தை பூசம் விளக்கம்

வள்ளல் பெருமான் தை பூச நாளை
ஞானத்தின் வெளிப்புற நாளாக காட்டினார்கள்..
காரணம்
தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் வருகின்ற தினம் மிகவும்
ஒரு சிறப்பு வாய்ந்த தினமாகும்.
தை மாதத்தை மகர மாதம் என்று அழைப்பார்கள்.
மகரம் என்பது முடிந்த நிலையினை குறிப்பது.
அகரம் + உகரம் + மகரம் = ஓம்
தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் வருகின்ற நாள்
சூரியன் உதிக்கின்ற நேரத்தில் சந்திரனும் வானத்தில்
இருக்கும். அப்போது ஞான சபையில் இருந்து
அக்னியான ஜோதி காண்பிக்கப் படும்.
அதாவது சூரிய சந்திர ஜோதியுள் ஜோதி
சந்திரன் என்பது மன அறிவு,
சூரியன் என்பது ஜீவ அறிவு
அக்னி என்பது ஆன்மா அறிவு.
சந்திரன் சூரியனில் அடங்கி
சூரியன் அக்னியில் அடங்கி
அக்னி ஆகாயத்தில் அடங்கும் என்பதே
தை பூசம்.
மனம் ஜீவனில் அடங்கி
ஜீவன் ஆன்மாவில் அடங்கி
ஆன்மா சிவத்துடன் கலந்து விடும்
என்பதை காட்டவே தை பூசம்
நமது வள்ளல் பெருமானால்
அளிக்கப்பட்டது.
மேலும்
தை பூசத்தில் அதி காலை ஜோதி தரிசனம்
மட்டுமே உண்மை தத்துவமாக
வள்ளல் பெருமானால் விளக்கப்பட்டது.
மற்ற மாத பூசங்கள் எல்லாம் பிற்காலத்தில்
ஏற்படுத்தப் பட்டன.

அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு

Best Blogger Gadgets

3 கருத்துகள் :

Sivamjothi சொன்னது…

தை பூசம் வடலூர்
பிப் 6 கொடியேற்றம்
பிப் 7 ஜோதி தரிசனம்
பிப் 9 சித்திவளாகம் திறப்பு!!

கூட்டம் அதிகமாக இருக்கும். சுத்தம் காக்க நம்மால் முடிந்த பணி செய்வோம்!!பிளாஸ்டிக் குப்பைகளை அதிகம் சேராமல் பார்த்து கொள்ளவேண்டும் !!

http://sagakalvi.blogspot.com/2011/10/self-realization.html

அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் சொன்னது…

கடவுள் ஒளியாக இருக்கிறார் என்பதைக் காட்டவே --வடலூரில் சத்திய ஞான சபையை வள்ளலார் தோற்றுவித்தார்கள்.கடவுளைக் காண்பதற்கு நேரம் காலம் கிடையாது ,காலம் கடந்த காண்பதற்கு காலம் கருதுவது ஏன்?அடங்கும் நாள் இல்லாது அமர்ந்தானைக் காண்பதற்கு தொடங்கும் நாள் நல்லது அன்றோ !வல்லவர் எல்லாமும் வல்லாலனைக் காண்பதற்கு நல்ல நாள் எண்ணிய நாள் !தடையாதும் இல்லாத் தலைவனைக் காண்பதற்கு தடையாதும் இல்லை கண்டாய் !

அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் சொன்னது…

கடவுள் ஒளியாக இருக்கிறார் என்பதைக் காட்டவே --வடலூரில் சத்திய ஞான சபையை வள்ளலார் தோற்றுவித்தார்கள்.கடவுளைக் காண்பதற்கு நேரம் காலம் கிடையாது ,காலம் கடந்த கடவுளை காண்பதற்கு காலம் கருதுவது ஏன்?அடங்கும் நாள் இல்லாது அமர்ந்தானைக் காண்பதற்கு தொடங்கும் நாள் நல்லது அன்றோ !வல்லவர் எல்லாமும் வல்லாலனைக் காண்பதற்கு நல்ல நாள் எண்ணிய நாள் !தடையாதும் இல்லாத் தலைவனைக் காண்பதற்கு தடையாதும் இல்லை கண்டாய் !

கருத்துரையிடுக