ஜி.யூ. போப்

POSTED BY,
by devapriyaji

மேலைநாட்டுத் தமிழறிஞர்கள் பலருள்ளும் டாக்டர் ஜி,யூ,போப் அவர்களின் மீது தமிழர்களுக்கு, அதிலும் தமிழ்ச் சைவர்களுக்கு ஒரு தனிப்பாசம் உண்டு. அதற்குக் காரணமும் உண்டு.

மேலைநாட்டுத் தமிழறிஞர்கள் தங்களுடைய மதத்தினைப் பரப்பவே தமிழைப் பயின்றனர். டாக்டர் ஜி.யூ.போப்பும் அவர்களைப் போலவே தம்முடைய மதத்தைப் பரப்பவே தமிழ் கற்றாலும், சைவத் தமிழை, குறிப்பாகத் திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து மேலைநாட்டவர்க்கு அறிமுகப்படுத்தினார். தமிழகத்தின் உண்மைச் சமயம் சிவநெறியே என்பதைத் திடம்பட எடுத்து மொழிந்தார் – “caivism is the real religion of the South India and North Ceylon; and the caiva Siddhanta philosophy has and deserves to have, far more influence than any other”.

போப்பின் திருவாசகக் காதல் குறித்துக் கதை ஒன்றும் திருவாசகப் பேச்சாளர்களால் மேடைதோறும் கூறப்படுகின்றது. போப் தமிழகத்தில் உள்ளவர்களுக்குக் கடிதம் எழுதும்போது முதலில் ஒரு திருவாசகப் பாடலை எழுதுவாரென்றும், அப்படி யாருக்கோ எழுதிய ஒரு திருவாசகப்பாடலை எழுதும்போது உள்ளம் உருகிக் கண்ணீர் பெருகிக் கடிதத்தின் மீது விழுந்து எழுத்தை அழித்துவிட்டதென்றும் அது திருவாசகத்தால் வந்த புண்ணியக் கண்ணீர் ஆதலால், அப்புனிதக் கண்ணீர் பட்டு அழிந்த எழுத்தின் மீது மீண்டும் எழுதாமலேயே அக்கடிதத்தை அனுப்பியதாகவும் கூறுவர்.

இது ஒருமுகம். இந்த முகத்தைக் கண்ட தமிழ்ச் சைவர்கள் போப்பின் இன்னொரு முகத்தையும் கட்டாயம் காணவேண்டும். அந்த முகம் போப்பைப் பற்றிய புகழ்மொழிகளால் மறைக்கப்பட்டுவிட்டது.

”கடிதம் எழுதும் போது கண்ணீர் வரும்” என்ற புனைவோடு சேர்த்து, இன்னொரு உணர்ச்சியூட்டும் புனைவையும் பரப்பி வருகிறார்கள்.

போப் தனது கல்லறையில் “இங்கு ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான்” என்று எழுதச் சொன்னதாகவும், அது இன்னும் அப்படியே இருக்கிறது என்றும்!





சில ஆர்வக் கோளாறு கொண்ட தமிழறிஞர்கள் தங்கள் லண்டன் விஜயத்தின் போது ஜி.யு போப்பின் கல்லறையை சல்லடை போட்டுத் தேடி, எப்படியோ கண்டுபிடித்துப் போய் அப்படி ஒன்றும் இல்லை, அந்த சாதாரணமான கல்லறையில் வழக்கமான பாதிரி கல்லறைகள் போல சிலுவையும், பைபிள் வாசகமும் மட்டுமே இருந்தது என்பதைக் கண்டு ஏமாற்றமடைந்தார்களாம் – மதிப்பிற்குரிய ஒரு தமிழறிஞர் வாயிலாக நான் நேரடியாகக் கேட்டறிந்த விஷயம் இது.

ஏதோ இந்த கிறிஸ்தவப் பாதிரிகள் தங்கள் வாழ்நாள் முழுவதையும் தமிழுக்காக அர்ப்பணித்தார்கள் என்ற ஒரு திட்டமிட்ட பொய்ப் பிரசாரத்தை இங்கு பலகாலம் திட்டமிட்டுப் பரப்பி வந்திருக்கிறார்கள், அந்தப் பொய்மூட்டைகள் ஒவ்வொன்றையும் கட்டவிழ்க்க வேண்டிய காலமிது.
Thanks-
ஜடாயு-http://jataayu.blogspot.com/
8 October 2009 at 10:31 pm

ஜி.யு.போப் கல்லறை புகைப்படம்:

http://www.flickr.com/photos/93039296@N00/759184087/

and

ஜி.யூ. போப் அவர்களும் திருவாசகமும்
முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி
http://www.tamilhindu.com/2009/10/gu_pope_and_thiruvasagam/

Best Blogger Gadgets

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக