வள்ளலார் கருத்துக்கள்

1. கருணை நிறைந்தவராயிருங்கள்

இங்கே இறைவன் ஒருவன்தான். இறவாமை கல்விக்குத்தான். மனிதன் இனங்கள் பல கண்டாலும் இறப்பில் எல்லோரும் ஒன்றே.இவர்கள் நிறத்தில் வெளுத்திருந்தாலும் மனத்தே கருத்தவர்கள். வெளியே வெளிச்சம், உள்ளே இருட்டு. இத்தகு மனிதர்கள் வாழும் இந்த உலகத்தைத் திருத்தி இவர்களுக்கு மண்ணிலே விண்ணைக்காட்ட மகேசன் என்னைப் படைத்தான்.தன்னை எத்தனை நிந்தித்துப் பேசியபோதும் இறைவன் இவர்களிடம் தயவாகவே உள்ளான். நான் சூது பேசவில்லை. இவர்களை எனது சுற்றத்தாராகவே எண்ணுகிறேன். இவர்கள் தங்கள் வெற்றான விவாதங்களை விட்டு அந்த மேம்பட்டவனின் அருளைப் போற்றுதல் வேண்டும். காலத்தை வீணில் கழித்திடல் ஆகாது.தாழ்ந்த குலம், உயர்ந்த குலம் என்று தரம் பிரித்து பார்க்கின்றோம். நரை, மரணம், மூப்பு அறியாத நல்லுடம்பைப் பெற்றவரல்லவா நற்குலத்தவர் ஆவார்.கருணை நிறைந்தவராயிருங்கள். அது உங்கள் உள்ளத்தில் ஊற்றாய் பொங்கட்டும்; உடம்பெங்கும் வழிந்தோடட்டும். அடுத்தவர் துன்பத்தைக் காணச் சகியாதவரே கருணைமிக்கவர். அடுத்தவர் படும் இன்னலைத் துடைத்தெறிவதே கருணை உள்ளம்.நான் இறவாத உடம்பு கேட்டேன். இறைவன் எனக்கு உவப்புடன் அளித்தான்.தன்னைப் போலவே பிறரையும் பாவிக்கின்ற மனம் இவர்களிடம் இல்லை. இவர்கள் சக மனிதர்களின் மனதைத் தின்கிறார்கள். சாத்விகமான விலங்குகளின் உடம்பைத் தின்கிறார்கள். இந்தப் புலால் நெறி கண்டல்லவோ என் உள்ளம் வெதும்புகிறது. இவர்களது கொலைவெறி கண்டல்லவோ நான் அஞ்சுகின்றேன்.

2. இடையூறின்றி எதையும் செய்யுங்கள்

அன்பு வெள்ளமாகும். அது ஒருநாள் நம்மை முற்றும் விழுங்கிக் கரை கடந்து போகும்.மறப்பது மனிதரியல்பு, மறக்காதிருப்பது மகத்தான இயல்பு. இங்கே பெற்ற தாயை மகன் மறக்கலாம். பிள்ளையைத் தாய் மறக்கலாம், தாங்கி நிற்கும் உடலை உயிர் மறக்கலாம், தனது ஆதாரமான ஆவியை உடல் மறக்கலாம், நெஞ்சம் கற்றதை மறக்கலாம், ஆனால், தவத்தில் மிக்கார் மனத்தில் உறையும் தலைவனை நாம் மறக்கலாமா?எல்லைகளைக் கட்டியாள எண்ணமில்லை.

3. சாப்பிட மட்டும் தான் விருப்பமா?
தெய்வ வழிபாடு மிக மிக அவசியம் என்று உணர்தல் வேண்டும்.
இல்லாவிட்டால் சமரசம், சன்மார்க்கம், எல்லா உயிர்களும் ஒன்று என்று பேசும் உரையாடல் யாவும் வெறும் பேச்சாக அன்றி, ஒரு செல்லாக் காசுக்கும் உதவாது. பிறருடைய பசியை அகற்றுவதோடு மட்டும் ஒருவனுடைய ஒழுக்கமும் கடமையும் முடிவது கூடாது.
பிறருக்கு ஏற்படும் ஏனைய துன்பங்களைக் களையவும் ஒவ்வொருவரும் உவந்து முன்வர வேண்டும்.

4. வாழ்க்கை ஒரு மாயப்பேழை.

உலகம் பொன்னுக்கும், பொருளுக்கும் முக்கியத்துவம் அளிப்பதாய் இருக்கிறது. யாரையேனும் நாடிச் சென்றால் இந்த ஆள் நம்மிடம் ஏதேனும் பற்றிச் செல்லத்தான் பலகாலும் வந்து கொண்டிருக்கிறானோ என்று கருதிக் கொள்வார்கள். அதன் காரணமாக அலட்சியமாய் நடந்து கொள்ள முற்படுவார்கள்.அடுத்தவர் அணியும் ஆடை அணிகலன்களையும், அவர்தம் நடையின் பாங்கையும் நான் கருத்தூன்றிப் பார்ப்பதில்லை. எனக்குக் கைநீட்டி நடக்கவே மனம் கூசுக..

5. உலகத்துக்காக பிரார்த்திப்போம்.

6. எத்தனை படிகள் இருந்தாலென்ன?

7.படிகளைக்கண்டு மலைக்காதீர்கள்

8. எண்ணங்களை கடவுளிடம் சொல்லுங்க!

10. தானம் கொடுப்போரை தடுப்பது பாவம். .

FROM[ jothi arul ]

Best Blogger Gadgets

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக