பாடல் வரிகள் உங்களுக்காக ...
Original source: தமிழ்மணி
கா கா கா கா கா கா
ஆகாரம் உண்ண எல்லோரும் ஒன்றாக
அன்போடு ஓடிவாங்க என்ற
அனுபவப் பொருள் விளங்க – அந்த
அனுபவப் பொருள் விளங்க – காக்கை
அண்ணாவே நீங்க அழகான வாயால்
பண்ணாகப் பாடுறீங்க
அண்ணாவே நீங்க அழகான வாயால்
பண்ணாகப் பாடுறீங்க – காக்காவென
ஒண்ணாகக் கூடுறீங்க – வாங்க
கா கா கா
ஆகாரம் உண்ண எல்லோரும் ஒன்றாக
அன்போடு ஓடிவாங்க என்ற
அனுபவப் பொருள் விளங்க – அந்த
அனுபவப் பொருள் விளங்க – காக்கை
அண்ணாவே நீங்க அழகான வாயால்
பண்ணாகப் பாடுறீங்க
அண்ணாவே நீங்க அழகான வாயால்
பண்ணாகப் பாடுறீங்க – காக்காவென
ஒண்ணாகக் கூடுறீங்க – வாங்க
கா கா கா
சாப்பாடில்லாமே தவிக்குதுங்க ஜனங்
கூப்பாடு போட்டு மனம் குமுறுதுங்க
சாப்பாடில்லாமே தவிக்குதுங்க ஜனங்
கூப்பாடு போட்டு மனம் குமுறுதுங்க – உயிர்
காப்பாத்தக் கஞ்சித் தண்ணி ஊத்துங்க என்றால்
தாப்பாளப் போடுறாங்க பாருங்க – உயிர்
காப்பாத்தக் கஞ்சித் தண்ணி ஊத்துங்க என்றால்
தாப்பாளப் போடுறாங்க பாருங்க அந்த
சண்டாளர் ஏங்கவே தன்னலமும் நீங்கவே
தாரணி மீதிலே பாடுங்க – பாடும்
கா கா கா
கூப்பாடு போட்டு மனம் குமுறுதுங்க
சாப்பாடில்லாமே தவிக்குதுங்க ஜனங்
கூப்பாடு போட்டு மனம் குமுறுதுங்க – உயிர்
காப்பாத்தக் கஞ்சித் தண்ணி ஊத்துங்க என்றால்
தாப்பாளப் போடுறாங்க பாருங்க – உயிர்
காப்பாத்தக் கஞ்சித் தண்ணி ஊத்துங்க என்றால்
தாப்பாளப் போடுறாங்க பாருங்க அந்த
சண்டாளர் ஏங்கவே தன்னலமும் நீங்கவே
தாரணி மீதிலே பாடுங்க – பாடும்
கா கா கா
எச்சிலை தனிலே எரியும் சோத்துக்கு
பிச்சைக்காரர் சண்டை ரோட்டிலே
பிச்சைக்காரர் சண்டை ரோட்டிலே ..ஏ
எச்சிலை தனிலே எரியும் சோத்துக்கு
பிச்சைக்காரர் சண்டை ரோட்டிலே
இளைத்தவன் வலுத்தவன் இனச்சண்டை பணச்சண்டை
இளைத்தவன் வலுத்தவன் இனச்சண்டை பணச்சண்டை
எத்தனனையோ இந்த நாட்டிலே எத்தனையோ இந்த நாட்டிலே
பட்சி ஜாதி நீங்க எங்க பகுத்தறிவாளரப் பாக்காதீங்க
பட்சி ஜாதி நீங்க எங்க பகுத்தறிவாளரப் பாக்காதீங்க
பட்சமா இருங்க பகுந்துண்டு வாழுங்க
பழக்கத்த மாத்தாதீங்க – எங்கே பாடுங்க
பிச்சைக்காரர் சண்டை ரோட்டிலே
பிச்சைக்காரர் சண்டை ரோட்டிலே ..ஏ
எச்சிலை தனிலே எரியும் சோத்துக்கு
பிச்சைக்காரர் சண்டை ரோட்டிலே
இளைத்தவன் வலுத்தவன் இனச்சண்டை பணச்சண்டை
இளைத்தவன் வலுத்தவன் இனச்சண்டை பணச்சண்டை
எத்தனனையோ இந்த நாட்டிலே எத்தனையோ இந்த நாட்டிலே
பட்சி ஜாதி நீங்க எங்க பகுத்தறிவாளரப் பாக்காதீங்க
பட்சி ஜாதி நீங்க எங்க பகுத்தறிவாளரப் பாக்காதீங்க
பட்சமா இருங்க பகுந்துண்டு வாழுங்க
பழக்கத்த மாத்தாதீங்க – எங்கே பாடுங்க
பாடல்: கா கா கா கா கா கா
வரிகள்: உடுமலை நாராயண கவி
படம்: பராசக்தி
பாடியவர்: சி.எஸ்.ஜெயராமன்
இசை: ஆர்.சுதர்சனம்
ஆண்டு: 1952
வரிகள்: உடுமலை நாராயண கவி
படம்: பராசக்தி
பாடியவர்: சி.எஸ்.ஜெயராமன்
இசை: ஆர்.சுதர்சனம்
ஆண்டு: 1952
உடுமலை நாராயண கவி பற்றி..................
புகழ் உச்சியில் இருந்தபோதும் மிக எளிய வாழ்க்கை வாழ்ந்த உடுமலை
நாராயணகவியார், தம் 82ஆம் அகவையில் - தி.பி. 2012 (23.05.1981)ல்
உயிர்துறந்தார். அவர்தம் இறப்பிற்கு முன்பு எழுதி வைத்த இறுதி ஆவணத்தில்,
தாம் இறந்தபிறகு என்ன செய்யவேண்டுமென்பதைக் குறித்துள்ளார். அந்த
ஆவணத்தில், ‘‘செத்த பிணத்தை வைத்துக் கொண்டு, இனிமேல் சாகும் பிணங்கள்
கூத்தடித்துக் கொண்டிருப்பது அறியாமை; இந்த அறியாமையானது பணத்தின் அளவிலே
விரிவடைகிறது, குறைகிறது. என்னைப் பொறுத்தமட்டில் இந்த அறியாமை வேண்டாம்.
உடலைவிட்டு உயிர் பிரியுமானால் அப்போதே காலத்தை வீணாக்காமல் குழியைத்
தோண்டிப் புதைப்பதோ அல்லது எரிப்பதோ இந்த இரண்டில் ஒன்றைச் செய்திடுங்கள்!
வேறு எந்தவகையான சடங்குகளும் தேவையில்லை. மீறிச் செய்வது அறியாமை. உங்களை
மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். எனக்காக ஒன்று செய்யவேண்டுமானால் அதை
மட்டும் செய்யுங்கள்! உணவிலே எளிமை, உடையிலே எளிமை, கல்வியிலே மேன்மை இது
போதுமானது. இதுதவிர வேறு எதையும் செய்யாதீர்கள். இந்த வீண்பெருமைகளை
(டாம்பீகங்களை) எல்லாம் செய்து சீரழிந்து, மனத்துன்பங்களுக்கு ஆளாகி, என்
பின்னோர்க்கு (வாரிசுகளுக்கு) இதைப் பழக்கி, அவர்களின் அறிவைக் கெடுத்துத்
துன்பங்கட்கு ஆளாக்கி விட்டேன். இப்போது உணர்கிறேன். காலங்கடந்துவிட்டது.
இனி ஒரு பயனும் இல்லை. கடைசியாக ஏதோ வைத்திருக்கிறேன். அதைக்கொண்டு
உங்கள் மதிப்பைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்! இத்தனையும் கல்விக்குள்ளாக
அடங்கியுள்ளது. ஆதலால் காலத்தை வீணாக்காமல் கவனத்தைக் கல்வியிலே
செலுத்துங்கள்; இதுதான் என் கடைசி ஆசை!’’ என்று எழுதிவைத்துள்ளார்.
காலத்தை வென்ற - வரலாற்றுப் புகழ்மிக்க எண்ணற்ற பாடல்களை எழுதி,
தமிழ்க்குமுகத்திற்கு விழிப்புணர்வை ஊட்டிய உடுமலை நாராயணகவியாரின் மறைவு
நமக்கெல்லாம் மிகப்பெரிய இழப்பாகும்.
Best Blogger Gadgets
3 கருத்துகள் :
சிறப்பான பகிர்வு...
பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...
தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி… (TM 1)
நன்றி…திண்டுக்கல் தனபாலன்
மிகவும் அருமையான பாடல் இந்த பாடலை இன்று தான் பாடி பார்த்தேன் பாடுவதற்கு மிகவும் அருமையாக உள்ளது
கருத்துரையிடுக