எவன் செத்தா எனக்கென்னா ..எனக்கு தேவை கரண்ட் தான் என்று நினைப்பவராக நீங்கள் இருந்தால் ..பகுதி 3

By,
Balamurugesan Sivaperumal - London,யுனைடெட் கிங்டம்

(௧) அணுமின் நிலையம் மற்றவை போல மும்மடங்கு நேரமும் மும்மடங்கு செலவும் ஆகும்.



(௨) முப்பது வருடம் கழித்து அதை கண்டிப்பாக மூட வேண்டும். அப்போது மறுபடி இதே அளவு செலவாகும்.


(௩) பாதுகாப்பான அணு உலை என்று ஒன்று கிடையாது என்பதால்தான் ஜெர்மனி, ஜப்பான், பிரான்ஸ் நாடுகள் இனி அணு நிலையங்களை ஆரம்பிப்பது இல்லை என்றும் இருப்பவற்றை இன்னும் பத்து வருடங்களில் மூடுவது எனவும் முடிவு செய்துள்ளன.

(௪) அந்த நாடுகளுக்கு கிடைக்காத எந்த தொழில் நுட்பம் நமக்கு இருக்கிறது?

(௬) அணு உலையில் எதாவது ஆபத்து என்றால் அனைத்து மக்களையும் முப்பது கிலோமீட்டர் அப்புறப்படுத்த வேண்டும். நமது அரசு இருபது லட்சம் பேரை முப்பது கிலோமீட்டர் தள்ளி கொண்டு சென்று உணவு, உடை, உறைவிடம், மருத்துவம், தர கையாலாகுமா? 

(௭) கூடங்குளத்தில் ஐநூறு மெகாவாட் உற்பத்தியானாலே அதிசயம். அதில் தமிழகத்துக்கு பாதிதான் கிடைக்கும். அந்த மின்சாரம் ஒரு வீட்டில் ஒரு விளக்கு எரிக்கவே போதாது. இத்தனை லட்சம் மக்களை ஆபத்துக்கு உள்ளாக்கி இந்த மின்சாரத்தை பெற வேண்டுமா?

(௮) வெறுமே குண்டு பல்புகளுக்கு பதில் சி.எப்.எல்.பல்புகலை உபயோகித்தாலே இதை சேமிக்க முடியுமே. மொத்தத்தில் எந்த காரணம் கொண்டும் இந்த உலையை இயங்க விட கூடாது. இதன் மூலம் சிங்களனுக்கு மட்டுமே பலன் இருக்கும்.


Best Blogger Gadgets

1 கருத்து :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அறிய வேண்டியவர்கள் அறிய வேண்டும்...

பகிர்வுக்கு நன்றி...

கருத்துரையிடுக