பைபிள் – பழைய ஏற்பாடு -ஓர் அறிமுகம்

பைபிள் என்றால் புத்தகம் என்று பொருள்,. இதில் இரண்டு பெரும் பிரிவுகள் உள்ளன எபிரெயர்களின் புராணக் கதைகள் உள்ள செய்திகளை சொல்லுவது பழைய ஏற்பாடு என வழங்கப்படுகிறது.

பழைய ஏற்பாடு -39/46 (முப்பத்து ஒன்பது/நாற்பத்து ஆறு) புத்தகங்கள் உள்ளன கிறிஸ்துவுக்குப் பின் எழுதப்பட்ட புத்தகங்கள் புதிய ஏற்பாடு என்று அழைக்கப்படுகின்றன, இதில்27(இருபத்தேழு) புத்தகங்கள் உள்ளன.

எபிரெயர்களின் புராணக் கதைகள் கொண்டது, பொ.கா.மு.2000-400 வரை நிகழ்ந்த சம்பங்களைக் கொண்டும் புழக்கத்தில் இருந்த சில கதைகளை வாசகரை வசப்படுத்தும்படி பழைய ஏற்பாடு எழுதப் பட்டவை. இது மூன்று பிரிவாக ஆகும்.

தோரா- சட்டங்கள்

நபியம் – தீர்க்கர்கள்

கேதுபிம்- எழுத்துக்கள் என்ற மூன்று பிரிவுகளின் முதற் பெயர் கொண்டு தநாக் எனப்படும்.

தோரா- சட்டங்கள்

புராணங்களின் அடிப்படை- இஸ்ரேல் நாடு, அரேபிய பாலைவனப் பகுதிகளின் ஒன்று, இங்கு மண்ணின் மைந்தர்களை அடிமைப்படுத்தி வந்தேறிகளான எபிரேயர்கள், தங்கள் ஆக்கிரமிப்பை, கடவுளின் தேர்ந்தெடுப்பு என, பாபிலோனின் அதாவது இன்றைய ஈராக்கினரான ஆபிரஹாமை இஸ்ரேல் நாட்டின் ஆட்சி-அரசியல் உரிமையைத் தந்ததாக புனைந்த கதைகளே ஆகும்.

இவை பெரும்பாலும் பொ.கா.மு.250- 300 வாக்கில் இன்றைய வடிவில் புனையப் பட்டன. இப்பிரிவில் பாபிலோனியர்-மற்றும் பாரசிக மதங்களின் கருத்துக்களும், கிரேக்கப் புராணப் புனையல்களும் மிகுந்துள்ளன. இப்பிரிவில் உள்ள நூல்கள்

1. ஆதியாகமம்

2. யாத்திராகமம்

3. லேவியராகமம்

4. எண்ணாகமம்

5. உபாகமம் இந்த 5 நூல்கள் பென்டாடச் என அதாவது முதலைந்து நூல்கள் என்று பெயர் படும்.

மோசே என்ற மோசஸ் எழுதியது என்ற புனைக்கதை சில இடங்களில் பரப்பப்படுகிறது. கிறிஸ்துவ புராணக் கதை நாயகர் ஏசுவும் அவ்வாறு கூறியதாக புதிய ஏற்பாட்டில் வருகிறது, ஆனால் அவர் மரணத்திற்கு 1000 வருடங்களுக்குப் பின்பே இவை பெரும்பாலும் புனையப்பட்டன என பைபிள் உள்ளேயே ஆதாரங்கள் உள்ளன.

நபியம் – தீர்க்கர்கள்

பெரும்பாலும் அடிமைப்பட்டே வாழ்ந்து வந்தனர் எபிரேயர்- பழைய ஏற்பாடு காலத்தில், அவ்வொப்பொழுது அவர்களும் எழுந்து எபிரேயர்கட்கு வெற்றி வாய்ப்புண்டு என நம்பிக்கையும் எபிரேயர் ஒற்றுமைக்காக இஸ்ரேலின் எல்லையின் சிறு தெய்வம் யவ எனப்படும் கர்த்தர் பெயரில் சொன்னதாக உள்ளவை.

தீர்க்கர்கள் கூறியவை எல்லாம் அவர்கள் காலத்தில் நடக்கும் என்றவையே தான், மேலும் பெரும்பாலும், இவையும் பொ.கா.மு. 450-100 இடையே புனையப்பட்டவை, அதாவது இறந்தவர் பெயரில் யாரோ பிற்காலத்தில் புனைந்தவை. இப்பிரிவில் உள்ள நூல்கள்

முதல் தீர்க்கர்கள்

1. யோசுவா

2. நியாயாதிபதிகள்

3. 1 சாமுவேல்

4. 2 சாமுவேல்

5. 1 இராஜாக்கள்

6. 2 இராஜாக்கள்

பெரிய தீர்க்கர்கள்

7. ஏசாயா

8. எரேமியா

9. எசேக்கியேல்

சிறிய தீர்க்கர்கள்

10. ஓசியா

11. யோவேல்

12. ஆமோஸ்

13. ஒபதியா

14. யோனா

15. மீகா

16. நாகூம்

17. ஆபகூக்

18. செப்பனியா

19. ஆகாய்

20. சகரியா

21. மல்கியா. பொ.கா.29-30 வாக்கில் ரோம் ஆட்சியாளர்களால் கைது செய்யப்பட்டு மரணதண்டனையில் இறந்த்தான ஏசு, பழைய ஏற்பாட்டை மோசே சட்டங்களும் தீர்க்கர்களும் என அழைப்பார்.

எழுத்துக்கள்:

பக்கத்து நாட்டு இறை இலக்கியங்களையும் நாட்டின் சம்பவங்களையும் மக்களிடை போர்-அரசியல் ஒற்றுமைக்காக சட்டங்கள், தீர்க்கர்கள் எனத் தொகுத்த பின் மீதி பிற்கால நூல்கள் எல்லாம் எழுத்துக்கள் என்ற பெயரில் பொ.கா. 135 வாக்கில் அதாவது கிறிஸ்துவ புராணக் கதை நாயகர் ஏசு இறந்து 100 ஆண்டுகட்குப் பின் இன்றைய வடிவில் புனையல் பெற்றது.

இப்பிரிவில் உள்ள நூல்கள்

1. 1 நாளாகமம்

2. 2 நாளாகமம்

3. எஸ்றா

4. நெகேமியா

5. எஸ்தர்

6. யோபு

7. தானியேல்

8. சங்கீதம்

9. நீதிமொழிகள்

10. உன்னதப்பாட்டு

11. புலம்பல்

12. ரூத்

13. பிரசங்கி

தள்ளுபடி புத்தகங்கள்

பொ.கா. 135 வாக்கில் அதாவது கிறிஸ்துவ புராணக் கதை நாயகர் ஏசு இறந்து 100 ஆண்டுகட்குப் பின் இன்றைய வடிவில் புனையல் பெற்றது எபிரேய பழைய ஏற்பாடு, ரோமினால் மிகவும் மோசமாக தோற்கடிக்கப்பட, கிரேக்கர்களை வென்றதான மக்கபே, மற்றும் உலகம் முடிவு காலம் நெருங்குகிறது, கடைசி காலத்தில் கிறிஸ்து பிறந்து எபிரேய யூதர்களை ஒற்றுமைப்படுத்தி போர் வெற்றியோடு விண்ணுலகம் செல்லுதல் எனும்படி மூட நம்பிக்கை கதைநூல்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, மூலங்கள் அழிக்கப்பட்டன. ரோம் சர்ச்சினால் கிரேக்கப் படிகள் மூலம் இவை இப்போது ரோமன் கத்தோலிகர்களால் தள்ளுபடி இணைப்புகள் என சேர்த்து கத்தோலிக பழைய ஏற்பாட்டில் மேலும் 7 புத்தகங்கள் தரப்படுகின்றன.

இவை எபிரேயர்களால் நிராகரிக்கப்பட்டதால் மறுப்பணி சர்ச்சுகள் இவற்றை தங்கள் பதிப்புகளில் சேர்ப்பதில்லை.

இப்பிரிவில் உள்ள நூல்கள்

1. தொபியாசு

2. யூதித்

3. ஞானம்

4. சீராக்

5. பாரூக்

6. I மக்கபே

7. II மக்கபே

பைபிளை நடுநிலை வரலாற்றுக் கண்ணோட்டத்தில் காண்பவர்கள் முழு பைபிளும் அரசியல் ஆட்சியுரிமையை பிரதானமாக போற்றும் புத்தகங்களே அன்றி இறையியல் நூல்களோ வரலாற்றுத் தன்மை முழுமையாக கொள்ளவில்லை என ஏற்கின்றனர்.

குறிப்பு-

பொ.கா.- பொது காலம்- C.E. –Common Era அதாவது வரலாற்று அறிஞர்களால் கைவிடப்பட்ட பழைய கி.பி. A.D..

பொ.கா.மு.- பொது காலத்துக்கு முன் – B.C.E.- Before Common Era அதாவது வரலாற்று அறிஞர்களால் கைவிடப்பட்ட பழைய கி.மு. -B.C
http://devapriyas.indiainteracts.com/2009/04/28/bible-0ld-testament/

Best Blogger Gadgets

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக