தலைவா, நாளைய தமிழகம் உன் கையில் தான் இருக்கு. அரசியலுக்கு வாங்க தலைவா'...

அமிதாப் பச்சன் ஹிந்தியில் ஆகச்சிறந்த சூப்பர் ஸ்டார். ஆனா, அந்த மாநிலத்து ரசிகர்கள் அமிதாபை பார்த்து, 'தலைவா, நாளைய மஹாராஷ்டிராவே உன் கையில் தான் இருக்கு. அரசியலுக்கு வாங்க தலைவா'னு கூச்சல் போடுறாங்களா...?
ஷாருக்கான், சல்மான்கான் மற்றும் ஆமிர்கான் போன்ற ஹிந்தி சூப்பர் ஸ்டார்களுக்கு எவ்வளவு மார்க்கெட் வேல்யூ இருக்கு தெரியுமா..? அவர்களுக்கு மஹாராஷ்டிரா மட்டும் இல்லாமல் இந்தியா முழுக்க எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் தெரியுமா...? ஆனா, அந்த ரசிகர்கள் அவர்களை பார்த்து 'அரசியலில் குதியுங்கள்...இந்தியாவை காப்பாற்றுங்கள்...நீங்கள் தான் எங்கள் 'ஷாருக்காந்தி' என அடைமொழி இட்டு சுவரொட்டிகள் ஒட்டி நீங்கள் பார்த்தது உண்டா...?
இல்லை, ஹிந்தி சினிமாக்காரனின் படம் வெளியே வராமல் எந்த ஹிந்தி ரசிகனாவது தூக்கு போட்டு தற்கொலை செய்திருக்கிறானா..?? எந்த ஹிந்தி ரசிகனாவது அவர்களின் நடிகர்களுக்கு கோயில் கட்டியிருக்கானா...? இப்படி எல்லா விஷயங்களையும் அவர்களோடு உங்களையும் எண்ணி பார்த்தால், நீங்கள்(தமிழக ரசிகர்கள்) எவ்வளவு மட்டமான நிலையில் (அல்லது அந்த நிலைக்கு ஆளாக்கப்பட்டு) இருக்கிறீர்கள் என்பது உங்களுக்கே புரியும்!!
ஏன், நம்ம பக்கத்து மாநிலத்து கேரளாவில் இங்க நடக்கிற ரசிகர்களின் மானங்கெட்ட புரட்சிகள் ஏதாவது தினம் தினம் நடந்துக்கிட்டு இருக்கா..? மோகன்லால், மம்முட்டி எல்லாம் ஏன் ஆடாம் அலம்பல் பண்ணாம இருக்காங்க...? ஏன்னா, அவங்களுக்கு பைத்தியக்காரத்தனமான ரசிகர்கள் கூட்டம் இல்ல. இங்கே சென்னைக்கு படிக்க வந்த, இல்ல, பூர்வீகமா இருக்கிற மலையாளிகள் கூட நடிகர்கள் மேல வெறித்தனமா இருக்க மாட்டாங்க. அதுக்கு என்ன காரணம்னு யோசிங்க!
அமிதாப், திலீப்குமார், மோகன்லால், மம்முட்டிக்கு இல்லாத நடிப்பு திறமையா உங்க மூத்த தளபதி, இளைய தளபதி, வளரும் தளபதிக்கெல்லாம் இருக்கு...? சிகரெட் மேல தூக்கிப்போட்டு துப்பாக்கியால் சுட்டு வாயில வெச்சி பிடிச்சா, அப்படியே கை தட்டல் பறக்கும்..சிகரெட்ட சட்டை காலரிலிருந்து வாயால் கடிச்சி இழுத்தா, அதுக்கு பேர் நடிப்பாம்...சிலை வைப்பாங்களாம்..பால் ஊத்துவாங்களாம்...அய்யோ அய்யோ!!
அவ்வளவு ஏன்...ஹாருக்கானுக்கு பட்டம் ஏதாவது இருக்கா...? அமிதாப் பச்சனுக்கு பட்டம் இருக்கா...? மோகன்லால் ?? மம்முட்டி ??? ஒருத்தருக்கும் இல்ல. ஆனா, இங்க ஒரு பட்டத்துக்கு புது அரசியல்வாதி, புரட்சி அரசியல்வாதியான ஒரு நடிகர் படும் பாடு இருக்கே...அப்பப்பாஆஆ!!!
இதுக்கெல்லாம் யாரு காரணம்...? இந்த மானங்கெட்ட ரசிகர்கள் தான். கொஞ்சம் வெளியே வந்து இந்த பரந்த சினிமா உலகத்தை பார்த்து சிந்திக்க ஆரம்பிச்சா போதும்...அவங்க எவ்வளவு பெரிய தவறு, சமுதாய சீர்கேட்டை செஞ்சிக்கிட்டு இருக்காங்கன்னு தெளிவா புரியும்.
இவ்வளவு விளங்கும்படி வி
லாவரியா பதிவு போட்டாலும் கொஞ்சம் கூட உறைக்காம சில மர மண்டைகள் வந்து இங்க வியாக்கியானம் பேசுவாங்க...திருந்துங்கப்ப்பாஆஆ...புன்னியமா போகும்!- பிரகாசம் பழனி

ஓட்டுப்போட என்னை அழுத்து


Best Blogger Gadgets

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

படிக்க வந்த நண்பர்களெல்லாம் ஒட்டு போட்டுட்டு போங்களே!!

இந்த இடுகை உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்.


தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க உள்ள கருவிபட்டையில் மேல்நோக்கியுள்ள கைவிரலை சொடுக்கவும்