கண்டக்டரை செருப்பால் அடித்த பெண்:

திருவொற்றியூர்:டிக்கெட் எடுக்கச் சொன்னதால், பஸ் கண்டக்டரை செருப்பால் அடித்த பெண் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பயணிகள் காவல் நிலையத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தாக்குதல் நடத்திய பெண் கைது செய்யப்பட்டார்.சென்னை திருவொற்றியூர் பஸ் நிலையத்திலிருந்து எழும்பூர் செல்லும் மாநகர பஸ் (தடம் எண்: 28) நேற்று முன்தினம் இரவு புறப்பட்டுச் சென்றது. பெரியார் நகர் பஸ் நிறுத்தம் அருகே, சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த ராணி (38) தனது இரு குழந்தைகளுடன் பஸ்சில் ஏறினார். ஒரு டிக்கெட் மட்டும் கேட்டார்.சிறுவர்கள் இருவருக்கும் மூன்று வயதுக்கும் மேல் ஆகிவிட்டதால், அவர்களுக்கும் சேர்த்து டிக்கெட் எடுங்கள் என கண்டக்டர் விக்ராந்த் (38) கூறினார்.



ராணியோ டிக்கெட் எடுக்க மறுத்தார். இதனால், "நீங்கள் டிக்கெட் எடுக்க வேண்டாம்; அடுத்த ஸ்டாப்பில் இறங்கிக் கொள்ளுங்கள்' என்றார் விக்ராந்த். "நான் தலைமைச் செயலகத்தில் வேலை செய்கிறேன். என்னையா இறங்கச் சொல்கிறாய்' என கத்திய ராணி, திடீரென கண்டக்டரை பிடித்து கீழே தள்ளினார். நிலை தடுமாறி அவர் விழுந்ததும், அவரது செருப்பை எடுத்து கண்டக்டரை சரமாரியாக அடித்தார்.இதனால், ஆத்திரமடைந்த பயணிகள் ராணியை மடக்கிப் பிடித்தனர்.



திருவொற்றியூர் காவல் நிலையம் வந்ததும், பயணிகளே ராணியை போலீசில் ஒப்படைத்தனர். அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பஸ்சிலிருந்து பயணிகள் ஒட்டுமொத்தமாக காவல் நிலையம் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.இதுகுறித்து, விக்ராந்த் மட்டுமின்றி பயணிகளும் போலீசில் புகார் செய்தனர். பதிலுக்கு ராணியும் கண்டக்டர் தன்னை அடித்ததாக புகார் செய்தார். இதுகுறித்து, போலீசார் வழக்குப் பதிந்து, ராணியை கைது செய்து, பின் ஜாமீனில் விடுவித்தனர். பெண் தாக்கியதில் காயமடைந்த விக்ராந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


Best Blogger Gadgets

2 கருத்துகள் :

தீபக் வாசுதேவன் சொன்னது…

தலைமைச் செயலகத்தில் வேலை செய்தால் இரண்டா கொம்பா முளைத்திருக்கும்?

க.நா.சாந்தி லெட்சுமணன். சொன்னது…

அந்தப்பெண் மனனோயாளியாக இருப்பாள்.

கருத்துரையிடுக