சும்மா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சும்மா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

‘எதை பார்த்தால் பயப்படுவீர்கள்’ ஒரு சர்வே ...


 காசு, பணம் சேர்ப்பதை நினைத்தால் பயமாக இருக்கிறது என்று சீனாவில் பெரும்பாலான ஆண்களும் வயதாவதை நினைத்தால்தான் பயமாக இருக்கிறது என பெண்களும் கூறியிருக்கின்றனர். ‘எதை பார்த்தால் பயப்படுவீர்கள்’ என்று சீனாவை சேர்ந்த பைடு ஷிடாவ் நிறுவனம் இணையதளம் மூலமாக ஒரு சர்வே நடத்தியது. அதில் தெரியவந்த தகவல்களை பீப்பிள்ஸ் டெய்லி நாளிதழ் வெளியிட்டுள்ளது. சர்வே ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளதாவது: பணத்தை பற்றிய பயம்தான் சீன ஆண்களுக்கு அதிகம் இருக்கிறது. ‘ஒழுங்காக வேலை, சம்பளம் கிடைக்காதோ.


என்னால் சம்பாதிக்க முடியாதோ. காசு, பணம் சேர்க்க முடியாதோ. எதிர்காலம் ரொம்ப சிரமமாக இருக்குமோ’ என்பதை நினைத்து பயப்படுவதாக அதிகபட்சமாக 29 லட்சம் ஆண்கள் கூறியுள்ளனர். ஒழுங்காக படிக்காதது, முறையாக மேற்படிப்பு படிக்காதது, படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காதது, பொருள் இழப்பு மற்றும் திருட்டு ஆகியவற்றை பற்றிய பயம், மற்றவர்களுடன் தன் வாழ்க்கையை ஒப்பிடுவது போன்றவையும் பயமாக இருப்பதாக பல ஆண்கள் குறிப்பிட்டுள்ளனர்.


உடல் தோற்றத்தை பொருத்தவரையில் தலை வழுக்கையாவது, தொப்பை விழுவது, ஆண்மை குறைபாடு ஆகியவற்றை குறிப்பிட்டுள்ளனர். பெண்களுக்கு தங்களது அழகை பற்றிய பயம்தான் அதிகமாக இருக்கிறது. வயதாகிவிடுமே என்றுதான் பெரும்பாலான பெண்கள் பயப்படுகின்றனர். இந்த கருத்தை அதிகபட்சமாக 27 லட்சம் பெண்கள் கூறியிருக்கின்றனர். முகத்தில் சுருக்கம் விழுவது, மார்பக அழகு குறைவது, இடுப்பு பெருத்துப்போவது ஆகியவை பெண்களின் இதர கவலைகள் மற்றும் பயம். தனியாக இருப்பது பயமாக இருக்கிறது என்று பெண்களைவிட ஆண்களே அதிகம் பேர் கூறியுள்ளனர். திருமணம் செய்துகொள்வது பயம் என்று 30 சதவீத ஆண்களும் 70 சதவீத பெண்களும் கூறியிருக்கின்றனர்.

விஜயகாந்த்க்கு நன்றி..மொக்கை போடுபவர் சங்க தலைவராக [ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)] . நியமனம்

அகி(ஹி)ல உலக விஜயகாந்த் மொக்கை போடுபவர் சங்க தலைவராக [ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)] --ஆக‌- நியமீத்த விஜயகாந்த் அவர்களுக்கு நன்றி..


எப்படிங்க அவருக்கு மட்டும் தலைவர் பதவி கிடைச்சுது..



வாங்க சார்..வந்து உங்க மறுமொழி(லி)களை சொல்லிட்டு போங்க‌..

வாங்க பன்னிக்குட்டி ராம்சாமி சார், உங்களுக்கும் ஏதொ கிடைச்சுதுன்னு கேள்விபட்டென்..


வாங்க ம‌க்கள்ஸ் அவரை ஆதரிக்கலாமா? மறுமொழி(லி)களை சொல்லிட்டு போங்க‌...

பன்னிக்குட்டி ராம்சாமி இங்கும் எழுதியுள்ளார்..விசிட் அடித்து வாங்க சார்..

கண்டக்டரை செருப்பால் அடித்த பெண்:

திருவொற்றியூர்:டிக்கெட் எடுக்கச் சொன்னதால், பஸ் கண்டக்டரை செருப்பால் அடித்த பெண் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பயணிகள் காவல் நிலையத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தாக்குதல் நடத்திய பெண் கைது செய்யப்பட்டார்.சென்னை திருவொற்றியூர் பஸ் நிலையத்திலிருந்து எழும்பூர் செல்லும் மாநகர பஸ் (தடம் எண்: 28) நேற்று முன்தினம் இரவு புறப்பட்டுச் சென்றது. பெரியார் நகர் பஸ் நிறுத்தம் அருகே, சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த ராணி (38) தனது இரு குழந்தைகளுடன் பஸ்சில் ஏறினார். ஒரு டிக்கெட் மட்டும் கேட்டார்.சிறுவர்கள் இருவருக்கும் மூன்று வயதுக்கும் மேல் ஆகிவிட்டதால், அவர்களுக்கும் சேர்த்து டிக்கெட் எடுங்கள் என கண்டக்டர் விக்ராந்த் (38) கூறினார்.



ராணியோ டிக்கெட் எடுக்க மறுத்தார். இதனால், "நீங்கள் டிக்கெட் எடுக்க வேண்டாம்; அடுத்த ஸ்டாப்பில் இறங்கிக் கொள்ளுங்கள்' என்றார் விக்ராந்த். "நான் தலைமைச் செயலகத்தில் வேலை செய்கிறேன். என்னையா இறங்கச் சொல்கிறாய்' என கத்திய ராணி, திடீரென கண்டக்டரை பிடித்து கீழே தள்ளினார். நிலை தடுமாறி அவர் விழுந்ததும், அவரது செருப்பை எடுத்து கண்டக்டரை சரமாரியாக அடித்தார்.இதனால், ஆத்திரமடைந்த பயணிகள் ராணியை மடக்கிப் பிடித்தனர்.



திருவொற்றியூர் காவல் நிலையம் வந்ததும், பயணிகளே ராணியை போலீசில் ஒப்படைத்தனர். அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பஸ்சிலிருந்து பயணிகள் ஒட்டுமொத்தமாக காவல் நிலையம் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.இதுகுறித்து, விக்ராந்த் மட்டுமின்றி பயணிகளும் போலீசில் புகார் செய்தனர். பதிலுக்கு ராணியும் கண்டக்டர் தன்னை அடித்ததாக புகார் செய்தார். இதுகுறித்து, போலீசார் வழக்குப் பதிந்து, ராணியை கைது செய்து, பின் ஜாமீனில் விடுவித்தனர். பெண் தாக்கியதில் காயமடைந்த விக்ராந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.