"அவுட்சோர்சிங்" முதலிடத்தில் இந்தியா

"அவுட்சோர்சிங்" எனப்படும் அயல்நாட்டு நிறுவனங்களின் பணிகளை குறைந்த கடடணத்திற்கு எடுத்து செய்வதில் பல நாடுகள் களமிறங்கி உள்ளபோதிலும், இந்தியா இன்னமும் அசைக்க முடியாத முதலிடத்திலேயே உள்ளதாக தெரிய வந்துள்ளது.

அண்மையில் அமெரிக்க அரசாங்கம் கூட தங்கள் நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள், தங்களது பணிகளை இந்தியாவுக்கு அவுட்சோர்சிங் முறையில் செய்ய கொடுத்தால், அந்நிறுவனங்களுக்கு வரிசலுகை நிறுத்தப்படும் என்று அறிவித்தது.

இதனால் இந்திய ஐ.டி. நிறுவனங்கள் பாதிக்கப்படுமோ என்ற அச்சம் எழுந்தது.

இது தவிர இந்திய ஐ.டி. நிறுவனங்களைவிட குறைவான செலவில் பணிகளை செய்து தருவதாக கூறி பிலிப்பைன்ஸ், வியட்நாம், இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் உள்ள ஐ.டி. நிறுவனங்களும், பன்னாட்டு நிறுவனங்களை கூவி கூவி அழைத்தன.

இது ஒருபுறம் இருக்க, சீன ஐ.டி. துறையும் கிடு கிடு வளர்ச்சியை எட்டி பிடித்து, இந்திய ஐ.டி. நிறுவனங்களுக்கு கடும் சவாலை ஏற்படுத்தின.

இந்நிலையில் மள மளவென நாலாபுறமும் உருவான போட்டிகளால் இந்திய ஐ.டி. முதலை நிறுவனங்களே சற்று மிரண்டுதான் போயின.

ஆனாலும் இவ்வளவு போட்டிக்கு பின்னரும், "அவுட்சோர்சிங்" பணியை பெறுவதில் இந்தியாவே இன்னமும் அசைக்க முடியாத அளவுக்கு முதலிடத்தில் உள்ளதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

சர்வதேச அளவில், அவுட்சோர்சிங் பணியை அளிக்கும் முன்னணியில் உள்ள முதல் 30 நாடுகளில் உள்ள ஐ.டி. நிறுவனங்களிடம், அவுட்சோர்சிங் பணிகளை அளிப்பதில் சிறந்த நாடு எது என்பதை 10 அம்சங்களின் அடிப்படையில் தேர்வு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதில் உலக அளவில் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள், இந்திய ஐ.டி. நிறுவனங்களையே "அவுட்சோர்சிங்" பணிக்கு தேர்ந்தெடுத்துள்ளனர்.

குறைந்த செலவில், அதே சமயம் திறமையான மற்றும் கச்சிதமான வேலை என்ற அடிப்படையில் அவர்கள் இந்திய ஐ.டி. நிறுவனங்களே சிறந்தவை என்று தேர்ந்தெடுத்துள்ளனர்.

இந்தோனேஷியா,பிலிப்பைன்ஸ் மற்றும் சீனா போன்ற நாடுகளிலுள்ள ஐ.டி. நிறுவனங்கள், இந்திய ஐ.டி. நிறுவனங்களைக் காட்டிலும் குறைச்சலான விலையில் "அவுட்சோர்சிங்" பணிகளை செய்து கொடுக்க தயாராக உள்ளபோதிலும், பணி திறமையில் அந்நிறுவனங்கள் பின்தங்கி விடுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இத்தனைக்கும் இந்திய ஐ.டி. நிறுவனங்கள், பணியாளர்களின் ஊதிய அதிகரிப்பு உள்ளிட்ட வேறு சில பிரச்சனைகளையும் எதிர்கொண்டுள்ளன.ஆனாலும் "அவுட்சோர்சிங்" பணிகளுக்கு பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவையே நாடுகின்றன.

ஆனால் இந்திய நிறுவனங்களின் இந்த "தக்கவைப்பு" திறமை இன்னமும் எத்தனை ஆண்டுகளுக்கு தாக்கு பிடிக்கும் என்பது தெரியவில்லை.

ஏனெனில் அண்டை நாடான சீனாவில் ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார சூழல் மாற்றங்கள் சிறப்பானதிலிருந்து மிக சிறப்பான நிலைக்கும், கலாச்சார மற்றும் போட்டி திறன் நல்லதிலிருந்து சிறப்பான நிலைக்கும் உயர்ந்துள்ளதால், எந்த நேரமும் சீன ஐ.டி. நிறுவனங்கள் இந்தியாவை முந்த வாய்ப்புள்ளது.

எனவே தங்களது முதலிடத்தை தக்கவைத்துக்கொள்ள இந்திய ஐ.டி. நிறுவனங்கள் வேறு வகையான யுக்திகளை நாட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றே கூறலாம்

Best Blogger Gadgets

1 கருத்து :

பெயரில்லா சொன்னது…

அண்டை நாடான சீனாவில் ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார சூழல் மாற்றங்கள் சிறப்பானதிலிருந்து மிக சிறப்பான நிலைக்கும், கலாச்சார மற்றும் போட்டி திறன் நல்லதிலிருந்து சிறப்பான நிலைக்கும் உயர்ந்துள்ளதால், எந்த நேரமும் சீன ஐ.டி. நிறுவனங்கள் இந்தியாவை முந்த வாய்ப்புள்ளது.

கருத்துரையிடுக