ஐயா,. சகாயம் ..அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். நாங்களோ அடிமை மக்கள். நாங்கள்
அடுத்த முறையும் ஊழல் செய்யும் இந்த அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே ஒட்டு
போடுவோம். ரோட்டில் பள்ளம் இருந்தால் அதை தாண்டி செல்வோம், சுற்றி
செல்வோம், கொசு கடித்தால் கொசுவை வெறிகொண்டு அடிப்போம். ஆனால் இந்த நாற்றம்
நிறைந்த தமிழகத்திற்கு காரணம் இதுவரை எங்களை ஆண்ட, நாங்க ஒட்டு போட்ட
முதல்வர்கள்தான் என்பது எங்களுக்கு புரியவே புரியாது. எங்களில் பலர்
சாமியாருக்கும், அவர்களை விட சல்லாப வாழ்க்கை வாழும் சினிமா
நடிகர்களுக்கும், இவர்களுக்காகவே வேலைசெய்யும் அரசியல் வாதிகளுக்கும்
அடிமைகளாக சிறு வயது முதலே மாறிவிட்டோம். அவர்களின் குறைகளை யாரேனும்
சுட்டி காட்டினால் எதிர்போம், குறைகள் நிரூபிக்கப்பட்டால் அழுவோம், ஒரு
காலமும் நாங்கள் அடிமைகள் என்பதை உணர்ந்து அதிலிருந்து வெளிவர மாட்டோம்.
எங்களை நம்பி அரசியலுக்கு வந்த எவ்வளவோ நல்லவர்களை நாங்கள்
விரட்டியுள்ளோம். அண்மையில் அரவிந்த் கேஜ்ரிவால் மண்ணை கவ்வியதை நாங்கள்
செய்து காண்பித்தோம். எனவே எங்களை நம்பி நீங்கள் எதிலும் இறங்கி மாட்டிக்க
வேண்டாம். எங்களை போல நீங்களும் அடிமையாக மாறிவிட்டால் உங்களுக்கு கவர்னர்
பதவி நிச்சயம் உண்டு. தமிழகத்தில் கனிம வளமே இல்லை என்று வழக்கை
முடிக்கவும்.
இப்படிக்கு,..
நாட்டிற்கு எது நல்லது என்று சிறிதும் சிந்திக்காமல், தன்னுடைய உணர்ச்சிக்கு அடிமைபட்டு ஒட்டு போடும் மாக்கள்.
இப்படிக்கு,..
நாட்டிற்கு எது நல்லது என்று சிறிதும் சிந்திக்காமல், தன்னுடைய உணர்ச்சிக்கு அடிமைபட்டு ஒட்டு போடும் மாக்கள்.
Best Blogger Gadgets
1 கருத்து :
இதை விட விளக்கமா சொல்ல முடியாது சகாயம் அவர்களே . நீங்க ஒத்து வராவிட்டால் இவர்களுக்கு IAS அதிகாரிகள் சகாய விலையில் கிடைப்பார்கள் .
இங்கே சொன்னது போல, சேரன் சோழன் பாண்டியன் காலத்தில் இருந்தே தமிழகத்தில் கனிம வளம் இல்லை என்று சொல்லி இந்த வழக்கை முடித்து வாழ்க்கையில் முன்னேற பாருங்க !
அருமையான பதிவு , வாழ்த்துக்கள் !
கருத்துரையிடுக