வெற்றியின் அடையாளம் துணிச்சல்!
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
காலஎந்திரம் எனும் மாயஎந்திரம் நம்மிலே கூட இருக்கின்றது.
சில நம்மை பின்னோக்கி எடுத்துச்செல்லும்.
அவற்றை நினைவுகள் என்போம்.
சில நம்மை முன்போக்கி எடுத்துச்செல்லும்.
அவற்றைக் கனவுகள் என்போம்.
நீ வெளிநாடு போகிறாய், ஒரு மறைமுக நண்பன் உன்னோடு வருவான். அவன் நீ கற்ற வித்தை. வீட்டிலே இருக்கிறாயா? உனக்கருகே ஒரு தோழன் அவன் தான் உன் மனைவி. நீ வியாதியில் படுத்திருக்கிறாயா? உன் அருகில் ஒரு தோழன் இருக்கிறான். அவன் தான் வைத்தியன். நீ மரண படுக்கையில் இருக்கிறாயா? உன் அருகே ஒரு தோழன் காத்திருக்கிறான், யாத்திரையில் கூட வருவதற்கு. அவன் தான் நீ செய்கிற அருள்” - வியாசக முனிவர்.
வாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி
அழகான பசி
ஒரு முறை சுவைக்கப் பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும்.
அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால்
செய்யப்பட்டவை அல்ல;
விடாமுயற்சியினால் தான்.
-சாமுவேல் ஜான்சன்.
இன்று தலையில் கை வைத்து உட்கார்ந்தவனை கேள்!
நேற்று கையில் தலை வைத்து படுத்திருந்தேன் என்பான்.
இன்று இப்பொழுது என செயலாற்றில் இறங்கியவர்களே
என்றும் எப்பொழுதும் வரலாற்றில் ஏறினார்கள்.
படிப்பதற்காக எல்லா சந்தர்ப்பங்களையும்
இணைக்கத் தயாராக இருங்கள்.
எந்த சந்தர்ப்பத்திற்காகவும் படிப்பை
இழக்கத் தயாராகி விடாதீர்கள்!
எனில்
நீங்கள் எங்கிருந்து வந்தாலும்
எங்கு வேண்டுமானாலும் போகலாம்
”இறைவன் மனிதர்களுக்குச் சிறிதும் அநீதி இழைப்பதில்லை.
ஆனால் மனிதர்கள்தான் தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொள்கிறார்கள்.”
-நபிகள் நாயகம்
”காதலிக்கலாமா என்று சிந்திப்பவர்கள்,
சன்யாசம் வாங்கிக் கொள்ளலாமா என்று யோசிப்பவர்கள்,
தற்கொலை செய்து கொள்ளலாமா என்று ஆராய்பவர்கள் எல்லாரும் ஒரே ரகம். நினைப்போடு சரி”
”நீர் அமைதியாக இருப்பதால் முதலைகள் இல்லையென்று நினைத்து விடாதே”
ஒரு கடிகாரம் கொண்டோனுக்கு சரியான நேரம் தெரியும்.
இரு கடிகாரம் கொண்டோனுக்கு எப்போதுமே சந்தேகம் தான்.
எங்கே விழுந்தாயென பார்க்காதே, எங்கே வழுக்கினாயென பார்.
பின்கண்ணாடி வழி நடந்ததை பார்ப்பதைவிட, முன்கண்ணாடி வழி முன்னே வருவதை பார்.
நீ சொல்வதை வேண்டுமானால் சந்தேகப்படுவார்கள். ஆனால் நீ செய்வதை மக்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.
முன்போக்கி செல்லும் போது கனிவாயிரு. ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்..
ரொம்ப விளக்க வேண்டியதில்லை. நண்பர்களென்றால் நம்புவார்கள். எதிரிகளென்றால் எப்படியும் நம்பப்போகிறதில்லை.
யாருக்காவது குழிதோண்டப் போகிறாயா? இரண்டாகத் தோண்டு. உனக்கும் சேர்த்து.
மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவையல்ல.
பயமில்லாமை தைரியமல்ல. பயநேரங்களிலும் சரியாய் செயல்புரிவதே நிஜ தைரியம்.
அப்பன் எத்தனை உயரமாயிருந்தாலென்ன நீ உயர நீ தான் வளரவேண்டும்
எதிர்காலத்தை சரியாக கணிக்க அதை நாமே உருவாக்க வேண்டும்
”ஒரு மலரையோ, ஒரு பட்டுப் பூச்சியையோ
அதன் தோற்றத்தைக் கொண்டு மதிப்பிட்டு விடலாம்.
ஆனால் மனிதப்பிறவியை அவ்வாறு மதிப்பிட இயலாது!”
-தாகூர்
”காலம்….!! விலைக்குக் கிட்டாது!
விரும்பியும் திரும்பாது!
”தூய்மை, பொறுமை, விடாமுயற்சி
ஆகிய இம்மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும்"
-விவேகானந்தர்
”புத்தகங்களை யாருக்கும் இரவல் தராதீர்கள்.
அது உங்களுக்குதிரும்ப வராது.
என்னிடம் உள்ள புத்தகங்கள் யாவும்
என் நண்பர்கள் எனக்கு இரவல் தந்தது தான்”
-பிரெஞ்சு நாவலாசிரியர் அனடோல் பிரான்ஸ்.
இவர் சுயசரிதை புத்தகத்தின் பெயர் “என் நண்பனின் புத்தகம்”.
நேற்று அசாத்தியமாய் இருந்தது,
இன்று சாத்தியமாகும் அற்புதத்தை
ஒவ்வொரு நாளும் நாம் கண்டு வருகிறோம் - காந்திஜி
உனக்கு நிறைய தெரிந்திருந்தாலும்
உன் தொப்பியிடமும் யோசனை கேள்
எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம்.
ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்.
உலகத்திலே வந்து இருக்கிறது கொஞ்சகாலம்.
ஈசல் மழைக்கு வந்து மடியறாப்பல.
அந்தப் பொழுதை அடிச்சுக் கோச்சுக் கிட்டுப் போக்கனுமா?
அடிச்சு யாரைத் திருத்த முடியும்?
-முள்முடியில் தி.ஜானகிராமன்
நேற்றைய பொழுதும் நிஜமில்லை
நாளைய பொழுதும் நிச்சயமில்லை
இன்றைக்கு மட்டுமே நம் கையில்
ஓங்கி ஒருவனை அறைந்தால் என்ன,
கடனை நாமம் சாத்தினால் என்ன? எல்லாம் ஒன்றுதான்.
-முள்முடியில் தி.ஜானகிராமன்
ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும்,
துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது.
ஆணுக்கு தூக்கம் ஆறுமணி நேரம்.
பெண்ணுக்கு தூக்கம் ஏழு மணி நேரம்.
முட்டாளுக்கு தூக்கம் எட்டு மணிநேரம்.
-நெப்போலியன்.
சிந்திக்காதவன் முட்டாள்
சிந்திக்கத் துணியாதவன் கோழை
சிந்திக்க மறுப்பவன் பிடிவாதக்காரன் -டிரம்மண்ட்
ஓட்டப் பந்தயத்திற்கு ஆயத்தமாக நிற்பவர்களிலே எவனாவது, “இது நல்ல காலந்தானா!” என்று சிந்திப்பானா? பந்தயத்தொடக்கத்திற்கான மணியொலி எப்போது காதில் விழும் என்றல்லவா காத்திருப்பான்?
வாழ்க்கை என்பது
ஒரு சந்தர்ப்பம் - நழுவ விடாதிருங்கள்
ஒரு கடமை - நிறைவேற்றுங்கள்
ஒரு இலட்சியம் - சாதியுங்கள்
ஒரு சோகம் - தாங்கிக்கொள்ளுங்கள்
ஒரு போராட்டம் - வென்றுகாட்டுங்கள்
ஒரு பயணம் - நடத்தி முடியுங்கள்
நீ அச்சத்தில் கொடுத்தால் அது பயதானம்
நாளை எதிர்பார்த்து கொடுத்தால் அது அர்த்ததானம்
இன்னோர் உலகில் உதவும் என கொடுத்தால் அது தர்மதானம்
எதுவும் எதிர்பாராமல் கொடுப்பது காருண்யதானம் அதுதான் நம்மில் யாவர்க்கும் வேண்டும்.
ஏதாவது செய் ஏதாவது செய்
சக்தியற்று செய்ய தவறினால்
உன் மனம் உன்னைச் சும்மா விடாது.
சரித்திரம் இலக்கணம் இரண்டும் உன்னை
பேடி என்றும்
வீரியமிழந்தவன் என்றும்
குத்திக்காட்டும்.
ஏதாவது செய்.
நம் புத்திக்கு எட்டாத வழிகள் நான்குண்டு.
1.வானத்திலே கழுகினுடைய வழி,
2.பாறைகளின் மேலே பாம்பினுடைய வழி,
3.நடுக்கடலிலே கப்பலினுடைய வழி,
4.ஒரு பெண்ணை காதலித்த மனுஷனுடைய வழி.
போதும் என்று சொல்லாத நான்குமுண்டு.
1.நீத்தார் உலகம்,
2.மலட்டுக் கர்ப்பம்,
3.தண்ணீரால் திருப்தியடையாத நிலம்,
4.போதுமென்று சொல்லாத நெருப்பு.
பூமி தாங்கமாட்டாத நான்குண்டு.
1.அரசனாக மாறிய அடிமையினிமித்தமும்,
2.விரும்பின பதார்த்தங்களெல்லாம் கிடைத்த முட்டாளினிமித்தமும்,
3.பகைக்கப்படத்தக்கவளாயிருந்தும், புருஷனுக்கு வாழ்க்கைப்பட்ட பெண்ணினிமித்தமும்,
4.தன் எஜமானிக்குப் பதிலாக இல்லாளாகும் அடிமைப்பெண்ணினிமித்தமுமே.
பூமியில் சிறியவைகளாயிருந்தும், மகா ஞானமுள்ளவைகள் நான்குண்டு.
1.அற்பமான ஜெந்துவாயிருந்தும், கோடைகாலத்திலே தங்கள் ஆகாரத்தைச் சம்பாதிக்கிற எறும்பு,
2.சக்தியற்ற ஜெந்துவாயிருந்தும், தங்கள் கூடுகளை மலையினிலே தோண்டிவைக்கும் குழிமுயல்கள்,
3.ராஜா இல்லாதிருந்தும், சாரை சாரையாய்ப் புறப்படுகிற வெட்டுக்கிளிகள்,
4.தன் கைகளினால் வலையைப் பின்னி, அரசர்கள் அரமனைகளிலிருக்கிற சிலந்திப் பூச்சி.
விநோத நடையுள்ளவைகள் நாலுமுண்டு.
1.மிருகங்களில் சக்திவாய்ந்ததும் ஒன்றுக்கும் பின்னிடையாததுமாகிய சிங்கம்,
2.போர்க்குதிரை,
3.வெள்ளாட்டுக்கடா,
4.ஒருவரும் எதிர்க்கக் கூடாத ராஜா.
எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன.
ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.
வள்ளலுக்கு பொன் துரும்பு.
சூரனுக்கு சேர்ந்த மரணம் துரும்பு.
அறிவோர்க்கு பெண் துரும்பு.
துறவோர்க்கு வேந்தன் துரும்பு.
ஒரே குறிக்கோள்
எல்லையற்ற ஊக்கம்
தளர்வில்லாத நெஞ்சுறுதி
சளைக்காத உழைப்பு
நேர்மையான பாதை -வெற்றி
கிடைக்காமலா போய்விடும்?
ஒரு நாளைக்கு ஒரு வேளை உண்பவன் யோகி
ஒரு நாளைக்கு இரு வேளை உண்பவன் போகி (போஜன பிரியன்)
ஒரு நாளைக்கு மூவேளை உண்பவன் ரோகி (நோயாளி)
ஒரு நாளைக்கு நாவேளை உண்பவன் துரோகி
வெற்றிபெற காது கொடுத்து கேளுங்கள்;
குறைவாக பேசுங்கள்;
நிறைய நேரம் செயல்படுங்கள்.
-ஏ.வான்பர்ன்
மிகக் கடினமானவை மூன்றுண்டு
1. இரகசியத்தை காப்பது.
2. இழைக்கப்பட்ட தீங்கை மறப்பது.
3. ஓய்வு நேரத்தை உயர்ந்த வழியில் பயன்படுத்துவது.
நன்றி காட்டுவது மூன்று வகையிலாகும்
1. இதயத்தால் உணர்தல்.
2. சொற்களால் தெரிவித்தல்.
3. பதிலுக்கு உதவி செய்தல்.
பெண்மையை காக்க மூன்றுண்டு
1. அடக்கம்.
2. உண்மை.
3. கற்பு.
மகிழ்ச்சியான வாழ்க்கைக்குரியவை மூன்றுண்டு
1. சென்றதை மறப்பது.
2. நிகழ்காலத்தை நேர்வழியில் செலுத்துவது.
3. வருங்காலத்தைப் பற்றிச் சிந்திப்பது.
இழப்பு மூன்று வகையிலுண்டு
1. சமையல் அமையாவிட்டால் ஒருநாள் இழப்பு.
2. அறுவடை சிறக்காவிடில் ஓராண்டு இழப்பு.
3. திருமணம் பொருந்தாவிட்டால் வாழ்நாள் முழுவதும் இழப்பு.
உயர்ந்த மனிதனின் வாழ்வு மூன்று வகையில் இருக்கும்
1. அவன் ஒழுக்கத்தோடிருப்பதால் கவலையற்றிருப்பான்.
2. அவன் அறிவாளியாயிருப்பதால் குழப்பங்களற்றிருப்பான்.
3. அவன் துணிவாக இருப்பதால் அச்சமின்றியிருப்பான்.
நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”
-சர் ஐசக் நியூட்டன்
பேச்சாளர்களே!
பார்க்கும்படியாக நில்லுங்கள்
கேட்கும்படியாக பேசுங்கள்
விரும்பும்படியாக உட்காருங்கள்
சந்தத்தை நம்பி கவிதை இருக்கலாம்,
தந்தத்தை நம்பி யானைஇருக்கலாம்,
சொந்தத்தை நம்பி நீ இருக்காதே,
பந்தத்தை நம்பி மதிப்பை இழக்காதே.
துன்பமும் வேதனையும் என உலகம்
ஆனாலும்….
பூக்கள் மலரும்
- ஐஸா
விட்டுக் கொடுங்கள்; விருப்பங்கள் நிறைவேறும்.
தட்டிக் கொடுங்கள்; தவறுகள் குறையும்.
மனம் விட்டுப் பேசுங்கள்; அன்பு பெருகும்.
மரம் சும்மா இருந்தாலும் காற்று அதை சும்மா இருக்கவிடுவதில்லை-சீனப்பெரும் தலைவர் மாவோ
தாயோடு அறுசுவை போம்.
தந்தையோடு கல்வி போம்.
சேயோடு தான் பெற்ற செல்வம் போம்.
உறவொடு வாழ்வு உற்றார் உடன் போம்.
உடன் பிறப்பால் தோள்வலி போம்.
மனைவியோடு எவையும் போம்.
பற்றற்றவர்களாக இருங்கள்.அதற்காக காட்டுக்குள் சென்றுவிடாதீர்கள்-மாத்யூ கிரீன்
நண்பனே!
நாளைய மழை அறியும் எறும்பாய் இரு
நேற்றைய மழைக்கு இன்று குடை பிடிக்கும்
காளானாய் இராதே!
எல்லோரும் தம்மை விட்டு
விட்டு வேறுயாரையோ
சீர்திருத்த முயலுகிறார்கள்
- தாகூர்
செயல் புரியாத மனிதனுக்கு
தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது
- சபாகிளிஸ்
Best Blogger Gadgets
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக