வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா .....

சிவபெருமானைக் குறித்துக் கடும் தவம் புரியும் சூரபத்மன் எனும் கொடிய அரக்கன் சிவனது சக்தியைத் தவிர வேறு யாதொரு சக்தியாலும் தனக்கு மரணம் இல்லையெனும் வரத்தை சிவபெருமானிடம் பெற்ற பின்னர் ஆணவத்தால் மதி மயங்கி, தேவேந்திரன் உள்ளிட்ட வானவர்கள் அனைவரையும் சிறையில் தள்ளுகிறன். தேவேந்திரனின் மனைவியான இந்திராணி சூரபன்மனிடமிருந்து எப்படியோ தப்பிச் சென்று சிவபெருமானின் கருணையை வேண்டிப் பாடுகிறாள். 





Song: Vellimalai mannava - பாடல்: வெள்ளி மலை மன்னவா
Movie: Kandhan karunai - திரைப்படம்: கந்தன் கருணை
Singers: S. Varalakshmi - பாடியவர்: எஸ். வரலக்ஷ்மி
Lyrics: Poovai Senguttuvan - இயற்றியவர்: பூவை செங்குட்டுவன்
Music: K.V. Mahadevan - இசை: கே.வி. மஹாதேவன்
Year: - ஆண்டு: 1967 



 
வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா?
வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா?
முன்னோர்க்கும் முன்னவா மூண்ட கதை சொல்லவா?
முன்னோர்க்கும் முன்னவா மூண்ட கதை சொல்லவா?
வெள்ளி மலை மன்னவா ஆ 

அஞ்செழுத்தும் என்தன் நெஞ்செழுத்தல்லவா?
ஐம்புலனும் உன்தன் அடைக்கலமல்லவா?
அஞ்சு நன்னெஞ்சுக்கு ஆறுதல் சொல்லவா? ஆ
அஞ்சு நன்னெஞ்சுக்கு ஆறுதல் சொல்லவா?
அபாயம் நீக்க வரும் சிவாயமல்லவா?
வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா?
முன்னோர்க்கும் முன்னவா மூண்ட கதை சொல்லவா?
வெள்ளி மலை மன்னவா ஆ 


வானுலகம் விழுவதென்ன வானவர் தான் அழுவதென்ன
வானுலகம் விழுவதென்ன வானவர் தான் அழுவதென்ன
சேனை அசுரர் குலம் ஜெயக்கொடி தான் கொள்வதென்ன
சேனை அசுரர் குலம் ஜெயக்கொடி தான் கொள்வதென்ன? 


தேவர் குரல் கேட்டு உன் திருவடியைக் காட்டு
அபயக் கரம் நீட்டு உன் அருள் முகத்தைக் காட்டு
தேவர் குரல் கேட்டு உன் திருவடியைக் காட்டு
அபயக் கரம் நீட்டு உன் அருள் முகத்தைக் காட்டு ஆ... வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா?
முன்னோர்க்கும் முன்னவா மூண்ட கதை சொல்லவா?
வெள்ளி மலை மன்னவா ஆ

Best Blogger Gadgets

1 கருத்து :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

எஸ். வரலக்ஷ்மி அவர்களின் குரல் வித்தியாசமானவை...

அவர் பாடல்களின், நல்லதொரு பாடலை வரிகளுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. பாராட்டுக்கள்...

நன்றி…
(த.ம. 2)

கருத்துரையிடுக