நமது தமிழ் மொழி மட்டுமே ஞானத்தை பெற வழிகாட்டும் மொழி.

.
உலகின் முதல் மொழியாம் தமிழுக்கு பல சிறப்புகள் உள்ளன.
அதில் முக்கியமானது சாகா கல்வியை தெரிவிக்கும்
உலகின் ஒரே மொழி தமிழ் மட்டுமே.
மேலும் தமிழில் மட்டுமே சாகா கல்வியை பற்றிய
எழுத்து வடிவுடன் கூடிய பொருள் தரும் வார்த்தைகள் உள்ளன.
அதற்க்கு இணையான வார்த்தைகள் ஓரளவு சமஸ்கிருதத்தில் உள்ளன.
ஆனால் அனைத்தும் மறைபொருளாக அனைவரும்
புரிந்து கொள்ளும் விதத்தில் அமையாமல் ஒரு சிலருக்கு மட்டுமே
புரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.


அதே போல் ஞான ஆராய்ச்சியில் தமிழ் மொழியை போல்
ஞானிகளால் ஆராய்ந்து எழுதப்பட்ட புத்தகங்கள்
பாடல்கள் வேறு எந்த மொழியிலும் இல்லை என்பதை
உறுதியாக கூறலாம்.


ஆகவேதான் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே
கயிலையிலிருந்து வந்த அகத்தியர் சுப்ரமணிய சித்தரிடம்
தமிழ் கற்று சித்தர் நிலையினை அடைந்தார்.
மேலும் போகர் சீன தேசத்தவர் என்றும்
கோரக்கர் வட நாட்டை சேர்ந்தவர் என்றும்
வரலாறுகள் தெரிவிக்கின்றன.
மேலும் நிறைய சித்தர்கள் வெளி நாடுகளில் இருந்து
தமிழகம் வந்து தமிழ் கற்று தமிழில் மட்டுமே உள்ள
சாகா கல்வியை கற்று சித்தர் நிலை அடைந்தார்கள்.


இன்றைக்கு நம்மில் பலர் எனக்கு தமிழ் எழுத படிக்க தெரியாது
என்று தம்மை பற்றி பெருமை பட்டு கொள்கின்றார்கள்.
இது உண்மையில் மிகவும் கேவலமான நிலை ஆகும்.
தமிழில் உள்ள ஞான கருத்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்
என்ற நினைப்பு வந்த உடன் அதன் உண்மை பொருளை
தமிழ் மொழியிலேயே படித்தால்தான் உண்மை விளங்கும்.
அதை விடுத்து மொழி மாற்றம் செய்து படித்தால்
அதில் நிறைய பிழைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
முதலில் மொழி மாற்றம் செய்பவர் அதனுடைய
உண்மை பொருளை புரிந்தவராக இருக்க வேண்டும்.
ஞான கருத்துக்களை எழுதியவரின் ஞான நிலையினை
உணர்ந்தவர் மட்டுமே அதை சிறப்பாக மொழி மாற்றம்
செய்ய இயலும். ஏதோ எனக்கு தெரிந்த வரையில்
மொழி மாற்றம் செய்கிறேன் என்று மொழி மாற்றம் செய்பவர்களால்
அவர் என்ன புரிந்து கொண்டாரோ அதைதான் கருத்தாக எழுதுவார்.
அடுத்து மொழி மாற்றம் செய்யப்படும் மொழியில் அதற்கு இணையான
சொற்கள் இருந்தால் மட்டுமே உண்மையான பொருள் உள்ள
மொழி மாற்றமாக அமையும்.


இன்றைக்கு ஆங்கிலம் உலக மொழியாக ஆக்கப் பட்டு விட்டது.
அது உலகின் துரதிர்ஷ்டமே. ஆங்கிலம் என்பது
பிச்சைகாரரின் பாத்திரத்தில் உள்ள உணவு போன்றது.
காரணம் அந்த மொழியில் உள்ள வார்த்தைகளில்
பெரும்பாலானவை வேறு மொழிகளில் இருந்து இரவல் பெறப்பட்டதுதான்.
அந்த மொழிக்கென்று எந்த சிறப்பும் கிடையாது.
அந்த மொழியின் எழுது உச்சரிப்புக்கும் அதன் வார்த்தைகளின் உச்சரிப்புக்கும்
சம்பந்தமே இருக்காது. உச்சரிப்பை அவர்கள் இஷ்டத்திற்கு அமைத்திருக்கிறார்கள்.
உதாரணத்திற்கு
நமது தமிழில் அன்பு என்பதை அ + ன் + பு (ப்+ உ) என்று எழுதுகிறோம்.
இதை நாமே நினைத்தாலும் வேறு உச்சரிப்புடன் படிக்க முடியாது.
ஆனால் ஆங்கிலத்தில் அதே அன்பு என்ற வார்த்தையை
LOVE என்று அழைக்கிறார்கள்
இதை எழுதும் போது
L+O+V+E என்று எழுதுகிறார்கள்.
இதை உச்சரிக்கும்போது எல்ஒவிஇ என்று தான் உச்சரிக்க வேண்டும்.
ஆனால் இவர்கள் இதை லவ் என்று உச்சரிக்கிறார்கள்.
இதுபோல் அவர்கள் மொழியில் உள்ள வார்த்தைகள் எல்லாமே
வார்த்தை உச்சரிப்பிற்கும் எழுத்து உச்சரிப்பிற்கும் சம்பந்தமே இருக்காது.
மேலும் தமிழில் உள்ள அ என்ற எழுத்துக்கு இணையாக A என்ற
எழுத்து பயன் படுத்தப்படுகிறது. ஆனால் அதை எ என்று உச்சரிக்கிறார்கள்.
இப்படி எழுது உச்சரிப்பிற்கும் வார்த்தை உச்சரிப்பிற்கும் நிறைய வேறுபாடுகள்
உள்ள மொழி உலக மொழியாக மாறியதுடன்
நம்மில் சிலர் நான் ஆங்கிலத்தில் புலமை பெற்றவன்
ஆதலால் நான் மிகுந்த அறிவாளி என்று நினைத்து கொள்கின்றார்கள்.


உண்மையில் ஆங்கில மொழி அறிவு என்பது
ஒரு மொழியில் பெற்ற மொழி அறிவு மட்டுமே.
அது ஒருவரின் அறிவை வெளிப்படுத்துவதாக கொள்ள முடியாது.


ஆகவே ஒரு மொழியின் ஞானத்தை கற்க வேண்டும் என்றால்
அந்த மொழியை முதலில் கற்றால் மட்டுமே
அந்த மொழியில் கூறப் பட்டுள்ள ஞானத்தை முழுமையாக
உணரவும் ஞானத்தை அடையவும் முடியும்.


நமது தமிழ் மொழி மட்டுமே ஞானத்தை பெற வழிகாட்டும் மொழி.


ஆகவே ஞானம் பெற நாம் அனைவரும் தமிழில் உணர்ந்து ஞானம் பெறுவோம்.


அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு.


--

Best Blogger Gadgets

1 கருத்து :

கிளியனூர் இஸ்மத் சொன்னது…

ஞானக் கருத்துக்களை தமிழில் சொல்லப்பட்டதை போல் வேறு எந்த மொழியிலும் சொல்லப்படவில்லை என்பது முற்றிலும் உண்மை. பார்ஸியிலும் சில ஆழமான ஞானங்கள் சொல்லப்பட்டிருந்தாலும் தமிழில் விளங்குவதைப் போன்று பிற மொழிகளில் எளிமையாக விளங்குவது கடினம்.அதனாலயே நம் நாட்டில் அதிகமான ஞானவான்கள் தோன்ற காரணமாயிருக்கிறார்கள் என்று கருதுகிறேன்.
அருமையான கட்டுரை வாழ்த்துக்கள்.

கருத்துரையிடுக