காசு, பணம் சேர்ப்பதை நினைத்தால் பயமாக இருக்கிறது என்று சீனாவில் பெரும்பாலான ஆண்களும் வயதாவதை நினைத்தால்தான் பயமாக இருக்கிறது என பெண்களும் கூறியிருக்கின்றனர். ‘எதை பார்த்தால் பயப்படுவீர்கள்’ என்று சீனாவை சேர்ந்த பைடு ஷிடாவ் நிறுவனம் இணையதளம் மூலமாக ஒரு சர்வே நடத்தியது. அதில் தெரியவந்த தகவல்களை பீப்பிள்ஸ் டெய்லி நாளிதழ் வெளியிட்டுள்ளது. சர்வே ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளதாவது: பணத்தை பற்றிய பயம்தான் சீன ஆண்களுக்கு அதிகம் இருக்கிறது. ‘ஒழுங்காக வேலை, சம்பளம் கிடைக்காதோ.
என்னால் சம்பாதிக்க முடியாதோ. காசு, பணம் சேர்க்க முடியாதோ. எதிர்காலம் ரொம்ப சிரமமாக இருக்குமோ’ என்பதை நினைத்து பயப்படுவதாக அதிகபட்சமாக 29 லட்சம் ஆண்கள் கூறியுள்ளனர். ஒழுங்காக படிக்காதது, முறையாக மேற்படிப்பு படிக்காதது, படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காதது, பொருள் இழப்பு மற்றும் திருட்டு ஆகியவற்றை பற்றிய பயம், மற்றவர்களுடன் தன் வாழ்க்கையை ஒப்பிடுவது போன்றவையும் பயமாக இருப்பதாக பல ஆண்கள் குறிப்பிட்டுள்ளனர்.
உடல் தோற்றத்தை பொருத்தவரையில் தலை வழுக்கையாவது, தொப்பை விழுவது, ஆண்மை குறைபாடு ஆகியவற்றை குறிப்பிட்டுள்ளனர். பெண்களுக்கு தங்களது அழகை பற்றிய பயம்தான் அதிகமாக இருக்கிறது. வயதாகிவிடுமே என்றுதான் பெரும்பாலான பெண்கள் பயப்படுகின்றனர். இந்த கருத்தை அதிகபட்சமாக 27 லட்சம் பெண்கள் கூறியிருக்கின்றனர். முகத்தில் சுருக்கம் விழுவது, மார்பக அழகு குறைவது, இடுப்பு பெருத்துப்போவது ஆகியவை பெண்களின் இதர கவலைகள் மற்றும் பயம். தனியாக இருப்பது பயமாக இருக்கிறது என்று பெண்களைவிட ஆண்களே அதிகம் பேர் கூறியுள்ளனர். திருமணம் செய்துகொள்வது பயம் என்று 30 சதவீத ஆண்களும் 70 சதவீத பெண்களும் கூறியிருக்கின்றனர்.
Best Blogger Gadgets
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக