ஐநா: இந்தியாவில் படிப்பறிவு இல்லாதோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிக அளவில் இருந்து வருவதாக ஐ.நா அறிக்கை தெரிவித்துள்ளது. 'அனைவருக்கும் கல்வி' திட்டம் தொடர்பான உலகளாவிய கண்காணிப்பு அறிக்கையை ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பு இன்று வெளியிட்டது. அந்த அறிக்கையில், உலகம் முழுவதும் 75.9 கோடி மக்கள் (18 வயதுக்கு மேற்பட்டோர்) படிப்பறிவு இல்லாதவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் தொடர்ந்து படிப்பறிவில்லாதோரின் எண்ணிக்கை அதகளவிலேயே இருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.உலக அளவில் படிப்பறிவில்லாத மக்களில் பாதிபேர் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் சீனா ஆகிய நான்கு நாடுகளில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.மக்களிடையே படிப்பறிவை வளர்ப்பதற்கான நடவடிக்கைகள் வேதனை தரும் விதத்தில் ஆமை வேகத்தில் இந்த நாடுகளில் நடப்பதாகவும் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.தற்போதைய நிலவரப்படி, ஆரம்பக் கல்வி படிக்க வேண்டிய வயதில் உள்ள சிறுவர்களில் 7.2 கோடி பேர் பள்ளிக்கு செல்லாமல் இருப்பதாகவும், 18 வயதுக்கு மேற்பட்ட மாணவ பருவத்தினரில் 7.1 கோடி பேர் பள்ளிக்கு செல்லாமல் இருப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Best Blogger Gadgets
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக