ஆன்மீகத்தில் ஈடு பாடு இல்லாதவர்கள்: அடிக்கடி கோவிலுக்கு போய் விழ்ந்து விழ்ந்து சாமி கும்பிடுகிறிர்களே அந்த சாமியை பார்த்ததுண்டா? என்று ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகம் கொண்டவர்களை பார்த்து கேட்பதுண்டு. .அதற்க்கு அவர்கள் மனதில் பக்குவம் இருந்தால் இறைவணை காணலாம் .
அந்த பக்குவம் மற்றும் பக்குவம் அற்ற நிலை எப்படி இருக்கும் என்பதை இங்கே ஒரு பரம பக்தன் கூருவதை பார்ப்போம்.
பக்குவம் என்பது என்ன? ஒரு மனிதன் பக்குவம் அடைவதற்கு முன்பு உள்ள நிலை என்ன? பக்குவம் அடைந்தபின் காணும் நிலை என்ன?
குடத்தில் தண்ணீர் எடுக்கும்போது பக்.... பக்.... என்று சத்தம் உண்டாகிறது குடம் நிரம்பியதும் அந்த சத்தம் நின்றுவிடுகிறது.
தேனியானது மலரின் உள்ளே இருக்கும் தேனை அடையாமல் ,இதழ்களுக்கு வெளியே இருக்கும் வரையில் ரீங்காரம் செய்துகொண்டே பூவை சுற்றிச் சுற்றிச் வரும். ஆனால்,பூவுக்குள் நுழைந்துவிட்டால் சத்தம் செய்யாமல் தேனை குடிக்கும்.
கல்லூரில் படிக்கும்போது ஒரு இளைஞ்சனுக்கு எல்லாமே வேடிக்கையாக தெரிகிறது ,திருமணமாகி இல்லறவாழ்விலே அவனுக்கு ஏற்படும் அனுபவங்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு வேதனை இருப்பது அவனுக்கு புரிகிறது. இளமை பருவத்தில் இறைவனைப் பற்றிய சிந்தனை அர்த்தம் இல்லாததாக தோன்றுகிறது, வாழ்வில் அடிப்பட்டு ,வெந்து ,நொந்து, கடவுளை சரணடையும்போது அவன் வாழும் வாழ்க்கை இந்த பூமியில் தான் நடைபெறுகிறது என்பதை நன்றாக புரிந்துகொள்வான்,
பக்குவம் இல்லாத ஒருவனுக்கு நாத்திகம் ,கிழ்த்தரமான செயல்கள் எல்லாமே அவனுக்கு முதலில் சந்தோஷமாக இருக்கும். பக்குவம் வர வர ,ரத்தம் வற்ற வற்ற மேலே அவன் செய்த செயல்கள் யாவும் எவ்வளவு கிழ்தரமானவை என்று யோசிக்கும்மளவில் அவன் மனம் பக்குவம் அடைகிறது
கல்லூரி மாணவனை படிக்க சொன்னால் காதல் கதையும் ,மர்மக் கதையும் படிப்பதில் அவனுக்கு மிகுந்த ஆவல் ,ஆனால் அவன் வாழ்க்கையில் கஷ்ட்டப்பட்டு துன்பப்பட்டு வருந்தும் காலத்தில்தான் அவனுக்கு வள்ளலார் இயற்றிய திருஅருட்பா என்ற நூலை படிக்கும் எண்ணம் வரும்,
ஒவ்வொரு மனிதனுக்கும் எவ்வாறு பக்குவம் உண்டாகும் என்றால் அவன் பிற உயர்களிடத்தில் அன்பும் தயவும் கொண்டு ஜீவகாருண்யத்தை கடைபிடித்தால் தான் பக்குவம் வரும்
மேலும் அவனுக்கு பேரின்பம் என்ற மேல் வீட்டின் கதவு திறக்கும் ஆகவே அன்பர்களே நாமும் எல்லா உயிர்களிடத்திலும் மனித நேயத்தோடு வாழ்ந்து வந்தால் நமது திருஅருட்பிரகாச வள்ளல் பெருமான் பேரின்ப வீட்டின் உள்ளே அழைத்து பெருவாழ்வில் வாழ செய்வார்
பசித்தவனுக்கு உணவு கொடு அதுவே ஜீவகாருண்யம்
ஜீவகாருண்யமே மோட்சவீட்டீன் திறவுகோல்
என்றும் உங்கள் அபிமானத்துக்குரிய அன்பன்
அ.இளவரசன்
வள்ளலார் உயிர் கொலை தடுப்பு இயக்கம்
நெ,34, அண்ணா தெரு
திருவள்ளுவர் நகர்
ஜமின் பல்லாவரம்
சென்னை-600 043
கைபேசி எண்:9940656549,
Best Blogger Gadgets
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக