அயல்நாடுகளில்
ஆன்மீகச் சுற்றுப் பயணம் முடித்து கப்பலில் தாயகம் திரும்பிக்
கொண்டிருந்தார் சுவாமி விவேகானந்தர். அவருடன் மதப் பிரசாரகர்கள் இருவர்
பயணம் செய்து கொண்டிருந்தனர். சுவாமிகளுடன் அவர்கள் உரையாட ஆரம்பித்தனர்.
உரையாடல் சற்று நேரத்துள் விவாதமாக மாறியது. தங்கள் மதத்தைப் பற்றி
உயர்வாகப் பேசிய அவர்கள், இந்து மதத்தைப் பலவாறாகத் தூற்ற ஆரம்பித்தனர்.
அவர்களுடன் சரிக்குச் சமமாகத் தான் பேசியதே தவறு என நினைத்த சுவாமிகள், பதிலுக்குப் பதில் பேசாமல் மௌனம் காத்தார்.
ஆனால் அவர்களோ தொடர்ந்து சுவாமிகளைக் கேலி செய்ததுமல்லாமல் இந்து மதத்தையும் மிகக் கேவலமாக விமர்சித்துக் கொண்டிருந்தனர்.
அவ்வளவு தான்
சுவாமிகளுக்குத் தாங்கொணா கோபம் வந்து விட்டது. நெருங்கி அவர்கள் இருவரின்
சட்டையைப் பிடித்த அவர், இந்து மதத்தின் பெருமையைப் பற்றிக்
விளக்கியதுடன், ” இன்னொரு முறை என் மதத்தைப் பற்றி நீங்கள் தவறாகப் பேசினால், உங்கள் இருவரையும் தூக்கிக் கடலில் போட்டு விடுவேன்” என்று எச்சரித்தார்.
சுவாமிகளின்
உடல் பலத்தையும், அவரது பேச்சில் தெரிந்த வீரத்தையும், உறுதியையும் கண்ட
அவர்கள் பயந்து போய், “இனி அவ்வாறு பேச மாட்டோம்! எங்களை மன்னித்து
விடுங்கள்!” என்று கூறிய பின்புதான் அவர்களை விடுவித்தார்.
அந்த அளவிற்கு வீரம் படைத்தவராகவும், தமது மதம் தேவையில்லாமல் தூற்றப்படுவது கண்டு மனம் சகியாதவராகவும் விவேகானந்தர் விளங்கினார்.
***
Thanks to,
உண்மையைத் தேடி
Best Blogger Gadgets
4 கருத்துகள் :
நல்லது... தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்... தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்... நன்றி...
இவ்வாறு தான் மதக் கலவரங்கள் தொடங்குவன, பேச்சோடு போனால் போச்சு, அல்லங்கில் கலவரம் தான்.
விவேகானந்தர் காலத்தில் இன்றைக்கு போல மீடியாக்களின் தாக்கம் இல்லை. அப்படி இருந்திருந்தால் நித்யானந்தா மாதிரி அன்றைக்கே பொம்பள கேஸில் மாட்டியிருப்பார்
சாமிக்குப் பதில் பேச தெரியவில்லை. உடனே மிரட்ட ஆரம்பித்து இருக்கிறார்.
கருத்துரையிடுக