பொன் மொழிகள்- பழமொழிகள்- ஆன்மீக மொழிகள் -2

வாழ்வது
சிலகாலம்
உள்ளம் அழுதிடினும்
உதடு சிரிக்கட்டுமே!

”நாம் இந்தியாவுக்கு மிகவும் கடன் பட்டுள்ளோம். எண்களைக் கொண்டு எண்ணச் சொல்லிக்
கொடுத்தவர்கள் அவர்கள்தாம். அது இன்றி நாம் மிகப்பெரிய அறிவியல்
கண்டுபிடிப்புகளையெல்லாம் கண்டுபிடித்திருக்க இயலாது”
-ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை.
முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.

வாழ்க்கை!!
ஓராயிரம் கற்பனைகளும்
ஒன்று இரண்டு நிஜங்களும்

என்றும் நினைவில் கொள்.
மனிதனாகப் பிறந்தவன் பயனின்றி அழியக்கூடாது
-கார்ல் மார்க்ஸ்

தோழர்களே!
பயணம் போவோம்!
நாட்களை நம்பியல்ல,
நம்மிரு தோள்களை நம்பி!

சிறு பாறைகளை
அகற்றிவிட்டால்
சிற்றோடைக்கு
சலசலக்கும்
இன்னோசை உண்டோ?

காண்பது அனைத்தையும்
சந்தேகம் கொண்டு பார்
-லெனின்

செய்ய முடிந்தவன் சாதிக்கிறான்,
செய்ய முடியாதவன் போதிக்கிறான்.
-பெர்னாட்ஷா

வெற்றியை நோக்கிப் பற!
பறக்க முடியாவிட்டால் ஓடு!
ஓட முடியாவிட்டால் நட!
நடக்கவும் முடியாவிட்டால் ஊர்ந்து செல்.
ஆனால், எப்படியாவது நகர்ந்துகொண்டே இரு.

நான் சாக்கடையில்
விழுந்து கிடக்கிறேன்.
என் கண்கள்
நட்சத்திரங்களில்.

ஒரு மனிதனின் வாழ்க்கையில்
நன்மை செய்தலே
உண்மையான இன்பம் அளிக்கும் செயல்.
- சர் பிலிப்சிட்னி

"ஒரு நல்ல நூல்
ஒரு நல்ல மனிதனுக்கு நல்ல சொத்தாகும்.
- வில்லியம் ஹாஸ்விட்

"மிக அற்பமான விஷயங்களைப் பற்றி
அதிகமாக அறிந்து கொள்கிறவனே நிபுணன் ஆகிறான்.
- சாமுவேல் பட்லர்.

"மகிழ்ச்சி என்பது நல்ல ஆரோக்கியமும்
குறைந்த ஞாபக சக்தியையும்விட வேறொன்றுமில்லை."
-ஆல்பர்ட் ஸ்வேசர்

எண்ணத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் எண்ணங்கள்தான் சொற்களாகின்றன.
சொல்லில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் சொற்கள்தான் செயல்களாகின்றன.
செயலில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் செயல்கள்தான் பழக்கங்களாகின்றன.
பழக்கத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் பழக்கங்கள்தான் ஒழுக்கங்களாகின்றன.
ஒழுக்கத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் ஒழுக்கம்தான் உங்கள் வாழ்வை வடிவமைக்கின்றது!”
-அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

கடுமையான கஞ்சத்தனம்
தகுதியற்ற தற்பெருமை
எல்லையற்ற பேராசை
இந்தமூன்றும் மனிதனை நாசமாக்கிவிடும்
-முகமதுநபி

வாழ்க்கையில் வெற்றி பெற மூன்று வழிகள் உள்ளன.
பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.
பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்
பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.
-வில்லியம் ஷேக்ஸ்பியர்

வீட்டுக்குள் இருக்கும் போது
ஹிந்து, முஸ்லீம், கிறிஸ்டியனாக இரு
வெளியில் வரும் போது மனிதனாக இரு.

தங்கள் கால்களால் பறவை சிக்கிக் கொள்ளும்;
தன் நாவினால் மனிதன் சிக்கிக் கொள்வான்
-தாமஸ் புல்லர்

எல்லோரையும் நம்புவது அபாயகரமானது.
ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது
- ஆப்ரகாம் லிங்கன்

பேசும்முன் கேளுங்கள்,
எழுதுமுன் யோசியுங்கள்,
செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்

உதவும் கரங்கள்
ஜெபிக்கும் உதடுகளைவிடச் சிறந்தது.
- அன்னை தெரஸா.

என்னால் முடியும் என்பது தன்னம்பிக்கை.
என்னால் மட்டுமே முடியும் என்பது அகம்பாவம்.

கற்றுக்கொள்ள வேண்டுமா? முதலில் அறிந்ததை சொல்லிக்கொடு!! கற்றுக்கொள்வாய்!!!
பெற்றுக்கொள்ள வேண்டுமா? முதலில் முடிந்ததை அள்ளிக்கொடு!! பெற்றுக்கொள்வாய்!!!

முயலும் வெல்லும்!
ஆமையும் வெல்லும்!!
முயலாமை வெல்லாது!!!

சுவர்க்கத்தில் என்னைச்
சிறை வைத்தாலும்,
நான் அதன் பளிங்குச் சுவர்களைத்
தாண்டி வெளியேறவே
விரும்புவேன். எனக்குச் சுதந்திரமே, தேவை - டிரைடன்

ஞானமே முக்கியம்,
ஞானத்தைச் சம்பாதி;
என்னத்தைச் சம்பாதித்தாலும்
புத்தியைச் சம்பாதித்துக்கொள்.
-பைபிள்

மனிதனின் மனசாட்சி
தெய்வத்தின் குரல்
-பைரன்

ஒரே சமயத்தில் இரண்டு வேலை செய்ய நம்மில் பலருக்குத் தெரியும்.
ஒரு சமயத்தில் ஒரே ஒரு வேலை செய்வதுதான் கடினமானது.
- மெக்லாலின்.

நட்பு என்பதும் நம்பிக்கை
கற்பு என்பதும் நம்பிக்கை
முயற்சி என்பதும் நம்பிக்கை
நாம் மூச்சு விடுவதும் நம்பிக்கை
-கவிஞர் வைரமுத்து

எவரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்;
எதிர்பார்த்தால் இறுதிவரை
எதையும் சாதிக்காமலே போய் விடுவீர்கள்!
-எட்மண்ட் பர்சி

மரியாதைக்கு விலை கிடையாது.
ஆனால் அது அநேகரை விலைக்கு வாங்கும்
-மாண்டேகு

ந‌ல்ல‌வ‌னுக்கு நலம் ந‌ட‌க்கும்
என மட்டும் ந‌ம்பாது
வ‌ல்ல‌வனாயும் வாழ்ந்துவிடு பாப்பா
-பாரதியார்

“ஊக்குவிக்க ஆளிருந்தால்
ஊக்கு விற்கும் ஆள் கூடத்
தேக்கு விற்பான்!”
-கவிஞர் வாலி

ஓடத் தொடங்குமுன்
நடக்க பழகிக்கொள்வோம்.

ஒரு விளக்கு இன்னொரு விளக்கை
ஏற்றுவதால் அதற்கு இழப்பு ஒன்றும் இல்லை.

ஒருவன் கற்பிக்கும் போது
இருவர் கற்றுக்கொள்கின்றனர்.
-ராபர்ட் ஹாஃப்

புற்கள் தாக்குபிடிக்கும்
புயலில் புன்னைமரங்கள் வீழ்ந்துவிடுகின்றன.

வெண்ணெயை உருக்கும்
அதே கதிரவன் தான்
களிமண்ணை இறுக்கவும் செய்கின்றது.

அன்பாயிருங்க,
அதுக்குனு அடிமையாயிடாதீங்க
இரக்கம் காட்டுங்க,
பாத்து ஏமாந்திடாதீங்க.

நீ திருந்து..
நாடே திருந்தும்…

தெய்வம் காட்டுமே தவிர
ஊட்டாது.

God helps those who help themselves

அதிக உயரங்களை எட்டுவதற்கு உதவும் நண்பரைப் பெற்றிருப்பது சிறந்தது.
ஆனால், அதிக உயரங்களிலிருந்து விழும்போது
தாங்கிப் பிடிக்கும் நண்பரைப் பெற்றிருப்பது,
கடவுளின் பரிசு.

நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது, நீ யாரை விரும்புகிறாயோ
அவரை நினைத்துக்கொள்வாய்!
நீ துயரத்தில் இருக்கும்போது,உன்னை யார் விரும்புகிறாரோ
அவரை நினைத்துக்கொள்வாய்!

வியர்வைத் துளிகளும் கண்ணீர்த் துளிகளும் உப்பாக இருக்கலாம்.
ஆனால், அவை தான் வாழ்வை இனிமையாக மாற்றும்.

"நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்…"
"நீ எதை அகத்தால் பார்க்கிறாயோ.. அதுவே புறமாக பரிணமிக்கிறது……."
"உன் மனத்தின் உயரமே… உன் வாழ்க்கையின் உயரம்…"

நீ மற்றவருக்கு வழிகாட்டி ஆவதற்காகப்
பிறந்திருக்கிறாய்.
ஏன் மற்றவர்களிடம் உன் வழிகாட்டியைத்
தேடிக் கொண்டிருக்கிறாய்?
இந்த உலகம்
உன் வெற்றிக் கதையைப் படிக்கக்
காத்துக்கொண்டிருக்கிறது.

வெற்றி என்பது என்ன?
உங்கள் கையொப்பம், ஆட்டோ கிராப் ஆனால் அதுவே வெற்றி.

வெற்றிக்குப் பிறகு
தொடர்ந்து உழைப்பதை நிறுத்த வேண்டாம்;
தோல்விக்குப் பிறகு
தொடர்ந்து முயல்வதை நிறுத்த வேண்டாம்!

நண்பனை காணாவிடத்திலும்,
ஆசானை எவிடத்திலும்,
மனையாளை பஞ்சணையிலும்,
வேலையாளை வேலை முடிவிலும் போற்றுக.

ஒன்றுக்குச் சான்றுகள் இல்லாமை என்பது
அது இல்லாமைக்குச் சான்றில்லை

"வலுவான விதியே!
ஒரே ஒரு கோடைகாலம் எனக்கு அளி!
மெலிதான கானங்கள் நிறைந்த ஒரே ஒரு
வசந்தம் எனக்குக் கொடு
அந்த கானங்களை நிரப்பிக் கொண்டபின்
விருப்பத்தோடு என் இதயம்
இறக்கத் தயார்”
-ஃப்ரெட்ரிக் ஹோல்டர்வன்

இன்பத்தில் சிரிப்பவன் ஏமாளி
கண்பார்த்து சிரிப்பவன் காரியவாதி
கோபத்தில் சிரிப்பவன் சிந்தனையாளன்
கொடுக்கும்போது சிரிப்பவன் சூழ்ச்சிக்காரன்

முதியோர் சொல்லும்
முதுநெல்லியும்
ஒரே மாதிரி.
முன்பு கசக்கும், பின்பு இனிக்கும்.

மனிதன்
உணவின்றி 40 நாட்களும்
நீரின்றி 3 நாட்களும்
காற்றின்றி 3 நிமிடமும் உயிர் வாழலாம்.
ஆனால் நம்பிக்கையின்றி 3 நொடிகூட வாழ இயலாது.

குழந்தையின் மழலை,
பைத்தியக்காரனின் பிதற்றல்,
மகானின் பொன்மொழி
இவற்றுக்கெல்லாம் பொதுவான ஒரு தன்மை உண்டு.இலேசில் புரியாது.

சிக்கல்கள் என்பவை, ஓடும் ரெயிலிலிருந்து பார்க்கும் மரங்களைப் போன்றவை.
அருகில் போனால் அவை பெரிதாகத் தெரியும்.
அவற்றைக் கடந்து சென்றால்
அவை சிறிதாகிவிடும்.
இதுதான் வாழ்க்கை!

நீங்கள் ஒரு வாய்ப்பைத் தவறவிட்டால்
உங்கள் விழிகளைக் கண்ணீரால் நிரப்பாதீர்கள்!
உங்கள் கண்ணீர்,
உங்கள் முன் உள்ள இன்னொரு வாய்ப்பை மறைத்துவிடும்!
அழகிய புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள்!

இளைஞனே!
ஓடுகின்ற கால்கள்
ஓய்வெடுக்கும் போது
நீ எடுத்துக்கொண்ட பயணம்
முடிந்திருக்க வேண்டும்!
வாழ்ந்த நாட்களை
திரும்பிப் பார்க்கும் போது
உன் பெயரை சிலர்
உச்சரிக்க வேண்டும்!
கோபுரங்களின் அழகை
அஸ்திவாரங்கள் தாங்குவது போல்
நீ பிறந்ததின் பயனை
ஊரறியச் செய்
- யாரோ

ஏதாவது ஒரு தரப்பில் சேருங்கள்.
நடுநிலைமை வகிப்பது அக்கிரமக்காரனுக்குத்தான் உதவியாக இருக்கும்.
அக்கிரமத்துக்கு உள்ளாகிறவனுக்கு உதவாது.
மௌனம் சாதிப்பது கொடியவனுக்கே ஊக்கம் அளிக்கும்.
கொடுமைக்கு உள்ளாகிறவனுக்கு ஊக்கமளிக்காது

- 1986-ல் சமாதான நோபல் பரிசு பெற்ற ஏலிவீசெல்

மனிதனுக்கு சரியான பொது அறிவு இல்லாமல் போகுமானால் எந்த அளவுக்கு விஞ்ஞானம் முன்னேறுகிறதோ அந்த அளவுக்கு அவன் துயரத்தையும் அனுபவிப்பான்.
- ஹோம்ஸ்.

தொலைதூர பார்வைகள் பார்க்கிறேன்.
சிலசமயம் சுவர்களையும் ஊடுருவி காண்கிறேன்.
என் கையின் ரேகைகள் மட்டும் புரியவில்லை இன்னும்.
-வாஜ்பாய்

மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள்

* மிகவும் மதிக்கப்பட வேண்டியவர்கள் - தாய்,தந்தை
* மிக மிக நல்ல நாள் - இன்று
* மிகப் பெரிய வெகுமதி - மன்னிப்பு
* மிகவும் வேண்டியது - பணிவு
* மிகவும் வேண்டாதது - வெறுப்பு
* மிகப் பெரிய தேவை - நம்பிக்கை
* மிகக் கொடிய நோய் - பேராசை
* மிகவும் சுலபமானது - குற்றம் காணல்
* கீழ்த்தரமான விடயம் - பொறாமை
* நம்பக் கூடாதது - வதந்தி
* ஆபத்தை விளைவிப்பது - அதிக பேச்சு
* செய்யக் கூடாதது - நம்பிக்கைத் துரோகம்
* செய்யக் கூடியது - உதவி
* விலக்க வேண்டியது - சோம்பேறித்தனம்
* உயர்வுக்கு வழி - உழைப்பு
* நழுவ விடக் கூடாதது - வாய்ப்பு
* பிரியக் கூடாதது - நட்பு
* மறக்கக் கூடாதது - நன்றி

இவைகளை மனிதர்கள் பின்பற்றினால் இருப்பதை விட சிறப்பாக வாழலாம்

பெண்களை ஆண்கள் காவல் புரிவதால்
பெண்மை தாழ்ந்ததன்று.
வன்மை இரும்புப்பெட்டி மென்மை தங்கத்தை காப்பாற்றுகிறது.
தங்கம் தாழ்ந்ததென உலகம் கருதுகிறதா?
- வாரியார்

Best Blogger Gadgets

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக