பிராணிகள் பேசுகின்றன III - "கோழியாகிய" எங்கள் நிலை சொல்கின்றோம் - கேளுங்கள்

உங்கள் வீடுகளில் எங்களை உணவுக்காகவே வளர்கின்றீர்கள். வளர்க்கும்போது, எங்களிடம் அன்பு காட்டுவது போல் வஞ்சகத்துடனே வளர்கின்றீர்கள். என்றாவது ஒரு நாள் எங்களை கொன்று விடுவீர்கள் என நாங்கள் நினைத்தது இல்லை . உங்கள் குழந்தைகளை காப்பது போல் எங்களை ஒரு நாளாவது பார்த்தது உண்டா ?எங்களுக்கு முறையான உணவு கிடைக்காதலால் புற்று நோய் , ஷய ரோகம் , பெரிய வியாதி உள்ளவர்கள் துப்பும் சளியை ஓடிபோய் சாப்பிடுகிறோம். அது போதமால் , பூரான் , செய்யான் , கரப்பான் பூச்சி , சிறு பாம்புகள் , பல்லி , சாக்கடையில் உள்ள புழுக்களையும் உண்கின்றோம். அதனால், எங்கள் உடல் உறுப்புகளும் , தசையும் அசுத்தத்தில் இருந்து உருவானது தானே ! எங்களை கொன்று சாப்பிடுவது உங்களுக்கு அருவருப்பாக இல்லையா? இதை எல்லாம் சகித்து கொண்டு எப்படி சாப்பிடுகின்றீர்கள்? சிறிது சிந்தித்து பாருங்கள்,

மேலும் , எங்களை கொன்று விற்பனை செய்பவர்கள் எங்களை கொண்டு போகும் போது,கீரையை கட்டுவது போல் கால்களை சேர்த்து மொத்தமாக கட்டி சைக்கிளில் தலைகீழாக தொங்க விட்டு கொண்டு போவதும், எங்கள் உயிரை போக்குவதற்காக அடுப்பில் நீரை கொதிக்க வைத்து, கொதிக்கும் அந்த நீரிலே அப்படியே சிறிதும் இரக்கமில்லாமல் தூக்கி போடுகிறீர்களே ! இது நியாயமா ?

உங்கள் உடலில் சிறிது வெந்நீர் பட்டு விட்டால் என்ன பாடு படுகின்றீர்கள்? உங்களுக்கு வலிப்பது போன்று தானே எங்களுக்கும் வலிக்கும். இது தான் "ஆறறிவு" படைத்த இரக்கம் உள்ள மனிதர்களாகிய நீங்கள் செய்யும் நற் செயலா ?
ஆறறிவு என்று சொல்லி கொண்டு "கொன்று தின்னும்" மனித தேகம் பெற்றவர்களே ! மனித தேகம் பெற்றவர்களால் தான் கடவுளின் "இயற்கை விளக்கத்தை" பெற முடியும்.எங்களை போன்ற "பிராணிகளை" கொன்று தின்று கடவுளின் இயற்கை விளக்கத்தை நீங்களே மறைத்து கொள்ளாதீர்கள். வடலூர் இராமலிங்க சுவாமிகள் , பிற உயிர்களை கொன்று தின்பவர்களுக்கு "கடவுளின் இயற்கை விளக்கம்" அகத்திலும், புறத்திலும் வெளிப்படவே மாட்டது என்று கூறுகிறார்கள்.

எங்களை கொன்று தின்பவர்களை , இறைவனிடம் முறை இடுவோம். எங்கள் சாபம் சுனாமியாகவும், பூகம்பம் ஆகவும்,சாலை விபத்தாகவும்,
இயற்கை சீற்றங்கலாகவும் கண்டிப்பாக வருவோம். கொன்று தின்பவர்களை விடமாட்டோம்.

எதற்காக மனித தேகம் எடுத்தீர்கள் என சிந்தித்து பாருங்கள்?
Anbudan,
Vallalar Karthikeyan

Best Blogger Gadgets

1 கருத்து :

பெயரில்லா சொன்னது…

எங்களை கொன்று தின்பவர்களை , இறைவனிடம் முறை இடுவோம். எங்கள் சாபம் சுனாமியாகவும், பூகம்பம் ஆகவும்,சாலை விபத்தாகவும்,
இயற்கை சீற்றங்கலாகவும் கண்டிப்பாக வருவோம். கொன்று தின்பவர்களை விடமாட்டோம்.

கருத்துரையிடுக