வள்ளல்-யார்?

“தோத்திரத்தில் சிறந்தது திருவாசகம்

பாத்திரத்தில் சிறந்தது திருஅருட்பா”

நண்பர்களே, மனிதராய் பிறந்த அனைவருக்குமே பல கேள்விகள் எழுந்து கொண்டே இருக்கும். இது இயற்கையின் கட்டளை.

· தான் யார்? எங்கிருந்து வந்தோம்? எங்கு போக போகிறோம்?

· கடவுள் என்பவர் யார்? அவரை காண முடியுமா?

· உன்னையே நீ அறிவாய் என்கிறார்களே எங்கு அறிவது எப்படி அறிவது?

· உயிர் என்பது என்ன அது எங்கு இருக்கிறது

· ஆன்மா என்பது என்ன அது எங்கு இருக்கிறது

மேற்கண்ட கேள்விகளுக்கு விடை உள்ளதா? ஏன் இதுவரை யாரும் தெளிவாக சொல்லவில்லை?

நாம் இங்கு பகிர்ந்து கொள்ள இருப்பது மேற்கண்ட கேள்விகளுக்கான விடைகளையே. அதற்கு நாம் தேர்ந்தெடுத்தது அருட்பிரகாச வள்ளலார் அவர்களின் முத்துக்களை. ஏன் அவர்?

நண்பர்களே, நாம் அனைவரும் அருட்பிரகாச வள்ளலார் அவர்களின் பால் ஏதோ ஒருவகையில் ஈர்க்கப்பட்டு இன்று ஒன்று கூடி இருக்கிறோம். எத்தனையோ ஞானிகள் தோன்றி ஞானம் வளர்த்த மண் நம் தமிழ்நாடு. திருமூலர், அகத்தியர், அவ்வையார், திருவள்ளுவர், சிவவாக்கியர் இன்னும் பலப்பல ஞானிகள். அப்படி இருக்கையில் ஏன் வள்ளலார்? அவர்க்கு என்ன தனி சிறப்பு அப்படி? அவர் என்ன இனிமையான பாடல்களை தானே பாடி இருக்கிறார். மற்றபடி அப்படி என்ன சாதித்து விட்டார்?

ஆன்மீகத்தில் எந்த அளவு உயரமுடியுமோ அந்த அளவு உயர்ந்து யாராலும் எட்ட முடியாத உச்சத்தை தொட்டவர் அவர். தனது தவத்தினால் இறைவனுக்கு சமமான நிலையை, யாராலும் பெற்றிட முடியாத பேற்றை பெற்றவர் அவர். தனது தூல உடம்பை ஒளி தேகம், பிரணவ தேகம், ஞான தேகம் என மிக உயர்ந்த நிலைக்கு சாகா கலை என்ற தமிழுக்கே உரித்தான கலை மூலம் மாற்றி மரணமில்லா பெருவாழ்வு எய்தியவர். ஆதாரம்?
எத்தனையோ ஞானிகள் பிறந்தனர்; இறந்தனர்; சீவ சமாதி அடைந்தனர்; வெளியோடு வெளியாக கலந்தனர்; தனது உடம்பை சிவலிங்கமாக்கி மறைந்தனர்.

ஆனால் உடம்பையே அழியாது செய்து மிக உயர்ந்த நிலையாகிய ஞான தேகத்திற்கு மாற்றியவர் வள்ளலார் ஒருவரே. அதனாலேயே இவர்க்கு மிக உயர்ந்த இடம். அது சரி, ஞான தேகத்திற்கு மாற்றினார். அதனால் என்ன? இதன் சிறப்பு இப்போது புரியாது. வரும் பதிவுகளில் விளக்குகிறேன்.

பலகோடி இந்திரரும், தேவரும் செய்திடாத மாதவத்தை அவர் செய்திருக்கிறார்.

இவர்க்கு சமமாக நோவாது நோன்பு நோற்றவர், இறைவனின் அருளை இவர்க்கு இணையாக பெற்றவர் வேறு யாரேனும் உளரா என இறைவனை கேக்கிறார்.

இறைவன் பதில் கூறினானா?ஆக இதுவரை தோன்றிய ஞானிகளில் மிக மிக சிறப்பு வாய்ந்தவர் வள்ளலார் அவர்கள். அவரின் பெருமையை தெரிந்து கொண்டு அவரின் தத்துவங்களை ஆராய புகுவோம்.

ஓட்டுப்போட என்னை அழுத்து


Best Blogger Gadgets

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

படிக்க வந்த நண்பர்களெல்லாம் ஒட்டு போட்டுட்டு போங்களே!!

இந்த இடுகை உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்.


தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க உள்ள கருவிபட்டையில் மேல்நோக்கியுள்ள கைவிரலை சொடுக்கவும்