எவன் செத்தா எனக்கென்னா ..எனக்கு தேவை கரண்ட் தான் என்று நினைப்பவராக நீங்கள் இருந்தால் .. ..பகுதி 1

By,
Thangaraj - mumbai,இந்தியா


யூனியன் கார்பைட் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிப்பு நிறுவனம்..


அந்த கம்பெனி வர்றதுக்கு போபாலில் உள்ள ஒட்டு மொத்த மக்களும் எதிர்த்தார்கள்..ஆனால் அதிகாரிகள் தரப்பிலும்..அரசு தரப்பிலும்..( நாராயணசாமி அல்ல )விஞ்ஞானிகள் தரப்பிலும் அது மிகவும் பாதுகாப்பனதுன்னு சர்டிபிகேட் கொடுக்கப்பட்டு . தொடங்கப்பட்டது..


1984 வருடம் அந்த கம்பெனி வியாபாரம் ..டல்லடிக்க ஆரம்பிச்சதும்..தயாரிப்புகள் நிறுத்தப்பட்டது...60 டன் மீத்தைல் ஐசோ சயனைடு என்கிற வேதிப்பொருள் உற்பத்தி நிறுத்தப்பட்டதால் ஸ்டாக் செய்யப்பட்டது..பத்து டன் அளவுக்கு வைக்கப்பட வேண்டிய ஒரு தொட்டியில் மட்டும் 40 டன் அளவுக்கு நிரப்பி வைக்கப்பட்டது..அந்த தொட்டியின் வெப்பநிலை 11 டிகிரிக்கு கீழாக பராமரிக்கப் படவேண்டும்..ஆனால் பராமரிக்கப்பட்ட வெப்பநிலையோ..20 டிகிரி..

1984 டிசம்பர் 2 தியதி ..அந்த தொழிற்ச்சாலையில் ஹவுஸ் கீப்பிங் பணியின் போது..தவறுதலாக தண்ணீர் அந்த தொட்டிக்குள் பாய்ந்துவிட்டது.. அதனால் வேதி மாற்றத்திற்கு உட்பட்ட மீத்தைல் ஐசோ சயனைடு விஷ வாயுவாக மாறி காற்றில் பரவ ஆரம்பித்தது..அன்றைக்கென்று வேகமாக வீசிய காற்றால் நகர் முழுவதும் பரவ ஆரம்பித்துவிட்டது....


 இந்த வாயுவிற்கு மணமோ..நிறமோ கிடையாது என்பதால் என்னவென்று உணர்வதற்குள்ளாகவே சுவாசித்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுருண்டு விழுந்து செத்தார்கள்..சம்பவம் என்னவென்று அறிவதற்குள்ளாகவே 8000 பேர் மடிந்து போனார்கள்..ஆகா மொத்தத்தில் ஒரு அரசின் கவன குறைவால்..ஒரு நிர்வாகத்தின் கவன குறைவால் ..சில தொழிலாளர்களின் கவனகுறைவால் மொத்தம் இறந்தவர்களின் எண்ணிக்கை 20000 மேல்...பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஐந்து லட்சத்துக்கும் மேல்..


இந்த சம்பவத்திற்குப்பிறகு அங்கு 

------90 சதவிகிதம் பெண்கள் கருப்பை புற்றுநோயாலும்..
------80 சதவிகித பெண்கள் இடுப்பெலும்பு வீக்கத்தாலும்..
------75 சதவிகித பெண்கள் கழுத்தெலும்பு நோயாலும்..
------60 சதவிகித பெண்கள் மற்ற நோயாலும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்..

இப்படி ஒரு சம்பவம் கூடங்குளத்திலும் நடந்துவிடக்கூடாது ..

என்பதுதான் அந்த மக்களின் எதிர்ப்புக்கு காரணம்.. ஏனென்றால் போபால் சம்பவத்திற்கு இன்னும் இழப்பீடு வழங்கப்படவில்லை.. குற்றவாளிகள் தண்டிக்கப்படவுமில்லை என்பதுதான் நடைமுறை உண்மை.. இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் ,

எவன் செத்தா எனக்கென்னா ..எனக்கு தேவை கரண்ட் தான் என்று நினைப்பவராக நீங்கள் இருந்தால் .. 


Best Blogger Gadgets

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக