கு என்று பல உறுப்புகளையும் அவைகளின் உபயோகத்தையும் கூறி குறிப்பிட்டனர். குருநாதர் அனைத்தையும் வெகு கவனமாக கேட்டார். அந்த மாணவ சீடர்களுள் முரளி என்றொரு சீடன் இருந்தான். அவன் எப்போதுமே மிகவும் நல்ல சிந்தனையாளன். நிதானித்து பேசுபவன்; யோசித்து செயல்படுபவன். எல்லாரிடமும் பணிவுடனும், அன்புடனும் பேசிப் பழகுபவன். குருநாதர் கேள்வி கேட்ட போது அவன் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான். எனவே, குருநாதர் அவனிடம், ""சீடனே! என் கேள்வியின், பதிலை நீ கூறலாமே,'' என்று கேட்டார். உடனே முரளி தன் குருநாதரை பணிந்து எழுந்தான்.
""குருநாதரே! இந்த உலகில் மிகவும் பெருமை வாய்ந்த உறுப்பு நமது நாக்குதான். ஏனென்றால், ஒரு மனிதனை மற்றவர்கள் மதிக்கும்படி செய்வது அவனது நாக்குதான். அந்த நாக்கின் பேச்சைத் தான் மக்கள் வெகுவாக கவனிக்கின்றனர். அந்தப் பேச்சின் தரத்தை வைத்து அவர்கள் மனிதர்களை மதிக்கின்றனர். ஒரு மனிதனுக்கான மிகச் சிறந்த மதிப்பீட்டு உறுப்புகளில் மிகச் சிறந்த உறுப்பு நாக்குதான்,'' என்று கூறினான். அதைக் கேட்ட குருநாதர் மிகவும் மகிழ்ந்தார். ""முரளி! உன் பதில் சரியானது. இனி மனித உறுப்புகளில் மிக மோசமான உறுப்பு எது என்று கூறு பார்க்கலாம்,' என்றார். உடனே முரளி, "நாக்குதான் உறுப்புகளிலேயே மிகவும் மோசான உறுப்பு...' என்றான். இதைக் கேட்ட மாணவர்கள் சிரித்தனர்.


""இப்போதுதான் நாக்கை மிகவும் உயர்ந்த உறுப்பு என்றாய். உடனே மோசமான உறுப்பு என்கிறாயே?'' என்று கேட்டனர். ""ஆமாம்! நல்லதைப் பேசி ஒரு மனிதனை உயர்வாக எண்ணச் செய்வதும் நாக்குதான். மோசமாகவும், இழிவாகவும் பேசி ஒரு மனிதனின் தரத்தைச் தாழ்த்தி அவனை மோசமான மனிதனாக மதிப்பிட வைப்பதும் நாக்குதான். எனவே, இந்த உலகின் மிகவும் மோசமான உறுப்பு நாக்குதான்,'' என்று விளக்கினான். அவனது பதிலே சிறந்த சரியான பதில் என்று குருநாதர் முடிவு செய்தார். அவனை தலைமை சீடனாக ஒப்புக் கொண்டார். 



... நம் நாக்கின் முக்கியத்துவத்தை உணர்ந்தீர்களா? நம்மை உயர்வடைய செய்வதும், தாழ்வடையச் செய்வதும் நாக்குதான். எனவே, கவனமாக பேச வேண்டும். சரியா?

நன்றி தினமலர்! rolleyes.gif

கட்டுரை ஒன்றில் வயதானவரகளுக்கு சில அறிவுரைகள்

ஜோனாதன் ஸ்விப்ட் என்பவர் 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரபலமான ஆங்கில எழுத்தாளர்.

கட்டுரை ஒன்றில் அவர் வயதானவரகளுக்கு சில அறிவுரைகள் கூறியிருக்கிறார்.

1. கடுகடுப்பாகவோ, வருத்தம் உள்ளவர்களாகவோ, சந்தேகப்படுகிறவர்களாகவோ இருக்க வேண்டாம்.

2. சிறுவர்கள் விரும்பினால் ஒழிய அவர்களுடைய கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம்.

3. அப்போதைக்கப்போது ஜனங்களிடம் தோன்றும்
நவீன முறைகளையும், நடத்தைகளையும் பற்றி ஏளனம் செய்ய வேண்டாம்.

4. ஒரே நிகழ்ச்சியை அதே நபர்களிடத்தில் அடிக்கடி சொல்ல வேண்டாம்

5. பிறர் பொருளை விரும்ப வேண்டாம்

6. உடம்பையும், உடைமையையும் சுத்தமாக வைத்துக் கொள்ள மறக்க
வேண்டாம். அவை சுத்தமாக இல்லாவிட்டால் பிறருக்கு உங்கள் மீது வெறுப்பும் அலட்சியமும் ஏற்படும்

7. இளைஞர்களின் நடத்தைகளை அதிகமாகக் கண்டிக்க வேண்டாம்.
அவர்களால் அந்த வயசில் பிழைகள் செய்யாமல் இருக்க முடியாது.

8. பிறருடைய சமாச்சாரங்களை அவர்களுடைய வேலைக்காரர்கள் மூலம் கேட்டுத் தப்பான
அபிப்பிராயம் கொள்ள வேண்டாம்.

9. பிறர் கேட்டால் ஒழிய அவர்களுக்குப் புத்திமதிகள் சொல்ல வேண்டாம்.

கீழே உள்ள இரண்டும் அடியவன் மனதில் தோன்றி நானாகச் சேர்த்துக் கொண்டது.

10. எங்க காலத்தில் அப்படி இருந்தது என்று வேண்டாத பழங்கதைகள் கூற வேண்டாம்.

11. அரசனாக இருந்தால் கண்ணை மூடிக்க் கொள்ள வேண்டும், வேலைக்காரனாக இருந்தால்
காதை மூடிக்கொள்ள வேண்டும். வயதானால் இரண்டையும் மூடிக்கொள்ள வேண்டும்

வயதானவர்கள் முடிந்தவரை இந்த அறிவுரைகளைக்
கடைப்பிடித்தால்,முதுமை என்பது சுகமே !
----------------------------------------------------------------------------------------------------------------------
அன்புடன்
அ.இராமநாதன்

பிராணிகள் பேசுகின்றன - "ஆடு" ஆகிய எங்கள் அவல நிலையை பாருங்கள்


உங்கள் இல்லங்களில் எங்களை வளர்ப்பது கசாப்பு கடைகாரனுக்கு விற்று பொருள் சம்பாதிக்கவே வளர்கின்றீர்கள். பொருள் பேராசையால் , வள்ளலார் கூறும் "உண்மை அன்பு" இல்லாமல், நெஞ்சில் வஞ்சம் வைத்து பரிவு காட்டுவது போல் டிகின்றீர்கள்.
"வஞ்ச மனத்தில் வசியாத பாதம்" என வடலூர் இராமலிங்க சுவாமிகள் தனது பாடலில் கூறி உள்ளதை , இங்கு சிந்த்தனை செய்யுங்கள்.
எங்களுக்கு நீங்கள் போதுமான உணவு கொடுக்காததால், நாங்கள் வீடு, வீடாக சென்று அங்குள்ள கொடிகளை உண்டு உடல் வளர்க்க போகும் போது அங்குள்ளவர்கள் தடியாலும் கற்களாலும் அடிக்கும் அடிகளை தாங்கி கொள்கிறோம்? ஏன்? எங்கள் குழந்தைகளை காப்பாற்ற வேண்டி வாழ நினைகின்றோம். இப்படி எல்லாம் பாடு பட்டு உடம்பை வளர்த்தால் நீங்கள் இறைச்சி கடைகாரனுக்கு விற்று பொருள் ஈட்டுகின்றீர்கள். இந்த பணத்தினால் உங்களுக்கும் , உங்கள் குடும்பங்களுக்கும் மற்றும் உங்களை சார்ந்தவர்களுக்கும் ீமை பயக்குமே தவிர நன்மை ஏற்படாது.

ஐந்தறிவு உடைய நாங்கள் , சைவ உணவு சாப்பிட்டே உடம்பை வளர்த்து "சாத்வீக" தன்மையுடன் வாழ்கின்றோம். ஆறறிவு படைத்த நீங்கள், ஏன் "எங்களை கொன்று தின்று கடவுளின் இயற்கை விளக்கத்தை நீங்களே மறைத்து கொள்கின்றீர்கள்?" மனித தேகம் பெற்றவர்களால் தான் கடவுளின் "இயற்கை விளக்கத்தை" பெற முடியும்.வடலூர் இராமலிங்க சுவாமிகள் , பிற உயிர்களை கொன்று தின்பவர்களுக்கு "கடவுளின் இயற்கை விளக்கம்" அகத்திலும் , புறத்திலும் வெளிப்படவே மாட்டது என்று கூறுகிறார்கள்.
"தீவினையின்றி ஈட்டல் பொருள் " என்றனர் சான்றோர். இதனை எல்லாம் சிந்தனை செய்வீர்களாக ...


Anbudan,
Karthikeyan.J

வேட்டைக்காரன்: ஒரு டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம்




தசாவதாரம் படத்தில் பல்ராம் நாயுடுவின் 'மொழித் திறமை' குறித்து அவரது அசிஸ்டென்ட் வெள்ளைக்கார அதிகாரிகளிடம் கூறுகையில், சார், 'நான்கு மொழிகளில் தெலுங்கு' பேசுவார் என்று பிரமாதப்படுத்திக் கூறுவார். அந்தக் கணக்காக ஆகியுள்ளது வேட்டைக்காரன் பட விளம்பரங்கள்.வேட்டைக்காரன் படம் வெளியாகி 30 நாட்களையே எட்டியுள்ள நிலையில் 40 நாட்கள் என்று கூறி போஸ்டர் அடித்துக் கலக்கியுள்ளனர் சென்னையில்.டிசம்பர் 18ம் தேதி வேட்டைக்காரன் ரிலீஸானது. நேற்றுடன் அப்படம் 30 நாட்களைத் தொட்டுள்ளது. ஆனால் அதற்குள் 40 நாட்கள் போஸ்டரை ஒட்டி விட்டனர் சென்னையில். இதைப் பார்த்து விஜய் ரசிகர்களுக்கே கொஞ்சம் போல குழப்பம் ஏற்பட்டுள்ளது.இது மட்டுமா... வேட்டைக்காரன் படத்துக்கு ஒரு டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம் என்று ஆடித் தள்ளுபடி ரேஞ்சுக்கும் போஸ்டர்களை ஒட்டி அசத்தி வருகின்றனர் விஜய் ரசிகர் மன்றத்தினர். மேலும், குறைந்த கட்டணத்தில் என்ற புது பிட்டையும் வேட்டைக்காரன் பட போஸ்டர்கள் மீது ஒட்டி வருகின்றனராம் தியேட்டர்காரர்கள்.ஏன் இந்தக் குழப்பம், குளறுபடி என்று தெரியவில்லை.

பிராணிகள் பேசுகின்றன III - "கோழியாகிய" எங்கள் நிலை சொல்கின்றோம் - கேளுங்கள்

உங்கள் வீடுகளில் எங்களை உணவுக்காகவே வளர்கின்றீர்கள். வளர்க்கும்போது, எங்களிடம் அன்பு காட்டுவது போல் வஞ்சகத்துடனே வளர்கின்றீர்கள். என்றாவது ஒரு நாள் எங்களை கொன்று விடுவீர்கள் என நாங்கள் நினைத்தது இல்லை . உங்கள் குழந்தைகளை காப்பது போல் எங்களை ஒரு நாளாவது பார்த்தது உண்டா ?எங்களுக்கு முறையான உணவு கிடைக்காதலால் புற்று நோய் , ஷய ரோகம் , பெரிய வியாதி உள்ளவர்கள் துப்பும் சளியை ஓடிபோய் சாப்பிடுகிறோம். அது போதமால் , பூரான் , செய்யான் , கரப்பான் பூச்சி , சிறு பாம்புகள் , பல்லி , சாக்கடையில் உள்ள புழுக்களையும் உண்கின்றோம். அதனால், எங்கள் உடல் உறுப்புகளும் , தசையும் அசுத்தத்தில் இருந்து உருவானது தானே ! எங்களை கொன்று சாப்பிடுவது உங்களுக்கு அருவருப்பாக இல்லையா? இதை எல்லாம் சகித்து கொண்டு எப்படி சாப்பிடுகின்றீர்கள்? சிறிது சிந்தித்து பாருங்கள்,

மேலும் , எங்களை கொன்று விற்பனை செய்பவர்கள் எங்களை கொண்டு போகும் போது,கீரையை கட்டுவது போல் கால்களை சேர்த்து மொத்தமாக கட்டி சைக்கிளில் தலைகீழாக தொங்க விட்டு கொண்டு போவதும், எங்கள் உயிரை போக்குவதற்காக அடுப்பில் நீரை கொதிக்க வைத்து, கொதிக்கும் அந்த நீரிலே அப்படியே சிறிதும் இரக்கமில்லாமல் தூக்கி போடுகிறீர்களே ! இது நியாயமா ?

உங்கள் உடலில் சிறிது வெந்நீர் பட்டு விட்டால் என்ன பாடு படுகின்றீர்கள்? உங்களுக்கு வலிப்பது போன்று தானே எங்களுக்கும் வலிக்கும். இது தான் "ஆறறிவு" படைத்த இரக்கம் உள்ள மனிதர்களாகிய நீங்கள் செய்யும் நற் செயலா ?
ஆறறிவு என்று சொல்லி கொண்டு "கொன்று தின்னும்" மனித தேகம் பெற்றவர்களே ! மனித தேகம் பெற்றவர்களால் தான் கடவுளின் "இயற்கை விளக்கத்தை" பெற முடியும்.எங்களை போன்ற "பிராணிகளை" கொன்று தின்று கடவுளின் இயற்கை விளக்கத்தை நீங்களே மறைத்து கொள்ளாதீர்கள். வடலூர் இராமலிங்க சுவாமிகள் , பிற உயிர்களை கொன்று தின்பவர்களுக்கு "கடவுளின் இயற்கை விளக்கம்" அகத்திலும், புறத்திலும் வெளிப்படவே மாட்டது என்று கூறுகிறார்கள்.

எங்களை கொன்று தின்பவர்களை , இறைவனிடம் முறை இடுவோம். எங்கள் சாபம் சுனாமியாகவும், பூகம்பம் ஆகவும்,சாலை விபத்தாகவும்,
இயற்கை சீற்றங்கலாகவும் கண்டிப்பாக வருவோம். கொன்று தின்பவர்களை விடமாட்டோம்.

எதற்காக மனித தேகம் எடுத்தீர்கள் என சிந்தித்து பாருங்கள்?
Anbudan,
Vallalar Karthikeyan

பிராணிகள் பேசுகின்றன -II

உயிர்கள் மீது கருணை காட்டவேண்டும். அதுவே பக்திக்கு அடிப்படை.
கருணை இல்லாதவனுக்கு இறைவன் அருள் கிடைக்காது
.




சீவகாருணியம். கடவுளருளைப் பெறுவதற்கு முக்கிய சாதனமென்பது மல்லாமல் அந்த அருளின் ஏகதேச விளக்க மென்றும் அறிய வேண்டும். சீவகாருணியம் ஆன்மாக்களின் இயற்கைவிளக்கம் ஆதலால், அந்த இயற்கைவிளக்கமில்லாத சீவர்களுக்குக் கடவுள் விளக்கம் அகத்திலும் புறத்திலும் வெளிப்படவே மாட்டாது.

பிராணிகள் பேசுகின்றன - "பசுவாகிய" எங்கள் நிலை சொல்கின்றோம் - கேளுங்கள்

பசுவாகிய எங்கள் நிலை சொல்கின்றோம். :---

உங்கள் உடல் நலம் பெறவும் , வளமாக வாழவும், உங்கள் குழந்தைகளுக்கு உணவு அளிக்கவும் என்னுடைய பாலை என்னுடைய நலம் கூட கருதாமல் உங்களுக்கு கொடுத்து உதவுகிறேன். நீங்களோ, உங்களுக்கு உதவாத பொருள்களாகிய தவிடு, வைக்கோல் , கழுநீர் , பிண்ணாக்கு முதலியவற்றை எங்களுக்கு உணவாக கொடுத்து அன்பு காட்டுவது போல் நடிகின்றீர்கள்.
எருதுக்கு வண்டியில் சுமக்க முடியாத அளவு பளுவை ஏற்றி இழுக்க செய்கிறீர்கள். அதனால் , இழுக்க முடியாத போது சாட்டையாலும் , தடியாலும் சிறிதும் இரக்கம் இல்லாமல் அடிகின்றீர்கள்.
இப்படி உழைத்து வயதான காலத்திலோ, உடல் நலம் குன்றி விட்டாலோ எங்களை கசாப்பு கடைகாரனுக்கு விலைக்கு விற்றுவிடுகின்றீர்கள். உங்கள் குடும்பங்களில் உள்ள வயதானவர்களை அப்படி விலைக்கு விற்று விடுவீர்களா?
உங்களுக்கு எங்கள் மீது இரக்கமோ, நன்றி உணர்வோ இருந்தால் இப்படி பட்ட செயல்களை செய்வீர்களா ?

Anbudan,
Karthikeyan.J

பிராணிகள் பேசுகின்றன - கேளுங்கள்

நற்குணம் கொண்ட நல்லோர்களே ! தாய் மார்களே ! சகோதர்களே ! .. உங்கள் பாதங்களை தொட்டு கோடிமுறை கும்பிடுகின்றோம். நாங்கள் முறைஇடுவதை சற்று செவிமடுத்து , கேட்டு சிறிதாவது சிந்த்திப்பீர்களாக...,

இரக்கம் கொண்ட இதயம் உடையவர்களே ! இந்த உலகில் வாழ பிறந்த உங்களுக்கு மனம் மகிழ பண்டிகைகள் வருகின்றன . அந்த நாட்களில் நீங்கள் குடும்பத்துடனும் , குழந்தைகளோடும் கூடி மகிழ்ச்சியுடன் இருக்க விரும்பி , உங்கள் உணவுக்காக எங்களை கொன்று, எங்கள் உடலை சிதைத்து அதை புசித்து மகிழ்கின்றீர்கள்.

அந்த சமயங்களில் , எங்கள் குழந்தைகள் ஆதரவு இல்லாத அநாதை பிள்ளைகளாகி விடுகின்றனர்.நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருப்பது போல,நாங்களும் எங்கள் குழந்தைகளுடன்
மகிழ்ச்சியாக இருக்க வேண்டாமா? உங்களுடைய அற்ப சந்தோசத்திற்காக அப்பாவியாகிய நாங்கள் தான் பலியாக வேண்டுமா ? இதை தயவு செய்து சிந்திக்க வேண்டும் . இனி வருகின்ற பண்டிகை நாட்களிலும் , மற்ற காலங்களிலும் எங்களை கொள்ளும் எண்ணத்தை விட்டு விட வேண்டும்.
எங்கள் குழந்தைகளுடன் நாங்களும் இருக்க எங்களை வாழ வைக்க தயவு செய்யுங்கள் . எங்களுடைய அவல நிலையை சொல்கிறோம். சற்று கேட்டு சிந்தியுங்கள் ...

========================================="உயிர் கொலையும் , புலை பொசிப்பும் உடையவர்கள் உறவினத்தார் அல்லர் !! அவர்கள் புற இனத்தார் " - வள்ளலார்

"உயிரெலாம் ஒரு நீ திருநடம் புரியும் ஒருதிரு பொதுவென அறிந்தேன் " - வள்ளலார் (அகவல்)

"எவ்வுயிரும் பொதுஎனக் கண்டிரங்கி உபகரிக்கின்றார் யாவர் அந்தச் செவ்வியர்தம் செயல்அனைத்தும் திருவருளின் செயல் எனவே தெரிந்தேன்" - வள்ளலார் (தனித் திருஅலங்கல்)
==========================================

அனுப்பியவர்,
Karthikeyan

ஆறறிவு

1. உடலால் மட்டும் உணர்வது ஓரறிவு - இது தாவரங்களுக்கு.

2. உடல், நாக்கால் உணர்வது ஈரறிவு - இது கடல்வாழ் உயிரினங்களுக்கு.

3. உடல், நாக்கு, மூக்கால் உணர்வது மூன்றறிவு- இது ஊர்வினங்களுக்கு.

4. உடல், நாக்கு, மூக்கு, கண்ணால் உணர்வது நான்கறிவு- இது பூச்சி இனங்களுக்கு.

5. உடல், நாக்கு, மூக்கு, கண், காது ஆகிய ஐந்தால் உணர்வது ஐந்தறிவு- இது வினங்கினங்களுக்கு.

6. உடல், நாக்கு, மூக்கு, கண், காது, மூளை ஆகியவற்றால் அறிவது ஆறறிவு- இது மனிதர்களுக்கு.

-ஆ.கோ.தேவராசன்-




உங்க் வோட்டு உரிமைய காப்பாத்திட்டு, கொஞ்சம் அறிவுரையும் சொல்லிட்டுப் போங்க...