எவன் செத்தா எனக்கென்னா ..எனக்கு தேவை கரண்ட் தான் என்று நினைப்பவராக நீங்கள் இருந்தால் ..பகுதி 2

    Thangaraj - mumbai,  இந்தியா 
 
அணுஉலை கழிவு ஒரு பெரிய பிரச்சனை.

கூடங்குளம் அணுமின் நிலைய கழிவு ரசியாவுக்கு எடுத்துச் செல்லப்படும் என்றுதான் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

பின்னர் அது இந்தியாவிலேயே மறு சுழற்சி செய்யப்படும் என்றும், கூடங்குளத்திலேயே அதற்கான உலை நிறுவப்படலாம் எனவும் தெரிவித்தனர்.

கூடங்குளம் அணு உலைகள் ஆண்டுக்கு சுமார் 30 டன் யுரேனியத்தை பயன்படுத்தும். ஏறத்தாழ 30 ஆண்டுகள் இயங்கும் போது 900 டன் கழிவு வெளியாகும்.

பயங்கரமான கதிர்வீச்சை வெளியிடும் இந்த கொடிய நச்சை 24,000 ஆண்டுகள் நாம், நமது குழந்தைகள், நமது பேரக்குழந்தைகள் அவரது வழித் தோன்றல்கள் போற்றிப் பாதுகாக்க வேண்டும்.

அபாயகரமான இந்தக் கழிவுகளை தேக்கி வைத்திருப்பதாலும், மறு சுழற்சி செய்வதாலும் நிலத்தடி நீரும், காற்றும் பாதிக்கப்படும். நமது விளை நிலங்களும், பயிர்களும், கால்நடைகளும் பாதிக்கப்படும். அவற்றில் இருந்து பெறப்படுகின்ற பால், காய்கறிகள், பழங்கள் நச்சு உணவுகளாக மாறும்.

அணு உலைகளை குளிர்விக்கும் கதிர்வீச்சு கலந்த நீர் கடலுக்குள் விடப்படுவதால் கடல் நீரின் வெப்ப நிலை அதிகரித்து கதிர்வீச்சால் நச்சாக்கப்பட்டு மீன் வளம் பாதிக்கப்படும். மீனவ மக்கள் ஏழ்மைக்குள்ளும், வறுமைக்குள்ளும் தள்ளப்படுவார்கள். மீனவ மக்களின் மற்றும் உள்ளூர் மக்களின் கடல் உணவு நச்சாகும் போது நமது உணவு பாதுகாப்பு அழிக்கப்படும்.

அணு உலையின் புகை போக்கிகளில் இருந்து வருகின்ற நீராவி, புகை மூலமும், கடல் தண்ணீர் மூலமும் அயோடின் 131, 132, 133, சீசியம் 134, 136, 137 அய்சோடோப்புகள், ஸட்ராண்டியம், டீரிசியம், டெலூரியம், போன்ற கதிர்வீச்சு பொருட்கள் நமது உணவில், குடிதண்ணீரில், சுவாசத்தில், வியர்வையில் கலந்து அணு அணுவாக வதைப்படுவோம்.


நமது குழந்தைகள், பேரக்குழந்தைகள் இந்த நச்சை கொஞ்சம், கொஞ்சமாக நீண்ட நாட்கள் உட்கொண்டு புற்றுநோய், தைராய்டு நோய் போன்ற கொடிய நோய்களுக்கு ஆளாகி உடல் ஊனமுற்ற, மன வளர்ச்சியற்ற குழந்தைகளைப் பெற்று பரிதவிப்பார்கள். 

ஓட்டுப்போட என்னை அழுத்து


Best Blogger Gadgets

1 கருத்து :

வாலிபள் சொன்னது…

தஞ்சை விவசாயிகள் பலர் சங்கம் அமைத்து காவேரி நீரை திறந்து விடவும், அதோடு கூடங்குளம் அணு உலையை வர விடாமல் தடுக்கும் தேச விரோதிகளைக் கைது செய்து விட்டு, அணு உலையை திறக்கவும் வலியுறுத்தியுள்ளான்கள்.
இருந்த விவசாய நிலங்களை ரியல் எஸ்டேட் போட்டு விற்றுவிட்டும், நெல்லைத் தவிர வாழை, தென்னை போன்ற பணப் பயிர்களை பயிரிட்டுள்ள இந்த சுயநலவாதிகளுக்கு காவேரி நீர் வேண்டுமாம்.

கூடங்குளம் போராட்ட மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாத இந்த விவசாயிகளின் கோரிக்கை எனக்கு எரிச்சலையும் கடுப்பையும் ஏற்படுத்தியது.

கூடங்குளம் மக்களின் வயிற்றில் அடிப்பது போன்று போராடுகின்றனர் இந்த போலி (ரியல் எஸ்டேட்) விவசாயிகள்.

இந்த விவசாயிகளின் வயிற்றில் அடிப்பது போல போராடுகின்றனர் கர்நாடகா மக்கள்.

கருத்துரையிடுக

படிக்க வந்த நண்பர்களெல்லாம் ஒட்டு போட்டுட்டு போங்களே!!

இந்த இடுகை உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்.


தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க உள்ள கருவிபட்டையில் மேல்நோக்கியுள்ள கைவிரலை சொடுக்கவும்