இவையெல்லாமே கழகங்களின் சாதனைகள் தான்...

JAY JAY - CHENNAI,இந்தியா

JAY JAY இரண்டு வருட சாதனைகள் என்று எதுவும் இல்லை... ஆனால் அதை சொல்ல முக குடும்பத்துக்கு தகுதி இல்லை.... 1969 முதல் 2013 வரையிலான 44 ஆண்டு கால் கழக ஆட்சிகளால் மக்கள் அடைந்தது வேதனை மட்டுமே... சாதனை என்று எதுவுமே இல்லை.. வீராணம் தண்ணீரை சென்னைக்கு திருப்பியது, லாட்டரியை ஒழித்தது, போன்றவை அதிமுகவின் சாதனைகளாகவும் கொஞ்சம் பாலங்களை கட்டியது திமுகவின் சாதனையாகவும் எடுத்து கொள்ளலாம்... ஆனால் வேதனைகள் - கழக ஆட்சிகளால் ஏற்படும் வேதனைகள் இதோ : 1. கட்சிக்கு ஒரு TV சேனல்,இவர்கள் சொல்வது தான் நியுஸ்... இவர்கள் பாடுவதோ தனி மனித துதி... 2. டாஸ்மாக் என்னும் வற்றாத ஜீவ நதி... இதன் வருமானம் அரசுக்கு வந்தாலும், மதுபான ஆலைகள் யாருக்கு சொந்தம்... ? சிறு குழந்தை கூட சொல்லி விடும் .... 4 கிரனைட் கல் / மணல் குவாரிகள் ஆட்சியாளர்களின் கைகளில்... 5. இலங்கை தமிழரின் பிரச்சினையை ஓட்டுக்காக மாத்தி மாத்தி உபயோகிப்பது கழகங்களுக்கு கை வந்த கலை... 6 . சினிமாவில் ஏகாபத்தியம், குறிப்பாக முக குடும்பம்... 7. முக குடும்பத்தின் 2G கொள்ளைகள்... 8. மாறன் குடும்பத்து IT துறை ஏகாப்பதியம்... 9. தனி நபர் துதி பாடும் அரசாங்கங்கள்... 9. இலவசங்கள் மின்சாதன பொருள்கள்/ டிவி / கணினி - இப்படி தேவையில்லா குப்பைகள்... 10. காவேரி பிரச்சினையில் உருப்படியாக இதுவரை ஒரு தீர்வு எட்டாதது.... 11. மின்சார திட்டத்தில் தொலை நோக்குடன் செயல்படாததால் , மின்வெட்டு , கழுத்துக்கு கத்தியாய் நிற்பது ... 12. பொதுப்பணி துறையில், பத்திரபதிவு துறையில் நடக்கும் எண்ணிலடங்கா ஊழல்கள்... 13. தமிழ் தாய்க்கு சிலை, உலக தமிழ் மாநாடு - இப்படி தண்ட செலவுகள்... 14. மக்கள் பிரச்சினையை மறந்து விட்டு முதல்வருக்கு சலாம் போட்டே காலத்தை ஓட்டும் மந்திரிகள்... 15. குப்பையை கூட அள்ளாத மாநகராட்சிகள்..... 16 . மலிவு விலை உணவகங்கள்.... 17. கல்வி போதிப்பதில் முரண்பாடுகள்... காசு கொடுத்தால் பொறியியல் சீட் கொடுக்கும் கல்லூரிகள்... 18. கழிவு நீர் வெளியேற்றுவதில் தொலை நோக்கு திட்டம் இல்லா அரசுகள்..... 19. குடிமகன்களால் சட்டம் ஒழுங்கு கெடுவதை கண்டும் காணாமல் இருக்கும் அரசுகள்... 20. குடி மகன்களால் சாலை விபத்துக்கள் அதிகம் ஆவதையும் கண்டும் காணாமல் இருக்கும் அரசுகள்...... ..இவையெல்லாமே கழகங்களின் சாதனைகள் தான்...


கரும வீரர் காமராசர் அய்யா சும்மாவா சொன்னார்... கழகங்கள் இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று.... காமராசரை தமிழக மக்கள் 1967 இல் தோற்கடித்த போது, தோற்றது காமராசர் அல்ல.. தமிழக மக்கள் தான்......

Best Blogger Gadgets

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக