படிப்பறிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
படிப்பறிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தலைவா, நாளைய தமிழகம் உன் கையில் தான் இருக்கு. அரசியலுக்கு வாங்க தலைவா'...

அமிதாப் பச்சன் ஹிந்தியில் ஆகச்சிறந்த சூப்பர் ஸ்டார். ஆனா, அந்த மாநிலத்து ரசிகர்கள் அமிதாபை பார்த்து, 'தலைவா, நாளைய மஹாராஷ்டிராவே உன் கையில் தான் இருக்கு. அரசியலுக்கு வாங்க தலைவா'னு கூச்சல் போடுறாங்களா...?
ஷாருக்கான், சல்மான்கான் மற்றும் ஆமிர்கான் போன்ற ஹிந்தி சூப்பர் ஸ்டார்களுக்கு எவ்வளவு மார்க்கெட் வேல்யூ இருக்கு தெரியுமா..? அவர்களுக்கு மஹாராஷ்டிரா மட்டும் இல்லாமல் இந்தியா முழுக்க எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் தெரியுமா...? ஆனா, அந்த ரசிகர்கள் அவர்களை பார்த்து 'அரசியலில் குதியுங்கள்...இந்தியாவை காப்பாற்றுங்கள்...நீங்கள் தான் எங்கள் 'ஷாருக்காந்தி' என அடைமொழி இட்டு சுவரொட்டிகள் ஒட்டி நீங்கள் பார்த்தது உண்டா...?
இல்லை, ஹிந்தி சினிமாக்காரனின் படம் வெளியே வராமல் எந்த ஹிந்தி ரசிகனாவது தூக்கு போட்டு தற்கொலை செய்திருக்கிறானா..?? எந்த ஹிந்தி ரசிகனாவது அவர்களின் நடிகர்களுக்கு கோயில் கட்டியிருக்கானா...? இப்படி எல்லா விஷயங்களையும் அவர்களோடு உங்களையும் எண்ணி பார்த்தால், நீங்கள்(தமிழக ரசிகர்கள்) எவ்வளவு மட்டமான நிலையில் (அல்லது அந்த நிலைக்கு ஆளாக்கப்பட்டு) இருக்கிறீர்கள் என்பது உங்களுக்கே புரியும்!!
ஏன், நம்ம பக்கத்து மாநிலத்து கேரளாவில் இங்க நடக்கிற ரசிகர்களின் மானங்கெட்ட புரட்சிகள் ஏதாவது தினம் தினம் நடந்துக்கிட்டு இருக்கா..? மோகன்லால், மம்முட்டி எல்லாம் ஏன் ஆடாம் அலம்பல் பண்ணாம இருக்காங்க...? ஏன்னா, அவங்களுக்கு பைத்தியக்காரத்தனமான ரசிகர்கள் கூட்டம் இல்ல. இங்கே சென்னைக்கு படிக்க வந்த, இல்ல, பூர்வீகமா இருக்கிற மலையாளிகள் கூட நடிகர்கள் மேல வெறித்தனமா இருக்க மாட்டாங்க. அதுக்கு என்ன காரணம்னு யோசிங்க!
அமிதாப், திலீப்குமார், மோகன்லால், மம்முட்டிக்கு இல்லாத நடிப்பு திறமையா உங்க மூத்த தளபதி, இளைய தளபதி, வளரும் தளபதிக்கெல்லாம் இருக்கு...? சிகரெட் மேல தூக்கிப்போட்டு துப்பாக்கியால் சுட்டு வாயில வெச்சி பிடிச்சா, அப்படியே கை தட்டல் பறக்கும்..சிகரெட்ட சட்டை காலரிலிருந்து வாயால் கடிச்சி இழுத்தா, அதுக்கு பேர் நடிப்பாம்...சிலை வைப்பாங்களாம்..பால் ஊத்துவாங்களாம்...அய்யோ அய்யோ!!
அவ்வளவு ஏன்...ஹாருக்கானுக்கு பட்டம் ஏதாவது இருக்கா...? அமிதாப் பச்சனுக்கு பட்டம் இருக்கா...? மோகன்லால் ?? மம்முட்டி ??? ஒருத்தருக்கும் இல்ல. ஆனா, இங்க ஒரு பட்டத்துக்கு புது அரசியல்வாதி, புரட்சி அரசியல்வாதியான ஒரு நடிகர் படும் பாடு இருக்கே...அப்பப்பாஆஆ!!!
இதுக்கெல்லாம் யாரு காரணம்...? இந்த மானங்கெட்ட ரசிகர்கள் தான். கொஞ்சம் வெளியே வந்து இந்த பரந்த சினிமா உலகத்தை பார்த்து சிந்திக்க ஆரம்பிச்சா போதும்...அவங்க எவ்வளவு பெரிய தவறு, சமுதாய சீர்கேட்டை செஞ்சிக்கிட்டு இருக்காங்கன்னு தெளிவா புரியும்.
இவ்வளவு விளங்கும்படி வி
லாவரியா பதிவு போட்டாலும் கொஞ்சம் கூட உறைக்காம சில மர மண்டைகள் வந்து இங்க வியாக்கியானம் பேசுவாங்க...திருந்துங்கப்ப்பாஆஆ...புன்னியமா போகும்!



- பிரகாசம் பழனி

ஓஷோ சொன்ன கதை - உடம்பு இளைக்க ஒரு வாய்ப்பு



முல்லா தான் மிகவும் குண்டாக இருப்பதை நினைத்து மிகுந்த வருத்தத்தில் இருந்தார் , அப்போது நாளிதழில் வந்த  விளம்பரம் அவரை கவர்ந்தது

மிகவும் கவர்ச்சிகரமான முறையில் உடம்பு இளைக்க ஒரு வாய்ப்பு!
1.) சாதா உடற் இளைப்புரூ 1,000/- ஒரு மணி நேரம் ( 2 – 5 கிலோ வரை)
2.). சூப்பர் ட்ரிம்மர்ரூ 2,000/- இரண்டு மணி நேரம் ( 6-10 கிலோ வரை)
3.) ஹெவி ட்ரிம்மர்ரூ 3,000/- மூன்று மணி நேரம் ( 11 – 15 கிலோ வரை )
4.) அல்டிமேட் ட்ரிம்மர்ரூ 10,000/- கால வரையரை இல்லை ( எடை வரையரை இல்லை )

முன்பதிவிற்கு முந்துங்கள்

முல்லா அந்த விளம்பரத்தைப் பார்த்ததும் அதை முயற்சி செய்து பார்த்துவிடுவது என முடிவேடுத்தார் , ஆனாலும் முதலில் சாதா முறையில் முதலில் பரிட்சிக்க விரும்பி அதற்கான பணத்தை கட்டினார். அவர் ஒரு காலியான அறையில் விடப்பட்டார் அந்த அறை 16 x 16 என்ற அளவில் இருந்தது .

அதன் மூலையில் ஒரு பெண் அமர்ந்திருந்தார் அவருடைய கையில் ஒரு அட்டை அதில்ஒரு மணி நேரத்திற்குள் என்னை துரத்திப் பிடித்தால் என்னுடன் ஜாலியாக இருக்கலாம்என்று எழுதியிருந்தது , முல்லா அந்த பெண்னை துரத்த ஆரம்பித்தார்அவருக்கு எல்லாம் நல்ல படியாகவே முடிந்ததுஅவர் துரத்திய துரத்தலில் அவருடைய எடையும் கனிசமாக குறைந்தது..

முழு திருப்தியுடன் அதற்க்கு அடுத்த முறையை பரிட்சிக்க விரும்பினார் இந்த முறையில் வித்யாசம் அறையின் அளவு 40×40, சாதா முறையைவிட நல்ல அழகான பெண் , கால அவகாசம் 2 மணி அவ்வளவுதான், மற்றபடி முறை ஒன்றுதான் ,இங்கும் அவருக்கு முழுதிருப்தி.

மிகவும் மகிழ்ச்சியுடன் அடுத்த முறையை தேர்ந்தெடுத்தார் வித்யாசம் அறையின் அளவு 75×75 , மிக அழகான பெண் , கால அவகாசம் 3 மணி நேரம் , முல்லா கணிசமாக எடை குறைந்திருந்தார் அவருக்கு , எல்லா முறைகளிலும் தான் சிறப்பாக செய்ததை எண்ணி அளவில்லா ஆனந்தம் , கடைசியாக அல்டிமேட் ட்ரிம்மர் முறையிலும் கலந்து கொள்வது என்று முடிவெடுத்தார், அதற்கான பணத்தையும் கட்டினார் ,

வரவேற்பாளர் அவரிடம் 16 வது மாடிக்கு நடந்து செல்லும் படி சொன்னார், முல்லாவும் தான் அடையப்போகும் சந்தோசத்தை எண்ணியவாறே  கஷ்டப்பட்டு 16 மாடிக்கு வந்தார் , அங்கு அவர் 42 வது மாடிக்கு 15 நிமிடத்திற்க்குள் ஓடி வந்து சேர வேண்டும் அப்படி வந்தால் தான் பயிற்சி உண்டு என தெரிவிக்கப்பட்டது .

,முல்லாவிற்க்கு வேறு வழியும் இல்லை , தான் கானப்போகும் மிக மிக அற்புதமான அனுபவத்தை நினைத்தபடி  உயிரைக் கொடுத்து ஓடி 42 வது மாடியை 13 நிமிடத்தில் அடைந்தார். அது மிகப்பரந்த ஒரு மொட்டை மாடி அதன் அளவு சுமார் 500×500 அடி பரப்பளவு இருக்கும் , அதன் மூலையில் ஒரு பெரிய அறை அவ்வளவுதான். அவர் மொட்டை மாடியை அடைந்ததும் அவருக்குப்பின் கதவு மூடப்பட்டது,

 முல்லா மூச்சு வாங்கியவாரே அந்த அறையை நோக்கி நடந்தார் அங்கே ஒரு பெரிய மனிதக்குரங்குநான் உன்னை துரத்திப் பிடித்தால் , என் ஆசை தீர உன்னை அனுபவிப்பேன்என்ற வாசகம் எழுதிய அட்டையுடன் அமைதியாக அமர்ந்திருந்தது


-ஓஷோ
Posted by ஆனந்த் நிருப்

வெற்றியை நெருங்கி விட்டோம் ....YOU CAN WIN

 YOU CAN WIN  

வெற்றி பெறுபவர்கள் - வித்தியாசமான வேலைகளை செய்வதில்லை. செய்யும் வேலைகளை வித்தியாசமாக செய்கிறார்கள். செய்யும் வேலைகளை உண்மையிலேயே நல்ல முறையில் செய்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. வேலை சந்தோசம் அளிப்பதாக இருக்க வேண்டும். மனது மலர்ச்சியுடன் எப்போதும் இருக்க வேண்டும்.

எவ்வளவு பெரிய நீச்சல் வீரனாக இருந்தாலும், நீச்சல் அடிக்கும் குளத்தில் முழங்காலுக்கும் கீழ் தண்ணீர் இருந்தால் எப்படி நீந்துவது? அந்த தண்ணீர் போலத்தான் மனதும். நாம என்னதான் திறமையுடன் இருந்தாலும், மனதுக்கு உவகை அளிக்கக் கூடிய வகையில் ஒருவர் வேலை பார்க்கும் சூழல் இல்லையெனில், அவருக்குத் திறமை இருந்தும் என்ன பயன் இருக்க கூடும்?

ஒரு சிலர் நிலைமை படு மோசம்..... சாவி கொடுத்த பொம்மை கதை தான்.

ஒரு டாக்டர், நர்சிடம் அரை மணிக்கொரு முறை நோயாளி ஒருவருக்கு  டெம்பரேச்சர் எடுக்கச் சொல்லியிருந்தார். காலையில் இந்த வேலையைக் கொடுத்து விட்டு சாயந்திரம் வந்தார். நோயாளிகளையும் தலைமாட்டில் இருந்த சார்ட்டுகளையும் பார்த்தார். குறிப்பிட்ட அந்த நர்சிடம் வந்தார்.
“அந்த ஆளுக்கு அரை மணிக்கொருதரம் டெம்பரேச்சர் எடுத்துகிட்டு இருக்கியா?”
“ஆமாம் சார். இப்பக் கூட பதினஞ்சு நிமிஷம் முன்னே எடுத்தேன்”
“போதும் நிறுத்திடலாம். அந்த ஆள் செத்து மூணு மணி நேரம் ஆச்சு”
 படிச்சதும் படக்குன்னு சிரிப்பு வருதா? கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தா நாமளே கூட, ஒரு கால கட்டத்துக்கு அப்புறம் இப்படித்தான் வேலை பார்க்கிறோம். வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் என்று நாம் கூறுபவர்கள் நாம் செய்யும் ஒரு சில வேலையை பார்க்கும்போது, இந்த நர்சைப் போலத் தான் நம்மை பார்க்கின்றனர்.
ஏன், எதுக்குன்னே தெரியாம , நாள் ஆக ஆக, அப்படியே மனசு ஒரு வேலைக்கு பழக்கமாகி , அங்கேயே செட் ஆகிடும். பழகும்போது ரொம்ப ஆர்வமா இருக்கும் ஒரு விஷயம், பழகப் பழக - அதில் எக்ஸ்பெர்ட் ஆகி, அதன் பிறகு இறங்கு முகம் ஆரம்பிக்கும். என்ன தான் நாம் ஆர்வமாக, பொறுப்பாக ஒரு வேலையைப் பார்த்தாலும், இதுதான் அந்த வேலையின் உச்சம் என்று யாரோ ஒருவர் கூறி விட்டாலோ, அல்லது நமது மனது ஒப்புக்கொண்டு விட்டாலோ, அதைத் தாண்டி யோசிக்க மாட்டோம்....
அதே வேலையை திரும்ப திரும்ப பார்க்கும் சூழ்நிலை , உள்ளுக்குள்ளே ஒரு சலிப்பு ஏற்படுத்திவிடும். ஒரே மாதிரி வேலை, ஒரே கம்பெனியில் பல வருடங்களாக வேலை பார்ப்பது எல்லாம் - ஒருகட்டத்தில் ஆளே இல்லையானாலும், டீ ஆத்தும் லெவலுக்குக் கொண்டுபோய் விட்டு விடும். 
வாழ்க்கையில் சாதனையாளர்களுக்கும், சாமானியர்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன என்று - லட்சக்கணக்கில் புத்தகங்கள் வந்து குவிந்து விட்டன. ஏன், நமக்கே எத்தனையோ பேர் சொல்லி இருப்பாங்க. மெயில் வந்து இருக்கும். சினிமால பார்த்து இருப்போம். அதை எல்லாம் படிச்ச கொஞ்ச நேரத்துக்கு ஜிவ்வுன்னு இருக்கும். அதுக்கு அப்புறம் அப்படியே மறந்து போகும்... ஓடு , ஓடுன்னு ஓடிஓடியே - வழக்கமான வேலைகளைப் பார்த்து பார்த்து - அப்படியே ஒரு லெவல்ல நின்று விடுகிறோம்.

"ஷிவ்கேரா" ன்னு ஒருத்தர் -  " YOU CAN WIN  " அப்படின்னு ஒரு புத்தகம் எழுதி  இருக்கிறார். உலகப் புகழ் பெற்ற புத்தகம்.  அவரது தன்னம்பிக்கை வகுப்புகள், உரைகள் -  ஏராளமாக " You  Tube "  - பில் கிடைக்கும். ஒரு முறை பாருங்கள்... நிச்சயம் உங்களுக்கு Pop  Eye இன் Spinach  குடித்த தெம்பு கிடைக்கும்.இணையத்தில் இந்த புத்தகம் free  யாக கிடைக்கிறது. கூகுளில் தேடினால், நீங்களே டவுன்லோட் செய்து படிக்க முடியும்.

எதற்க்காக சொல்கிறேன் என்றால், உடல் ஒரு எந்திரம் போன்றது. அதற்கே ஓய்வு தேவைப்படும்போது - மனது ஒரு புதிரான ஒரு வஸ்து. அதற்க்கு புத்துணர்ச்சி தருவது மிக முக்கியம். மனத்தை சோர்வடையாமல் வைத்து இருப்பவர்கள் மட்டுமே, வாழ்வில் சிறப்பான நிலைமை அடைய இயலும்.

I am the champion. I can Win - இதை மட்டுமே திரும்ப திரும்ப நினையுங்கள். இந்த இரு வாக்கியங்கள், மனதுக்கு புது பலம் கொடுக்கும். சோர்வடையும் நிலைமையில் , இந்த வாக்கியங்கள் கொடுக்கும் சக்தி அளவிட முடியாதது.

சரி - வாழ்க்கையில் ஜெயித்தவர்களுக்கும், கடவுள் நம்பிக்கைக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? சம்பந்தம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் ஒவ்வொரு சாதனையாளனுக்கும் - அவன் மனதுக்கும் சம்பந்தம் இருக்கிறது.

எத்தனையோ  முறை  தோல்வி அடைந்தாலும் , இதோ வெற்றியை நெருங்கி விட்டோம் என்கிற மன வலிமை - நிச்சயம் ஒவ்வொரு வெற்றிக்கும் பின்னே இருக்கிறது. மனதுக்கும் , இறைவனுக்கும் சம்பந்தம் இருக்க முடியுமோ ஒருவேளை?

மகான் ஒருவர் கேட்கிறார்  : உங்கள் வீட்டுப் பூஜை அறையிலும், கோவில்களில் இருக்கும் சிலைகளிலும் பகவான் இருக்க முடியும் என்று நம்பி வணங்குகிறீர்களே அப்படி, எங்கும் வியாபித்து இருக்கும் அந்த பரப் பிரம்மம் - உங்கள் உள்ளும் உறைந்து இருக்கும் என்பதை நீங்கள் ஏன் நம்ப மறுக்கிறீர்கள்?   உங்களுக்குள் இருக்கும் இறைவன், எப்படி தோற்க முடியும்? அவமானப் பட முடியும்? இன்னொருவரை அவமதிக்க முடியும்?

மேஜை , நாற்காலி என்று இருக்கும் ஒவ்வொரு பொருளும் ஒருவர் படைத்தது தான் என்னும்போது, இந்த பிரபஞ்சத்தையும் ஒருவர் உருவாக்கி இருக்க வேண்டும் அல்லவா? அதைப் படைத்து , அதை இயக்கும் சக்தியின் ஒரு துளி , நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருப்பது சாத்தியம் தானே.... 

மரபணு, ஜீன்ஸ் என்று சொல்கிறோமே, அப்படிப் பார்த்தால் - அந்த இறைவனின் பரம்பரை தானே நாம் எல்லோரும்? 

உள் நின்று ஒளிரும் இறையை  நாம் உணர வேண்டும்..! எங்கும் உள்ள இறைவன் நம்முள் இருப்பதை உணர்ந்த பிறகு, இறைநிலையை விழிப்படையச் செய்த பிறகு, நிம்மதியும், சந்தோசமும், ஞானமும் சித்திக்கும்.

ஒருவர் மேல் விழும் மலர் மாலைகள் , அவருக்குள் இருக்கும் இறைவனுக்கே என்பதை உணர்ந்தவர்கள் , பெருமையும், செருக்கும் அடைவதில்லை.  ஞானிகள் அப்படித்தான் நினைக்கின்றனர். சில அரைவேக்காடுகள் தான் மாலை விழுந்த மமதையில் ஆட்டம் போட்டு, அடங்கிப் போகின்றனர்.

தன்னால் முடியும் நிலைமையில் முயற்சி செய்யாமல் , கடவுளை மட்டும் நம்புபவர்களை , கடவுள் கண்டுகொள்வதே இல்லையாம். தன் முழு சக்தியையும் உபயோகப்படுத்தி, ஒருவேளை முயற்சி கைகூடாதபொழுது , இறைவனை சரணாகதி அடைபவர்களை அவர் நிச்சயம் கை தூக்கி விடுவார். இது பகவான் ராமகிருஷ்ணர்  கூறிய வேத வாக்கு.....

கடவுள் நம்பிக்கை ஒரு மனிதனுக்கு அவசியமா என்பதற்கு விவேகானந்தர் என்ன சொல்கிறார் தெரியுமா?  சுட்டெரிக்கும் வெயிலில் ஒருவர் நடந்து போக வேண்டிய நிலை. தாங்கும் வலிமை உடையவர்கள் வெறும் காலுடன் நடக்கலாம். அதையே, இறை நம்பிக்கை உடையவர்கள் காலில் செருப்பும், கையில் ஒரு குடையும் கொண்டும் நடக்கிறார்கள் என்கிறார்.

கடவுளை நம்பி, தன் முயற்சிகளை முனைப்புடன் செய்பவர்கள் - ஒரு சுகமான பயணத்துக்குத் தயாராகிறார்கள். கரடு முரடான, முட்கள் நிறைந்த வாழ்க்கைப் பயணத்திற்கு - இறை நம்பிக்கை அவசியமான ஒன்று......

தன் மேல் நம்பிக்கை இருக்கும் ஒவ்வொருவரும் ஆன்மீகவாதி தான் என்கிறார் சுவாமி விவேகானந்தர். உங்கள் உள்ளிருக்கும் இறைவனை நம்புங்கள் என்பதற்காகத் தான் கூறி இருப்பார் என்று நான் நினைக்கிறேன்.
ஞானிகள் எந்த விஷயத்தையும் உடைத்து, வெளிப்படையாகப் பேசுவதில்லை. நம்மை சிந்திக்க வைத்து, நம்மை செயல்பட வைக்கின்றன அவர்களது போதனைகள்.


எத்தனையோ புத்தகங்கள் படித்தாலும், எவ்வளவோ ஞானிகளின் போதனைகளைக் கேட்டாலும் , அவரவர் மனது சொல்லும் காரியங்களைத் தான் ஒருவர் செய்ய முடியும். மனத்தை அறிந்து, அதைக் கட்டுப்படுத்தி, அதை எழுச்சி பெற செய்வது தான் - வெற்றி மந்திரம்.

சமீபத்தில் படித்த ஒரு விஷயத்தை கீழே கொடுத்துள்ளேன். இதில் எவ்வளவு அர்த்தம் பொதிந்துள்ளது என்பதைப் பாருங்கள்...

ஞானி ஒருவரிடம் ஒரு சீடன் புகார் செய்தான். “நீங்கள் கதைகள் சொல்லுகிறீர்கள். ஆனால் அவற்றின் பொருளை சொல்வதில்லை!”
அதற்க்கு அவர் கூறியது : "உனக்கு ஒருவர் பழம் கொடுக்கிறார். உனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். அதுவே அவர் அந்த பழத்தை கடித்து மென்று உன்னிடம் கொடுத்தால் எப்படி இருக்கும்?”

சீடர்கள் கடவுளைப்பற்றி நிறைய கேள்விகள் கேட்டனர்.
குரு சொன்னார். கடவுளை யாரும் முழுமையாக அறிய முடியாது. அவரைப் பற்றி யார் எதை சொன்னாலும் அது நிறைவற்றே இருக்கும்.

சீடர்களுக்கு அதிர்ச்சி!
"பின்னே ஏன் அவரைப் பற்றி பேசுகிறீர்கள்?”
குரு கேட்டார் “குயில் ஏன் பாடுகிறது?”

அறிஞர்கள் சொல்வதை புரிந்து கொள்ளவேண்டும். ஞானிகள் சொல்வதை சும்மா கேட்க வேண்டும்: மரங்களிடை சுழன்று வரும் காற்று போல; ஓடையின் சலசலப்பு போல; அருவியின் ஆர்ப்பரிப்பு போல, பறவையின் பாடல் போல. அது உனக்குள் புகுந்து சொல்ல முடியாத ஏதோ ஒன்றை விழிக்கச் செய்யும்.

இதைத் தான், நாங்களும் இந்த இணைய தளம் மூலம் செய்ய முயற்சி செய்கிறோம்...... ஏதோ ஒரு வகையில், நம் ஒவ்வொரு கட்டுரையும், வாசிப்பவர்கள் மனதில் தாக்கம் ஏற்படுத்த வேண்டும். வீணையின் நாதம் போல மனதுக்குள் புகுந்து , சொல்ல முடியாத ஒன்றை தட்டிஎழுப்ப வேண்டும்..... உங்கள் அன்பும் , ஆதரவும் இருக்கும் வரை, அது சாத்தியப்படும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது....

நமக்கு என்ன அருகதை என்பதை நம் வினைகள் தீர்மானிக்கின்றன. வெளியில் இறைவனைத் தேட வில்லையெனில், தன் நம்பிக்கை என்னும் உள்ளுக்குள் இருக்கும் அந்த சக்தியை முழுவதும் நம்புங்கள்....

வெற்றி சர்வ நிச்சயம்...!



Read more: http://www.livingextra.com/2012_04_01_archive.html#ixzz2EjLicdjm

சாப்டுவேர் என்ஜினியர்களும் சமூக சீரழிவும்

இப்பொழுது தலை தூக்கி வரும் பிரச்சனைகளில் மிக முக்கியமானது சாப்டுவேர் கம்பெனியில் வேலை செய்பவர்களால் உண்டாகும் செயற்கை விலை உயர்வு. இதை பத்தி கொஞ்சம் பார்ப்போம்

1. தி.நகரில் ஒரு சாப்பாடு(Meals) 30+ ரூபாய், அதுவே OMR சாலையில் ஏதாவது ஒரு சாப்டுவேர் கம்பெனிக்கு அருகில் இருக்கும் ஓட்டலில் சாப்பாடு குறைந்த பட்சம் 60. என்னுடைய அலுவலகத்திற்கு பக்கத்தில் உள்ள ஆந்திர உணவகத்தில் அது 99 + VAT (ஏறக்குறைய 120 ரூபாய் வரும் டிப்ஸை சேர்த்தால். 10 ரூபாக்கு குறைந்து டிப்ஸ் இருந்தால் அடுத்த தடவை நீங்க போகும் பொழுது விக்கி செத்தாலும் தண்ணி கிடைக்காது.)

2. அடையாரில் உள்ள ஒரு Forex நிறுவனத்தில், சாப்டுவேர் இன்ஜினியர் அதுவும் குறிப்பாக விப்ரோ, டிசிஎஸ், இன்பொசிஸ் கம்பெனிகளில் இருந்து சென்றால் மற்றவர்களுக்கு கொடுக்கப்படும் எக்ஸ்சேஞ் ரேட்டை விட ஒரு ரூபாய் குறைவு. கேட்டால் அது அப்படி தான் சார் வேண்டுமானல் குடுங்கள் இல்லாவிட்டால் போங்க.

3. வேளச்சேரியில் 800-1000 சதுர அடி வீட்டின் வாடகை 6000+ அதே, கோடம்பாக்கம், வடபழனி போன்ற இடங்களில் அதிகபட்சம் 4000.

4. 1200 சதுர அடி வீட்டின் விலை வேளச்சேரியில் சுமார் 50 – 60 லட்சம் வரை.

5. Ascendasஇல் (இது Tidel Parkஜ போன்றது) ஒரு Milk Shakeஇன் விலை 170.

6. ஒரு சாப்டுவேர் கம்பெனிக்கு பக்கத்தில் இருக்கும் ஆட்டோ ஸ்டாண்டில் குறைந்த பட்சம் 20 – 30 ரூபாயாவது அதிகமாக இருக்கும்.

7. இரண்டு வருடத்துக்கு முன்னர் 50ரூபாயாக இருந்த சினிமா டிக்கெட் இன்று குறைந்த பட்சம் 120, 10 ரூபாயாக இருந்த பாப்கான் இன்று 50.

8. தீபாவளிக்கு முதல் நாள் சென்னையில் இருந்து சேலத்துக்கு செல்ல தனியார் பேருந்துகளில் ஒரு டிக்கெட்டின் விலை ரூபாய் 1100. சாதாரணமாக அது ரூபாய் 300.

இது போல் சொல்லிக்கொண்டே போகலாம். இதில் எல்லாரும் சொல்லும் பொதுவான விஷயம் சாப்டுவேர் கம்பெனியில் இருக்குறவன் எவன் சார் விலையை கேக்குறான் இல்ல சாப்டுவேர் கம்பெனிகளில் இருக்குறவனுக்கு என்ன சார், ஆயிர ஆயிரமா சம்பாதிக்கிறான் குடுத்துட்டு போறான். நம்மைப்போன்றவர்களுக்கு பணம் ஒரு பிரச்சனையே இல்லை ஆனா யோசித்து பாருங்க, இப்படி துவங்கும் விலை உயர்வு, படிப்படியாக அப்படியே கொஞ்ச நாள் கழித்து சாதாரண பொது மக்களை போயி அடையும். அவங்க என்ன செய்வாங்க யோசிங்க?

யோசித்து பாருங்க. என்னிக்காவது ஒரு நாள் நாம கேட்டு இருக்கோமா? ஏன் அதிக விலை என்று? இல்ல அவன் இவ்வுளவு விலை விற்கிறானே அவனிடம் வாங்க வேண்டாம் என்று யோசித்து இருக்கோமா? அப்ப என்ன அர்த்தம் காசு கொழுப்பு தானே? வாங்குறவன் இருக்குற வரையில் விற்பவன் விற்கத்தானே செய்வான்? இதற்கு சிறந்த உதாரணம் கடந்த சில மாதங்களாக சென்னை, பெங்களூரில் கட்டிடங்களின் விலையில் 10 – 20% குறைந்துள்ளதே? என்ன காரணம் நகரங்கள் வளர்ந்து விட்டனவா? இல்லையே வாங்க ஆள் இல்லை அதனால் தான் இந்த விலை குறைப்பு.

ரூபாயின் மதிப்பு ஏறுமுகமாக இருக்கும் இந்த காலத்தில், நம்முடைய சம்பளங்களும் வருங்காலங்களில் இது போன்று இருக்கும் என்று சொல்ல முடியாது. முன்று வருடத்துக்கு முன்னர் இருந்த விலையை வைத்து பார்க்கும் பொழ்து இந்த விலை எல்லாம் இரண்டு அல்லது முன்று மடங்கு உயர்ந்து உள்ளது ஆனால் நம்முடைய சம்பள உயர்வு அவ்வுளவு இருக்கிறதா என்ன? பொருட்களை வாங்குங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை ஆனால் அதற்கு உண்டான சரியான விலையை குடுத்து வாங்குங்கள்.

சமீபகாலமாக வெயிட் காலர் குற்றங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து உள்ளது. கைதாகும் பெரும்பாலோனோர் சொல்லும் காரணம், கடன் அட்டைகள், கடன் வாங்கி ஆடம்பரமாக செலவு செய்துவிட்டேன், இப்பொழுது கடன்காரர்கள் தொல்லையில் இருந்து தப்பிக்க இது போன்று செய்தேன் என்று.நமக்கும் இது போன்ற நிலை வர வேண்டுமா? இது எல்லாம் மாற நாம பெருசா ஒண்ணுமே பண்ண வேண்டியது இல்ல, இது மாதிரி ஏமாத்துறவங்களை புறக்கணிச்சாலே போதும், தன்னால அவங்க மாறுவாங்க.
.
Posted By,
santhose

உலகில் அதிக கோடீஸ்வரர்கள் வாழும் நாடும் இந்தியா தான்

உலகில் அதிக கோடீஸ்வரர்கள் வாழும் நாடும் இந்தியா தான்.​ அதிக ஏழைகள் வாழும் நாடும் இந்தியா தான்.​ தகவல்தொழில்நுட்ப வல்லுநர்கள் அதிகம் வசிக்கும் நாடும் இந்தியா தான்.​ தகவல்தொழில்நுட்பத்தையே முற்றிலும் தெரியாத மக்கள் வசிக்கும் நாடும் இந்தியா தான்.

எந்த ஒரு துறையை எடுத்தாலும் இதுபோல இரண்டு இந்தியாவை நாம் காண முடியும்.​ உலகிலேயே இந்தியாவில் தான் அதிகப் படிப்பறிவு இல்லாதவர்கள் இருப்பதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது ஐ.நா.வின் துணை அமைப்பான யுனெஸ்கோ.

அனைவருக்கும் கல்வித் திட்டம் தொடர்பான உலகளாவிய கண்காணிப்பு அறிக்கையை ​ யுனெஸ்கோ அமைப்பு அண்மையில் வெளியிட்டது.​ அந்த அறிக்கையில்,​​ உலகம் முழுவதும் 75.9 கோடி மக்கள் ​(18 வயதுக்கு மேற்பட்டோர்)​ படிப்பறிவு இல்லாதவர்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா.​ அறிக்கையின்படி ஆரம்பக் கல்வி படிக்க வேண்டிய வயதில் உள்ள சிறுவர்களில் 7.2 கோடி பேர் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பதாகவும்,​​ 18 வயதுக்கு மேற்பட்ட மாணவப் பருவத்தினரில் 7.1 கோடி பேர் பள்ளிக்குச் செல்லாமலும் உள்ளனர்.​ அத்துடன் பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே கைவிடுபவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகரித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

உலக அளவில் படிப்பறிவில்லாத மக்களில் பாதிபேர் இந்தியா,​​ பாகிஸ்தான்,​​ வங்கதேசம் மற்றும் சீனா ஆகிய நான்கு நாடுகளில் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.​ இந்த எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருவதால்,​​ இந்த நூற்றாண்டின் வளர்ச்சி இலக்குகளை அடைவதற்குத் தடையாக உள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.​ ​

குறிப்பாக இந்தியாவில் தான் அதிக எண்ணிக்கையில் படிப்பறிவில்லாதோர் இருக்கின்றனர் என்ற கசப்பான உண்மையை யுனெஸ்கோ சுட்டிக்காட்டியுள்ளது.​ ​ மக்களிடையே படிப்பறிவை வளர்ப்பதற்கான நடவடிக்கைகள் வேதனை தரும் விதத்தில்,​​ ஆமை வேகத்தில் இந்த நாடுகளில் நடப்பதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.​ இது அதைவிட கொடுமையான விஷயம்.​ ​ ​

சுதந்திரம் அடைந்த பின்னர் கல்வி அறிவில் இந்தியா முன்னேறினாலும்,​​ இதுவரை அபரிமிதமான வளர்ச்சியை எட்டவில்லை.​ இந்தியாவில் எழுத்தறிவு பெற்றவர்கள் 65 சதவீதம் தான்.​ கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தாலும்,​​ அதற்கேற்ப மக்களிடம் கல்வி அறிவு அதிகரிக்கவில்லை என்பதைத் தான் யுனெஸ்கோவின் அறிக்கை தெளிவாகக் காட்டுகிறது.

இந்தியாவில் 50 சதவீத குழந்தைகள் தான் இடைநிலைக் கல்வியில் ​(1 முதல் 8-ம் வகுப்பு வரை)​ சேர்கின்றனர்.​ இதை 75 சதவீதமாக மாற்ற 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.​ சுதந்திரத்துக்குப்பின் உயர்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது.

1950-ம் ஆண்டில் 20 பல்கலைக்கழகங்கள் மட்டுமே இருந்தன.​ இப்போது பல்கலைக்கழங்களின் எண்ணிக்கை 450 ஆக உயர்ந்துள்ளது.​ அதேபோல,​​ கல்லூரிகளின் எண்ணிக்கை 500-ல் இருந்து 22 ஆயிரமாகவும்,​​ ஆசிரியர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தில் இருந்து 5.75 லட்சமாகவும் உயர்ந்துள்ளது.​ உயர்கல்விக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தில் இருந்து 1.25 கோடியாக உயர்ந்துள்ளது.​ இருப்பினும் பட்டப்படிப்புக்குப்பின் உயர்கல்விக்கு வருவோரின் எண்ணிக்கை 5 சதவீதத்துக்கும் குறைவாக இருப்பதாகக் கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

இந்திய மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது 10 சதவீதம் பேர் தான் உயர்கல்வி பெற்றுள்ளனர்.​ இது உலக சராசரியைவிட ​(23) மிகக் குறைவு.​ வளர்ந்த நாடுகளில் உயர்கல்வி பெற்றவர்கள் 40 முதல் 80 சதவீதமாக உள்ளனர்.​ வளரும் நாடுகளில் இந்த விகிதம் 35 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது.​ 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் இதை 15 சதவீதமாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்த அளவுக்கு,​​ எழுத்தறிவு சதவீதமும்,​​ உயர்கல்வி பெறுவோரின் சதவீதமும் உயரவில்லை.​ கல்வி வியாபாரமாக மாற்றப்பட்டதே இதற்கு முக்கிய காரணம்.​ ​

விண்வெளி ஆய்வில் உலகில் முதலிடம் வகிக்கும் அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தில் பணியாற்றும் விஞ்ஞானிகளில் 30 சதவீதம் பேர் இந்தியர்கள்.​ உலகின் முன்னணி நாடுகளில் பணியாற்றும் தகவல்தொழில்நுட்ப வல்லுநர்களில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் இந்தியர்கள் தான் என்பதை எண்ணும்போது புல்லரிக்கிறது.

அதேநேரத்தில் உலகிலேயே படிப்பறிவு இல்லாத மக்கள் அதிகம் வசிக்கும் நாடு இந்தியா என்ற தகவலைக் கேட்கும்போது வெட்கித்தலைகுனிய வேண்டியுள்ளது.​ ​ வளர்ந்த,​​ வளமான,​​ படிப்பறிவு மிகுந்த ஒளிரும் இந்தியா ஒரு புறம்.​ ஏழ்மையான,​​ படிப்பறிவு இல்லாத இருண்ட இந்தியா மறுபுறம் இருப்பதைப் பார்க்க முடிகிறது.​ ​

இந்த மாற்றத்துக்கு உண்மையான காரணம் என்ன?​ இந்தியாவில் அதிகரித்து வரும் ஊழல்,​​ குறைவான கல்வி விழிப்புணர்வு ஆகியவை தான் முக்கிய காரணம்.​ எனவே,​​ ஊழலை ஒழிக்க வளர்ந்து வரும் இளம் அரசியல்வாதிகள்,​​ மாணவர்கள் சபதம் ஏற்பது அவசியம்.

2020-ல் இந்தியா வல்லரசாக வேண்டுமெனில் தகவல்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நகரத்துக்கும்,​​ கிராமத்துக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க வேண்டும்.​ கிராமங்களில் தரமான கல்வி,​​ மருத்துவம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.​ தேசப்பிதா காந்தி கண்ட கனவுப்படி,​​ கிராம ராஜ்ஜியம் அமைத்தால் இந்தியாவின் எழுத்தறிவு சதவீதம் அபரிமிதமான வளர்ச்சி அடையும்.

எழுத்தறிவு சதவீதத்தை உயர்த்தினால் தான் இந்தியா பொருளாதார வல்லரசாக மாறும்.​ அப்போது "இருண்ட இந்தியா' என்ற நிலை மாறி பிரகாசமாக ஒளிரும் ஒரே இந்தியாவாக மாற்ற முடியும்.​ இருண்ட இந்தியாவிலிருந்து ஒளிரும் இந்தியாவுக்குச் செல்ல எழுத்தறிவு சதவீதத்தை உயர்த்த வேண்டும்.​ ஒளிரும் ஒரே இந்தியாவை உருவாக்க ஒவ்வொரு இந்தியனும் சபதம் ஏற்க வேண்டும்.

உலக அளவில் இந்தியா படிப்பறிவில்லாத மக்களில் பாதிபேர்

ஐநா: இந்தியாவில் படிப்பறிவு இல்லாதோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிக அளவில் இருந்து வருவதாக ஐ.நா அறிக்கை தெரிவித்துள்ளது. 'அனைவருக்கும் கல்வி' திட்டம் தொடர்பான உலகளாவிய கண்காணிப்பு அறிக்கையை ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பு இன்று வெளியிட்டது. அந்த அறிக்கையில், உலகம் முழுவதும் 75.9 கோடி மக்கள் (18 வயதுக்கு மேற்பட்டோர்) படிப்பறிவு இல்லாதவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் தொடர்ந்து படிப்பறிவில்லாதோரின் எண்ணிக்கை அதகளவிலேயே இருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.உலக அளவில் படிப்பறிவில்லாத மக்களில் பாதிபேர் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் சீனா ஆகிய நான்கு நாடுகளில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.மக்களிடையே படிப்பறிவை வளர்ப்பதற்கான நடவடிக்கைகள் வேதனை தரும் விதத்தில் ஆமை வேகத்தில் இந்த நாடுகளில் நடப்பதாகவும் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.தற்போதைய நிலவரப்படி, ஆரம்பக் கல்வி படிக்க வேண்டிய வயதில் உள்ள சிறுவர்களில் 7.2 கோடி பேர் பள்ளிக்கு செல்லாமல் இருப்பதாகவும், 18 வயதுக்கு மேற்பட்ட மாணவ பருவத்தினரில் 7.1 கோடி பேர் பள்ளிக்கு செல்லாமல் இருப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.