`தாலி’ வந்த கதை....

களவியல், கற்பியல் இரண்டு விஷயங்களிலுமே முன்னணியில் இருந்த தமிழர்களின் கல்யாணங்களில் `தாலி’ வந்த கதை சுவாரஸ்யமானது.


திருநெல்வேலி போன்ற பனைமரங்கள் அதிகம் இருந்த பகுதிகளில், ஒரு ஆண் பெண்ணை திருமணம் செய்துகொண்டான் என்றால்... பனையோலை ஒன்றை சிறிய அளவில் நறுக்கி அதில் `இந்தப் பெண் இந்த ஆணுக்கு உரியவள்’ என எழுதி ஒரு நூலில் கோர்த்து கழுத்தில் கட்டி விடுவார்கள்.



பனைமரத்துக்கு `தால்’ என்றும் பெயர் உண்டு. பனையோலையில் எழுதிக் கட்டுவதால் அந்த சிறு ஓலைக்கு தாலி என்று பெயர் வந்தது.



பிறகு இந்தத் தாலியில் பெயருக்கேற்றவாறு பனையோலை இல்லாமல்... பவுன் கட்டித் தொங்க விட்டதெல்லாம் மாற்றத்தின் அடையாளங்கள்.

Best Blogger Gadgets

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக