கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பழங்குடி இனத்தின் கடைசிப் பெண் _ துருகானினி

துருகானினி அல்லது ட்ரூகாணினி அல்லது துருகர்நானர் (Truganini அல்லது Trugernanner, 1812 - மே 8, 1876) என்பவர் தாஸ்மேனிய நாட்டின் தொன்மையான பழங்குடி இனத்தின் கடைசிப் பெண் ஆவார். திராவிட இனத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்ட இவரது இனம் கிபி 1800 வாக்கில் அந்நாட்டில் குடியேறத்தொடங்கிய ஆங்கிலேயர்களால் அழியத்தொடங்கியது. மிருகங்களை போல துப்பாக்கி முனையில் இவர்களை வேட்டையாடிய ஆங்கிலேயர்கள், அதற்கு 'கறுப்பனை பிடித்தல்' (Black Catching) என்றும் பெயர் வைத்தனர். இவ்வாறான கொடூரங்களால் சுமார் 5000 வரை இருந்த இவர்களது எண்ணிக்கை 1830 ஆம் ஆண்டு 75-ஆக குறைந்தது. இவர்களில் கடைசியாக மிஞ்சியது துருகானினி மட்டுமே. இவரும் 1876-ம் ஆண்டு சிறையிலேயே இறந்தார். இவரோடு தாஸ்மேனிய பழங்குடி இனம் முழுமையாக அழிந்தது.



ஆங்கிலேய ஆக்கிரமிப்புக்கு முன்

தாஸ்மேனிய பழங்குடிகள் இந்திய-திராவிட இனத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலிய கண்டத்திலிருந்து இங்கு வந்து குடியேரியவர்கள். அதன் பிறகு சுமார் 10.000 ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியா, தாஸ்மேனிய ஆகியவற்றை இணைத்த நிலமானது கடல் நீரில் மூழ்கிவிட்டது. இதன் பிறகு மற்ற உலகிலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட இவர்கள், நாகரீக வளர்ச்சி பெறாதவர்களாக வளர்ந்தனர். விவசாயம், ஆடு மாடு வளர்ப்பு, தற்க்காப்பு போன்ற எதையும் இவர்கள் அறிந்திருக்கவில்லை. இவர்களின் கடைசி பரம்பரையிலேயே துருகானினி வந்தார்.


ஆங்கிலேய ஆக்கிரமிப்புக்கு பின்




இறுதி நாட்களில் இறுதி இனக்குடிகளுடன் துருகானினி (இடது ஓரம்)
..

இதன் பிறகு சுமார் 1800 வாக்கில் ஆங்கிலேயர்கள் தாஸ்மேனிய நாட்டில் வந்து குடியேறினார்கள். தாஸ்மேனியாவை ஒரு வெள்ளை மக்களின் தேசமாக மாற்ற எண்ணிய இவர்கள், அங்கு வாழ்ந்த பழங்குடி மக்களை கொல்லத்துவங்கினர். இதன் பிறகு கி.பி 1828-ம் ஆண்டு அங்கு ஆளுனராக நியமிக்கப்பட்ட ஜோர்ஜ் ஆர்தர் என்பவன்., பழங்குடி மக்களை கொல்வதை சட்டமாக்கினான். இதன் படி ஆண், பெண்களை கொல்பவர்களுக்கு 3 இங்கிலாந்து பவுண்டும், குழந்தைகளை அடிமைப்படுத்தி கொண்டு வருபவர்களுக்கு ஒரு இங்கிலாந்து பவுண்டும் ஊக்கத்தொகையாக கொடுக்கப்பட்டது. 'கறுப்பனை பிடித்தல்' (Black catching) என்ற இந்த சட்டத்திற்குப் பிறகு அநேகமாக அனைத்து வெள்ளையர்களும் கையில் துப்பாக்கியுடன் காட்டிற்குள் நுழைந்தனர். கண்ணில் பயத்துடன் குடும்பம் குடும்பமாக தப்பியோடிய பழங்குடிகளை, மிருகங்களைப் போல வேட்டையாடினர். எந்த விதமான தற்காப்பு கலைகளையும் அறிந்திராத இவர்கள், வெள்ளையர்களின் துப்பாக்கிக்கு மொத்த மொத்தமாக பலியாகினர். இதன் காரன்மாக 1800 வாக்கில் சுமார் 5000 வரை இருந்த இவர்களின் மக்கள் தொகை, முப்பதே ஆண்டுகளில் வெறும் 75-ஆக சுருங்கியது. அடிமையாக இருந்த குழந்தைகள் அனைவரும் இறந்துவிட்டனர். இதற்குள் எழுந்த உலக எதிர்ப்பின் காரணமாக எஞ்சிய 72 ஆண்களும் 3 பெண்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் துருகானினியும் ஒருவர். இவர்களும் சரியான முறையில் உணவும், தண்ணீரும் கொடுக்கப்படாமல் கொடுமைப்படுத்தப்பட்டனர். இதன் காரணமாக 1869-ல் துருகானினியுடன் சேர்த்து இரண்டு பெண்களும் ஒரு ஆணுமே மிஞ்சினர். இது வெளியுலகிற்குத் தெரிந்தவுடன் இங்கிலாந்து நாட்டில் இருந்து வந்த மருத்துவர்கள் இவர்களை பரிசோதனை என்ற பெயரில் கொடுமைப்படுத்தத் தொடங்கினர். மேலும் இதற்குள் இறந்த அந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணின் உடலையும் கூறுபோட்டனர். இதையெல்லாம் கண்ட துருகானினி தான் இறந்த பிறகு தனது உடலை இவ்வாறு கூறுபோட வேண்டாம் எனவும், தங்கள் வழக்கப்படி கடலில் புதைத்து விடும் படியும் கேட்டுக்கொண்டார். இதன் பிறகு 1876-ல் உடல் நலிந்த நிலையில் துருகானினி மரணமடைந்தார்.


இறப்பிற்குப் பின்

துருகானினி இறந்தப்பின் அவரின் கோரிக்கையை நிராகரித்த வெள்ளையர் அரசாங்கம் அவரை காட்டின் ஒரு மூலையில் புதைத்தது. பின்பும் இவரின் எலும்புக்கூட்டை தோண்டியெடுத்த வெள்ளையர் அரசு, தாஸ்மேனிய தேசிய அருங்காட்சியகத்தில் 'தாஸ்மேனிய கடைசி பழங்குடிப்பென்' என்ற பெயரில் காட்சிக்காக வைத்தனர். இதை உலக மக்கள் எதிர்த்த நிலையில் துருகானினியின் எலும்புக்கூட்டை அருங்காட்சியகத்தின் மற்றொரு அறையில் வைத்துப் பூட்டினர்.

இறுதியடக்கம்

இதன் பிறகு துருகானினி இறந்து சரியாக ஒரு நூற்றாண்டு ஆகிய பின்னர் 1976-ம் ஆண்டு தாஸ்மேனியாவில் திரண்ட துருகானினியின் ஆதரவாளர்கள், அருங்காட்சியகத்தின் காவலை மீறி உள்ளே நுழைந்து துருகானினியின் எலும்புக்கூட்டை மீட்டனர். பின் இதனை சகல மரியாதைகளுடன் தகனம் செய்த இவர்கள், சாம்பலை அவரின் ஆசைப்படியே கடலில் கரைத்தனர்.

பிச்சைக்காரருக்கு ஓட்டு




நாராயண நட் என்ற பிச்சைக்காரர் உ.பி. மாநில கிராமம் ஒன்றில் பஞ்சாயத்து தலைவராக ஆக்கப்பட்டிருப்பதை பற்றிய உங்கள் கருத்தென்ன?

விடுதலைப் பெற்ற பிறகு பலதலைவர்களை பதவியில் அமர்த்தி நாட்டு மக்கள் ஏறக்குறைய பிச்சைக்காரர்களாக ஆகிவிட்டார்கள் அவனவன் திருவோடு எடுத்துக் கொண்டு தெருவில் சுற்ற வேண்டியது ஒன்றுதான் பாக்கி !

மேலும் பிச்சைக்காரரும் இந்தியக் குடிமகன் தானே ஒரே ஒரு படத்தில் நடித்து விட்டாலே கோட்டையில் கொடியேற்ற கனவு காணும் நடிகர்களை விட


பதவி சுகத்திற்காக கொள்கைகளை பறக்க விட்டு விட்ட தலைவர்களை விட பிச்சைக்காரர் ஒன்றும் குறைந்தவர் அல்ல!

பிச்சைக்காரருக்கு ஓட்டுப் போட்டால் ஒரு சௌகர்யம் இருக்கிறது அவர் வெற்றிப் பெற்றப்பிறகு கண்காணாமல் எங்கும் ஓடிப்போக மாட்டார் தெருவில் தான் சுத்திக் கொண்டிருப்பார்



இன்னும் ஒரு விஷயமும் இருக்கிறது தான் பதவியை பயன் படுத்தி சொத்துக்கள் சேர்த்தால் படத்துக்கு கதையெழுதி கோடி கோடியாய் ஏற்கனவே சம்பாதித்தேன் என்று புருடாக்களை அவிழ்த்து விட முடியாது

இருந்தாலும் கிராம மக்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டும் இவருக்கும் நிறைய பிள்ளைகளும் பேரன் பேத்திகளும் இருக்கிறார்கள்



Posted by,
யோகி ஸ்ரீஇராமானந்த குரு

தில்லையாடி வள்ளியம்மை - 1

"வாழ்க நீ, எம்மான், இந்த
வையகத்து நாட்டிலெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி
விடுதலை தவறிக் கெட்டு
பாழ்பட்டு நின்ற தாமோர்
பாரத தேசந் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி
மஹாத்மா நீ வாழ்க, வாழ்க "
என்பார் மகாகவி பாரதியார்.

அன்னைத் தமிழ் மொழி மீது மாறாக் காதல் கொண்டவராம், நம் தேசத் தந்தை
காந்தியடிகள், தெய்வப் புலவர் திருவள்ளுவரின், திருக்குறளிலும் பெரும்
ஈடுபாடு கொண்டிருந்தார்.

கற்க கசடற கற்பவை கற்ற பின்
நிற்க அதற்குத் தக,
எனும் குறள் நெறியைத் தம் உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர் நம்
காந்தியண்ணல்.

1930 ஆம் ஆண்டு நடைபெற்றது உப்புச் சத்யாகிரகப் போராட்டம்.........

அதன் பின்பு 1932 ஆம் ஆண்டு, காந்தி - இர்வின் ஒப்பந்தம் மீறப்பட்டதைக்
கண்டித்து நாடு முழுவதும் எழுந்த சத்தியாகிரகப் போராட்டத்தில்,
காந்தியடிகள் கைது செய்யப் பட்ட போது, அதை எதிர்த்து, திருப்பூரில் தடையை
மீறி ஊர்வலம் நடத்த ஏற்பாடு செய்யப் பட்டது.

' வெள்ளையனே வெளியேறு ', இயக்கம் 1942 ஆம் ஆண்டு, நடந்தது.

1937 ஆம் ஆண்டு, உப்புச் சத்தியாகிரகப் போராட்டம் மற்றும் மரியல்
போராட்டம்.

1940 ஆம் ஆண்டு தனி நபர் சத்தியாகிரகப் போராட்டம்.......

மனித உரிமைக்காக, தென்னாப்பிரிக்காவில், காந்தியடிகளோடு இணைந்து
பாடுபட்டவர், ஐயனாரின் மனம் கவர்ந்த, தில்லையாடி வள்ளியம்மை.
இந்தியருக்குத் தேசியமும் இல்லை......... தேசியக் கொடியும் இல்லையென
கொக்கரித்த ஒரு ஆங்கிலேயனின் ஆணவப் பேச்சைச் சகிக்காத வள்ளியம்மை, தான்
உடுத்தியிருந்த சேலையின் முந்தானையை அக்கணமே கிழித்து, அவன் முகத்திற்கு
நேரே, இது தான் எங்கள் தேசியக் கொடி என்று துணிந்து கூறினார் .
கிழித்துக் காட்டிய அந்த முந்தானையில் இருந்த, காவி, வெள்ளை, பச்சை
வர்ணங்கள்தான் மூவர்ணக் கொடியானது என்பது குறிப்பிடத்தக்கது.

16 வயதே நிரம்பிய, இறப்பின் தருவாயில், உயிர் பிரியும் முன்பு கூட, சிறை
செல்ல சித்தமாயிருந்த உத்தமி வள்ளியம்மையைப் பற்றி அண்ணல் தன் சுய
சரிதையில், மனம் நெகிழ்ந்து எழுதியுள்ளார்.

இந்திய விடுதலைக்கு ஆணி வேரான உரிமைப் போர் தென்னாப்பிரிக்கப்
போராட்டம்.... இதில் தன் இன்னுயிரையே அர்ப்பணித்த தில்லையாடி
வள்ளியம்மையின் நினைவுச் சின்னத்தை தென்னாப்பிரிக்காவில், 1914ம் ஆண்டு
ஜூலைத் திங்கள் 15ம் நாள் காந்தியடிகள் திறந்து வைத்தார்.

இப்படி எத்தனை வள்ளியம்மைகள், நம் சுதந்திரப் போராட்டத்தில் தங்கள்,
இன்னுயிரையும் ஈந்தார்கள் என்பதை நம் வரலாறு கூறும்.

இன்றும் நம் இந்தியப் பெண்டிரின் இரத்தத்திலும், ஆழ் மனத்திலும் அண்ணல்
காந்தியடிகள் காட்டிய சத்தியப் பாதை வேறூன்றி இருக்கிறது என்பதை நம்
அன்றாட வாழ்க்கையிலும் காண முடிகிறது.............

எத்தனையோ பெண்கள் தங்கள் வாழ்க்கைப் போராட்டங்களின் சூழலில் கூட, அஹிம்சை
முறையைத் தானே இன்றும் கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்? அது
மட்டுமல்லாமல், குடும்ப நன்மை கருதி, எத்துணை சத்தியாகிரகங்கள் நடத்திக்
கொண்டிருக்கிறார்கள்? ஒரு குடும்பம் நல்ல மேன்மையான நிலைக்கு
உயருவதற்கும், குழந்தைகளின் எதிர்காலம் சிறக்கவும், ஒரு பெண் எத்துணை
தியாகங்கள் மேற் கொள்கிறாள் என்பதும் அனைவரும் அறிந்ததே.

ஆக காந்தியம் இன்றும் நம் இந்தியப் பெண்களின் வடிவில், ஒளி வீசிக்
கொண்டுதான் இருக்கிறது என்பதை நல் மனம் கொண்டோர் எவரும் மறுக்க இயலாது!!




பவள சங்கரி

உலக தினங்களின் பட்டியல்

காதலர் தினம், அன்னையர் தினம், நட்பு தினம் என ஒரு சில தினங்கள்தான் தற்போது இந்தியாவில் பிரபலமடைந்து வருகிறது. இவற்றுக்கே இதென்ன அன்னையர் தினம், நட்பு தினம் என்று தனித்தனியாக ஒரு தினம் என்று சலித்துக் கொள்பவர்கள் ஏராளம்.இவர்கள் எல்லாம் இந்த பட்டியலைப் படித்துவிட்டு என்னத்தான் சொல்வார்களோத் தெரியவில்லை.
உலக தினங்களின் பட்டியல்

பிப்ரவரி 14, காதலர் தினம்‌

பி‌ப்ரவ‌ரி 28, உலக அ‌றி‌விய‌ல் ‌தின‌ம்
மார்ச் 2, உலக புத்தக தினம்
மார்ச் 8, உலக மகளிர் தினம்
மார்ச் 22, உலக தண்ணீர் தினம்
ஏப்ரல் 1, முட்டாள்கள் தினம்
ஏப்ரல் 7, உலக சுகாதார தினம்
ஏப்ரல் 22, உலக பூமி தினம்
ஏப்ரல் 25, உலக இறைச்சல் விழிப்புணர்வு தினம்
மே 1, உழைப்பாளர் தினம்
மே 8, உலக விலங்குகள் பாதுகாப்பு தினம்
மே 11, உலக அ‌ன்னைய‌ர் ‌தின‌ம்
மே 15, உலக குடும்பங்கள் தினம்
மே 18, உலக அருங்காட்சியக தினம்
மே 31, உலக புகையிலை எதிர்ப்பு தினம்
ஜுன் 5, உலக சுற்றுச்சூழல் தினம்
ஜுன் 12, உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்
ஜுலை 1, உலக நகைச்சுவை தினம்

ஜுலை 11, உலக மக்கள் தொகை தினம்
ஆகஸ்ட் 5, உலக நட்பு தினம்
ஆகஸ்ட் 12, உலக இளைஞர் தினம்
செப்டம்பர் 21, உலக அமைதி தினம்
செப்டம்பர் 26, உலக சுற்றுலா தினம்
அக்டோபர் 1, உலக முதியோர் தினம்
அக்டோபர் 5, உலக ஆசிரியர் தினம்
அக்டோபர் 10, உலக மனவளர்ச்சி குன்றியோருக்கான தினம்
அக்டோபர் 16, உலக உணவு தினம்
நவம்பர் 11, உலக நினைவூட்டல் தினம்
நவம்பர் 16, உலக பொறுமை தினம்
நவம்பர் 20, உலக குழந்தைகள் தினம்
நவம்பர் 21, உலக தொலைக்காட்சி தினம்
டிசம்பர் 1, உலக எய்ட்ஸ் தினம்
டிசம்பர் 3, உலக உடல் ஊனமுற்றோர் தினம்
டிசம்பர் 10, உலக உரிமைகள் தினம்

கிறுக்கியது !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫

பங்குச்சந்தை வரலாறு

இந்திய பங்குச்சந்தை (Indian Stock Market)

இந்தியாவின் முதல் பங்குச்சந்தை 1875 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மும்பை பங்குச்சந்தை (BSE – Bombay Stock Exchange) இந்தியாவின் பழமையான பங்குச்சந்தை ஆகும். இது 1875 ஆம் ஆண்டு 318 உறுப்பினர்களுடன் தனது பங்கு வர்த்தகத்தை தொடங்கியது. அதன் பிறகு 1965 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் முழுமையாக அங்கீகரிக்கப்பட்டது. இந்தியாவின் மற்றொரு பங்குச்சந்தை தேசிய பங்குச்சந்தை (NSE – National Stock Exchange) ஆகும்.

மும்பை பங்குச்சந்தை (Bombay Stock Exchange)

மும்பை பங்குச்சந்தை இந்தியாவின் பழமையான பங்குச்சந்தை ஆகும். இது 1875 ஆம் ஆண்டு 318 உறுப்பினர்களுடன் தனது பங்கு வர்த்தகத்தை (Trading) தொடங்கியது. அதன் பிறகு 1965 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் முழுமையாக அங்கீகரிக்கப்பட்டது.

இது சென்செக்ஸ் (SENSEX) என்ப்படும் அளவுகோலால் (Benchmark) 1986 ஆம் ஆண்டு முதல் கணக்கிடப்படுகிறது. இது மும்பை பங்குச்சந்தையின் அடையாள குறியீட்டு எண் ஆகும். சென்சிட்டிவ் இண்டெக்ஸ் (Sensitive Index) என்பதன் சுருக்கமே சென்செக்ஸ் ஆகும். இக்குறியீட்டு எண் அதிகரிக்க அதிகரிக்க பங்குச்சந்தை (Stock Market raising) நன்றாக உள்ளதாகவும், குறைய குறைய பங்குச்சந்தை வீழ்ச்சி (Stock Market falling) அடைவதையும் குறிக்கும்.

சென்செக்ஸ் (SENSEX) பங்குச்சந்தையில் நன்றாக வர்த்தகம் செய்துகொண்டிருக்கும் முதல் முப்பது (30) கம்பனிகளின் பங்குகளை கொண்டு கணக்கிடப்படுகிறது. இதனால் மும்பை பங்குச்சந்தை பி.எஸ்.சி-முப்பது (BSE-30) என்றும் அழைக்கப்படுகிறது.

பி.எஸ்.சி (BSE) சென்செக்ஸ்யை தவிர மற்ற புகழ்பெற்ற பங்கு குறியீடுகள்,

BSE 500
BSE 100
BSE 200
BSE PSU
BSE MIDCAP
BSE SMLCAP
BSE BANKEX
BSE Teck
BSE Auto
BSE Pharma
BSE Fast Moving Consumer Goods (FMCG)
BSE Consumer Durables
BSE Metal


பி.எஸ்.சி பரப்பல் (BSE Broadcast)

பி.எஸ்.சி (BSE) யின் வெளிப்புற சுவற்றில் மிகப்பெரிய திரையகத்தின் (Wide Screen) மூலமாக நடப்பு பங்குகளின் புள்ளிகள் திரையிடப்படும். இதே விரங்களை NDTV தொலைக்காட்சியிலும் காணலாம்.

தேசிய பங்குச்சந்தை (National Stock Exchange – NSE)

தேசிய பங்குச்சந்தை மும்பையில் நிருவப்பட்டது. இது நிஃப்டி (Nifty) என்னும் அளவுகோலால் (Benchmark) கணக்கிடப்படுகிறது. நிஃப்டி, பங்குச்சந்தையில் நன்றாக லாபம் கொழித்து கொண்டிருக்கும் முதல் ஐம்பது (50) கம்பனிகளின் பங்குகளை கொண்டு கணக்கிடப்படுகிறது. இதனால் நிஃப்டி-ஐம்பது (Nifty-50) என்றும் அழைக்கப்படுகிறது.

எதை‌ச் சொ‌ன்னாலு‌ம் கே‌ட்கவே மா‌ட்டா‌ர் எ‌ன்று புல‌ம்பு‌ம் பெ‌ண்க‌

சில பெண்கள் எப்போதும் பேசிக்கொண்டே இருப்பார்கள். இ‌ந்த வளவள‌ப் பே‌ச்‌சினா‌ல் ‌‌‌ந‌ன்மை நட‌க்குமோ இ‌ல்லையோ, ‌நி‌ச்சயமாக ‌தீமைக‌ள் நட‌க்கு‌ம்.

இந்த `வளவள' பேச்சு சில கணவர்களை கடுப்பேற்றி விடும். அதுவே தேவையில்லாத சர்ச்சைகளுக்கு வித்திட்டு விடும். எனவே பெண்கள் அளவோடு பேசுங்கள். அதிகமாக பேசுவதால்தான் அது வாக்குவாதமாக மாறி சண்டையில் முடியும்.

குறைவாக பேசும்போது, உங்கள் பேச்சுக்கு கணவர் மதிப்பு கொடுப்பார். நிறைய பேசுவதை கேட்பதற்கு ஆண்களுக்கு பொறுமை கிடையாது. தேவையில்லாமல் பேசுவதால், தேவையான பேச்சும் கேட்கப்படாமல் போய்விடக்கூடும்.

எதை‌ச் சொ‌ன்னாலு‌ம் கே‌ட்கவே மா‌ட்டா‌ர் எ‌ன்று புல‌ம்பு‌ம் பெ‌ண்க‌ள், முத‌லி‌ல் எதையுமே சொ‌ல்லாம‌ல் இரு‌ந்து பாரு‌ங்க‌ள். அ‌ப்போதுதா‌ன் எ‌ன்ன நட‌க்‌கிறது எ‌ன்றே‌த் தெ‌ரிய‌வி‌ல்லையே எ‌ன்று கணவராக ‌சில ‌விஷய‌ங்களை‌க் கே‌ட்க‌த் துவ‌ங்குவா‌ர்‌.

அ‌ப்போது‌ம் லபலப எ‌ன்று எ‌ல்லாவ‌ற்றையு‌ம் கொ‌ட்டி‌விடா‌தீ‌ர்க‌ள். ‌சிலவ‌ற்றை சுரு‌க்கமாக‌க் கூறு‌ங்க‌ள். ‌சிலவ‌ற்றை மறைமுகமாக‌க் கூறு‌ங்க‌ள். ‌சிலவ‌ற்றை மழு‌ப்‌பி‌விடு‌ங்க‌‌ள். அ‌ப்படி‌த்தானே பல ஆ‌ண்க‌ள் பே‌சி‌‌க் கொ‌ண்டிரு‌க்‌‌கிறா‌ர்க‌ள். அ‌ந்த முறையை‌ப் ‌பி‌ன்ப‌ற்‌றினா‌ல் ‌நீ‌ங்க‌ள் பேசுவதை ‌நி‌ச்சய‌ம் கணவ‌ர் ‌நிதானமாக‌க் கே‌ட்க‌த் துவ‌ங்குவா‌ர்.

ந‌ண்ப‌ர்க‌ளிடமு‌ம் வளவளவெ‌ன்று பேசுவது உ‌ங்க‌ள் ‌மீதான ந‌ன்ம‌தி‌ப்பை‌க் குறை‌த்து‌விடு‌ம். எ‌ப்போதாவது பேசு‌ம் நபரு‌க்கு‌க் ‌கிடை‌க்கு‌ம் ம‌‌ரியாதையை ‌நீ‌ங்க‌ள் கவ‌னி‌த்து‌ப் பாரு‌ங்க‌ள் அது உ‌ங்களு‌க்கே‌ப் பு‌ரியு‌ம்.

எனவே அ‌திகமாக‌ப் பேசுபவ‌ர்‌க‌ள் அ‌திகமாக‌க் கே‌ட்ப‌தி‌ல்லை. கே‌ட்காததா‌ல் பல ‌விஷய‌ங்களை அ‌றி‌ந்து கொ‌ள்ளாம‌ல் போ‌கிறா‌ர்க‌ள். எனவே குறைவாக‌ப் பேசு‌ங்க‌ள். ‌நிறைவாக வாழு‌ங்க‌ள்.

தாய்மொழியைப் போற்றிப் பேணுதல்

தாய்மொழியைப் போற்றிப் பேணுதல்
 
     உலகின் முதல்மொழி தமிழ் போல் தொல்லியல் மொழிகளான கிரேக்கம், இலத்தீன், எபினேயம், அராபி ஆகியவற்றுடன் மக்கட் தொகையில் பெரிய நாடான சீன நாட்டில் வழங்கிவரும் ஒரே மொழியான சீனமும் செவ்வியல் மொழி.
 
     அதனைப் பேணி வளர்க்க சீன அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் தாய்மொழிப் பற்றும், ஈடுபாடும் உடைய அனைவரும் மனத்தில் ஏற்றுச் செயல்படுத்த வேண்டியது:
 
     தினமணிக் கதிர் 18.04.2010:
 
          
சீனாவின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், குறிப்பாக செய்திகளில் எப்ப்போதாவது ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்துவது உண்டு. அதுகூட சொற்களை முழுமையாகச் சொல்லாமல் அதன் சுருக்கு எழுத்துகளை மட்டுமே சொல்வார்கள். எடுத்துக்காட்டாக: ‘நேசனல் பேஸ்கட் பால் அசோசியேசன்என்று சொல்லாமல் ‘என்.பி.எஎன்று குறிப்பிடுவார்கள்.
 
           இனி அது கூடாது என்று எல்லா தொலைக்காட்சி நிலையங்களுக்கும், தொடர்புடைய அரசுத்துறை இப்போது உத்தரவு இட்டிருக்கிறது. சீன மையத் தொலைக் காட்சி மற்றும் பீகிங் தொலைக்காட்சி நிலையங்கள் இவற்றில் சிறப்பானவை. வட்டார நிலையங்களுக்கும் உத்திரவு போயிருக்கிறது.
 
           அப்படியானால் இந்த சொற்களுக்கு மாற்று என்ன? தவிர்க்க முடியாத நிலைகளில் அந்த சொற்களுக்கு சீன மொழியில் விளக்கம் தரப்பட வேண்டும் என்கிறது சீன அரசு.
 
           ஆங்கில சொல் சுருக்கங்களைப் பயன்படுத்தக் கூடாது என்பது விளையாட்டுச் செய்தி ஒலிபரப்பிற்கு மட்டும் அன்றி அரசியல், பொருளாதார செய்திகளுக்கும் பொருந்தும். ‘ஜி.டி.பிஎன்றால் ‘கிராஸ் டொமஸ்டிக் புராடெக்ட்’. தமிழில் சொல்வதென்றால் ‘மொத்த உள்நாட்டு உற்பத்தி’ . சீனாவில் பொருளாதாரச் செய்தி அறிக்கையில் இனி ‘ஜி.டி.பிஎன்று சொல்லக்கூடாது. மொத்த உள்நாட்டு உற்பத்தி போல சீன மொழியில் எப்படிச் சொல்ல வேண்டுமோ அப்படிச் சொல்ல வேண்டும்.
 
           சீன மொழியின் தூய்மையைக் காப்பாற்ற வேண்டும் என்று அரசியல் அறிவுரையாளர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டிருக்கிறது.
 
           இப்படி ஒரு நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் இன்னும் சில ஆண்டுகளில் சீன மொழி வேற்று மொழிகள் கலப்பால் தூய்மை கெட்டுவிடும் என்கிறார் சீன பன்னாட்டுப் பதிப்பகக் குழுவின் தலைமை ஆசிரியர் உவாங் யூயி.
 
           அங்கே இங்கே எப்போதாவது பயன்படுத்தப்படும் ஆங்கிலச் சொற்களுக்கே சீனாவில் தடை. மொழியின் புனிதத்திற்கு அவ்வளவு முதனமை.
 
           தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களும் மொழி ஆர்வலர்களும், நமது அரசியலாரும்,  ஊடகங்களும் சற்றே இதில் தங்கள் எண்ணத்தைச் செலுத்தினால், செவ்வியல் தமிழ் மொழியை வளர்கிறோம் என்று தம்பட்டம் அடிப்பதில்  உண்மை இருக்கும்.  
 
அன்புடன்   செ.நாராயணசாமி

தாய் பால் கொடுப்பது மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது

தாய் பால் கொடுப்பது மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது

இந்த நாட்டில் பிறந்த குழந்தைகளுக்கு, 6 மாத காலம்வரை தாய்ப்பால் கொடுக்கத்தவறின, 60 % பெண்களுக்கு இதோ ஒரு விழிப்பணர்ச்சி. ஒரு வருடம் வரை தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தாங்களாகவே, தங்களுக்கு ஏற்படும் மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் – க்கான ஆபத்தினை குறைக்கின்றனர்.
தாய்பால் கொடுப்பது, குழந்தை மற்றும் தாய் இருவருக்கும் பயனலிக்கிறது என உதாரணங்கள் கருத்துரைக்கிறது, தாய்பால் கொடுக்காத பெண்களைவிட, தங்கள் குழந்தைகளுக்கு ஒரு வருடத்திற்குமேல் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களில், இதய நோய் ஏற்படும் சாத்தியம் 10 % குறைவு என ஆராய்சியாளார்கள் கண்டறிந்துள்ளனர். மேலும், தாய்பால் கொடுப்பது, உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் ஆபத்தினை 12 % - உம் மற்றும், சர்க்கரை நோய் மற்றும் உயர் கொலஸ்டிரால் ஏற்படுவதை சுமார் 20 % -உம் குறைக்கிறது எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
இக்கண்டுபிடிப்புகள் அப்ஸ்டிட்ரிக்ஸ் மற்றும் கைணகாலேஜ் எனப்படும் மாத இதழில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் குழந்தை பெற்றெடுக்கும் 26 மில்லியன் பெண்களில், 20 மில்லியன் பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு, கொடுக்கப்படவேண்டிய அளவு தாய்பால் நடைமுறையை, 6 மாத கால அளவிலும் கொடுப்பதில்லை. சுமார் 24 % பெண்கள் மாத்திரம் பரிந்துரைக்கப்பட்டுள்ளபடி, தங்கள் குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திலிருந்து, தாய்ப்பால் கொடுக்கத்தொடங்குகின்றனர்.
90 % பெண்கள் அப்படி செய்தால், ஒவ்வொரு வருடமும், 2.5 இலட்சம் குழந்தைகள் இறப்பதிலிரிந்து பாதுகாக்கபடுவர், என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். மறுபக்கத்தில், 6 மாதங்கள் வரை பிறந்த குழந்தைகளுக்கு தாய்பால் மாத்திரம் கொடுக்கப்படவேண்டும் என பறிந்துரைக்கப்பட்டு இருப்பினும், நான்கில் ஒரு பங்கு பெண்கள் மாத்திரமே அப்படிச்செய்கின்றனர்.
இந்த ஆய்வுப்படிப்பு, தாய்பால் கொடுப்பது தாய் மற்றும் குழந்தை இருவரையும் உடல் நலமிக்கவராக ஆக்குகிறது என்று, இந்திய தாய்பால் மேம்பாடு பின்னல் வலை, தேசிய ஒருங்கிணைப்பாளர் டாக்டர். அருண் குப்தா கூறுகிறார்,.
அவர் மேலும் கூறுகையில், இந்தியப்பெண்கள் தாய்பால் கொடுப்பதை இப்பொழுதுள்ள 25 % - த்திலிருந்து 100 % -த்திற்க்கு உயர்த்தினால், பெண்களில் இதயஇரத்தநாள நோய்கள் ஏற்படுவதை குறைக்கலாம்.. துரதுஷ்டவசமாக இந்தியாவில் 1992 – லிருந்தே தாய்பால் கொடுக்கும் நிலை உயரவில்லை.
பிட்ஸ்பர்க் பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் 1994 –லில், 1,39,681 மாதவிடாய் நின்ற பெண்களிடம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் பெண்கள் நீண்ட நாட்கள் தாய்பால் கொடுத்ததால், அவர்களுக்கு மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் மற்றும் இதய இரத்தநாள நோய்கள் ஏற்படும் ஆபத்து குறைகிறது என்று கூறுகின்றனர்.
இதய நோயால் பெண்கள் இறப்பது, ஒரு முக்கிய காரணமாகும், எனவே நம்மை நாமே பாதுகாத்துக்கொள்வது, மிக முக்கியமான ஒன்றாகும். தாய்பால் கொடுப்பது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு மிக அவசியம் என்பதை பல வருடங்களாக நாம் அறிந்திருக்கிறோம். அப்படி தாய்பால் கொடுப்பது தாயின் உடல் நலத்திற்கும் நல்லது என்று இப்போது நாம் அறிகிறோம் என பிட்ஸ்பர்க் பல்கலைகழக மருத்துவம், எபிடிமியாலாஜீ மற்றும் அப்ஸ்டெட்ரிக்ஸ் துறையில் துணை பேராசிரியராக உள்ள எலியாநோர் பிம்லா ஷ்வார்ஸ் என்பவர் கூறுகிறார்.
தாய்பால் கொடுப்பதின் பயன் நீண்ட நாட்களுக்கு வரும் மற்றும் ஒரு பெண் தான் கடைசி தாய்பால் கொடுத்ததிலிருந்து சுமார் 35 ஆண்டுகள் நலமுடன் கடந்து சென்றுள்ளார் என டாக்டர். ஷ்வார்ஸ் மற்றும் அவருடன் பணிபுரியும் குழுவினர் கண்டறிந்துள்ளனர்.
தாய்பால் கொடுப்பது, உடலில் சேரும் கொழுப்பை குறைப்பதின் மூலம், இதய நோய் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது என்று ஆய்வுகள் கருத்துரைக்கின்றன. மேலும், தாய்பால் கொடுக்கும் போது தூண்டப்பட்டு வெளிப்படும் ஹார்மோன்களும் முக்கிய பங்கு வகிக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
இதற்கு முந்தைய ஆய்வில், பிறந்தவுடன் தாய்பால் உட்கொள்ளும் குழந்தைகள், தாய்பால் உட்கொள்ளாத குழந்தைகளைவிட சுறுசுறுப்பானவர்களாக இருப்பார்கள், என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
6.5 வயதுக்கு உட்பட்ட, 17,046 குழந்தைகளில், பாலூட்டுதல் ஏற்படும் அறிவுக்கூர்மை மேல் மேற்கொண்ட உலகின் மிகப்பெரிய ஆய்வில், பிறந்தது, முதல் ஒரு வருட காலம் வரை தாய்பால் மாத்திரம் கொடுக்கப்பட்ட பிள்ளைகள் அதிகளவு நுண் அறிவு ஈவு (ஐ க்யூ) கொண்டவர்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட காக்னிடிவ் (யோசித்தல், கற்றல் மற்றும் ஞாபக சக்தி) வளர்ச்சி உள்ளது என்பதை கண்டறிந்துள்ளனர்.

''காமராஜர் யாரு தெரியுமா..?'' ''விஜய் தெரியுமா..?''






ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் இந்தியாவிலேயே முதன் முதலில் தனது சொத்துக்கணக்கை பகிரங்கமாக வெளியிட்டவர், நாமக்கல் மாவட்ட கலெக்டரான சகாயம்தான்! 'எளிமையானவர், மக்கள் எளிதில் சந்திக்கக் கூடியவர்' என்று சொல்லப்படும் சகாயத்தை சந்திக்க நாமக்கல் சென்றிருந்தோம்.

''அதிகாரிங்க யாருக்கும் தகவல் சொல்லாம சர்ப்ரைஸா சில இடங்களுக்கு நீங்க விசிட் போனா நல்லா இருக்குமே சார்...'' என்று நாம் சொல்ல... சற்றே யோசித்தவர்... ''அவ்வப்போது செய்வதுதான். வாங்களேன், இப்பவும் போய்ப் பார்க்கலாம்!'' என்று தயாரானார். அடுத்த சில நிமிடங்களில் கலெக்டர் சகாயம், அவரது உதவியாளர் மாதேஸ்வரனுடன் கார் கிளம்பியது. நாமும்தான் இலவச இணைப்பாக! ''எங்கே முதல்ல போகலாம்..? நீங்களே சொல்லுங்க...'' என்று கலெக்டர் கேட்டதும், நமக்கிருந்த சில தகவல் அடிப்படையில் ராசிபுரம் செல்லும் ரூட்டில் போகச் சொன்னோம்.

வழியில் 85.குமாரபாளையம் என்ற ஒரு குக்கிராமத்தில் வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வேலை நடந்து கொண்டிருந்தது. அங்கு காரை நிறுத்தச் சொல்லி இறங்கிய கலெக்டர், வேலை செய்தவர்களிடம், ''நான்தான் உங்க மாவட்டத்தோட கலெக்டர் சகாயம். உங்களுக்கு இங்க கூலியெல்லாம் சரியா கொடுக்குறாங்களா..?'' என்று விசாரித்தார். ''அதெல்லாம் சரியா கொடுத்துடுறாங்க சாமி... ரேஷன் கடையில அரிசி, பருப்புதான் சரியா கிடைக்கலை!'' என்று வயதான பாட்டி ஒருவர் சொல்ல... அவரிடம், ''ஏம்மா... இந்த வயசுல நீ எதுக்கு வேலைக்கு வர்ற..? உன் பசங்க எல்லாம் என்ன பண்றாங்க..?'' என்று பரிவோடு விசாரித்தார்.

''மூணு பசங்க சாமி... வயசான காலத்துல யாரும் கண்டுக்க மாட்டேங்குறாங்க. இப்படி ஏதாவது வேலைக்கு வந்து நாலு காசு சம்பாதிச்சாதான் கஞ்சி குடிக்க முடியும்!'' என்று பாட்டி புலம்ப... ''பெத்தவங்களைக் கண்டுக்காமத் தவிக்கவிடுற பசங்களை ஜெயில்ல போடுறதுக்குக்கூட இப்போ சட்டம் இருக்கு. உன் பசங்களை ஜெயிலுக்கு அனுப்பிட லாமா, சொல்லுங்க...'' என்றார். பதறிப்போன பாட்டி, ''வேணாம் சாமி... அவனுங்க நல்லபடியா பொழைக்கட்டும். இருக்குற வரைக்கும் ஏதோ உழைச்சு, கஞ்சியோ கூழோ குடிச்சுக்கிறேன்! ரேஷன் கடையில அரிசி, பருப்பு மட்டும் போடச் சொல்லுங்க, போதும்!'' என்று கேட்டுக் கொண்டார்.





செல்போனை எடுத்த சகாயம், மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரிக்கு போனை போட்டார். ''ராசிபுரம் பக்கத்துல 85.குமாரபாளையம்ங்குற கிராமத்துல ரேஷன் பொருள் எதுவும் சரியா கிடைக்கிறதில்லையாமே! நீங்க உடனே அந்தக் கிராமத்துக்குப் போய் அங்கே என்ன நடக்குதுன்னு வாட்ச் பண்ணி சாயந்திரத்துக்குள் ரிப்போர்ட் கொடுங்க!'' என்று உத்தரவிட்டவர், அங்கிருந்த பதிவேட்டை சரிபார்த்துவிட்டுக் கிளம்பினார்.

வழியில் ஒரு பிரிவு ரோடு வர, அந்த வழியில் காரை விடச் சொன்னார் கலெக்டர். 'ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பொ.கல்பாளையம்' என ஒரு போர்டு தெரிய, அந்த ஸ்கூலுக்கு போனார். கலெக்டரின் காரைப் பார்த்ததும் பள்ளியின் தலைமையாசிரியர் மிரண்டு விட்டார்!


''எல்லோரும் போய் அவங்கவங்க வேலையைப் பாருங்க...'' என்று சொல்லிவிட்டு, 6-ம் வகுப்புக்குள் நுழைந்தார் சகாயம். ஒரு மாணவனை எழுப்பி ஆங்கிலப் புத்தகத்தில் ஒரு பத்தியை வாசிக்கச் சொன்னார். அந்த மாணவன் தடுமாற... அடுத்த மாணவனை படிக்கச் சொன்னார். அவனும் தடுமாறினான். ''இந்த வகுப்புக்கு இங்கிலீஷ் எடுக்குற டீச்சரை வரச் சொல்லுங்க!'' என்று சொல்லியனுப்ப... ஆங்கில ஆசிரியர் பயந்தபடியே வந்து நின்றார். ''உங்களுக்குக் கல்யாணம் ஆகிடுச்சா சார்..? எத்தனை குழந்தைங்க..?'' என்று கலெக்டர் கேட்க, ''ஆகிடுச்சு சார்... ரெண்டு குழந்தைங்க..'' என்று சொன்னார். ''எங்க படிக்கிறாங்க..?'' என்று கலெக்டர் கேட்க, ஒரு தனியார் பள்ளியின் பெயரைச்சொன்னார்.

''நீங்க இப்படி பாடம் சொல்லிக் கொடுத்தா... நாளைக்கு இந்தக் குழந்தைங்க படிச்சுட்டு வரும்போது, டவுன்ல படிச்சு வர்ற உங்க குழந்தைங் களோட எப்படி போட்டி போட முடியும், சொல்லுங்க..? கொஞ்சமாவது அக்கறையோட சொல்லிக் கொடுங்க சார். மறுபடியும் எப்ப வேணும்னாலும் ஸ்கூலுக்கு வருவேன். அப்போ இவங்க ஆங்கி லத்தை தெளிவா படிக்கணும். இல்லைன்னா, உங்க மேல நடவடிக்கை எடுக்கவேண்டியிருக்கும்!'' என எச்சரித் தார்.
அடுத்து மூன்றாம் வகுப்புக்குள் நுழைந்தவர், அங்கிருந்த குழந்தைகளைப் பார்த்து, ''சுபாஷ் சந்திரபோஸ் யாருன்னு சொல்லுங்க பார்க்கலாம்...'' என்று கேட்க... யாருக்குமே தெரியவில்லை. ''காமராஜர் யாரு தெரியுமா..?'' என்று அடுத்த கேள்வியை வீச... அதற்கும் ம்ஹ¨ம்! ''விஜய் தெரியுமா..?'' என்று கேட்டதுதான் தாமதம்... ஒரு பையன் எழுந்து, ''சார், விஜய் சினிமாவுல நடிக்கிறாரு. இப்போ 'வேட்டைக்காரன்'ல நடிச்சிருக்காரு!'' என்று சொல்லவும், கலெக்டர் சிரித்து விட்டார். அந்த வகுப்பு ஆசிரியரைக் கூப்பிட்டு, ''கிளாஸ் ரூம்ல தலைவர்களோட படங்களை மாட்டி வையுங்க. 'அவங்க யாரு..? என்னவெல்லாம் செஞ்சாங்க'ன்னு சொல்லிக் கொடுங்க. அவங்கதானே நம்ம நாட்டின் நிஜமான ஹீரோக்கள்!'' என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

அடுத்து, ராசிபுரம் நோக்கி கார் பறந்தது. புது பஸ் ஸ்டாண்டுக்கு அருகில் ஒன்வேயில் கார் போகும்போது, எதிரில் தனியார் பேருந்து ஒன்று அதிவேகத்தில் வந்தது. காரை நிறுத்தச் சொல்லி அந்த பேருந்தை வழிமறித்தார் கலெக்டர். பஸ்ஸுக்குள் ஏறிய கலெக்டர், ''நோ என்ட்ரியில எதுக்கு தம்பி இவ்வளவு வேகமா ஓட்டிக்கிட்டு வர்ற..? எதிர்ல வர்றவங்க கதி என்னாகுறது? உன் டிரைவிங் லைசென்ஸை எடு..?'' என்று கலெக்டர் கேட்கவும், ஆடிப்போனார் பஸ் டிரைவர்.
''சார் லேட்டாயிடுச்சு. அதான் வந்துட்டேன். மன்னிச் சிடுங்க சார்... டிரைவிங் லைசென்ஸ் வீட்டுல இருக்கு...'' என்று மென்று முழுங்கினார். போனை எடுத்த கலெக்டர், வட்டார போக்குவரத்து அலுவலரை கூப்பிட்டார். அடுத்த பத்து நிமிடத்தில் அவர் வந்து சேர, ''இந்த பஸ் ஓவர் ஸ்பீடு. நோ என்ட்ரியில வந்திருக்கு. இவருகிட்ட லைசென்ஸ் இல்ல. உடனே ஃபைன் போடுங்க...'' என்று உத்தரவு போட்டார்.
ரவுண்ட்-அப்பை முடித்துக்கொண்டு கிளம்பும்போது கலெக்டர் நம்மிடம், ''பொது மக்களோட குறைகளை தீர்த்துவைக்கத்தான் நான் இங்கே இருக்கேன். என்னை எந்த நேரத்திலும் மக்கள் சந்திக்கலாம். நேர்ல வரணுங்குற அவசியம்கூட இல்ல. என் னோட செல் நம்பருக்கு (9444163000) ஒரு போனோ மெஸேஜோ போதும். கண்டிப்பா நடவடிக்கை எடுப்பேன்!'' என்று சொல்லி நமக்கு விடை கொடுத்தார்.
அயராமல் உழைத்துக்கொண்டே இருக்கும் முதல்வருக்கு ஈடுகொடுக்க, இப்படி அயராமல் ஓடி நேரில் மக்களைச் சந்திக்க இன்னும் நிறைய அதிகாரிகள் முன்வர வேண்டும்.
- கே.ராஜாதிருவேங்கடம்
படங்கள்: எம்.விஜயகுமார்

________________________
நன்றி ஜூனியர் விகடன்

ஏங்கல்ஸ் ராஜா, M.B.A (AGE. 27), விவசாயி





தாவரங்களை உருவாக்கி, தானியங்களை உணவாக்கி, உலகத்தின் பசி தீர்க்கும் விவசாயம், மனித குலத்தின் ஆதித் தொழில். இன்று யாவராலும் கைவிடப்பட்டதுவும் அதுவே!


"இந்த மண்ணும், பயிறும், சேறும், வெள்ளா மையும், விளைச்சலும், அறுப்பும், நடவும்தான் என் வாழ்க்கை. மண்ணில் கால்படாத எந்த வேலையும் மனசுக்குப் பிடிக்கிறதில்லை. படிச்சவங்க விவசாயம் செய்யக் கூடாதுன்னு சட்டம் எதுவும் இல்லையே!" - மென்மையான சொற்களால் பேசுகிறார் ஏங்கெல்ஸ் ராஜா. இளைய தலைமுறை விவசாயத்தைக் கைகழுவி விட்டு நகரங்கள் நோக்கி இடம்பெயர்ந்துகொண்டு இருக்க, எம்.பி.ஏ., படித்த இந்த 27 வயது இளைஞர் விவசாயத்துக்காகத் தன்னை அர்ப்பணித்திருக்கிறார். மாநிலம் முழுவதும் இயற்கை விவசாயம் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதில் தீவிரம் காட்டும் இவர், இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரால் 'எனக்குப் பிறகு இவர்தான்' என்று அடையாளம் காட்டப் பட்டவர்!




"பட்டுக்கோட்டை பக்கம் பிச்சினிக்காடுதான் என் சொந்தக் கிராமம். தினந்தந்தியில் மேட்டூர் அணை நீர் மட்டம் பார்ப்பதையும், குறுவைக் கும் தாழடிக்கும் என்ன ரக நெல் போடலாம் என்று பேசுவதையும் தாண்டி, எங்கள் மக்க ளுக்கு வேறு ஒன்றும் தெரியாது. ஐந்து வயதில் பக்கத்து ஊரில் இருந்த தாத்தா-பாட்டி வீட்டுக்கு அனுப்பப்பட்ட நான், அங்கிருந்துதான் 5-ம் வகுப்பு வரை படித்தேன். பள்ளிக்கூடம் போவதே பிடிக்காது. தாத்தாவுடன் வயலுக்குப் போவதும், சேற்றில் இறங்கி விளையாடி வேலை பார்ப்பதும் மனதுக்கு நெருக்கமானதாக இருந்தது. அதிகாலைக் குளிர் வீசும் கருக்கலில் எழுந்து வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சுவதும், அறுப்பு நேரத்தில் காண்டக்காய் விளக்குடன் களத்தில் நெற்கட்டுக்களுக்குக் காவல் இருப் பதுமாக தாத்தாதான் என் விவசாய குரு. ஏழு வயதிலேயே தன்னந்தனியாக ரெட்டை மாட்டு வண்டி ஓட்டுவேன்.

'பையன் இப்படியே இருந்தால் வீணாப்போவான்' என்று நினைத்த அப்பா, என்னைத் திரும்பவும் ஊருக்கு அழைத்துச் சென்று பட்டுக்கோட்டைப் பள்ளியில் சேர்த்துவிட்டார். அங்கு 9-ம் வகுப்பில் ஃபெயில். எங்கள் ஊர், கம்யூனிஸ்ட்டுகள் அதிகம் உள்ள ஊர். என் அப்பா லெனினும் கம்யூனிஸ்ட் இயக்கத்தில்தான் இருந்தார். அதனால்தான் எனக்கு ஏங்கெல்ஸ் ராஜா எனப் பெயர் வைத்தார். 9-ம் வகுப்பில் ஃபெயில் ஆனவுடன் 'பள்ளிக்கூடத் தொல்லைவிட்டது' என நினைத்து, ஊரில் நடந்த கம்யூனிஸ வகுப்புகளுக்குப் போகத் தொடங்கினேன். முதலாளிகள், தொழிலாளர்கள், உழைப்புச் சுரண்டல், உலகப் பொருளாதாரம் என ஏதோ ஒன்று எனக்கு மசமசப்பாகப்புரிய ஆரம்பித்தது.



வீட்டில் படிக்கச் சொல்லி தொந்தரவு செய்யவே, பத்தாம் வகுப்பை பிரைவேட்டாக எழுதினேன். மார்ச், அக்டோபர், மார்ச் என மாறிமாறி அட் டெம்ப்ட்டுகள், அத்தனையிலும் ஃபெயில். நான் காவது முறையாக எழுதி 187 மார்க் எடுத்து 10-ம் வகுப்பை பாஸ் செய்தேன். மறுபடியும் ப்ளஸ் டூ-வில் கணக்கில் ஃபெயில். அதையும் எழுதிப் பாஸ் ஆனபோது 'நான் காலேஜுக்கு எல்லாம் போக மாட்டேன்' என்றேன் முடிவாக. ஆனால், சொந்தக்காரர்களை எல்லாம் அழைத்து ஒருபஞ் சாயத்தே நடத்தி, என்னை கோயம்புத்தூர் கல்லூரி ஒன்றில் பிசினஸ் மேனேஜ்மென்ட் சேர்த்துவிட்டனர்.


முதல் நாளே ஒரு பேராசிரியை என்னை 10 நிமிடங்களுக்குத் திட்டினார். அவர் பேசிய இங்கிலீஷில் ஒரு வார்த்தையும் எனக்கு விளங்கவில்லை. திட்டி முடித்ததும், 'எனக்குப் புரியலை' என்றேன். நான் கிண்டல் பண்ணுவதாக நினைத்தவர், கோபமாக வெளியேறினார். அன்று முதல் கடைசி பெஞ்ச்தான் என் இருப்பிடம். கடைசி வருடம் கேம்பஸ் இன்டர்வியூவுக்காகப் பல நிறுவனங்கள் கல்லூரிக்கு வந்தன. 'நீ என்னவாகப் போறே?' என்று கேட்டார்கள் ஒவ்வொருவரிடமும். அமெரிக்கக் கனவு முதல் பெரிய நிறுவனங்களின் உயர் பதவிகள் வரை பலரும் பலவற்றைச் சொன்னார்கள்.

நான் கொஞ்சமும் தயங்காமல் 'விவசாயம் செய்யப்போறேன். விவசாயத்தோடு சேர்த்து ஆட்டுப் பண்ணையும், மீன் பண்ணையும் வைக்கப்போறேன்' என்றதும் அறை எங்கும் சிரிப்பு. நான் கொஞ்சம் தாழ்வுணர்ச்சிஅடைந்த போது, எனக்காக ஒரே ஒரு குரல் ஒலித்தது. ஹெச்.ஓ.டி. சந்தியா மேடம், 'அவன் சொன்னதில் என்ன தப்பு? அவன் தன் விருப்பத் தைச் சொல்றான். இதுக்கு ஏன் சிரிக்கிறீங்க?' என்று கறாராகக் கேட்டவர், 'ஒரு மாணவனை அவமானப்படுத்திவிட்டீர்கள்' என்று சொல்லி அந்த இன்டர்வியூ போர்டையே திருப்பி அனுப்பினார். நான் அவமானப்பட்டு கூனிக் குறுகி நின்ற சமயத்தில் எனக்காக ஒலித்த ஒரே குரல் சந்தியா மேடத்தினுடையது.

பிறகு, காரைக்குடி அழகப்பாவில் எம்.பி.ஏ., முடித்ததும் நேராக ஊருக்குப் போய் விவசாயம் செய்யத் தொடங்கினேன். என் அப்பா இயற்கை விவசாயம் செய்ய, அதைக் கிண்டல் அடித்துவிட்டு நான் ரசாயன உரங்களைக்கொண்டு வெள்ளாமை பார்த்தேன். இரண்டு பேருக்கும் முட்டலும் மோதலுமாகப் போய்க்கொண்டு இருந்த சமயத் தில்தான் தமிழகத்தை சுனாமி தாக்கியது. உயிரிழப்புகள், அதை ஒட்டிய நிவாரணப் பணிகள் எல்லாம் நடந்துகொண்டு இருக்க,கடற் கரையை ஒட்டிய விவசாய நிலங்கள் கடுமையாகப் பாதிக்கப் பட்டன.

சீறி வந்த சுனாமி, உப்புச் சகதியை வயலில் குவித்துச் சென்றுவிட, விவசாயமே செய்ய முடியாத நிலைமை. வயல்கள் மட்டுமின்றி, ஆயிரக்கணக்கான குளம், குட்டைகளும் முழுவதுமாகப் பாதிக்கப் பட்டன. இவற்றைச் சீர்செய்யும் நோக்கத்துடன் நம்மாழ்வார் வேலை பார்க்கத் தொடங்கினார். என் அப்பாவுக்கு நம்மாழ்வாருடன் பழக்கம் இருந்ததால், என்னை நாகப்பட்டினத்துக்கு அனுப்பிவைத்தார். நரை தாடியும், ஒல்லியான தேகமுமாக இருந்த நம்மாழ்வாருடன் பழக ஆரம்பித்தேன்.

வேதாரணயம் தொடங்கி சீர்காழி வரைக்கும் 28 கிராமங்களைச் சேர்ந்த 5,500 ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்பட்டு இருந்தன. 10 ஆயிரத்துக்கும் அதிகமான சிறிய விவசாயக் குட்டைகள் கடல் சகதியால் மூடப்பட்டு இருந்தன. ஒவ்வொரு கிராமமாகத் தங்கி, அத்தனை நிலங்களையும் விவசாயத்துக்கு உகந்ததாக மாற்றினோம். மறுபடியும் ஒரு கடல் சீற்றம் வந்தால்கூட பாதிப்பு ஏற்படாதவாறு பனை மரங்களை நட்டு தடுப்புகளை ஏற்படுத்தினோம். 2 வருடங்கள் 20 பேர் இந்த வேலையைச் செய்து முடித்தபோது, 'ஏங்கெல்ஸை என்கிட்ட தந்துடுங்க' என்று என் பெற்றோரிடம் கேட்டு வந்தார் நம்மாழ்வார். இப்போது அவர்தான் எனக்கு ஞானத் தந்தை.

கரூர் பக்கத்தில் கடவூரில் காலம் காலமாக விவசாயமே செய்யப் படாத 35 ஏக்கர் பாறை நிலத்தை வாங்கிச் செம்மைப்படுத்தி விவசாயம் செய்யத் தொடங்கி இருக்கிறோம். இதன் வெற்றி, அந்தப் பகுதியின் ஆயிரக்கணக்கான ஏக்கர் தரிசு நிலங்களை விவசாயப் பூமியாக மாற்றும்!
தமிழர்களின் பாரம்பரிய நெல் வகைகள் பழங்காலத்தில் நூற்றுக்கும் மேல் இருந்து, அவை பெரும்பாலும் அழிந்து போய்விட்டன. அவற்றைச் சேகரித்துப் பயிரிட்டுப் பரவலாக்கும் பணியைச் செய்கிறோம்.

படித்தவர்கள் விவசாய வேலைகளுக்கு வருவது இல்லை என்பதை ஒரு குற்றச் சாட்டாகவே நாம் சொல்கிறோம். ஆனால், விவசாயத்தை விரும்பிச்செய்வ தற்குரிய சூழல் இங்கு இல்லை. செலவு குறைந்த பாரம்பரிய இயற்கை விவசா யத்தை ஊக்குவிக்க வேண்டிய அரசுகள், பன்னாட்டு உர நிறுவனங்களின் கமிஷன் களுக்காக ஒவ்வொரு வருடமும் உர இறக்குமதியை அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. நமது நிலம் ரசாயன உரங்களால் விஷமேற்றப்பட்டு இருக்கிறது. நம் பாட்டனும், முப்பாட்டனும் செய்த விவசாயத்தை இந்த சமீப காலஎதிரிகளுக்குப் பயந்து ஏன் கைவிட வேண்டும்? இந்த எதிரிகளை விரட்ட, படித்த இளைஞர்கள் பெருமளவுக்கு விவசாயத்தை நோக்கி வர வேண்டும். அவர்கள் அத்தனை பேருடனும் கை குலுக்க நான் என் இரு கரங்களையும் தயாராகவைத்திருக்கிறேன்!"

ஏங்கெல்ஸ் ராஜா அலைபேசி எண் : 94421-21473

நன்றி : இளமை விகடன்

சாப்டுவேர் என்ஜினியர்களும் சமூக சீரழிவும்

இப்பொழுது தலை தூக்கி வரும் பிரச்சனைகளில் மிக முக்கியமானது சாப்டுவேர் கம்பெனியில் வேலை செய்பவர்களால் உண்டாகும் செயற்கை விலை உயர்வு. இதை பத்தி கொஞ்சம் பார்ப்போம்

1. தி.நகரில் ஒரு சாப்பாடு(Meals) 30+ ரூபாய், அதுவே OMR சாலையில் ஏதாவது ஒரு சாப்டுவேர் கம்பெனிக்கு அருகில் இருக்கும் ஓட்டலில் சாப்பாடு குறைந்த பட்சம் 60. என்னுடைய அலுவலகத்திற்கு பக்கத்தில் உள்ள ஆந்திர உணவகத்தில் அது 99 + VAT (ஏறக்குறைய 120 ரூபாய் வரும் டிப்ஸை சேர்த்தால். 10 ரூபாக்கு குறைந்து டிப்ஸ் இருந்தால் அடுத்த தடவை நீங்க போகும் பொழுது விக்கி செத்தாலும் தண்ணி கிடைக்காது.)

2. அடையாரில் உள்ள ஒரு Forex நிறுவனத்தில், சாப்டுவேர் இன்ஜினியர் அதுவும் குறிப்பாக விப்ரோ, டிசிஎஸ், இன்பொசிஸ் கம்பெனிகளில் இருந்து சென்றால் மற்றவர்களுக்கு கொடுக்கப்படும் எக்ஸ்சேஞ் ரேட்டை விட ஒரு ரூபாய் குறைவு. கேட்டால் அது அப்படி தான் சார் வேண்டுமானல் குடுங்கள் இல்லாவிட்டால் போங்க.

3. வேளச்சேரியில் 800-1000 சதுர அடி வீட்டின் வாடகை 6000+ அதே, கோடம்பாக்கம், வடபழனி போன்ற இடங்களில் அதிகபட்சம் 4000.

4. 1200 சதுர அடி வீட்டின் விலை வேளச்சேரியில் சுமார் 50 – 60 லட்சம் வரை.

5. Ascendasஇல் (இது Tidel Parkஜ போன்றது) ஒரு Milk Shakeஇன் விலை 170.

6. ஒரு சாப்டுவேர் கம்பெனிக்கு பக்கத்தில் இருக்கும் ஆட்டோ ஸ்டாண்டில் குறைந்த பட்சம் 20 – 30 ரூபாயாவது அதிகமாக இருக்கும்.

7. இரண்டு வருடத்துக்கு முன்னர் 50ரூபாயாக இருந்த சினிமா டிக்கெட் இன்று குறைந்த பட்சம் 120, 10 ரூபாயாக இருந்த பாப்கான் இன்று 50.

8. தீபாவளிக்கு முதல் நாள் சென்னையில் இருந்து சேலத்துக்கு செல்ல தனியார் பேருந்துகளில் ஒரு டிக்கெட்டின் விலை ரூபாய் 1100. சாதாரணமாக அது ரூபாய் 300.

இது போல் சொல்லிக்கொண்டே போகலாம். இதில் எல்லாரும் சொல்லும் பொதுவான விஷயம் சாப்டுவேர் கம்பெனியில் இருக்குறவன் எவன் சார் விலையை கேக்குறான் இல்ல சாப்டுவேர் கம்பெனிகளில் இருக்குறவனுக்கு என்ன சார், ஆயிர ஆயிரமா சம்பாதிக்கிறான் குடுத்துட்டு போறான். நம்மைப்போன்றவர்களுக்கு பணம் ஒரு பிரச்சனையே இல்லை ஆனா யோசித்து பாருங்க, இப்படி துவங்கும் விலை உயர்வு, படிப்படியாக அப்படியே கொஞ்ச நாள் கழித்து சாதாரண பொது மக்களை போயி அடையும். அவங்க என்ன செய்வாங்க யோசிங்க?

யோசித்து பாருங்க. என்னிக்காவது ஒரு நாள் நாம கேட்டு இருக்கோமா? ஏன் அதிக விலை என்று? இல்ல அவன் இவ்வுளவு விலை விற்கிறானே அவனிடம் வாங்க வேண்டாம் என்று யோசித்து இருக்கோமா? அப்ப என்ன அர்த்தம் காசு கொழுப்பு தானே? வாங்குறவன் இருக்குற வரையில் விற்பவன் விற்கத்தானே செய்வான்? இதற்கு சிறந்த உதாரணம் கடந்த சில மாதங்களாக சென்னை, பெங்களூரில் கட்டிடங்களின் விலையில் 10 – 20% குறைந்துள்ளதே? என்ன காரணம் நகரங்கள் வளர்ந்து விட்டனவா? இல்லையே வாங்க ஆள் இல்லை அதனால் தான் இந்த விலை குறைப்பு.

ரூபாயின் மதிப்பு ஏறுமுகமாக இருக்கும் இந்த காலத்தில், நம்முடைய சம்பளங்களும் வருங்காலங்களில் இது போன்று இருக்கும் என்று சொல்ல முடியாது. முன்று வருடத்துக்கு முன்னர் இருந்த விலையை வைத்து பார்க்கும் பொழ்து இந்த விலை எல்லாம் இரண்டு அல்லது முன்று மடங்கு உயர்ந்து உள்ளது ஆனால் நம்முடைய சம்பள உயர்வு அவ்வுளவு இருக்கிறதா என்ன? பொருட்களை வாங்குங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை ஆனால் அதற்கு உண்டான சரியான விலையை குடுத்து வாங்குங்கள்.

சமீபகாலமாக வெயிட் காலர் குற்றங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து உள்ளது. கைதாகும் பெரும்பாலோனோர் சொல்லும் காரணம், கடன் அட்டைகள், கடன் வாங்கி ஆடம்பரமாக செலவு செய்துவிட்டேன், இப்பொழுது கடன்காரர்கள் தொல்லையில் இருந்து தப்பிக்க இது போன்று செய்தேன் என்று.நமக்கும் இது போன்ற நிலை வர வேண்டுமா? இது எல்லாம் மாற நாம பெருசா ஒண்ணுமே பண்ண வேண்டியது இல்ல, இது மாதிரி ஏமாத்துறவங்களை புறக்கணிச்சாலே போதும், தன்னால அவங்க மாறுவாங்க.
.
Posted By,
santhose

ம.பொ.சி., "தன் தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்' என்ற முழக்கத்துடன் போராட்டத்தை

சென்னை ஆயிரம் விளக்கின் சால்வான் குப்பத்தில், எளிய குடியில் பிறந்தாலும், அயராத உழைப்பால், ஆற்றலால் ஏற்றம் பெறலாம் என்பதை உணர்த்தியவர் ம.பொ.சி. என்றழைக்கப்படும் மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம். சித்தாள், நெசவுத் தொழிலாளி, அச்சுத் தொழிலாளி என வாழ்வியல் நிமித்தம் பல்வேறு தொழில்களைச் செய்தார்.


காந்தியத்தின்பால் ஈர்க்கப்பட்டு 1927-ம் ஆண்டு காங்கிரசில் இணைந்த ம.பொ.சி. உப்புச் சத்தியாக்கிரகம், சட்ட மறுப்பு இயக்கம் ஆகிய போராட்டங்களில் ஈடுபட்டார். கள் இறக்கும் தொழில் செய்யும் குடும்பத்தில் பிறந்தாலும், சென்னைப் பெருநகர மதுவிலக்கு குழுச் செயலராகப் பொறுப்பேற்றுத் தீவிரப் பிரசாரம் செய்த காரணத்தால் தன் ஜாதி மக்களின் பகையைத் தேடிக்கொண்டார்.


ஆகஸ்ட் கிளர்ச்சி தொடங்கி, "வெள்ளையனே வெளியேறு' என்ற முழக்கம் நாடு முழுவதும் ஒலிக்கத் தொடங்கிய காலம். ம.பொ.சி.யும் போராட்டத்தில் ஈடுபட்டு, 1942-ம் ஆண்டு ஆகஸ்ட் 13-ம் நாள் கைதாகி, இரண்டாண்டு கடுங்காவல் தண்டனை பெற்று, வேலூர் சிறையில் வைக்கப்பட்டு, பின்னர் ஆகஸ்ட் 30-ம் நாள் மத்தியப் பிரதேசத்தில் உள்ள அமராவதி சிறையில் வி.வி.கிரி, கு. காமராஜ், முத்துரங்க முதலியார், சத்தியமூர்த்தி ஐயர், சஞ்சீவ ரெட்டி போன்ற தலைவர்களுடன் அடைக்கப்பட்டார்.


சிறை வாழ்க்கையில் இலக்கியம் பயின்று, அதன்வழி தன் அரசியல் சிந்தனைகளைச் செம்மையாக வளர்த்தெடுத்தவரின் உள்ளம் இந்திய விடுதலையோடு இன உணர்வையும் இணைத்துப் பார்த்தது. சங்க இலக்கியங்களும், சிலப்பதிகாரமும், பாரதி பாடல்களும் அவருக்குத் துணை நின்றன. புதிய தமிழகம் படைக்கும் எழுச்சியுடன் 1946-ம் ஆண்டு நவம்பர் 21-ம் நாள் தமிழரசுக் கழகத்தைக் காங்கிரசுக்குள் இருந்தபடியே ஒரு கலாசார இயக்கமாகத் தோற்றுவித்தார்.


1947-ம் ஆண்டு இந்திய விடுதலைக்குப் பிறகு இந்தியா முழுவதும் பல்வேறு தேசிய இனங்களும் கிளர்ந்தெழுந்த காலகட்டத்தில், இந்தியாவில் இருந்த பிறமொழி வழி இனத் தலைவர்கள், தங்களுக்கென இன மொழி வளர்ச்சிக்காகத் தனி மாநிலக் கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டங்களைத் தொடங்கினர். ஆனால், தமிழகத்தில் மொழிவாரி தனியரசு கோர ஓர் இயக்கமில்லை. எல்லைப் பகுதிகளைக் காக்கவும் மீட்கவும் எந்தத் தலைவரும் முயற்சிக்கவில்லை. திராவிடத் தனிநாடு கோரியவர்களும்கூட அதற்கென எந்த முயற்சிகளையும் முன்னெடுக்காத வேளையில், தமிழ் இன உணர்வாளர்களும் தேசிய வாதிகளும் பிளவுபட்டிருந்த நேரத்தில், தமிழின உணர்வும் உரிமையும் தேச ஒருமைப்பாடும் வேறுவேறல்ல என்பதைத் தேசியத் தலைவர்களுக்கும் பிரிவினைச் சக்திகளுக்கும் உணர்த்தும் வகையில் "உரிமைக்கு எல்லை வேங்கடம்; உறவுக்கு எல்லை இமயம்' என்று முழங்கித் தேச உணர்ச்சி, மொழி உணர்ச்சி என்ற இரண்டையும் வளர்த்தெடுத்தார் ம.பொ.சி. அவரின் இந்த முழக்க எல்லைப் போர், மொழியுரிமைப் போர், மாநில சுயாட்சிப் போர் என்ற எல்லாவற்றுக்குமான சூத்திரம், இதையே, "சுயாட்சித் தமிழகம்' படைக்கும் தேவைக்கான கொள்கையாகவும் எடுத்துரைத்தார்.


1956-ம் ஆண்டு நவம்பர் முதல் நாள் தமிழகம் தனி மாநிலம் ஆனது. முன்னதாக பொட்டி ஸ்ரீராமுலு என்கிற ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தொண்டர் உண்ணாவிரதம் இருந்து ஆந்திரப் பிரிவினையைக் கோரினார். சென்னையில் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் இருந்த புலுசு சாம்பமூர்த்தி என்ற ஆந்திரத் தலைவரின் இல்லத்தில் தனது உண்ணாவிரதத்தை 1952-ம் ஆண்டு அக்டோபர் 14-ம் நாள் தொடங்கினார். ஆந்திரத் தலைவர்களான பிரகாசம், புலுசு சாம்பமூர்த்தி போன்றோர் அவரை ஆதரித்தனர்.


சென்னையைத் தலைநகராகக் கொண்ட ஆந்திர மாநிலம் அமைய வேண்டும் என்பதே அவர்தம் கோரிக்கை. "மதராஸ் மனதே' என்ற முழக்கத்தோடு பட்டினி கிடந்த ஸ்ரீராமுலுவைக் காணச்சென்ற ம.பொ.சியிடம் பிரகாசம், ஸ்ரீராமுலுவின் உயிரைக் காப்பாற்ற உதவி செய்ய வேண்டும் என்று கோர, அதற்கு ம.பொ.சி., ""சென்னை நகர் மீது உரிமை கொண்டாடுவதை விட்டு ஆந்திர மாநிலம் கோரினால், தமிழரசுக் கழகம் ஆந்திரர்களுடன் பூரணமாக ஒத்துழைக்கும்'' என்று பதிலிறுத்தார். பிரகாசம் விடாமல், ""ஆந்திர அரசு தாற்காலிகமாகவேனும் சென்னையிலிருக்க அனுமதித்தாலும் போதும். விசால ஆந்திரம் அமையும்போது எங்களுக்கு ஹைதராபாத் கிடைத்துவிட்டால் நாங்கள் போய்விடுவோம். இதற்கு நீங்கள் இசைந்துவிட்டால், மற்றவர்கள் எதிர்க்க மாட்டார்கள்'' என்று கூறியபோதும், கொடாக் கண்டராய், ""ஆந்திர அரசுக்குத் தாற்காலிகமாகச் சென்னையில் இடமளிக்க மற்றவர்கள் இசைந்தாலும், நான் இசைய மாட்டேன்'' என்று உறுதியாகக் கூறிவிட்டுத் திரும்பினார்.


1952-ம் ஆண்டு டிசம்பர் 15-ம் நாள் பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதம் இருந்த நிலையிலேயே உயிர் துறந்தார். அப்போது ஆந்திரத்தில் ஏற்பட்ட கலவரம் தொடர்ந்து மூன்று நாள்கள் நீடித்தது. நிலைமை மேலும் மோசமாகக் கூடுமென்ற அச்சத்தால், ஆந்திர மாநிலம் 2-10-1953 அன்று பிரிக்கப்படுமென்று நாடாளுமன்றத்தில் நேரு அவசரமாக அறிக்கை வெளியிட்டார். "சென்னை நகரம் அல்லாத தகராறுக்கு இடமில்லாத - தெலுங்கு வழங்கும் மாவட்டங்களைக் கொண்டு - சித்தூர் மாவட்டம் முழுவதையும் சேர்த்து ஆந்திர மாநிலம் அமையும் என்றும், தலைநகர் பின்னர் அறிவிக்கப்படும் என்றும், நேரு தம் அறிவிப்பில் விளக்கியிருந்தார்.


சித்தூர் மாவட்டத்தின் தெற்கேயுள்ள பகுதிகள் தமிழகத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்று ஏற்கெனவே தமிழரசுக் கழகம் கோரிவந்த நிலையில், சித்தூர் ஆந்திரத்தில் சேர்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதும் , பிரகாசம் மீண்டும், "சென்னையை இரு பகுதியாகப் பிரித்துக் கூவத்தை நடுவில் வைத்து, வட சென்னையை ஆந்திரத்துக்கும் தென் சென்னையைத் தமிழ்நாட்டுக்குமாகப் பங்குபோட வேண்டும் அல்லது சென்னை நகரம் ஆந்திரம், தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களுக்கும் பொது நகராகச் செய்ய வேண்டும்' என்று அறிக்கை விட்டதும் தமிழகத்தின் நிலையைக் கேள்விக்குள்ளாக்கியது.


அப்போது சென்னை மாநகராட்சியின் ஆல்டெர்மேனாக இருந்த ம.பொ.சி., "தன் தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்' என்ற முழக்கத்துடன் போராட்டத்தைத் தொடங்கினார். அப்போதைய சென்னை மேயர் செங்கல்வராயனின் உதவியுடனும், தமிழக முதல்வர் ராஜாஜியின் ஆதரவுடனும் திருவல்லிக்கேணி கடற்கரையில் கட்சி சார்பற்ற நிலையில், ராஜாஜி, பெரியார், எஸ்.எஸ். கரையாளர், பக்தவத்சலம் போன்ற தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தை நடத்தினார்.


அத்துடன் உள்துறை அமைச்சர் லாலபகதூர் சாஸ்திரிக்குத் தமிழ்நாடு முழுவதுமிருந்து தந்திகள் அனுப்பவும் ஏற்பாடு செய்தார். மேலும் மாநகராட்சியின் சிறப்புக்கூட்டத்தைக் கூட்டச் செய்து "தலைநகரம் தமிழருக்கே' என்பது பற்றிய தீர்மானத்தையும் கொண்டுவந்தார். நீண்ட விவாதத்துக்குப் பின்னர், தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தந்தி வடிவில் குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர், சென்னை மாநில முதல்வர் ஆகியோருக்கு மேயரால் அனுப்பப்பட்டது. கடைசியாக 25-3-1953 அன்று தில்லி நாடாளுமன்றத்தில் நேரு, மத்திய அரசின் சார்பில் அதிகாரப்பூர்வமான பிரகடனம் ஒன்றை வெளியிடுகையில் "ஆந்திர அரசின் தலைநகரம் ஆந்திர நாட்டின் எல்லைக்குள்ளேயே இருக்கும்' என்று அறிவித்தார்.


தலைநகரைக் காப்பாற்ற உறுதுணையாய் நின்ற தலைவர்கள்கூடத் தமிழ்நாட்டின் எல்லைப் பிரச்னையில் ம.பொ.சி.க்கு கை கொடுக்கவில்லை. ஆனால், தமிழகத்தின் வடக்கெல்லை, தெற்கெல்லை மீட்பில் ம.பொ.சி.யின் பங்களிப்பை வரலாறு உணர்த்தும். "தமிழ்நாடு' என்ற பெயர் சூட்டவும் பயிற்சி மொழியாகத் தாய் மொழியாம் தமிழ் மொழியே இருக்க வேண்டும் என்றும் அறப்போர் நடத்தினார். அவர்ஆல்டெர்மேனாக இருந்தபோதுதான் ஆங்கிலேயர் வடிவமைத்திருந்த சென்னை மாநகராட்சியின் கொடியை மாற்றி, சேர,சோழ,பாண்டியரின் வில், புலி,மீன் ஆகியவற்றைப் பொறித்தார். மாநகராட்சியின் வரவு-செலவுக் கணக்கை முதன்முதலாகத் தமிழிலே தாக்கல் செய்தார்.


வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு, தமிழகத்தில் பிற மொழியினர், தமிழ் இலக்கியத்தில் இனவுணர்ச்சி, விடுதலைப் போரில் தமிழகம், சிலப்பதிகாரத் திறனாய்வு போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் அவருடைய இலக்கியப் பங்களிப்பை நமக்கு உணர்த்தி நிற்கும்.


2006-ல் ம.பொ.சி.யின் நூற்றாண்டு விழா நடைபெற்றபோது, தமிழக முதல்வர் கருணாநிதியால் ம.பொ.சி.யின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு, அவரது சந்ததியினருக்கு 20 லட்ச ரூபாய் வழங்கப்பட்டது.

மேலும் 2006 ஆகஸ்ட் 15 அன்று ம.பொ.சி.யின் உருவம் பொறித்த அஞ்சல் தலை ஒன்றும் முதல்வரால் தலைமைச் செயலகத்தில் வெளியிடப்பட்டது.

நூற்றாண்டு விழா மேடையில் முதல்வர் அறிவித்த "சென்னையில் ம.பொ.சி.யின் சிலை அறிவிப்பு' மட்டும் ஏனோ இன்றுவரையிலும் நிறைவேற்றப்படவில்லை.


இதே போராட்டத்தில் ஈடுபட்டுத் தம் நோக்கத்தில் வெற்றி அடையாத பொட்டி ஸ்ரீராமுலு, "அமரர் ஜீவா' என்று இன்றளவும் ஆந்திர மக்களால் போற்றப்படுகிறார்.

அவர் உண்ணாவிரதம் இருந்த ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள புலுசு சாம்பமூர்த்தியின் இல்லம் ஆந்திர அரசால் நினைவிடமாகப் பாதுகாக்கப்படுகிறது. 2000-ம் ஆண்டு மார்ச் 16-ம் நாள் அவர் நினைவாக அஞ்சல்தலை வெளியிடப்பட்டுள்ளது.


"பொட்டி ஸ்ரீராமுலு தெலுங்கு பல்கலைக்கழகம்' ஹைதராபாதில் நிறுவப்பட்டுள்ளது. நெல்லூர் மாவட்டத்தை 2008 ஜூன் மாதம் "ஸ்ரீபொட்டி ஸ்ரீராமுலு நெல்லூர் மாவட்டம்' என்று பெயர் மாற்றம் செய்துள்ளனர். இப்போராட்டத்தில் அவருக்கு ஆதரவாக நின்ற பிரகாசம் பெயராலும் ஆந்திரத்தில் தனி மாவட்டம் உள்ளது. நாடாளுமன்றத்திலும் சிலை அமைத்துள்ளனர். சென்னையின் முக்கியமான பகுதியிலே பிரகாசம் சாலை என்று அவர் பெயரால் சாலை அமைக்கப்பட்டுள்ளதுடன், பொட்டி ஸ்ரீராமுலு, பிரகாசம் இருவருக்கும் சென்னையிலேயே சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.


ஆனால், சென்னை தமிழகத்தில் நிலைத்திருப்பதற்குப் பெரும்பங்காற்றிய ம.பொ.சி.க்குச் சென்னையில் சிலை இல்லை. முதல்வர், தாம் அறிவித்தபடி சென்னையின் முக்கியமான சாலை ஒன்றில் ம.பொ.சி.யின் சிலையை நிறுவுவதுடன் "ரிப்பன் மாளிகை' க்கும் ம.பொ.சி. மாளிகை என்று பெயர் சூட்ட வேண்டும் என்பதே தமிழார்வலர்களின் கோரிக்கை.


(கட்டுரையாளர்: ம.பொ.சி.யின் பேத்தி)

இளம் வழக்கறிஞரை மகாத்மா காந்தியாக உருவாக்கியதில் தமிழர்களுக்குப் பெரும் பங்கு உண்டு.

பாரிஸ்டர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்ற இளம் வழக்கறிஞரை மகாத்மா காந்தியாக உருவாக்கியதில் தமிழர்களுக்குப் பெரும் பங்கு உண்டு.


தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது ஒப்பந்தக் கூலிகளாக அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்களுக்கு வெள்ளை முதலாளிகள் இழைத்த கொடுமைகளுக்கு எதிராகத்தான் அவர் தனது முதல் போராட்டத்தைத் தொடங்கினார். பாலசுந்தரம் எனும் தமிழ் ஒப்பந்தக் கூலியை அவருடைய வெள்ளை எஜமானன் மிகக் கடுமையாகத் தாக்கிக் கொடுமை செய்த வழக்கை ஏற்று நடத்தி அந்த அப்பாவித் தமிழனுக்கு நீதி கிடைக்க உதவியதன் மூலம் அவர் வாழ்வில் மிகப் பெரும் திருப்பம் ஏற்பட்டது.


1894-ம் ஆண்டு "நேட்டால் இந்தியன் காங்கிரஸ்' என்ற பெயரில் ஓர் அமைப்பை காந்தியடிகள் தோற்றுவித்தார். இந்த அமைப்பில் முக்கிய பங்கு வகித்தவர்கள் தமிழர்களே. தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள் 20 ஆண்டுகளுக்கு மேல் தங்கியிருந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி இந்திய மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை நீக்குவதற்கு வழிவகுத்தார்.


1920-ம் ஆண்டு முதல் 1947--ம் ஆண்டு வரை 27 ஆண்டுகள் இந்தியாவில் சுதந்திரப் போராட்டத்தை காந்தியடிகள் வழிநடத்தினார். ஆனால் அதற்கான பயிற்சியையும் பக்குவத்தையும் அவருக்குத் தென்னாப்பிரிக்காவில் நடத்திய போராட்டங்கள் அளித்திருந்தன. அதற்கு முழுமையாகக் காரணமானவர்கள் தமிழர்களே.


தென்னாப்பிரிக்காவில் அவர் நடத்திய போராட்டத்தில் வள்ளியம்மை, நாகப்பன், நாராயணசாமி ஆகிய 3 தமிழர்கள் உயிர்த் தியாகம் செய்தனர்.


பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றனர். பல தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக நாடு கடத்தப்பட்டனர். ஆனாலும் காந்தியடிகளுக்குத் தோள் கொடுத்து துணை நிற்பதிலிருந்து தமிழர்கள் பின்வாங்கவில்லை.


வள்ளியம்மை குறித்தும் தனக்குத் தோள் கொடுத்துத் துணை நின்ற தமிழர்கள் குறித்தும் காந்தியடிகள் குறிப்பிட்ட கருத்துகள் அவர் எவ்வளவு உயர்வாகத் தமிழர்களை மதித்தார் என்பதற்குச் சான்றாகத் திகழ்கின்றன.


காந்தியடிகள் அரை நிர்வாணப் பக்கிரி கோலத்துக்கு மாறியதும் தமிழகத்தில்தான். 22-9-1921 அன்று காந்தியடிகள் மதுரையில் தங்கியிருந்தபோது அன்று அதிகாலையில் எழுந்து தனக்குத் துணையாக இருந்த விருதுநகர் காங்கிரஸ் தொண்டர் பழனிகுமாரு பிள்ளையை எழுப்பி கதர் வேட்டியைப் பிடிக்கச் சொல்லி இரண்டாகக் கிழித்து ஒரு பாதியை இடுப்பில் கட்டிக்கொண்டு மற்றொரு பாதியை தோளில் போர்த்திக் கொண்டார். அன்றிலிருந்து அவர் மறைவு வரை இதுவே அவரது உடையாயிற்று.


காந்தியடிகளின் மனசாட்சிக் காவலர் என்று அழைக்கப்படும் அளவுக்கு அவரைப் பற்றி உள்ளும் புறமும் தெரிந்து அவருடைய பணிகள் எல்லாவற்றுக்கும் துணை நின்றவர் ராஜாஜி ஆவார்.


காந்திய இயக்கத்துக்குத் தமிழகத்தில் கிராமம் கிராமமாகச் சென்று தொண்டர் படையைத் திரட்டியவர் காமராஜ் ஆவார்.


காந்தியப் பொருளாதாரத் தத்துவத்துக்கு வடிவம் அமைத்துத் தந்த பெருமைக்குரியவர் ஜே. சி. குமரப்பா ஆவார். காந்தியடிகளின் ஆதாரக் கல்வித் திட்டத்தை உருவாக்கியவர் அரியநாயகம் என்னும் ஈழத் தமிழர்.

இப்படி காந்தியடிகளுக்கு பலவகையிலும் துணையாக நின்று பெருந்தொண்டாற்றியவர்கள் தமிழர்களே.


ஜோசப் கொர்னலியஸ் செல்லதுரை குமரப்பா. சென்னையில் உயர் கல்வி கற்ற இவர் 1912-ம் ஆண்டு லண்டன் சென்று பட்டயக் கணக்கர் படிப்பில் சேர்ந்தார். பிறகு லண்டனில் சிறிது காலம் பணியாற்றிவிட்டு 1919-ல் இந்தியாவுக்குத் திரும்பி மும்பையில் சொந்தமாகவே பட்டயக் கணக்கு நிறுவனத்தைத் தொடங்கி நடத்தினார். 1928-ம் ஆண்டு அமெரிக்காவுக்குச் சென்று நிர்வாக மேலாண்மை படித்தார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் பயின்றார். 1929-ம் ஆண்டு இந்தியாவுக்குத் திரும்பினார். பிரிட்டிஷ் அரசு தன்னுடைய வரிவிதிப்புக் கொள்கையின் மூலம் இந்தியாவை எப்படியெல்லாம் சுரண்டுகிறது என்பது குறித்து ஒரு நூலை எழுதினார். காந்தியடிகளின் பார்வைக்கு அந்த நூலைக் கொண்டு செல்ல விரும்பினார். காந்தியடிகளின் செயலாளராக இருந்த பியரிலால் மூலம் அந்த விருப்பம் நிறைவேறியது.


1929-ம் ஆண்டு மே மாதம் 9-ம் தேதி பிற்பகல் 2:30 மணிக்கு சபர்மதி ஆசிரமத்தில் காந்தியடிகளை அவர் சந்தித்தார். இந்தச் சந்திப்பு அவரின் வாழ்க்கைப் போக்கை மாற்றிவிட்டது. அவரது நூலைத் தனது "யங் இந்தியா' இதழில் தொடர் கட்டுரையாக வெளியிடுவதாக காந்தியடிகள் கூறியபோது அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தனது பொருளாதாரச் சிந்தனைகளும் குமரப்பாவின் பொருளாதாரச் சிந்தனைகளும் ஒரே மாதிரியாக அமைந்ததைக் கண்ட காந்தியடிகள் இதனை இதனால் இவன் முடிக்கும் எனக் கருதினார்.


காந்தியடிகளால் தோற்றுவிக்கப்பட்ட தேசியப் பல்கலைக்கழகமான குஜராத் வித்யா பீடத்தில் பொருளாதாரப் பேராசிரியராக குமரப்பாவை நியமிக்க காந்தியடிகள் ஏற்பாடு செய்தார். இதன் மூலம் குமரப்பாவின் சொந்த வாழ்க்கை பெரும் மாறுதலுக்குள்ளானது. திருமணத்தைத் துறந்து காந்தியத் தொண்டராக வாழத் தன்னை அவர் அர்ப்பணித்துக் கொண்டார். காந்தியடிகளுக்கு அவர் மீது உள்ள நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது. 1931-ம் ஆண்டு புகழ்பெற்ற தண்டி உப்புச் சத்தியாகிரக யாத்திரையை காந்தியடிகள் தொடங்கியபோது குமரப்பாவை யங் இந்தியாவின் ஆசிரியர் பொறுப்பில் நியமித்தார்.


காந்தியடிகளைச் சுற்றி எத்தனையோ தலைவர்களும் அறிஞர் பெருமக்களும் இருந்த போதிலும் அவர்களில் யாரையும் இப்பதவியில் அவர் நியமிக்கவில்லை. குமரப்பாவை இப்பதவிக்கு அவர் தேர்ந்தெடுத்தார். அனல் பறக்கும் கட்டுரைகளை எழுதியதற்காக குமரப்பாவுக்கு ஒன்றரை ஆண்டு காலச் சிறைத் தண்டனை பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் விதிக்கப்பட்டது. ஆனால் காந்தி இர்வின் உடன்பாடு ஏற்பட்டதனால் சில நாள்களிலேயே அவர் விடுதலை செய்யப்பட்டார்.


1932-ம் ஆண்டு காந்தியடிகள் கைது செய்யப்பட்டபோதும் யங் இந்தியா இதழின் ஆசிரியர் பொறுப்பை மீண்டும் குமரப்பா ஏற்க நேர்ந்தது. அப்போதும் இவர் எழுதிய கட்டுரைகளுக்காக இவருக்கு இரண்டரை ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனைக் காலம் முழுவதையும் நாசிக் சிறையில் அவர் கழித்தார்.


1934-ம் ஆண்டு சிறையிலிருந்து வெளிவந்தவுடன் காந்தியடிகள் இவரை பிகார் பூகம்ப நிவாரணப் பணிகளுக்கு அனுப்பி வைத்தார். அவர் அங்கிருந்து டாக்டர் ராஜேந்திர பிரசாத்துக்குத் துணையாக ஓராண்டு காலம் பணியாற்றினார்.


1935-ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் சார்பில் அகில இந்தியக் கிராமத் தொழில்கள் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. இதன் தலைவராகக் காந்தியடிகளும் செயலாளர் மற்றும் அமைப்பாளராக குமரப்பாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த அமைப்பின் மூலம் நாடெங்கும் கிராமத் தொழில்களைத் திருத்தி அமைக்கவும் அதன் வளர்ச்சிக்கு உதவும் பல்வேறு தொழில்நுட்பங்களை வழங்கவும் இந்த அமைப்பு பெரும் பணியாற்றியது. கிராம உத்யோக் பத்திரிக்கா என்ற பெயரில் மாத இதழ் ஒன்றையும் குமரப்பா நடத்தினார்.


1938-ம் ஆண்டு காங்கிரஸ் தலைவராக சுபாஷ் சந்திர போஸ் இருந்தபோது தேசியத் திட்டக் குழு ஒன்றை அவர் அமைத்தார். பிற்காலத்தில் நாடு சுதந்திரம் பெற்றபோது உருவாக்கப்பட்ட தேசியத் திட்டக் குழுவுக்கு இதுவே முன்னோடியாகும். இக்குழுவுக்குத் தலைவராக ஜவாஹர்லால் நேரு நியமிக்கப்பட்டார். காந்தியடிகள் மற்றும் நேருவின் வற்புறுத்தலுக்கு இணங்க இக்குழுவில் அங்கம் வகிக்க இசைந்த குமரப்பா 3 மாதங்களில் இக்குழுவில் இருந்து விலகினார். திட்ட அணுகுமுறையில் அவருக்கு இருந்த கருத்து வேறுபாடே இதற்குக் காரணமாகும்.


1942-ம் ஆண்டு ஆகஸ்டு போராட்டத்தின்போது அதில் ஈடுபட்டு பல்வேறு தலைமறைவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக இரண்டரை ஆண்டுக் காலம் சிறையிலடைக்கப்பட்டு 1945-ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். சிறையிலிருந்த போது "நிரந்தரப் பொருளாதாரம்', "இயேசு பிரானின் போதனைகளும், செயற்பாடுகளும்' எனும் இரு நூல்களை எழுதினார். இந்த நூல்களைப் படித்து வியந்து போற்றிய காந்தியடிகள் குஜராத் வித்யா பீடத்தின் மூலம் இவருக்கு இரு முனைவர் பட்டங்களை வழங்கச் செய்தார்.


இந்தியாவுக்குச் சுதந்திரம் வழங்குவது குறித்து இந்தியத் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக பிரிட்டிஷ் அரசால் அனுப்பப்பட்ட நாடாளுமன்றக் குழு காந்தியடிகளை சென்னையில் 23-1-1946 அன்று சந்தித்துப் பேசியது. இந்தியாவின் பொருளாதார சமுதாய சிக்கல்கள் குறித்து ஜே.சி. குமரப்பா, அவர் சகோதரர் பரதன் குமரப்பா ஆகியோரைச் சந்தித்துப் பேசுமாறு காந்தியடிகள் நாடாளுமன்றக் குழுவை வேண்டிக் கொண்டார். எனவே அக்குழுவினர் இருவரையும் சந்தித்துப் பேசி பல விவரங்களை அறிந்து கொண்டனர். அந்த இரு சகோதரர்களுக்கும் காந்தியடிகள் அளித்த முக்கியத்துவத்தை இந்நிகழ்ச்சி சுட்டிக்காட்டுகிறது.


நாடு சுதந்திரம் பெற்ற பிறகு அவருக்கு அதிகார அரசியலில் நாட்டமில்லை. இந்தியாவின் முதலாவது நிதியமைச்சராக இவரே நியமிக்கப்படுவார் என்ற நம்பிக்கை நாடெங்கும் பரவியிருந்தது. ஆனாலும் எந்த பதவியையும் ஏற்க அவர் முன்வரவில்லை.

1947-ம் ஆண்டு காங்கிரஸ் செயற்குழுவில் இருந்து ஜெயப்பிரகாஷ் நாராயணன் விலகியபோது இவரை நியமிக்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்தது. ஆனால் காந்தியடிகள் வற்புறுத்தியும்கூட இவர் அதை ஏற்க மறுத்தார். காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த இடதுசாரிகள் மற்றும் வலதுசாரிகள் ஏற்கக்கூடிய பொருளாதாரக் கொள்கை ஒன்றை வகுத்து பிரதமர் நேருவிடம் இவர் அளித்தார். ஆனால் காந்தியடிகளின் மறைவுக்குப் பிறகு குமரப்பாவின் ஆலோசனைகளை நேரு ஏற்கவில்லை. இந்தியாவில் சோஷலிச முறையில் தொழிற்புரட்சி ஒன்றை ஏற்படுத்துவதையே அவர் விரும்பினார். அந்த அடிப்படையில் அரசுத் துறையில் கனரகத் தொழில்களை உருவாக்கினார்.


ஆனால் குமரப்பாவோ இயற்கையோடு இயைந்த தொழிற்புரட்சி ஏற்பட வேண்டுமென்று விரும்பினார். கடலில் உள்ள நீர் சூரிய வெப்பத்தால் ஆவியாகி மேலே சென்று மேகமாகி மீண்டும் நிலத்தில் மழையாகப் பொழிகிறது.


ஆறுகளில் பெருகி ஓடி வரும் மழை நீர் கடலில் கலக்கிறது. இது இயற்கையான சுழற்சியாகும். இந்த இயற்கை நெறியை மறந்து செயற்படும் நாடு குழப்பத்தில் ஆழும் என குமரப்பா கருதினார்.


ஒவ்வொரு கிராமமும் அங்கு வாழும் மக்களுக்குத் தேவையான பொருள்களை அங்கேயே கைத்தொழில் முறையில் உற்பத்தி செய்ய வேண்டும். ஒவ்வொரு கிராமமும் தன்னிறைவு பெற்ற கிராமமாக மாறுவது மொத்தத்தில் நாட்டைத் தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றிவிடும் எனக் கருதினார். ஆனால் காந்தியடிகளுக்குப் பிறகு அவரது யோசனைகளை ஏற்கவோ, செயற்படுத்தவோ யாரும் தயாராக இல்லை.


1950-களின் தொடக்கத்தில் சீனா, சோவியத் ஒன்றியம், கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றுக்கு அவர் நல்லெண்ணத் தூதுவராகச் சென்று வந்தார். அந்நாடுகளில் ஏற்பட்டிருக்கும் புரட்சிகரமான மாற்றங்களை நேரில் காணும் ஒரு வாய்ப்பாக இந்தப் பயணத்தை அவர் பயன்படுத்திக் கொண்டார்.


இந்தியாவில் விரைவான தொழில்மயக் கொள்கையும் நிலச் சீர்த்திருத்தத்தைப் பற்றி உண்மையாக எந்த நடவடிக்கையும் இல்லாதிருப்பதையும் அதற்கு நேர்மாறாக இந்நாடுகளில் நிலைமை இருப்பதையும் நேரில் கண்டார். அந்தப் பயணத்துக்குப் பிறகு இந்நாடுகளில் நிலவும் தன்னிறைவு உணர்வை அவர் பாராட்டினார்.


மக்களின் அடிப்படை வாழ்வில் முன்னேற்றம் காண்பதை நோக்கமாகக் கொண்டு அரசுகள் இயங்குவதை அவர் மிகவும் பாராட்டினார். உண்மையான காந்தியவாதியான அவர் கம்யூனிச நாடுகள் குறித்து வெளியிட்ட கருத்துகள் பலருக்கு வியப்பை அளித்தன.


இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால் உலகப் பெரும் வல்லரசாக அமெரிக்கா உருவானதையும் அவர் கண்டார். ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளுக்குப் பதிலாக அமெரிக்கா புதிய ஏகாதிபத்தியமாக உருவானதை அவர் கண்டித்தார்.


கொரியாவில் அமெரிக்கா நாபாம் குண்டுகளையும், கிருமி குண்டுகளையும் வீசியதை அவர் கடுமையாகக் கண்டனம் செய்தார். அமெரிக்காவுக்கு எதிராகப் பொருளாதாரப் புறக்கணிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள இந்தியா உள்பட உலக நாடுகள் முன்வரவேண்டுமென்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.


வினோபா பாவே தலைமையில் நடைபெற்ற பூதான இயக்கமும் அவரது விமர்சனத்துக்கு உள்ளாயிற்று. நிலத்தைத் தானமாகப் பெற்று நிலமில்லாதவர்களுக்கு அதை வழங்குவதோடு பூதான இயக்கத்தின் கடமை முடிந்துவிடாது. நிலத்தைப் பெற்ற ஏழை எளிய மக்கள் அதில் வேளாண்மை செய்யவும் தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ளவும் வழிவகை செய்ய வேண்டும்.


அதற்கு அந்த மக்களைப் பயிற்றுவிப்பதற்குத் தொண்டர்களும் வேண்டும். இதையெல்லாம் செய்யாமல் பூதான இயக்கம் இயங்குவது வெற்றி பெறாது என்று அவர் கூறியபோது, பலரும் அவர்மீது கோபப்பட்டனர். ஆனால் அவர் கூறியதுதான் சரியானதென்பதை காலம் நிரூபித்தது.


சர்வோதய இயக்கம் குறித்தும் அவருக்கு இதுபோன்ற கருத்துகள் இருந்தன. அதை அவர் வெளிப்படுத்தத் தயங்கவில்லை. இதை அந்த இயக்கத்திலிருந்த பலர் விரும்பவில்லை. ஆனாலும் அவர் மனதில் பட்டதை மறைக்காமல் கூறினார்.


தேசத்தந்தை காந்தியடிகளுக்குப் பொருளாதாரத் திட்டம், நிர்மாணத் திட்டம், கைத்தொழில் திட்டம் போன்ற பல துறைகளில் அரிய ஆலோசனைகளை வழங்கி அவரால் பாராட்டப்படும் நிலையில் இருந்த நிகரற்ற தமிழர் ஜே.சி. குமரப்பா.


காந்தியடிகளின் நெருங்கிய சகாக்களாக இருந்த அத்தனை தலைவர்களுடனும் தோழமை உணர்வோடு பழகியவர் அவர். ஆனாலும் ஒருபோதும் அவற்றைப் பயன்படுத்திப் பதவி நாடாதவர்.


காந்தியடிகள் எப்படி அதிகாரப் பதவிகள் எதையும் நாடாமல் வாழ்ந்தாரோ, அதைப்போல அவருடைய உண்மையான சீடரான குமரப்பாவும் "என் கடன் பணி செய்து கிடப்பதே' என்ற நாவுக்கரசரின் வாக்குக்கு ஏற்ப வாழ்ந்தார்.


காந்தியடிகளின் மறைவுக்குப் பிறகும் அவர் வழியிலிருந்து கொஞ்சமும் விலகாமல் உறுதியாக நடந்தவர் குமரப்பா. இதன் காரணமாகவே தன்னுடைய பழைய சகாக்களின் புறக்கணிப்புக்கு அவர் ஆளானார். அதைக் குறித்தெல்லாம் அவர் ஒருபோதும் கவலைப்படவில்லை. உண்மையான காந்தியவாதியாக இறுதிவரை வாழ்ந்தார்.


மதுரை மாவட்டம் கல்லுப்பட்டியிலிருந்த காந்தி நிகேதன் ஆசிரமத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று அருந்தொண்டு புரிந்தார். இறுதியாக சென்னை அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டபோது வினோபா பாவே, குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத், ராஜாஜி, காமராஜ் போன்ற பல தலைவர்கள் அவரைச் சந்தித்தனர்.


அவருடைய சகா அரியநாயகம், சகோதரர் பரதன் குமரப்பா ஆகியோர் அவர் அருகேயே இருந்தனர். அவருடைய குருநாதர் காந்தியடிகள் மறைந்த அதே நாளான 30-1-1960 அன்று அவர் மறைந்தார்.


காந்தியப் பொருளாதாரத்தை வடிவமைத்த அந்தத் தமிழனின் 50-வது நினைவுநாள்.


யார் யாருக்கெல்லாமோ பிறந்த நாளும், நினைவு நாளும் நடத்தப்படுகிறது. குமரப்பாவைப் பற்றி நினைக்கக் காங்கிரஸ்காரர்களுக்குக்கூட நேரமுமில்லை, மனமுமில்லை.


தமிழன் நன்றி கெட்டவனாக இருக்கலாம். ஆனால், உலகம் அப்படியல்ல. குமரப்பாவின் நிலைத்த பொருளாதாரக் கொள்கையும், அவர் முன்வைத்த மரபுசாரா எரிசக்திக் கொள்கையும் உலகளாவிய சிந்தனையைத் தூண்டியிருக்கிறது.

அண்ணல் காந்தி அடிகள் விதைத்த ஒருமைப்பாட்டுச் சிந்தனை

நம்பிக்கை,​​ அர்ப்பணிப்பு உணர்வு ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் புதிய இந்தியா உருவாக்கப்பட வேண்டுமென்று எண்ணிய சமுதாயச் சிற்பி அண்ணல் காந்தியடிகள்.

அண்ணல் காந்தி அடிகள் தன் வாழ்நாளில் குறிப்பிட்டுக் காட்டிய மாநில ஒற்றுமை,​​ அதனால் உண்டாகும் வலிமையான பாரதம் ஆகிய கொள்கைகள் இன்றளவுக்கும் இந்தியாவுக்குப் பொருத்தமுடைய கொள்கைகளே.​ இத்தகைய ஒற்றுமை உணர்வை இந்தியாவுக்குள் அவர் உண்டாக்கியதால்தான் உலக சமாதானத்துக்கு வழிகாட்டும் தலைமைப்பண்புக்கு ஏற்ற நாடு என்ற தகுதி,​​ உலக அளவில் இந்தியாவுக்குக் கிடைத்தது.

இன்றைய இந்திய மாநிலங்களில் குறிப்பாக ஒன்றுபட்ட ஆந்திரத்தில் தனித் தெலங்கானா மாநிலம் ஏற்படுத்தக்கோரி,​​ தொடர் கிளர்ச்சிகள் நடக்கின்றன.​ தனி கூர்க்காலாந்து மாநிலம் வழங்கக்கோரி மேற்கு வங்கத்திலும்,​​ தனி விதர்பா மாநிலம் உருவாக்க வேண்டுமென்ற கருத்து உருவாகி மகாராஷ்டிரத்திலும் தொடர் ​ ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன.​ அத்துடன் மாநில உணர்வுகள் தலை தூக்கி அண்டை மாநிலங்களுடன் நடந்து வரும் பங்காளிச் சண்டைகள்.

உதாரணத்துக்குத் தமிழகத்துக்கும்,​​ கேரளத்துக்கும் இடையில் நடைபெற்று வரும் முல்லைப் பெரியாறு பிரச்னை.​ தமிழகத்துக்கும் கர்நாடகத்துக்கும் இடையே இன்று வரை முடிவுக்கு வராத காவிரி நதி நீர்ப் பிரச்னை.

தமிழகத்துக்கும்,​​ அண்டை மாநிலமான ஆந்திரத்துக்கும் இடையே பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதில் பிரச்னை.​ தேசிய உணர்வுகள் மழுங்கடிக்கப்பட்டு மாநில உணர்வுகள் மேலோங்கி உள்ள இன்றைய நிகழ்வுகளால்,​​ இந்தியா என்ற கட்டுக்கோப்பான,​​ உறுதியான ஒன்றிய உணர்வுக்கு எந்த வகையிலும் சேதம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதே தேசிய உணர்வுள்ளோரின் கவலை.

அன்னியர்கள் இந்தியாவில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட எண்ணிய காலத்தில்,​​ அன்றைய இந்தியா சிறு சிறு அரசுகளாய்ப் பிரிந்து,​​ துண்டு துண்டாய் அமைந்திருந்தமையால்,​​ அன்னியர்கள் தங்கள் பிரித்தாளும் சூழ்ச்சியின் மூலம் அந்த அரசுகளை அடிமைப்படுத்துவதற்கு ஏதுவான சூழல் இருந்தது.​ அந்த நிலை மீண்டும் உண்டாகத் துணை போகக் கூடாது.

உடலுக்கு,​​ தலை முதல் கால்வரை எவ்வாறு சீரான ரத்த ஓட்டம் அவசியமோ அதைப்போல் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வாழ்கின்ற மக்கள் அனைவருக்கும்,​​ நம் அரசியல் சாசனத்தின்படி கிடைக்க வேண்டிய அடிப்படை வசதிகளும் அனைத்துப் பயன்களும் ஒரே மாதிரி சீராகக் கிடைக்கச் செய்வது மத்திய,​​ மாநில அரசுகளின் தலையாய கடமையாகும்.​ ​

அதிலிருந்து அரசுகள் பிறழ்கின்ற போதும்,​​ அதனால் தங்களுக்கு வேண்டிய சமநீதி கிடைக்காத போதும் அப்பகுதி மக்களுக்குத் தனித்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கமும்,​​ தங்கள் நோக்கம் நிறைவேறப் போராட்டம் என்ற ஆயுதத்தைக் கையில் ஏந்தலாம் என்ற எண்ணமும் உண்டாகிறது.

இந்தியா என்பது மொழிவாரி அடிப்படையில்,​​ பல மாநிலங்களாகப் பிரிந்திருந்தாலும்,​​ இத்தகைய மாநில அடிப்படையிலான தேசியத்தின் மீதும்,​​ அதன் ஒற்றுமை மீதும் அளவற்ற நம்பிக்கை உடையவராக அண்ணல் காந்தி விளங்கினார்.​ ​

ஒவ்வொரு மாநிலமும் தங்களுக்கென தனியான,​​ தனித்தன்மையும்,​​ தனி மொழி மற்றும் நாகரிக நடவடிக்கைகளை உள்ளடக்கியதாகவும் இருந்ததை அவர் பெரிதும் விரும்பி வரவேற்றார்.​ ​ அத்தகைய தனித்துவம் அந்த மாநிலங்களுக்கு இல்லையெனில்,​​ அவை தனி மாநிலங்களாக இருக்க வேண்டிய அவசியமே இல்லை என்றார்.​ ​ நம்முடைய இந்திய மாகாணங்கள் மிகப்பெரிய ஆறுகளாலும்,​​ உபநதிகளாலும் சூழப்பெற்று வல்லமை மிக்கதாய் அமைந்துள்ளன.​ அவைகளின் வல்லமையும்,​​ பூரணத் தன்மையும் போற்றுதலுக்குரியதாகவே இருக்கலாம்.

இத்தகைய உணர்வுகள் எல்லாம் அவரவர் தம் மாநிலங்களுக்குள்ளேயே இருக்க வேண்டும்.​ ​ மகாகவி ரவீந்திரநாத் தாகூரின் படைப்புகள் இந்தியா முழுமையும் ஊடுருவிப் பாய்ந்து,​​ பரந்து அவர்தம் பெருமையை உலகம் முழுவதும் பறைசாற்றலாம்.​ ​ அவர் வங்காளத்துக்கு மட்டுமே சொந்தமானவர் என்று யாரும் சொந்தம் கொண்டாட முடியாது.​ தாதாபாய் நெüரோஜி மகாராஷ்டிரத்துக்கோ அல்லது பார்சிகளுக்கு மட்டுமே உரியவர் அன்று.​ அவர் இந்தியா முழுமைக்கும் உரிமையானவர் ஆவார் என்று எடுத்துக்கூறி அண்ணல் காந்தி,​​ தன் இந்திய உணர்வைப் பறைசாற்றினார்.​ அதே நேரத்தில் மாநில உணர்வுகள் நிச்சயம் மதிக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தியவர் ​ காந்திஜி.​ 2.5.1915-ல் மயிலாடுதுறைக்கு அவர் வந்தபோது தமிழ்நாட்டு மக்கள் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை அளித்தனர்.​ அவருக்குப் படித்தளித்த வரவேற்பு இதழ் ஆங்கிலத்தில் அமைந்திருந்தது.

அப்போது மகாத்மா கோபப்பட்டுச் சொன்னார்.​ ""காங்கிரசின் திட்டங்களில் சுதேசி பற்றிய தீர்மானம் இருக்கிறது.​ ​ நீங்களோ உங்களது வரவேற்பு உரையை ஆங்கிலத்தில் அச்சிட்டுள்ளீர்கள்.​ ஆங்கிலத்தின் மீது எனக்கு வெறுப்புக் கிடையாது.​ ஆனாலும் தாய் மொழியைக் கொன்று விட்டு அதன் சமாதியின் மீது ஆங்கில மொழியை வளர்த்தீர்களானால் நீங்கள் சரியான முறையில் சுதேசியத்தைக் கடைபிடிக்கவில்லை என்பதுதான் பொருள்'' என்று கூறி மாநில உணர்வுகளின் அடிப்படையில் அமைவதுதான் உண்மையான தேசியம் என்று தன் கருத்தைப் பதிவு செய்தார்.

நாடு சுதந்திரம் பெற்றதற்குப் பின்பும்,​​ அரும்பாடுபட்டு,​​ பெற்ற சுதந்திரம் பாதுகாக்கப்பட தேச ஒற்றுமையை வலியுறுத்திய அண்ணல்,​​ இந்தியாவின் எந்த மாநிலத்திலும்,​​ மற்ற மாநிலத்தைச் சார்ந்தவர்கள் சென்று வரவும்,​​ அங்கு வாழவும் பாதுகாப்பு வழிவகைகளை அந்தந்த மாநில அரசுகள் விழிப்புடன் இருந்து செய்து தர வேண்டும் என்று கூறினார்.​ மற்ற மாநிலங்களிலிருந்து இடம் பெயர்ந்து வேறொரு மாநிலத்துக்கு வருபவர்கள் நாமும் இந்த மாநிலத்தைச் சார்ந்தவரே என்று எண்ணும் அளவுக்கு இணக்கத் தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டுமென்ற தன்னுடைய கருத்தை 21.9.1947 அரிஜன் இதழில் அவர் தெளிவுபடுத்தினார்.​ எல்லா மாநிலங்களும் இந்தியாவுக்குச் சொந்தமானது.​ ​ இந்தியா எல்லா மாநிலங்களுக்கும் சொந்தமானது.​ ​ இத்தகைய தன்மையுடன் நடந்துகொண்டால்,​​ இப்போக்கையே செயல்படுத்த மக்கள் அனைவரும் எண்ணினால் மேலும்,​​ மேலும் மாநிலங்களை உருவாக்கும் எண்ணத்துக்கு வேலையே இல்லை என்ற தன் எண்ணத்தை 7.11.1947 அரிஜன் இதழ் மூலம் பதிவு செய்தார்.

இந்திய மக்கள் அனைவரின் நலனையும் கருத்தில் கொண்டு வலிமையான இந்தியா என்ற பொது நோக்கத்துக்காகவும் மக்களுக்கு ஏற்படும் துன்பங்களைப் பகிர்ந்துகொள்வதற்காகவும் ஒற்றுமையை வலியுறுத்துகிறேன்.​ அதுவே தேச ஒற்றுமை நிலைபெற வழிவகுக்கும் என்றும் அண்ணல் குறிப்பிட்டார்.​ எவ்வகையிலும் நாடு பிரிக்கப்படுவதையோ,​​ துண்டாடப்படுவதையோ அவர் விரும்பவில்லை என்பதுடன் அதன் விளைவு குறித்த எச்சரிக்கையையும் விடுக்கத் தவறவில்லை.​ இந்தியா மிகப்பெரிய நாடு.​ அதனுள் இருக்கும் கனிமங்கள்,​​ தாதுக்கள் மற்றும் வாசனைப் பொருள்கள் உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லை என்பதுடன் அத்தகைய வளங்களை அவர்களால் உருவாக்கவும் முடியாது.

நாம் நமக்குள் சண்டையிட்டுக்கொண்டு இருந்தால் உலகில் சக்தி வாய்ந்த அதிகாரம் கொண்டவர்கள் நம்மீது ஆக்கிரமித்து இந்தியர்களிடமிருந்து,​​ இந்தியாவைப் பறித்து விடக்கூடும்.​ அத்துடன்,​​ நம்முடைய அனைத்து வளங்களும் நம்மை விட்டுச் சென்று விடும் என்ற எச்சரிக்கையை 17.11.1946 அரிஜன் இதழ் மூலம் விடுத்தார்.

அண்ணல் காந்தி வலியுறுத்திய நாட்டுப்பற்று என்பது இந்தியாவின் நன்மைக்காகவும்,​​ அதன் வலிமைக்காகவும் மட்டுமன்றி,​​ அது உலகம் தழுவியதாக இருக்க வேண்டுமென்று எண்ணினார்.​ ​ இந்த எண்ணத்தின் அடிப்படையில் தான் பின் நாளில் அவரது நிழலாய் இருந்த தேசியத் தலைவர்கள் பஞ்சசீலக் கொள்கையை உருவாக்கினார்கள்.​ ஒரு மனிதன் நாட்டுப்பற்றுக் கொண்டவனாக இருந்தால் மட்டுமே அவன் உலகப் பற்றாளனாக இருக்க முடியும் என்று அண்ணல் எடுத்துரைத்தார்.

வலிமை மிக்க,​​ வளமையான பாரதம் என்பது அவரின் லட்சியமாகவும்,​​ உலக சமாதானம் என்பது அவரது இலக்காகவும் இருந்தது.​ ​ ரஷிய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய்,​​ காந்தியின் எழுத்துகளைப் பற்றி குறிப்பிடுகின்றபோது,​​ ""காந்தி,​​ இந்தியாவுக்காக மட்டும் எழுதவில்லை,​​ அவர் உலகத்துக்காகவும் எழுதுகிறார்'' என்று குறிப்பிட்டார்.

அண்ணல் காந்தி தெரிவித்த ஒவ்வொரு கருத்தும்,​​ அவர் நமக்களித்த செய்திகளும் புறத்தூய்மையோடும்,​​ அகத்தூய்மையோடும் அவர் வாழ்ந்து காட்டிய நெறிமுறைகளும் இந்தியாவைப் பொறுத்தவரையில் இன்னும் எத்தனை நூறாண்டுகள் கடந்தாலும் அன்றைய இந்திய சூழலுக்கும் ஏற்புடைய கருத்துகளாய் இருக்கும்.​ ஆகவேதான் 1921-ம் ஆண்டில் தான் மரணமடைவதற்கு முன்னரே,​​

"முடிவில்லா கீர்த்தி பெற்றாய் ​

புவிக்குள்ளே முதன்மையுற்றாய்''

என்று அண்ணல் காந்தியைப் பற்றி தன்னுடைய மதிப்பீட்டை சாசனமாகப் பதிவு செய்து விட்டுச் சென்றார் மகாகவி பாரதியார்.

இந்தியா முழு சுகாதாரம் என்பது எட்டாக்கனியாகி விடாது..!​​

100 கோடியைத் தாண்டிய மக்கள்தொகை,உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு,​​ கணினி,​​ விண்வெளித் துறையில் வல்லரசுகளோடு போட்டிபோடும் வளர்ச்சி,​​ 50 கோடிக்கும் மேற்பட்ட இளைஞர்களுடன் ஏராளமான மனிதவளம்,​​ மதம்,​​ மொழிகளால் பிளவுபட்டிருந்தாலும் அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஒன்றுபட்டிருக்கும் தேசம் என ​ இந்தியா பற்றிய கண்ணோட்டம் இப்போது மாறியிருக்கலாம்.

​ ஆனால்,​​ எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளிவிடுவதைப்போல உள்ளது,​​ சுற்றுப்புறச் ​ சுகாதாரத்தைக் கடைப்பிடிப்பதில் மக்களிடம் உள்ள அலட்சியப் போக்கு.

​ ​ நமது கலாசாரம் தொன்மையானது,​​ ஒழுக்கமானது எனப் பெருமைப்பட்டுக் கொண்டாலும்,​​ குறிப்பாக சுகாதார மேம்பாட்டில் வளர்ந்த நாடுகளை விட,​​ வெகுவாகப் பின்தங்கி உள்ளோம் என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

​ இப்போது,​​ தொலைக்காட்சிகளில் தமிழில் மொழிமாற்றம் செய்து நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது ஒரு சேனல்.​ அதில்,​​ ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருந்தாலும்,​​ அதன் கருத்தாக்கம்..​ வர்ணனை..​ வருத்தமளிப்பதாக இருந்தது.​ ​

​ ​ அந்நிகழ்ச்சியில்,​​ புகழ்பெற்ற தாஜ்மகால் அமைந்துள்ள ஆக்ராவைச் சுற்றி கேமராவோடு வலம் வருகிறார் வர்ணனையாளரான வெளிநாட்டு இளைஞர்.​ அந்நகர் பற்றியும்,​​ வீதிகளில் மலஜலம் கழிக்கும் குழந்தைகள்,​​ சாலையோர உணவகங்கள்,​​ அருகில் குவிந்திருக்கும் குப்பைகள்,​​ வீதிகளில் திரியும் கால்நடைகள்,​​ பிச்சைக்காரர்கள்,​​ கழைக் கூத்தாடிகள்,​​ குடிசைப்பகுதிகள் என ஒவ்வோர் இடமாக கேமராவை நுட்பமாகச் சுழற்றி,​​ தமக்கே உரிய பாணியில் கிண்டலடித்துக் கொண்டே செல்கிறார் அந்த இளைஞர்.​ கடைசியில் "ஒரே நாற்றம்.​ குடலைப் புரட்டுது;​ ஏண்டா இங்க வந்தோம்னு ஆச்சு' என அலுத்துக் கொள்வதோடு நிகழ்ச்சி முடிவடைகிறது.

​ ​ அந்நிகழ்ச்சி,எவ்வித பாதிப்பையோ,​​ மாற்றத்தையோ இங்கு ஏற்படுத்திவிடப் ​ போவதில்லை.​ ஆனால்,​​ உலகம் முழுவதும் வெவ்வேறு மொழிகளில் அந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்போது,​​ அதைப் பார்க்கும் மேலைநாட்டவர்களிடம்,​​ இந்தியா பற்றி எதிர்மறையான கண்ணோட்டம் உருவாவதைத் தவிர்க்க முடியாது.

​ ​ அண்மையில்,​​ நாளிதழ்களில் "நகராட்சிப் பணியாளர்கள் நூதனப் போராட்டம்' என்ற செய்தி வெளியானது.​ அதில்,​​ அரசு மருத்துவமனையின் முன்புறம் குப்பைத் தொட்டி வைக்கப்பட்டிருந்தது.​ இந்நிலையில்,​​ மருத்துவமனை ஊழியர்கள் மருத்துவக் கழிவுகளைக் குப்பைத் தொட்டியில் கொட்டாமல்,​​ கண்ட இடங்களில் கொட்டி வந்துள்ளனர்.​ எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் கேட்காததால்,​​ பொறுமையிழந்த துப்புரவு ஊழியர்கள்,​​ திடீரென குப்பைகள் அனைத்தையும் வாரி,​​ மருத்துவமனை நுழைவாயிலில் கொட்டி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

​ ​ அது,​​ மாவட்ட நிர்வாகத்தின் கவனத்தை ஈர்த்து பேச்சுவார்த்தை நடத்தி,​​ குப்பைப் பிரச்னை ஒருவழியாக முடிவுக்கு வந்தது.

​ ​ நகரில் கொட்டப்படும் குப்பைகளை மறுசுழற்சி செய்வதற்காக,​​ மாநகராட்சி சார்பில் ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டது.

​ ​ மக்கும் குப்பைகள்,​​ மக்காத குப்பைகள் என பிரித்துப் போடுவதற்காக வீடுகள்தோறும் வெவ்வேறு நிறங்களில் ​(பச்சை,​​ சிவப்பு)​ பிளாஸ்டிக் பக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்பட்டன.​ இப்போது,​​ அத்திட்டம் தோல்வியடைந்து விட்டதாக மாநகராட்சி அதிகாரிகளே ​ ஒப்புக்கொள்கின்றனர்.

​ வாங்கியே பழக்கப்பட்டுவிட்ட மக்களுக்கு,​​ இலவசமாகக் கிடைத்த புத்தம் புதிய ​ பக்கெட்டுகளில் குப்பைகளைக் கொட்ட மனம் வருமா..?​ ​

​ பெரும்பாலானோர்,​​ அவற்றை வேறு பயன்பாட்டுக்கு வைத்துக் கொண்டு,​​ வழக்கம்போல,​​ வீதியில் குப்பைகளைக் கொட்டி, பணிச் சுமையை அதிகப்படுத்துவதாக துப்புரவுப் பணியாளர்கள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.

​ ​ லாரிகளில் சரியாக தார்ப்பாயால் மூடாமல்,​​ வீதியெங்கும் குப்பைகளைச் சிதற விட்டுச் செல்வது,​​ பல நாள்களாக அள்ளப்படாமல் தொட்டிகளில் நிரம்பி நாற்றமடிக்கும் குப்பைகள் என துப்புரவுப் பணியாளர்கள் மீதும் பொதுமக்களிடமிருந்து ​ பல்வேறு புகார்கள்.​ ​

​ மாநாடு,​​ விழாக்கள்,​​ பூங்கா உள்ளிட்ட பொது இடங்களில் குப்பைகள்,​​ உணவுக் கழிவுகளை அமர்ந்த இடங்களிலேயே போட்டுவிட்டுச் செல்லும் பொதுமக்கள்,​​ பஸ் நிலையம்,​​ வழிபாட்டுத் தலங்களின் சுவரில்கூட,​​ கூச்சமின்றி இயற்கை உபாதையைத் தணித்துவிட்டுச் செல்லும் பாதசாரிகள்,​​ வெள்ளம் வரும்போது தவிர,​​ மற்ற காலங்களில் நகரில் மிகப் பெரிய குப்பைக் கிடங்காகவும்,​​ திறந்தவெளிக் கழிப்பிடமாகவும் ஆகிவிட்ட ஆறுகள்,​​ சாயக் கழிவுகளால் விஷமாகிப்போன நதிகள் என,​​ சுகாதாரக்கேடு தீராத நோயாக நீடித்து,​​ மக்களுக்குப் பல்வேறு நோய்களைப் பரப்பி வருகிறது.​ ​ ​

÷அமைச்சர்கள்,​​ உயர் அதிகாரிகள் வருகையின்போது மட்டும் அரசு மருத்துவமனைகள்,​​ சாலைகள் வெள்ளையடிக்கப்பட்டு பளிச்சென இருப்பதும்,​​ மற்ற நேரங்களில் சுகாதாரக் கேட்டின் உறைவிடமாக அவை திகழ்வதும்,​​ "நம்மை யார் கேட்கப் போகிறார்கள்..?' என்ற சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களின் அசிரத்தையான மனோபாவம்தான்.

​ இந்தியாவில் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய் சுகாதார மேம்பாட்டுப் பணிகளுக்காக ஒதுக்கப்படுகிறது.​ ஆனால்,​​ மலைபோலக் குவியும் குப்பைகளால்,​​ மெட்ரோ நகரங்கள்கூட அழுக்கடைந்து காணப்படுவதாக,​​ மத்திய அமைச்சர் குறைபட்டுக் கொள்ளும் அளவுக்குத்தான் நிலைமை நீடிக்கிறது.

​ ​ கடுமையான சட்டங்களால்,​​ மக்களின் மனோபாவத்தை ஒரேநாளில் மாற்றிவிட முடியாது.​ "மூவாயிரம் அடி பயணமும்,​​ முதல் அடியில் தொடங்குகிறது' என்பதற்கேற்ப அரசு,​​ தூய்மைப் பணியை புதிய ஓர் இயக்கமாகத் தொடங்கி,​​ பல்வேறு ​ அமைப்புகளையும் இணைத்துக் கொண்டு முனைப்புடன் செயல்பட்டால்,​​ முழு சுகாதாரம் என்பது எட்டாக்கனியாகி விடாது..!​​

நான் தேசபக்தன் அல்ல

நான் தேசபக்தன் அல்ல
பாமரன்


“ஏன் ஒதுங்கியே நிற்கிறீர்கள்...? கொண்டாட மாட்டீர்களா...?” என்றது தொலைபேசிக்குரல்.

அதுவும் ஒரு பத்திரிகையாளருடையது.

எதற்காகக் கொண்டாட வேண்டும்...? என்றேன்.

“இந்தியா கிரிக்கெட்டில் ஜெயித்ததை...” என்றார்.

ஜெயித்தால் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாடுவதுமில்லை. தோற்றால் செருப்பாலடித்து இழிவு படுத்துவதுமில்லை.

இரண்டுமே எனது வேலையில்லை...” என்றேன்

“இந்திய ராணுவத் தளபதி என்.சி.விஜ் கூட ‘இது இந்தியாவுக்கே கெளரவத்தை தேடித் தந்திருக்கிறது...’ என்று வாழ்த்தி இருக்கிறாரே...?”

அப்படியானால்... ஆஸ்திரேலியாவிடம் தோற்றதற்கு ‘இது இந்தியாவுக்கே அவமானம்’ என்று கண்டனம் தெரிவிக்கவில்லையே ஏன்...? என்றேன்.

“என்ன இருந்தாலும் பாகிஸ்தானை ஜெயித்திருக்கிறோம்... இனி உலகக் கோப்பையே கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை...”என்று

தனது அறியாமையை அள்ளிக் கொட்டினார் அந்தப் பத்திரிகையாளர்.

இதற்கு எங்கள் ஊரில் வேறு பழமொழி இருக்கிறது என்றேன்.

“என்ன பழமொழி...?”

“மகன் செத்தாலும் சரி... மருமக தாலி அறுக்கணும்...”

“ச்சே... தேசபக்தியே கிடையாதா...?” எரிச்சலின் உச்சத்தில் இருந்தது குரல்.

நிச்சயமாகக் கிடையாது. ஆனால்... தேசங்களில் உள்ள மக்களின் மீது மாளாக் காதல் உண்டு.

எம்மைப் போலவே பசியிலும்... பட்டினியிலும் உயிரை விடுகிற...

தள்ளாத வயதிலும் ஊதுபத்திகளையும்... தீப்பெட்டிகளையும்

வீடு வீடாகச் சுமந்துசென்று விற்று வயிறு வளர்க்கிற...

நிலங்களை இழந்து...

வாழ்க்கையை இழந்து...

விமானங்கள்வீசும் உணவுப் பொட்டலங்களுக்காக

வானத்தை அண்ணாந்து பார்த்துக் காத்திருக்கிற...

சோமாலியா மக்கள்மீது காதல் உண்டு...

பாகிஸ்தான் மக்கள்மீது காதல் உண்டு...

இலங்கை மக்கள் மீது காதல் உண்டு...

நிகரகுவா மக்கள்மீது காதல் உண்டு...

இவர்களைப் போன்றே இன்னமும் ஒடுக்கப்படுகின்ற

ஒவ்வோரு மூன்றாம் உலக நாடுகள்மீதும் எமக்கு காதல் உண்டு.

ஆனால் உங்களைப் போல கேவலம் ஒரு கிரிக்கெட்டிற்காக ஆர்ப்பரிக்கும் போலி தேசபக்தி மட்டும் நிச்சயம் இல்லை எமக்கு.

விளையாட்டை விளையாட்டாகப் பார்க்காமல், இந்தியாதான் ஜெயிக்கணும்... பாகிஸ்தான் தோற்கணும்... என்கிற ரசிகர் மன்ற மனோபாவத்தோடுதான் பார்க்கவேண்டும் என்றால்... மன்னித்து விடுங்கள் என்னை. நானிந்த ‘விளையாட்டிற்கு’ வரவில்லை.

அப்படி பார்த்தால் ஜாக்கிசான், அர்னால்டு படங்களைக்கூட பார்க்கக்கூடாது நீங்கள்...என்றேன்.

போனை வைத்து விட்டார் நண்பர்.

இந்த நவீன நீரோக்களை நினைத்தால் எரிச்சலைக் காட்டிலும் பரிதாபமே மேலிடுகிறது. அண்டை நாட்டிடம் தேற்றால் கேவலம்

வெள்ளைத் தோலர்களிடம் தோற்றால் கெளரவம் என்று கருதுகிற அடிமை மனோபாவம் எப்போது தொலையும் இந்த இரு நாட்டுக்கும்...?

இந்துஸ்தானோ...

பாகிஸ்தானோ...

இறுதியில் மண்டியிட்டுக் கிடப்பது அமெரிக்காஸ்தானிடம்தான்.

அதில் மட்டும் சுயமரியாதையைத் தொலைத்துவிட்டுத் திரிவார்கள் இவர்கள்.

கொஞ்சம் யோசித்துப்பார்த்தால் ஐயப்பன் கோயிலுக்கு மாலை போடுவது மாதிரிதான் கிரிக்கெட்டும்.

மாலைக்கு மாலை போட்டிருக்கும் துப்புரவுத் தொழிலாளியோ...

விவசாயக் கூலியோ...

மலை ஏறி முடிக்கிற வரைக்கும் ராஜ மரியாதைதான்.

வரப்பில் நிற்கும் பண்ணையார்...’சாமி! மலைக்கு போயிட்டு எப்பத் திரும்புவீங்க...?’ என்பான்.

கடன் கொடுத்த மீட்டர் வட்டிக்காரன்....”சாமிக்கு இது எத்தனாவது வருசம்...?” என்பான்.

எங்கு திரும்பினாலும் ஏக மரியாதைதான்.

ஆனால் ‘சாமி’ மலை இறங்கியது தெரிந்த மறு நிமிடத்திலிருந்து ‘முதல் மரியாதை’தான்.

அப்படிதான் கிரிக்கெட்டும்.

மேட்ச் முடிகிறவரைக்கும் எம்.டி.யிடம் பியூன் ஸ்கோர் கேட்கலாம்.

“கும்ப்ளே அந்த கேட்ச்சை விட்டிருக்கக் கூடாதுங்க...” என்று

கடை முதலாளியிடம் சரக்கு சுமக்கிற பையன் அளவளாவலாம்.

ஆனால் மேட்ச் முடிந்த மறு நொடியே... “...யோளி... அங்க என்ன பராக்கு பார்த்திட்டு இருக்கே...?” என்று குரல் வரும், ‘மாலை’யைக் கழட்டிய மாதிரி....

அதுவரை டீக்கடை தொடங்கி பெரும் தொழில் நிறுவனங்கள் வரைக்கும் கிரிக்கெட்டை அக்குவேறு ஆணிவேறாக அலசுவதென்ன...?

அரிய பல ஆலோசனைகளை அள்ளி வீசுவதென்ன...?

சூப்பர்தான் போங்கள்.

ஆனால் பந்தயம் முடிந்த மறு கணத்திலேயே இவர்களுக்குள் பதுங்கிக் கிடக்கும் வக்கிரங்கள் விழித்துக் கொள்ளும்.

அதுவரையில் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ கண்டவர்கள் பிறகு ஒற்றுமையில் வேற்றுமையைத் தேடிக் கிளம்புவார்கள்.

அது உட்சாதிச் சண்டையாக...

சாதிச் சண்டையாக ...

மதச் சண்டையாக...

மாநிலச் சண்டையாக...

உருவெடுத்து தற்காலிகமாக

இவர்களது தேசபக்தி மூட்டை கட்டி பரணில் போடப்படும்.

அப்புறமென்ன... வழக்கமான தலைப்புச் செய்திகளுக்குள் மூழ்கிப் போகும் தேசம்.

இவர்களது தேசபக்தியை வெளிச்சம் போட்டுக் காட்ட பிறகொரு சந்தர்ப்பம் வராமலா போகும்...? அதுவும் வரும்.

ஒரு விளம்பர இடைவேளைக்குப் பிறகு.

இன்னொரு கிரிக்கெட் பந்தய ரூபத்தில்

நாட்டை அடகு வைக்கிற உலக வர்த்தக நிறுவனம் குறித்துக் கூட்டமாகக் கூடி குரல் எழுப்பமாட்டார்கள் இவர்கள்...

பட்டினிச் சாவுகள் குறித்து கூட்டமாகக் கூடி விவாதிக்க மாட்டார்கள் இவர்கள்...

உலகில் யுத்த மேகங்கள் சூழ்ந்தால் நமது நிலை என்ன என்பதற்கு கூட்டமாகக் கூடி குரல் கொடுக்க மாட்டார்கள் இவர்கள்...

ஆனால் தெருக்களிலும்... தேநீர்க் கடைகளிலும்... திரையரங்குகளிலும் கூடுகிற கூட்டம் கிரிக்கெட் மேட்சிற்காம்.

என்னே தேசபக்தி...?

பாவம்...

இவர்கள் விளையாட்டை

போராகப் பார்க்கிறார்கள்

போரையோ விளையாட்டாகப் பார்க்கிறார்கள்.

இவர்கள் மத்தியில் வாழ்வதைவிடவும்

தண்டனை நம்மைப் போன்ற

‘தேசத்துரோகி’களுக்கு அப்புறம் வேறென்ன இருக்கிறது...?