புருவ மத்தி

உண்மையான ஆன்மீக நெறி எப்போதோ மக்களிடம் இருந்து மறைக்கப் பட்டு விட்டது. உண்மையைச் சொல்ல வந்த வேதங்களும் உபநிடதங்களும் சுற்றி சுற்றி வளைத்ததில் திரித்ததில் அதன் கருப்பொருள் காணாமல் போய் விட்டது. அவரவர் அவரற்கு தெரிந்த வரையில் எடுத்துக்கொண்டதில் உண்மை திரிந்து விட்டது. வேதங்களும் உபநிடதங்களும் உண்மையை விட்டு எப்போதோ மாறி சென்று விட்டன. உண்மையை தெரிந்து வைத்திருந்த சித்தர்களோ பரிபாசையில் பேசியே பாடியே மறைத்து விட்டார்கள். அவர்கள் கூறிய ஒரு பரிபாசை சொல் "புருவ மத்தி". இதனை மக்கள் தற்போது எவ்வாறு எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்?

சிகப்பு புள்ளி உள்ளது அல்லவா? அது தானே புருவ மத்தி.இவ்வாறு மறைத்து மறைத்து பேசப்பட்ட காலத்தில் வள்ளலார் அவதரித்தார். எல்லா உண்மைகளையும் போட்டு உடைத்தார். அய்யகோ என்ன செய்வது? கடை விரித்தார் கொள்வாரில்லையே அப்போது?சரி புருவம் எது? வில் போன்று உள்ள இரண்டு வளைவுகள் அல்லவா?

சரி புருவ மத்தி எதுவாக இருக்கும்? புருவத்தின் மத்தி தானே புருவ மத்தியாக இருக்க முடியும்? சிகப்பு பொட்டுவிற்கும் புருவத்திற்கும் என்ன சம்பந்தம் இங்கே?என்னடா இது குழப்புகிறானே? சிகப்பு பொட்டு இருந்த இடத்தை அல்லவா புருவ மத்தி என இது வரை நினைத்து இருந்தோம். இவன் வேறு எதையோ ஒன்றை சொல்கிறானே.ஆஹா இது என்ன? இரண்டு புருவ மத்தியா? ஐயா குழப்பாதீர்கள். உங்கள் குரல் எனக்கு கேட்கிறது! "புருவ மத்தி" என்பது வேறு "நெற்றி மத்தி" என்பது வேறு

ஓட்டுப்போட என்னை அழுத்து


Best Blogger Gadgets

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

படிக்க வந்த நண்பர்களெல்லாம் ஒட்டு போட்டுட்டு போங்களே!!

இந்த இடுகை உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்.


தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க உள்ள கருவிபட்டையில் மேல்நோக்கியுள்ள கைவிரலை சொடுக்கவும்