அரைவயிற்றுக்குச் சாப்பிடுங்கள். கால் வயிற்றில் தண்ணீரை நிரப்புங்கள். கால் வயிறு காலியாக இருக்கட்டும்.

* சாப்பாடு நம் உடலை மட்டுமின்றி உள்ளத்தையும் வளர்ப்பதாக இருப்பதால் நாம் திட்டமிட்டு அன்றாடச் சாப்பாட்டை கவனமாக அமைத்துக் கொள்ளவேண்டும். நல்ல உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும்.
* மரக்கறி உணவின் சிறப்பு என்னவென்றால் அது நமக்கு சாந்த குணத்தை தருகிறது.
* மரக்கறி உணவிலும் கூட காரம், புளிப்பு முதலியன ராட்சஷ உணர்வைத் தூண்டிவிடக் கூடியவை. பழைய ஆறின உணவு வகைகள் தாம்ச (சோம்பல்) குணத்தை வளர்ப்பவை. பூண்டு, வெங்காயம், முள்ளங்கி, முருங்கை போன்ற உணவுகள் சத்வ குணத்துக்குவிரோதமானவை. இவற்றை தவிர்ப்பது நல்லது.
* ருசிக்காக சாப்பிடும்போது தான் அளவுக்கு அதிகமாக உண்ண வேண்டி வருகிறது. பசி என்ற ஒன்றை நினைவில் நிறுத்தி உண்ணத் தொடங்கினால் சாப்பிடும் அளவில் நிதானத்தைக் கடைபிடிக்கலாம். அஜீரணம், மனதில் அசுத்தம் போன்றவற்றை வரவழைத்துக் கொள்ளாமல் இருப்போம்.
* அரைவயிற்றுக்குச் சாப்பிடுங்கள். கால் வயிற்றில் தண்ணீரை நிரப்புங்கள். கால் வயிறு காலியாக இருக்கட்டும். இதையே வைத்திய சாஸ்திரம், தர்ம சாஸ்திரங்கள் எல்லாம் வலியுறுத்திச் சொல்கின்றன.

Best Blogger Gadgets

1 கருத்து :

பெயரில்லா சொன்னது…

இதையே வைத்திய சாஸ்திரம்?..........

கருத்துரையிடுக