விவேகானந்தர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விவேகானந்தர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெற்றியை நெருங்கி விட்டோம் ....YOU CAN WIN

 YOU CAN WIN  

வெற்றி பெறுபவர்கள் - வித்தியாசமான வேலைகளை செய்வதில்லை. செய்யும் வேலைகளை வித்தியாசமாக செய்கிறார்கள். செய்யும் வேலைகளை உண்மையிலேயே நல்ல முறையில் செய்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. வேலை சந்தோசம் அளிப்பதாக இருக்க வேண்டும். மனது மலர்ச்சியுடன் எப்போதும் இருக்க வேண்டும்.

எவ்வளவு பெரிய நீச்சல் வீரனாக இருந்தாலும், நீச்சல் அடிக்கும் குளத்தில் முழங்காலுக்கும் கீழ் தண்ணீர் இருந்தால் எப்படி நீந்துவது? அந்த தண்ணீர் போலத்தான் மனதும். நாம என்னதான் திறமையுடன் இருந்தாலும், மனதுக்கு உவகை அளிக்கக் கூடிய வகையில் ஒருவர் வேலை பார்க்கும் சூழல் இல்லையெனில், அவருக்குத் திறமை இருந்தும் என்ன பயன் இருக்க கூடும்?

ஒரு சிலர் நிலைமை படு மோசம்..... சாவி கொடுத்த பொம்மை கதை தான்.

ஒரு டாக்டர், நர்சிடம் அரை மணிக்கொரு முறை நோயாளி ஒருவருக்கு  டெம்பரேச்சர் எடுக்கச் சொல்லியிருந்தார். காலையில் இந்த வேலையைக் கொடுத்து விட்டு சாயந்திரம் வந்தார். நோயாளிகளையும் தலைமாட்டில் இருந்த சார்ட்டுகளையும் பார்த்தார். குறிப்பிட்ட அந்த நர்சிடம் வந்தார்.
“அந்த ஆளுக்கு அரை மணிக்கொருதரம் டெம்பரேச்சர் எடுத்துகிட்டு இருக்கியா?”
“ஆமாம் சார். இப்பக் கூட பதினஞ்சு நிமிஷம் முன்னே எடுத்தேன்”
“போதும் நிறுத்திடலாம். அந்த ஆள் செத்து மூணு மணி நேரம் ஆச்சு”
 படிச்சதும் படக்குன்னு சிரிப்பு வருதா? கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தா நாமளே கூட, ஒரு கால கட்டத்துக்கு அப்புறம் இப்படித்தான் வேலை பார்க்கிறோம். வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் என்று நாம் கூறுபவர்கள் நாம் செய்யும் ஒரு சில வேலையை பார்க்கும்போது, இந்த நர்சைப் போலத் தான் நம்மை பார்க்கின்றனர்.
ஏன், எதுக்குன்னே தெரியாம , நாள் ஆக ஆக, அப்படியே மனசு ஒரு வேலைக்கு பழக்கமாகி , அங்கேயே செட் ஆகிடும். பழகும்போது ரொம்ப ஆர்வமா இருக்கும் ஒரு விஷயம், பழகப் பழக - அதில் எக்ஸ்பெர்ட் ஆகி, அதன் பிறகு இறங்கு முகம் ஆரம்பிக்கும். என்ன தான் நாம் ஆர்வமாக, பொறுப்பாக ஒரு வேலையைப் பார்த்தாலும், இதுதான் அந்த வேலையின் உச்சம் என்று யாரோ ஒருவர் கூறி விட்டாலோ, அல்லது நமது மனது ஒப்புக்கொண்டு விட்டாலோ, அதைத் தாண்டி யோசிக்க மாட்டோம்....
அதே வேலையை திரும்ப திரும்ப பார்க்கும் சூழ்நிலை , உள்ளுக்குள்ளே ஒரு சலிப்பு ஏற்படுத்திவிடும். ஒரே மாதிரி வேலை, ஒரே கம்பெனியில் பல வருடங்களாக வேலை பார்ப்பது எல்லாம் - ஒருகட்டத்தில் ஆளே இல்லையானாலும், டீ ஆத்தும் லெவலுக்குக் கொண்டுபோய் விட்டு விடும். 
வாழ்க்கையில் சாதனையாளர்களுக்கும், சாமானியர்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன என்று - லட்சக்கணக்கில் புத்தகங்கள் வந்து குவிந்து விட்டன. ஏன், நமக்கே எத்தனையோ பேர் சொல்லி இருப்பாங்க. மெயில் வந்து இருக்கும். சினிமால பார்த்து இருப்போம். அதை எல்லாம் படிச்ச கொஞ்ச நேரத்துக்கு ஜிவ்வுன்னு இருக்கும். அதுக்கு அப்புறம் அப்படியே மறந்து போகும்... ஓடு , ஓடுன்னு ஓடிஓடியே - வழக்கமான வேலைகளைப் பார்த்து பார்த்து - அப்படியே ஒரு லெவல்ல நின்று விடுகிறோம்.

"ஷிவ்கேரா" ன்னு ஒருத்தர் -  " YOU CAN WIN  " அப்படின்னு ஒரு புத்தகம் எழுதி  இருக்கிறார். உலகப் புகழ் பெற்ற புத்தகம்.  அவரது தன்னம்பிக்கை வகுப்புகள், உரைகள் -  ஏராளமாக " You  Tube "  - பில் கிடைக்கும். ஒரு முறை பாருங்கள்... நிச்சயம் உங்களுக்கு Pop  Eye இன் Spinach  குடித்த தெம்பு கிடைக்கும்.இணையத்தில் இந்த புத்தகம் free  யாக கிடைக்கிறது. கூகுளில் தேடினால், நீங்களே டவுன்லோட் செய்து படிக்க முடியும்.

எதற்க்காக சொல்கிறேன் என்றால், உடல் ஒரு எந்திரம் போன்றது. அதற்கே ஓய்வு தேவைப்படும்போது - மனது ஒரு புதிரான ஒரு வஸ்து. அதற்க்கு புத்துணர்ச்சி தருவது மிக முக்கியம். மனத்தை சோர்வடையாமல் வைத்து இருப்பவர்கள் மட்டுமே, வாழ்வில் சிறப்பான நிலைமை அடைய இயலும்.

I am the champion. I can Win - இதை மட்டுமே திரும்ப திரும்ப நினையுங்கள். இந்த இரு வாக்கியங்கள், மனதுக்கு புது பலம் கொடுக்கும். சோர்வடையும் நிலைமையில் , இந்த வாக்கியங்கள் கொடுக்கும் சக்தி அளவிட முடியாதது.

சரி - வாழ்க்கையில் ஜெயித்தவர்களுக்கும், கடவுள் நம்பிக்கைக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? சம்பந்தம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் ஒவ்வொரு சாதனையாளனுக்கும் - அவன் மனதுக்கும் சம்பந்தம் இருக்கிறது.

எத்தனையோ  முறை  தோல்வி அடைந்தாலும் , இதோ வெற்றியை நெருங்கி விட்டோம் என்கிற மன வலிமை - நிச்சயம் ஒவ்வொரு வெற்றிக்கும் பின்னே இருக்கிறது. மனதுக்கும் , இறைவனுக்கும் சம்பந்தம் இருக்க முடியுமோ ஒருவேளை?

மகான் ஒருவர் கேட்கிறார்  : உங்கள் வீட்டுப் பூஜை அறையிலும், கோவில்களில் இருக்கும் சிலைகளிலும் பகவான் இருக்க முடியும் என்று நம்பி வணங்குகிறீர்களே அப்படி, எங்கும் வியாபித்து இருக்கும் அந்த பரப் பிரம்மம் - உங்கள் உள்ளும் உறைந்து இருக்கும் என்பதை நீங்கள் ஏன் நம்ப மறுக்கிறீர்கள்?   உங்களுக்குள் இருக்கும் இறைவன், எப்படி தோற்க முடியும்? அவமானப் பட முடியும்? இன்னொருவரை அவமதிக்க முடியும்?

மேஜை , நாற்காலி என்று இருக்கும் ஒவ்வொரு பொருளும் ஒருவர் படைத்தது தான் என்னும்போது, இந்த பிரபஞ்சத்தையும் ஒருவர் உருவாக்கி இருக்க வேண்டும் அல்லவா? அதைப் படைத்து , அதை இயக்கும் சக்தியின் ஒரு துளி , நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருப்பது சாத்தியம் தானே.... 

மரபணு, ஜீன்ஸ் என்று சொல்கிறோமே, அப்படிப் பார்த்தால் - அந்த இறைவனின் பரம்பரை தானே நாம் எல்லோரும்? 

உள் நின்று ஒளிரும் இறையை  நாம் உணர வேண்டும்..! எங்கும் உள்ள இறைவன் நம்முள் இருப்பதை உணர்ந்த பிறகு, இறைநிலையை விழிப்படையச் செய்த பிறகு, நிம்மதியும், சந்தோசமும், ஞானமும் சித்திக்கும்.

ஒருவர் மேல் விழும் மலர் மாலைகள் , அவருக்குள் இருக்கும் இறைவனுக்கே என்பதை உணர்ந்தவர்கள் , பெருமையும், செருக்கும் அடைவதில்லை.  ஞானிகள் அப்படித்தான் நினைக்கின்றனர். சில அரைவேக்காடுகள் தான் மாலை விழுந்த மமதையில் ஆட்டம் போட்டு, அடங்கிப் போகின்றனர்.

தன்னால் முடியும் நிலைமையில் முயற்சி செய்யாமல் , கடவுளை மட்டும் நம்புபவர்களை , கடவுள் கண்டுகொள்வதே இல்லையாம். தன் முழு சக்தியையும் உபயோகப்படுத்தி, ஒருவேளை முயற்சி கைகூடாதபொழுது , இறைவனை சரணாகதி அடைபவர்களை அவர் நிச்சயம் கை தூக்கி விடுவார். இது பகவான் ராமகிருஷ்ணர்  கூறிய வேத வாக்கு.....

கடவுள் நம்பிக்கை ஒரு மனிதனுக்கு அவசியமா என்பதற்கு விவேகானந்தர் என்ன சொல்கிறார் தெரியுமா?  சுட்டெரிக்கும் வெயிலில் ஒருவர் நடந்து போக வேண்டிய நிலை. தாங்கும் வலிமை உடையவர்கள் வெறும் காலுடன் நடக்கலாம். அதையே, இறை நம்பிக்கை உடையவர்கள் காலில் செருப்பும், கையில் ஒரு குடையும் கொண்டும் நடக்கிறார்கள் என்கிறார்.

கடவுளை நம்பி, தன் முயற்சிகளை முனைப்புடன் செய்பவர்கள் - ஒரு சுகமான பயணத்துக்குத் தயாராகிறார்கள். கரடு முரடான, முட்கள் நிறைந்த வாழ்க்கைப் பயணத்திற்கு - இறை நம்பிக்கை அவசியமான ஒன்று......

தன் மேல் நம்பிக்கை இருக்கும் ஒவ்வொருவரும் ஆன்மீகவாதி தான் என்கிறார் சுவாமி விவேகானந்தர். உங்கள் உள்ளிருக்கும் இறைவனை நம்புங்கள் என்பதற்காகத் தான் கூறி இருப்பார் என்று நான் நினைக்கிறேன்.
ஞானிகள் எந்த விஷயத்தையும் உடைத்து, வெளிப்படையாகப் பேசுவதில்லை. நம்மை சிந்திக்க வைத்து, நம்மை செயல்பட வைக்கின்றன அவர்களது போதனைகள்.


எத்தனையோ புத்தகங்கள் படித்தாலும், எவ்வளவோ ஞானிகளின் போதனைகளைக் கேட்டாலும் , அவரவர் மனது சொல்லும் காரியங்களைத் தான் ஒருவர் செய்ய முடியும். மனத்தை அறிந்து, அதைக் கட்டுப்படுத்தி, அதை எழுச்சி பெற செய்வது தான் - வெற்றி மந்திரம்.

சமீபத்தில் படித்த ஒரு விஷயத்தை கீழே கொடுத்துள்ளேன். இதில் எவ்வளவு அர்த்தம் பொதிந்துள்ளது என்பதைப் பாருங்கள்...

ஞானி ஒருவரிடம் ஒரு சீடன் புகார் செய்தான். “நீங்கள் கதைகள் சொல்லுகிறீர்கள். ஆனால் அவற்றின் பொருளை சொல்வதில்லை!”
அதற்க்கு அவர் கூறியது : "உனக்கு ஒருவர் பழம் கொடுக்கிறார். உனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். அதுவே அவர் அந்த பழத்தை கடித்து மென்று உன்னிடம் கொடுத்தால் எப்படி இருக்கும்?”

சீடர்கள் கடவுளைப்பற்றி நிறைய கேள்விகள் கேட்டனர்.
குரு சொன்னார். கடவுளை யாரும் முழுமையாக அறிய முடியாது. அவரைப் பற்றி யார் எதை சொன்னாலும் அது நிறைவற்றே இருக்கும்.

சீடர்களுக்கு அதிர்ச்சி!
"பின்னே ஏன் அவரைப் பற்றி பேசுகிறீர்கள்?”
குரு கேட்டார் “குயில் ஏன் பாடுகிறது?”

அறிஞர்கள் சொல்வதை புரிந்து கொள்ளவேண்டும். ஞானிகள் சொல்வதை சும்மா கேட்க வேண்டும்: மரங்களிடை சுழன்று வரும் காற்று போல; ஓடையின் சலசலப்பு போல; அருவியின் ஆர்ப்பரிப்பு போல, பறவையின் பாடல் போல. அது உனக்குள் புகுந்து சொல்ல முடியாத ஏதோ ஒன்றை விழிக்கச் செய்யும்.

இதைத் தான், நாங்களும் இந்த இணைய தளம் மூலம் செய்ய முயற்சி செய்கிறோம்...... ஏதோ ஒரு வகையில், நம் ஒவ்வொரு கட்டுரையும், வாசிப்பவர்கள் மனதில் தாக்கம் ஏற்படுத்த வேண்டும். வீணையின் நாதம் போல மனதுக்குள் புகுந்து , சொல்ல முடியாத ஒன்றை தட்டிஎழுப்ப வேண்டும்..... உங்கள் அன்பும் , ஆதரவும் இருக்கும் வரை, அது சாத்தியப்படும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது....

நமக்கு என்ன அருகதை என்பதை நம் வினைகள் தீர்மானிக்கின்றன. வெளியில் இறைவனைத் தேட வில்லையெனில், தன் நம்பிக்கை என்னும் உள்ளுக்குள் இருக்கும் அந்த சக்தியை முழுவதும் நம்புங்கள்....

வெற்றி சர்வ நிச்சயம்...!



Read more: http://www.livingextra.com/2012_04_01_archive.html#ixzz2EjLicdjm

எனக்கு பிடித்த வரிகள்..


விவேகானந்தரின் பொன்மொழி. *பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது.


"முயற்சி திருவினையாக்கும்.

முயற்சியுடையோர் இகழ்சியடையார்"


'முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை'. மாவீரன் அலெக்சாண்டர் போர்முனையில் தோல்விகண்டப்போது மீண்டும் அவனை உற்ச்சாகப்படுத்தியது அவர் கண்முன்னே கண்ட காட்சி. சிலந்தி ஒன்று பல போராட்டங்களுக்கும் தோல்விகளுக்கும் மத்தியில் வெற்றிக்கரகான சிலந்திவலையை பின்னி முடித்தது. இந்த காட்சி அலெக்சாண்டரை சிந்திக்க வைத்தது. பின்னர் இதுவே வெற்றியினை மகுடமாக தந்தது.

சுவாமி விவேகானந்தர்

சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda, ஜனவரி 12, 1863 - ஜூலை 4 1902) பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராவார். இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா (Narendranath Dutta). இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துக்கள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக அமைந்துள்ளன. இவர் இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார். 1893 ஆம் ஆண்டு அவர் சிகாகோவில் உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய சொற்பொழிவுகள் உலகப்புகழ் பெற்றது.




பிறப்பு ஜனவரி 12 1863


கல்கத்தா, மேற்கு வங்கம், இந்தியா

இறப்பு ஜூலை 4 1902 (அகவை 39)

பேலூர், கல்கத்தா, இந்தியா



வாழ்க்கை


[தொகு] பிறப்பும் இளமையும்

விவேகானந்தர் 1863 ஜனவரி 12ஆம் நாள் கல்கத்தாவில் விசுவநாத் தத்தாவுக்கும் புவனேஸ்வரி தேவிக்கும் முதல் மகனாகப் பிறந்தார். தாய் மொழி வங்காளம். சிறு வயதிலேயே மிகுந்த நினைவாற்றல் கொண்டவராகவும் சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார். இசையும், இசை வாத்தியங்களும் பயின்றார். இள வயது முதலே தியானம் பழகினார். பகுத்தறிவாளராகவும் திகழ்ந்தார்.



பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் 1879 ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள மாநிலக் கல்லூரியில் (Presidency College) சேர்ந்தார். பின்னர் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் (Scottish Church College) தத்துவம் பயின்றார். அங்கே மேல்நாட்டு தத்துவங்கள், மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரலாறு முதலியவற்றை படித்தறிந்தார். இச்சமயத்தில் அவர் மனதில் இறை உண்மைகளைப் பற்றி பல கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்தன. இறைவனைப் பலர் வழிபடுவதும், உலகின் வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்துள்ளதும் அவருக்கு முரண்பாடாக தோன்றியது. இது பற்றி பல பெரியோர்களிடம் விவாதித்தார்; மேலும், அக்காலகட்டத்தில் பிரபலமாயிருந்த பிரம்ம சமாஜத்தில் உறுப்பினரானார். ஆனால் இம்முயற்சிகள் யாவும் அவர் கேள்விகளுக்கு தகுந்த விடையளிக்க முடியவில்லை.



[தொகு] இராமகிருஷ்ணருடன்

இறை உண்மைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்காக, இராமகிருஷ்ணரைப் பற்றி கேள்விப்பட்டு அவரிடம் சென்றார் விவேகானந்தர். ராமகிருஷ்ணரை முதன் முதலாக விவேகானந்தர் சந்தித்த ஆண்டு 1881. எதையும் பகுத்தறிந்து ஏற்றுக் கொள்ளும் விவேகானந்தரால் முதலில் இராமகிருஷ்ணரின் இறைவனைப் பற்றிய கருத்துக்களை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இறைவழிபாட்டையும் உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. இராமகிருஷ்ணரின் போதனைகள், உருவ வழிபாடு, அல்லது அருவ வழிபாடு என்று ஒரே தனி வழியினை போதிக்காமல், இரண்டு வழிகளிலும் இருக்கும் உண்மையை உணர்த்துவதாக இருந்தன. இராமகிருஷ்ணரின் ஈடுபாட்டால், விவேகானந்தரால், பக்தி மார்க்கம், மற்றும் ஞான மார்க்கம், இரண்டின் அவசியத்தினையும் புரிந்து கொள்ள முடிந்தது.



[தொகு] துறவறம்

1886 ஆம் ஆண்டு இராமகிருஷ்ணர் இறந்த பின் விவேகானந்தரும் இராமகிருஷ்ணரின் மற்ற முதன்மை சீடர்களும் துறவிகளாயினர். பின்னர் நான்கு ஆண்டுகள் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் சுற்றினார் விவேகானந்தர். தன்னுடைய இந்த பயணங்கள் மூலம் இந்தியாவிலுள்ள அனைத்து பகுதிகளின் கலாச்சாரம், பண்பாடு, வாழ்க்கை நிலை போன்றவற்றை அனுபவித்து அறிந்தார் விவேகானந்தர். அச்சமயத்தில் இந்திய மக்களின் வாழ்க்கை நிலை மிகவும் கீழானதாக இருந்தது. மேலும், அது இந்தியர் ஆங்கிலேயரிடம் அடிமைப்படிருந்த காலமாகும். தன் பயண முடிவில் 24 டிசம்பர் 1892 இல் கன்னியாகுமரி சென்ற விவேகானந்தர் அங்கே கடல் நடுவில் அமைந்த ஒரு பாறை மீது மூன்று நாட்கள் தியானம் செய்தார். அந்த மூன்று நாட்கள் இந்தியாவின் கடந்த காலம், நிகழ்காலம், மற்றும் எதிர்காலம் குறித்து தியானம் செய்ததாக பின்னர் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்றும் அந்தப் பாறை விவேகானந்தர் நினைவிடமாக பராமரிக்கப் பட்டு வருகிறது.




மேலைநாடுகளில்


கன்னியாகுமரியில் இருந்து சென்னை வந்த விவேகானந்தரிடம், அமெரிக்காவின் 1893ஆம் ஆண்டு உலக சமய மாநாட்டில் இந்து மதம் சார்பாக கலந்து கொள்ளுமாறு சென்னை நகர இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அதை ஏற்றுக்கொண்ட விவேகானந்தர் அமெரிக்கா பயணமானார். சிகாகோவின் உலகச் சமய மாநாட்டில் அவர் ஆற்றிய சொற்பொழிவுகளுக்கு அந்நாட்டில் பெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும் சில ஆண்டுகள் மேலைநாடுகளில் தங்கி பல சொற்பொழிவுகள் ஆற்றி வேதாந்த கருத்துக்களை அவர்களிடம் அறிமுகப் படுத்தினார். நியூயார்க், மற்றும் லண்டன் நகரங்களில் வேதாந்த மையங்களை நிறுவினார்.




[தொகு] இந்தியா திரும்புதல்

1897 ஆம் ஆண்டு இந்தியா திரும்பியவுடன் கொழும்பு முதல் கல்கத்தா வரை அவர் ஆற்றிய பேச்சுக்கள், அப்போது கீழ்நிலையில் இருந்த இந்தியரை விழிப்புறச் செய்வதாகவும், இளைஞர்கள் தம்முள் இருந்த ஆற்றல்களை உணரும்படிச் செய்வதாகவும் அமைந்ததாக கருதப்படுகிறது. பின்னர் கல்கத்தாவில் இராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடத்தை நிறுவினார் விவேகானந்தர். ஜனவரி 1899 முதல் டிசம்பர் 1900 வரை இரண்டாம் முறையாக மேல்நாட்டு பயணம் மேற்கொண்டார்.



[தொகு] மறைவு

1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் நாள், தனது 39ஆம் வயதில் பேலூரில் விவேகானந்தர் காலமானார். இன்று அவர் நிறுவிய இராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடம் உலகம் முழுவதும் கிளைகள் பரவி செயல்பட்டு வருகிறது.



[தொகு] விவேகானந்தரின் கருத்துக்கள்

மனிதர் இயல்பில் தெய்வீகமானவர்கள் என்பதையும், இந்த தெய்வீகத்தை வெளிப்படுத்தவதே மனித வாழ்வின் சாரம் என்பதையும் அவர் தன் அனைத்து சொற்பொழிவுகளிலும், எழுத்துக்களிலும் வலியுறுத்துவதைக் காணலாம். காடுகளிலும், மலைகளிலும் வசிக்கும் ரிஷிகளிடமும், சமூகத்தில் ஒரு பிரிவினரிடமும் மட்டுமே குழுமியிருந்த ஆன்மீகம், சமூகத்தில் இருந்த அனைவரிடமும் பரவ வேண்டும் என அவர் விரும்பினார். வேதாந்த கருத்துக்களை பின்பற்றி செயலாற்றும் ஒருவர், சமூகத்தில் எந்தப் பணியைச் செய்தாலும் அதை சிறப்பாக செய்யமுடியும் என்பது அவர் கருத்து. மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற கொள்கையின் அடிப்படையிலேயே அவர் ராமகிருஷ்ண மடத்தை நிறுவினார்.



[தொகு] விவேகானந்தரின் பொன்மொழிகள்

கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல்[1].

உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால், நீ உலகுக்கு உதவி செய்ய விருப்பினால் உலகை தூற்றாதே, குறை சொல்லாதே. குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே. உலகின் குறைகள், குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை அல்லவா[1].

செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்[1].

வாழ்வும் சாவும், நன்மையும் தீமையும், அறிவும் அறியாமையும் ஆகியவற்றின் கலவைதான் மாயா, அல்லது பிரபஞ்சத்தின் இயல்பு. இவ் மாய்த்துள் நீ எல்லையற்று மகிழ்ச்சிக்காக அலையலாம், ஆனால் நீ தீமையையும் காண்பாய். தீமையின்றி நன்மை இருக்குமென்பது சிறுபிள்ளைத்தனம்[1].

உலகில் உள்ள தீமைகளைப் பற்றியே நாம் வருந்துகிறோம். நம் உள்ளத்தில் எழும் நச்சுஎண்ணங்களைப் பற்றி சிறிதும் கவலை கொள்வதில்லை. உள்ளத்தை ஒழுங்குபடுத்தினால் இந்த உலகமே ஒழுங்காகிவிடும்.

[தொகு] நூல்கள்

விவேகானந்தர் ஆற்றிய சொற்பொழிவுகள், அவர் எழுத்துக்கள், கடிதங்கள், பேச்சுக்கள், பேட்டிகள் முதலியன The complete works of Swami Vivekananda என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன. இத்தொகுப்பு தமிழ் மொழியிலும் விவேகானந்தரின் ஞான தீபம் என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது.

வெற்றி பெற வேண்டும் என்று லட்சியம் கொண்ட பலரும் தனக்கு வழிகாட்ட யாரும் இல்ல

வெற்றி பெற வேண்டும் என்று லட்சியம் கொண்ட பலரும் தனக்கு வழிகாட்ட யாரும் இல்ல¨ என்று வேதனைப் படுவார்கள்.

அப்படி தனக்கு வழிகாட்ட யாரும் இல்லை என்று அவர்கள் நினைப்பதுதான் முதல் தவறு. காந்தியடிகளும், திருவள்ளுவரும், விவேகானந்தரும், புத்தரும் என பலரும் தங்களது ஆலோசனைகளை நமக்கு அள்ளித் தந்துள்ளனர்.

அவரவர்க்கு ஏற்ற வழிகளையும், தலைவர்களையும் நாம்தான் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.




வெற்றி வேண்டுமா உங்களுக்கு? அப்படியானால் இப்படி செய்யுங்கள் என்று விவேகானந்தர் இங்கு நமக்கு கூறியுள்ள ஆலோசனைகளைப் பார்ப்போமா...

அளவுக்கு அதிகமாக உண்ணாதீர்கள். அதற்காக பட்டினியும் கிடக்க வேண்டாம்.

அதிக நேரம் தூங்காதீர்கள். அதற்காக மிகக் குறைவாகவும் தூங்க வேண்டாம்.

பொறாமை குணம் இருந்தால் விரட்டி விடுங்கள்.

சந்தேகமும், சஞ்சலபமும்தான் உங்கள் முதல் எதிரிகள். அவற்றை துரத்தியடியுங்கள்.

சோம்பல் உங்களிடம் இருந்தால் முதலில் அதை ஒழித்துக் கட்டுங்கள்.

எந்த சூழ்நிலையிலும் பேராசை கொள்ளாதீர்கள்.

உடல் தூய்மை முக்கியமானது. அதனால் தினமும் குளியுங்கள்.

எப்போதும் நல்லதை மட்டுமே மனதால் நினையுங்கள். அப்போது நல்லவை மாத்திரமே நடக்கும். நினைக்கும் பொருளாகவே ஆகும் தன்மை நம்மிடமே இருக்கிறது.

எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள். தைரியமாகவும் இருக்க பழகிடுங்கள்.

பொறுமையும், விடா முயற்சியும் நமது நல்ல நண்பர்கள். எப்போதும் இவற்றுடனேயே இணைந்திருக்கப் பழகுங்கள்.

இதையெல்லாம் நீங்கள் செய்தால் உங்கள் வெற்றி உறுதி என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

விவேகானந்தரின் பொன்மொழிகள்!

"நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!"

"உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!"

"நான் எதையும் சாதிக்க வல்லவன்" என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றது ஆகிவிடும்."

"பலமே வாழ்வு; பலவீனமே மரணம்!"

"கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்."

"உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி."

"அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு."

"மிருக பலத்தால் அல்லாமல் ஆன்மிக பலத்தால் மட்டுமே எழுச்சி பெறமுடியும்."

"சுயநலமின்மை, சுயநலம் என்பவற்றைத் தவிர, கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை."

"நீ செய்த தவறுகளை வாழ்த்து. அவைகள், நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருந்திருக்கின்றன."

"அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்."

"உங்களால் யாருக்கும் உதவி செய்ய முடியாது. மாறாகச் சேவைதான் செய்ய முடியும்."

"உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன."

--- விவேகானந்தரின் பொன்மொழிகள் - ந. லோகநாதன், logudotcom ,

லட்சியம் இல்லாமல் வாழாதே-விவேகானந்தர்




இளைஞர்களே! பெருஞ்செயல்களை செய்து முடிப்பதில் எப்போதும் முன்னேறிச் செல்லுங்கள். ஏழைகளிடமும், சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டவர்களிடமும் இரக்கம் காட்டுங்கள். நமக்கு மரணமே வாய்த்தாலும்கூட அவர்களுக்கு இரக்கம் காட்டுவது நமது லட்சியம் ஆகும்.


என்னுடைய லட்சியத்தை உண்மையில் சில சொற்களில் சொல்லி முடித்துவிடலாம். அதாவது, மக்களுக்கு அவர்களுடைய தெய்வீகத் தன்மையை எடுத்துச் சொல்வதும், வாழ்க்கையின் ஒவ்வொரு இயக்கத்திலும் அதை எப்படி வெளிப்படுத்திக் காட்டுவது என்பதை எடுத்துச் சொல்வதும்தான் அது.


எழுந்திருங்கள். விழித்திருங்கள். நீங்களும் விழித்திருங்கள், மற்றவர்களையும் விழிக்கச் செய்யுங்கள். உங்களுடைய இந்த உலக வாழ்க்கை முடிவடைவதற்கு முன்னால், மனிதப்பிறவியினால் பெறுவதற்கரிய பெரிய நன்மையை அடையுங்கள். லட்சியத்தை அடையும் வரையில் நில்லாமல் முன்னேறிச் செல்லுங்கள்.


உயர்ந்த லட்சியம் கொண்ட மனிதன் ஒருவன் ஆயிரம் தவறுகள் செய்தால், லட்சியம் ஒன்றுமில்லாமல் வாழ்பவன் ஐம்பதாயிரம் தவறுகள் செய்வான் என்று நான் உறுதியாக சொல்வேன்.


மக்கள் உன்னை புகழ்ந்தாலும் சரி, இகழ்ந்தாலும் சரி, கடவுள் உனக்கு அருள் புரியட்டும், அல்லது புரியாமல் போகட்டும். உன் உடல் இன்றைக்கே வீழ்ந்து போகட்டும். ஆனால் நீ, உண்மை என்னும் பாதையிலிருந்து மட்டும் அணுவளவேனும் பிறழ்ந்து செல்லாமல் இருப்பதில் கவனமாக இரு.


மனிதன் எந்த அளவுக்கு உயர்ந்தவன் ஆகிறானோ, அந்த அளவுக்கு அவன் கடுமையான சோதனைகளை கடந்தாக வேண்டும்.

வயிற்றுக்கு பிறகு தான் எல்லாம்...விவேகானந்தர்

மனிதனுக்கு மன அமைதியைத் தருவதுதான் மதத்தின் அடிப்படை லட்சியம். மறு உலகத்தில் இன்பம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த உலக வாழ்க்கையில் துன்பத்தை அனுபவிப்பது அறிவுடைய செயலாகாது. ஒருவன் இங்கேயே, இப்போதே, இன்பத்தைப் பெற வேண்டும். இப்படிப்பட்ட இன்பத்தைத் தரக்கூடிய மதம் எதுவாக இருந்தாலும் அந்த மதம்தான் சமுதாயத்திற்கு ஏற்ற உண்மையான மதமாகும்.


எப்போதெல்லாம் ஒரு மதம் வெற்றி பெறுகிறதோ அப்போதெல்லாம் அந்த மதத்திற்குப் பொருளாதார வலிமை இருக்க வேண்டும். அதைப்போல ஆயிரக்கணக்கான மதப்பிரிவுகள் அதிகாரத்திற்கு வரப் போராடியபடி இருக்கலாம். ஆனால், உண்மையில் பொருளாதாரப் பிரச்னையைத் தீர்க்கக்கூடிய மதம் மட்டுமே அதிகாரத்தைக் கைப்பற்றும். வயிறுதான் மனிதனுக்கு வழிகாட்டியாக இருக்கிறது. அவன் நடந்துசெல்லும்போது வயிறுதான் முதலில் போகிறது. பிறகு அதைத் தொடர்ந்து அவனுடைய தலை போகிறது. இதை நீங்கள் பார்த்ததில்லையா? மனிதனின் தலை முதலில் போகப் பல யுகங்கள் ஆகும்.


உங்களுடைய குழந்தைக் கனவுகள் கலைய ஆரம்பித்து, பொருள்களை உள்ளது உள்ளபடியே நீங்கள் பார்க்க ஆரம்பிக்கும்போது, உங்களுடைய தலை போய் விடுகிறது (இறந்து போகிறாய்).


ரசாயனமும், இயற்கை விஞ்ஞானமும் எப்படி இந்த பவுதிக உலகம் பற்றிய உண்மைகளைக் கையாள்கின்றனவோ, அதைப்போலவே மதம் அரிய தத்துவ உண்மைகளைக் கையாள்கிறது. ஒருவன் ரசாயனத்தைக் கற்க இயற்கை என்னும் புத்தகத்தை படிக்க வேண்டும். உன்னுடைய மனம், இதயம் ஆகியவைதாம் மதத்தைக் கற்பதற்கு நீ படிக்க வேண்டிய நூல்களாகும்.


விவேகானந்தர்

மனிதனின் கஷ்டம் இறைவனுக்கு விளையாட்டு-விவேகானந்தர்

மனிதனின் கஷ்டம் இறைவனுக்கு விளையாட்டு




துன்பங்களிலும் போராட்டங்களிலும் உழலும் போது இந்த உலகம் பயங்கரமானதாக நமக்குத் தோன்றுகிறது. இரண்டு நாய்க்குட்டிகள் கடித்து விளையாடிக் களிப்பதை நாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அது ஒரு விளையாட்டு, சற்று காயப்படும்படி அவை கடித்துக் கொண்டாலும் அதனால் தீங்கு எதுவும் விளையாது என்பது நமக்குத் தெரியும். அதுபோலவே நமது போராட்டங்கள் எல்லாம் இறைவனின் கண்களுக்கு விளையாட்டே. இந்த உலகம் விளையாட்டுக்கென்றே அமைந்தது. அது இறைவனைக் களிப்படைய செய்கிறது. எதற்காகவும் அவன் கோபம் கொள்வதில்லை.


அம்மா! வாழ்வெனும் கடலில் என் படகு மூழ்கிக் கொண்டிருக்கிறது. மனமயக்கம் என்னும் சூறைக்காற்றும், பற்று என்னும் புயலும் கணந்தோறும் அதிகரிக்கின்றன. படகோட்டிகள் ஐவரும் (ஐந்து புலன்களும்) வெறும் முட்டாள்கள், சுக்கான் பிடிப்பவனோ (மனம்) மெலிந்தவன். நிலைகுலைத்து என் படகு மூழ்குகிறது. அன்னையே, என்னைக் காப்பாற்று!


அன்னையே! மகான் என்றோ, பாவி என்றோ உன் அருள் பிரித்துப் பார்ப்பதில்லை. பக்தனிலும் அதேபோல் கொலைகாரனிலும் அது பிரகாசிக்கிறது. எல்லாவற்றின் மூலமும் அன்னையே வெளிப்படுகிறாள்.


ஒளிபாயும் பொருட்களில் மாசு இருக்கலாம். அதனால் ஒளி கெடுவதில்லை. பயன் பெறுவதும் இல்லை. மாற்றம் அடையாமல் மாசுபடியாமல் திகழ்கிறது அந்த ஒளி. ஒருபோதும் மாறாத, தூய, அன்புமயமான 'அன்னை' ஒவ்வோர் உயிரின் பின்னாலும் நிற்கிறாள்.


உன்னை எதுவும் துன்புறுத்த முடியாது என்பதை உணர்ந்து கொள். ஏனெனில் நீ சுதந்திரன். நீயே ஆன்மா.



Source from:http://www.dinamalar.com/new/aanmeegam_detail.asp?News_id=119&ncat=Vivekanandar

குருவுக்கும் நாம் அடிமையல்ல- விவேகானந்தர்

குருவுக்கும் நாம் அடிமையல்ல


யார் மீது ஆன்மிக உணர்வு பெறுகிறோமோ அவரே நமக்கு உண்மையான குரு. ஆன்மிகப் பெருவெள்ளம் நம்மிடம் பாய்வதற்கான கால்வாய் அவர். தனிமனிதரை நம்புவது பலவீனத்திலும் உருவவழிபாட்டிலும் தான் கொண்டுபோய்விடும். ஆனால், ஆழ்ந்த குரு பக்தி நம்மைவிரைவில் முன்னேறச் செய்யும். உண்மையான குரு இருந்தால் அவரை மட்டுமே வணங்கு. அது மட்டுமே நம்மை கரை சேர்க்கும்.பகவான் ராமகிருஷ்ணர் குழந்தையைப் போல தூய்மையானவர்.




அவர் ஒரு போதும் பணத்தை தன் மனதாலும் தொட்டதில்லை. காமசிந்தனை அவரிடத்திலிருந்து முற்றிலும் நீங்கிவிட்டது. பெரிய மகான்கள் தங்கள் சிந்தனையை முழுமையாக ஆன்மிகத்திலே செலுத்தி விடுவர். உண்மையான ஞானியிடத்தில் பாவத்தை பார்க்க இயலாது. ராமகிருஷ்ணரின் கண்கள் தீயவற்றைக் காண இயலாத அளவுக்கு தூய்மை பெற்றிருக்கின்றன.




இத்தகைய பரமஹம்சர்கள் உலகில் இருப்பதால் தான் உலகம் செயல்படுகிறது. அவர்கள் அனைவரும் இறந்து விடுவார்களானால், உலகமே சுக்கல் சுக்கலாக நொறுங்கி மண்ணாகி விடும். குருவிற்கு கடமைப்பட்டிருக்கிறோம் என்பதற்காக அடிமைப்பட வேண்டியதில்லை. குரு நமக்கு உதவுபவர் என்ற கருத்தை மட்டுமே கொண்டிருக்க வேண்டும். உங்களுக்குள் நீங்களே முயன்று உண்மையைத் தேடுங்கள்.-விவேகானந்தர்

உன்னை பலவீனன் என எண்ணாதே-விவேகானந்தர்

உன்னை பலவீனன் என எண்ணாதே

செல்வம் படைத்தவன் செல்வம் இல்லாதவன் மேல் செலுத்தும் ஆதிக்கத்தைத் தவிர்க்க வேண்டும். அறிவுடையவன் அறிவு குறைந்தவன் மேல் செலுத்தும் ஆதிக்கத்தை விட வேண்டும்.


முப்பத்து மூன்று கோடிப் புராண தெய்வங்களிடத்தும், மேலும் அவ்வப்போது நம்மிடையே அன்னிய நாட்டவர் புகுத்தியிருக்கும் இதர தெய்வங்களிடத்தும், நம்பிக்கை இருந்தாலும் கூட, ஒருவனிடத்தில் தன்னம்பிக்கை இல்லாவிட்டால் அவனுக்குக் கதி மோட்சமில்லை.


பாவம் என்ற ஒன்று உண்டென்றால், அது நான் பலவீனமானவன், மற்றவர்கள் பலவீனமானவர்கள் என்று சொல்வது ஒன்றுதான்.


சுதந்திரமானவனாக இரு. எவரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்காதே. உனது கடந்த கால வாழ்க்கையை நீ பின்னோக்கித் திரும்பிப் பார்ப்பாயானால், நீ வீணாக எப்போதும் மற்றவர்களிடமிருந்து உதவியைப் பெற முயற்சி செய்ததையும் அப்படி எதுவும் வராமற் போனதையும் தான் காண்பாய். வந்த உதவிகள் எல்லாம் உனக்குள் இருந்தவையாகத்தான் இருக்கும்.


நம்பிக்கை! நம்பிக்கை! நம்மிடத்தில் நம்பிக்கை! கடவுளிடத்தில் நம்பிக்கை! இதுவே மகிமை பெறுவதன் ரகசியமாகும்.


நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே ஆகிவிடுகிறாய்.


* இவனை நம்பு அல்லது அவனை நம்பு என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால், நான் சொல்கிறேன். முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை. அதுதான் வாழ்க்கைக்கு வழி.


* அடக்கப்படாமல் சரியான வழியில் செலுத்தப்படாத மனம், நம்மை மேலும் மேலும் என்றென்றைக்கும் கீழே இழுத்துச் சென்றுவிடும். சரியான வழியில் செல்கின்ற மனம் என்றென்றைக்கும் காத்து ரட்சிக்கும்.

பயம் எதற்கும் பயன்படாது - விவேகானந்தர்

பயம் எதற்கும் பயன்படாது




* இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய மூன்றும் தான் நமது இன்றைய தேவை.
* வெற்றி தோல்வியைப் பற்றி சிறிதும் சிந்திக்காதீர்கள். தியாக உணர்வோடு முழுமையாக கடமையைச் செய்யுங்கள்.
* நம் வாழ்க்கை ஒரு நாள் முடியப் போவது உறுதி. அதற்குள் ஒரு நல்ல செயலைச் செய்துவிட வேண்டும் என்று உறுதி கொள்ளுங்கள்.
* கோழை தான் தப்பி ஓடமுயற்சி செய்வான். நிலைமையைச் சீர்படுத்தி அமைக்க கோழைத்தனம் பயன்படாது. எடுத்த செயல் முடியும் வரை சலியாது உழைத்து முன்னேறுங்கள்.
* தன்னை அடக்கி ஆளப் பழகிக் கொண்டவன் வெளியில் உள்ள எதற்கும் வசப்பட மாட்டான். அவனுக்கு அதன் பின் அடிமைத்தனம் என்பதே இல்லை.
* நீங்கள் செம்மறி ஆடுகள் என்ற வீணான மயக்கத்தை உதறித் தள்ளுங்கள். நீங்கள் அமரத்துவம் பெற்றவர்கள் .அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள். இறையருள் உங்களுக்குப் பரிபூரணமாக இருக்கிறது.
* எல்லாவிதமாக அறிவும் ஆற்றலும் மனிதனுக்குள்ளே இருக்கிறது. இந்த அறிவை விழித்து எழும்படிச் செய்வது மட்டும் தான் ஒருவனுடைய வேலையாகும்.

தீமையில்லாத செயல் இல்லை- விவேகானந்தர்

தீமையில்லாத செயல் இல்லை




* அனைவரும் அரும்பாடுபடும் நேரம் இது. எதிர்காலம் நம் முயற்சியைப் பொறுத்தே உள்ளது. எனவே, ஓயாது உழையுங்கள்.



* முயற்சியோடு ஒரு செயலில் ஈடுபடும்போது, ஏராளமான சக்தி நம் மிடத்தில் வெளிப்படுவதைக் காண லாம். பிறருக்காகச் செய்யும் சிறுநன்மைக்கான முயற்சியில் கூட சிங்கம் போன்ற பலனை நாம் பெறமுடியும்.



*எந்தச் செயலையும் நன்மை, தீமை என்று இரண்டின் கலப்பில்லாமல் செய்ய முடியாது. தீயைச் சூழ்ந்துநிற்கும் புகையைப் போல, சற்றேனும் தீமையின் நிழல் எச் செயலோடும் ஒட்டிக் கொண்டு தான் இருக்கும். மிகக் குறைவான தீமையும், மிகுந்த நன்மையும் இருக்கும் செயல்களைச் செய்ய முற்படுங்கள்.



*ஒருவரிடத்தும் பொறாமை கொள்ளாதீர்கள். கடவுளை எல்லாவுயிர்களுக்கும் தந்தையானவர் என்று ஒப்புக்கொண்டுவிட்டு, ஒவ்வொரு மனிதனையும் சகோதரனாக நினைக்கவில்லை என்றால் நம் வழிபாடு பொருளற்றதாகிவிடும்.



* பொறாமையும், சோம்பேறித்தனமும் அடிமையின் இயல்புகள். அவற்றை உதறித் தள்ளிவிட்டு சுதந்திரமுடைய மனிதர்களாக சுறுசுறுப்போடு உங்கள் கடமைகளைச் செய்யத் தொடங்குங்கள். வெற்றி பெறுவீர்கள்.



- விவேகானந்தர்

எல்லா நோய்க்கும் மருந்து - விவேகானந்தர்

எல்லா நோய்க்கும் மருந்து




* தேவர்களையும் விட மனிதனே உயர்ந்தவனாவான். மனிதனை விட உயர்ந்தவர்கள் யாருமில் லை. தேவரும் கீழே வந்து மனிதவுடல் வாயிலாகவே முக்தி பெற வேண்டி யுள்ளது. எனவே, மனிதவுயிர் மகத் தானது.



* பலமின்மையே துயரத்திற்குரிய ஒரே காரணம். நம்மிடம் பொய்யும், களவும், கொலையும் பல்வேறு பாவச்செயல் களும் இருப்பதற்குக் காரணம் பலவீனம் தான். பலவீனம் தான் நம்மைத் துன்பத்தில் ஆழ்த்துகிறது.



* பலமே வாழ்வு. பலம் தான் இன்பமான வாழ்விற்கு வழிவகுக்கிறது. அழிவில்லாத பேரின்ப பாதைக்கு அழைத்துச் செல்கிறது. குழந்தைப் பருவத்திலிருந்தே ஆக்கமும், பலமும், நன்மையும் தரும் எண்ணங்கள் நம் மூளைக்குள் புகட்டும்.



* அச்சமே நம் உண்மை இயல்பை அறியவிடாமல் அறியாமைக்குள் தள்ளிவிடுகிறது. அச்சத்தை அடியோடு விட்டொழித்து எழுந்து நில்லுங்கள். தைரியமாய் இருங்கள். பலமுடையவர்களாகுங்கள்.



* உலகில் உள்ள எல்லா நோய்களுக்கும் ஒரே மருந்து பலம் மட்டுமே. எப்போதெல்லாம் கொடுமைகளுக்கு உட்படுகிறாமோ, அப்போதெல்லாம் மனபலம் நமக்கு அதிகம் தேவைப்படும்.



- விவேகானந்தர்

வெற்றிநோக்குடன் வாழுங்கள் விவேகானந்தர்

வெற்றிநோக்குடன் வாழுங்கள்



* மனிதனுக்குள் இருக்கும் தெய்வீக இயல்பை வெளிப்படுத்துவதற்கான ஒரே வழி துன்பப்படுவோருக்கு உதவுவது ஒன்று தான்.




* மனதை ஒருமுகப்படுத்துவது தான் கல்வியின் அடிப்படை லட்சியமாகும்.




* வெற்றி பெறுவதற்கு விடா முயற்சியும், தளராத மனவுறுதியும் தேவை. நீங்கள் கடவுளின் குழந்தைகள். அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள்.




* நம்பிக்கை, நம்பிக்கை, நம்மிடத்தில் நம்பிக்கை; கடவுளிடத்தில் நம்பிக்கை கொண்டு வெற்றி நோக்குடை யவர்களாக வாழுங்கள். வெற்றிக்கான ரகசியம் இது தான்.




* தான் என்னும் ஆணவத்தையும், பேராசையையும் அடக்கும் போது பெரும் வெற்றிகளைப் பெறமுடியும். அரும்பெரும் செயல்களைத் தியாகத்தால் மட்டுமே சாதிக்க முடியும்.




* சுயநலம் ஒழுக்கக்கேட்டினை விளைவிக்கும். சுயநலமின்மையோ நல்லொழுக்கத்தைத் தரும்.




* பாமரனைப் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவனைத் தெய்வமாகவும் உயர்த்தும் கருத்தே ஆன்மிகம் ஆகும். ஆன்மிக ஈடுபாட்டினால் மட்டுமே மனிதனுக்குள் புதைந்திருக்கும் பரிபூரணத்தன்மை வெளிப்படும்.
- விவேகானந்தர்

நான் எதையும் சாதிக்க வல்லவன் - விவேகானந்தர்





நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று கூறு. நீ உறுதியுடன் இருந்தால் கொடிய விஷம் கூட சக்தியற்றதாகிவிடும்.
* நீ வலிமை உள்ளவனாக இருந்தால் நீ ஒருவனே உலகிலுள்ள அத்தனை பேருக்கும் சமமானவன் ஆவாய்.
* மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளரவளர அதிக அளவில் அறிவாற்றல் வளரும். சரியான வழியில் செலுத்தப்பட்ட மனம் நம்மைக் காத்து விடுதலை பெறச் செய்யும்.
* உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே குடி கொண்டிருக்கின்றன. உனது மனம், இதயம், ஆன்மா என்ற மூன்றினையும் அர்ப் பணித்து செய்யும் செயல்கள் நிச்சயம் வெற்றி பெறும்.
* மகத்தான செயல்களைச் செய்வதற்காகவே ஆண் டவன் உன்னைப் படைத்திருக்கிறான். அந்தச் செயல் களைச் செய்து வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கு.
* நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். வலிமை உடையவன் நீ என்று நினைத்தால் வலிமை உடையவனாகி விடுவாய்.
* ஒரு நல்ல லட்சியத்தைத் தேர்ந்தெடுத்து முறையான வழியைக் கைக்கொண்டு வெற்றி வீரனாக விளங்கு. நீ வாழ்ந்து முடிந்த பின் ஓர் அழியாத அறிகுறி எதையாவது விட்டுச் செல்.