பிராணிகள் பேசுகின்றன - "மீன்" ஆகிய நான் சொல்வதையும் கேளுங்கள்


"மீன்" ஆகிய நான் சொல்வதையும் கேளுங்கள் .
கடல் பெரிய அளவாக உள்ளதால் பெரும் பாலும் நாங்கள் வாழும் இடமே அது தான். உலகில் மக்களால் வெளியிடும் அசுத்தங்கள் எல்லாம் கலக்கும் இடமே கடல்தான்.
ஆகவே , எங்கள் உடல் தோற்றமே கழிவு பொருள்கள் தான் . எங்கள் உணவே நோயாளிகள் கழிந்த மலமும் , பல வித விஷ பூச்சிகளும் தான் . சிலர் உடல் முழுவதும் குளத்தில் குளிக்க வருவார்கள் . அவர்களின், உடல்களில் உள்ள பக்குகளை அப்படியே பிடுங்கி தின்போம். இது எங்களுக்கு மிக பெரிய விருந்து . இப்படி நீரில் உள்ள அழுக்குகளை நாங்கள் உண்டு , உங்கள் குடிநீரை சுத்த படுத்துகிறோம் .அதனால் , நீங்கள் நோய் இல்லாமல் வாழ வழி செய்கிறோம். நீங்களோ துண்டீளும் , வளையும் போட்டு எங்களை கூட்டம் , கூட்டமாக பிடித்து உன்கிண்றீர்கள் .
பலவகை அழுக்குகளினால் எங்கள் உடல் உருவாவதால் , எங்களை சாப்பிடும் உங்களுக்கு சரும நோய், காலரா , வயிற்று போக்கு , சில தொத்து நோய்கள் வருகின்றன . ஆகையால் நாங்கள் கூறியதை சிந்தித்து இனி மேலாவது மீன்களாகிய எங்களை கொன்று தின்பதை நிறுத்தி முயற்சி செய்யுங்கள் , ஆறறிவு படைத்த மனித ஜீவர்களே !

Anbudan,
Karthikeyan.J


Best Blogger Gadgets

5 கருத்துகள் :

மிரட்டல் சொன்னது…

600 கோடி மக்களுக்கும் தேவையான உணவுகள் இந்த நிலப்பரப்பில் கிடைக்குமா?
600 கோடி மக்களும் காய்கறிகளையும்,கீறைகளைகளையும் சாப்பிட ஆரம்பித்தால் அடிமட்டத்தில் வாழும் மக்களுக்கு காய்கறிகள் குறைவான விலையில் கிடைக்குமா?பனிப்பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு அன்றாடம் காய்கறிகள் கிடைக்குமா?

மிரட்டல் சொன்னது…

ஜீவகாருண்யம் பேசுபவர்கள் ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்கக்கூடாது ஏனென்றால் தண்ணீரில் ஏகப்பட்ட பாக்டீரியாக்கள் இருக்கிறது.
கண்ணுக்கு தெரிந்தால்தான் உயிரா கண்ணுக்கு புலப்படவில்லையென்றால் அது உயிரில்லையா?
எனக்கு நிறைய சந்தேகங்கள் உண்டு
1).ஜீவகாருண்யம் பேசுபவர்கள் கொசு கடித்தால் அடிக்கமாட்டார்களா?
2).வீட்டிற்குள் பாம்பு வந்தால் அடிக்க மாட்டார்களா?
3).ஜீவகாருண்யம் பற்றி பேசுபவர்கள் நெருப்பு பற்றவே வைக்கமாட்டார்களா ஏனென்றால் காற்றில் எத்தனையோ வகையான பாக்டீரியாக்கள் உலவுகின்றதே.

Velmaheshk சொன்னது…

i get fear for மிரட்டல் comments...

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

இந்த மீன் குளத்துமீன் போலும் அதனால்; கடல் மீன் பற்றி சரியான தெரியாது பேசியுள்ளது.
நிற்க ,நீங்கள் கூற வரும் உயிர்களின் மேல் அன்பு செலுத்துதல் என்பது நடக்கக்கூடிய விடயமல்ல. இது
இந்தியத் துணைக்கண்டத்தில் எடுபடலாம். ஆனால் உலகுக்கு ஒவ்வுமா? தாங்குமா?
ஆகவே உணவு விடயத்தில் எதிலும் அளவுடன் இருப்பதே நலம்.
இதை உண்பதே மேன்மை ; இவற்றை உண்பரே மேலோர் எனும் எண்ணத்தை வளர்த்து இந்தியத் துணைக் கண்டம் படும் வேதனை போதும்.
சீனர்கள் ஊர்வதில் ரெயினை விட; பறப்பவற்றில் பிளேனை விட எல்லாம் உண்பார்கள்; எனக் கூறுவார்கள். கெட்டா? போய்விட்டார்கள். இவ்வளவு சனத்தொகையிலும் உலகை ஆட்டுகிறார்களே?
மனிதனை வாழ வழி கூறுங்கள்.
மிரட்டலில் ஒவ்வொரு சொல்லும் கவனிக்க வேண்டியவை.

மிரட்டல் சொன்னது…

நன்றி யோகன் பாரிஸ்

கருத்துரையிடுக