இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!


இங்கிலாந்து நாட்டில் புத்தாண்டு தினத்தில், வீட்டுக்குள் முதலில் யார் காலடி வைக்கிறார்களோ அவர்களே அந்த ஆண்டுக்கான அதிர்ஷ் டம் அல்லது துரதிர்ஷ்டத்தைக் கொண்டு வருகிறார்கள் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

* ஸ்காட்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களை ஹோக்மனாய் என்று அழைக்கிறார்கள். பரஸ்பரம் விருந்துக்கு அழைத்து உபசரிப்பது இந்த தினத்தின் சிறப்பாகும். விருந்துக்குச் செல்லும்போது பிரெட் பாக்கெட்கள், பரிசுப்பொருட்கள், நிலக்கரி ஆகியவற்றையும் கொண்டு செல்கிறார்கள்.

* ரஷ்யாவில் கிறிஸ்துமஸ் கொண்டாட் டத்தின்போது மர அலங்காரம் செய்வதைப் போலவே புத்தாண்டு தினத்திலும் மரங்களுக்கு மின் விளக்குகளால் அலங்காரம் செய்து ஜொலிக்க வைத்து மகிழ்கிறார்கள்.

* நம்மூரில் புது வீட்டில் பால் காய்ச் சும்போது பால் பொங்கி வழிந்தால் நல்லது என்பார்கள். அதைப் போல, சுவிட்சர்லாந்து நாட்டில் புத்தாண்டு தினத்தில் கேக் வெட்டும்போது கிரீம் தரையில் சிந்தினால் நல்லது என்று நம்புகி றார்கள்.

* பிரேசில் நாட்டில் அவரையை அதிர்ஷ்டத்தின் குறியீடாகக் கருதுகிறார்கள். புத்தாண்டன்று அவரை சூப் குடித்து, அவரைச் சோறு சாப்பிட்டால் அதிர்ஷ்டம் என்று நம்புகிறார்கள்.

* அமெரிக்காவின் தெற்குப்பகுதியில் புத்தாண்டு தினத்தன்று கருப்புப் புள்ளியுடைய பட்டாணியை சமைத்துச் சாப்பிடுவது வழக்கமாக உள்ளது. அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது அவர்களுக்கு கிடைத்த ஒரே உணவுப்பொருள் அதுதான் என்பதால் இதை வழக்கமாக வைத்துள்ளார்கள்.

* ஸ்பெயின் நாட்டில் புத்தாண்டு நள்ளிரவுக்கு முன் 12 திராட்சைப் பழங்களை சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அப்படி சாப்பிட்டால் 12 மாதங்களும் மகிழ்ச்சியானதாக இருக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை.

* அர்ஜென்டினாவில் புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் ஒரு சூட்கேசை எடுத்துக்கொண்டு வீட்டைச் சுற்றி ஓடினால், அந்த ஆண்டில் வாழ்க்கைப் பயணம் இனிமையானதாக இருக்கும் என்ற வினோத நம்பிக்கை நிலவுகிறது.

* டென்மார்க் நாட்டில் உடைந்த பாத்திரங்களை ஆண்டு முழுவதும் பாதுகாத்து வைத்திருந்து, புத்தாண்டு தினத்துக்கு முதல் நாள் நண்பர்களின் வீடுகள் மீது எறிந்தால் அதிர்ஷ்டம் என்று நம்புகிறார்கள்.

* கிரீஸ் நாட்டில் அனைவரின் வீடுகளிலும் Ôவாசிலோபிட்டாÕ என்றொரு கேக் செய்கிறார்கள். அந்த கேக்கில் தங்கம், வெள்ளி நாணயங்களை மறைத்து வைத்து புத்தாண்டு தினத்தன்று பரிமாறுகிறார்கள். யாருக்கு நாணயம் கிட்டுகிறதோ அவருக்கு அந்த ஆண்டு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்குமாம்.

* போர்ட்டோரிகா நாட்டில் புத்தாண்டு தினத்துக்கு முந்திய நாள் மாலை, தங்கள் வீடுகளில் இருந்து ஜன்னல் வழியாக வாளி வாளியாக தண்ணீரை வெளியே ஊற்றுகிறார்கள் குழந்தைகள். வீட்டுக்குள் தீய சக்திகள் புகாமல் அது தடுக்கும் என்று நம்புகிறார்கள்.

* சீனாவில் புத் தாண்டு தினத்தன்று கத்தியால் கையை வெட்டிக் கொள்வது அபசகுனம் என்று நம்புகிறார்கள். அது ஒட்டுமொத்த குடும்பத்தையே பாதிக்கும் என்று புத்தாண்டுக்கு முதல் நாளே கத்திகளை ஒளித்து வைத்து விடுவார்கள்.

* ஜெர்மனியிலும் ஆஸ்திரியாவிலும் புத்தாண்டு காலையில், ஒரு கரண்டியில் சில காரீய துண்டுகளை வைத்து நெருப்பில் உருக்குகிறார்கள். பின்னர் அந்த காரீயத்தை ஒரு தண்ணீர் வாளிக்குள் விடுகிறார்கள்.

அப்போது அந்த காரீயம் என்ன வடிவத்தை அடைகிறதோ அதை வைத்து அந்த ஆண்டு எப்படி இருக்கும் என்று கணிக்கிறார்கள். மூதாட்டி உருவம் வந்தால் துரதிர்ஷ்டம், உருண்டை வடிவம் என்றால் அதிர்ஷ்டம், மோதிரம் அல்லது இதய வடிவம் வந்தால் திருமணம், கப்பல் வடிவம் வந்தால் பயணம் என்று நம்புகிறார்கள்.

எல்லாமே சும்மா ஒரு நம்பிக்கைதாங்க!
- நீல.ஹேமாவதி -


படிக்க வந்த நண்பர்களெல்லாம் ஒட்டு போட்டுட்டு போங்களே!!


Best Blogger Gadgets

2 கருத்துகள் :

கருத்துரையிடுக