தினம் ஒரு வாழைப்பழம் நோய்களைத் துரத்தும்

தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவதால் அது நம் உடம்பில் நோய் தீர்க்கும் மருந்தாகச் செயல்படுகிறது. விஞ்ஞானிகளும் சத்துணவு நிபுணர்களும் உலகின் மிக உயர்ந்த தரமான உணவு வாழைப்பழம் தான் என்கிறார்கள்.
வாழைப்பழத்தில் உள்ள விட்டமின் சி பல் ஈறுகளையும் எலும்புகளைப் பிணைக்கும் தசை நார்களை உறுதியுடன் வைத்திருக்க உதவுகிறது.
மக்னீசியம், பொட்டாசியம், சோடியம், பொஸ்பரஸ் போன்ற கனியுப்புக்கள் வாழைப்பழத்தில் தாராளமாக இருப்பதால் இரத்த ஓட்டம் தங்குத் தடையின்றிச் சீராக இருக்க உதவுகின்றது. முக்கியமாக இரத்தக் கொதிப்பு ஏற்படாமல் தடுக்கின்றது.
நாம் சாப்பிடும் உணவில் பொட்டாசியமும் சோடியமும் இருந்தால் தான் நம் உடலில் உள்ள நெகிழ்ச்சிப் பொருள்கள் சம நிலையில் இருக்கும். பொட்டாசியம் உப்புக் குறைந்தால் இரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும். நாம் சாப்பிடும் அனைத்துப் பொருள்களிலும் சோடியம் உப்பு இருக்கிறது. ஆனால் பொட்டாசியம் இல்லை. இந்தக் குறையை தினமும் ஒரே ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வருவதன் மூலம் நீக்கி விட முடியும்.
விளையாட்டு வீரர்களின் கடைசி நேர மனநிலையை வெற்றியா தோல்வியா என நிர்ணயிப்பது அதன்படி முழு வேகத்துடன் செயல்படுவது என அனைத்தையும் நிர்ணயிப்பது அவர்களின் உடலில் உள்ள பொட்டாசியம்தான். இதனால் தான் போலும் விளையாட்டு வீரர்கள் குறிப்பாக டென்னிஸ் வீரர்கள் போட்டியின் இடைவேளைகளில் வாழைப்பழம் சாப்பிடுகின்றனர்.

Best Blogger Gadgets

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக