மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்

இன்னைக்கு எத்தனை விதமான பாடல்களை வேண்டுமானாலும் நான் கேட்கலாம்.. ரசிக்கலாம்.


எனக்கு பிடித்த பாடல்:

 

Song: malargalai poal - பாடல்: மலர்களைப் போல் தங்கை
Movie: paasa malar- திரைப்படம்: பாசமலர்
Singers: T.M. Soundararajan
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
Lyrics: Poet Kannadasan - இயற்றியவர்: க்விஞர் கண்ணதாசன்
Music: K.V. Mahadevan - இசை: கே.வி. மஹாதேவன்
Year: - ஆண்டு: 1961 

 

மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்
மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள் - அண்ணன்
வாழ வைப்பான் என்று அமைதி கொண்டாள்
மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள் - அண்ணன்
வாழ வைப்பான் என்று அமைதி கொண்டாள்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் - அண்ணன்
கற்பனைத் தேரினில் பறந்து சென்றான்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் - அண்ணன்
கற்பனைத் தேரினில் பறந்து சென்றான்


மாமணி மாளிகை மாதர்கள் புன்னகை
மங்கல மேடையின் பொன் வண்ணம் கண்டான்
மாமணி மாளிகை மாதர்கள் புன்னகை
மங்கல மேடையின் பொன் வண்ணம் கண்டான்
மாவிலை தோரணம் ஆடிடக் கண்டான்
மாவிலை தோரணம் ஆடிடக் கண்டான்
மணமகன் வந்து நின்று மாலை சூடக்கண்டான்


கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் - அண்ணன்
கற்பனைத் தேரினில் பறந்து சென்றான்


ஆசையின் பாதையில் ஓடிய பெண்மயில்
அன்புடன் கால்களில் பணிந்திடக் கண்டான்
வாழிய கண்மணி வாழிய என்றான்
வான்மழை போல் கண்கள் நீரில் ஆடக்கண்டான்


கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் - அண்ணன்
கற்பனைத் தேரினில் பறந்து சென்றான்


பூமணம் கொண்டவள் பால்மணம் கண்டாள்
பொங்கிடும் தாய்மையில் சேயுடன் நின்றாள்
பூமணம் கொண்டவள் பால்மணம் கண்டாள்
பொங்கிடும் தாய்மையில் சேயுடன் நின்றாள்
மாமனைப் பாரடி கண்மணி என்றாள்
மருமகள் கண்கள் தன்னில் மாமன் தெய்வம் கண்டாள்

மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள் - அண்ணன்
வாழ வைப்பான் என்று அமைதி கொண்டாள்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் - அண்ணன்
கற்பனைத் தேரினில் பறந்து சென்றான்

 

 


Best Blogger Gadgets

3 கருத்துகள் :

பெயரில்லா சொன்னது…

Music director for this film Viswanathan-Ramamurthy...not K.V. Mahadevan....

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இந்தப் பாடலை எப்போது கேட்டாலும் கண்கள் கசியாமல் இருக்காது...

Velmaheshk சொன்னது…

Thanks for info.. Anony & திண்டுக்கல் தனபாலன்

கருத்துரையிடுக